என் மடியில் பூத்த மலரே-35
அத்தியாயம்-35
மூன்று மாதத்திற்கு பிறகு:
“பாரதி மா.. இன்னுமா ரெடியாகற.. அந்த புடவையை எவ்வளவு நேரம் தான் கட்டுவா... சீக்கிரம் ரெடியாகி வாடா.. .எல்லாரும் வெய்ட் பண்றாங்க பார்... “ என்று கத்திகொண்டே ஜானகியின் அறைக்குள் வந்தார் ஜானகி....
பாரதியும் தன் தந்தை வாங்கி கொடுத்திருந்த அந்த பட்டு புடவையை கடந்த அரை மணி நேரமாக கட்டி கொண்டிருக்கிறாள்... அது அவள் பேச்சை கேட்காமல் அடம் பிடித்து கொண்டிருந்தது... கொஞ்ச நேரத்துக்கு மேல் சளித்து போய்,
“அத்தை.. இத எனக்கு கட்டவே வரலை... முந்தி எடுத்து பின் போடவே வரமாட்டேங்குது.. நீங்க கொஞ்சம் கட்டி விடுங்களேன்.. “என்று சிணுங்க, அவரும் சிரித்துகொண்டே
“சரி வா.. இத முன்னாடியே சொல்ல வேண்டியது தான.. “என்று அவள் கன்னத்தை கிள்ளியவாறு மளமளவென்று அந்த புடவையை மடித்து தன் மறுமகளுக்கு கட்டிவிட்டார்.. கீழ குனிந்து அந்த பிளிட்சை நேராக நீவி விட்டு மடித்து விட பாரதி பதறி
“அத்தை... நானே பண்ணிக்கிறேன்.. “ என்று சங்கோஜபட்டாள்...
“ஹா ஹா ஹா.. எப்படியோ ஒரு சாக்கு சொல்லி உன் கல்யாண நாள் அன்று உன் மாமியாரையே உன் கால் ல விழ வச்சுட்ட.. கெட்டிக்காரி தான் என் மறுமகள்... “என்று கண் சிமிட்டி சிரிக்க
“ஐயோ.. அத்தை... அதெல்லாம் இல்லை... “ என்று பாரதி அவசரமக மறுக்க
“ஹா ஹா ஹா எனக்கு தெரியாதா என் மறுமகள பத்தி.. சும்மா விளையாட்டுக்குடா... அப்படியே உன் கால் ல விழுந்தாலும் தப்பில்லை பாரதி மா .. எங்க வீட்டு சந்தோசத்தை திருப்பி கொண்டு வந்தவ நீ.. எங்க வீட்டு ராஜகுமாரன் வாழ்க்கையையே மீட்டு எடுத்தவ நீ.. “ என்று கண்கள் கலங்கி தழுதழுக்க,
"போச்சுடா... எங்கடா இந்த அத்தை இன்னும் இன்னைக்கு கோட்டாவை ஆரம்பிக்க காணோமேனு பார்த்தேன்.. கரெக்டா ஆரம்பிச்சுட்டீங்க.. "என்று பாரதி சிரிக்க, ஜானகியும் சமாளித்து கொண்டு
“வாயாடி... சீக்கிரம் வா.. எல்லாரும் வெய்ட் பண்ணிகிட்டிருக்காங்க.. " என்று அவளை அழைத்துகொண்டு பூஜை அறைக்கு சென்றார் ..
அங்கு சுசிலா, தர்மலிங்கம் ,லட்சுமி எல்லாரும் முன்னரே வந்திருக்க, தன்னவனை காணாமல் கண்களை சுழற்றியவள் அவன் மறுபக்கத்தில் தன் இளவரசியை கையில் வைத்துகொண்டு இவளையே இமைக்க மறந்து பார்த்து கொண்டிருந்தான்...
அவனும் மாமனார் வாங்கி கொடுத்திருந்த பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக இருந்தான்.. அந்த குட்டி தேவதைக்கும் அழகான ப்ராக் அணிந்து அவளை தன் கையில் வைத்துகொண்டு அவன் நின்று கொண்டிருக்கும் அழகை காண பாரதிக்கு கண்கள் நிறைந்து இருந்தன...
அவளும் தன் கண்களை அகல விரித்து அவனை ரசனையுடன் பார்க்க, அவன் குறும்பாக கண் சிமிட்டினான்.. அதில் வெக்கத்தால் கன்னம் சிவக்க, தலையை குனிந்து கொண்டே தன் தந்தையின் பக்கம் வர, அவரோ
“பாப்பா.. மாப்பிள்ளை பக்கம் போய் நில்லு டா... கல்யாண நாள் அதுவுமா நீ அவர் பக்கத்துல தான் இருக்கனும்.. இன்னைக்குனு இல்ல..இனிமேல் எங்க போனாலும் இரண்டு பேரும் பக்கத்துலதான் நிக்கணும்.. "என்று எடுத்து கூறினார்... அவளும் தலையை ஆட்டிகொண்டே அவன் பக்கத்தில் வந்து நின்று கொண்டாள்..
ஜானகி பூஜை பண்ணி அனைவருக்கும் தீபாராதனை காட்ட, அனைவரும் அந்த வேலனை வணங்கி விபூதியை எடுத்து நெற்றியில் வைத்து கொண்டனர்..
தர்மலிங்கம் தன் பேத்தியின் நெற்றியில் பூசி விட்டார்...
பின் ஜானகி குழந்தையை வாங்கி கொள்ள, ஆதியும் பாரதியும் அவள் பெற்றோர்கள் காலில் விழுந்து வணங்கினர்.. அவர்களும் உள்ளம் மகிழ்ந்து வாழ்த்தினர்.. பின் சுசிலாவின் காலில் விழ அவரும் பதறி குனிந்து அவர்களை தூக்கி
“எப்பவும் நீங்க இரண்டு பேரும் இப்படியே சந்தோஷமா இருக்கனும்..God bless you both..” என்று வாழ்த்தி, இது என்னுடைய கிப்ட் “ என்று பாரதிக்கு ஒரு நெக்லசையும் ஆதிக்கு கடிகாரத்தையும் பரிசளித்தார்...
