என் மடியில் பூத்த மலரே-36



அத்தியாயம்-36 

அதிகாலை....

வெளியில் பனிக்காற்று சில்லென்று வீசிக்கொண்டிருந்தது.. பாரதி அயர்ந்து தூங்கிகொண்டிருந்தாள்... அந்த அறையின் கதவை திறந்து கொண்டு அந்த நெடியவன் உள்ளே வந்தான்.. உள்ளே வந்தவன் அவளின் அருகில் வந்து கையில் கொண்டு வந்திருந்த காபியை அருகில் இருந்த டீபாயில் வைத்தான்... பின் அவளை நோக்கி குனிந்து

“ஹே ரதி.. எழுந்திருடீ.. காலைல விடிஞ்சி மணி எட்டாயிருச்சு பார்...இன்னும் என்ன தூக்கம்?? “ என்று அவளை எழுப்பினான்

“போ ஆதி... எனக்கும் இன்னும் தூக்கம் தூக்கமா வருது.. நான் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கனும் “ என்று போர்வையை இழுத்து போர்த்தி கொண்டு மீண்டும் தூங்க ஆரம்பித்தாள்..

“ஹே!! கும்பகர்ணி... எல்லார் வீட்லயும் பொண்டாட்டி தான் காபி கொண்டு வந்துட்டு புருஷனை எழுப்புவாங்க.. இங்க எல்லாம் தலைகீழா இருக்கு.. பார்.. உன் புருஷன் நான் வந்து உன்னை எழுப்ப வேண்டி இருக்கு.. எழுந்திருடீ ... “ என்று மெல்ல அவள் மேல் இருந்த போர்வையை இழுத்தான்..

“போடா ஆதி.... நீ எங்க என்னை நைட் எல்லாம் தூங்க விட்ட... தூங்க விடாமல் இம்சை பண்ணிட்டு இப்ப வந்து நான் தூங்கறேன் ங்கிற... “ என்று அவன் இழுத்த போர்வையை மிண்டும் இழுத்துக்கொண்டாள்..

“பாருடா!!! நான் உன்னை தூங்க விடலையா... அப்படி பிடிக்காதவ எழிந்திருச்சு போக வேண்டியது தான.. நீ ஏன் இந்த மாமாகிட்ட மயங்கி ஒட்டிகிட்டியாம்....” என்று குறும்பாக சிரித்தான்

“ஹ்ம்ம்ம் நான் ஒன்னும் மயங்கலை.. “ என்று முகத்தை சுளித்தாள்...

“ஆமா ஆமா.. நீ மயங்கலை... நான் தான் உன்னை மயக்கிட்டேன்.. போதுமா.. சரி எழுந்திடுச்சு வாடி... உன் முகத்தை பார்த்துட்டு தான் நான் ஆபிஸ்க்கு கிளம்பனும்ம்...”

“ஹ்ம்ம்ம் சரி.. போனா போகுது... எனக்கு தர வேண்டியதை கொடு..நான் எழுந்திருக்கிறேன்“ என்று கொஞ்சினாள்...

“காலையிலயே ஏன்டி இப்படி படுத்தற??” என்று செல்லமாக திட்டிகொண்டே மெல்ல குனிந்து அவளின் மேல் இருந்த போர்வையை விளக்கி அவளின் அந்த பட்டு கன்னத்தில் மெல்ல முத்தமிட்டான்...

அவனின் முத்தத்தில் மயங்கியவள்,

‘சீ... மீசை குத்துது... ட்ரிம் பண்ண மாட்டியா??? “ என்று செல்லமாக முனகினாள் கண்களை திறக்காமல்

“ஹேய்ய்ய் இரு... இரு... நைட் இதே மீசைதான் உனக்கு அழகா இருக்கு மாமா னு கொஞ்சின.. இப்ப உனக்கு குத்துதா” என்று சிரித்தான்

“ஹீ ஹீ ஹி அது அப்போ.... இது இப்போ... “ என்று பழிப்பு காட்டினாள் உதட்டை சுழித்து...

அவளின் அந்த சுழித்த இதழில் மயங்கி கிறங்கி நின்றான் அவன்.. மெல்ல அவனின் கைகள் நீண்டு அவளின் மெல்லிய சிவந்த உதடுகளை வருடின.....

“ஹே !! இரு.. இரு.. நீ என்ன மறுபடியும் முதல் ல இருந்து ஆரம்பிக்கற ஆதி?? அப்புறம் நீ ஆபிஸ் போன மாதிரிதான்” என்று அவசரமாக அவன் கைகளை தட்டிவிட்டாள்

“ஹா ஹா ஹா.. தெரியுது இல்ல.. அப்புறம் சீக்கிரம் எழுந்து வா டீ ... இல்லைனா நான் இன்று ஆபிஸ்க்கு லீவ்”

“ஐயோ!! உன்னை வீடல வச்சு என்னால சமாளிக்க முடியதுப்பா... இரு நானே முழிச்சுக்கறேன்.. “

என்று தன் இமைகளை மெல்ல பிரிக்க முயன்றாள்..

அது அவளை விட்டு பிரிய மறுத்தது...அதை கண்ட அவன்

“ஹே இருடி.. எங்கிட்ட ஒரு மருந்து இருக்கு... உன் இமைகள் உடனே பிரிஞ்சிடும்” என்று சிரித்துக்கொண்டே குனிந்து அவளின் இமைகளில் முத்தமிட்டான்...

“சீ திருடா.. இது தான் அந்த மருந்தா ... உன் மருந்து ஒன்னும் வேலை செய்யல.... பார்.. என்னால இன்னும் முழிக்க முடியலை... சரி ஒன் , டூ, த்ரீ சொல்லு.. நானெ முழிச்சுக்கறேன்”

“சரி சரி...படுத்தாத.. சொல்லி தொலைக்கிறேன்... ஒன்..... டூ..... த்ரி...........” என்றான்....

அதற்குள் முன்பு ஒரு முறை இதே மாதிரி கனவு வந்து தன் இமைகளை பிரிக்கும் முன்னே அவன் மறைந்தது நினைவு வர

“ஐயோ!! இந்த முறையும் அவனை விட்டுவிடக் கூடாது என்று வேகமாக படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தாள் பாரதி... தன் கண்களை கசக்கிகொண்டு இமைகளை சுறுக்கி இந்த முறையும் அவன் மறைந்திருக்க கூடாது என்று அஞ்சியவாறு எதிர்புறம் உற்று பார்க்க, மார்புக்கு குறுக்கே கைகளை கட்டி கொண்டு குறும்பாக சிரித்து கொண்டிருந்தான் அவள் ஆசை கணவன் !!!

இதுவரை சிணுங்கி கொண்டிருந்தவள் திடீரென்று வேகமாக எழுந்து முழித்து கொண்டு இருக்கவும்

“என்னடி... கனவு எதுவும் கண்டியா?? இப்படி பேய் முழி முழிக்கிற.. “ என்று அவன் மேலும் சிரிக்க, அவனை கண்டு கொண்ட சந்தோசத்தில் அவள் பாய்ந்து வந்து அவனை இறுக்கி கட்டி கொண்டாள்...

அவன் கை தானாக அவளை அணைத்து அவள் முதுகை தடவி கொடுக்க,

“ஹே ரதி.. என்னாச்சு டீ ?? “ என்றான் மெதுவாக அக்கறையுடன்....

அவளோ எதுவும் பேசாமல் அவன் மார்பில் முகம் புதைத்து விசும்பினாள்...

அதை கண்டு பதறியவன்

“என்னாச்சு டா?? கனவு எதுவும் கண்டியா?? “ என்றான்..

அவள் மெதுவாக இல்லை என தலை அசைத்தவாறு மூக்கை உறிஞ்சி கொண்டே

“என்னை விட்டு போயிட மாட்டீங்க இல்ல..?? “ என்றாள் தான் முன்னால் கண்ட கனவின் தாக்கத்தை இப்பொழுது உணர்ந்து...

“ஹே.. லூசு பொண்டாட்டி... உன்னை விட்டு நான் எங்க போக போறேன்?? எப்பவும் உன் கூடவே தான் இருப்பேன்.. “ என்று அவள் மூக்கை பிடித்து செல்லமாக ஆட்டினான்..

“ப்ராமிஸ்?? “ என்று அவள் கையை நீட்ட, தன் அன்னையின் நினைவு வந்தது அவனுக்கு...

“ஹ்ம்ம்ம் மாமியார் க்கு ஏற்ற மறுமகள்.. “ என்று மெல்ல சிரித்து கொண்டே

“ப்ராமிஸ்... “ என்று அவள் கை மீது தன் கையை வைத்து இழுத்து அவளை தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டு அவள் நெற்றியில் முத்தமிட்டான்... அவளும் வெக்கத்தில் சிரித்து கொண்டே

“ரொம்ப தேங்க்ஷ் மாமா.. “ என்று மெல்ல சிணுங்கியவாறு விலகினாள்...

“ஐயோ!! ஏன்டி இப்படி மனுசனை போட்டு படுத்தற.. இப்படி எல்லாம் நீ செஞ்சா, நான் ஆபிஸ்க்கு போன மாதிரிதான்....இப்பல்லாம் தினமும் ஆபிஸ்க்கு லேட் ஆ போறதே வழக்கமாயிடுச்சு...

அதோட என் பிரின்ஸஸ் வேற இந்த தூங்கு மூஞ்சி அம்மாவை எதிர்பார்த்து காத்துகிட்டிருக்கா… சீக்கிரம் குளிச்சிட்டி கீழ வா... அவளும் நீ எப்ப வருவனு மாடியையே பார்த்துகிட்டு இருக்கா... நல்ல அம்மா வந்து வச்சிருக்க அவளுக்கு.. “ என்று செல்லமாக முறைத்தான்..

“ஐய... இப்பதான் உங்க பிரின்ஸஸ் நினைப்பு வருதாக்கும்.. அப்படி அக்கறை இருக்கிறவர் நைட் என்னை தொல்லை பண்ணாமல் தூங்க விட்டிருக்க வேண்டியதுதான?? “ என்று பழிப்பு காட்ட, அவள் உதட்டு சுளிப்பில் கிறங்கியவன் அவளை பிடிக்க நீட்டிய அவன் கைக்கு சிக்காமல் குனிந்து குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள்...

