தவமின்றி கிடைத்த வரமே-37


அத்தியாயம்-37

ன் தம்பியின் பதிலை கேட்டவள் உள்ளம் குளிர்ந்து போக,
“டேய்.. உன் பொறுப்புணர்வு நினைச்சு அப்படியே புல் அரிக்குது டா.. ரொம்ப சந்தோஷம் நீ இந்த அளவுக்கு யோசிக்கறியே.. அதுவும் எனக்காக இவ்வளவு யோசிச்சு பார்க்கறியே.. ரியலி ஐ ப்ரௌட் ஆ யூ..

அடுத்த ஜென்மத்திலும் நீயே எனக்கு தம்பியா வரணும்.. “ என்று சிரித்தவள்

“இனி... ஆனாலும் நீ நினைக்கிற மாதிரி பெருசா ஒன்னும் எதிர்ப்பு இருக்காது.. நீ குதிரை ல வந்து தூக்கிட்டு போய் தாலி கட்டற அளவுக்கெல்லாம் போகாது..

நீ அந்த குழப்பதை விடு.. உண்மையிலயே உனக்கு வசு வை புடிச்சிருக்கா?. அவளை கல்யாணம் பண்ணி உன் பக்கத்துலயே வச்சுக்க தோணுதா? “

“ஹ்ம்ம்ம் யெஸ் யெஸ்..அதே தான் மலர்.. நான் இதுவரைக்கும் திருமணத்தை பத்தியெல்லாம் யோசிச்சதில்லை. அதற்கான வயதும் இது இல்ல. நான் இன்னும் மாஸ்டர் படிச்சு நல்ல ஒரு பொசிசனுக்கு வரணும்..

ஆனால் அப்படி ஒரு பொசிசினுக்கு வந்த பிறகு என் பெர்சனல் சைட் பார்த்தால் எனக்கு துணைவியா எண்ணி பார்த்தால் வசு தான் முன்னாடி வந்து நிக்கறா..

அப்படி பார்த்தால் அவளை தவிர்த்து வேற ஒருத்தியை என பக்கத்துல நிறுத்தி பார்க்க முடியலை..

சோ... இப்ப தெளிவாய்டுச்சு.. அப்ப வசுதான் என் பொண்டாட்டி.. அந்த சுந்தர் பிச்சைக்கு அஞ்சலி மாதிரி இந்த இனியவனுக்கு அந்த வசுந்தரா தான்... “ என்றான் வெட்க பட்டு சிரித்தவாறு..

“வர்ரே வா.. டேய்.. உனக்கு இப்படி எல்லாம் கூட பேச வருமா !!.. சும்மா பிண்ணிட்ட போ.. உலகத்துல இருக்கிற காதலர்களை எல்லாம் கூட தூக்கி சாப்டிட்ட.. “ என்று சிரித்தாள் மலர்..

“விளையாடாத மலர்.. ஆனால் வசு க்கு என்னை புடிக்குமா? “ என்றான் சிறு கவலையுடன்

“டேய்.. மக்கு முட்டாள் முனியாண்டி.. புடிக்குமா வா.. மேடம் அல்ரெடி இந்த ராஜகுமாரன் காலடியில் விழுந்திட்டாங்க..இப்பதான் என் ரிசப்சன் ஆல்பம் பார்த்தேன்.. ஹப்பா எனக்கே தெரியாம என்னமா பிலிம் ஓட்டி இருக்கீங்க இரண்டு பேரும்

பக்கத்துல நிக்கறது என்ன? ஓர கண்ணால பார்க்கறது என்ன? நடுவுல உன் கையெல்லாம் கூட புடிச்சுகிட்டா போல...

டேய்.. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.. அன்னைக்கு நடந்தது எங்களோட ரிசப்சன் ஆ? .. இல்ல உங்க இரண்டு பேருக்குமா ?? “ என்றாள் கண் சிமிட்டி குறும்பாக சிரித்தவாறு 




“ஐயயோ.. அப்படி எல்லாம் எதுவும் இல்ல டீ.. நீ வேற. அப்பாகிட்ட எதுவும் போட்டு கொடுத்துடாத.. அந்த வாத்தி என் தோள உரிச்சிடுவார்..நான் ஒதுங்கி தான் இருந்தேன்..அவ தான் என் கிட்ட வந்து ஒட்டி நின்னுகிட்டா.. மத்த படி நீ பில்டப் பண்ற அளவுக்கெல்லாம் ஒன்னும் இல்லை... “

“ஓ.. ஒன்னும் இல்லைனு வருத்தமா வேற இருக்கா? .. டேய்.. நீ என் தம்பியா இருந்தாலும் வசு எங்க வீட்டு பொண்ணு..நான் எங்க வீட்டு பொண்ணுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவேன்..ஏதாவது அத்து மீறின அவ்வளவுதான்.. நினைப்புல வச்சுக்க...”

“ஹீ ஹீ ஹீ சரி சொர்ணாக்கா... நீதான் இந்த விசயத்துல எனக்கு ஹெல்ப் பண்ணனும்.. ஆமா நீ இப்ப எதுக்கு இந்த மேட்டரை இழுத்த? “ என்றான் அவள் ஏன் வசுவை பற்றி கேட்டாள் என புரியாமல்..

“ஹ்ம்ம்ம் உன் ஆள் உன் மேல ஓவர் லவ்ஸ் போல..உனக்கு வந்த அதே நோய்தான் அவளுக்கும் வந்திருக்கும் போல..

