தவமின்றி கிடைத்த வரமே-34
அத்தியாயம்-34
தன் அன்னையிடம் பேசி முடிக்கவும் அடுத்த நிமிடம் அவள் அலைபேசி ஒலிக்க, மீண்டும் அதை எடுத்து அதன் திரையில் பார்க்க மித்ரா என்று ஒளிர்ந்தது..
அந்த பெயரை கண்டதுமே அவள் உற்சாகம் எல்லாம் வடிந்து போனதை போல இருந்தது.. ஏனோ அவள் பெயரை கேட்டாலே அவளுக்கு வேப்பங்காய் போல கசந்தது..
அந்த அழைப்பை ஏற்கவா வேண்டாமா என்று யோசித்து கொண்டிருக்க அது முழுவதும் அடித்து நின்று போயிருந்தது... அப்பாடா என்று நிம்மதி அடைய அவள் நிம்மதியை குழைக்க என்று மீண்டும் ஒலித்தது.. அதற்கு மேல் தவிர்க்க முடியாமல் அந்த அழைப்பை ஏற்க
“ஹாய் மலர்... எப்படி இருக்க?? “ என்றாள் மித்ரா உற்சாகமாக..
அவள் உற்சாகத்தை கண்ட மலருக்கு யோசனையாக இருந்தது..
“இவளுக்காகத்தானே நேற்று இரவு தன் கணவன் பதறி துடித்து ஓடினான்..இப்ப என்னடான்னா இவள் இவ்வளவு உற்சாகமாக இருக்கிறாளே ?? “ என்று அவசரமாக யோசித்தவள்
“நான் நல்லா இருக்கேன்.. மித்ரா.. நீங்க எப்படி இருக்கீங்க?? “ என்றாள் வர வழைத்த உற்சாகத்துடன்..
“ஹ்ம்ம் ஐம் பைன்.. அப்புறம் பாவம் நைட் உன்னுடைய பர்ஸ்ட் நைட் நடக்காமல் ரொம்ப ஏமாந்து போயிருப்பியே...அதான் எப்படி இருக்க னு தெரிஞ்சுக்க போன் பண்ணினேன்.. “ என்றாள் நக்கலாக சிரித்தவாறு..
அதை கேட்டு மலர் திடுக்கிட்டாள்.. பர்ஸ்ட் நைட் மேட்டர் எல்லாம் எப்படி இவளுக்கு தெரியும் ?? “என்று மேலும் யோசிக்க,
“ஹா ஹா ஹா ரொம்ப யோசிக்காத மலர்... வசி என்கிட்ட எல்லாம் சொல்லிட்டான்..
எங்களுக்குள்ள எந்த ஒளிவு மறைவும் கிடையாது... அப்பனா நாங்க எவ்வளவு க்லோஸ் னு உனக்கே புரிஞ்சிருக்குமே... திடீர்னு நைட் எனக்கு என் வசி ஞாபகம் வந்திடுச்சு.. அதான் போன் பண்ணினேன்.. உடனே உன்னை அப்படியே விட்டுட்டு என்னை தேடி வந்திட்டான் பார்த்தியா...
அதுதான் எங்களுக்குள்ள இருக்கிற உறவு.. நைட் புல்லா என்கூடவேதான் இருந்தான்... இரண்டு பேரும் ஒன்னா ஜாலியா இருந்தோம்...ஐ ஹேட் வொன்டர்புல் நைட்.. “ என்று இன்னும் ஏதோ பிதற்ற, மலர் காதை பொத்தி கொண்டாள்...
மித்ராவின் முன்னால் தன் மனதில் இருப்பதை வெளிக்காட்ட கூடாது என தன்னை கட்டு படுத்திக் கொண்டவள் அவள் அதிர்ச்சியை வெளிக் காட்டாமல்
“ஓகே.. மித்ரா.. இப்ப எதுக்கு உங்க கதையெல்லாம் என் கிட்ட சொல்லி கிட்டிருக்கீங்க?? “ என்றாள் சாதாரணமாக காட்டி கொண்டு
அதை கேட்டு மித்ரா திகைத்து போனாள்.. அவள் சொன்னதை கேட்டு மலர் டென்ஷன் ஆவாள் கோபப்படுவாள்.. நேராக வசியிடம் சென்று சண்டை போடுவாள் என எதிர்பார்த்து இருக்க இவளோ இவ்வளவு கூலாக கேட்கவும் அதிர்ச்சியடைந்தாள்... ஆனாலும் சமாளித்து கொண்டு
“ஹீ ஹீ ஹீ.. சும்மாதான்.. பாவம் நீ ஏமாந்து போயிருப்ப இல்லையா.. அதான் உன்கிட்ட நாங்க சந்தோஷமா இருந்த செய்தியை சொல்லலாம்னு கால் பண்ணினேன்.. “ என்றாள் வரவழைத்த நமட்டு சிரிப்புடன்..
