என் மடியில் பூத்த மலரே-32



அத்தியாயம்-32 

ஒன்பதாவது மாதம்:

தன் திருமணப் பட்டு புடவையை கட்டி முன்னால் இருந்த பிளிட்ஷை அழகாக மடித்து எடுத்து தன் மேடிட்டிருந்த வயிற்றில் சொருகினாள் பாரதி...

கட்டி முடித்தவள் கண்ணாடியில் பார்க்க, அந்த பட்டு புடவை அவ்வளவு அழகாக இருந்தது அவளுக்கு... திருமணத்தன்று இருந்த மன உளைச்சலில் அப்பொழுது அந்த புடவையை ரசிக்க முடியவில்லை.. அதற்கு பிறகு இப்பொழுது தான் கட்டுகிறாள் அந்த புடவையை..

அந்த புடவையை காணும்பொழுது அவளின் திருமண நிகழ்வுகளும் தன் கணவன் அவள் கழுத்தில் தாலி அணிவித்த தருனமும் கண் முன்னே வர , மீண்டும் அந்த நாளை நினைத்து ரசித்து கொண்டிருந்தாள்...

பின் நேரம் ஆவதை உணர்ந்து தலைக்கு குளித்திருந்த தன் நீண்ட கூந்தலை தளர பின்னி, குங்குமத்தை எடுத்து வகிட்டில் சிறிதாக வைத்துக்கொண்டாள்... மீண்டும் ஒரு முறை தன்னை கண்ணாடியில் பார்க்க அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது தானா அது என்று... அதுவும் ஒன்பது மாதம் வயிறு நன்றாக வெளியில் தெரிய அந்த நிறைமாத தாய்மையின் அழகில் அவள் முகம் இன்னும் பூரித்திருந்தது

இன்றோடு ஒன்பதாவது மாதம் ஆரம்பித்துவிட்டது... அதை கொண்டாட, அவளுக்கு வளைகாப்பு செய்ய என்று கீழ எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்க, அதற்காகத்தான் பாரதி காலையிலயே தயாராகி கொண்டிருந்தாள்... அவள் இந்த பங்சன் வேண்டாம் என்று எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவன் பிடிவாதமாக ஏற்பாடு செய்திருக்கிற விழா அது...

மஹாவின் வளைகாப்பை பார்த்து விட்டு வந்த ஆதி அடுத்த வாரமே தன் இளவரசிக்கும் அதுமாதிரி விழா நடத்தனும் என்க, ஜானகி சிறிது நேரம் யோசித்தவர் இப்பொழுது வேண்டாம்.. வேணும்னா ஒன்பதாவது மாதம் நடத்தலாம் என்று சொல்லி அவனை சமாதான படுத்தி அப்போதைக்கு அதை தள்ளிபோட்டார்...

ஆதியும் ஏதோ சமாதானம் ஆனாலும் நாட்களை எண்ணி கொண்டிருந்தான்.. சரியாக ஒன்பதாவது மாதம் ஆரம்பிக்கும் முன்னரே அந்த பேச்சை மீண்டும் ஆரம்பித்தான்... பாரதி தனக்கு விருப்பம் இல்லை இது வேண்டாம் என்று மறுக்க

“ஏய்... இது ஒன்னும் உனக்காக செய்யறதில்லை.. என் பிரின்ஸஸ்க்காக த்தான்... அவளும் இந்த வளையல் சத்தம் எல்லாம் கேட்கனும்... நாளைக்கு அவளுக்கு இப்படி பண்ணலையேனு ஒரு குறை வந்திரக்கூடாது.. அதனால நீ எதுவும் பேசாத... வந்து உட்கார சொல்ற இடத்துல உடகார்.. அவ்வளவுதான்.. “ என்று அவள் வாயை அடைத்து விட்டான்..

அதே மாதிரி பிடிவாதமாக நின்று அவன் விழா ஏற்பாடு செய்திருந்த அந்த நாளும் வந்தது... மேடிட்டிருந்த தன் வயிற்றையே ஆசையாக பார்த்தவளுக்கு மஹாவின் வளைகாப்பு பங்சன் ஞாபகம் வர, அவளை எல்லாரும் எப்படி கொண்டாடினாங்க... அப்பா, அம்மா ஆயானு எல்லாரும் வாழ்த்தினாங்க...

அவ்வளவு ஏன்... 5 நாட்களுக்கு முன்புதான் மஹாவிற்கு குழந்தை பிறந்தது... ஆண் குழந்தை. அந்த குழந்தையை எல்லாரும் அவங்க வீட்டில் எப்படி கொஞ்சினாங்க...

ஆனால் எனக்கு மட்டும் யாரும் இல்லையே... என் அப்பா என்னை இப்படி பார்த்தால் எப்படி மகிழ்ந்து போவார்... “ என்று எண்ணியவளுக்கு முகம் வாடியது... கண்கள் கலங்கியது..

“திருமணத்திற்கு தான் என் சார்பா யாரும் இல்லை.. இந்த பங்சனுக்கும் யாரும் இல்லையே.. என்று எண்ணியே இந்த பங்சனை வேண்டாம் என்று மறுத்தேன்...ஆனால் அவன் விடவில்லையே...என்னை இப்படி வருத்த பட வைப்பதே அவனுக்கு வழக்கமாயிடுச்சு...“ என்று எண்ணி அவள் முகம் வாடிய அடுத்த நொடி

“பாரதி மா ரெடியாயிட்டியா?? எல்லாரும் வந்து காத்திருக்காங்க .. சீக்கிரம் வாடா.. “என்று அழைத்த படியே உள்ளே வந்தார் ஜானகி...

“அப்ப்பா.. இந்த அத்தைக்கு எப்படி தான் மூக்கு வேர்க்குமோ?? நான் கொஞ்சம் மனம் வாடினாலும் உடனே ஆஜர் ஆகிடறாங்களே.. “ என்று தன் கவலையையும் மறந்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள் பாரதி..

ஜானகிக்கும் அதே எண்ணம்தான்... இவளை தனியா விட்டால் ஏதாவது நினைத்து கொண்டு மனம் வாடி நிப்பாள்.. என்று தெரிந்தே வேகமாக அவள் அறைக்கு வந்தது... அவர் நினைத்த மாதிரியே பாரதி முகம் வாடி, கண்கள் கலங்கி நிற்பதை கண்டு பதறி அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் பாரதியை டைவர்ட் பண்ணினார்...

“இதோ ரெடியாகிட்டு இருக்கேன் அத்தை... இன்னும் ஒரு 5 நிமிசம் தான்..” என்று சிரித்தாள் பாரதி...

“ஹ்ம்ம்ம் நீ சீக்கிரம் ரெடியாகி வந்தால் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் கிப்ட் இருக்கு... “ என்று கண்ணடித்தார் சிரித்தவாறு...

“வாவ்.. சர்ப்ரைஸ் கிப்ட் ஆ?? என்னது அத்தை... சொல்லுங்க... சொல்லுங்க.. “ என்று ஆர்வமாக கேட்டாள்..

