காதோடுதான் நான் பாடுவேன்-44



அத்தியாயம்-44


ரண்டு பேர் மட்டும் தனியாக அவ்வளவு பெரிய வீட்டில் இருந்த பொழுது எப்ப வேணும் என்றாலும் கொஞ்சலாம், கட்டி அணைத்து கொள்ளலாம் என்ற பொழுது தன் கணவன் ஆசையாக பார்த்ததோ கட்டி அணைத்ததோ பெரிதா தெரிந்திருக்கவில்லை வசந்திக்கு...

இன்று இவ்வளவு பெரிய குடும்பத்தில் எப்பவும் நாலு பேர் கூட இருக்க, தனக்கு தனிமை கிடைக்காதா என்று ஏங்கி தன் மனைவி எப்ப தனியாக மாட்டுவாள் அவளை கொஞ்சலாம் என்று தவிக்கும் இந்த கணவனின் பார்வை புதிதாக இருந்தது வசந்திக்கு ..

மாலையில் இருந்தே கௌதம் அவள் பின்னாலயே சுத்தி வருவது அவளுக்கு தெரிந்தது தான்.. அதனால் அவனிடம் தனியாக மாட்டாமல் கும்பலில் போய் இருந்து கொண்டாள்....

அவனும் அவளிடம் பேச, அருகில் வர, அவனிடம் சிக்காமல் நழுவி மறுபக்கம் சென்று விடுவாள்.... 

திருமணம் முடிந்து ஏழு வருடம் கழித்தும் தன் கணவனின் காதலும் அன்பும் குறையாம்ல் அப்படியே இருப்பதும் அது இன்னும் கூடி இருப்பதை போல இருந்தது வசந்திக்கு....

அவள் அவனுக்கு எவ்வளவு கஷ்டத்தை கொடுத்தாலும் அவளை விலக்காமல் தன்னுடனே வைத்திருந்த தன் கணவனின் காதலை எண்ணி பூரித்து போனாள் வசந்தி.... 

அவனின் அந்த ஏக்கம் கலந்த பார்வை அவளுக்கு பிடித்திருக்க என் புருசன் என்ற கர்வத்தையும் கொடுத்தது.....

மனதுக்குள் மெல்லியதாய் சுகம் பரவியது.... 

இந்த மாதிரி சுகம் எல்லாம் இந்த மாதிரி கூட்டு குடும்பத்தில் மட்டுமே கிடைக்கும் சின்ன சின்ன சந்தோசங்கள் என்று புரிந்தது அவளுக்கு... 

அதுவும் இரத்த சம்பந்தம் இல்லாமல் வெறும் நட்பு ரீதியாக ஒன்றாக கூடியிருக்கும் இந்த குடும்பத்தை காண ஆச்சர்யமாக இருந்தது... 

அதோடு நமது இல்லத்தில் இருந்து வந்திருக்கும் பெரியவர்களையும் தங்கள் குடும்பத்தில் ஒருத்தராக மதித்து அவர்களையும் தங்களுடன் கோவிலுக்கு அழைத்து கொண்டு வந்திருக்கும் சிவகாமி மற்றும் ரமணியை நினைத்து அவளுக்கு ஆச்சர்யமாகவும் பெருமையாக இருந்தது...

பணத்தைவிட பாசத்திற்கும் அன்பிற்கும் கிடைக்கும் சுகத்தை நன்றாக புரிந்து கொண்டாள் வசந்தி....

“இத்தனை நாள் இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் எல்லாரையும் கஷ்டபடுத்தி விட்டேனே... அதற்குத்தான் அந்த கடவுள் எனக்கு சரியான தண்டனையை கொடுத்து என்னை விழிக்க வைத்துவிட்டான்...” என்று பெருமூச்சு விட்டாள்... 

பின் தன் கணவனின் ஓரப் பார்வையை கண்டு கன்னம் சிவந்து போனவள் போனால் போகட்டும் என்று கொஞ்சமாக நெருங்கி தன் கணவன் அருகில் ஒட்டி அமர்ந்து கொண்டாள் வசந்தி உள்ளுக்குள் சிரித்தவாறு....

அவளின் அந்த மாற்றமே கௌதம் க்கு நிம்மதியையும் உற்சாகத்தையும் கொடுக்க, உல்லாசமாக விசிலடித்தபடியே காரை செலுத்தினான்.....

கோவிலில் குடும்பத்தோடு அனைவரும் அந்த வேலன் முன்னால் நிற்க, சிவகாமி தன் பேத்தியை அந்த வேலன் சன்னதியில் போட்டு மனம் உருகி வேண்டி கொண்டார்....

தன் மகன் மருமகள் ஜோடியாக ஒரு புறம் நிக்க இந்த பக்கம் மகிழன், அகிலா, அப்புறம் ரமணியும் தன் மகன் மருமகளுடன் இணைந்து நிக்க, சாரதா, சண்முகம் , அந்த இல்லத்து பெரியவர்கள் என அனைவரும் ஒன்றாக கூடி நிக்க, அதை பார்த்து மனம் நிறைந்து நின்றது சிவகாமிக்கு...

கண் மூடி அந்த வேலனை தரிசித்தவர்

“எப்படியோ என் வேண்டுதலை நிறைவேற்றி வச்சிட்ட முருகா..... உனக்கு எல்லா அபிசேகங்களும் பண்ணிடறேன்.... 

இனிமேல் உனக்கு என்னிடம் இருந்து விடுதலை.. நீ ப்ரியா சுத்து.. இந்த சிவா தொல்லை உனக்கும் இனிமேல் இல்லை.. “ என்று சிரித்து கொண்டார் சிவகாமி... 