“ரொம்ப நன்றி.. ஒரு சின்ன திருத்தம்... உங்க வசிக்காக இங்க யாரும் ஏங்கி கிட்டு இருக்கலை..அவர் உன்னை பார்க்க வந்ததால் நான் ஒன்னும் ஏமாந்து போகலை...எனிவே தேங்க்ஸ் பார் யுவர் இன்பர்மேசன்.. போன வச்சிடறேன்.. “ என்றவள் தன் அலைபேசியை அணைக்க மறுமுனையில் மித்ராவிற்கு பற்றி கொண்டு வந்தது.
“சே.. எவ்வளவு திமிரா பேசறா பார்... கொஞ்சம் கூட வருத்தமே இல்லாமல்... விட மாட்டேன்.. இவளை வருத்தம், வேதனை பட வச்சு என் வசியை விட்டு ஓட வைக்கல, நான் மித்ரா இல்லை.. “ என சூளுரைத்தவள் அடுத்த காயை நகர்த்த திட்டமிட்டாள்.
போனை வைத்த மலருக்கோ உள்ளுக்குள் கொதித்தது..அருகில் இருந்த பென்ஞ்சில் அமர்ந்தவள் மீண்டும் தலையின் இருபக்கமும் கையை வைத்து கொண்டு நெற்றியை அழுத்தியவாறு யோசித்தாள்..
“சே.. எப்படி எல்லாம் பேசறா ? அவ சொல்வது எல்லாம் உண்மையா? இல்லை என்னை சீண்டுவதற்காக அப்படி பேசுகிறாளா? இவர் ஏன் அவ போன் வந்த உடனே விழுந்தடித்து ஓடுகிறார்?
அப்ப உண்மையிலயே அவர்கள் இருவரும் விரும்புகிறார்களா? அப்படி இருந்தால் என்னிடம் எப்படி அவனால் அப்படி நடந்து கொள்ள முடியும்? அவன் கண்ணில் ஏதோ ஒன்று என்னை சுற்றியே வருகிறதே ? அதெல்லாம் பொய்யா? “ என்று ஏதோதோ யோசித்தாள்..
மனம் என்பது கண்ணாடி மாதிரி.. நாம் அழகா இருகிறோம் என்று பார்த்தால் அது அழகாக காட்டும். இல்லை இது சரியில்லை என்று பார்த்தால் அது அப்படியே தோன்றும்..
அதே போல மலருக்கும் அவர்கள் இருவரும் காதலர்கள் என்று எண்ணி பார்த்தால் எல்லா நிகழ்ச்சிகளும் அப்படியே காட்டியது.
இல்லை வெறும் நண்பர்கள் தான் என்று எண்ணி பார்த்தால் அதுவும் அப்படியே சொல்லியது.. காதலர்களா? நண்பர்களா? என பட்டி மன்றம் நடத்தினாள். ஆனால் முடிவு சொல்ல நம்ம சாலமன் பாப்பையா சார் இல்லாததால் முடிவில்லாத பட்டி மன்றமாக முடிந்தது...
எப்படி யோசித்தாலும் அவளுடைய ஆழ்மனம் அவள் கணவன் நல்லவனே என சத்தமாக கூவி கொண்டிருந்தது.. பனிமலர் பல நேரங்களில் டக் கென்று உணர்ச்சி வசப்படாமல் தன் ஆழ்மனம் சொல்வதை கூர்ந்து கவனிப்பாள்..
அது மாதிரி இந்த மித்ரா விசயத்தில் அவளால் ஆழ்மனம் சொல்வதை புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை. கொஞ்சம் உணர்ச்சி வசபட்டிருக்க, அவளுக்குள்ளே பலதையும் எண்ணி குழம்பி கொண்டிருந்தாள்..
பின் சிறிது நேரம் யோசித்து அமர்ந்தவள் எதுவும் முடிவாக தெரியாததால் “நடப்பது நடக்கட்டும்.. இந்த மித்ரா எவ்வளவு தூரம் போவானு பார்க்கலாம்..” என்று தன்னை சமாதானம் படுத்தி கொண்டு தோட்டத்திலிருந்து வீட்டை நோக்கி நடந்தாள்..