ஆதியும் சிரித்து கொண்டே கசங்கி இருந்த தன் சட்டையை நீவி விட்டு கொண்டே உல்லாசமாக விசில் அடித்தபடி மாடிப்படிகளில் குதித்து இறங்கினான்...

ஹாலில் அமர்ந்து தன் பேத்தியை வைத்து கொஞ்சி கொண்டிருந்த ஜானகி, தன் மகனின் நடையில் தெரிந்த துள்ளலை கண்டு மனம் நிறைந்து நின்றார்...

“எப்படியோ என் பையன் எனக்கு கிடைச்சுட்டான்.. முருகா.. உனக்கு தான் நன்றி சொல்லணும்..!!! சீக்கிரம் என் நேர்த்தி கடனை எல்லாம் தீர்த்திடறேன்.. “என்று மனதுக்குள் வேண்டி கொண்டே தன் மகனையே ஆசையாக பார்த்து கொண்டு இருந்தவரை கண்டு அவனும் சிரித்து கொண்டே அவர் அருகில் வந்து அவர் மடியில் இருந்த தன் மகளை அள்ளி கொண்டு அவள் கன்னத்தில் முத்தமிட்டவாறு அவர் அருகில் ஷோபாவில் அமர்ந்தான்....

தன் அன்னை இன்னும் தன்னையே ரசித்து பார்ப்பதை கண்டவன்

“என்னமா.. அப்படி பார்க்கறீங்க?? “ என்று சிரித்தான்...

“ஹ்ம்ம்ம் உன்னை இப்படி பார்க்க பார்க்க என் மனம் நிறைஞ்சிருக்கு கண்ணா..நீ எப்பவும் இப்படியே சந்தோஷமா இருக்கனும்... ” என்று தழுதழுக்க,

“மா... பழசை எல்லாம் மறங்க... நான் எப்பவோ மறந்துட்டேன்.. இப்ப இருக்கிற உங்க பேத்தியையும் மறுமகளையும் பாருங்க...

ஏதொ நம்ம கெட்ட நேரம் என்னென்னவோ நடந்திடுச்சு.. அதனால தான இப்படி ஒரு மறுமகளும் பேத்தியும் உங்களுக்கு கிடைச்சிருக்காங்க.. அதை நினைச்சு சந்தோச படுங்க.... இனிமேல் நீங்க என்னை பத்தி எந்த கவலையும் படக்கூடாது.. “ என்று மெல்ல அணைத்து கொண்டான்...

ஜானகியும் அவன் அணைப்பில் நெகிழ்ந்து போனார்..

“இந்த வருடத்திற்கான சிறந்த இளம் தொழிலதிபருக்கான விருதை வாங்குபவர் ஆதித்யா குரூப் ஆப் கம்பெனிஸ் எம் டி மிஸ்டர் ஆதித்யா!! “ என்று அந்த மேடையில் அறிவிக்க, தன் மகளை மடியில் அமர வைத்து முன் வரிசையில் அமர்ந்து இருந்த ஆதி எழுந்து அவளை பாரதியிடம் கொடுத்து விட்டு, வேகமாக நகர்ந்து அங்கு மேடையில் இருந்த படிகளை இரண்டு இரண்டாக தாவி ஏறினான்...

வழக்கம் போல அவன் முன்னால் இருந்த கற்றை முடி அவன் ஏறும் வேகத்திற்கு ஏற்ப அலை அலையாக ஆட, முகத்தில் அந்த விருதை வாங்குவதற்கான பெருமையும், கண்ணில் வழக்கமான குறும்பு சிரிப்புடன் மேடை ஏறியவனை அருகில் இருந்த டீவியில் க்ளோசப்பில் பார்த்து பாரதி மெய் மறந்து ரசித்தாள்...

அவள் அருகில் ஜானகி, சுசிலா, தர்மலிங்கம், லட்சுமி என அனைவரும் முன் வரிசையில் அமர்ந்து இருக்க, அனைவர் முகத்திலும் பெருமையாக இருந்தது...

மேடை ஏறியவன் கெஸ்ட் ன் அருகில் சென்று அந்த விருதை சிரித்து கொண்டே வாங்க, அனைவரும் கை தட்டி ஆரவரிக்க, அவன் இளவரசியும் தன் பிஞ்சு கைகளை தட்டி கொண்டிருந்தாள் தன் தந்தையை பார்த்து சிரித்தவாறு...

அந்த விருதை வாங்கியதும் அவன் கண்கள் தானாக தன் மகளிடம் செல்ல, அவளும் கை தட்டி சிரித்து கொண்டிருப்பதை கண்டவனுக்கு தன் தந்தையே நேரில் வந்து கை தட்டி அவனை வாழ்த்துவதை போல இருந்தது.. அந்த விருதை விட தன் மகளின் உற்சாகம் அவனுக்கு பல விருதை வங்கியதை போல இருந்தது...

மேடையில் ஒரு சில வரிகள் பேசிவிட்டு, ஓடி வந்து தன் மகளை அள்ளி கொண்டான்... அவளும் அவனை கண்டதும் தாவி சென்றாள்... அதற்கு பிறகு முழுவதும் அவளை கீழ இறக்கவில்லை...

அவர்கள் அமர்ந்திருந்த இருக்கையின் மறுபக்கம் இரண்டு வரிசை தள்ளி அந்த ராகுல் அமர்ந்திருந்தான்... அவன் பக்கத்தில் அந்த ஷ்வேதாவிற்கு பதிலாக வேற ஒரு மெலுகு சிலை அமர்ந்திருந்தது... அவன் கண்ணில் இன்னும் அதே கோபம் மின்னி கொண்டிருந்தது...

அவர்கள் வரிசையின் பின்னால் நான்கு வரிசை தள்ளி ஷ்வேதாவும் அமர்ந்து ஆதி விருது வாங்கியதை ஒரு வித ஏக்கத்துடன் பார்த்து கொண்டிருந்தாள்...

அவள் கண்ணில் இப்பொழுது எந்த போராசையும் ஆணவமும் இல்லை.. மாறாக தன் பொக்கிசத்தை தவற விட்டோமே.. என்ற ஏக்கமும் தவிப்பும் மட்டுமே இருந்தது... அவள் செய்த தவறுக்கு அந்த காலம் சரியான தண்டனை கொடுத்து இருந்தது..

ஷ்வேதா பாரதியை முதல் முதலாக பார்த்தபொழுது ,பாரதி அந்த ஷ்வேதாவை மட்டம் தட்ட, அவளை தாலி கட்டிக்க சொன்னதும் அந்த ராகுல் வேற ஒரு பொண்ணுடன் சுத்துவதாக ஒரு ப்ளோவில் சொன்னது ஷ்வேதாவின் ஆழ்மனதில் பதிந்துவிட்டது..

அன்றிலிருந்து அவள் ராகுலின் நடவடிக்கையை உற்று கவனிக்க ஆரம்பித்தாள்.. அவன் சாதாரணமாக ஒரு பெண்ணிடம் பேசினாலும் அவளுக்கு பிடிக்கவில்லை..எங்க தன்னை விட்டு வேற ஒருத்தியிடம் சென்று விடுவானோ என்ற பயமே அவளை வாட்ட, அடிக்கடி அவனுடன் சண்டை இட ஆரம்பித்தாள்..

ஒரு கட்டத்தில் ஷ்வேதாவின் நடவடிக்கைகள் ராகுலுக்கு எரிச்சலை தர ஆரம்பித்தது.. அவன் ஷ்வேதாவை தன்னுடன் வைத்திருப்பதே ஆதியை பழி வாங்கத்தான்.. இவளை அவன் பார்க்கும் பொழுதெல்லாம் அவன் கொதிக்கனும்.. அதை பார்த்து நொந்து அவன் தொழில் அழியணும் என்று திட்டமிட்டிருந்தான்...

ஆதியின் தொழில் முதலில் கொஞ்சம் சரிந்தாலும் அதற்குள் அவன் சுதாரித்து கொண்டான்.. ஆனாலும் அந்த ஷ்வேதாவை பார்க்கும் பொழுதெல்லாம் அவன் தன் கட்டுபாட்டை மீறுவது ராகுலுக்கு தெரிந்திருக்க, அட்லீஸ்ட் அவனை துன்புறுத்தி பார்க்கும் சந்தோசத்திற்காக அவளை அவனுடன் வைத்திருந்தான்..

ஆனால் இப்ப அதிலும் சரிவு வந்திருந்தது... ஆதி இப்பொழுதெல்லாம் ஷ்வேதாவை கண்டு கொள்வதில்லை.. அவளை ஒரு பொருட்டாக அவன் மதிப்பதில்லை.. அதோடு வேற ஒரு பெண்ணை மணந்து இப்பொழுது குழந்தையும் வந்து விட, அவன் கோபம் இன்னும் அதிகரித்தது..

ஆனால் இனிமேல் இந்த ஷ்வேதாவை வைத்து அவனை ஒன்னும் செய்ய முடியாது.. என்று புரிய அவளை கழட்டி விட சந்தர்ப்பம் பார்த்து கொண்டிருக்க, அதற்கு ஏத்த மாதிரி ஷ்வேதாவும் அவனை திருமணம் செய்து கொள்ள நச்சரிக்க, ஒரு கட்டத்தில் அவளை மறுத்து பிரிந்து விட்டான்...

தாலி கட்டி சட்டப்படி மனைவி ஆகாமல் எந்த உரிமையில் அவனை கட்டாயபடுத்தி தன்னுடன் இருக்க வைப்பது என்று புரியாமல் ஷ்வேதாவும் தன் பெற்றோர்களின் வீட்டிற்கே திரும்ப, அதை கண்டு அவள் அப்பாதான் வேதனை பட்டார்... அவள் அம்மா விஜயாவுக்கும் மெல்ல மெல்ல தன் தவறு புரிந்தது...