பின் ஜானகியின் காலிலும் விழுந்து வணங்க அவரும் ஆசிர்வதித்து தன் பரிசினை கொடுத்து வாழ்த்தினார்...
சுசிலா ஏற்பாடு செய்திருந்த அனிவர்சரி கேக் தயாராக இருக்க, ஆதி தன் மகளை கையில் வைத்துக்கொண்டும் பாரதியுடன் இணைந்து மூவரும் அந்த கேக்கை கட் பண்ணினார்கள்.. மற்றவர்கள் கை தட்டி வாழ்த்து சொல்ல, ஆதி அந்த கேக்கை எடுத்து பாரதிக்கு ஊட்டினான்...
அவளும் வெக்க பட்டுகொண்டே அதை வாங்கியபின் அவளும் அதே மாதிரி எடுத்து ஒரு துளி தன் மகளின் வாயில் வைத்து விட்டு பின் ஆதிக்கு ஊட்ட, அவனோ கண் சிமிட்டி சிரித்தவாறு அவள் விரளோடு சேர்த்து கேக்கை கடிக்க, ஆ வென்று அலறளோடு தன் கையை இழுத்துக் கொண்டாள் அவனை செல்லமாக முறைத்தவாறு...
“என்னடா கண்ணா.... நான் வாங்கிய கேக்கை விட என் மறுமக விரல் தான் ரொம்ப பிடிச்சிருக்கும் போல.. “ என்று சுசிலா தன் மகனை வார, அனைவரும் சிரித்தனர் மகிழ்ச்சியோடு
பின் அனைவரும் காலை உணவை முடித்து கோவிலுக்கு கிளம்பினர்... ஜானகி அந்த முருகன் கோவிலில் விஷேச பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தார்... அனைவரும் கோவிலை அடைந்ததும் தயாராக இருந்த ஐயர் பூஜையை தொடங்க அனைவரும் மனம் உருகி அந்த வேலனை வேண்டி கொண்டனர்..
பின் ஐயர் பூஜை பண்ணி கொண்டு வந்திருந்த தட்டில் இருந்த மஞ்சள் கயிற்றை எடுத்து ஆதியிடம் கொடுத்து அதை பாரதியின் கழுத்தில் கட்ட சொன்னார்....
ஆதி புரியாமல் முழிக்க,
“இது ஒரு பரிகாரம் கண்ணா... அதனால உங்க கல்யாண நாள் அன்னைக்கு மறுபடியும் அந்த வேலனை மனதார வேண்டிகிட்டு இதை என் மறுமக கழுத்துல கட்டு “ என்றார்....
ஐயர் அனைவர் கையில் சிறு அட்சதையை கொடுக்க, ஆதியும் அதே மாதிரி மனதில் அந்த சிங்கார வேலனை வேண்டி கொண்டே பாரதியின் கழுத்தில் கட்டி மூன்று முடிச்சிட்டான்..
முன்பு நடந்த திருமணத்தில் அவனால் மனதால் முழுதாக நினைத்து அந்த தாலியை கட்ட முடியவில்லை.. இப்பொழுதோ தன் மனம் முழுவதும் நிறைந்திருக்கும் தன் மனைவியை எண்ணி மகிழ்ச்சியுடன் மூன்று முடிச்சிட்டான்..
பாரதிக்கும் அதே பரவசம்.. அது மஞ்சள் கையிறு தான் என்றாலும் அவன் தன்னை மனைவியாக ஏற்று கொண்டு அதன் அடையாளமாக அவன் கையால் மீண்டும் அந்த கையிற்றை வாங்குவது மிகவும் சந்தோஷமாக இருந்தது.
அனைவரும் அட்சதையை தூவி அசிர்வதித்தனர்... பின் ஐயர் இருவர் கையிலும் மாலைய கொடுத்து மாற்றி கொள்ள சொல்ல,
ஆதியும் அவளை காதலுடன் நோக்கி அந்த மாலையை அணிவித்தான்...பாரதியும் அவனையே இமைக்க மறந்து மையலுடன் நோக்கி அவன் கழுத்தில் மாலை இட்டாள்... அதை கண்ட தர்மலிங்கம் லட்சுமியின் மனம் நிறைந்து போனது.. தங்கள் மகள் திருமணத்தை கண்ணால் பார்க்க முடியவில்லையே என்று மனதின் ஓரமாக இருந்த சிறு குறை தீர்ந்து போனது... நன்றியுடன் ஜானகியை பார்த்தனர் இருவரும்..
பாரதிக்கும் இது எல்லாம் அவள் பெற்றோருக்காக இந்த அத்தை ஏற்பாடு செய்ததுதான் என்று புரிய அவள் கண்ணிலும் நீர் தேங்கி நின்றது... ஜானகியை பார்த்து கண்களால் நன்றி சொன்னாள்... ஜானகியும் கண் சிமிட்டி அவளை பார்த்து சிரித்தார்...
அவர் கையில் இருந்த அந்த குட்டி தேவதையும் தன் பெற்றோர்களின் திருமணத்தை காண கிடைத்த பாக்கியத்தில் மலர்ந்து சிரித்தாள்...
பின் மற்ற பூஜைகளும் முடிய, அன்றும் 100 ஜோடிகளுக்கு இலவச திருமணமும் அந்த கோவிலில் அன்று முழுவதும் அன்னதானமும் செய்ய ஏற்பாடு செய்திருந்தார் ஜானகி...
சில ஆசிரமங்களிலும் அன்று கல்யாண சாப்பாடு ஏற்பாடு செய்திருந்தார்... பின் அனைவரும் கிளம்பி ஒரு முதியோர் இல்லத்திற்கு சென்று அங்கு இருந்த பெரியவர்களுக்கு இனிப்பை வழங்கி அவர்கல் காலில் விழுந்து வணங்கினர் இருவரும்...