தன்னை சுற்றிலும் பின்னப்படும் வலையை அறியாமல் தன் அறைக்கு சென்ற வசி அங்கிருந்த கட்டிலில் இருந்த அலங்காரங்களை பார்த்ததும் அவனுக்கு நேற்று இரவு சம்பவம் நினைவு வந்தது....
அவன் பனிமலரை ஆசையாக அணைத்ததும் முத்தமிட்டதும் நினைவு வர அதை தொடர்ந்து மித்ராவின் அழைப்பு வரவும் அதில் அவள் தந்தைக்கு திடீர் என்று நெஞ்சு வலி எனவும் அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை என மித்ரா அழ, அதற்கு மேல் தாமதிக்காமல் மலரை பாதியிலயே விட்டுவிட்டு கிளம்பி சென்று விட்டான்..
அங்கு மித்ரா அப்பாவிற்கு லேசான நெஞ்சுவலிதான் அது கூட வலி இல்லை. நெஞ்சு எரிச்சல்.. ஏதோ சாப்பாடு ஒத்துக் கொள்ளவில்லை போல.. அதனால் அவர் நெஞ்சை பிடிக்கவும் உடனே மித்ரா பயந்து போய் விட்டாள்
வசியை உடனே அழைத்து விட்டாள்.. வசியும் உடனே அங்கு சென்றவன் அவரை பரிசோதித்து அவருக்கு நெஞ்சு எரிச்சலை குறைக்க மருந்து கொடுத்து வீட்டிற்கு கிளம்ப முயல மித்ராவோ அவனை கட்டி கொண்டு குலுங்கி அழ தன்னை விட்டு செல்ல வேண்டாம் தன்னுடனே இருக்குமாறும் மீண்டும் அப்பாக்கு இது மாதிரி வந்தால் தன்னால் தாங்க முடியாது என கூறி அழ அவளை அப்படியே விட்டுவிட்டு வர வசிக்கும் மனம் இல்லை...
அவள் வீட்டிலயே தங்கி விட்டான்...அவளுடைய அப்பா அறையிலயே சோபாவில் படுத்து உறங்கியவன் காலையில் எழுந்ததும் மீண்டும் ஒரு முறை அவரை செக்கப் பண்ணி எந்த பிரச்சனையும் இல்லை என சொல்ல, அதற்கு மேல் தாமதிக்காமல் தன் வீட்டிற்கு கிளம்பி விட்டான்..
இரவு சரியாக தூக்கமின்மையும் மற்றும் வரவேற்பு விழாவிற்காக அலைந்த களைப்பும் ஒன்று சேரத்தான் காரில் இருந்து இறங்கி ரொம்ப களைத்த தோற்றத்துடன் உள்ளே வந்தான்...
தன் அறைக்கு வந்ததும் அவன் கண்கள் தானாக மலரை தேட அவள் அங்கு இல்லை எனவும்
“கீழ இருப்பாள்.. பிறகு பேசி கொள்ளலாம். அவளுக்கு என் மேல கோபமாக இருக்குமோ? எத்தனை ஆசையாக வந்தாள். சே. இப்படி ஆகிவிட்டதே ? “ என்று புலம்பியவாறு கட்டிலில் விழுந்தவன் அப்படியே உறங்கி போனான்...
வசி கிளம்பி சென்றதும் மித்ரா உள்ளுக்குள் துள்ளி குதித்தாள்.. அவள் திட்டமிட்ட படி நேற்று அவர்களை பிரித்தாகி விட்டது.. பாவம் அப்பாவுக்குத்தான் கொஞ்ச நேரம் கஷ்டம்.
அவருக்கு நெஞ்சு எரியவேண்டும் என்றே மாத்திரையை பாலில் கலக்கி அவருக்கு கொடுத்தாள் மித்ரா.. அதன் படி அவர் நெஞ்சு எரிகிறது எனவும் உடனே அதை காரணம் காட்டி வசியை அழைத்து விட்டாள்..அதன் படியே விரைந்து வந்த வசியும் அன்று இரவு அங்கயே தங்கிவிட்டான்..
அந்த சந்தோஷத்தை கொண்டாட உடனே மலருக்கு அழைத்து அவளை இன்னும் கொஞ்சம் வெறுப்பேத்தினாள்.. ஆனால் அதற்கு மலரிடம் பெரிதாக ரியாக்சன் இல்லாமல் போக, கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது அவளுக்கு..
ஆனாலும் விடாமல் அடுத்து என்ன செய்வது என்று யோசித்து தன் திட்டங்களை வரிசை படுத்தி வைத்து ஒரு குரூர சிரிப்பை சிரித்து கொண்டாள்..