அதான் டா.. புக் ஐ திறந்தா உன் ஞாபகமா வந்திருக்கும்.. எக்சாம் லயும் உன்னையே நினைச்சுகிட்டு மார்க் ல கோட்டை விடறா.. “ என்றாள் மலர்

“அச்சோ... அப்படி எதுவும் ஆகக் கூடாதுனு தான் நான் என் மனசைசை அவளிடம் திறந்து காட்டவில்லை.. இந்த வயதில் அவள் டிஸ்டர்ப் ஆகக் கூடாதுனு தான் நான் விலகி இருந்தேன்.. அப்புறம் எப்படி?? “ என்றான் கவலையாக

“ஹ்ம்ம்ம் விஞ்ஞானி.. சில நேரம் மனசுக்குள்ளயே போட்டு மூடி வைப்பதுதான் தப்பாகி போகும்..இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோ னு நாமலே உள்ள பட்டி மன்றம் நடத்துவதற்கு நேரடியா பேசி தெளிவு படுத்திகிட்டா எல்லாம் முடிஞ்சு போய்டும்..

மனசும் நல்லா தெளிவாய்டும்.. அதை விட்டு மூடி மூடி வைத்தால்தான் இந்த மாதிரி சைட் எபக்ட் வர்றது.. படிப்புல , வேலைல கவனம் செலுத்த முடியாது , ஓபனா பேசிட்டா அப்பயே முடிஞ்சி போய்டும்... “

“ஓ.. அப்ப நான் வசுகிட்ட பேசட்டுமா? “

“ஹ்ம்ம்ம் இரு முதல்ல நான் பேசி என்ன மேட்டர்னு கேட்டுக்கறேன்.. அதுக்கு பிறகு நீ பேசு. அவளுக்கு உன் மேல லவ் னா அவளுக்கு நம்பிக்கை கொடுக்கிற மாதிரி பேசு.. அது உறுதியாய்டுச்சுனாவே மனம் தெளிவாகிடும்.. அப்புறம் மற்ற வேலையில் கவனம் செலுத்த முடியும்.. “

“ஹ்ம்ம் சரி மலர்.. அப்புறம் வந்து.. வீட்ல மாமா, அத்தை, பெரிய மாமா எல்லாரும் என்னை ஏத்துப்பாங்க தான.. வசுவை எனக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கறதுல எந்த குழப்பமும் வராது தான. “ என்றான் ஆர்வமாக

“ஹா ஹா ஹா அது நீ எனக்கு கொடுக்கிற கமிசனை பொறுத்து.. “ என்று கண் சிமிட்டினாள்..

“கமிசனா? உனக்கு இல்லாததா? உன் பையனுக்கு என் பொண்ணை கொடுக்கறேன்.. போதுமா? “ என்றான் சிரித்தவாறு...

“அடப்பாவி... இன்னும் LKG ஏ பாஸ் ஆகலை.. அதுக்குள்ள வேலைக்கு போய் முதல் மாசம் சம்பளத்தை எதிர் பார்க்கிற மாதிரி பயங்கர ஸ்பீடா இருக்க... கொஞ்சம் அடக்கி வாசி ப்ரதர்... “ என்று சீண்டினாள்..

“ஹீ ஹீ ஹீ... “ என்று அசடு வழிந்தவன்

“ஆனாலும் நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லலையே.” என்று அவன் கேட்டதை திருப்பி கேட்டான்..

“டேய்.. அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை வராது.. அத்தை மாமாவுக்கு உன்னை ரொம்ப புடிக்கும்.. இந்த ஜோ வேற இப்பவே வசுவை மருமகளே னு கூப்பிட்டு உருகறாங்க.. அதனால் எல்லாருக்கும் ஓகே வா தான் இருக்கும்..

ஆனால் இப்ப வசுவோட படிப்புதான் முக்கியம்.. அவளை பழைய படி கொண்டு வர்றது உன் கையிலதான் இருக்கு.. அதனால தினமும் அவளுக்கு போன் பண்ணி நாலு வார்த்தை பேசு.. அவள் படிப்பை பற்றி மட்டும் தான்..

உன் குரலை கேட்டாலே அவளுக்கு எனர்ஜி வந்திடும்னு நினைக்கிறேன்.. சரி இரு.. நான் நைட் சாப்ட்டிட்டு வசு ரூம் க்கு போய்ட்டு அப்புறம் உனக்கு கால் பண்றேன்.. டேக் கேர். பை டா.. “ என்று போனை அணைத்தாள்..

இரவு உணவிற்கு கீழ செல்ல, வசுவும் இறங்கி வந்தாள்..

“ஹாய் அண்ணி.. “ என்று சிரித்த முகமாக வந்தவளை ஆழ்ந்து பார்த்தால் அவள் உள்ளே எதையோ போட்டு புழுங்குவது நன்றாகவே தெரிந்தது..

மலர் அவளை மீண்டும் ஆழ்ந்து பார்க்க அவள் பார்வையை எதிர் கொள்ள முடியாமல் தலையை குனிந்து கொண்டாள் வசு..

மலரும் அங்கு வைத்து எதுவும் கேட்காமல் வழக்கமாக கதை அடித்த படியே சாப்பிட்டாள்..

பின் வசு மேல சென்று விட, மலர் பாலை காய்ச்சி மீனாட்சி, மற்றும் சுந்தர் க்கு கொடுத்தவள் ஒரு டம்ளரை எடுத்து கொண்டு வசுவின் அறைக்கு சென்றாள்..

அங்கு வசு புத்தகத்தை விரித்து வைத்து கொண்டு எங்கயோ பார்த்து கொண்டிருந்தாள்.

“ஜெகன் சார் சொல்வது சரியாதான் இருக்கு..இப்படி சின்சியரா படிக்கிறானு விட்டா, இவ வேற எங்கயோ இல்ல பார்த்துகிட்டு இருக்கா... இதுக்குத்தான் அடிக்கடி எட்டி பார்க்கணும் ங்கிறது.. “

என்று எண்ணிக் கொண்ட மலர் வசுந்தரா அருகில் சென்றவள் வசு என அழைக்க திடுக்கிட்டு விழித்து திரும்பினாள் வசு

“ஹே.. நான்தான்.. எதுக்கு இப்படி ஷாக் ஆகிற.. இந்தா இந்த பாலை குடி. “ என்றவாறு பால் டம்ளரை கொடுத்தாள் மலர்..