அன்று இரவு ரொம்பவும் டென்ஷனாக இருந்தாள் பாரதி.. ஜானகியும் லட்சுமியும் அவளை அழங்கரித்து கொண்டிருந்தனர்...சுசிலாவும் தர்மலிங்கமும் தோட்டத்தில் அமர்ந்து கொண்டு தங்கள் பேத்தியை கொஞ்சி கொண்டிருந்தனர்... தர்மலிங்கத்திற்கு சுசிலாவையும் பிடித்து விட சுசிலாவும் அண்ணா என்று அவருடன் ஒட்டிகொண்டார்...ஒரு தங்கச்சிக்கு இரண்டு தங்கச்சி கிடைத்த மகிழ்ச்சி அவருக்கு..
“ம்மா , அத்தை.. சொன்னா கேளுங்க... இதெல்லாம் வேண்டாம்.. எதுக்கு இப்படி எல்லாம் என்னை படுத்தறீங்க.. “ என்று சிணுங்கினாள் பாரதி
“சும்மா இரு பாரதி மா... உனக்கும் எல்லாம் முறையா நடக்கணும்... உன் மனசுல எனக்கு இப்படி நடக்கலையேனு ஒரு குறை வந்திடக்கூடாது... நீயும் மற்ற கல்யாணம் ஆன பொண்ணுங்க மாதிரி எல்லா சுகத்தையும் அனுபவிக்கனும்...
இதுவரை நீ எங்களுக்காக வாழ்ந்தது போதும்.. இனிமேல் நீ உனக்காக வாழனும்... புரிஞ்சுதா.. “ என்று ஜானகி தன் மறுமகளை அதட்ட, லட்சுமிக்கு என்ன சொல்வதென்றெ தெரியவில்லை...
“இந்த மாதிரி ஒரு மாமியார் கிடைக்க என் பொண்ணு கொடுத்து வச்சிருக்கணும்.. “என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார்...
ஒரு வழியாக அவள் அழங்காரம் எல்லாம் முடிய, ஜானகி ஒரு நகை பெட்டியை எடுத்து வந்து அதில் இருந்த அவங்களுடைய பரம்பரை நகையான அந்த வைர நெக்லஷை போட்டு விட்டார்...பாரதி பதறி
“ஐயோ.. இதெல்லாம் எதுக்கு அத்தை.. “ என்று மீண்டும் சிணுங்க
“இது என் மாமியார் எனக்கு போட்டது... நான் உனக்கு தர்ரேன்... இந்த வம்சத்தை வாழ வைத்தவ நீ... இனிமேல் நீதான் இந்த குடும்பத்தை தாங்கனும்.. அதனால் இனிமேல் இது உன்கிட்ட தான் இருக்கணும்... வச்சுக்கோ.. “ என்று அவளை கட்டி அணைத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டார்...
அதற்குள் தர்மலிங்கம் சுசிலாவும் உள்ளே வர, கையில் தூங்கி கொண்டிருந்த தன் பேத்தியை தொட்டிலில் போட்டார் சுசிலா... பாரதி தன் மகளை காண,
“பாரதி.. நாங்க பத்துக்கறோம் எங்க பேத்தியை... நீ போய் என் மகனை நல்லா கவனிச்சுக்கோ.. அது போதும்.. “ என்று சிரித்தார் சுசிலா.. அவள் கன்னங்கள் சிவக்க,
மீண்டும் ஒரு முறை தன் பெற்றோர்களின் காலில் விழ, தர்மலிங்கம் அவள் தலையை வாஞ்சையுடன் தடவி ஆசிர்வாதம் பண்ணினார், பின் சுசிலா ஜானகியின் காலில் விழ, ஜானகி அவளை தூக்கி
“மறுமகளே சொன்னது நினைவு இருக்கட்டும்... என் பையனை நல்லா கவனிச்சுக்கோ.. சீக்கிரம் எனக்கு ஒரு பேரனை பெத்துக் கொடுக்கனும்.. “என்று சிரிக்க அருகில் நின்ற சுசிலா ஜானகியை பார்த்து முறைத்தார்..
“உனக்கு வேற வேலையே இல்லையா ஜானகி.. அவ என்ன உனக்கு பேர புள்ளைய பெத்து கொடுக்கிற மெசினா?? ...டாக்டர் அட்வைஸ் படி மூனு வருசத்துக்கு அப்புறம் தான் அடுத்த குழந்தைய பத்தி யோசிக்கணும்... “ என்று முறைத்தார்
“ஆஹா.. நான் ஒருத்தி..கூடவே ஒரு டாக்டரை கட்டிகிட்டு சுத்தறதை அப்பப்ப மறந்துடுறேன்.. அவளும் அப்பப்ப டாக்டர் சுசிலாவா மாறிடறா.. மாமியார் சுசிலாவா பேசு டீ... “ என்று சிரிக்க, சுசிலா மீண்டும் அவரை செல்லமாக முறைத்து
“நீ கவலை படாத பாரதி.. இனிமேல் நீ ஜாலியா இரு... இன்னும் மூனு வருடத்துக்கு வேற எதையும் நினைக்காத.. நான் அந்த மாதிரிதான் உனக்கு ஏற்பாடு செஞ்சிருக்கேன்... நீ எங்க பையனோட சந்தோசமா இருக்கணும்.. உனக்கு கிடைக்காமல் போயிருந்த கல்யாண வாழ்க்கையை என்ஜாய் பண்ணு..
“Wish you have a happy married life..!!!” என்று அவளை வாழ்த்தினார்...
பின் ஜானகி சமையல் அறைக்கு சென்று பால் சொம்பை கொண்டு வந்து அவள் கையில் கொடுக்க, நடுக்கத்துடன் அதை வாங்கி கொண்டாள் பாரதி...
“என்ன மறுமகளே.. நீ நடுங்கறத பார்த்தா என் பையன் அறைக்கு போகாம வேற எங்காவது ஓடிடுவ போல இருக்கு... நீ சரி வர மாட்டா.. அண்ணி.. வாங்க நாம ரெண்டு பேரும் போய் இவள அங்க தள்ளிட்டு வரலாம் ..” என்று சிரித்துகொண்டே பாரதியை கை பிடித்து அழைத்து சென்றார் ஜானகி....