வசியும் தன் தோழியின் மீது இருந்த நம்பிக்கையால் அவள் சொல்லியதை நம்பி விட்டான்.. அவன் மறந்து இருந்தது ஒன்று. மித்ராவும் ஒரு மருத்துவர். அவள் தந்தைக்கு வந்திருந்த நெஞ்சு வலியை அவளாகவே கண்டு பிடித்து அது சாதாராண எரிச்சல்தான் என்று சரி செய்து இருக்க முடியும்..
அதை விடுத்து அவள் ஏன் தன்னை அழைத்தாள் என்று யோசிக்க மறந்து விட்டான்..எல்லாம் அந்த நட்பின் மேல் இருந்த நம்பிக்கைதான் போல
சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு உள்ளே வந்த மலர், மீனாட்சி உணவு மேசையில் காலை உணவை எடுத்து வைத்து வசுவையும் சுந்தரையும் அழைத்து கொண்டிருந்தார்.. மலரை கண்டதும்
“வா டா மலர்.. இப்பதான் நானே வந்து உன்னை கூப்பிடணும்னு நினைத்தேன்.. வசி வந்திட்டான் போல.. மேல போய் அவனை சாப்பிட அழைக்கிறியா... “ என்றார்..
அவளுக்கு மறுத்து சொல்ல இயலாமல் அவளும் மாடி ஏறி சென்று தங்கள் அறை கதவை திறந்து உள்ளே செல்ல, அவள் கணவன் அசந்து உறங்குவதை கண்ட மலர் மித்ரா சொன்னது நினைவு வந்தது
“இரண்டு பேரும் ஜாலியா இருந்தோம்..” என்று சொன்னது நினைவு வர, முகத்தை சுழித்தாள்.. ஆனால் அவளால் அதை நம்பவும் முடியவில்லை... தன் கணவன் அப்படிபட்டவன் இல்லை என ஆழ்மனம் மீண்டும் எடுத்து சொல்ல, இப்பொழுது அது கொஞ்சம் அவள் காதில் விழுந்தது..
அப்புறம் ஏன் அப்படி சொன்னாள் என்று யோசித்தவாறு தன் கணவன் முகத்தை உற்று பார்க்க குழந்தை போல இலகிய முகத்துடன் உதட்டில் லேசாக புன் சிரிப்புடனே அசந்து உறங்குபவனை காணவும்
“கண்டிப்பாக இவன் தப்பு செய்யறவன் இல்லை..என்னதான் கடமைக்காக என்னை கல்யாணம் பண்ணி கொண்டாலும் கணவனுக்கான கடமையை மறந்து விட மாட்டான்..ஒழுக்கம் தவறியும் நடக்க மாட்டான்“ என்று கொஞ்சம் சரியாக யோசித்தவள் அவனையே சிறிது நேரம் ரசித்து பார்த்து நின்று விட்டு அவனை எழுப்ப மனம் இல்லாமல் கீழிறங்கி சென்றாள்..
“எதற்கும் அவசர பட்டு எந்த முடிவும் எடுக்க கூடாது.. பார்க்கலாம் இந்த மித்ரா என்னதான் ஆடறானு.. “ என்று சொல்லி கொண்டவள் தன் மன குழப்பத்தை எல்லாம் வெளிக் காட்டாமல் ஒரு மூலையில் போட்டு வைத்து கொண்டாள்
அன்று மதியத்திற்கு மேல் எழுந்தவன் குளித்துவிட்டு மதிய உணவிற்காக கீழ வர, மீண்டும் அவன் கண்கள் மலரை தேடின... ஆனால் அவளோ அவன் கண்களுக்கு சிக்கவில்லை. தன் மகனின் தேடலை புரிந்து கொண்ட மீனாட்சி
“மலர் பக்கத்து மாமி வீடு வரைக்கும் போயிருக்கா கண்ணா.. அந்த மாமி மலரை பார்க்க வந்துட்டு அவளை ரொம்ப பிடித்து போக கையோடு கூட்டிகிட்டு போய்ட்டாங்க.. நீயும் தூங்கிகிட்டு இருந்தியா.. அதான் போரடிக்காமல் இருக்க போய்ட்டு வர அனுப்பி வச்சேன்.. “ என்றார் மீனாட்சி அவனை பார்த்து சிரித்தவாறு..
அவனும் புன்னகைத்தவாறு மதிய உணவை முடித்து மீண்டும் வேலை இருப்பதாக சொல்லி வெளியில் கிளம்பி சென்றான்..