“ஹா ஹா ஹா சர்ப்ரைஸ் னா அது சர்ப்ரைஸ் ஆ தான் கொடுக்க முடியும்.. அத முன்னாடியே சொல்லிட்டா அது எப்படி சர்ப்ரைஸ் ஆகுமாம்?? .. என் மக்கு மறுகளே.. “என்று சிரிக்க

“ஹ்ம்ம்ம் எல்லா என் நேரம்.. என் டயலாக்கையே எனக்கு திருப்பறீங்களே... “என்று அவரை செல்லமாக முறைத்தாள் பாரதி.. ஜானகியும் சிரித்துகொண்டே

“சரி.. திரும்பு.. இந்த பூவை வச்சு விடறேன்..” என்று அவளை திருப்பி தன் கையில் கொண்டு வந்திருந்த மல்லிகை சரத்தை நீளமாக மடித்து அவள் தலையில் வைத்தார்... பின் அவளை மேலும் கீழும் பார்த்தவர்

“வாவ்... சூப்பரா இருக்க பாரதி.. என் கண்ணே பட்டுடும் போல இருக்கு.. இரு திருஷ்டி பொட்டு வச்சு விடறேன்... “ என்று அவளுக்கு திருஷ்டி கழித்து அருகில் இருந்த கண் மையை எடுத்து அவளுக்கு சின்ன திருஷ்டி பொட்டு வைத்தார்...

பாரதியும் சிரித்து கொண்டே

“ஹ்ம்ம்ம் நான் ரெடி அத்தை.. வாங்க போகலாம்.. “ என்க

“அடடா.. சர்ப்ரைஸ் கிப்ட் ன உடனே என் மறுமக ரெடியாயிட்டாளே... அப்ப இத காலையிலயே சொல்லி இருக்கணும்... முதல் ஆளா கீழ வந்து இருப்ப..மிஸ் பண்ணிட்டனே... “ என்று ஜானகி சிரிக்க, பாரதி அவரை பார்த்து முறைக்க, இருவரும் சிரித்து கொண்டே கிழ இறங்கி வந்தனர்..

கீழ வந்தவளின் கண்கள் அவளையும் மீறி தன்னவனை தேடின..

“எங்க போய்ட்டான்..?? காலையில் எழுவதற்கு முன்னாடியே படுக்கையில் இல்லை... அதற்கப்புறமும் கண்ணுலயே காணோமே?? “ என்று சுற்றிலும் தேடி பார்த்து ஏமாந்தாள்..

அந்த வீட்டின் ஹால் பெரியது என்பதால் ,ஹாலிலயே ஒரு ஓரமாக நாற்காலி போட்டு இருக்க அதன் முன்னால் பல விதமான தட்டுக்கள் வரிசையாக வைக்கபட்டிருந்தன...அதற்கு முன்னால் உட்கார்ந்து பார்க்க வசதியாக வசிசையாக நாற்காலிகள் போடப்பட்டிருந்தன

எளிமையாக அந்த விழாவை நடத்துவதால், திருமணத்திற்கு அழைத்த மாதிரியே மிக முக்கியமானவர்களை மட்டும் அழைத்து இருந்தனர்... கமலா டாக்டரும் அவர் கணவரும் வந்திருக்க, அவர்களை கண்டதும் பாரதி சிரித்து கொண்டே வேகமாக அவர்களிடம் சென்று நலம் விசாரித்தாள்...

பின் மேனேஜர் சுந்தரம் அவர் குடும்பத்துடன் வந்திருக்க அவர்களிடம் சென்று பேசினாள்.. சுசிலா எல்லாரையும் வரவேற்று அமர வைத்து அவர்களுக்கு குடிப்பதற்கு ஏற்பாடு பண்ணி கொண்டிருந்தார்...சிறிது நேரம் நின்ற ஜானகி பாரதியின் அருகில் வந்து,

“பாரதி... நீ அப்புறம் வந்து எல்லார் கிட்டயும் பேசலாம்.. நீ முதல்ல வா பூஜை பண்ணிட்டு வந்திடலாம் .. “ என்று பாரதியை பூஜை அறைக்கு அழைத்து சென்றார்... செல்லும் பொழுதே, நினைவு வந்தவள்

“அத்தை.. எங்க என் கிப்ட்?? ..” என்று முனுமுனுத்தாள்..

“ஹா ஹா ஹா... நீ போய் அங்க வாயடிச்சுகிட்டிருந்த இல்லை.. அதனால உனக்கு நோ கிப்ட்..” என்று ஜானகி சிரிக்க

“அத்தை... இது சீட்டிங்... என்னை ஏமாத்தறீங்க.. “ என்று அவரிடம் செல்லம் கொஞ்சி கிட்டே பூஜை அறை உள்ளே நுழைந்தவளின் கண்கள் ஆச்சர்யம் மற்றும் அதிர்ச்சியில் நிலைத்து நின்றன...தன் கண்ணையே அவளால் நம்ப முடியவில்லை.. மேலும் ஒரு முறை தன் கண்ணை கசக்கி விட்டு கொண்டு உற்று பார்க்க அவள் முன்னே அவள் அப்பா சிரித்து கொண்டு நின்றிருந்தார்...

அவளால் நம்ம முடியாமல் மீண்டும் ஒரு முறை தன்னையே கிள்ளி பார்த்து கொண்டு பின் அது நிஜம் என புரிய

“அப்பா... “ என்று அழைத்து கொண்டே வேகமாக அவரை நோக்கி பாய, அவரும் வேகமாக முன்னால் வர அப்படியே அவரை கட்டிக்கொண்டாள் பாரதி... அவரும் தன் மகளை நீண்ட நாட்களுக்கு பிறகு பார்க்க, அதுவும் தாய்மையின் அழகில் தன் மகள் ஜொலிப்பதை கண்டு மனம் நிறைந்து பாரதியை அணைத்துகொண்டார்... அவளின் தலையை வாஞ்சையுடன் தடவி கொடுத்தார்....

சில நிமிடங்கள் கழித்து தன்னை சுதாரித்தவள் நிமிர அப்பொழுது தான் அருகில் தன் அன்னையை காண, அவர் கண்களிலும் கண்ணீர் திரண்டு நிக்க, இப்பொழுது அம்மா என்று அவரையும் கட்டி கொண்டாள்...

சில நிமிடங்கள் அங்கு அப்படி ஒரு பாச பிணைப்பு நிகழ்ந்து முடிய பின் அருகில் நின்றிருந்த தம்பி தங்கையையும் கட்டி கொண்டாள்..

பின் அப்பொழுதுதான் நினைவு வந்தவளாக தன் நிலை உணர்ந்து அவர் முகத்தில் முழிக்க முடியாமல் தலை குனிந்தவாறே

“சாரி.. பா... என்னை மன்னிச்சிடுங்க... நான் வந்து... “ என்று அவள் கண்கள் கலங்கி ஏதோ சொல்ல வர, இதுவரை அமைதியாக நின்றிருந்த ஜானகி முன்னே வந்து

“பாரதி மா... நல்ல நாள் ல எதுக்கு கண் கலங்கற.. பழசை எல்லாம் இப்ப பேச வேண்டாம்... நேரம் ஆகுது பார்... மெதுவா மத்ததெல்லாம் பேசிக்கலாம்.. நீ இன்னைக்கு புல்லா சிரிச்சுகிட்டே இருக்கணும்..

மறந்து எதுவும் பழசை பேசக்கூடாது... அண்ணா அண்ணி உங்களுக்கும் சேர்த்துதான்.. “ என்று சிரித்து கொண்டே சூடம் ஏற்றி அந்த முருகனுக்கு ஆரத்தி காண்பித்து தர்மலிங்கத்திடம் தட்டை காட்ட, அவரும் அந்த முருகனை வணங்கி அதில் இருந்த விபூதியை எடுத்து தன் நெற்றியில் வைத்து கொண்டு பின் பாரதியின் நெற்றியில் வைத்து விட்டார்...

“எவ்வளவு நாளாகிறது தன் அப்பா இந்த மாதிரி விபூதி வைத்து விடுவது..” அவர் கை பட்டதும் அவளுக்கு சிலிர்த்தது...