லட்சுமியும் சிரித்து கொண்டே கூட நடக்க, பாரதி அந்த மாடி படியில் தயங்கி தயங்கி அடி எடுத்து வைத்தாள்...
இந்த படிகளில் எத்தனை முறை ஏறி இறங்கி இருக்கிறாள்... ஆனால் இன்று என்னவோ எல்லாம் புதியதாக இருந்தது.. கால்கள் பின்னி கொள்ள மெல்ல அடி எடுத்து வைத்தாள்... போன வருடம் இதே நாள் நினைவு வந்தது..
அன்று பால் டம்ளரை எடுத்து கொண்டு செல்லும் பொழுது அவள் நினைத்த முதலிரவு என்பது நினைவு வர, அவள் கன்னம் சிவந்தது...எங்கிருந்தோ நாணம் வந்து ஒட்டி கொள்ள இன்னும் கால்கள் தடுமாறின...
ஜானகி அவளை மெல்ல பிடித்து கொண்டு வந்ததால் ஒரு வழியாக சமாளித்து மேல ஏறி அவன் அறைக்கு வந்திருந்தாள்.. அறை கதவு திறந்திருக்க, அவளை உள்ளே அனுப்பி
“ஆல் தி பெஸ்ட் பாரதி மா... “ என்று கதவை மூடி விட்டு இருவரும் சிரித்து கொண்டே கீழ இறங்கி சென்றனர்...
தலையை குனிந்த படியே வலது காலை எடுத்து வைத்து அறையின் உள்ளே வந்தாள் பாரதி... அறைக்கதவை மூடி தாழிட்டு மெல்ல திரும்பி பார்க்க அறையில் அவனை காணவில்லை... படுக்கையை பார்க்க, அதில் படுக்கை முழுவதும் அழகாக பூ அழங்காரம் செய்திருந்தனர்...
அதை காணவும் அவள் உள்ளே படபடத்தது... வயிற்றில் பட்டாம் பூச்சிகள் பறக்க ஆரம்பித்தன...
“சீ.. இப்படி எல்லாமா பண்ணுவாங்க.. எல்லாம் இந்த அத்தையோட வேலையாதான் இருக்கும்... எவ்வளவு பூவை வேஸ்ட் பண்ணியிருக்காங்க.. “என்று திட்டிகொண்டே சுற்றிலும் தன் கண்களை சுழல விட்டாள் தன்னவனை காண...
பால்கனியில் நின்று கொண்டு அந்த இளைய நிலாவை ரசித்து கொண்டிருந்தவன் தன் நிலா அறையின் உள்ளே வந்ததை உணர்ந்தவன் மெல்ல அறைக்குள் வந்தான்... அவன் கண்களோ பட்டு புடவையில் வைர நெக்லசிலும் ஜொலித்தவளை கண்டு நிலைத்து நின்றன... அவளின் அழகை அள்ளி பருகின அவன் கண்கள்...
அவளையே ஆசையோடும் தாபத்தோடும் பார்த்து கொண்டு அவள் அருகில் வந்தான்.. அவன் கண்களில் தெரிந்த பார்வையும் புரியாத மொழியையும் கண்டவள் இன்னும் சிவந்து படபடப்புடன் தலையை குனிந்து கொண்டாள்...
அவளின் அந்த வெக்க சிவப்பில் இன்னும் கிறங்கி போனான் அவளின் மன்னவன்..
“பாருடா... இந்த கேடிக்கு இவ்வளவு அழகா வெக்க பட தெரிஞ்சிருக்கே.. “என்று மனதுக்குள் சிரித்து கொண்டவன் அவள் அருகில் நெருங்கி வர, கொஞ்சம் தூர இடைவெளி இருக்கையிலயே பால் சொம்பை அவனிடம் நீட்டினாள் எங்க அவன் இன்னும் கிட்ட வந்து விடுவானோ.. என்று அஞ்சி...
அவள் பயம் புரிந்து அவனும் சிரித்து கொண்டெ கை நடுக்கத்துடன் அவள் நீட்டிய பால் சொம்பை வாங்கி அருகில் இருந்த டீபாயில் வைத்தவன் அவளை கைப்பிடித்து அழைத்து வந்து கட்டிலில் அமர வைத்து தானும் அருகில் அமர்ந்து கொண்டான்..
அவனுடன் ஒன்றாக உறங்கி இருக்கிறாள் தான்... ஆனால் ஏனொ இன்றைய நெருக்கம் அவளுக்குள் இன்னும் பதற்றத்தை கொடுத்தது.. மெல்ல அவள் கையை தொட்டவன் அவள் கை சில்லிட்டு இருக்க, அவளின் படபடப்பும் பயமும் புரிந்தது அவனுக்கு...அவள் பயத்தை போக்க எண்ணியவன்
“ஹே பட்டிக்காடு.. எதுக்கு இப்படி பயந்து நடுங்கற... என்னமோ புலியை முறத்தால அடிச்சு விரட்டுவனு வாய் கிழிய பேசுவ.. இன்னைக்கு ஏன் இப்படி பயந்து நடுங்கற.. அப்ப எல்லாம் வெறும் வாய் பேச்சுத்தானா?? கருவாச்சி....” என்று அவன் குறும்பாக சிரிக்க , அவன் சொன்ன கருவாச்சியில் காரமானவள், வெக்கம் போன இடம் தெரியவில்லை...
கோபத்தில் முகம் சிவந்து அவனை நேராக நிமிர்ந்து பார்த்து
“நான் ஒன்னும் கருவாச்சி இல்லை.. கொஞ்சம் கலர் கம்மி...அவ்வளவுதான்.. நீங்கதான் சுவத்துக்கு சுண்ணாம்பு அடிச்ச மாதிரி வெள்ளையா இருக்கீங்க... வெள்ளையன்..” என்று பொரிந்தாள்..