ஆதி இப்பொழுது பிசினஷில் நம்பர் ஒன்னாக இருக்கவும் நல்ல வாழ்க்கையை தன் மகள் தவறவிட்டாளே.. அதற்கு நானே காரணமாகிட்டேனே என்ற குற்ற உணர்வு அவரை உறுத்தியது..

இந்த நிலையில் ஒரு பங்சனுக்கு சென்று விட்டு திரும்பும் வழியில் ஷ்வேதாவின் அப்பாவிற்கு ஹார்ட் அட்டாக் வர, அதில் காரை கன்ட்ரோல் பண்ண முடியாமல் போய் விபத்துக்குள்ளாகி இருவரும் அந்த இடத்திலயே இறந்தனர்... அடுத்தடுத்து அவள் வாழ்க்கையில் துன்பங்கள் தொடர ஒடிந்து போனாள் ஷ்வேதா...

அப்பொழுது தான் அவள் தவறு புரிந்தது.. ஆதியின் உண்மையான காதலும் ராகுலின் போலியான காதல் என்ற பெயரில் தன்னை ஏமாற்றியதும் புரிய ஒடிந்து போனாள்...

தன் மகளின் நிலையற்ற வாழ்க்கையை கண்டு அவள் தந்தை அவளுக்கு என்று ஒரு சேமிப்பை வைத்து விட்டு சென்றிருக்க, அதோடு அவர் தொழிலையும் பார்க்க வேண்டி இருந்ததால் மெல்ல மெல்ல தெளிந்து அவள் தந்தையின் தொழிலை எடுத்து நடத்த அரம்பித்தாள்.. அதன் சார்பாகவே இன்று இந்த விழாவிற்கு வந்தது.....

வந்த இடத்தில் ஆதி விருது வாங்குவதை காணவும், நீண்ட நாட்களுக்கு பிறகு அவனை கண் குளிர கண்டாள்.. அவனின் தோற்றம் இப்பொழுது முற்றிலும் மாறியிருந்தது.. நடையில் ஒரு கம்பீரமும் கண்ணில் ஒரு தீர்க்கமும் உதட்டில் அதே குறும்பு சிரிப்புமாக பார்ப்பவர்களை ஒரு அடி தள்ளி நிக்க வைக்கும் தோற்றமாக இருந்தான்..

இவன் தான் முன்பு ஒரு காலத்தில் தான் சொல்வதற்கெல்லாம் தலையாட்டி கொண்டு தன்னையே சுத்தி சுத்தி வந்த அமுல் பேபி ஆதி என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.. அந்த அளவுக்கு மாறி இருந்தான்..

விருது வாங்கியவனை அனைவரும் புகழ்ந்து பாராட்ட, அவள் அருகில் இருந்த சில பெண்கள் அவனை சைட் அடித்து பேச, இப்படி ஒரு பொக்கிசத்தை தவற விட்டோமே என்று வருந்தினாள் ஷ்வேதா....

“இவன் ஒரு காலத்தில் என் கணவன்.. என்னையே சுத்தி வந்தவன்.. “என்று சத்தம் போட்டு சொல்ல வேண்டும் போல இருந்தது அவளுக்கு.. பின் அவன் இப்பொழுது இருக்கும் குடும்பத்தை நினைத்தவள் அவனாவது நல்லா இருக்கட்டும் என்று ஒரு விரக்தி புன்னகையுடன் மேடையில் நின்றிருந்தவனையே ஆசை தீர பார்த்தாள்..

விழா முடிந்து உணவு ஆரம்பிக்க அனைவரும் எழுந்து அந்த ஹாலுக்கு சென்றனர்... ஷ்வேதாவும் எழுந்து தன் தட்டில் கொஞ்சமாக எதையோ எடுத்து வைத்துகொண்டு திரும்ப, அங்கு இருந்தவர் மேல் இடித்து கொண்டாள்..

சாரி என்று பதறி முகம் பார்க்க, ஜானகி நின்றிருந்தார்... ஜானகியும் அவளை அடையாளம் கண்டு கொண்டு மெல்ல புன்னகைத்து

"நல்லா இருக்கியா மா?? " என்றார்...

அதை கேட்டு ஷ்வேதாவிற்கு கன்னத்தில் அறை வாங்கியதை போல இருந்தது... அவரை எவ்வளவு தூரம் காயபடுத்தி இருக்கிறாள்.. ஏன் அவர் பூவையும் பொட்டையும் அழித்தவளே அவள் தான்.. அப்படி இருக்க தன்னை மன்னித்து அவரே தன்னிடம் பேசுவதை காணவும் அவளுக்கு கண்கள் கலங்கியது....

அதற்குள் தன்னை சமாளித்து கொண்டு

"நல்லா இருக்கேன் ஆன்டி... நீங்க... " என்று அதற்கு மேல் பேச முடியாமல் தொண்டை அடைத்தது அவளுக்கு... அதற்குள் பின்னால் இருப்பவர் வழி விட சொல்ல, ஜானகியும் நகர்ந்து முன்னால் சென்றார்...

ஷ்வேதாவும் பின்னால் நகர்ந்து செல்ல, அங்கு நின்றிருந்த பாரதி அவளை அடையாளம் கண்டு கொண்டு அவளின் அருகில் வந்து

"எப்படி இருக்கீங்க ஷ்வேதா??.. " என்றாள் சிரித்த முகமாக...

ஷ்வேதா அவளை பார்த்து முழிக்க, பாரதியோ அவளின் கண்ணில் இருந்த சோகத்தை கண்டு ஏதோ சரியில்லை என்று புரிந்து கொண்டு,

“ரொம்ப தேங்க்ஷ் ஷ்வேதா... நான் வாழற இந்த வாழ்க்கை நீ எனக்கு விட்டு கொடுத்தது.. உங்களுக்கும் அந்த முருகன் ஒரு வழி காமிப்பான்.. கவலை படாதிங்க... “ என்று அவள் ஆறுதல் சொல்லி கொண்டிருக்க

“ஹே ரதி.. இங்க என்ன பண்ற??.. “ என்றவாறு ஆதி தன் மகளை கையில் தூக்கி கொண்டு அவள் அருகில் வந்தான்..

அருகில் வந்தவன் ஷ்வேதாவை காண, முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் அவனும் சினேகமாக ஹாய் என்று புன்னகைத்தான்...ஏதோ ஒரு அன்னியவளை பார்த்து சிநேகமாக சிரிக்கும் புன்னகை அது .. அவனுள் எந்த ஒரு கொதிப்பும் கேபமும் வரவில்லை...

அவள் யாரோ தெரிந்தவள் என்றபடி அவளை பார்த்து புன்னகைக்க, ஷ்வேதாவும் புன்னகைத்து அவளின் பார்வை ஆதியின் கையில் இருந்த குழந்தையிடம் தாவியது... அப்படியே அவனை போலவே இருக்க, அவளுக்கு அவள் வயிற்றில் கருவிலயே தான் அழித்த அவளின் குழந்தை ஞாபகம் வந்து நெஞ்சை அடைத்தது... அது பிறந்திருந்தால் இப்படி தானே இருந்திருக்கும்... “ என்று வருந்தினாள்

“சே.. எப்படி ஒரு நல்ல வாழ்க்கையை தவற விட்டுட்டேனே... “என்று மனதுக்குள் மறுகியவள் தன் வேதனையை வெளியில் காட்டாமல் , ஆதியின் மகளை பார்த்து

“நான் கொஞ்சம் தூக்க வா “என்று ஆசையோடு கேட்டாள்..

ஆதி பாரதியை பார்க்க, அவளும் கண்ணால் ஜாடை செய்ய, அவளிடம் கொடுத்தான் .. குட்டியை வாங்கிய ஷ்வேதாவிற்கு உடல் எல்லாம் சிலிர்த்தது..

“ குழந்தை என்பது கடவுள் கொடுத்த பரிசு.. அதை தூக்கி எறிஞ்சுட்டெனே..” என்று வருந்தி அந்த குட்டி தேவதையின் பட்டு கன்னத்தில் முத்தமிட்டாள்... அந்த குட்டி தேவதையும் அழகாக புன்னகைத்தாள்...

சிறிது நேரம் ஆசை தீர அவளை அணைத்தவள்

“தேங்க்ஷ்.. “ என்று சொல்லி மீண்டும் ஆதியிடம் கொடுத்து விட்டு,

“ You guys carry on… “ என்றவாறு மறுபக்கம் நகர்ந்து சென்றாள் கண்ணில் வழிந்த கண்ணீரை மறைத்து கொண்டு...

மறுநாள் ஆதித்யா கட்டி கொண்டிருந்த மருத்துவமனையின் திறப்பு விழா ஏற்பாடு செய்திருந்தான் ஆதி..தன் மாமனார் மாமியரையும் தங்கிவிட்டு அடுத்த நாள் விழா முடிந்து செல்லுமாறு சொல்ல அவர்களும் தங்கி விட்டனர்.. அடுத்த நாள் அனைவரும் கிளம்பி அந்த மருத்துவமனைக்கு செல்ல மூன்று தளங்களில் கம்பீரமாக இருந்தது அந்த RJS Hospital..

தன் தந்தை மற்றும் தன் இரண்டு அம்மாக்களின் பெயர்களை சுருக்கி RJS Hospital என்று பெயர் சூட்டியிருந்தான்.. தன் அம்மாக்கள் இருவரையுமே ரிப்பனை வெட்டி திறந்து வைக்க சொல்ல இருவரும் பூரித்து இருந்தனர் மனம் கொள்ளா மகிழ்ச்சியோடு...

பின் சுசிலாவை அழைத்து சென்றவன் அங்கு இருந்த M.D என்று எழுதியிருந்த அறையில் இருந்த பெரிய நாற்காலியில் அமர வைத்து

“மா... இனிமேல் நீங்கதான் இந்த ஹாஸ்பிட்டலுக்கு டீன்... எல்லாம் பொறுப்பும் உங்களோடதுதான்.. “என்று அவரை கட்டிகொண்டான்.. சுசிலாவும் மகிழ்ந்து தான் பெற்ற பிள்ளையாக இருந்தால் கூட இந்த அளவு பாசம் வைத்திருக்க மாட்டான்..