அன்று இரவு தாமதமாகவே வீடு திரும்பினான்.. அதற்கு காரணம் மித்ரா... ஏதேதோ காரணத்தை சொல்லி வசியை தன்னுடனே வைத்து கொண்டு இரவு 12 மணிக்கு மேலதான் அனுப்பி வைத்தாள்....
அவன் அறைகதவை திறந்து கொண்டு ஆவலுடன் உள்ளே வர, மலர் அங்கு இல்லை...வசுந்தராவுடன் பேசி கொண்டிருந்த மலர் அவள் அறையிலயே உறங்கி விட்டாள்..
சிறு ஏமாற்றத்துடன் அவனும் களைப்பாக இருக்க அப்படியே படுத்த உடனே உறங்கி போனான்...
இப்படியே இன்னும் ஒரு வாரம் ஓடியிருக்க மலரோ தன் கணவனின் கண்ணில் படாமல் கண்ணா மூச்சி ஆடி வந்தாள்.. அவனும் அதை எதார்த்தமாக எடுத்து கொண்டு விட்டான்..
அன்று ஞாயிற்று கிழமை..
தன் வேலை முடித்து சீக்கிரம் வீடு திரும்பி இருந்தான் வசீகரன்.. அன்று மித்ராவுக்கு வேற ஒரு காரணமும் இல்லை அவனை பிடித்து வைக்க..
அவளும் ஏதேதோ சொல்ல, வசி அதற்கு சரியான விளக்கத்தை கொடுத்து வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று கிளம்பி விட்டான்..
ஒரு வாரத்திற்கு பிறகு கொஞ்சம் ரிலாக்சாக வீடு திரும்பினான்..
“இன்று எப்படியும் மலரிடம் பேச வேண்டும். ஒரு வாரம் ஆகிவிட்டது அவளை பார்த்து..என் வீட்டில் இருக்கிறாள் என்ற பெயர்தான். ஆளையே பார்க்க முடியலை.. “ என்று பெருமூச்சு விட்டவாறு மனதில் ஒரு உல்லாசத்துடன் காரை ஓட்டி வந்தான்..
வீட்டை அடைந்ததும் அனைவரும் தோட்டத்தில் அமர்ந்து சிரித்து பேசி கொண்டிருக்க மலரின் சிரிப்பு மட்டும் இன்னும் தனியாக தெரிந்தது.. அவளின் மலர்ந்த சிரிப்பை ரசித்து கொண்டே காரை அணைத்தவன் அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு சென்றான் கையில் சாவியை சுழற்றியபடி..
அருகில் சென்றதும்
“ஹாய் மா..ஹாய் டாட்.. என்ன உங்க மருமகள் வந்ததும் எல்லாரும் ரொம்ப குஷியாயிட்டிங்க போல... என்னைத்தான் யாரும் கண்டுக்காம விட்டுட்டிங்க.. “ என்றான் சிறு வருத்தத்துடன்..
ஒரு வாரத்திற்கு பிறகு திடீரென்று கேட்ட தன் கணவனின் குரலால் உள்ளுக்குள் படபடத்தது மலருக்கு..
இந்த ஒரு வாரமாக அவன் கண்ணில் படாமல் தப்பி இருந்தவளுக்கு இப்பொழுது அவன் குரலை கேட்டதும் அவனை, அவன் முகத்தை, அவன் வசீகர புன்னகையை பார்க்க துடித்த தன் மனதை அடக்கியவள் உடனே தலையை குனிந்து கொண்டாள்..
“வா கண்ணா... உனக்குத்தான் எங்களை எல்லாம் மறந்து போச்சே.. உனக்கு உன் பேசன்ட்ஸ் மட்டும் தான் முக்கியம்...“ என்று முகத்தை நொடித்தார் மீனாட்சி அவனை செல்லமாக முறைத்தவாறு...
அவனும் புன்னகைத்தவாறு ஒரு இருக்கையை இழுத்து அமர்ந்தான். அதுவரை படித்து கொண்டிருந்த வசுவும் ஓடி வந்து அவர்களுடன் சேர்ந்து கொள்ள மீண்டும் சிறிது நேரம் கலகலப்பாக பேசி கொண்டிருந்தனர்.
வசி மற்றவர்களுடன் பேசி கொண்டிருந்தாலும் அவன் கண்கள் தன் மனைவியையே ரசித்து கொண்டிருந்தன.