“ஹே.... என்னது வெள்ளையனா?? என்னடி புருஷனை கொஞ்சம் கூ ட மரியாதை இல்லாம பேசற.. “ என்று மீண்டும் அவளை சீண்ட
“ஹ்ம்ம்ம் நீங்க மட்டும் பொண்டாட்டிய மானே மயிலேனு ஆசையா கொஞ்சாம, கருவாச்சினு சொன்னா, நானும் அப்படிதான் கூப்பிடுவேன்.. “ என்று கழுத்தை நொடித்தாள்... அவளின் கழுத்து நொடிப்பில் இன்னும் கவிழ்ந்து போனான் ஆதி.. ஆனாலும் தன்னை கட்டு படுத்தி கொண்டு
“ஹா ஹா ஹா மானே, மயிலே வா ...ஹே.. நீ அதெல்லாம் நேர்ல பார்த்து இருக்கியா?? ... அதெல்லாம் எவ்வளவு அழகா இருக்கும் தெரியுமா?? ... கரு கருனு இருக்கிற இந்த கருவாச்சிய போய் அதுங்க கூட கம்பேர் பண்ணாத.. அதுங்க எல்லாம் என்கிட்ட சண்டைக்கு வந்திடும்..” என்று மீண்டும் அவளை சீண்ட அதில் இன்னும் கடுப்பானவள் கோபத்தில் முகம் இன்னும் சிவக்க, திருப்பி அவனை திட்டினாள்...
அவளின் அந்த சிவந்த முகத்தையும்,விடைத்து கொண்டிருக்கும் அவள் கூர் நாசியையும் , பொரிந்து கொண்டிருக்கும் அவள் இதழ்களையும் ரசித்தவன் ப்ரிட்ஜை திறந்து ஐஸ்கிரீமை அவள் கண்ணில் படுமாறு எடுக்க, அதற்குள் அதை கண்டு கொண்டவள் முகம் அப்படியே சூரியனை கண்ட தாமரையாக மலர, அதுவரை பொரிந்து கொண்டிருந்தவள் அப்படியே ஆப் ஆனாள்..
வழக்கம் போல எழுந்து வந்து அந்த ஐஸ்கிரீமை பிடுங்கி கொண்டு போய் கட்டிலில் அமர்ந்து அதை சுவைக்க, அவனோ அவள் இதழ்களையே ரசித்து கொண்டிருந்தான்..
கொஞ்சம் சாப்பிட்டதும் அவன் பார்வையை கண்டு கொண்டவள் எப்பவும் போல அவனுக்கு சேர் பண்ண நீட்ட அருகில் வந்தவன் அவள் நீட்டிய ஐஸ்கிரீமை விளக்கி அவள் இதழில் ஒட்டியிருந்த ஐஸ்கிரீமை சுவைத்தான்...அவனின் இந்த எதிர்பாராத செய்கையால் அதிர்ந்து அவள் கையில் இருந்த ஐஸ்கிரீமை நழுவ விட்டாள்...
அவள் இதழை சுவைத்தவன் கள் உண்டவனாக அவள் முகத்தை தாபத்தோடு கையில் ஏந்தி அவள் முகம் எங்கும் முத்த மழை பொழித்தான்....
தன் கணவனின் ஒரு முத்தத்திற்கு ஏங்கியவள் இன்று அவன் ஓராயிரம் முத்தமிட, அந்த சுகத்தில் திக்குமுக்காடி போனாள் பெண்ணவள்... அவனின் முத்தத்தில் மயங்கி அவன் மார்பில் முகம் புதைத்து கொண்டாள் மையலுடன்...
அவள் கணவனும் அதற்கும் மேல் கட்டுபடுத்த முடியாமல் இதுவரை தடை செய்து வைத்திருந்த தன் ஆசைகளை எல்லாம் தன் மனைவியிடம் கொட்டினான்..
பொதுவாக மங்கையர் வாழ்க்கையின் life cycle ஆன மகள், மனைவி, தாய், பாட்டி என்பதை மகள், தாய், மனைவி என்று மாற்றி அமைத்து தாரம் ஆகாமல் தாயான புதுமைப் பெண்ணான அந்த கன்னித்தாய், மனைவிக்கே உரித்தான தாம்பத்ய பாடத்தை கற்றுக்கொள்ள ஆரம்பித்தாள் நாணத்துடன்...
அவள் கணவனும் அவள் இதுவரை அனுபவித்திராத தாம்பத்ய சுகத்தை அவளுக்கு வாரி வழங்கி அவளை திக்குமுக்காட வைத்தான்.. அவளும் ஆசைக் கணவனின் இறுகிய காதல் அணைப்பில் நெகிழ்ந்து, உருகி அவள் தவறவிட்ட அந்த ஐஸ்கிரீம் கரைவதை போல அவனுள் கரைந்து, கலந்தாள்...
காலையில் கண் விழித்தவள் தன்னை சுற்றியிருந்த தன் கணவனின் இரும்பு கையை விளக்க, அவனோ இன்னும் அவளை இறுக்கி அணைத்து கொண்டு அவள் கழுத்தின் வளைவில் முகம் புதைத்து கொண்டான்...
அவனின் அந்த செய்கையில் இன்னும் சிலிர்த்து போனாள் பாரதி...மெல்ல அவன் பக்கம் திரும்பியவள்
“ஆமா... இவ்வளவு ஆசையையும் இவ்வளவு நாளா எங்க பூட்டி வச்சிருந்தீங்களாம்??... இப்பதான் உங்க பொண்டாட்டி உங்க கண்ணுக்கு தெரிஞ்சாளாக்கும்.. “என்று அவள் கன்னத்தை செல்லமாக கிள்ளினாள்..
அவனோ அவள் கையை இழுத்து அழுந்த முத்த மிட்டு,
“ஹ்ம்ம்ம்ம் என்ன பண்றது ரதி டார்லிங்... என் பேபி உன்கிட்ட இருக்கிறப்போ நான் உன்னை கொஞ்சினா அவ கோவிச்சுக்க மாட்டா... அதான்.. “ என்று கண்ணடித்தான்...அவன் தன்னை ரதி என்று அழைத்ததில் தலை சுற்றி போனாள் பெண்ணவள்..