என் வாழ்க்கையின் குறிக்கோளை புரிந்துகொண்டு என் ஆசையை நிறைவேற்ற என்றே இந்த இலவச மருத்துவமனையை கட்டியிருக்கிறானே..!!! நான் பெறாத இந்த தங்கமகன் என்னை இந்த அளவுக்கு உயரத்தில் கொண்டு வந்து வச்சிருக்கானே.. “ என்று தன்னை கட்டிகொண்டிருந்தவன் நெற்றியில் முத்தமிட்டு கண்கலங்க, வழக்கம்போல பாரதி அவரை ஓட்ட அந்த இடமே கலகலப்பாகியது...

பாரதிக்கும் பெருமையாக இருந்தது தன் கணவனை நினைத்து...பணம் மட்டுமே குறிக்கோளாக இல்லாமல் இப்படி இல்லாதவர்களுக்கு உதவுவதற்காக என்றே இந்த மருத்துவமனையை உருவாக்கியிருப்பதை நினைத்து..தன் கணவன் அப்படியே தன் தந்தையை போலவே இருக்க உள்ளம் மகிழ்ந்து போனாள்...

அதோடு அவளும் இப்பொழுது சைக்காலஜி இரண்டாம் வருடம் படித்து கொண்டிருப்பதால் அடுத்த வருடம் அதை முடித்து விட்டு இங்கு வருவதாகவும் இப்பொழுதும் வந்து ரிஸப்ஷனை மதியம் வரை பார்த்து விட்டு செல்வதாக முடிவு செய்தனர்...

தர்மலிங்கம் லட்சுமிக்குமே பெருமையாக இருந்தது தன் மறுமகனை நினைத்து.. இப்படி ஒரு மறுமகன் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்ம்.. “ என்று மகிழ்ந்து போயினர்..



ஒன்பது மாதத்திற்கு பிறகு:

கிட்டதட்ட இரண்டு வருடத்திற்கு பிறகு தான் பிறந்த மண்ணின் வாசத்தை ஆழ்ந்து சுவாசித்தாள் பாரதி... காரின் ஜன்னல் வழியே தலையை விட்டு வெளியில் எட்டி பார்த்து தான் விட்டு சென்ற தன் மண்ணின் மணத்தையும் தன் ஊரின் அழகையும் ரசித்தாள் கண்ணில் மின்னும் அவ்வளவு ஆனந்தத்துடன்....

ஆதியின் அந்த சொகுசு கார் பாரதியின் கிராமத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.. முன்னால் பாரதி அவன் அருகில் அமர்ந்து இருக்க, பின்னால் இருக்கையில் ஜானகி தன் பேத்தியை மடியில் வைத்து கொண்டு அமர்ந்து இருக்க, அவர் அருகில் சுசிலாவும் சமையல் செய்யும் பெண் தங்கமும் அமர்ந்து இருந்தனர்..

தன் பேரன் பேத்திக்கு இது ஒன்பதாவது மாதம் எனபதால், தங்கள் ஊரிலயே அவர்களுக்கு மொட்டை அடித்து காது குத்த வேணும் என்று ஆசைபட்டார் தர்மலிங்கம்...

அனைவரும் ஒத்துக்கொள்ள, இதோ அதிகாலையில் கிளம்பி இன்று மதியம் விழாவிற்கு ஆதி குடும்பத்தினர் காரில் சென்று கொண்டிருந்தனர்...

சுசிலா வழக்கம்போல தனக்கு வேலை இருக்கு என்று சொல்லி வர மறுக்க , பாரதி அவரை மிரட்டி வரவழைத்திருந்தாள்.. அதே மாதிரி லட்சுமி கிராமத்திற்கு சென்றதும் தங்கம் தான் தன் குட்டி எஜமானியை ஜானகியோடு சேர்ந்து முழுநேரம் பார்த்து கொள்வாள்.. அந்த குட்டியும் தங்கத்திடம் ஒட்டி கொள்ள தங்கத்திற்கு ரொம்ப சந்தோஷம்.. அதனால் அவளின் காதணி விழாவை தானும் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட ஜானகி தயங்காமல் அவளையும் உடன் அழைத்து வந்தார்...

கார் திருச்சியை அடைந்ததுமே பாரதி துள்ளி குதித்தாள்.. ஒவ்வொரு இடத்தையும் பார்க்கையில் அவளுக்குள் அப்படி ஒரு மகிழ்ச்சி.. ஒவ்வொரு இடத்தையும் காட்டி ஒவ்வொரு கதை சொல்லி வந்தாள் தன் மாமியார்களிடம்...

ஆதியும் அவளின் குழந்தைதனமான ஆர்பரிப்பை கண்டு சிரித்து கொண்டான்.. அதுவும் அவள் ஊருக்கு செல்லும் சாலை வரவும் இன்னும் பரவசமானாள்.. ஒவ்வொரு இடத்தையும் பார்க்கையில் இங்கெல்லாம் நான் எப்படி ஓடி ஆடினேன்.. எத்தனை முறை இந்த சாலையில் சைக்கிளில் சுத்தியிருப்பேன்....என்று நினைத்து பரவசமானாள்..




கிட்டதட்ட முழுதாக இரண்டு வருடம் ஆகிவிட்டது...

அவள் மனம் இரண்டு வருடம் முன்பு தான் இந்த ஊரை விட்டு செல்லும் பொழுது “திரும்ப இந்த ஊருக்கு வருவேனா??” என்ற சந்தேகத்துடன் வேதனையுடன் பிரிந்து சென்றது நினைவு வர, இன்று அதே ஊருக்கு தன் கணவன், மகள் மாமியார் என்று தன் குடும்பமாக திரும்பி வந்திருப்பதை நினைத்து சிரித்து கொண்டாள்...

இதுக்கெல்லாம் காரணமான தன் கணவனை ஓரக்கண்ணால் பார்க்க, அவனும் இவள் பார்வையை உணர்ந்து இவளின் மனநிலையை உணர்ந்து இவளை பார்த்து கண் சிமிட்ட, அவளோ வெக்கபட்டு மீண்டும் மறுபுறம் திரும்பி கொண்டாள்...

மீண்டும் ஜன்னல் வழியாக வெளியில் பார்த்தவள் தன் வீட்டின் தெருவில் கார் நுழைய இன்னும் கை தட்டி ஆர்பரித்தாள்.. அவளின் அந்த முகத்தை கண்டவன்,

“மா...இப்ப யார் உன் பேத்தி?? யார் உன் மறுமகள் னே தெரியலை.... உன் பேத்தி கூட சமத்தா உடகார்ந்துகிட்டு வர்ரா.. இவ என்னடானா குழந்த மாதிரி இப்படி குதிக்கிறா?? “ என்று அவளை வம்பு இழுத்தான் ஓரக்கண்ணால் அவளை பார்த்துகொண்டே...

அத கேட்டு ஜானகியும் சிரித்து கொண்டே

“அவ ஊரை இரண்டு வருசத்திற்கு பிறகு பார்க்கிறா கண்ணா.. அவளுக்கு சந்தோஷமா இருக்காதா?? அதான் குதிக்கிறா...” என்று தன் மறுமகளுக்கு சப்போரட் பண்ண,

“ஹ்ம்ம்ம் அப்படி சொல்லுங்க அத்தை.. நீங்கதான் என் செல்ல அத்தை.. “என்று திரும்பி அவருக்கு கை பை கொடுத்தாள் சிரித்தவாறு

“ஹா ஹா ஹா இரண்டு வருடம் என்ன?? இன்னும் இருபது வருடம் கழித்து வந்தாலும் இந்த பட்டிக்காடு அப்படியே தான் இருக்கும்.. என்னவோ காணாததை கண்டது போல இப்படி குதிக்கிறா..

என்ன பிரின்ஸஸ்... உன் அம்மா ஊரு பட்டிகாடுதான?? “ என்று பின்னால் திரும்பி அவன் இளவரசியை பார்த்து கண் சிமிட்ட, அவளும் தன் தந்தையுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு கை தட்டி சிரித்தாள்...

அதை கண்ட பாரதி கடுப்பா
கி

“அப்பாவும் பொண்ணும் எங்க ஊரை பழிக்கிறீங்களா?? இருங்க உங்க இரண்டு பேரையும் அப்புறம் கவனிச்சுக்கறேன்.. “ என்று தன் கழுத்தை நொடித்து தன் முகத்தை உர்ரென்று வைத்து கொண்டு முன்னால் தெரிந்த தன் வீட்டை பார்க்க,

வழக்கம் போல அவள் வீட்டின் முன்னே பெரிய மா கோலம் இட்டு பல வண்ணங்களில் அதை அழங்கரித்திருந்தார் லட்சுமி.. அதை கண்டதும் சற்று நேரம் முன் உர்ரென்று வைத்திருந்த அவள் முகம் பூவாக மலர்ந்தது...

மீண்டும் அவளின் பரபரப்பு வந்து ஒட்டி கொண்டது...

கார் வீட்டை அடைய ஆதி அதை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு அனைவரும் இறங்க, அதற்குள் அனைவரும் வாயிலுக்கு வந்திருந்தனர்...

காமாட்சி பாட்டிதான் தன் பேத்தியை காணும் ஆவளில் முதல் ஆளாக வேகமாக வெளியில் வந்தார்....

அவரை கண்டதும் தன்னை மறந்து ஆயா என்று ஓடிப்போய் அவரை இறுக்கி கட்டி கொண்டாள் பாரதி....காமாட்சியும் விளையாட்டு பிள்ளையாக இருந்த தன் பேத்தி இன்னைக்கு ஒரு குழந்தைக்கு தாயாகி குடும்பமாக வளர்ந்து நிப்பதை எண்ணி பூரிப்புடன் அவள் தலையை வாஞ்சையுடன் தடவி கொடுத்தார்...

