காதோடுதான் நான் பாடுவேன்-43
அத்தியாயம்-43
ஆனால் இந்த விருமாண்டி மறுத்துட்டான்.. அதை கண்டு அம்மா வருத்தமா உட்கார்ந்து இருந்தப்ப தான் அம்மாகிட்ட இருந்த உன் போட்டோவை வாங்கி பார்த்தேன்...
உன்னை பார்த்ததுமே நீ நிகிலனுக்கு பெர்பக்ட் மேட்ச் னு புரிஞ்சுது... அவனுடைய் முரட்டு கேரக்டர்க்கு உன்னை மாதிரி சாப்ட் ஆன ஆள் தான் செட் ஆகும் னு யோசிச்சேன்.. அவனை எப்படி மடக்கி உன்னை கல்யாணம் பண்ணிக்க வைப்பது என்று யோசித்துதான் இந்த கல்யாண நாடகத்தை ஆரம்பித்தது.....
எங்கயும் நீ என்னை பார்த்துட கூடாதுனு தான் ப்ளான் பண்ணி நான் எங்கயும் முன்னால வரலை... பொண்ணு பார்க்க வந்ததில் இருந்து கல்யாண ட்ரெஸ் எடுக்கிற வரைக்கும் நிகிலனைத்தான் முன்னாடி நின்னு செய்ய வச்சேன்...
அதான் உன்கிட்ட போன்ல கூட எதுவும் பேசலை எங்கயும் என்னால எதுவும் தப்பாகிட கூடாதுனு...
நான் போட்ட திட்டபடியே கல்யாணம் அன்னிக்கு நான் காலையிலயே கிளம்பி கனடா போய்ட்டேன்... நான் விரிச்ச வலையில இந்த விருமாண்டியும் மாட்டிகிட்டான்... “ என்றான் மீண்டும் சிரித்தவாறு.....
அதை கேட்டு அதிசயித்த ரமணி,
“ஹ்ம்ம்ம் ஏன்டா ?? உன் அம்மா கிட்டயாவது சொல்லிட்டு போயிருக்கலாம் இல்ல.. பாவம் சிவா உன்னை காணாம எப்படி தவிச்சு போய்ட்டா தெரியுமா .. “என்றார் ரமணி வருத்தமாக ...
“ஹீ ஹீ ஹீ ஆன்ட்டி.. நீங்க இன்னும் உலகம் தெரியாம இருக்கீங்க... இந்த ஐடியாவை கொடுத்ததே இந்த ராஜ மாதா சிவகாமி தேவி தான்... “ என்று கண் சிமிட்டினான்...
அதை கேட்டு அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து நிக்க மது தன் மாமியாரை பார்த்து முறைத்தாள்...
“அத்தை... கூடவே இருந்துகிட்டு இவ்வளவு வேலை செஞ்சிருக்கீங்களா???” என்றாள் செல்லமாக முறைத்தவாறு...
“ஹீ ஹீ ஹீ சாரி மருமகளே... இந்த சாமியாரை என் வழிக்கு கொண்டு வர இதை விட்டா எனக்கு வேற வழி தெரியலை.. அதான் இப்படி ஒரு நாடகம்.. “ என்று சிரித்தார்....
எல்லாரும் அதிர்ச்சியில் இருக்க நிகிலன் மட்டும் சாதாரணமாக அமர்ந்து கொண்டிருக்க, அதை கண்ட ரமணி,
“என்ன டா நிகில் ?? உனக்கு அதிர்ச்சியா இல்லையா ?? .. இதை கேட்டு இந்நேரம் கன் ஐ தூக்கியிருப்ப னு பார்த்தா அமைதியா உட்கார்ந்துகிட்டிருக்க... “ என்றார் சந்தேகமாக....
“ஹா ஹா ஹா தெரியாத, அதிர்ச்சியான விசயம்னா கன் ஐ தூக்கியிருக்கலாம் ரமணி மா... இது தெரிஞ்ச பழைய கதை தான.. அதுக்கு போய் எதுக்கு சாக் ஆகணும்.. “ என்று சிரித்தான் நிகிலன்...
“என்னது ?? உனக்கு முன்னயே தெரியுமா ?? “ என்றனர் அனைவரும் அதிர்ந்து போய்....
“ஹா ஹா ஹா இது எல்லாம் இந்த இரண்டு கூட்டு களவானிங்க சேர்ந்து போட்ட ட்ராமானு எனக்கு முன்னாடியே தெரியும்... “ என்று கண் சிமிட்டினான்....
“அப்புறம் எதுக்குடா ஒன்னும் தெரியாத மாதிரி நடிச்ச ?? “ என்று தன் மகனை முறைத்தார் சிவகாமி....
“ஹீ ஹீ ஹீ ஏன் உங்களுக்கு மட்டும் தான் நடிக்க தெரியுமா?? எனக்கும் கொஞ்சம் நடிக்க தெரியும்னு தான் நானும் என் நடிப்பை காட்டினேன்... “ என்றான் சிரித்தவாறு ...
“ஷப்பா.... உலக மகா நடிப்புடா சாமி.... டேய். நிகிலா... உன்கிட்ட இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை... இதுக்கு போய் நான் பயந்து கிட்டு ஒன்றரை வருடமா தலைமறைவா இருந்திருக்கேன்... சரியான கேடி டா நீ.... “ என்று தன் அண்ணனின் வயிற்றில் செல்லமாக குத்தினான் மகிழன் சிரித்து கொண்டே.....