“தேங்க்ஸ் அண்ணி.. “ என்றவள் அதை வாங்கி பருகியவள் மீண்டும் அவளிடம் கொடுத்தாள்..

அதற்குள் மலர் கட்டிலில் அமர்ந்து கொண்டு வசுந்தரா படிப்பை பற்றி விசாரித்தாள்..

உடனே வசுவின் முகம் இருண்டு விட்டது..

“என்னாச்சு வசு.? உன் மார்க் குறைஞ்சிடுச்சாம். எனி ப்ராப்ளம்? “ என்றாள் அக்கறையாக

உடனே தன் முகத்தை கைகளில் பொத்தி கொண்டு அழ ஆரம்பித்தாள் வசு..அதை கண்டு பதறிய மலர் எழுந்து அவள் அருகில் சென்றவள் அவளை தன் மார்போடு சேர்த்து அணைத்து கொண்டவள் அவள் முதுகை ஆதரவாக தட்டி கொடுத்தாள்...

அவளை சிறிது நேரம் அழ விட்டாள். மலரின் இடுப்பை கட்டி கொண்டு ஓரளவுக்கு அழுது முடித்தவள் கர்சீப்பால் மூக்கை உறிஞ்சினாள் வசு..

மலர் எதுவும் கேட்காமல் அவள் முகத்தையே பார்க்க, வசுக்கு என்ன செய்வதென்று புரியாமல்

“ஆமாம். அண்ணி.. ரொம்ப குறஞ்சிடுச்சு.. என்னால டெஸ்ட் ல சரியா பெர்பாம் பண்ண முடியலை.. “ என்றாள் வேதனையுடன்

“ஏன் டா.. நீதான் நல்ல டேலன்டட் ஆச்சே.. ஏன் சரியா பண்ண முடியலை.. சப்ஜெக்ட் ரொம்ப டப்பா இருக்கா? இந்த எக்ஸாம் ரொம்ப கஷ்டமா தான்  இருக்கும்..

நானும் ட்ரை பண்ணி என்னால க்ளியர் பண்ண முடியல்.. அப்படி எதுவும் இருந்தால் நீ அதை விட்டுட்டு வேற எக்சாம் க்கு படி.. இங்கயே நிறைய இன்ஜினியரிங் காலேஜ் இருக்கு... “

“இல்ல அண்ணி.. எனக்கு ஐஐடி க்குதான் போகணும்...அது தான் என் ட்ரீம்.. “

“ஹ்ம்ம் அப்ப ட்ரீம் ல போகஸ்ட் ஆ இருந்தால் கண்டிப்பா அச்சீவ் பண்ணிடலாமே.. அப்புறம் ஏன்டா கஷ்டம்.. “ என்றாள் வாஞ்சையுடன் அவள் தலையை தடவியவாறு..

“ஹ்ம்ம் போகஸ் பண்ண முடியாதது தான் ப்ராப்ளம் அண்ணி.. என்னால கான்சன்ரேட் பண்ண முடியலை.. “

“ஏன் டா? “

“ஏன் னா? வந்து... “ என்று ஏதோ சொல்ல வந்து பாதியில் நிறுத்தி கொண்டாள்..

“ஹ்ம்ம் சொல்லு வசு.. நீயும் நானும் பிரண்டாதான பழகறோம்.. “ என்று தன் தம்பியிடம் சொன்ன அதே டயலாக் ஐ திருப்பியும் சொன்னாள் வசுக்காக...

“என்னை தப்பா எடுத்துக்காதிங்க அண்ணி.. ஆனால் எனக்கே நான் செய்யறது நினைச்சு கில்ட்டியா இருக்கு.. “ என்று முகத்தை புதைத்து கொண்டாள்..

“என்ன விசயம் னு சொல்லுடா.. நீயே அது தப்புனு பீல் பண்ணினால் அப்புறம் அதை தொடரலாமா ? .. சரி சொல்லு .. ஏன் உன்னால சரியா படிக்க முடியலை..” என்று மலர் மீண்டும் கேட்டு வசுவின் வாயால் அவள் மனதில் இருப்பதை வரவழைக்க முயன்றாள்...

அவள் இரண்டு மூன்று முறை விடாமல் அவள் பிரச்சனை பற்றி கேட்க வசுவுக்கும் வேற வழி இல்லாமல் மெல்ல வாயை திறந்தாள்

“வந்து .நான் ஒருத்தரை லவ் பண்றேன் அண்ணி... “ என்றாள் தயக்கத்துடன் தன் அண்ணியை பார்த்து..

“சோ வாட்? “ என்றாள் மலர் கூலாக..

தான் சொன்னதை கேட்டு தன் அண்ணி கோபப் படுவாள் ஆத்திரபடுவாள் அட்லீஸ்ட் திட்டுவாள் என எதிர் பார்த்தவளுக்கு மாறாக மலர் கூலாக பதில் சொல்ல திகைத்து போனாள் வசு..

“வந்து... அண்ணி.. லவ் பண்றது தப்பில்லையா? “ என்றாள் தயக்கதுடன்..

“ஹா ஹா ஹா லவ் பண்றது தப்பு இல்லைடா.. இந்த உலகத்துல எல்லாருமே ஒவ்வொன்னை லவ் பண்ணிகிட்டுதான் இருக்கோம்.. ஆனால் நீ சொல்ற அந்த லவ்.. அது எந்த வயதில பண்றோம்னு பொறுத்து தான் அது சரியா தப்பானு இருக்கு..”