அதற்குள் மற்றவர்களும் அருகில் வந்திருக்க, அவர் கண்கள் ஜானகியின் கையில் இருந்த தன் கொள்ளு பேத்தியிடம் செல்ல, பாரதியை விட்டு

“வாடி என் ராசாத்தி.. “ என்று தன் கொள்ளு பேத்தியை கையில் அள்ளிக்கொண்டார்..அந்த குட்டியும் அவரிடம் தாவிச் செல்ல இன்னும் அவர் முகம் மலர்ந்தது.... தன் கொள்ளு பேத்தியின் சிரிப்பை கண்டவர்,

“ஹ்ம்ம்ம் அப்படியே என் பேரனாட்டமே இருக்காளே எங்க வீட்டு குட்டி இளவரசி...”என்று அவளுக்கு திருஷ்டி கழிக்க அதற்குள் மற்றவர்களும் வந்திருக்க

பாரத் இந்திராவும் ஓடி வந்து யார் அந்த இளவரசியை அடுத்து வாங்குவது என்று ஒரு குட்டி சண்டை போட்டு கடைசியில் பாரத் ஜெயிக்க அவன் தன் அக்கா மகளை அள்ளி கொண்டான்..

“வாடி.. என் செல்ல மறுமகளே.. இந்த மாமனை பார்க்க இப்பதான் உனக்கு நேரம் கிடைத்ததா?? “ என்று அவள் பட்டு கன்னத்தில் செல்லமாக கிள்ளி முத்தமிட அனைவரும் சிரித்து ரசிக்க அதற்குள் இந்திரா அவனிடம் இருந்து பிடுங்கி இருந்தாள் அவளை...

அவன் திரும்பி முறைக்க அவளோ அவனுக்கு நாக்கை நீட்டி பழிப்பு காட்டி அவள் தன் மகளை கொஞ்ச ஆரம்பித்தாள்...

பாரதி தன் குடும்ப புகைப்படத்தை காட்டி தன் மகளுக்கு ஏற்கனவே ஒவ்வொருவராக அறுமுகபடுத்தி இருந்ததாலோ என்னவோ, அனைவரிடமும் தயங்காமல் சென்றாள்....

ஆதியோ தன்னைபோல தனியாக வளராமல் தன் மகளுக்கு இந்த மாதிரி சொந்தங்கள் கூட சேர்ந்து வளர பாக்கியம் கிடைத்ததே என்று பூரித்தான்..

அதற்குள் லட்சுமி ஆரத்தி தட்டுடன் சிரித்துகொண்டே வந்து அனைவரையும் வரவேற்று பின் ஆதி, பாரதி, தன் பேத்தி மூவரையும் நிக்க வைக்க, ஆதி தன் மகளை கையில் வாங்கி கொண்டு பாரதியுடன் இணைந்து நிக்க, மூவருக்கும் ஆரத்தி எடுத்து அவர்களை உள்ளே அழைத்து சென்றார்...

பாரதியும் ஆதியின் கையை பிடித்து கொண்டு மகிழ்ச்சி பொங்க தன் வீட்டின் உள்ளே வலது காலை எடுத்து வைத்து சென்றாள்...

அதற்குள் தர்மலிங்கமும் வந்து விட, அதற்கு பிறகு அங்கு ஒரே ஆனந்த கலகலப்பாக இருந்தது... அனைவரும் அமர்ந்து பேசி கொண்டிருக்க, பாரதி கண்களோ தன் வீட்டின் ஒவ்வொரு பகுதியையும் ஆசையாக தொட்டு பார்த்தது... வேகமாக ஒவ்வொரு அறையாக சென்று பார்த்து குதூகலித்தாள்.. பின் வேகமாக வீட்டின் பின்புறம் செல்ல அவளை கண்ட மல்லிகா தன் தலையை வேகமாக ஆட்டியும் காலை பறித்தும் தன் மகிழ்ச்சியை காட்ட ஓடி சென்று அதன் கழுத்தை கட்டி கொண்டு அதன் நெற்றியில் முத்தமிட்டாள்..

அதற்குள் அவளின் வருகையை அறிந்து எங்கிருந்தோ வேகமாக ஓடி வந்த மணி அப்படியே அவள் மேல் பாய்ந்தான்... அவளும் சிரித்து கொண்டே அருகில் அமர்ந்து கொள்ள அவள் முகம் எங்கும் தன் நாக்கால் நக்க அதன் குஷியை காட்டினான்.. அவனுடன் கொஞ்ச நேரம் கொஞ்சியவள் பின் தன் தோட்டத்தை பார்த்து பூரித்தாள்.. அதற்குள் சென்று ஆட மனம் துடித்தாலும் அவளுடன் வந்த மற்றவர்களின் நினைவு வர வேகமாக திரும்ப உள்ளே வந்தாள்..

அப்பொழுதுதான் மஹா குடும்பத்தாரும் வந்திருக்க, தன் அக்காவை கண்டவள்

மஹா என்று ஓடி சென்று அவளை கட்டி கொண்டாள் பாரதி... இருவர் கண்ணிலும் ஆனந்த கண்ணீர் திரண்டு நிக்க இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டனர்.. பின் ஈஸ்வரின் கையில் இருந்த தன் மகனை தூக்கி கொஞ்ச அவன் அப்படியே மஹா சாயலில் இருந்தவனை கண்டு இன்னும் மகிழ்ந்து அவனை இறுக்கி கட்டி கொண்டாள்..

மஹாவும் பாரதியின் மகளை அவளின் குண்டு கன்னத்தையும் உருண்டை விழிகளும் அப்படியே ஆதியை போல இருந்தவளை கண்டு தன் கையில் தூக்கி கொஞ்சினாள்..

ஓரமாக நின்றிருந்த ஈஸ்வர் ஆதியின் அருகில் வந்து

“என்ன சகளை...இப்பதான் தெரியுது அன்னைக்கு என் மச்சினிச்சியை பத்தி நீ ஏன் வளச்சு வளச்சு விசாரிச்சனு.. சரியான ஆள்தான் நீ..அப்பயே மறச்சுட்டியே.. “என்று சிரித்து கொண்டேஅவன் வயிற்றில் செல்லமாக குத்தி அவனை அணைத்து கொண்டான்...

ஆதியும் மெல்ல வெக்கத்துடன் சிரித்து கொண்டே

“சாரி ப்ரதர்.. அப்ப எதயும் சொல்ல முடியலை.. அதான்... “ என்று வறுத்த பட

“இட்ஸ் ஓகே.. எப்படியோ எங்க வீட்டு பொண்ணு நல்ல இடத்துல தான் சேர்ந்திருக்கா... பத்திரமா பார்த்துக்கங்க.. “என்று சிரித்தான்... பின் அனைவரும் கிளம்பி அந்த முருகன் கோவிலுக்கு சென்றனர்..

அங்கு முன்னரே முடி இறக்குபவரும், காது குத்தும் ஆசாரியும் வந்திருந்தனர்.. தாய் மாமன் வீட்டு சீர் வரிசையாக சில தட்டுக்களில் பழங்களை வைத்து முன்னால் வைத்திருக்க, விருந்தினர்கள் எல்லாம் வந்திருக்க அந்த மண்டபம் நிறைந்து இருந்தது.. பின் இரு குழந்தைகளுக்கும் முடி இறக்க என்று வெளியில் அழைத்து சென்றனர்..

முதலில் ஈஸ்வரின் மகன் குமரனை பாரத் மடியில் அமர வைக்க அவனோ மடியில் அமராமல் திமிரிக் கொண்டிருந்தான்.. மஹாவும் ஈஸ்வரும் அருகில் நின்று அவனை பிடித்து கொண்டு சமாதானம் செய்ய ஒரு வழியாக மொட்டை அடித்து முடித்தனர்..

பின் ஆதியின் இளவரசி கார்த்தியை மடியில் அமர வைக்க, பாரத்க்கு பெருமையாக இருந்தது... இப்படி இரண்டு குட்டிஸ்க்கும் தான் தாய் மாமா ஆனதை நினைத்து...

பாரத் அவளை அப்படியே கொஞ்சி கொண்டே இலாவகமாக பிடித்து கொள்ள அவளோ தன் தந்தையை பார்த்து சிரித்து கொண்டே சமத்தாக அமர்ந்து இருந்தாள்.. அனைவருக்கும் ஆச்சர்யமாக இருந்தது.. ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை அவளுக்கு..

ஆதிக்கு நிம்மதியாகவும் பெருமையாகவும் இருந்தது...

“என் மகள் எதற்கும் அழக்கூடாது அழமாட்டாள்... அழ விட மாட்டேன்.. “ என்று நினைத்து கொண்டான்..

பின் அருகில் இருந்த கிணற்றில் இருந்த நீரில் குளிக்க வைக்க சொல்ல ஆதியோ அது குளிர்ந்த நீர்.. தன் மகளுக்கு ஒத்துக்காது என்று மறுக்க பாரதி அவனை பார்த்து முறைத்தாள்..

மற்றவர்கள் எவ்வளவு சொல்லியும் அவன் கேட்காததல் சமையல் செய்யும் இடத்திற்கு சென்று அவசரமாக வெந்நீர் வைத்து கொண்டு வந்து அவளை குளிக்க வைத்தார் லட்சுமி..

தர்மலிங்கம் தாங்கள் வாங்கி வைத்திருந்த அந்த பட்டு பாவாடையை தன் பேத்திக்கு அணிவிக்க,, குமரனும் குழந்தைக்கான உடையில் அழகாக இருந்தனர் இருவரும்.. இரண்டு பேரும் மொட்டை அடித்த தலையில் சந்தனம் பூசி குமரன் இன்னும் தேம்பி கொண்டிருக்க கார்த்தியோ சிரிப்புடன் இருக்க அவர்கள் இரண்டு பேரையும் தன் கைகளில் தூக்கி கொண்டு காது குத்தும் மேடைக்கு சென்றான் பாரத்...