பின் அனைவரும் இரவு உணவை முடித்தபின் வசி தன் அறைக்கு செல்ல முயல மீனாட்சி அவனை நிறுத்தினார்
“வசி... உன் மொபைலை கொஞ்சம் கொடுக்கறியா.. என் போன் வொர்க் ஆக மாட்டேங்குது.. ஒரு அர்ஜென்ட் கால் பண்ணனும்.. பேசிட்டு தர்ரேன்.. “ என்றார்...
“ஹ்ம்ம்ம் இந்தாங்கம்மா... “ என்று தன் அலைபேசியை கொடுத்துவிட்டு மேல சென்றான்...
அதை வாங்கியவர் அதை ஸ்விட்ச் ஆப் பண்ணிவிட்டு பின் காய்ச்சி வச்சிருந்த சூடான பாலை மலரிடம் கொடுத்தவர்
“மலர்.. இதை வசியிடம் கொடுத்துடு மா..... “ என்றார்...
“சரி அத்தை..... குட் நைட். “ என சொல்லி சிரித்தவாறு மாடி ஏறி சென்றாள் மலர்...
தன் அறையை அடைந்ததும் கதவை தாளிட்டு உள்ளே வந்தவள் தன் கணவனை தேட அவனோ பால்கனியில் நின்று கொண்டு மேலிருந்த அந்த பௌர்ணமி நிலவை ரசித்து கொண்டிருந்தான்...
அரைக்கால் ட்ராயர் அணிந்து மெலிதான கையில்லாத பனியன் மட்டும் அணிந்து மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக் கொண்டு இலகிய நிலையில் அந்த நிலவை ரசித்து கொண்டிருந்தவனை பார்க்க மலருக்கு படபடப்பாக இருந்தது...
அவன் குணம் மென்மையானது என்றாலும் தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்வதால் அவன் உடலை கட்டு கோப்புடன் வைத்திருந்தான்..
தசைகள் இறுகி, விரிந்த மார்பும், வலிய புஜங்களுமாக கம்பீர தோற்றத்தில் பால் நிலா ஒளி அவன் மீது பட்டு பளபளக்க ஒரு வித ஆளுமையுடன் நின்றிருந்தான்...
அவனின் அந்த தோற்றத்தை காண, பெண்ணவள் இன்னும் கிறங்கி போனாள்..
அவனையே ரசித்து பார்த்தவளுக்கு அவனின் அந்த வலிய பரந்த மார்பில் முகம் புதைத்து அவனை இறுக்கி அணைத்து கொள்ள தாவியது அவள் மனம்..
தன் மனம் போகும் போக்கை எண்ணியவள் திகைத்து
“சே.. என்னாச்சு எனக்கு? என் புத்தி ஏன் இப்படி போகுது?? “ என்று தன் தலையை தட்டி கொண்டவள் மெல்ல அவன் அருகில் அடி எடுத்து வைத்து நடந்தாள்...
அவள் கொலுசில் இருந்து வரும் ஒலி அவன் காதில் விழ, கூடவே அவள் தலையில் வைத்திருந்த மல்லிகையின் மணமும் அவளுக்கு முன்னெ சென்று அவன் நாசியை தீண்டி அவன் உள்ளே கிறக்கத்தை தூண்ட அவள் வருகிறாள் என தெரிந்தும் அவளை பார்க்க தூண்டிய தன் இதயத்தை இழுத்து பிடித்து வைத்து கொண்டு பார்வையை திருப்பாமல் நின்று கொண்டான்...
“ஒரு வாரமாக என் கண் முன்னே வராமல் கண்ணாமூச்சி ஆடினாள் இல்லை.. இன்று அவளாகவே வரட்டும்.. “ என்று உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன் இன்னும் நன்றாக திரும்பி நின்று கொண்டு அந்த நிலவை ரசித்து கொண்டிருந்தான்..
அந்த நிலவில் பாட்டி வடை சுடுவதற்கு பதிலாக தன்னவளின் அழகிய முகம் ஓளிர்ந்து அவனை பார்த்து கண் சிமிட்டி சிரிக்க, அவன் உதட்டில் தானாக புன்னகை அரும்பியது..
எவ்வளவு மெதுவாக நடந்தாலும் கடைசியில் அவனை நெருங்கி விட்டாள் மலர்... அவன் இன்னும் திரும்பாமல் இருக்க, அவனை எப்படி அழைப்பது என யோசித்தவள் , தன் கையில் அணிந்திருந்த வளையல்களை ஆட்டி ஓசை எழுப்ப அவனோ காது கேட்காத மாதிரி நின்று கொண்டான் உள்ளுக்குள் குறும்பாக சிரித்தவாறு..