“ஹ்ம்ம் புரியலையே.. அப்ப நான் லவ் பண்ணலாமா ? கூடாதா? “

“ஹ்ம்ம் பண்ணலாம்.. ஆனால் அதுக்காக இந்த வயதிற்கு உரிய கடமையான படிப்பை கோட்டை விடக் கூடாது.. அது தான் தப்பு.. லவ் பண்றவங்க எல்லாம் அதையே நினைச்சு கிட்டு தங்கள் வேலையில் கவனம் இல்லாமல் இருக்கணும்னு அவசியம் இல்லையே..

நீ லவ் பண்ணாலும் அது ஒரு மூலையில் இருக்கணும்.. உன் படிப்பை அது பாதிக்க கூடாது.. படிப்புல தான் உன் முழு கவனமும் இருக்கணும்.. நீ இந்த வயதில் லவ் பண்றதை முழு நேரமாக்கி படிப்பை பகுதியாக்கினாதான் தப்பு... புரியுதா டா?” என்றாள் மெல்லிய குரலில் அவள் மனதில் படுமாறு.

“ஹ்ம்ம் அறிவுக்கு புரியுது அண்ணி.. ஆனால் மனசுக்கு புரிய மாட்டேங்குது.. எப்பயும் அதையே சுத்தி சுத்தி வருது... “

“ஹ்ம்ம்ம் உன் காதலன் போட்டோவை எடுத்து அடிக்கடி பார்க்க சொல்லுது..அப்படி பார்க்கறப்ப குறுகுறுனு இருக்குது..உடனே அவனை பார்க்கணும் போல இருக்கும்.. புத்தகத்தை திறந்து வச்சா அவன் முகமே தெரியுது.. கண்ணை மூடினாலும் அதே முகமே வந்து இம்சிக்குது.. என்ன எல்லாம் கரெக்ட் ஆ? “ என்றாள் மலர் குறும்பாக கண் சிமிட்டி சிரித்தவாறு

“வாவ்.. சூப்பர்.. எப்படி அண்ணி? .. அப்படியே சொல்றீங்க.. “ என்று சிரித்தாள் வசு வும் இயல்பாகி..

“ஹீ ஹீ ஹீ இப்பதான் ஒருத்தன் கிட்ட அவனோட லவ் ஸ்டோரியை கேட்டேன்.. அதுல வந்த டயலாக்தான்.. “ என்று சிரித்தாள் மலர்..

“ஆங்.. “ என்று முழித்தாள் வசுந்தரா..

அவள் கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்து கொண்ட மலர்

“வசு.. நான் நேரடியாகவே கேட்கறேன்.. நீ இனியனை லவ் பண்றியா? “ என்றாள் வசுந்தராவின் முகத்தை பார்த்தவாறு

அதை கேட்டு திடுக்கிட்ட வசு அமைதியாக தலை குனிந்த படி இருக்க

“சொல்லு வசு . உன் மனசுல இருக்கிறத ஓபனா சொல். அப்பதான் உன் பிரச்சனை என்னனு புரிஞ்சுகிட்டு அதை சரி பண்ண முடியும்.. “ என்று எடுத்து கொடுத்தாள்..

“ஹ்ம்ம்ம் அப்படித்தான் தோணுது அண்ணி.. அவரை பார்த்து கொண்டே இருக்கணும். அவர் கையை புடிச்சுகிட்டே லைப் புல்லா போகணும்.. “

“ஹ்ம்ம்ம் சரி.. இதுல எல்லாம் தப்பு இல்லையே.. அதுக்கும் நீ படிக்கிறதுக்கும் ஏன் லிங் பண்ற.. உன் படிப்புல கவனம் செலுத்த வேண்டியது தான..”

“நானும் அதைதான் முயற்சி பண்றேன் அண்ணி.. ஆனால் நீங்க சொன்ன மாதிரி புக் ஐ திறந்தால் அவர் முகம்தான் வருது.. அதுக்கு மேல நான் பண்றது சரியா? தப்பா ? . அவருக்கும் என்னை மாதிரியே பீல் இருக்குமா? அவருக்கு என்னை புடிக்குமா? இல்லை என்னை ஏத்துக்க மாட்டாரா ? என்று பல குழப்பங்கள் மண்டையை குடையும்..

“ஹ்ம்ம் உனக்கு உன் காதலை விட குழப்பம் தான் உன்னை டவுன் ஆக்குது.. அப்படி இருக்கிறப்ப மனசுக்குள்ளயே போட்டு பூச்சி வச்சுக்காதா.. அத யார் கிட்டயாவது சொல்லி அதுக்கு என்ன சொல்யூசன் னு பார்க்கணும்.. “

“அது எப்படி இந்த வயசுல லவ் பண்றேனு சொல்றது அண்ணி? “

“லவ் பண்றதுக்கு வயது எதுவும் இல்ல வசு .. ஆனால் இந்த வயதில் வர்ற காதல் நிலையா இருக்காது..

சில பேர்க்கு ஒரு இன்பேக்சுவேசனா இருக்கும்...அதை காதல் னு தப்பா அர்த்தம் எடுத்துக்குவாங்க... ஒரு வருசம் பார்க்காம இருந்தாலே அது மறைஞ்சு போய்டும்.. சில பேர் டீப் ஆ போவாங்க.. ஒவ்வொருத்தர் மனதை பொறுத்தது..

நான் முன்பு சொன்ன மாதிரி, உனக்குள் இருப்பது காதல் னு பீல் ஆச்சுனா அதை என்ஜாய் பண்ணு.. ஆனால் அதை விட இந்த வயசுல படிப்புதான் முக்கியம்..அதுவும் பன்னிரண்டாம் வகுப்பு என்பது மிக மிக முக்கியம்..

இந்த வருடம்தான் உன்னுடைய கேரியரை நிர்ணயிப்பது.. என்னதான் நீ டேலன்டட் ஆ இருந்தாலும் நீ வாங்கற மார்க் ஐ வச்சுதான் நீ எந்த துறைக்கு போகலாம் என முடிவு செய்ய படும்..