“அப்ப உங்களுக்கு என்னை பிடிக்குமா?? ... அப்ப ஏன் அப்படி என் மேல எரிஞ்சி விழுந்தீங்க..” என்று தன் மனதில் உழன்று கொண்டிருந்த தன் சந்தேகத்தை கேட்டாள்.. இவன் திட்டியதால தான நான் என்னை அவனுக்கு பிடிக்கலைனு நினைத்து என்னென்னவோ உளறினேன்.. “ என்று நினைத்தாள்...
“ஹ்ம்ம்ம்ம் அது என்னவோ தெரியலை... உன்னை முதல் முதலா பார்த்தப்பயே இந்த முட்ட கண்ணை பார்த்து விழுந்திட்டேன் போல... இல்ல... அதுக்கு முன்னாடியே அம்மா எப்பவும் உன் புராணத்தையே பாடிகிட்டிருந்ததனால் என்னை அறியாமலயே நீ என் மனதுக்குள்ள வந்திட்ட போல...
ஆனால் எனக்குள்ள கனன்று கொண்டிருந்த நெருப்பும் அதோடு நான் எங்க உன்கிட்ட சாய்ஞ்சுடுவேன் ன்ற பயமும் தான் உன்னை அப்படி திட்ட வைத்தது... அதாவது என்னையே என்கிட்ட இருந்து காப்பாற்றி கொள்ள உன்னை ஆயுதமா பயன்படுத்தி கிட்டேன்.. அப்பவும் சில நேரங்களில் என்னையும் மீறி உன் மேல ஆசை வந்திடும்.... அப்பலாம் ரொம்ப கஷ்டப்பட்டேன் என்னை கட்டுபடுத்த....
அந்த ஷ்வேதா ஏற்படுத்திய வலியால தான், உன்னை கல்யாணம் பண்ணிக்க என் மனம் ஆசைபட்டாலும் என் அறிவு அதை தடுத்தது.. அதையும் மீறி என் பிரின்ஸஸை காரணம் காட்டி அம்மா மடக்க, அதுவே எனக்கு ஒரு சான்ஸ் னு நினைத்து நானும் சரினு சொல்லிட்டேன்....
ஆனால் நீ..... “ என்று எதுவோ சொல்ல வந்தவன் அப்படியே நிறுத்தி கொண்டான்..
அவனுக்கு மீண்டும் அன்று அவனை திருமணம் செய்து கொள்ள சொல்லி அவன் மிரட்டியதுக்கு அவள் சொன்ன வார்த்தைகள் நினைவு வந்தன... அதை நினைத்து இப்பொழுதும் அவன் முகம் இறுகினாலும் உடனேயே தன்னை சமாளித்து கொண்டான்..
“அவள் யாரையோ விரும்பியதாக தானே சொன்னாள்.. அப்படி என்றால் அது என்னாகியது?? ... அவனை மறந்து விட்டாளோ?
எது எப்படியோ.. இப்ப அவள் மனதில் நான் மட்டும் தான் இருக்கேன்... அவள் பழைய வாழ்க்கை எப்படியோ போய்ட்டு போகுது.. அதை மேலும் கிளறி அவள் மனதை புண்படுத்த வேண்டாம்..” என்று தான் கேட்க வந்ததை பாதியில் முழுங்கி கொண்டான்..
அவன் முகத்தில் வந்து போன மாற்றத்தை கவனிக்காதவள், அவன் ஷ்வேதாவை பற்றி சொல்லவும் அவள் நினைவுகள் அவள் ஷ்வேதாவை கடைசியாக கண்ட நாளுக்கு தாவியது..
பாரதிக்கு ஒன்பது மாதம் முடிந்த அடுத்த வாரம் பரிசோதனைக்காக மருத்துவமனை சென்றிருந்தனர் ஆதியும் பாரதியும்.. கைனகாலஜிச்ட் பிரிவினை அடைய, எதிர் பக்கம் இருந்து ஷ்வேதா அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள்..
அவளை கண்டதும் பாரதிக்கு திக் என்றது..
“இவ இங்க எதுக்கு வந்தா?? .. இவளை பார்த்தாலெ இவன் டென்ஷன் ஆவானே..” என்ற பதற்றத்துடன் அவளை நோக்கி முன்னேற, அவளோ இவளை பொருட்டாக நினைக்காமல் நக்கலாக சிரித்து கொண்டே அருகில் வந்தாள்..
முகம் சிரித்தாலும் அவள் கண்ணில் முன்பு இருந்த அந்த ஆணவமும் பணக்கார தோரணையும் இல்லாததை போல இருந்தது...அவள் இவர்கள் அருகில் வரவும் பாரதி ஆதியின் கையை பிடித்து கொண்டாள் அவன் எதுவும் டென்ஷன் ஆகி விடக்கூடாது என்று...
ஆனால் அதிசயித்திலும் அதிசயமாக ஆதி அவளை கண்டும் உணர்ச்சி வசப்படாமல் அவளை யாரென்றே தெரியாதவனைப் போல கடந்து சென்றான்.. தன் கையை இறுக்கி பிடித்திருந்த பாரதியின் கையை மென்மையாக மறு கையால் பிடித்து இந்த பயம் இனிமேல் தேவை இல்லை என்பதை போல தலை அசைத்தான் மெல்ல சிரித்தவாறு...
பாரதிக்கு அப்பதான் நிம்மதியாக இருந்தது... ஒரு வழியாக அந்த ஷ்வேதா வின் பாதிப்பில் இருந்து தன் கணவன் முழுவதும் மீண்டு விட்டான்..இனிமேல் அவன் அவளை பார்த்து கொதிக்க மாட்டான் என்று மகிழ்ச்சி அடைந்தாள்..
இருவரும் சுசிலாவின் அறையை அடைய, அவர்கள் முறை அடுத்து என்பதால் அங்கு இருந்த சிஸ்டர் பாரதியை கண்டு சிரித்து கொண்டே அவர்களை அமர வைத்தாள்.. அதற்குள் ஆதிக்கு போன் கால் வர அவன் எழுந்து சென்றான்..