“ஆமா... எப்படி டா கண்டு பிடிச்ச?? நான் பக்காவா ப்ளான் பண்ணி விசயம் லீக் ஆகாம இல்ல என் ப்ளானை எக்ஷ்க்யூட் பண்ணினேன்... “ என்றான் மகிழன் ஆச்சர்யமாக
“ஹ்ம்ம்ம் நான் ஒரு போலிஸ்காரன் டா.. என்கிட்டயே உன் வேலையை காட்டறியா ?? “ என்று சிரித்து கொண்டே தன் தம்பியின் வயிற்றில் செல்லமாக குத்தினான் நிகிலன்....
“கல்யாணத்துல இருந்து நீ ஓடிப்போனப்போ அடுத்து என்னை யோசிக்க விடாமல் கொண்டு போய் மேடையில் உட்கார வச்சுட்டாங்க... அப்ப என்னால் எதுவும் செய்ய முடியலை....
கல்யாணம் முடிஞ்ச பிறகு, வீட்டிற்கு வந்துட்டு உடனே கிளம்பி மண்டபத்துக்கு வந்து அந்த மண்டபத்துல இருக்கிற சிசிடிவி வழியா யாரெல்லாம் உன்னை பார்க்க வந்தாங்கனு லிஸ்ட் ஐ எடுத்து அதில் கடைசியா உன்னை பார்க்க வந்தவனை புடிச்சு நாலு தட்டு தட்டின உடனே உண்மையை எல்லாம் கக்கிட்டான்..
அப்பதான் தெரிஞ்சுது. இது நீயும் அம்மாவும் போட்ட நாடகம் னு.. அதான் நானும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்கலை...” என்று சிரித்தான்...
“அடப்பாவி.... துரோகி நண்பா... உன்கிட்ட உளறினதை பத்தி என்கிட்ட அவன் மூச்சி விடலயேடா...” என்றான் நிகிலனை பார்த்து...
“ஹ்ம்ம் அவன் மூச்சு விட்டா அவன் மூச்சை நிறுத்திடுவேன் னு சொன்னேன்.... உடனே ஆப் ஆகிட்டான்... “ என்று சிரித்தான் நிகிலன்...
“ஹ்ம்ம் .. எப்படியோ.. மது.. இப்ப புரிஞ்சுதா..?? எல்லாம் உன்னை உன் புருசனோட சேர்த்து வைக்கத்தான்... இனிமேலாவது என்னை திட்டாம இரு.. “ என்றான் மகிழன் பாவமாக...
அவளும் தன் கோபத்தை மறந்து அவனை பார்த்து அழகாக புன்னகைத்தாள்...
“டேய்.. அது என்ன மது னு பெயர் சொல்லி கூப்பிடற.. அண்ணினு மரியாதையா கூப்பிடுடா.. “ என்றார் சிவகாமி தன் இளைய மகனை கண்டித்தவாறு...
“வாட்?? அண்ணியா?? இந்த ஒட்டட குச்சிய எல்லாம் என்னால அண்ணினு மரியாதை கொடுத்து கூப்பிட முடியாது.. என்ன மது?? உனக்கு நான் பெயர் சொல்லி கூப்பிடறதுல ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே.. “ என்றான் மதுவை பார்த்து சிரித்தவாறு...
அவள் பதில் எதுவும் சொல்லாமல் தன் கணவனை பார்க்க, அதை கண்ட மகிழன்
“ஷ்ஷப்பா.... அந்த வள்ளுவன் வாசுகி கூட தோத்து போய்டுவாங்க போல உங்களை பார்த்து.... இதுக்கு கூட உன் புருசன் கிட்ட பர்மிசன் வாங்கணுமா??
பதி பக்தியா?? இல்லை உன்னை அந்த அளவுக்கு மிரட்டி வச்சிருக்கானா?? சொல்லு மது.. இப்பதான் உனக்கு சப்போர்ட்க்கு ஆள் வந்திட்டேன்.. அப்படி எதாவது னா சொல்.. உடனே அவனை தூக்கிடலாம்.... “ என்று சிரித்தான்...
நிகிலன் அவனை முறைக்க, அனைவரும் மகிழ்ந்து சிரித்தனர்...
“எப்படியோ... ஒரு வழியா எல்லா ரகசியமும் இப்ப தெரிஞ்சிருச்சு...” என்றார் ரமணி சிரித்தவாறு.....
“இல்ல ஆன்ட்டி.... இன்னொன்னு இருக்கே... “ என்றான் மகிழன்...
“என்ன டா அது?? “ என்றார் ரமணி... மற்றவர்களும் அவனை ஆர்வமாக பார்க்க
“அதுவா ??.... அதுதான் உங்க உத்தம புத்திரன் இந்த நிகிலன் ACP ஓட லவ் மேட்டர்… “ என்றான் தன் அண்ணனை பார்த்து குறும்பாக சிரித்தவாறு....
“லவ் மேட்டரா ?? இது என்ன புது ட்விச்ட் ?? “ என்றார் ரமணி ஆச்சர்யமாக...