“ம்க்கூம்.. என்று தொண்டையை செருமியும் வேலைக்கு ஆகவில்லை..
“வேணும்னே படுத்தறானா?? “ என்று யோசித்தவள்
“டாக்டர்..... “ என்றாள் மெதுவாக... அவன் இன்னும் திரும்பாமல் இருக்க
“பார்த்து மெக்கானிக்.. அந்த நிலவை ரொம்ப சைட் அடிக்காதிங்க... அப்புறம் நேரா அது கீழ இறங்கி உங்ககிட்ட வந்திடப் போகுது... எல்லாரும் நீங்கதான் அதை திருடிட்டீங்கனு புடுச்சிகிட்டு போய்டுவாங்க..” என்றாள் சிரித்தவாறு...
“ஹா ஹா ஹா .. என்னுடைய் ரியல் நிலா இங்க இருக்க நான் ஏன் அந்த நகல் நிலாவை சைட் அடிக்க பேறேனாம்.. “ என்று குறும்பாக சிரித்தவாறு அவள் புறம் திரும்பினான் வசீகரன்..
“ஆமா.. இந்த நிலா இப்பத்தான் உங்களுக்கு தெரிந்ததாம்.. “ என்று கழுத்தை நொடித்தாள்.
“ஹ்ம்ம்ம் இந்த நிலாதான் என்னை பார்த்தாலே ஓடி ஒளிஞ்சுகிச்சே... எனக்கும் அதை துரத்தி கண்டு பிடித்து விளையாட ஆசை தான்.. ஆனால் என் கடமை அழைக்க என்னால் இந்த நிலா கூட விளையாட நேரமில்லை...”
“ஹ்ம்ம்ம் நல்லா பேச கத்துகிட்டீங்க மெக்கானிக்... “ என்றாள் மலர் கன்னம் குழிய சிரித்தவாறு..
அவளின் அந்த சிரிப்பையே மையலுடன் ரசித்தவன்
“என் ஜில்லு பக்கத்துல இருந்தா பேசாதவன் கூட பேசிட மாட்டானாக்கும்....” என்று கண் சிமிட்டி குறும்பாக புன்னகைத்தான்..
“ஹ்ம்ம் சரி...சரி.. முதல்ல இந்த பாலை குடிங்க.. ஒரு வாரமா சரியா சாப்பிடாம அலைஞ்சதால தன் செல்ல மகன் இளைத்துவிட்டதாக இந்த அத்தை ரொம்ப கவலை படறாங்க.. “ என்றவாறு பாலை அவன் முன்னே நீட்டினாள்...
அதை வாங்கி பருகியவன் அதன் சுவை வித்தியாசமாக இருக்க, அதை ரசித்து குடித்தவாறே
“ஏன் உன் அத்தைக்கு மட்டும்தான் கவலையா? .. அத்தையோட மருமகளுக்கு அந்த கவலை இல்லையா? “ என்றான் தன் புருவத்தை உயர்த்தி குறும்பாக சிரித்தவாறு...
“ஆங்.. அத்தையோட மருமகளா?? அது யார் எனக்கு தெரியாமல் ?? என்று விழி விரித்து அவனை பார்க்க, அவனோ அதற்குள் பாலை பருகியவன் அருகில் டம்ளரை வைத்து விட்டு அவளை நோக்க, அவளின் அகன்ற விழிகளை கண்டதும் அவனுள் உறங்கி கொண்டிருந்த மன்மதன் விழித்துக் கொண்டான்....
அவள் விழிகளையே ஆவலுடன் கணவன் பார்வை பார்க்க, அவன் பார்வையில் தெரிந்த மாற்றத்தை கண்டு அவள் உள்ளே மீண்டும் படபடக்க ஆரம்பித்தது...
கன்னங்கள் சூடேற, தன்னை மறைக்க எண்ணி வேகமாக உள் நோக்கி ஓட நாலே எட்டில் அவளை அடைந்தவன் அறைக்குள்ளே ஓடியவளை எட்டி அவள் கை பிடித்து சுண்டி இழுக்க, இதை எதிர்பாராதவள் தடுமாறி அவன் மார்பின் மீது வந்து விழுந்தாள்..
அதற்குள் அறைக்கு உள்ளே வந்தவன் பால்கனி கதவை மூடிவிட்டு தன் மீது விழுந்தவளையே இறுக அணைத்தவன்
“நான் ரன்னிங் ரேஸ் ல பர்ஸ்ட் ப்ரைஸ் ஆக்கும்.. என்கிட்டயேவா?? “ என்றான் குறும்பாக சிரித்தவாறு...