குமரனை முதலில் அமர வைக்க அவனோ மொட்டை அடித்த பயமே இன்னும் விலகாத நிலையில் அடுத்து என்ன கொடுமை பண்றாங்களோ என்று எட்டி குதிக்க முயல அவனை பிடித்து வைப்பதற்குள் அனைவருக்கும் போதும் போதும் என்றாகியது...

மஹாவும் ஈஸ்வரும் அவன் பெற்றோர்களும் என்னவோ சமாதானம் செய்து அவனை அமர வைத்து காது குத்த அவனோ வலியில் ஆவென்று கத்தினான்...

அதை கண்ட ஆதி பயந்துபோனான்..அந்த ஆசாரி முரட்டுத்தனமாக குத்துவதை போல இருந்தது.. அருகில் இருந்த தன் அன்னயிடம்

“மா... என் பிரின்ஸஸ்க்கு இதெல்லாம் வேண்டாம்... அந்த ஆள் வேற முரட்டுதனமா குத்தறார்.. நாம் பேசாம டாக்டர் கிட்ட குத்திக்கலாம்.. இங்க வேண்டாம்.. “ என்க அவரோ சிரித்து கொண்டே

“அதெல்லாம் ஒன்னும் ஆகாது கண்ணா.. அவருக்கு நிறைய எக்ஸ்பீரியன்ஸ் இருக்கும்.. அதெல்லாம் பார்த்து பக்குவமாதான் குத்துவார்... நீ பயப்படாத.. “ என்று சமாதானம் செய்ய அவனோ இன்னும் திருப்தியாகமல் தன் மகளை பிடித்திருந்தான்

பின் அவளிடம்

“பிரின்ஸஸ்... உன் அண்ணன் மாதிரி நீ பயந்துக்காத.. இது ஒன்னும் இல்லை.. சின்ன வலிதான்.. நீ பொறுத்துக்குவியாம்.. “ என்று தன் மகளிடம் விளக்கம் சொல்ல அருகில் நின்றிந்த பாரதியோ

“எனக்கு ஒரு சந்தேகம்.. இப்ப வலிக்கும் னு உங்க பொண்ணு பயப்படறாளா?? .. இல்லை பொண்ணோட அப்பா பயப்படறாரா?? .. அவளே தைரியமா இருக்கா.. நீங்க ஏன் இப்படி பயந்து நடுங்கறீங்க.. “ என்று குரும்பாக சிரித்தாள் பாரதி.. அவளை முறைத்தவன் அடுத்து இவர்கள் என்பதால் பாரத் ன் அருகில் சென்று தன் மகளை அவன் கையில் கொடுக்க அவனும் சிரித்து கொண்டே வாங்கி தன் மடியில் அமர வைத்தான்... அருகில் ஆதியும் பதற்றத்துடன் பாரதி அவனை பார்த்து முறைத்த வண்ணம் அவன் அருகில் அமர,

அந்த ஆசாரியும் சிரித்து கொண்டே தன் கருவியை எடுக்க ஆதி இறுக்கி தன் கண்ணை மூடிக் கொண்டான்.. அதை கண்ட பாரதி சிரித்து கொண்டாள்..

அதுவரை அமைதியாக இருந்த அந்த குட்டி அவர் கையில் இருந்த அயுதததை காண அதோடு தன் முன்னால் உட்கார்ந்த தன் அண்ணன் போட்ட ரகளையில் தன்னையும் ஏதோ செய்யப் போறாங்க என்று பயந்தவள் அழ ஆரம்பித்தாள் முதல் முறையாக....

அவள் பிறந்ததில் இருந்தே இதுவரை எதற்கும் அழாத தன் இளவரசி முதல் முறை க்ண்ணில் நீரை காண ஆதியின் கண்களில் இருந்து அடுத்த நொடி பொலபொலவென்று நீர் கொட்டியது...

அதற்குள் பாரத் அவளை கெட்டியாக பிடித்து கொள்ள அந்த ஆசாரி விளையாட்டு காட்டிகொண்டே ஒரு காதில் குத்தி அந்த தோட்டை போட்டிருந்தார்... மற்றொருபுரம் திருப்ப சொல்ல அவள் வலியில் இன்னும் கத்த ஆதியோ அவளை விட அழுதான் உள்ளுக்குள்... அவன் கண்ணில் நீரை கண்ட பாரதி அவன் காதில் குனிந்து

“ஐய... இது என்ன பொம்பளையாட்டம் இப்படி அழுவறீங்க.. காதுதான குத்தறாங்க... எல்லாம் சரியாயிடும்.. எல்லாரும் உங்களையே பார்க்கறாங்க.. மானம் போகுது.. முதல்ல கண்ணை துடைங்க.. “ என்று தன் சேலை முந்தியை எடுத்து கொடுக்க அவனோ

“போடி.. உனக்கு என்ன தெரியும்??.. அவ கண்ணில முதமுதலா தண்ணி வந்திருச்சு... எல்லாம் உன் பட்டிகாட்டு முட்டாள் ஆசாரியால.. “என்று தன் மூக்கை உறிஞ்சியவாறே அவளை முறைத்தான்.. அதற்குள் இன்னொரு காதையும் குத்தி இருக்க, பாரத் கொடுத்திருந்த சாக்லெட்டை சுவைத்த படி அவள் சிரித்து கொண்டிருக்க ஆதி இன்னும் கண்ணை துடைத்து கொண்டிருந்தான்..

எல்லாரும் அவனை பார்த்து சிரிக்க அவனோ மெல்ல வெக்கபட்டு தன் மகளை பாரத் இடமிருந்து பிடுங்கி தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டு ”வலிச்சுதா பிரின்ஸஸ்??.. “என்று கொஞ்ச பாரதி தன் தலையில் அடித்து கொண்டாள்.. சிரித்தவாறு.,..

பின் அனைவரும் தர்மலிங்கத்தின் இரண்டு பேர புள்ளைங்களையும் வாழ்த்தி அவர் நல்ல மனதுக்கு இரண்டு மகளுக்கும் நல்ல இடமாக அமைட்ந்திருக்கு என்று புகழ்ந்து அவரை பாராட்டினர்... பின் பந்தி ஆரம்பிக்க, காதுகுத்து விழாவுக்கேயான ஆட்டுகறியும், கோழிக்கறி, முட்டை என்று அனைத்து அசைவ வகைகளும் இழைகலில் குவிந்து இருக்க, அனைவரும் வயிறு நிறைவோடு சாப்பிட்டு அவர்களை வாழ்த்தி சென்றனர்.. பாரதி குடும்பத்திற்கு மனம் நிறைந்து நின்றது...

இந்த முறை இரண்டு குட்டீஸ்கள் கூடுதலாக இருக்க, அனைவரும் ஒன்றாக நிக்க, பாரதி தன் கணவன் அருகில் நின்று கொண்டு அவன் கையை பெருமையுடன் பிடித்து கொண்டு குடும்ப புகைப்படம் எடுத்து கொண்டனர்...

மறுநாள் அதிகாலை அசந்து தூங்கி கொண்டிருக்கும் தன் கணவனை அவசரமாக எழுப்பினாள் பாரதி...

“ஏய்... இப்பயே எதுக்குடி எழுப்பற??.. நேற்று நைட் உன் அக்கா, தம்பி , தங்கச்சியோட கதை அடிச்சிட்டு ஒரு மணிக்கு படுக்க வந்த... வந்தும் நீ தூங்காம தூங்கின என்னை எழுப்பி உன் பழைய புராணத்தை எல்லாம் என்னை கேட்க வச்சு இப்பதான் என்ன படுக்க விட்ட..

அதுக்குள்ள எதுக்குடி இப்ப மறுபடியும் எழுப்பற??.. மனுசனை கொஞ்சமாவது நிம்மதியா தூங்க விடு... “ என்று புலம்பி கொண்டே அவள் இழுத்த போர்வையை மீண்டும் இழுத்து மூடிக் கொண்டான்..

“சரியான தூங்கு மூஞ்சி.. எப்ப பார் தூங்கிகிட்டே இருக்கறது... ஒருத்தி எவ்வளவு இன்ட்ரெஸ்ட் ஆ கதை சொன்னா அதை விட்டு தூக்கம் தான் பெருசு னு தூங்கறத பார்.. “என்று மெல்ல முனுமுனுத்தவள் மீண்டும் அவன் காதின் அருகில் குனிந்து

“ஆதி.... ஆதி மாமா... நீங்க நல்ல பையனா எழுந்திருச்சா நான் உங்களுக்கு ஒரு முக்கியமான ஆளை இன்ட்ரடூயூஸ் பண்ணுவேன்... சீக்கிரம் எழுந்திரு மாமா..” என்று கொஞ்சினாள்...

அவளின் மாமா என்ற கொஞ்சளில் குழைந்தவன் அவள் சொன்ன முக்கியமான ஆள் என்றதில் கலவரமானான்...

“யார் அது?? எனக்கு தெரியாத முக்கியமான ஆள்.??. அவ குடும்பத்தில எல்லாரும் தெரிஞ்சவங்க.. அப்புறம் மற்ற சொந்தக்காரங்களும் நேற்றே பார்த்தாச்சே... நேற்று வராமல் இன்று அதிகாலையில் முக்கியமா பார்க்க வேண்டிய அந்த முக்கியமான ஆள் யாராயிருக்கும்.. ? “ என்று தன் மூளையை கசக்கி யோசித்தவனுக்கு திக் என்றது.

“ஒரு வேளை இது அவள் காதலனா இருக்குமோ?? சே.. சே அப்படி எல்லாம் இருக்காது.. அவ தான் எப்பவோ அவனை மறந்துட்டாளே.. இப்ப எப்படி அவனை போய் அறிமுகபடுத்து வா?? எதுவும் என்னிடமே... “ என்று ஒருபக்கம் மனம் சமாதானம் செய்தாலும் மறுபக்கம் அப்படி இருந்துவிட்டால்...?? “ என்று கேள்வி கேட்டது...