“ஹா ஹா ஹா என்ன மது?? நீயும் முழிக்கிற ?? உன் புருசன் உன்கிட்ட எதுவும் சொல்லலையா?? என்றான் அதே குறும்பு சிரிப்புடன்...
“ஆமாம்... என்னைக்கு எதை அவர் என்கிட்ட சொல்லி இருக்கார் ?? இதை சொல்ல..” என்று மனதுக்குள் நொடித்தவள்
“இந்த விருமாணடி கூட லவ் பண்ணானா?? அப்படி யாரை லவ் பண்ணினான்??” என்று உள்ளுக்குள் யோசித்து கொண்டிருக்க, மகிழன் தொடர்ந்தான்...
“ஹ்ம்ம்ம்ம் உங்க கல்யாணம் முன்னாடியே ஹீரோ சார் காதல் வலையில் விழுந்திட்டார்.. “ என்று சிரித்தான்...
அதை கேட்ட மது ஆச்சர்யத்தில் கண்களை அகல விரிக்க, நிகிலனோ வெக்கபட்டு சிரித்தவாறு
“ஹே... சும்மா இருடா... ஏதாவது உளறாத.. “ என்று தன் தம்பியை முறைத்தான்..
“ஹா ஹா ஹா நான் உளறேனா?? அப்ப அம்மாவையே கேட்கலாம். அம்மா... சிவகாமி தேவி, நாட்டாமை நீங்களே தீர்ப்பு சொல்லுங்க நான் சொல்வது உண்மையா இல்லையானு?? “ என்று சிரித்தான் மகிழன்....
அதை கேட்டு, தன் மருமகளின் பக்கம் திரும்பிய சிவகாமி,
“ஆமா மருமகளே.... இந்த சாமியாரும் கடைசியா ஒரு பொண்ணை பார்த்து கவிழ்ந்திட்டான்.. “ என்று சிரித்தார்...
அதை கேட்டு அதுவரை சிரித்து கொண்டிருந்த மதுவின் முகம் இருண்டது...
“ஓ... வேற பொண்ணை விரும்பியதால் தான் என்னை அவன் இத்தனை நாளா ஏற்று கொள்ளலையா?? ஆனால் அப்படி எதுவும் இருக்குமானு அகிலா கிட்ட கேட்டப்போ அவ அதெல்லாம் இல்லைனு தானே சொன்னா..
இவங்க என்ன புது கதை சொல்றாங்க... “ என்று இருண்ட முகத்துடன் தன் மாமியாரை பார்த்தாள் மது...
அவளின் வாடிய முகத்தை கண்டதும் மீண்டும் சிரித்த சிவகாமி,
“அடடா.... புருசன் ஒரு பொண்ணை விரும்பினான் னு சொன்ன உடனே என் மருமக முகம் எப்படி வாடிப் போச்சு பார்.... அதில பல்ப் எரிய வச்சிடலாமா?? “ என்று சிரித்தவர்
“மருமகளே... நோ பீலிங்ஸ் .... இந்த விருமாண்டி விரும்பின அந்த அதிர்ஷ்டக்கார பொண்ணு யாருனா...?? ” என்று இழுத்தார் இன்னும் கொஞ்சம் தன் மருமகளை டென்சன் பண்ண.....
நிகிலன் சொல்ல வேண்டாம் என்று தன் அன்னைக்கு கண்ணால ஜாடை காட்ட அவரோ சிரித்து கொண்டே மகிழனை பார்த்தார்....
அவனும் சிரித்து கொண்டே
“ஒரு நிமிசம் மா... அகி குட்டி... எங்க கவுண்ட்டவுன் ஸ்டார்ட் பண்ணு.... “ என்றான் அருகில் ஆர்வத்துடன் நின்று கொண்டிருந்த அகிலாவை பார்த்து...
அவளும் தன் பெரிய அண்ணன் ஒரு பொண்ணை விரும்பினான் என்பதே ஆச்சர்யமாக இருக்க, அந்த பொண்ணு யாரென்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் இருந்தவள் மகிழன் கேட்கவும்
“ஸ்யூர் அண்ணா.... அண்ணி இப்பவே ரொம்ப டென்சன் ஆய்ட்டாங்க... எனக்குமே ரொம்ப சஸ்பென்ஸ் ஆ இருக்கு... சீக்கிரம் இரண்டு பேரும் சொல்லுங்க.... கவுண்ட்டவுன் ஸ்டார்ட்ஸ் நௌ.... ஒன்... டூ ......த்ரீ........” என்று இழுத்தாள் சிரித்தவாறே...
சிவகாமியும் சிரித்து கொண்டே
“இந்த விஸ்வாமித்திரனையும் மயக்கி சம்சாரியாக்கிய அந்த மேனகை பெயர் மதுவந்தினியாம்... “ என்று கண் சிமிட்டினார் மதுவை பார்த்து...
அவர் வேற ஏதோ பெண்ணின் பெயரை சொல்ல போகிறார் என்று வேதனை பட்டவள் அவர் தன் பெயரை சொல்லவும் ஆச்சர்யத்தில் உறைந்து நின்றாள் மது...