பாரதிக்கு அந்த ஷ்வேதாவின் கண்களில் தெரிந்த ஏதோ ஒன்று மனதை உறுத்த எழுந்து சென்று அந்த ஷ்வேதாவை பற்றி அந்த சிஸ்டரிடம் விசாரித்தாள்..
“சிஸ்டர்... அங்க போறாங்களே.. அவங்க எனக்கு தெரிஞ்சவங்க தான்.. ஆனால் அவங்க ஏதோ கவலையா போன மாதிரி இருந்தது.. என்னாச்சு?? “ என்று விசாரித்தாள்..அந்த சிஸ்டரும் தயங்கி,
“பாரதி.. பொதுவா எந்த பேசன்டை பற்றியும் வெளியில் சொல்லக்கூடாது... நீ அவங்களுக்கு தெரிஞ்சவங்க ன்றதால தான் இதை சொல்றேன்..நீ யார் கிட்டயும் சொல்லிடாத “ என்று நிறுத்தியவள்
“அந்த ஷ்வேதா சரியான திமிர் பிடிச்சவ போல.. கட்டிய புருஷனை விட்டுட்டு யாரோ ஒருத்தன் கூட ஓடி போய்ட்டா போல இருக்கு... இன்னும் தாலி கட்டிக்காமலயே குடும்பம் நடத்தறா போல.. இப்ப அவங்களுக்குள்ள ஏதோ பிரச்சனை போல.. இப்ப அவனை தனக்கு தாலி கட்டி பொண்டாட்டியா ஏத்துக்க சொல்லி வற்புறுத்த, அந்த ஆளு இவளை கழட்டி விட்டு எஸ்கேப் ஆக பார்ப்பான் போல.. தாலி கட்ட மாட்டேன்.. என்று மறுத்துட்டான் போல..
போன வாரம் இரண்டு பேரும் இங்க பார்க்கிங்கில் நின்று சண்டை போட்டு கிட்டிருந்தாங்க.. நான் என் ஷிப்ட் முடிஞ்சி என் வண்டியை எடுக்க போனப்போதான் எல்லாம் கேட்டேன்.. அந்த ஆளு மறுத்து விட்டதால, இந்த பொண்ணு குறுக்கு வழியில அவனை மடக்க ஏதோ முயற்சி செய்யும் போல..
அவனுக்கு தெரியாமலயே அவன் குழந்தையை IVF மூலமா அவ வயித்துல உருவாக்கத்தான் இப்ப வந்திட்டு போறா.. அதுவும் இதுல எக்ஷ்பர்ட் ஆன நம்ம சுசிலா மேடம் வேண்டாம்னு அவருக்கு அடுத்து கீழ இருக்கிற சீனியர் டாக்டர் கிட்ட கன்சல்ட்டிங்கு வந்திட்டு போறா...
ஒரு குடும்பத்தை கஷ்டப்பட வச்சவ இவ மட்டும் நல்லா இருந்திடுவாளா.. அதான் அந்த கடவுளே இவளுக்கு இப்படி கொண்டு வந்து விட்டிருக்கான்.. “ என்று பெருமூச்சு விட்டாள் அந்த சிஸ்டர்..
அதை கேட்ட பாரதிக்கு ஒரு கணம் மகிழ்ச்சியாக இருந்தாலும் அடுத்த நொடி அவளுக்காக அவள் மனம் வறுந்தியது..
அவசரமாக அந்த ஷ்வேதாவின் நினைவுகளில் இருந்து வெளியில் வந்தவள், கடைசியாக தன் கணவன் சொன்னதை திரும்பவும் நினைத்து பார்த்தவளுக்கு இன்னும் அவன் சொன்னதை நம்ப முடியவில்லை... மீண்டும் அவன் சொன்னதை உறுதி பண்ண,
“அப்ப நிஜமாவே நீங்க என்னை லவ் பண்ணீங்களா?? “ என்றாள் ஆர்வமாக...
“ஹ்ம்ம்ம் ஆமான் டி.. என் செல்ல பட்டிக்காட்டு முட்டாள் பொண்டாட்டி..அத கூட உன்னால கண்டுபிடிக்க முடியல.” என்று அவள் தலையில் முட்டி கன்னத்தில் முத்தமிட்டான்...அதில் அப்படியே கிறங்கி நின்றாள்... தன்னை போலவே அவனும் அவளை விரும்பி இருக்கிறான் என்ற உண்மையே அவளுக்கு தித்தித்தது…
அவளும் மனம் திறந்து ஏதோ சொல்ல வர, அதற்குள் வெளியில் இருந்து லட்சுமி பாரதியை அழைக்க, பதறி மணியை பார்க்க அது 7 ஐ காட்டியது… அப்பொழுது தான் இதுவரை மறந்திருந்த தங்கள் மகளின் நினைவு வந்தது இருவருக்கும்....
“சே... பாப்பாவை எப்படி மறந்தேன்... அவளுக்கு பசிக்குமே.. எல்லாம் உங்களால தான்..நான் அப்பயே எழுந்து போயிருப்பேன் இல்ல.... “என்று அவனை முறைத்து கொண்டே வேகமாக எழுந்து குளியல் அறைக்குள் ஓடினாள்...
ஆதியும் சிரித்து கொண்டே அருகில் இருந்த தலையணையை எடுத்து கட்டி கொண்டு இன்னும் சுகமாக, இரவு தொலைத்த தன் உறக்கத்தை தொடர்ந்தான்.. .
அவசரமாக குளித்து முடித்தவள் ஒரு சேலையை எடுத்து சுத்தி கொண்டு வேகமாக வெளியில் வர, அவளை அழைத்து விட்டு கீழ சென்றிருந்த லட்சுமி தன் மகள் இன்னும் கீழ வராததால் மீண்டும் மாடி ஏறி வந்து கொண்டிருந்தார்...அவசரமாக வெளியில் வந்த தன் மகளை பார்த்து முறைத்தார்...