ஒருவேளை இதெல்லாம் அந்த வடிவேலனின் சதியோ என்று எணியவன்

“அப்பா... முருகா.. நீ என் வாழ்க்கையில ஆடின ஆட்டம் போதும்.. இப்பதான் உன் ஆட்டம் எல்லாம் முடிஞ்சி நானும் என் பொண்டாட்டி புள்ளைனு நிம்மதியா இருக்கேன்.. மறுபடியும் ஒரு கட்டத்தை போட்டு உன் ஆட்டத்தை ஆரம்பிச்சுடாத...

இதுவரைக்கும் வராத முக்கியமான ஆளையெல்லாம் இப்ப எதுக்கு நீ கூட்டிகிட்டு வர்ர?? இந்த உலகத்துல நிறைய பேர் இருக்காங்க.. அவங்களையும் கொஞ்சம் பார்.. என் வாழ்க்கையில் மறுபடியும் உன் ஆட்டத்தை ஆரம்பிச்சுடாத.. உனக்கு நான் காவடி எடுக்கறேன்.. “ என்று புலபியவாறு தன் முகத்தில் இருந்த போர்வையை விலக்கி,

“அப்படி யாரு டீ முக்கியமான ஆள்?? .. அதுவும் இந்த தேரத்தில் பார்க்க..” என்றான் உள்ளுக்குள் சிறு உதறுலுடன்... அது அவள் காதலனா இருக்க கூடாது என்று அந்த முருகனை வேண்டி கொண்டே....

“ஹ்ம்ம்ம்ம் என் லவ்வர்தான்... அவனை தான் உங்களுக்கு அறிமுகபடுத்தனும்.. சீக்கிரம் வாங்க.. “என்றாள் மெல்லிய வெக்கத்துடன் உள்ளுக்குள் சிரித்தவாறு..

அதை கேட்டு அவன் தலையில் இடி விழுந்ததை போல இருந்தது அவனுக்கு… “கவுத்திட்டியே முருகா….உனக்கு காவடி கட்.. “ என்று திட்டியவன் சமாளித்து கொண்டு

“அவன்.. அவர்... “என்று ஏதோ உளறி

“ஆமா அவன் இந்த ஊர்லயா இருக்கான்.?? ..” என்றான் தன் மனதை மறைத்து கொண்டு..

அவன் தடுமாற்றத்தை கண்டு கொண்டவள்,

“ஹா ஹா ஹா.. நல்லா வேணும் .. என்னை எப்படி எல்லாம் படுத்தின.. அதுக்குதான் இந்த சின்ன ட்விஸ்ட்.” என்று மனதுக்குள் சிரித்து கொண்டவள்..

“ஹ்ம்ம்ம் இங்கதான் இருக்கான்.. அப்பப்ப சென்னைக்கும் வருவான் என்னை பார்க்க... சீக்கிரம் வாங்க...அவன் அப்புறம் போய்டுவான்.. “ என்று அவசரபடுத்தினாள்..

ஆதிக்கோ மனதில் பாரத்தை வச்சு அழுத்தியதை போல இருக்க, அவளின் முகத்தில் தெரிந்த உற்சாகத்தை கண்டவன்

“அப்ப நீ இன்னும் அவனை மறக்கலையா?? .. “என்று கேட்க வந்து பின்

“வேணாம்.. நான் எதும் கேட்க போய் அவளுக்கு தப்பாக தெரிந்தால்... எதுவானாலும் அவளை இனிமேல் யாருக்கும் விட்டு கொடுக்க முடியாது.. “என்று தீர்மானித்தவன்.

“நான் வரலை.. நீயே போய் பார்த்துட்டு வா.. “ என்றான் தன் எரிச்சலை மறைத்து கொண்டு..

“அது எப்படி நான் மட்டும் இந்நேரத்தில தனியா போறதாம்??.. நீங்களும் வாங்க.. போன உடனே அவனை பார்த்துட்டு வந்திடலாம்.. அதோட என் அத்தை என்னவோ அவங்க பையன்தான் ராஜகுமாரன் னு பெருமை அடிக்கிறாங்க இல்ல... என் ஆளு எப்படி இருக்கான் னு வந்து பாருங்க..

அவன் அவ்வளவு அழகா, ஹான்ட்ஸம் ஆ இருப்பான்.. “ என்று ஓரக்கண்ணால் அவனை பார்த்து கொண்டே அவள் கெஞ்ச , அவனும் வேற வழி இல்லாமல் எழுந்து குளியல் அறைக்குள் சென்று ரெப்ரெஸ் ஆகிட்டு வெளியில் நட்ந்தான் பாரதியுடன்..

மற்றவர்கள் இன்னும் உறங்கி கொண்டிருக்க, வீட்டிற்கு வெளியில் வந்தவள் தன் சைக்கிளை எடுக்க, அதை கண்டவன்

“ஏய்.. இத எதுக்கு டி எடுக்கற.. இதெல்லாம் எனக்கு ஓட்ட தெரியாது.. வா.. நாம் கார்ல போலாம்.. “ என்றான்...

“ஹா ஹா ஹா.. இதுல போனதான் இன்னும் சூப்பரா இருக்கும்... நான் இதுல வர்ரேன்.. நீங்க என் பின்னாடியே ஓடி வாங்க.. அதான் தினமும் அங்க காலையில எழுந்து லொங்கு லொங்கு னு ஓடுவீங்க இல்ல... அது மாதிரி இங்க ஓடினா உடற்பயிற்சியும் செஞ்சமாதிரி இருக்கும்.. “ என்று சிரித்து விட்டு அந்த சைக்கிளில் ஏறி அதை மிதித்தாள் வேகமாக... ஆதியும் அவளை பின் தொடர்ந்தான்..

நீண்ட நாட்காளுக்கு பிறகு தன் கிராமத்தின் தெருவில் அந்த சைக்கிளில் செல்வது அவ்வளவு உற்சாகமாக இருந்தது அவளுக்கு. வழக்கம் போல ஒவ்வொரு வீட்டின் வாயிலில் இருந்த கோலத்தை ரசித்து கொண்டே அந்த அதிகாலை ஜில்லென்ற காற்றை சுவாசித்து கொண்டே தன் சைக்கிளை மிதித்தாள் தன் காதலனை காண..

ஆதியோ

“காலையிலயே இப்படி இவ பின்னாடி என்னை ஓட வச்சுட்டாளே.. இந்த ராட்சசி.. அதை விட கொடுமை அவ காதலனை பார்க்க அவ புருஷனை துணைக்கு கூட்டிகிட்டு போறது தான்.. என்ன கொடுமை டா இது?? “ என்று மானசீகமாக தன் தலையில் அடித்து கொண்டு அவள் பின்னாள் ஓடி வந்தான்...

சிறிது தூரம் சென்றவள் அவனை வெறுப்பேத்த என்று சைக்கிளை வேகமாக மிதிக்க அவள் வேகத்திற்கு அவன் ஈடு கொடுக்க முடியாமல் சிறிது நேரம் வேகமாக ஓடியவன் மூச்சிறைக்க பின் மெதுவாக ஓடலானான்..

அவன் தன் பின்னால் வராததை கண்டவள் சிரித்துகொண்டே வேகத்தை குறைக்க அவனும் அதற்குள் வந்து சேர

“ஏய்...எதுக்குடி இப்படி ஓட வைக்கிற??.. இன்னும் எவ்வளவு தூரம் ஓடணும்..?? சொல்லித்தொலை.. “ என்று சிடுசிடுத்தான்...

“ஐய.. அப்ப காலையில எழுந்து நீங்க தினமும் ஓடறது எல்லாம் சும்மா பேருக்குதானா?? நான் கூட என்னவோ தினமும் ஓடி ஓடி பயங்கர எக்ஷ்பர்ட் ஆகியிருப்பீங்கனு நினைச்சேன்...இதுக்கே இப்படி சலிச்சுக்கறீங்க... ”என்ளால் நக்கலாக சிரித்தவாறு

அவனோ அவளை பார்த்து முறைத்து கொண்டே அவளுடன் இணைந்து ஓடி வர இருவரும் வம்பு இழுத்து கொண்டே அந்த குளக்கரையை அடைந்தனர்... பாரதி தன் சைக்கிளை நிறுத்த, அவனும் நின்று கீழ குனிந்து மூச்சு வாங்கினான்...

“ஐய.. இதுக்கெ இப்படி மூச்சு வாங்கறீங்க.. சும்மா வாங்க.. “ என்று அவன் கையை பிடித்து இழுத்து கொண்டு குளத்திற்குள்ளே ஓடினாள்..

நீர் இல்லாமல் வறண்டிருந்த அந்த குளம் சமீபத்தில் பெய்திருந்த மழையில் கொஞ்சமாக நீர் தேங்கி இருந்தது... சிறிது தூரம் உள்ளே சென்றதும் அவன் கையை விட்டாள்.. அவனோ சுற்றிலும் தேடி பார்க்க யாரையும் காணாமல் அவளை பார்க்க அவளோ

“இருங்க.. இனிமேல் தான் வருவான்.. நீங்க இன்னும் கொஞ்சம் முன்னால் போங்க.. “ என்று அவனை முன்னால் அனுப்பி வைத்தாள்... அவள் சொல்றதுக்கெல்லாம் தலை ஆட்ட வேண்டி இருக்கே என்று புலம்பி கொண்டே அவனும் அந்த குளத்தில் சிறிது தூரம் முன்னே நடக்க, திடீரென்று அதுவரை இருள் சூழ்ந்திருந்த அந்த பகுதி கொஞ்சம் கொஞ்சமாக பிரகாசமாகியது..

குளத்தில் இருந்த நீரில் அந்த ஆதவனின் ஒளிகிரணங்கள் பட்டு எதிரொளிக்க, அந்த இடமே ரம்மியமாக மாறுவதை ஆதி வியந்து ரசித்து கொண்டிருக்க, திடீரென்று

“ஹாய் ஆதி டார்லிங்.. ஹவ் ஆர் யூ?? எத்தனை நாள் ஆச்சு உன்னை பார்த்து..அப்படியே இருக்கடா.. You are looking so handsome..இன்னைக்கு நம்ம ஊர் பொண்ணுங்க உன்னைத்தான் சைட் அடிக்க போறாங்க.. I miss you.. லவ் யூ .. உம்மா... “என்று துள்ளி குதித்து காற்றில் தன் முத்தத்தை பறக்க விட்டாள் அந்த ஆதவனை நோக்கி...