தான் கேட்டது சரிதானா?? என்ற சந்தேகத்துடன்
“அத்தை ... நீங்க என்ன சொல்றீங்க?? “ என்றாள் இன்னும் ஆச்சர்யம் விலகாமல்...
“அடடா.... என் மருமகளுக்கு இன்னும் நம்ப முடியலை பார்....மறுபடியும் ரிப்பீட்...நல்லா கேட்டுக்கோ.... “ என்று சிரித்து கொண்டே முன்பு சொன்னதையே மீண்டும் திருப்பி சொன்னார்.....
அதை கேட்டு அப்படியே திகைத்தவள் விழி விரித்து தன் கணவனை காண, அவனோ இன்னும் வெக்க பட்டு தன் உதட்டை மடித்து அசடு வழிய சிரித்து கொண்டிருந்தான்....
தன் மாமியார் சொல்வது உண்மையா என்று நம்பாமல் இருந்தவள் அடுத்து தன் கணவனை காண, அவன் வெக்க பட்டு சிரித்து கொண்டு நிற்பதை கண்டு அவர் சொல்வது உணமை என்று புரிய, உள்ளுக்குள் துள்ளி குதித்தாள்...
நிகிலனோ தன் மனதுக்குள் இதுவரை புதைத்து வைத்திருந்த ரகசியம் வெளிவந்து விட்டதே என்று அசடு வழிந்து சிரித்தவன் தன் தம்பியை பார்த்து
"டேய்... உனக்கு எப்படி தெரியும் ?? " என்றான் செல்லமாக முறைத்தவாறு..
"ஹா ஹா ஹா உபயம் சிவகாமி மாதா.... " என்று தன் அன்னையை கை காட்டினான்....
அதை கேட்டு ஆச்சர்ய பட்ட நிகிலன்
“மா.... உனக்கு எப்படி ?? “ என்றான் ஆச்சர்யமாக..... அவரும் சிரித்தவாறே
"ஹா ஹா ஹா.... டேய் நான் உன்னை பெத்தவ டா... எனக்கு தெரியாதா என் புள்ளை மனம்...
மதுவை பொண்ணு பார்க்க போன பொழுது நாம மது வீட்டுக்கு முன்னாடி கார் ல சின்னவனுக்காக காத்துகிட்டிருந்தோம் இல்ல....அப்ப ஒரு பொண்ணு அவள் வீட்டுக்கு பக்க வாட்டில இருக்கிற ஒரு பூவை கொஞ்சவும் நீ அவளையே ரசித்து பார்த்ததை நான் பார்த்துட்டேன்....
எந்த பொண்ணையும் ஏறெடுத்து பார்க்காத நீ அந்த பொண்ணை அவ்வளவு ஆர்வமா ரசிச்சு பார்க்கற கண்டதும் அப்பயே எனக்கு உன் மனம் தெரிஞ்சு போய்டுச்சு...
அதுக்கப்புறம் அதே பொண்ணு காபி டம்ளரோட வந்தப்ப, உன் பார்வையை பார்த்தேன்.... அத்தனை காதல் அதில்....
அதிலயே எனக்கு கொஞ்சம் இருந்த டவுட் ம் கிளியர் ஆகிடுச்சு.... நீ என் மருமக கிட்ட கவிழ்ந்திட்டனு...
அப்புறம் மருமகளே... மீதி காதல் கதையை உன் புருசன் கிட்டயே கேட்டுக்க...
உன் மனம் புரிஞ்சதால தான் சின்னவன் கிட்ட இதை பத்தி சொல்லி துணிஞ்சு இந்த திட்டத்தை செயல் படுத்தினோம் நிகிலா...எப்படியும் நீ என் மருமகள ஏத்துக்குவ னு...
ஆனாலும் நீ சரியான அழுத்தக்காரன் டா... உன் மனசுக்கு பிடிச்சவளே உனக்கு பொண்டாட்டிய வந்தப்பவும் கூட உடனே அவளை ஏத்துக்காம அவ கிட்ட உன் வீராப்பை எல்லாம் காட்டி எவ்வளவு கஷ்டபடுத்திட்ட அவளை... " என்று முறைத்தார் சிவகாமி.....
“அதனால மருமகளே... இதுக்கெல்லாம் வட்டியோட சேர்த்து இன்னும் ஒரு ஆறு மாசத்துக்கு அவன் ரூம் பக்கமே போகாத ... " என்று கண் சிமிட்டி சிரித்தார்...
அதை கேட்ட நிகிலன் அதிர்ந்து போய் தன் அன்னையை பார்த்து முறைத்தவாறு
“நீயெல்லாம் ஒரு தாயா..?? இப்படி உன் மகன் னு கூட பார்க்காம உன் மருமகளுக்கு சொல்லி கொடுத்து மகனுக்கு எதிராக சதி பண்ண சொல்லி கொடுக்கறீயே மா….. " என்று சொல்லி சிரித்தான்....
அதற்குள் சண்மும் சாரதாவும் தங்கள் அறையில் இருந்து வந்தவர்கள் இங்கு பேசியதையெல்லாம் கேட்டு கொண்டிருந்தார்கள்....