அதனால் இந்த காதலை ஒரு மூலையில் போட்டு மூடி வச்சுட்டு உன் படிப்புல கவனம் செலுத்து.. என்ன புரிஞ்சுதா? “

“ஹ்ம்ம்ம் “ என்று தலையை ஆட்டினாள் வசு.. ஆனாலும் அவள் முகம் இன்னும் தெளிவாகாமல் இருப்பதை கண்ட மலர்

“ஐ திங் இன்னும் உனக்கு குழப்பம் தீரலை.. சரி.. இப்ப உனக்கு இனியனும்   உன்னை லவ் பண்றானா னு தெரியணும்.. அவ்வளவுதான.. அது தெரிஞ்சு கிட்டா அப்ப படிப்புல கான்சென்ட்ரேட் பண்ணு வ இல்ல? “ என்றாள் தன் புருவங்களை உயர்த்தி குறும்பாக சிரித்தவாறு

“யெஸ் யெஸ் அண்ணி.. அவர் எனக்குத் தான் அப்படீனு முடிவாய்டுச்சுனா அப்புறம் எதுக்கு நான் குழம்ப போறேன். கண்டிப்பா நல்லா படிப்பேன்.. “ என்றாள் சிறு வெட்கத்துடன்..

“ம்ம் வெரி குட்.. “ என்றவள் தன் பின்னால் வைத்திருந்த அலைபேசியை எடுத்து

“ஷ்ஷ் அப்பா... இனியா .. கேட்டுகிட்டியா.. நீ எங்க வசுகுட்டியை லவ் பண்றேனு உத்திரவாதம் கொடுத்தால் எங்க வசுகுட்டி பர்ஸ்ட் ரேங்க் வந்திடுவா.. என்ன மாப்ள சார் சொல்றீங்க ?.. “ என்றாள்

மலர் வசுவின் அறைக்கு உள்ளே வரும்பொழுதே தன் அலைபேசியை இனியவனுக்கு அழைத்து வசு மனம் திறந்து பேசுவதையெல்லாம் அவனையும் கேட்க வைத்தாள்..

வசு சொல்லியதை எல்லாம் அவனுமே கேட்டு கொண்டிருந்தான்.. அதை கேட்டதும் இன்னும் உருகி போனான் இனியவன்.. அவள் தன் மேல் வைத்திருக்கும் காதல் புரிந்தது..

இந்த உலகத்தையே வென்று விட்டதை போல துள்ளி குதித்தான் இனியவன்.

இனியவன் தான் பேசியதை எல்லாம் அவனும் கேட்டு விட்டான் என அறிந்த வசு கன்னம் சிவக்க

“ஐயோ.. அண்ணி... இவ்வளவு நேரம் அவரும் லைன்லயா இருந்தாங்க ? .. நான் பாட்டுக்கு ஏதேதோ உளறினேனே .. “ என்று சிணுங்கினாள்.

“ஹா ஹா ஹா கூல் வசு குட்டி... நீ உளறின மாதிரி தான் அவனும் உளறினான். அதையும் ரெக்கார்ட் பண்ணி வச்சிருக்கேன்.. ஒரு நாள் உனக்கு போட்டு காமிக்கறேன்...இப்ப அவன் சொல்றதை கேட்டுட்டு உன் குழப்பத்தையெல்லாம் தெளிவு படுத்திக்கோ..

வேணா நான் இங்கயே இருக்கேன்.. நீ போய் பால்கனியில் நின்னு பேசிட்டு சீக்கிரம் வா.. டோன்ட் வேஸ்ட் யுவர் டைம். எக்சாம்க்கு பிரிப்பேர் பண்ணனும்.. 5 நிமிசம் தான் டைம்..சீக்கிரம் போ.. “ என்ற படி எழுந்து வசுவின் கையில் தன் அலைபேசியை கொடுத்து பால்கனிக்கு தள்ளினாள் மலர்..

மலரின் மனதுக்குள் பெரும் நிம்மதி வந்து சேர்ந்தது..

“நல்ல வேளை.. பெரிய பிரச்சனை எதுவும் இல்லை.. வசு இனிமேல் நன்றாக படிப்பாள்.. “ என்று எண்ணி சிரித்து கொண்டாள்..

அதே நேரம் மலர் பேசியதை எல்லாம் அறைக்கு வெளியில் நின்று கேட்டு கொண்டிருந்த வசிக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது..

காலையில் சீக்கிரம் கிளம்பி சென்றவன் அப்பொழுதுதான் வீட்டிற்கு திரும்பி வந்திருந்தான்.. வந்தவன் நேராக அங்கயே ரெப்ரெஸ் ஆகி, இரவு உணவை வேகமாக முடித்து தன் மனைவியை காண தன் அறைக்கு ஆவலாக வந்தான்..

தன் அறைக்கு அருகில் வரவும் தன் மனைவியின் குரல் வசுந்தராவின் அறையில் இருந்து வெளி வருவதை கேட்டவன் அவளை அழைத்து கொண்டு தங்கள் அறைக்கு செல்ல எண்ணி அங்கு வந்தான்...

அருகில் வந்தவன் மலர் வசுந்தராவிடம் மார்க் குறைந்ததை பற்றி விசாரித்து கொண்டிருக்க, அதற்கு வசு அழவும் திடுக்கிட்டவன் அங்கயே நின்று விட்டான்..

மலர் அவளிடம் பொறுமையாக பேசி அவள் மனதில் இருப்பதை வெளி கொண்டு வந்ததையும் கூடவே அவள் காதலை பற்றி பேசவும் ஆச்சர்ய பட்டு அப்படியே நின்று கொண்டான்..

அவன் தங்கை பேசியதும் அதுக்கு மலர் எப்படி அவளை ட்ரீட் பண்ணினாள் என்பதையும் கண்டு வாயடைத்து நின்றான்..