பாரதிக்கு வைத்து விட்டவர்

“நீங்களும் வாங்க மாப்பிள்ளை... “என்று எதிர்புறத்தில் நின்று கொண்டிருந்த ஆதியை பார்த்து சொல்ல, அப்பொழுதுதான் எதிர்புறம் பார்த்தாள்..

ஆதியும் அங்கு தான் நின்று கொண்டிருந்தான்... அவள் அறைக்குள் வந்ததில் இருந்தே அவர்களை பார்த்து கொண்டு அமைதியாக நின்று கொண்டிருந்தான்...

இதுவரை காணாதவனை கண்டதும் அதுவும் அவனும் தங்கள் திருமணத்திற்கு எடுத்திருந்த பட்டு வேட்டி சட்டை யை கட்டி அசத்தலாக நின்றிருந்தவனை கண்டதும் பாரதியின் கண்கள் விரிந்தன..

அவனும் அவளை கண்டு குறும்பாக கண் சிமிட்டி முன்னே வர, தர்மலிங்கம் அவனுக்கு நெற்றியில் விபூதியை வைக்க, இருவரும் ஒரே நேரம் அவர் காலில் விழுந்து வணங்கினர்...

“நல்லா இருங்க.. எப்பவும் இதே மாதிரி சந்தோஷமா இருக்கணும்.. “ என்று குனிந்து அவர்களை தூக்கினார் தர்மலிங்கம்..அவர் முன்பு மனக்கண்ணில் கண்ட அதே காட்சியை நேரடியாக காண, மனம் நிறைந்து நின்றார்...

“அப்பா.. உங்க செல்ல மகளை பார்த்ததும் எங்களை மறந்துட்டீங்களே.. “ என்று பாரத் ம் இந்திராவும் முகத்தை நொடித்து கொண்டே முன்னே வர, அவரும் சிரித்து கொண்டே விபூதியை எடுத்து அவர்களுக்கும் வைத்து விட்டார்...

“சரி வாங்க எல்லாரும் ஹாலுக்கு போகலம்... “என்று ஜானகி முன்னே நடக்க அனைவரும் வெளியில் வர, பாரதி மட்டும் தன் அப்பா அம்மாவிடம் ஒட்டி கொண்டே நடந்து வந்தாள்... அவளுக்கு இன்னும் நம்ப முடியவில்லை.. இது எப்படி சாத்தியம் என்று

பின் பாரத் இடம் “எப்படி டா இருக்க?? எப்படி வந்தீங்க?? “என்றாள் இன்னும் தன் ஆச்சர்யம் விலகாமல்

அவனும் தன் கோபத்தை மறைத்துகொண்டு

“ஹ்ம்ம்ம் நல்லா இருக்கோம் பாரதி.. காலையில் தான் வந்தோம்.. உனக்கு ஒன்னு தெரியுமா?? .. நாங்க எல்லாரும் திருச்சியில் இருந்து ப்ளைட்டில வந்தோம்.. மாம்ஸ் தான் டிக்கட் அனுப்பி வச்சிருந்தார்... அவரே ஏர்போர்ட் வந்து எங்கலை எல்லாம் கூட்டி கிட்டு வந்தார்...

செமயா இருந்தது ப்ளைட்ல வந்தது... அப்பா அம்மாவுக்கு ஒரே சந்தோஷம்... ஆனால் உன் மேல கோ... “ என்று எதையோ சொல்ல வந்து பாதியில் நிறுத்திக் கொண்டான்... அதற்குள் இன்னும் சிலர் வர பாரதி அவர்களை சென்று வரவேற்க, அதற்கு மேல் அவளால் எதுவும் பேச முடியாமல் போனது...

ஆதியின் நண்பன் வசீகரனும் அவன் அன்னை மீனாட்சியுடன் வந்திருக்க, ஆதி அவர்களை பாரதிக்கு அறிமுகபடுத்த, பாரதியும் சிரித்துகொண்டே அவர் காலில் விழுந்து வணங்கினாள்...நிகிலனும் முன்னரே வந்து ஆதிக்கு உதவி கொண்டிருந்தான்

அப்பொழுது சிவகாமியும் அகிலாவும் வந்திருக்க, அகிலா ஓடி வந்து பாரதியை கட்டி கொண்டாள்...

“எப்படி இருக்கீங்க அண்ணி?? குட்டி பாப்பா எப்படி இருக்கா?? ... உங்களுக்கு ஒன்னு தெரியுமா.. உங்க வயித்துல இருக்கிற பாப்பா எனக்கு மறுமகளாம்.. நான் அவளுக்கு அத்தையாம்... என்னை அவ அத்தைனு கூப்பிடுவாளாம்.. நான் அத்தை ஆகிட்டேன் தெரியுமா.. “என்று வரிசையாக அடுக்க, அனைவரும் அவளின் பேச்சை கேட்டு சிரித்தனர்...

பாரதியும் அவளை கட்டிகொண்டு

“இப்பதான் இந்த அண்ணி ஞாபகம் வந்ததா?? “என்று செல்லமாக கோவிக்க

“ஹ்ம்ம்ம் நான் என்ன பன்றது அண்ணி... படிக்கிற வயசுல வெளில சுத்த கூடாதாம்.. யார் கூடயும் போனும் பேசக் கூடாதுனு எங்க வீட்ல ரூல்ஸ்.. அப்படியும் நான் உங்க கிட்ட போன வாரம் போன்ல பேசினேன் இல்ல.. “ என்று அவள் சத்தமாக பேசி சிரிக்க, அதை கண்டு நிகிலன் அகிலாவை முறைத்து கொண்டு நின்றான்..

அகிலா அவன் முறைப்பதை கண்டு பாரதியின் காதில் குனிந்து

“அண்ணி.. முறைப்பவர்கள் சங்கம் னு ஒன்னு ஆரம்பிச்சிருக்காங்க போல.. அங்க இருக்கிறவங்க எல்லாம் எப்ப பார் முறைச்சுகிட்டே இருக்காங்க.. “ என்று நிகிலன் நின்றிருந்த இடத்தை கண்ணால் ஜாடை காட்டி சிரிக்க, அங்கு பார்த்த பாரதி ஆதியும் அங்கு நின்று கொண்டிருப்பதை கண்டு

“சரியா சொன்ன அகிலா... .. முறைப்பவர்கள் சங்கத்து ல உன் ஆதி அண்ணா தான் தலைவர்,, அப்புறம் நிகிலன் அண்ணா செயலாளர்..” என்று சிரித்துகொண்டே அகிலாவுக்கு ஹை பை கொடுத்தாள் பாரதி

பின் அனைவரும் வந்துவிட, நிகிலனே தாய் மாமா சார்பில் பாரதிக்கு மாலையை போட பின் பாரதியை மனையில் அமர வைத்து, லட்சுமி பெண் வீட்டு சார்பாக வாங்கி வந்திருந்த தங்க வளையலை எடுத்து கமலாவையே போட சொன்னார்...

அவரும் வளையலை போட்டு, பாரதியின் கன்னத்தில் சந்தனம் பூசி விழாவை ஆரம்பித்து வைக்க, பின் அனைவரும் வரிசையாக அவளுக்கு வளையல் அடுக்கி சந்தனம் பூசினர்...

ஜானகி ,சுசிலா ,சிவகாமி, மீனாட்சி என அனைவரும் போட்டு ஆசிர்வாதம் பண்ணினர்... தங்கமும் , மாரியையும் போட சொல்ல அவர்களும் முதலில் மறுத்தாலும் பின் தங்கள் சின்ன எஜமானிக்கு வளையலை போட்டு சந்தனம் பூசி வணங்கினர்..

இந்திராவும் அகிலாவும் அதற்குள் நண்பர்களாகி இருக்க அவர்களும் அடம் பிடித்து பாரதிக்கு வளையல் போட்டனர்...