அவர்கள் பேசியதில் இருந்தே தங்கள் மகள் இத்தனை நாளா எத்தனை கஷ்டங்களை அனுபவித்து வந்திருக்கிறாள்.. ஆனாலும் வாய் திறந்து தங்களிடம் ஒரு வார்த்தை கூட தன் புகுந்த வீட்டை பற்றியோ தன் கணவனை பற்றியோ மூச்சு விட வில்லை
ஏன் அவர்களால்தான் தன் வாழ்க்கை இப்படி ஆச்சு என ஒரு வார்த்தை கூட தன் பெற்றோர்களை பார்த்து அவள் கேட்கவில்லை....
“இத்தனை கஷ்டத்தையும் தாங்கி கொண்டு தன் கணவன் அன்புக்காக காத்து கொண்டிருந்திருக்கிறாளே... “ என புரிய நெகிழ்ந்து போய் பெருமையுடன் பார்த்தனர் தங்கள் மகளை.....
மகிழனும் அவர்களை கண்டதும், அவர்கள் அருகில் வந்தவன்
"என்னை மன்னிச்சிடுங்க மாமா , அத்தை... என்னால உங்களுக்கும் ரொம்ப கஷ்டம்.... " என்றான் அவர்கள் காலில் விழுந்து வணங்கி
சண்முகமும் உடனே அவனை தூக்கி ஆசிர்வதித்து
"பரவாயில்லை சின்ன மாப்பிள்ளை.. எல்லாம் அந்த வேலனோட விளையாட்டு.. என்னதான் அந்த வேலன் என் பொண்ணுக்கு கஷ்டத்தை கொடுத்தாலும் என் பொண்ணுக்கு இப்படி ஒரு மாப்பிள்ளையை, நல்ல குடும்பத்தை கொடுத்திருக்கானே .. அதுவே போதும்... " என்று சிரித்தார்...
பின் அனைவரும் காலை உணவிற்கு செல்ல, வசந்தியும் கௌதமும் வந்தனர்..... வசந்தி தனியாக இருந்தால் எப்பவும் நடந்ததையே நினைத்து கொண்டு அவளை வருத்தி கொண்டிருக்க, அவர்களையும் இங்கயே தங்க வைத்துவிட்டார் சிவகாமி..
வசந்தி இப்பொழுது ரொம்பவே மாறிவிட்டாள். அவளுடைய் ஆணவம் அகங்காரம் எல்லாம் தொலைந்து எப்பொழுதும் கண்ணில் ஒரு சோகத்துடன் இருக்க, மது ஆலோசனை படி சிவகாமி அவளையும் அழைத்து வந்து இங்கயே தங்க வைத்துவிட்டார்...
அந்த குழந்தையை பார்த்தாலாவது அவள் மனம் மாறும் என்று..
மது எதிர்பார்த்த மாதிரியே வசந்தியும் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறாள்.. அதுவும் அந்த குட்டி தேவதையை கையில் அள்ளி எடுக்கும் பொழுது கருவிலயே அழிந்து விட்ட தன் குழந்தை ஞாபகம் வர, தன் பாசத்தையெல்லம் அந்த குட்டி இளவரசி மீது கொட்டினாள்..
மதுவும் அவள் மகளை வசந்தியிடமே விட்டு விட்டாள்.... பால் குடிக்கும் நேரம் தவிர அவள் மதுவிடம் இருப்பதில்லை...
பத்தாதற்கு நமது இல்லத்தில் இருந்தும் வாரம் இரு பெரியவர்கள் வந்து அந்த குட்டியை தினமும் கிராமத்து முறைப்படி ஆயில் மசாஜ் செய்து குளிக்க வைத்து தங்கள் ஆசையை ஏக்கத்தை தீர்த்து கொண்டனர்...
மதுவின் பெற்றோர்களும் வார இறுதியில் இங்கு வந்து விடுவர் தங்கள் பேத்தியை காண...
வெறும் அமைதியாக இருந்த வீடு, அந்த குட்டி வந்ததும் எப்பொழுதும் கலகலப்பாக இருந்தது....
தனியாக ஒத்த பிள்ளையாக வளர்ந்த மதுவுக்கு அத்தனை பேரையும் ஒன்றாக பார்க்க, அவ்வளவு சந்தோசமாக இருந்தது...
அதோடு அத்தனை பெரியவர்களும் இளையவர்களும் தன் மகளை தூக்கி கொஞ்ச, தனக்கு கிடைக்காத உறவுகளின் பாசம் தன் மகளுக்கு கிடைத்திருக்கிறதே என மதுவுக்கும் சந்தோசமாக இருந்தது...
காலை உணவு கலகலப்பாக முடிந்தது.... ஏறகனவே அகிலாவால் கலகலவென்று இருக்கும் வீடும் இப்பொழுது மகிழன் ம் சேர்ந்து கொள்ள அவர்கள் இரண்டு பேர் அடிக்கும் லூட்டியில் அந்த வீடே அதிர, கலகலப்பாக மாறியது........