உண்மையிலயே மலரை நினைத்து பெருமையாக இருந்தது..இந்த பிரச்சனையை அவன் பெற்றோர் காதுக்கு கூட எடுத்து செல்லாமல் அவளே சரி பண்ணி விட்டாளே...

தங்கள் குடும்பத்தின் மீது எவ்வளவு பாசமாக இருக்கிறாள். என தெரிய ரொம்பவுமே மகிழ்ந்து போனான்...

ஆனால் அவன் மகிழ்ச்சியின் ஆயுட்காலம் சில நிமிடங்கள் தான் என அறிந்திருக்கவில்லை

உள்ளே வசுந்தரா மலரின் அலைபேசியை வாங்கி கொண்டு பால்கனிக்கு சென்றதும் என்ன பேசுவது என தெரியாமல் முழித்து கொண்டு நிற்க மறுமுனையில் இருந்தவனோ

“ஹாய் பொண்டாட்டி.. எப்படி இருக்க? “ என்றான் உல்லாசமாக சிரித்தவாறு..

அவன் எடுத்த உடனே தன்னை பொண்டாட்டி என்கவும் திகைத்தவள் கண்களை அகல விரித்தாள்..

“ஹோய்.. உன் முட்டை கண்ணை இன்னும் பெரிசா விரிக்காத.. அப்புறம் நான் பாம்பே ல இருந்தே நேரா உன் கண்ணுக்குள்ள விழுந்திட போறேன்.. “ என்று சிரித்தான்..

உடனே தன்னை சுதாரித்து கொண்டவள் சுற்றிலும் தேடி பார்க்க

“ஹா ஹா ஹா .. என்ன என்னை தேடறயா? நான் தான் உன மனசுக்குள்ள இருக்கேனே.. அங்க பார்... அப்பதான் நான் என்ன பண்றேனு உனக்கு தெரியும்..

நீ என் மனசுல இருக்கிறதால தான் நீ அங்க என்ன பண்றனு எனக்கு இங்க தெரியுது “ என்று சிரித்தான்...

“சாரி... வந்து.. அண்ணி ..உளறி.. “ என்று என்ன பேச என தெரியாமல் தடுமாறினாள் வசுந்தரா..

“ஹே வசு.. ஈஸி.. ரொம்ப திக்காத.. அப்புறம் என் பொண்டாட்டி திக்கு வாய் பொண்டாட்டி னு சொல்லிடுவாங்க.. “ என சிரித்தவன்

“சரி சரி.. முறைக்காத.. இந்த மலர் வேற 5 நிமிசம் தான் கொடுத்திருக்கா.. அதுக்கு மேல பேசினா அப்புறம் மலர் அக்கா சொர்ணாக்கா ஆகிடுவா.. அதுக்குள்ள சொல்ல வர்றதை சொல்லிடறேன்..

ஐ லவ் யூ பொண்டாட்டி.. எனக்கு பொண்டாட்டினா அது நீதான் .. சுந்தர் பிச்சைக்கு அஞ்சலி மாதிரி இந்த இனியவனுக்கு வசுந்தரா.. அவ்வளவுதான்..

ஓகே.. நீ உன் மனசை போட்டு குழப்பிக்காம ஒழுங்கா படி.. தினமும் 10 நிமிடம் போன் பண்ணுவேன்.. உன் பாடத்துல இருக்கிற டவுட் எல்லாம் கேள்.. நோட் டவுன்.. ஒன்லி அகடமிக் சப்ஜெக்ட்.. நம்ம பெர்சனல் லவ் சப்ஜெக்ட் ல இருக்கிற டவுட் எல்லாம் நீ JEE Advance எக்சாம் முடிச்ச பிறகு வச்சுக்கலாம்..

என்ன டீலா நோ டீலா? “ என்றான் குறும்பாக சிரித்தவாறு..

எப்பவும் பேசாமல் அமைதியாக இருப்பவன் இவ்வளவு பேசவும் மூர்ச்சையாகி விழாமல் இருக்க அருகில் இருந்த பால்கனி கம்பியை பிடித்து கொண்டாள் வசுந்தரா..

“ஹா ஹா ஹா என்ன மயக்கம் வருதா டார்லிங்? ... இனிமேல் இப்படிதான்.. ஐயா லவ் பண்ண ஆரம்பிச்சிட்டார் இல்லை..இனி நல்லா பேசவும் கத்துக்கணுமாம்.. சரி. நீ வாயை திறந்து ஏதாவது பேசு..

என்னை உனக்கு பிடிச்சிருக்கா.. “ என்றான் ஆர்வமாக..

வசுந்தரா வோ நாக்கு மேல ஒட்டி கொள்ள, வார்த்தை எதுவும் வெளி வராமல் தந்தி அடித்தது... ரொம்ப முயன்று

“ஹ்ம்ம்ம் .. “ என்றாள் தலையை அசைத்து

“ஹலோ பேபி.. வாயை திறந்து சத்தமா சொல்.. எப்படி சொல்றதுனு தெரியலைனா ஐ லவ் யூ மாமா னு சொல்.. “ என்று சிரித்தான்..

“ஆங்.. அதெல்லாம் சொல்ல மாட்டேன்.. “ என்று சிணுங்கினாள் வசு..

“பார்டா. இப்பதான் யாரோ என்னை லவ் பண்றதா சொல்லி உருகி பேசுனாங்க.. அதுக்குள்ள இப்ப பல்டி அடிக்கிறாங்க.. “

“நான் ஒன்னும் லவ் பண்ணலை.. புக் ஐ திறந்தால் உங்க முகம் தான் தெரியுதுனு சொன்னேன்.. அதுக்காக எல்லாம் லவ் னு அர்த்தம் இல்லை.. “ என்றாள் அவளும்..