முதலில் ஒன்றும் புரியாமல் திகைத்த ஆதி அவள் அந்த அதிகாலையில் மேல எழுந்து வந்து கொண்டிருந்த அந்த ஆதவனை பார்த்து கத்தி கொண்டிருக்க, அப்பொழுதுதான் அவனுக்கு எல்லாம் புரிந்தது..

“அன்று கெஸ்ட் ஹவுஸில் ம் இவனைப் பார்த்துத்தான் பேசிக் கொண்டிருந்தாளா??

சே.. இந்த கேடி கொஞ்ச நேரத்துல என்னை எப்படி முட்டாள் ஆக்கி தவிக்க விட்டுட்டாளே.. “ என்று குறும்பாக சிரித்து கொண்டே அவளை நோக்கி முன்னால் மெதுவாக அடி எடுத்து வைத்தான்.

அதே நேரம் அந்த ஆதவனும் அவளை நோக்கி காதலுடன் வருவதை போல இருந்தது.. இப்பொழுது அந்த ஆதவனை அவள் உத்து பார்க்க, அதில் தன் கணவன் ஆதியின் முகம் தெரிய அப்படியே அவன் அழகில் மயங்கி நின்றாள்.. பின் தன்னை நோக்கி குறும்புடன் சிரித்து கொண்டே வரும் தன் கணவன் ஆதியை காண அவன் முகத்தில் அந்த ஆதவனை கண்டாள்...

இரண்டு பேரையும் மாறி மாறி பார்க்க இப்பொழுது இரண்டு பேருமே ஒன்றாக அவள் கணவனாக அவள் கண்ணுக்கு தெரிய அப்படியே திகைத்து நின்றாள்..

தான் சிறுவயதில் இருந்தே காதலித்து வரும் அந்த ஆதவன் தான் தனக்கு கணவன் ஆதியாக வந்திருக்கிறான் என புரிய, அடுத்த நொடி

தன் கணவனை நோக்கி பாய்ந்து சென்று அவனை இறுக்கி அணைத்திருந்தாள்....

அவனும் அவளின் அந்த இறுகிய அணைப்பில் நெகிழ்ந்து மகிழ, அவளோ சிறிது நேரத்தில் நிமிர்ந்து அவன் கழுத்தை முன்னே வளைத்து

“ஐ லவ் யூ ...

லவ் யூ ஆதி ... லவ் யூ மாமா...” என தன் கண்ணில் காதல் பொங்க அவன் இதழில் அழுந்த முத்தம் இட்டாள்...

இதுவரை தன் மனைவியிடம் இருந்து கேளாத , அவன் கேட்க ஏங்கி கொண்டிருந்த அந்த மூன்று வார்த்தைகள் அவன் காதில் தேனாகபாய, அதை விட அவள் தன்னைத்தான் விரும்பி இருக்கிறாள்…அவள் மனதில் நான் மட்டுமே .. என்ற உண்மையே அவனுக்கு பல கோடி பூக்களை அப்படியே அவன் தலையில் கொட்டியதை போல அவன் மனம் நிம்மதியும் ஆனந்த பரவசத்தில் திக்கு முக்காடி போனான்..

அவளின் அந்த அழுத்தமான முத்தம் அவள் காதலை ஒட்டு மொத்தமாக அவனிடம் கொட்ட இன்னும் களிப்பில் கிறங்கி நின்றான்.. பின் சிறிது நேரத்தில் அவன் இதழை விட்டவள் மீண்டும் நாணத்துடன் அவன் மார்பில் புதைந்து கொள்ள அவன் கை தானாக அவளை இன்னும் தன்னோடு சேர்த்து அணைத்து கொள்ள இப்படியே அவள் உள்ளே சென்று விட வேண்டும் என்று இருவரும் மோன லயத்தில் இருந்தனர்...

அவர்களின் அந்த உருகிய நிலையை கண்ட ஆதவனும் எப்படியோ என் காதலியை நான் சேர்ந்து விட்டேன்... என்ற நிம்மதியுடன் அவர்களை பார்த்து வெக்க பட்டு மேல எழுந்து சென்றான்..

மோன நிலையில் இருந்தவர்கள் ஆதிதான் முதலில் சுதாரித்து,

“ஹே.. ரதி.. இப்படி பொது இடத்துல கட்டிபிடிச்சுகிட்டு இருக்கியே.. யாராவது வந்திட போறாங்க..” என்று அவள் காதில் காதலுடன் கிசுகிசுக்க

“ம்ஹும் இது என் ஏரியா... இங்க யாரும் உள்ள வரமாட்டாங்க.. அதோட என் புருஷனைத்தான கட்டிகிட்டு நிக்கறேன்... ஒன்னும் தப்பில்லை...”என்று நிமிர்ந்து அவனை பார்த்து கண்ணடித்து மீண்டும் அவனை இறுக்கி கட்டி கொண்டாள்..

“இந்த அன்பு ஒன்று போதும் எனக்கு.. என் வாழ்வில் வந்து போன இருண்ட காலத்தை விரட்டி வாழ்க்கை முழுவதும் இனி பிரகாசிக்க வைத்தவள் இவள் .. இவளை என் கண்ணுக்குள் வைத்து பார்த்து கொள்வேன்..” என்று மனதுக்குள் உறுதி செய்தவன் மெல்ல குனிந்து அவள் முன் உச்சி நெற்றியில் முத்தமிட்டான்..

பின் நேரம் ஆவதை உணர்ந்து அவனை விடுவிக்க அவனோ குனிந்து அவளை அள்ளி கொண்டு கரையை நோக்கி மெல்ல நடந்தான்.

அவளும் மயங்கி தன் கைகளை அவன் கழுத்தில் மாலையாக போட்டு கொள்ள, இதுவரை அவள் காதலனை காணப்போகும் டென்சனில் அவளை முழுமையக பார்க்காதவன் அப்பொழுது தான் அவள் முகத்தை நன்றாக காண, அவளோ அதி காலியில் குளித்து முடித்து பனியில் நனைந்த ரோஜாவாக அவள் கன்னங்கள் மிளிர அதோடு அவள் தந்த இதழ் முத்தம் இன்னும் அவனை புரட்டி போட மையலுடன் அவளை பார்த்து

“ஹே .. ரதி டார்லிங்.. நாம் இப்பவே சென்னைக்கு போய்டலாமா?? ... என்றான் மையலுடன்.. தன் கணவனின் கண்ணில் தெரிந்த ஆசையையும் காதலையும் கண்டவள் உள்ளுக்குள் சிலிர்த்து போனாள்...

“அது எப்படி அதுக்குள்ள போறதாம்?? .. நான் இன்னும் ஒரு 10 நாளாவது எங்க ஊர்ல தங்கிட்டு எல்லாத்தையும் நல்லா சுத்தி பார்த்துட்டு அப்புறம் தான் வருவேனாக்கும்.. “ என்று கண்ணடித்தாள் குறும்பாக உள்ளுக்குள் சிரித்து கொண்டே ..

“ஐயயோ.. 10 நாளா.. அதுவரைக்கும் தாங்க முடியாது என்னால.. நாம முன்னாடி ப்ளான் பண்ண மாதிரியே இன்னைக்கு ஈவ்னிங் ஏ கிளம்பிடலாம்.. அப்பதான் நைட்டுக்குள்ள நம்ம வீட்டுக்கு போய்டலாம்..” என்று அவளை பார்த்து அவனும் குறும்பாக கண் சிமிட்டினான்...

“ஹா ஹா ஹா.. ஐ லவ் யூ என் செல்ல மாமா.... “ என்று அவன் மீசையை பிடித்து இழுத்து தன் உதட்டை குவித்து அவள் காற்றில் முத்தமிட அதில் இன்னும் கிறங்கியவன்

“ஐ லவ் யூ டூ என் செல்ல பொண்டாட்டி...என் பட்டிகாட்டு கருவாச்சி... “ என்று குனிந்து அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்..

அவர்களின் கொஞ்சலை கண்டு நிம்மதி அடைந்த அந்த சிங்கார வேலனும்

“இரண்டு பேரும் இதே காதலுடன், மகிழ்ச்சியாக இந்த பிறவி மட்டும் இல்லாமல் இனி வரும் பிறவிகளிலும் சேர்ந்து இருக்கட்டும்....” என்று வாழ்த்தி தன் ஆட்டத்தின் நிறைவு விழாவையும் முடித்தான்....

அருகில் இருந்த அவன் ஆலயத்தில் இருந்து கந்த சஷ்டி கவசத்தின் சரணம் பகுதி இனிமையாக ஒலித்தது..

கடம்பா போற்றி கந்தா போற்றி

வெட்சி புனையும் வேளே போற்றி

உயர்கிரி கனக சபைக்கு ஓரரசே....

மயில்நடமிடுவாய் மலர் அடி சரணம்

சரணம் சரணம் சரஹண பவ ஓம்

சரணம் சரணம் சண்முகா சரணம்...



🌺 🌺 🌺 🌺 மலர்ந்தது 🌺 🌺 🌺 🌺

Comments

  1. அருமையான கதை
    ரொம்ப நல்லா இருந்தது

    ReplyDelete
  2. Arumayana kadhai writerea manasuku neraiva irunduchi thanks for this wonderful story

    ReplyDelete
  3. என்றும் மனதை விட்டு நீங்காத கதை நன்றி

    ReplyDelete
  4. Hi akka.... Unmaiya sollanumna romba naal kalichu oru nalla story ahhh padichirukken.... Nice script... No write to explain my peace after reading it. Kan munnadi oru film paathathu maathiri irunthuchu.... My best hearty wishes to you akka

    ReplyDelete
  5. Nice story. No words to explain its excellence. Thank u for this wonderful story.

    ReplyDelete
  6. Story is very interesting. Feel gud story

    ReplyDelete

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!