சாப்பிட்டு முடித்ததும் அகிலா தன் சின்ன அண்ணனை தன் உடன் விளையாட அழைக்க,
"அகி குட்டி... இந்த அண்ணா பாவம்... ரொம்ப டயர்டா இருக்கேன்... போய் ஒரு சென்னை தூக்கம் போட்டுட்டு வந்திடறேன்... இந்த மத்தியான. தூங்கற சுகம் இருக்கே ... கோடி கொடுத்தாலும் கிடைக்காது... அதனால் ஒரு 5 மணி நேரம் பொறுத்துக்கோ... " என்று கொஞ்ச
"போடா மங்கி.... உனக்கு என்னை விட உன் தூக்கம் தான் பெருசு.." என்று முகத்தை நொடித்தவள், மகிழன் அவளை பாவமாக பார்க்கவும்
"சரி சரி.. இன்னைக்கு ஒரு நாள் மட்டும் பொழச்சு போ... நாளையில் இருந்து நீ எப்பவும் என்னோடதான் இருக்கணும்..... " என்று சிரித்தாள்..
தன் தங்கையின் கண்களில் இருந்தே அவள் தனக்காக எவ்வளவு ஏங்கி இருக்கிறாள் என புரிய, அதில் நெகிழ்ந்து போனவன் அவள் தலையை வாஞ்சையுடன் தடவியவன்
“ஹ்ம்ம்ம் இதுதான் குட் கேர்ள்.. இப்பதான் உன் மூஞ்சி கொஞ்சமாவது பார்க்க சகிக்குது.." என்றான் குறும்பாக சிரித்து கொண்டே...
அதை கேட்டு அகிலா முறைத்துகொண்டே அவனை துரத்த, அவள் கைக்கு கிடைக்காமல் தாவி மாடிக்கு ஏறியவன் தன் அறைக்கு சென்று படுக்கையில் பொத்தென்று விழுந்தான்...
இப்பொழுது தான் நிம்மதியாக மன நிறைவுடன் இருந்தது அவனுக்கு....
“இத்தனை நாளா எத்தனை மிஸ் பண்ணிட்டேன்..
ஹ்ம்ம்ம் எல்லாம் நல்லதுக்கே..எப்படியோ தன் தந்தையின் மறைவுக்கு பிறகு தன் வீட்டில் இதுவரை தொலைந்து போய் இருந்த கலகலப்பு மீண்டும் தன் இல்லம் தேடி வந்து விட்டதே...
அதுவும் தன் அண்ணனுக்கு திருமணம் ஆகவில்லையே என்று எப்பொழுதும் தன் அன்னையின் கண்ணில் இருக்கும் அந்த வலி மறைந்து இன்று பூரித்திருந்ததை பார்க்க,
“இந்த மகிழ்ச்சிக்காக எத்தனை கஷ்டத்தையும் தாங்கலாம்...." என்றவாறு புன்னகைத்தவன் அடுத்த நொடி கண் அயர்ந்தான்....
பெரியவர்கள் மதிய சமையலை கவனிக்க, அன்று சஷ்டி என்பதால அசைவம் சமைக்காமல் சைவத்திலயே விதவிதமாக தன் சின்ன மகனுக்கு பிடித்ததை எல்லாம் சமைத்தார் சிவகாமி...
அவர் முகத்தில் இதுவரை இருந்த சிறு கவலையும் விலகி தன் சின்ன மகன் வந்து விட்ட பூரிப்பில் மனம் கொள்ளா மகிழ்ச்சியுடன் வளைய வந்தார்.....
அவர் முகத்தில் தெரிந்த பூரிப்பை கண்ட மது
தங்கள் வாழ்க்கைக்காக இப்படி தன் மாமியாரும் கொழுந்தனாரும் எவ்வளவு தியாகம் செய்திருக்கிறார்கள் என்று புரிய, தன் மாமியாரை கட்டி அணைத்து கன்னத்தில் முத்தம் இட்டாள் மது...
“ஆஹா..என்ன மருமகளே..!! இன்னைக்கு ஓவரா கொஞ்சற ?? ... நீ என்ன தான் கொஞ்சினாலும் உன்னை உன் புருசன் ரூம் க்கு அனுப்ப மாட்டேனாக்கும்..." என்று கண்ணடித்து மெதுவாக ரகசியமாக சொல்ல,
"சீ... போங்க அத்தை.... நீங்க ரொம்ப மோசம்.... " என்று கன்னம் சிவந்தாள்...
மாலை 6 மணி அளவில் அனைவரும் கோவிலுக்கு கிளம்பினர்...
நீண்ட நாளைக்கு பிறகு தன் சின்ன மகன் வரவும் சிவகாமி குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று அந்த வேலனை தரிச்சிக்க வேண்டும் என்க, வீட்டில் இருந்த அனைவருமே கிளம்பினர்....
கோவிலுக்கு செல்ல தயாராகி, மாடியில் இருந்து வேகமாக கீழிறங்கிய நிகிலன் சிவகாமியின் அறையில் இருந்து வெளி வந்த தன் மனைவியை கண்டதும் அப்படியே சாக் ஆகி நின்றான்....
தழைய தழைய புடவை கட்டி , தலை நிறைய மல்லிகை பூவை வைத்து அந்த மல்லிகை சரம் முன்னால் தொங்க , எதற்கோ சிரித்து கொண்டே வந்தவள் கன்னத்தில் விழுந்த குழியும் என்று அவளை கண்டதும் அப்படியே அசந்து நின்றான்....