“ஹா ஹா ஹா நம்பிட்டேன்.. சரி சரி.. உன் வாயால் அதை எப்படி வர வைக்கிறதுனு தெரியும்.. இனிமேல் உன் படிப்புல கான்சென்ட்ரேட் பண்ண முடியும் இல்ல...

ஹார்ட் வொர்க் பண்ணு.. வேற எந்த திங்கிங் இல்லாம.. உனக்கு அப்படி எதுவும் டிஸ்டர்ப்ட் ஆ இருந்தால் உடனே எனக்கு கால் பண்ணு.. சில் பண்ணிடலாம். அப்புறம் உன்னால் படிக்க முடியும்.. “

“ட்ரை யுவர் லெவல் பெஸ்ட்..உன்னால முடியலைனா ஐஐடி தான் போகணும்னு இல்லை.. உனக்கு எது வருதோ அதுல சேர்ந்துக்கலாம்.. “ என்று அவள் தன்மானத்தை கொஞ்சம் சீண்டினான்..

“ஹலோ.. நான் ஒன்னும் மக்கு இல்லை.. உங்க பொண்டாட்டியும் ஐஐடி யனாகத் தான் இருப்பா.. இனிமேல் பாருங்க..எல்லா டெஸ்ட் லயும் பர்ஸ்ட் வாங்கி காமிக்கறேன். “ என்று முகத்தை நொடித்தாள் வசு..

“ஹ்ம்ம் தட்ஸ் குட்.. இதே பயரோட பிரிப்பேர் பண்ணு.. அப்பப்ப இந்த மாமாவுக்கும் கொஞ்சம் கருணை காட்டு.. லவ் யூ பொண்டாட்டி.. “ என்று சிரித்தான்..

“ஹ்ம்ம்ம். ரொம்ப தேங்க்ஸ் மாமா.. இப்ப தெளிவாகிட்டேன்.. அப்புறம் வச்சுடறேன்..டேக் கேர்.. “ என்று பேசி முடித்தாள்... அதே நேரம் மலரும் அங்கே வந்தாள்..

5 நிமிசம் ஓவர் என கை காட்ட,

“உங்களை பத்தி தெரிஞ்சே உங்க தம்பியும் பயந்து கிட்டு போனை வச்சுட்டார் சொர்ணாக்கா.. “ என்று சிரித்தவள் நாக்கை கடித்து கொண்டாள்.

“என்னது சொர்ணாக்காவ?? “ என்று இடுப்பில் கை வைத்து முறைத்தாள் மலர்

“ஹீ ஹீ ஹீ சாரி அண்ணி. உங்க தம்பிதான் அப்படி சொன்னது. “ என்று சிரித்தாள்..

“டேய் ஒட்டடகுச்சி.. அடுத்த தரம் மாட்டறப்ப ரியல் சொர்ணாக்காவை காட்டறேன்.. “ என்று சிரித்து கொண்டே தன் அலைபேசியை வாங்கி அதன் அழைப்பை அணைத்தாள்..

அடுத்த நொடி அவளை இறுக்கி அணைத்திருந்தாள் வசு..

“தேங்க்யூ சோ மச் அண்ணி.. இப்பதான் மனசு லேசா இருக்கு.. நான் பாட்டுக்கு என்னையை குழப்பி என் ப்யூச்சர் ம் ஸ்பாய்ல் ஆய்ருக்கும்.. சரியான நேரத்துல என்னை காப்பாத்திட்டிங்க.. “ என்றாள் தழுதழுத்தவாறு.

“அடடா.. நோ சென்டிமென்ட்ஸ் வசு குட்டி... நீ இந்த வீட்டு ராஜகுமாரி எப்பவும் சிரிச்சுகிட்டே இருக்கணும்.. நீ நினைக்கிறது எல்லாம் சக்ஸஸ் ஆகணும்.. சரியா.. அதனால் இனிமேல் நல்லா படி. “என்று அவள் நெற்றியில் முத்தமிட்டாள்..

தன் அறைக்கு சென்று இரவு உடைக்கு மாறியவன் மலர் இன்னும் தங்கள் அறைக்கு வராமல் இருக்க, திரும்பி வந்தவன் மலரின் இந்த டயலாக் ஐ யும் கேட்டு உருகி நின்றான் வசி...

அவளை அப்படியே இழுத்து அணைத்து கொள்ள துடித்தது அவன் உள்ளே..ஆனால் அது எல்லாம் வசு அடுத்த கேள்வியை கேட்கும் வரைதான்..

“ஹ்ம்ம் சரி அண்ணி.. நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டிங்களே.. “ என்றாள் வசு தயக்கத்துடன்

“ஹ்ம்ம் சொல்லுடா? என்கிட்ட என்ன தயக்கம்? “ என்றாள் மலர் அவளை பார்த்து சிரித்தவாறு..

“வந்து... லவ் ஐ பற்றி இவ்வளவு டீப் ஆ சொன்னீங்களே.. நீங்க யாரையாவது லவ் பண்ணீங்களா? பண்றீங்களா ? “ என்றாள் குறும்பாக சிரித்தவாறு ..

அதை கேட்டு வசியும் அவள் என்ன சொல்ல போகிறாள் என்று தெரிந்து கொள்ள ஆர்வமானான்..

அவள் எப்படியும் தன் பெயரைத்தான் சொல்ல போகிறாள் என்று ஆர்வமாக எதிர்பார்த்தவனுக்கு அவள் சொன்ன பதில் அவன் தலையில் இடியை இறக்கியது...

அவன் இதயமே ஒரு நொடி துடிக்க மறந்து விட்டது..

அதுவரை சொர்க்கமாக இருந்த அவன் வாழ்க்கை அவள் சொன்ன பதிலால் அந்த சொர்க்கம் இடிந்து விழுந்து நரகமாக மாறி போனது.. சொர்க்கத்தில் சுத்தி வந்தவனை பிடித்து கீழ உருட்டி விட்டதை போல பொத்தென்று தரையில் வந்து விழுந்ததை போல இருந்தது...