அருகில் நின்று கொண்டு ஆதி தன் மனைவியையே ரசித்து பார்த்து கொண்டிருந்தான்.. ஆனால் அவள் மறந்தும் அவன் பக்கம் திரும்பவில்லை... நொடிக்கொரு தரம் அவள் அப்பாவிடமே சென்று நின்றன அவள் கண்கள்...அவரும் முன் வரிசையில் அமர்ந்துகொண்டு தன் மகளை ரசித்து பார்த்துகொண்டிருக்க, அதை கண்டு பாரதி துள்ளி குதித்தாள் மனதுக்குள்

பின் அனைவரும் வளையல் போட்டு முடிக்க, ஆதி அருகில் வந்து அவன் பாக்கெட்டில் வைத்திருந்த அந்த அழகிய வைர வளையலை எடுத்து அவள் கை பிடித்து வளையலை போட்டு அந்த சந்தனத்தை, எடுத்து அவள் கன்னத்தில் பூச அவள் கன்னமோ வெக்கத்தில் சிவந்தது..

அனைவரும் ஓ வென்று கத்த அவனும் மெல்ல வெக்கபட்டு சிரித்து கொண்டே நகர்ந்து வந்தான்...

நிகிலனும் வசியும் அவன் செய்கையை ரசித்து கிண்டலடித்து சிரிக்க, அவர்களையே ரசித்து பார்த்தனர் சிவகாமியும் மீனாட்சியும் ஒரு வித ஏக்கத்துடன்...

“எங்க போனாலும் நம்மல இப்படி கேமராவை புடிக்க வச்சிடறாங்களே.. “ என்று புலம்பி கொண்டே பாரத் அங்கு நடப்பவைகளை பாரதியின் வீட்டிற்கு டெலிகாஸ்ட் பண்ணி கொண்டிருந்தான்... அவன் ஆயா , மஹா , ஈஸ்வர் அனைவரும் அங்கு நடக்கும் நிகழ்ச்சியை நேரடியாக பார்த்து கொண்டிருந்தனர்...

மஹாவுக்கு இப்பொழுது தான் குழந்தை பிறந்துள்ளதால் அவர்களால் வர முடியவில்லை... ஆதி பாரதிக்கு வளையல் போட்ட காட்சியை கண்டு மனம் பூரித்தனர் அனைவரும்.. அதுவும் காமாட்சிக்கு தன் பேத்தியை அந்த கோலத்தில் பார்க்க கண்கள் நிறைந்து இருந்தன..

வசீகரன் வழக்கம் போல அங்கு நடப்பவைகளை பதிவு செய்து கொண்டிருந்தான்

பாரத் ஐ கண்ட அகிலா இந்திராவிடம் குனிந்து

“யார் இந்த ஒட்டட குச்சி இந்து.. நான் இதுவரைக்கும் இங்க பார்த்தது இல்லை.. “ என்று கிசுகிசுக்க, அது சரியாக பாரத் ன் காதில் விழ அவன் திரும்பி அகிலாவை முறைத்தான்...

அதை கண்டுகொண்டவள்

“ஆகா... இவன் இந்த முறைப்பவர்கள் சங்கத்தில் சேர்ந்து இருக்கிற ஜூனியர் மெம்பர் போல.. தெரியாமல் வாய விட்டுட்டமே... “ என்று மனதுக்குள் புலம்ப

இந்திராவோ “சூப்பரா சொன்ன அக்கா... அவன் என் அண்ணன் தான்... அவனை ஓட்ட எனக்கு ஒரு சரியான ஆள் கிடைச்சிருச்சு.. “என்று குதூகலித்தாள்... அகிலாவோ அவள் சொன்ன அக்காவில் கடுப்பாகி

“பார் இந்து... நீ என்ன அக்கானு எல்லாம் சொல்ல வேணாம்... என்னவோ எனக்கு வயசு ஆன மாதிரி இருக்கு... நீ அகிலானே கூப்பிடு.. “ என்று திருத்தினாள்.. இந்திராவும் சிரிச்சுகிட்டே “சரி அகிலா... அப்படியே கூப்பிடறேன்..” என்று சிரித்தாள்

பின் பாரதி எல்லாரிடமும் ஆசிர்வாதம் வாங்க விழா இனிதே முடிந்தது.... ஆதி அடிக்கடி அவளை பார்த்து ரசிக்க, ஆனால் அவளோ ஆதியின் பக்கம் மட்டும் கடைசி வரைக்கும் திரும்பவே இல்லை...

“என்னடா மச்சான்... சிஸ்டர் உன்னை கண்டுக்கவே மாட்டேங்கறாங்க.. “ என்று வசி ஆதியை வம்பு இழுக்க

நிகிலனோ

“ ஹ ஹ ஹா.. நீ கல்யாணத்தப்போ என் சிஸ்டரை எப்படி படுத்தின.. அவங்க எத்தனை முறை உன்னை திரும்பி பார்த்தப்போ நீ பிகு பண்ணின இல்ல... இப்ப அவங்க சான்ஸ்.. அதான் உன்னை பழி வாங்கறாங்க போல.. “என்று சிரிக்க ஆதி அவனை பார்த்து முறைத்தான்...

“ஹீ ஹீ ஹீ உன் சிஸ்டர் இல்ல... பின்ன எப்படி இருப்பா... போடா.. கேர் ஆப் தாய் மாமா... “என்று ஆதி அவனை கிண்டலடிக்க, வசி புரியாமல் முழிக்க,

“இவன் ஒருத்தன்.. எல்லாம் விளக்கமா சொன்னாதான் புரியும்.. நீயெல்லாம் எப்படிடா படிச்சு டாக்டர் ஆன.. “ என்று ஆதி வசியை ஓட்டி கொண்டே

“கேர் ஆப் தாய் மாமா னா, யாருக்கெல்லாம் மாமா இல்லையோ நம்ம நிகில் உடனே மாமா ஆயிடுவான்... “ என்று சிரிக்க, அவனை பார்த்து முறைத்த நிகிலன்

“டேய்...எல்லாம் என் நேரம்....ஏதோ சடங்கு செய்ய ஆள் இல்லைனு கஷ்ட படுவனு செஞ்சா ரொம்பத்தான் ஓட்டற... உன் நல்ல நேரமோ இல்ல என் கெட்ட நேரமோ.. உன் வீட்டு பங்சன் னா மட்டும் எனக்கு எப்படியோ ப்ரியாகிடறது.... “ என்று முறைத்தவன்

“கண்டிப்பா இது என் சிஸ்டரோட நேரமா தான் இருக்கும்.. அவங்களுக்காகத் தான் நான் வர்ரேன்.. உனக்காக ஒன்னும் நான் வரலை... “ என்று சிரித்தான்...

பின் நண்பர்கள் மூவரும் கதை பேசிக்கொண்டே அனைவரையும் சாப்பிட அழைத்தனர்

தங்கமே விருந்து சமைத்திருக்க அனைவரும் உணவு மேசையில் அமர, பாரதி சென்று அவள் அப்பா பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்...

ஆதி அவளை பார்த்து முறைக்க அவளோ அவன் பக்கமே திரும்பவில்லை.. நிகிலனும் வசியும் கண்ணால் ஜாடை செய்து சிரித்து கொண்டனர்..