குழந்தை பிறந்த பிறகு அந்த இல்லத்து பெரியவர்ளின் ஆலோசனை படி அவளுக்கு வெறும் பத்திய சாப்பாடும் வயிற்றை இறுக்கி கட்டி சில வழிமுறைகளையும் சொல்ல, அதன் படி மதுவும் முகம் சுழிக்காமல் செய்ய, இரண்டே மாதத்தில் அவள் நன்றாக தேறி வயிற்றில் எந்த ஒரு சதை பிடிப்பும் இல்லாமல் சிக் என்று இருந்தாள்...
அதுவும் இப்பொழுது சாரதா, சிவகாமி இருவரின் கவனிப்பாலும் அவர்கள் பேத்தியுடன் அவளுக்கும் சேர்த்து அடிக்கடி கிடைத்த எண்ணெய் குளியலில் முன்பை விட இன்னும் ஜொலித்தாள் மது....
குழந்தை பிறந்த பிறகு இன்னும் அவள் அழகு கூடியிருக்க, அவளை காணும் பொழுதெல்லாம் நிகிலனுக்கு தான் கஷ்டமாகி போனது..
அதுவும் கடந்த இரண்டு வாரமாக அவளை பார்க்கும் பொழுதெல்லாம் அவன் உள்ளே புயல் அடிக்க ஆரம்பித்தது...
ஆனாலும் சிவகாமி அவளை அவன் அறைக்கு அனுப்பாமல் தன்னுடனே வைத்து கொண்டார்... தன் மீது படியும் தன் கணவனின் காதல், ஏக்கம் கலந்த பார்வையை காணும்பொழுதெல்லாம் அவளுக்கும் உள்ளுக்குள் பட்டாம் பூச்சிகள் பறக்கும்....
ஆனாலும் அவளுக்கு தன் கணவனை தனியாக சந்திக்க வெக்க பட்டு கொண்டு மேல வருவதேயில்லை....
அவளை தனியாக சந்திக்கவும் முடியாமல் எப்பொழுதும் ஒரு நாலு பேராவது அவளை சுற்றி இருப்பர்...
அதனால் இரவு உணவு முடித்து தன் அறைக்கு வருபவனுக்கு தன்னை கட்டு படுத்த முடியாமல், கல்யாணம் ஆகியும் பிரம்மச்சாரியாக இருக்கும் தன் நிலையை எண்ணி நொந்து கொண்டே அந்த பால்கனியை அளக்க ஆரம்பிப்பான்....
சாதாரணமாக பார்க்கும் பொழுதே ஆளை கவிழ்ப்பவள் இன்றோ இப்படி மெல்லிய அலங்காரத்தில் ஜொலிக்க, அவன் மனம் ராக்கெட் வேகத்தில் எகிறி குதித்தது.....
அவளையே மையலுடன் ரசித்து கொண்டிருந்தான் நிகிலன்..
“ம்ம்ம்ஹூம்... போதும் டா.... இப்படியா பப்ளிக் ல உன் பொண்டாட்டியை சைட் அடிக்கிறது ??.... நாங்களும் இங்கதான் இருக்கோம்.. ஞாபகம் வச்சுக்கோ... “ என்று நிகிலன் கையை செல்லமாக கிள்ளினான் பின்னால் நின்றிருந்த மகிழன் சிரித்தவாறு ...
அதை கேட்ட நிகிலன் ஒரு அசட்டு சிரிப்பை சிரிக்க,
“ஐய... இப்படி வழியாத டா.... இதுக்கு நீ முறைக்கிறதே பெட்டரா இருக்கு ... “ என்று தன் அண்ணனை வாரியவன் அவன் தோள் மேல் கை போட்டு இருவரும் ஒன்றாக கீழ இறங்கி வந்தனர்.....
கிட்டதட்ட ஒரே உயரத்தில் இரட்டையர்கள் போல இருந்த அந்த இரண்டு ஆண்மகன்களும் சிரித்து கொண்டே ஒன்றாக இறங்கி வருவதை கண்ட சிவகாமிக்கு மனம் நிறைந்து இருந்தது...
“சிங்க குட்டிகள் மாதிரி என் இரண்டு மகன்களையும் எப்படியோ வளர்த்துட்டேன்.. இதையெல்லாம் பார்க்க அவருக்கு கொடுத்து வைக்கலையே..” என்று அவர் பார்வை அங்கு மாட்டியிருந்த அவர் கணவர் புகைபடத்திற்கு செல்ல, கண்ணில் ஈரம் எட்டி பார்த்தது...
அதற்குள் தன் அன்னையிடம் வந்தவர்கள் , அவரின் இருபக்கமும் ஒருவராக நின்று கொண்டு அவரை கட்டி கொள்ள
“அடடா... என்னாச்சு சிவகாமி தேவிக்கு.. நல்ல நாள் ல கண் கலங்குது?? “ என்று சிரித்தான் மகிழன்...
“போடா.. போக்கிரி.. என் கண்ணும் ஒன்னும் கலங்கல .. இலேசா வேர்க்குது... “என்று சிரித்தார்....பின் இரு மகன்களின் தலையை ஆசையாக வருடி,
“நிகிலா, மகிழா, நீங்க இரண்டு பேரும் எப்பவும் இப்படியே சிரிச்சுகிட்டே இருக்கணும்.. ஒருத்தரை விட்டு ஒருத்தர் பிரிய கூடாது... “ என்று மீண்டும் கண் கலங்கினார்...