இடிந்த மனதுடன் மெல்ல சுதாரித்தவன் தன் அறைக்கு திரும்பியவன் கட்டிலில் பொத்தென்று விழுந்தான்...

அவன் இதயத்தை யாரோ சம்மட்டியால் அடித்ததை போல அவள் சொன்ன பதிலே திரும்ப திரும்ப ஒலித்தது..சில நொடிகளில் தலை வலிக்க ஆரம்பிக்க, எழுந்து அமர்ந்தவன் தன் தலையை இரு கையால் தாங்கி பிடித்துக் கொண்டு தலையை கவிழ்த்து கொண்டு சில நொடிகள் அமர்ந்து இருந்தான்...

அப்பவும் அந்த வலி விலகாமல் இன்னும் தீவிரமடைய, தலைவலி மாத்திரை போட்டால்தான் சரியாகும் என்று எண்ணி எழுந்தவன் தன் அறையில் இருந்த டேபிலில் இருந்த ட்ராயரை இழுத்தான்...

பொதுவாக அவசரத்திற்கு உதவும் எல்லாம் மருந்துகளும் மாத்திரைகளும் ஒரு பெட்டியில் போட்டு ஒவ்வொருவர் அறையிலும் வைத்திருப்பான் வசி..

அவன் பெற்றோர்கள் அறையிலும் அவசரத்திற்கு என்று ஒவ்வொன்றையும் தனித்தனியாக உறையில் போட்டு அதன் மேல் எதற்காக சாப்பிட வேண்டும் என்றும் எழுதி வைத்திருந்தான்..

அவசர காலத்தில் அவர்கள் யாரையும் சார்ந்து இருக்க கூடாது என்று அவர்களுக்கு சில முதல் உதவி முறைகளையும் தன் குடும்பத்தார்க்கு சொல்லி கொடுத்திருக்கிறான்..

அதே போல தன் தங்கைக்குமே சில மருந்துகளை விலக்கி இருக்கிறான்.. அவள் அறையிலுமே இந்த மாதிரி மருந்துகள் அடங்கிய பெட்டி இருக்கும்..

பொதுவாக எந்த ஒரு வலிக்கும் மருந்து மாத்திரைகளை எடுத்து கொள்வதை முடிந்த வரை தவிர்க்கவேண்டும்.. படுத்து ஓய்வு எடுத்தாலே இந்த தலைவலி சரியாகிவிடும் என மற்றவர்களுக்கு அறிவுறுத்துபவன் இன்று தனக்கு வந்த தலைவலியை தாங்க முடியாமல் அந்த வலி நிவாரணியை நாடி சென்றான்..

வசி தன் அறையில் இருந்த அந்த மருந்து பெட்டியை எடுத்தவன் அதில் தலைவலிக்கான மாத்திரியை தேட, அதில் புதிதாக ஒரு உறை இருந்ததை கவனித்தான்...அது அவன் வைத்ததாக ஞாபகம் இல்லை...

என்னவாக இருக்கும் என்று அந்த உறையில் இருந்து மாத்திரை அட்டையை வெளியில் எடுத்தான்..அது என்ன மாத்திரை என்று பார்த்தவனுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது..

அந்த மாத்திரையை கண்டவன் இன்னும் பலமாக அதிர்ந்து போனான்..அவனால் அதை நம்பவே முடியவில்லை.. திருப்பி திருப்பி பார்த்தான். எப்படி பார்த்தாலும் அதன் பெயர் அழிந்து விடப் போவதில்லையே...

சில நொடிகள் இந்த உலகமே நின்று விட்டதை போல இருந்தது.. அவன் உடலின் ஒவ்வொரு அனுவும் இயங்க மறுத்து அப்படியே ஸ்தம்பித்து நின்றன..

சில நிமிடங்கள் அப்படியே நின்றிருந்தவன் மெல்ல சுதாரித்து ஒரு வெறித்த பார்வையுடன் அவன் எடுத்த அந்த மருந்துகளுக்கான பெட்டியை உள்ளேயே வைத்து விட்டு மெல்ல தள்ளாடியவாறு கட்டிலை நோக்கி நடந்தான் தான் தேடி வந்த தலைவலி மாத்திரையை கூட எடுக்காமல்...

கட்டிலுக்கு வந்தவன் நடை தளர்ந்து உடலில் உள்ள சக்திகள் எல்லாம் வடிந்து போய்விட்டதை போல இருக்க மீண்டும் பொத்தென்று விழுந்தான்..

சற்றுமுன் தன் காதல் மனைவி சொல்லிய பதிலும் இப்பொழுது அவன் கண்டதையும் தொடர்பு படுத்தி பார்த்தவனுக்கு மனம் கசந்து வழிந்தது...

“என் ஜில்லுவா இப்படி? எப்படி அவளால் இப்படி நடிக்க முடிந்தது? “ என்று எண்ணியவனுக்கு அவளுடன் பழகிய நாட்களில் இருந்து பழசையெல்லாம் நினைவு படுத்தி பார்த்தான்..

ஒரு கட்டத்தில் உண்மை புரிய

“சே.. சரியான வேசக்காரி.. இவளைப் போய் நல்லவனு நம்பி உயிருக்கு உயிரா காதலிக்கிறனே.. இவ்வளவு மோசமானவளா இருப்பானு கொஞ்சம் கூட எதிர்பார்க்கலையே.. “ என்று உள்ளுக்குள் புலம்பினான்..

சிறிது நேரத்தில் மலர் தங்கள் அறையை நோக்கி வரும் அரவம் கேட்கவும், அவன் கை முஷ்டி இறுக, பல்லை கடித்தவன் அவளை பார்க்க பிடிக்காமல் கண்ணை இறுக்கி மூடி கொண்டு தூங்குபவனை போல பாவணை செய்தான் வசீகரன்...

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!