பின் ஒவ்வொருத்தராக விடை பெற , பாரதியும் உள்ளே சென்று வேற ஒரு புடவையை மாற்றி கொண்டிருக்க, அவளிடம் விடைபெற்று செல்வதற்காக உள்ளே வந்த அகிலா தன் விரலை விட்டு எண்ணவும் பின் எதுவோ யோசிப்பதுமாக இருக்க, ஜானகி அவளிடம்

“என்ன அகிலா கண்ணா?? என்ன யோசிச்சுகிட்டிருக்க?? .. “ என்றார்

“எனக்கு ஒரு சந்தேகம் ஆன்ட்டி... அண்ணிக்கு கல்யாணம் ஆகி 4 மாசம் தான ஆகுது.. அதுக்குள்ள எப்படி அவங்க வயிறு இவ்வளவு பெருசா இருக்கு?? “ என்று அதுவரை தன் மண்டையில் குடைந்து வந்த தன் சந்தேகத்தை கேட்க பாரதி இதுக்கு என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் ஜானகியை பார்த்து முழித்தாள்... 



ஜானகி சிரித்துகொண்டே

“அதுவா அகிலா கண்ணா... ஆதி கல்யாணத்தப்போ நீ தான நாத்தனார் முடிச்சு போட்ட.. அதோட எபக்ட் லதான் பாப்பா சீக்கிரம் பெருசா வளர்ந்துட்டா போல... வெளில யார் கிட்டயும் சொல்லிடாத.. அப்புறம் உன்னை யாரும் நாத்தனார் முடிச்சு போட கூப்பிட மாட்டாங்க... “ என்று தன் சிரிப்பை அடக்கி கொண்டே சீரியசாக சொல்ல அதை கேட்டு அகிலாவும்

“அப்படியா... ஆன்ட்டி.. நான் யார் கிட்டயும் சொல்ல மாட்டேன்.. நீங்களும் யார் கிட்டயும் சொல்லிடாதிங்க..” என்று குதித்து கொண்டே வெளியில் ஓடினாள்..

“அத்தை.. நீங்க கேடிதான்... அவ கிட்ட ஏதோ கதையை சொல்லி சமாளிச்சுட்டீங்க.. “ என்று சிரித்தாள் பாரதி... ஜானகியும் சிரித்து கொண்டே வெளியில் வர, அதற்கு பின் பாரதி அவள் பெற்றோர்களிடமே கதை அடித்து கொண்டிருந்தாள்..

ஆதி பாரத்தையும் இந்திராவையும் அழைத்து கொண்டு கோல்டன் பீச் சென்று வர, அவர்கள் இருவருக்கும் இன்னும் குஷியாகி போனது...

இரவு உணவின் பொழுதும் பாரதி ஆதியின் பக்கம் திரும்பவே இல்லை.. ஆதியோ மனதுக்குள் பொறுமி கொண்டே சாப்பிட்டு முடித்து மேல சென்றான்..

10 மணி ஆகியும் பாரதி அவன் அறைக்கு வராததால் அவள் எண்ணிற்கு அழைக்க அவளோ அதை எடுக்காமல் கட் பண்ணினாள்....

பின் தன் அன்னையை அழைத்து பாரதியை பால் கொண்டு வரச் சொல்ல, சிறிது நேரத்தில் அவன் அறை கதவை தட்ட

“வரட்டும்... அவளுக்கு இருக்கு இன்னைக்கு.. “ என்று முறைத்து கொண்டே உள்ள வா என்று சொல்ல,

இந்திரா கையில் பாலுடன் உள்ளே வந்தாள்... அதை கண்டவன் தன் கோபத்தை மறைத்து கொண்டு

“இந்து குட்டி.. உன் அக்கா எங்க?? நீ வந்திருக்க.. “ என்று அசடு வழிந்தான்...

“அக்கா... கீழ அப்பா அம்மாவோட கதை அடிச்சுகிட்டு இருக்கா மாமா... அதான் என்னை கொண்டு போய் கொடுக்க சொன்னா… அதோட உங்களுக்கு வேற ஏதாவது உதவி வேணும்னாலும் என்னை செய்ய சொன்னா.. வேற எதுவும் வேணுமா மாமா?? ...” என்று அவள் கேட்க, இவனோ பல்லை கடித்து கொண்டு

“ஹி ஹி ஹி ஒன்னும் வேணாம் இந்து.. ஆமா.. காலையில் இருந்து பேசிகிட்டுதான இருக்கா..இன்னும் முடியலையா?? “ என்றான் கடுப்பாகி..

“ஹீ ஹீ அவ எங்க ஊரை விட்டு வந்ததில் இருந்து, இந்த ஒன்பது மாத கதையும் பேசி கிட்டு இருக்கா மாமா... இப்பதான் 4 மாத கதை முடிஞ்சிருக்கு.. இன்னும் பாக்கி கதையும் முடிய எப்படியும் நைட் புல்லா ஆகிடும்... நீங்க படுத்து தூங்குங்க... குட் நைட்..” என்று சிரித்து கொண்டே வெளியேற ஆதி எரிச்சலின் உச்ச கட்டத்திற்கு சென்றான்..

“ரொம்பதான் படுத்தறாளே... இந்த கருவாச்சி... என் பிரின்ஸஸ் கூட பேசனும் னா ரொம்ப பிகு பண்றாளே..” என்று புலம்பி கொண்டே பால்கனியில் சென்று நடந்தவனுக்கு மனம் மீண்டும் அவளிடமே சென்று நின்றது...

அவள் முகத்தை பார்க்க தவித்தன அவன் கண்கள்... அதோடயே வந்து படுத்தவனுக்கு உறக்கம் வரவில்லை... அதற்கு மேல முடியாமல் மீண்டும் பாரதிக்கு அழைக்க அவளோ திரும்ப திரும்ப அவன் அழைப்பை துண்டித்தாள்...

சிறிது நேரம் பொறுத்தவனுக்கு அதற்கு மேல தாங்க முடியாமல் நேராக வெளியில் வந்து படிகளில் இறங்க , அப்பொழுது லட்சுமி எதற்கோ வெளியில் வந்து இருக்க அவரிடம் சென்றவன்

“அத்தை... அவளை கொஞ்சம் மேல அனுப்புங்க..காலையில மத்த கதையை பேசட்டும் “ என்று நேரடியாக சொல்ல, லட்சுமி திகைத்து

“சரிங்க மாப்பிள்ளை.. இதோ வரச் சொல்றேன்.. அவ அப்பாவை பார்த்தா இந்த உலகத்தையே மறந்திடுவா... அதான் உங்களை கண்டுக்கலை போல.. நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதிங்க..” என்று தன் பொண்ணு சார்பா அவனிடம் விளக்கம் சொல்ல

“ஐயோ... அதெல்லாம் ஒன்னும் இல்லை அத்தை... அவள பத்தி தெரியாதா.... காலையில் இருந்து கீழயே இருக்கா.. மேல வரல.. அதான்.. “ என்று அவன் நிலையை வெக்கத்துடன் எப்படி சொல்வது என்று தெரியாமல் மென்னு முழுங்க அதை புரிந்து கொண்ட லட்சுமியும் நமட்டு சிரிப்புடன்

“இதோ அனுப்பி வைக்கிறேன் மாப்பிள்ளை.. நீங்க மேல போங்க.. “ என்று சொல்லி தங்கள் அறைக்கு வந்தார்..

அங்க பாரதி தன் அப்பாவின் தோளில் சாய்ந்து கொண்டு செல்லம் கொஞ்சி கொண்டிருக்க, ஜானகியும் அருகில் அமர்ந்து கதை அடித்து கொண்டிருந்தனர்

“பாரதி... மாப்பிள்ளை உன்னை மேல கூப்பிடறார்... மீதி கதைய நாளைக்கு பேசலாம்.. நீ மேல போ.. “ என்று சொல்ல

“அவருக்கு என்ன மா ... நான் இன்னைக்கு உங்க கூட தான் இருப்பேன்... “ என்று சிணுங்க

“பாவம் மாப்பிள்ளை.. நீ காலையில் இருந்து எங்க கூடவேதான சுத்திகிட்டு இருக்க... அவர் உங்கிட்ட பேச முடியாமல் தவிச்சுகிட்டு இருக்கார்... நீ முதல்ல மேல போ.. “ என்று கண்டிக்க தர்மலிங்கமும் அவளை செல்லமாக அதட்ட வேற வழி இல்லாமல் எழுந்தாள்...