“ஏன் டி அறிவு இருக்கா??.. பச்ச புள்ளைய விட்டுட்டு வந்திருக்கமே.. அதுக்கு பசிக்கும்னு தெரியாது.. “ என்று திட்ட, தன் தவறு உணர்ந்து
“சாரி மா... கொஞ்சம் தூங்கிட்டேன்.. குட்டி அழுதாளா..??” என்று பதற்றத்துடன் வேகமாக இரண்டு இரண்டு படியாக தாவி ஓடினாள்...
அறைக்குள் வேகமாக செல்ல, ஜானகி தன் பேத்தியை கையில் வைத்து கொண்டு கொஞ்சி கொண்டிருந்தார்... அந்த குட்டி தேவதையும் பாட்டியின் கொஞ்சலுக்கு சிரித்து கொண்டிருந்தாள்... மூச்சு வாங்க உள்ளே வந்தவளை கண்ட ஜானகி
“எதுக்கு டா இவ்வளவு வேகமா வர்ர... என் பேத்தி ரொம்ப சமத்து தெரியுமா... அவ அம்மா நல்லா தூங்கட்டும்.. தொந்தரவு பண்ணக்கூடாது னு இன்னும் அழாம சமத்தா இருக்கா...சமத்து குட்டி என் பேத்தி... “என்று அவளுக்கு திருஷ்டி சுத்தியவாறு குழந்தையை பாரதியின் கையில் கொடுக்க, அவள் தன் மகளை ஆசையோடு வாங்கி தன் மார்போடு அணைத்து கொண்டாள்...
ஜானகியும் லட்சுமியும் அறை கதவை சாத்திவிட்டு வெளியேற, தன் மகளை அணைத்து கொண்டு அதன் பசியாற்றினாள் அந்த தாய்... பால் குடிக்கும் தன் மகளையே இமைக்காமல் பார்த்தாள்.. கை தானாக அவள் தலையை வருட, நேற்று இரவு சம்பவங்கள் நினைவு வர, அவள் கன்னங்கள் சிவந்தன...
அதோடு சற்றுமுன் தன் கணவன் மனம் திறந்து பேசியது நினைவு வர, அவளுக்கு இந்த உலகமே தன் வசம் வந்ததை போல இருந்தது...
“எவ்வளவு அன்பான கணவன்.. என் மேல உயிரையே வச்சிருக்கானே... அதை விட எவ்வளவு பாசமான ஒன்றுக்கு இரண்டு மாமியார்கள்... அவர்கள் இருவரும் தன் மேல் இவ்வளவு பாசமா இருக்காங்களே.. “என்று பூரித்தாள்
அதற்கு மேல் அந்த பக்கம், அவள் எவ்வளவு பெரிய தவறு செய்தும் கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் அவளை மன்னித்து, ஏன் இப்படி செய்த என்று மறந்தும் ஒரு வார்த்தை கூட கேட்காமல் தன் மேல் அனபை மட்டுமே பொழிந்து வரும் தன் குடும்பத்தை நினைத்து இன்னும் பெருமையாக இருந்தது... இப்படி பட்ட குடும்பத்தில் வந்து பிறக்க கொடுத்து வச்சிருக்கணும்..
“எப்படிபட்ட வாழ்க்கை எனக்கு கிடைச்சிருக்கு... எங்கயோ ஒரு கிராமத்தில் பிறந்த எனக்கு இங்க இருக்கிற இந்த அன்பான குடும்பத்தில கொண்டு வந்து சேர்த்திருக்கியே... முருகா... உன் கருணையே கருனை... உனக்கு ரொம்ப நன்றி வேல்ஸ்..” என்று மனம் உருகி தன் நண்பனிடம் நன்றி சொன்னாள்..
“ஆனாலும் இப்படி பட்ட நல்ல வாழ்க்கை கிடைக்கத்தான் என்னை அப்படி வறுத்து எடுத்தியா??... ஆனாலும் நீ ரொம்ப மோசம் வேல்ஸ்.. உன்னை நான் வந்து கவனிச்சுக்கறேன்.. ” என்று சிரித்துக் கொண்டாள்..பின் தன் மகளை கண்டவள்
“இதுக்கெல்லாம் காரணம் இவ தான்.. இந்த குட்டி தங்கம் தான் என்னை இங்க கொண்டு வந்து சேர்த்திருக்கா.. இவ இல்லைனா எனக்கு இங்க என்ன வேலை... எனக்கு இப்படி ஒரு வாழ்க்கையை கொடுத்தவ என் தங்கம்.. “ என்று குனிந்து அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்...
அந்த குட்டியும் ஏதோ புரிந்தவளாக, பால் குடிப்பதை நிறுத்தி விட்டு தன் அன்னையின் முகம் பார்த்து சிரித்தாள் குறும்பாக...
அந்த மழலையின் பொக்கை வாய் சிரிப்பை கண்ட பாரதி இன்னும் உருகி போனாள்..
“அப்படியே அப்பனாட்டமே பிறந்திருக்கா பார்... அதே குறும்பு சிரிப்பு.. சிரிச்சே ஆள மயக்கிடிவ டீ நீ... “ என்று தன் மகளின் பட்டு கன்னத்தை செல்லமாக கிள்ளினாள்...
அந்த குட்டியும் சிரித்து கொண்டே பாதியில் விட்ட தன் வேலையை தொடர, பாரதி மனம் நிறைந்து அவளின் தலையை வாஞ்சையுடன் வருடியவாறு மெல்ல தன் தாலாட்டை பாடினாள் தன் மகளை தட்டி கொடுத்தவாறு....
மண்ணில் வந்த நிலவே
என் மடியில் பூத்த மலரே !!!
மண்ணில் வந்த நிலவே
என் மடியில் பூத்த மலரே !!!
அன்பு கொண்ட செல்லக் கிளி
கண்ணில் என்ன கங்கை நதி
சொல்லம்மா!
நிலவே மலரே !!!
நிலவே, மலரே மலரின் இதழே !!!
இதழின் அழகே!!!
மண்ணில் வந்த நிலவே
என் மடியில் பூத்த மலரே !!!
இனிய பதிவு
ReplyDelete