“ஆமாம்.. ஒன்னாங் க்ளாஸில் முதலாவதாக ஓடி வந்திருப்பீங்க... “ என்று வார
"ஒன்னாங் க்ளாஸில் மட்டும் இல்ல மா... MBBS லயுமே ரன்னிங் ரேஸ் ல நான் தான் பர்ஸ்ட்...."
"ஓ... அப்ப விட்டால் ஒரு அத்லெடிக் ஆ வரவேண்டியவர் மாறிப்போய் ஹார்ட் மெக்கானிக் ஆய்ட்டீங்க... " என்று சிரித்து கொண்டே அவனை மடக்கினாள்...
"அம்மா தாயே.. உன்கிட்ட என்னால் பேசி ஜெயிக்க முடியாது..ஆனால் இப்ப வேற விதமா உன் வாயை அடைக்க போகிறேன்.. “ என்றவன் அவள் அவனுக்கு ஏதோ திருப்பி பதில் சொல்ல வர, உடனே அவள் எதிர்பாராதவாறு அவள் வாயை தன் இதழ் கொண்டு அடைத்து விட்டான்...
அதில் திக்கித்தவள் படபடக்கும் விழிகளுடன் நாணம் பரவ அவன் மார்பில் முகம் புதைத்துக் கொள்ள, அவளிடம் இருந்து வந்த க்ரீன் சிக்னலை கண்டதும் இன்னும் கிறங்கியவன் அவளை தன் கையில் அள்ளி கொண்டு தன் படுக்கையை அடைந்தவன் தன் பிரம்மச்சர்ய தவத்தை கலைத்து இனிய தாம்பத்திய நாடகத்தை அரங்கேற்றினான்..
இத்தனை நாட்களாக தன்னுள் அடைத்து வைத்திருந்த காதல் வீறு கொண்டு வெளி வர, அவள் மேல் கொண்ட தன் காதலையெல்லாம் வாய் மொழியாக சொல்லாமல் உடல் மொழியால் தன்னவளுக்கு உணர்த்தினான்..
ஆனால் அவன் உடல்மொழியால் சொன்ன அவன் காதலை அவன் மனையாள் சரியாக புரிந்து கொண்டாளா?? என்று தெரிந்து கொள்ள மறந்துவிட்டான்.
தன் இல்லத்தில் இருந்த மித்ரா தன் அலைபேசியில் வசியின் எண்ணிற்கு திரும்ப திரும்ப அழைத்து கொண்டிருந்தாள் .. ஆனால் எத்தனை முறை முயன்றாலும் அணைத்து வைக்கபட்டிருந்த போன் அணைக்கபட்டிருக்கிறது என்று தானே பதில் வரும்..
அது தெரியாத அந்த முட்டாள் பெண் மீண்டும் மீண்டும் முயற்சித்து ஒரு கட்டத்திற்கு மேல் வசியை பிடிக்க முடியவில்லை அவனை மலரிடம் இருந்து பிரிக்க முடியவில்லையே என்ற ஆத்திரத்தில் அந்த அலைபேசியை தூக்கி விசிற தரையில் விழுந்து அதன் பாகங்கள் பிரிந்து தனித்தனியே சிதறின...
“அவர்கள் இருவரும் ஒன்று சேரக் கூடாது..இப்ப அவன் போன் வேற ஸ்விட்ச் ஆப் ஆகி இருக்கிறதே.. எப்படி அவர்களை பிரிப்பது? “ என்று தலையில் கை வைத்து யோசிக்க, பேசாமல் நேராக வசியின் வீட்டிற்கே சென்று விடலாமா?? என்று யோசித்தவள் அந்த தப்பை செய்யாமல்
“நேராக போனாலும் என்ன காரணம் சொல்வது ? என்று ஆத்திரத்திலும் கொஞ்சம் அறிவாக யோசித்து அந்த முயற்சியை கை விட்டாள்.....
அதற்கு மேல் தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என தோன்ற, துவண்டு படுக்கையில் விழுந்தாள்.. அவள் கண்களில் சிறு துளி நீர் திரண்டு அவளுக்காக பரிதாப பட்டது...
தான் தோற்று விட்டதாக எண்ணி மித்ரா தன் ஆட்டத்தை இதோடு நிறுத்திக் கொள்வாளா? இல்லை இன்னும் தன் ஆட்டத்தை மாற்றி ஆடப்போகிறாளா? வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்..
Comments
Post a Comment