லட்சுமி சிரிச்சுகிட்டே ஜானகியிடம்

“என் இரண்டு பொண்ணுங்களும் ரொம்ப கொடுத்து வச்சவங்க அண்ணி... பெரிய மாப்பிள்ளையும் அப்படி தான்... மஹாவை பார்க்காமல் இருக்க முடியாதுனு இப்பவும் தினமும் நம்ம வீட்டுக்கு வந்திடுவார்... அதே மாதிரிதான் சின்ன மாப்பிள்ளையும் போல.. பாரதி மேல உயிரா இருப்பதை பார்க்க மனதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.. “ என்று புகழ

பாரதியோ

“ஆமா... பொல்லாத மறுமகன்.. அவன் எதுக்கு கூப்பிடறானு எனக்குதான தெரியும்.. அவன் புள்ளைய கொஞ்சத்தான் என்னை இவ்வளவு ஆர்வமா கூப்பிடறான்... என் மேல இருக்கிற பாசத்தால ஒன்னும் இல்லை.. இதை எப்படி இவங்க கிட்ட சொல்றது... சரி இவங்களாவது நான் நல்லா இருப்பதா நினைச்சுகிட்டு இருக்கட்டும்.. “ என்று அவனை திட்டி கொண்டே மேல சென்றாள்...

அவன் அறையை அடைந்ததும் அவள் ஆதியை திட்ட ஆரம்பிக்கு முன்னே அவன் முந்தி கொண்டு

“ஏய்.... உன்னை எவ்வளவு நேரமா கூப்பிட்டு கிட்டு இருக்கேன்... கொஞ்சமாவது அக்கறை இருக்கா... நீ பாட்டுக்கு உங்க அப்பாவோடயே சுத்தி கிட்டு இருக்க.. இங்க ஒருத்தன் காத்துகிட்டு இருக்கறது தெரியாதா... “ என்று கத்த

“ஆமா... எதுக்கு காத்துகிட்டு இருக்கீங்களாம்??... எல்லாம் உங்க புள்ளைய கொஞ்சத்தான.. என்னவோ என் மேல இருக்கிற பாசத்துல, என்னை பார்க்காம இருக்க முடியலைங்கிற மாதிரி எதுக்கு இந்த பில்டப்??.. “ என்று அவளும் பொரிந்தாள்

தன் அப்பாவிடம் இருந்து பிரித்து விட்டான் என்ற கோபத்தில் இன்னும் அவனை திட்டி கொண்டிருக்க சிறிது நேரம் அவள் கோபத்தை ரசித்தவன், ஏதோ நினைவு வர பிரிட்ஜை திறந்து அதில் இருந்த ஐஸ்கிரீமை எடுக்க, அதை கண்டவள் அப்படியே தன் கோபத்தை மறந்து புன்னகைத்தாள் வாயெல்லாம் பல்லாக...

பின் வேகமாக எழுந்து வந்து அதை பிடுங்கி கொண்டு

“இதை முன்னாடியே கொடுத்தா என்ன..” என்று முறைத்தவாறு அதை சுவைக்க, ஆதியோ

“ஆஹா .. நம்ம ஐஸ்கிரீம் மந்திரம் இவகிட்ட நல்லாவே வேலை செய்யுது... படபடனு பொரிஞ்சவ இதை கண்டதும் மழையில நனைந்த புஸ்வானம் மாதிரி இப்படி ஆப் ஆகிட்டாளே...” என்று சிரித்துக் கொண்டான்...

அவளும் வழக்கம் போல தன் ஐஸ்கிரீம் ல் அவனுக்கும் ஒரு பங்கை கொடுத்து அதை முழுவதும் சாப்பிட்டு முடித்து உள்ளே சென்று கை கழுவி விட்டு வந்து

“ஹ்ம்ம்ம்ம் என்னை என் அப்பா அம்மாகிட்ட இருந்து பிரிச்சீங்க இல்ல.. அதனால இன்னைக்கு நீங்க உங்க புள்ளை கூட கொஞ்ச முடியாது... நீங்களும் இன்னைக்கு பிரிஞ்சு இருங்க.. “ என்று முறைத்தவாறு அருகில் இருந்த ஷோபாவில் அமர்ந்து கொண்டாள்...

“ஆஹா.. இந்த ஐஸ்கிரீம் மந்திரம் அதுக்குள்ள தீர்ந்து போச்சு போல... இந்த கேடி நல்லா மொக்கிட்டு, இப்ப மீண்டும் முருங்க மரம் ஏறராளே...இவளை எப்படி சமாளிப்பது?? “ என்று புலம்பி கொண்டே அந்த ஷோபாவின் அருகில் சென்று அவள் அருகில் நெருங்கி அமர்ந்தவன்

“ஹே.. பிரின்ஸஸ்.... உன் மம்மி இன்னைக்கு ரொம்பவும் என்னை படுத்தறா... கொஞ்சம் கூட என்ன கண்டுக்க மாட்டேங்குறா.. உன் தாத்தா பாட்டிய பார்த்ததும் என்னை அம்போனு விட்டுட்டா... இது நல்லதுக்கில்லை.. சொல்லி வை உன் மம்மி கிட்ட.... நான் எப்பவும் ஒரே மாதிரி இருக்க மாட்டேன் என்று...” என்று சிரிக்க, அவன் சொன்னதை கேட்டு பாரதி அதிர்ச்சியில் அப்படியே உறைந்து அமர்ந்தாள்...

உறைந்து அமர்ந்தவள் தன் விழி விரித்து அவனையே இமைக்க மறந்து பார்க்க

“ஏய்... பட்டிக்காடு.. எதுக்கு இப்படி சாக் ஆன லுக் விடற??.. உன் கண்ணை பார்த்தாலே எனக்கு பயமா இருக்கு.. “என்று அவன் கிண்டல் அடிக்க

“இப்ப என்ன சொன்னீங்க... ?? “ என்றாள் இன்னும் அதிர்ச்சி விலகாமல்...

“ஹ்ம்ம் என்ன சொன்னேன்?? ..” என்று யோசித்தவன்

“நான் எப்பவும் ஒரே மாதிரி இருக்க மாட்டேன் னு சொன்னேன்..”

”இல்லை.. அதுக்கு முன்னாடி?? “

“அதுக்கு முன்னாடி?? நீ என்னை கண்டுக்க மாட்டேங்குறனு சொன்னேன்..”

“இல்லை அதுக்கு முன்னாடி என்னமோ சொன்னீங்களே... “ என்றாள் ஆர்வமாக

“ஹே படுத்தாதடி.. எனக்கு மறந்து போச்சு... நீயே சொல்லு நான் என்ன சொன்னேனு.. “என்று அவன் கடுப்பாக

“நீங்க முதல்ல இருந்து என்ன சொன்னீங்கனு திருப்பி சொல்லுங்க... “ என்று மீண்டும் அவள் ஆர்வமாக கேட்க..