“கண்டிப்பா மா....இனிமேல் உன் மனம் கஷ்டபடற மாதிரி எதுவும் நடக்காது.... உன் சந்தோசம் தான் எங்களுக்கு முக்கியம்..” என்றான் நிகிலன் நெகிழ்ச்சியோடு...
“This is not fair…” என்னைய மறந்துட்டீங்களே... என்றவாறு அகிலா மாடியில் இருந்து ஓடி வந்து அவர்களை கட்டி கொண்டாள்...
“வாடா குட்டி.. உன்னை விட முடியுமா... நீதான் இந்த கோட்டையின் இளவரசி ஆச்சே... “ என்று சிரித்தான் மகிழன்...
நிகிலனும் வாஞ்சையுடன் அவள் தலையை பாசத்துடன் தடவி கொடுக்க, நீண்ட நாள் கழித்து ஒன்று கூடியதில் அந்த நால்வரும் நெகிழ்ந்து போய் சந்தோசத்தில் அப்படியே கட்டி கொண்டு நின்றனர்....
மது அழகாக அந்த நால்வரையும் தன் அலைபேசியில் படம் எடுத்து கொண்டாள்....
பின் போட்டோ செச்சன் ஸ்டார்ட் ஆக, எல்லாரும் விதவிதமான காம்பினேசனில் நின்று வளச்சு வளச்சு போட்டோ எடுத்து கொண்டனர்...அதுவும் அந்த குட்டி இளவரசி அழகான பிங்க் நிறத்தில் ப்ராக் அணிந்திருக்க, அத்தனை பேரையும் ஒன்றாக காணவும் அவள் முகத்திலும் சிரிப்பு தவழ்ந்தது....
அவளையும் வைத்து கொண்டு நிறைய புகைபடங்கள் எடுத்து கொண்டிருந்தனர்...
இறுதியாக மதுவையும் நிகிலனையும் ஒன்றாக நிற்க சொல்ல, நிகிலனுக்கோ சத்திய சோதனை ஆகியது...
இதுவரை தள்ளி நின்றவள் அவன் அருகில் ஒட்டி நிக்கவும் அவளை இழுத்து அணைத்து கொள்ள துடித்த அவன் கைகளை இழுத்து வைத்து பிடித்து கொண்டான்....
ஆனால் கண்களை கட்ட முடியாமல் அது பாட்டுக்கு அவனுக்கு அடங்காமல் அவளையே தாபத்துடன் அள்ளி பருகியது...
தன் கணவனின் காதல் பார்வையை கண்டு கொண்டவள் கன்னம் சிவக்க, அவர்கள் இருவரின் காதல் அந்த புகைபடத்தில் அழகாக பதிவாகியது...
ஒருவழியாக போட்டோ செச்சன் முடிய, எல்லோரும் கிளம்பி கோவிலுக்கு செல்ல, நிகிலன், மற்றும் கௌதம் தங்கள் கார்களை எடுத்தனர்....
கௌதம் தன் அருகில் அமர்ந்திருக்கும் தன் மனைவியை பார்த்து அசந்து நின்றான்..
எப்பவும் கண் மை, லிப்ஸ்டிக் என புல் மேக்கப் ல் தூக்கலாக அலங்கரிப்பவள் இப்பொழுதெல்லாம் தன்னை அலங்கரித்து கொள்வதில்லை....எந்த ஒரு அலங்காரத்திலும் மனம் செல்லாமல் ஏதோ பேருக்காக தலையை மட்டும் பிண்ணி கொள்வாள் வசந்தி....
இப்பொழுது அனைவரும் கோவிலுக்கு கிளம்ப, வசந்தியையும் வற்புறுத்தி கோவிலுக்கு அழைத்து வந்தனர்....
ரமணியே அவளுக்கு தலை பிண்ணி கொஞ்சமாக பூவையும் வைத்து விட்டார்....
அவள் மணிகணக்காக பண்ணும் அலங்காரத்தை விட தன் மனைவியின் இந்த எழிய தோற்றம் கௌதமை கட்டி இழுத்தது...
அவன் பார்வை அடிக்கடி தன் மனைவியிடம் அலை பாய்ந்தது... அதை கண்ட அவன் காரில் பின்னால் அமர்ந்திருந்த அகிலா,
“அண்ணா.. பார்த்து.... பத்திரமா எங்களை கோவில்ல கொண்டு போய் சேர்த்துடுவீங்க இல்ல...?? இத்தனை பேர் வாழ்க்கையும் உங்களை நம்பிதான் இருக்கு...
எனக்கு வேற நிறைய ஆசைகள் எல்லாம் இருக்கு.. அதெல்லாம் நிறைவேறாம போய்ட போகுது..” என்று குறும்பாக சிரித்தாள்....
“போடி.. வாலு...உன்னை யார் என் கார்க்கு வர சொன்னா?? ” என்று அசட்டு சிரிப்பை சிரித்தவன் ஆனாலும் தன் மனைவி மீது படியும் அவன் பார்வையை மாற்றவில்லை.......
வசந்தியும் தன் கணவனின் பார்வையில் இருந்த வித்தியாசத்தை கண்டு கன்னம் சிவந்தாள்.. அது இன்னும் அவனுக்கு போதை ஏற்றியது
Comments
Post a Comment