“அப்படி என்னத்த சொன்னேன்?? ... இவள் இவ்வளவு ஆர்வமா கேட்கறாளே...” என்று யோசித்தவாறு

“ஹ்ம்ம்ம் ஹே ப்ரின்ஸஸ்.... உன் மம்மி... ..” என்று திருப்பி சொல்ல ஆரம்பித்தவன் மம்மி என்று சொல்லையில் அவள் கண்கள் விரிந்ததை கண்டு கொண்டவன்

“ஆஹா... ஆதி.. உளறிட்டியே .... நீ உளறினதை இந்த பட்டிக்காடு கரெக்டா நோட் பண்ணிட்டாளே... உன் மனதை வெளிபடுத்தக் கூடாது னு நினைத்திருந்தால், அவசரபட்டு இப்படி உளறிட்டியே.. ஹ்ம்ம்ம் சமாளிப்போம்... “ என்று புலம்பியவன் அவளை பார்க்க, பாரதியோ

“என்னை மம்மினுதான சொன்னீங்க..அப்ப நான் இந்த குழந்தைக்கு அம்மா தான ?? . “ என்றாள் சந்தோஷத்தில்...

“ஏய்.. இதுல என்ன அதிசயம்?? ... நான் இந்த குழந்தைக்கு அப்பா.. உன் கழுத்துல நான் தாலி கட்டியிருக்கேன்... அப்ப நீ என் பேபிக்கு அம்மாதான?? இது கூட தெரியல.. சரியான பட்டிக்காடு... “ என்று உள்ளுக்குள் சிரித்து கொண்டே

அவளை ஓரக்கண்ணால் பார்க்க அதற்குள் அவன் அலைபேசி அழைக்க எழுந்து சென்று அதை எடுத்தவன் முக்கியமான ஆபிஸ் கால் என்பதால் எழுந்து பால்கனிக்கு சென்றான்...

பாரதிக்கோ இன்னும் நம்ப முடியவில்லை... முதல் முதலாக தன்னை அம்மானு சொல்லி இருக்கான்.. அப்படீனா என்னை தன் மனைவியாக ஏற்று கொண்டானா?? நான்தான் என் ஆதி குழந்தைக்கு அம்மாவா?? நான் ஒரு வாடகைத்தாய் இல்லை.. பேபி சிட்டர் இல்லை... நான் அம்மா..!!!

ஆனால் கடைசியா என்ன சொன்னான்?? .. தெளிவா நீ என் மனைவினு சொல்லலயே??“ என்று மீண்டும் மனம் வாடியவள்

“எது எப்படியோ.. என்னை அம்மானு சொல்லிட்டான்... அப்ப இது என் குழந்தை... நான் இவளுக்கு அம்மா.. “ என்று குதூகலித்தாள்

அவளுள் விலங்கிட்டு பூட்டி வைத்திருந்த அந்த தாய்ப் பாசம் விலங்கை உடைத்து கொண்டு மடை திறந்த வெள்ளம் போல பொங்கி வழிந்தது அவள் உள்ளே... முதல் முறையாக தன்னை அவள் வயிற்றில் வளரும் அந்த சிசுவிற்கு தாயாக உணர்ந்தாள்... இதுவரை கடமையாக சுமந்து வந்ததை இப்பொழுது தன் குழந்தை என்ற உணர்வு பொங்க, அவளுள் சொல்ல முடியாத உணர்வுகள் பொங்கின....

மெல்ல எழுந்து வந்து படுக்கையில் படுத்தவள் மெல்ல தன் வயிற்றில் கை வைத்து

“ஹாய்.. பிரின்ஸஸ்... நான் உன் அம்மா பேசறேன்.. “ என்று தன் பாசத்தை எல்லாம் திரட்டி அவள் வயிற்றில் கை வைத்தாள்...

இதுவரை தன் தந்தையின் தொடுகையை மட்டுமே அனுபவித்து வந்த அந்த சிசு இப்பொழுது முதல் முறையாக தாயின் தொடுகையும் அதில் தெரிந்த பாசத்தையும் உணர்ந்து துள்ளி எழுந்தாள்....

பாரதிக்கோ அவள் பேசியதற்கும் அதற்கு அந்த குழந்தை எழுந்து ஆட ஆரம்பித்ததும், இனம் புரியாத பரவசம் அவள் உள்ளே... ஏன் இந்த உலகத்தையே வென்று விட்டதை போல ஒரு மகிழ்ச்சி அவள் முகத்தில்... அந்த குழந்தை நகரும் இடத்தில் எல்லாம் தன் கையை ஆசையாக வைத்து பார்த்தவள் அவள் கை குறு குறுக்க, மெல்ல அதனுடன் பேச ஆரம்பித்தாள்..

இதுவரை தன் மனதில் பூட்டி வைத்திருந்த பேசாத கதை எல்லாம் தன் மகளிடம் பேச ஆரம்பித்தாள் பாரதி...

சிறிது நேரம் கழித்து திரும்பி வந்த ஆதி பாரதி தன் இளவரசியுடன் கொஞ்சி கொண்டிருப்பதையும் அவள் முகத்தில் என்றும் இல்லாத ஒரு ஒளி பரவி இருப்பதையும் கண்டவன் அவளையே ரசனையுடன் பார்த்து கொண்டிருந்தான்..

“சே.. அவளிடம் முன்னாடியே தன் மனதில் இருப்பதை சொல்லி இருக்கணுமோ?? அவள் அம்மானு சொன்னதுக்கே இப்படி மலர்ந்து நிக்கறாளே.. அவளை என் மனைவி என்று சொன்னால் ??

“ம்ஹூம்.. இல்லை இப்ப சொல்லக்கூடாது... அப்புறம் என்னால அவள விட்டு விலகி இருக்க முடியாது.. இப்படியே இருக்கட்டும் என் பிரின்ஸஸ் பிறக்கிற வரைக்கும்.. அவளுக்கு சர்ப்ரைஷா ‘ஸ்பெஷலா’ தான் என் மனதில் இருப்பதை சொல்லனும்.. அதுவரைக்கும் அடக்கி வாசிக்கனும்.. “ என்று சிரித்து கொண்டவன் ஏதோ நினைவு வர

“அப்பா.. முருகா.. இதுவும் உன் காதுல விழுந்திருக்குமே... இது சும்மா விளையாட்டுக்குத்தான்.. இத கேட்டு நீ பாட்டுக்கு அவளை நான் கொடுமை படுத்தறதா நினைச்சு மறுபடியும் ஒரு கட்டத்தை போட்டு உன் ஆட்டத்தை ஆரம்பிச்சுடாத.... மீ பாவம்... இது சும்மா ஒரு fun க்காகத்தான்.. “ என்று புலம்பினான் பயந்தவாறு..

“ஹா ஹா ஹா.. சரி சரி பிழைச்சு போ.. மகனே.. “ என்று சிரித்து கொண்டான் அந்த வேலன்...

சிறிது நேரம் கதை அடித்து கொண்டிருந்தவள் தன்னை யாரோ பார்ப்பதை போல இருக்க தலையை நிமிர்ந்தவள் ஆதி தன்னையே ரசனையாக பார்த்து கொண்டிருப்பதை கண்டு கன்னம் சிவந்தாள்.. அவளின் பார்வையை கண்டு கொண்டவன் உடனே தன் பார்வையை மாற்றி கொண்டு அருகில் வந்து

“என்ன அம்மாவும் பொண்ணும் அதுக்குள்ள கூட்டனி அமைச்சுட்டீங்களா??

ஹே பிரின்ஸஸ்... இந்த பட்டிகாட்டு அம்மா கொஞ்சறதை எல்லாம் நம்பி நீ அவ பக்கம் சாய்ஞ்சுடாத.... ஏற்கனவே உன் இரண்டு பாட்டியும் அவள் பக்கம் தான் சப்போர்ட்.. நீயாவது என் பக்கம் நில்லுடா.. உன் அம்மா சொல்றதை எல்லாம் கண்டுக்காத... “ என்று சிரித்து கொண்டே அவள் அருகில் படுத்து கொண்டான்...

பாரதி அவனை முறைக்க, அவனோ குறும்பாக கண் சிமிட்டி அவள் கையை எடுத்து அதில் இருந்த வளையல்களை ஆசையாக தொட்டு பார்த்தான்...

காலையில் பூசிய சந்தனத்தில் மிளிர்ந்த அவள் கன்னங்கள் நினைவு வர, அவள் கையில் இருந்த வளையல்களுடன் விளையாடி கொண்டே

“பிரின்ஸஸ்....இன்னைக்கு உன் மம்மி ரொம்ப சூப்பரா இருக்கா.. இல்ல?? ஐ திங்க் நீ அவ வயிற்றுல இருக்கிறதுனாலதான் அவ ஜொலிக்கிறானு நினைக்கிறேன்.. இல்லைனா அவ மூஞ்சி கரு கருனு அழுது வடியும்.... கருவாச்சீ.. “ என்று அவளை ஓரக் கண்ணால் பார்த்து கொண்டே மனதுக்குள் சிரித்துகொண்டே அவளை சீண்ட ,அதை கேட்டு அவளுக்கு பொசுபொசு வென்று கோபம் வந்தது...

“நான் ஒன்னும் கருவாச்சி இல்லை... “என்று அவனை திட்ட அவனும் தான் பத்த வைத்தது நன்றாக பற்றிக் கொண்டது என்று சிரித்து கொண்டே அவளுடன் வம்பு இழுத்து கொண்டே அந்த நாள் முழுவதும் அவள் தன்னை பார்க்காமல் தவிர்த்த ஏக்கத்தை எல்லாம் தீர்த்து கொண்டான்...

காலையில் கண் விழித்த பாரதி மணியை பார்க்க அது 10 என காட்ட, பதறி வேகமாக எழுந்தாள்... ஆதி ஏற்கனவே எழுந்து சென்றிருந்தான்... நேற்றைய இரவு நினைவு வர

“திருடா.. எப்படி எல்லாம் என்னை வம்பு இழுக்கறான்.. “ என்று சிரித்து கொண்டவளுக்கு அப்பொழுதுதான் தன் பெற்றோர்களின் நினைவு வர வேகமாக குளியல் அறைக்கு சென்று குளித்து ஒரு புடவைய கட்டி கொண்டு அவசரமாக கீழ சென்றாள்...

அங்கு தர்மலிங்கம், லட்சுமி எல்லாம் கிளம்பி ஹாலில் அமர்ந்து இருக்க, ஆதி அவர்களுடன் சிரித்து பேசி கொண்டிருந்தான்.. அந்த அவசரத்திலும் தன் கணவனை ரசித்து கொண்டே அவர்கள் அருகில் சென்றவள்

“சாரி பா ... கொஞ்சம் தூங்கிட்டேன்.. “ என்றாள் பதற்றத்துடனும் கொஞ்சம் குற்ற உணர்ச்சியுடனும்....

“அதனால் என்ன பாரதி மா.. உன் அப்பா அம்மா தான.... ஒன்னும் தப்பா எடுத்துக்க மாட்டாங்க...நீ ஏன் இவ்வளவு டென்ஷனா வர்ர?? “என்று அவளுக்கு பரிந்து வந்தார் ஜானகி... அதை கண்டு தர்மலிங்கம் லட்சுமி இரண்டு பேருக்குமே மனம் குளிர்ந்து போனது...

“எந்த மாமியார் இப்படி ஈசியா எடுத்துக்குவாங்க.. தங்கள் மகள் கொடுத்து வச்சவ.... என்னதான் அவ சொல்லாம கல்யாணம் பண்ணிகிட்டாலும் நல்ல இடமாதான் சேர்ந்திருக்கா..” என்று இரண்டு பேருமே எண்ணிகொண்டனர்...

ஆனாலும் லட்சுமி தன் மகளை கடிந்து கொண்டார்...

பின் அவர்கள் கிளம்புவதாக சொல்ல அதுவரை சிரித்து கொண்டிருந்தவளின் முகம் வாடியது..

“என்னப்பா... அதுக்குள்ள கிளம்பறீங்க... இன்னும் கொஞ்ச நாள் இருக்கலாம் இல்ல.. “

“இல்ல பாப்பா.. அக்கா அங்க குழந்தைய வச்சுகிட்டு தனியா இருக்கு.. என்னதான் ஆயா பார்த்துகிட்டாலும் நாம கூட இருக்கணும்.. நாங்க போய்ட்டு உன் பிரசவத்துக்கு ஒரு வாரம் வந்து இருக்கோம்...நீ எதுவும் கவலை படக்கூடாது.. சந்தோஷமா இருக்கனும்.. அத்தை, மாப்பிள்ளை மனம் கோணாமல் நடந்துக்கோ.. “ என்று சொல்லி கிளம்பினர்..

ஆதி அவர்களை மீண்டும் விமானத்திலயே செல்ல ஏற்பாடு செய்திருந்ததால் அவர்களை விமான நிலையத்தில் கொண்டு விட்டு வர சென்றான்...பாரத் ம் இந்திராவும் பாரதியை பிரிய மனம் இல்லாமல் மீண்டும் ஒருமுறை பாரதியை கட்டிகொண்டு விடை பெற்றனர்...

ஜானகியும் பாரதியும் கார் வரை வந்து அவர்களை வழி அனுப்பி வைக்க அவர்களும் கை அசைத்து விடை பெற்றனர்....

பின் வீட்டிற்குள் வந்தவள் உடனே ஜானகியை பிடித்து கொண்டாள்..

“ரொம்ப தங்க்ஷ் அத்தை.. உண்மையிலயே என் வாழ்க்கையில் மறக்க முடியாத கிப்ட் இது தான்... Thank you so much!! “ என்று அவரை கட்டி கொண்டு அவர் கன்னத்தில் முத்தமிட்டாள்...

“ஆமா... எப்படி அத்தை இதெல்லாம்?? ... எனக்கு ஒன்னுமே புரியல.. நேத்துல இருந்தே என் மண்டைல குடைஞ்சுகிட்டே இருக்கு.. நீங்க தான் பங்சன் முடியற வரைக்கும் எதுவும் கேட்க கூடாதுனு சொல்லிட்டதால நானும் கன்ட்ரோல் பண்ணிகிட்டேன்.. இனிமேல் முடியாது.. என் தலை வெடிச்சிடும்.. சீக்கிரம் சொல்லுங்க.. “ என்றாள் ஆர்வமாக...

“ஹீ ஹீ ஹீ சொல்றேன்.. நீ முதல்ல என் பேத்திக்கு எதுவும் சாப்பிட கொடு... அவளும் பாவம் இந்த அம்மா எழுந்திருக்கிற வரைக்கும் பசியோட இருக்கா பார்.” என்று சிரித்து கொண்டே தட்டில் காலை உணவை வைத்து அவளிடம் கொடுக்க அப்பொழுது தான் ஞாபகம் வந்தது அவள் இன்னும் சாப்பிடவில்லை என்று... “

அதை புரிந்து கொண்டு ஜானகி அவளுக்கு முதலில் பசியாற சொல்லவும் ஜானகியின் அன்பில் நெகிழ்ந்து போனவள் அதை வேகமாக சாப்பிட்டு முடித்து ஜானகியின் அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டு ஆர்வமாக அவரை பார்க்க .அதுக்கு மேல அவளை காக்க வைக்க முடியாது என்று சிரித்துகொண்டே அந்த கதையை கூறினார் ஜானகி...

Comments

  1. அம்மா அப்பா எல்லாரையும்
    சேர்த்தாச்சா

    ReplyDelete

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!