தரிசனம் முடித்து அனைவரும் சிறிது நேரம் அமர்ந்து பேசிய பிறகு இரவு சாப்பாட்டிற்கு அருகில் இருக்கும் உணவகத்திலயே முடித்து வீடு திரும்பினர்....

வீட்டிற்கு உள்ளே வந்ததும் அனைவரும் தங்கள் அறைக்கு செல்ல, தன் மனைவியை ஏக்கமாக பார்த்து கொண்டே தன் அறைக்கு சென்றான் நிகிலன்.. 

சிவகாமியின் அறைக்கு வந்த மது தன் புடவையை மாற்ற முயல, 

“அட டா இரு மருமகளே...அதுக்குள்ள என்ன அவசரம்... “ என்று தடுத்தார் சிவகாமி...

“என்னாச்சு அத்தை?? “ என்றாள் மது புரியாமல்...

“ஹ்ம்ம்ம் இனிமேல் நீ உன் புருசன் ரூம்லதான் இருக்கணுமாம்.. இங்க தங்க கூடாதாம்... உன் புருசனோட ஆர்டர்.. அதனால அவனா வந்து உன்னை தூக்கிட்டு போகும் முன்னாடி நானே உன்னை அனுப்பி வச்சிடறேன்.. “ என்று சிரித்தார் சிவகாமி...

அதை கேட்டு கன்னம் சிவந்த மது

“சீ .. போங்க அத்தை ..ஒரு மாமியார் மாதிரியா பேசறீங்க.. பேட் மாமியார்... “ என்றாள் செல்லமாக சிணுங்கியவாறு...

“ஹா ஹா ஹா... உண்மையத்தான் சொல்றேன் மது மா... இந்த குட்டியை நாங்க பார்த்துக்கறோம்.. நீ போய் உன் புருசனை கவனி...தினமும் அவன் நடந்து நடந்து என் புருசன் கட்டின அந்த மாடி சீக்கிரம் தேய்ஞ்சு போய்ட போகுது.... 

சீக்கிரம் ஒரு பேரனை பெத்து கொடு.. நானும் ரமணியும் னு இரண்டு பாட்டி இருக்கறோம் இல்லை.. ஆளுக்கு ஒன்ன வச்சுகிட்டு பொழுது போய்டும்.. 

இப்ப இவ ஒருத்திய மட்டும் வச்சுகிட்டு நாங்க சண்டை போட்டு யார் ஜெயிக்கறாங்களோ அவங்களே வச்சுக்கலாம் னு பொழப்பு ஓடுது... “ என்றார் சிரித்தவாறு..

“ஆங்... போங்க அத்தை....அதுக்குள்ள இன்னும் ஒன்னா?? சுசிலா அத்தை சொல்லி இருக்காங்க... பாப்பாவுக்கு நாலு வருசம் ஆனாதான் அடுத்த புள்ளை னு... “ என்றாள் சிரித்தவாறு.

“ஹ்ம்ம்ம் இந்த சுசி எல்லாரையும் கெடுத்து வச்சுட்டா...ஒரு நாளைக்கு என்கிட்ட மாட்டுவா இல்லை... அன்னைக்கு கவனிச்சுக்கறேன் அவளை... “ என்று சுசிலாவை திட்டினார் சிவகாமி சிரித்து கொண்டே ...

மதுவும் இணைந்து சிரித்தவள் , 

“வேணும்னா ஒன்னு செய்ங்க... வசந்தி சும்மாதான் சுத்திகிட்டிருக்காங்க... அவங்களை ஒரு வாரிசை சீக்கிரம் ரெடி பண்ண சொல்லுங்க... அப்ப நீங்க இரண்டு பேரும் பிசி ஆகிடலாம்... பாப்பாவுக்கும் கூட விளையாட ஆள் கிடச்சிடும்.. எப்புடி?? “ என்றாள் சிரித்தவாறு..

“ஹ்ம்ம் பரவாயில்லையே... விரல் சூப்பிகிட்டிருந்த என் மருமக கூட இப்ப விவரமா பேசறா... “ என்றார் சிவகாமி சிரித்து கொண்டே..

“அத்தை....” என்று செல்லமாக சிணுங்கியவள் அங்கு அமர்ந்து இவர்கள் பேச்சை சுசாரஷ்யமாக கேட்டு சிரித்து கொண்டிருந்த ரமணியை பார்த்து 

“ரமணி மா... வசந்தி பாப்பாவை வச்சுகிட்டு தோட்டத்துல இருக்காங்க... நீங்க போய் அவளை வாங்கிட்டு வசந்தியை அண்ணா ரூம்க்கு அனுப்பி வைங்க.. இனிமேல் அங்கயே இருக்க சொல்லுங்க.... பாவம் கௌதம் அண்ணா... ரொம்பவுமே ஏங்கி போய்ட்டார்.. “ என்று சிரித்தாள்... 

“வர வர உனக்கு வாய் அதிகம் ஆய்டுச்சு டீ.. “ என்று சிவகமி அவள் காதை பிடித்து திருக, 

“அத்தை நோ violence… only silence.. “ என்று சிரித்தாள் மது...

ரமணியும் சிரித்து கொண்டே எழுந்து தோட்டத்திற்கு செல்ல, அங்கு வசதி ஆசையாக அந்த குட்டியை கொஞ்சி கொண்டிருக்க, கௌதம் அவள் அருகில் அமர்ந்து அவளை தாபத்தோடு பார்த்து ரசித்து கொண்டிருந்தான் அவள் அறியாமல்..

இதை கண்ட ரமணி, அவர் நிகிலன் குழந்தையாக இருக்கும் பொழுது தூக்கி கொஞ்சியதும் அதை கண்டு அவர் கணவர் ரசித்து பார்த்ததும் நினைவு வர, 

"அப்படியே அவன் அப்பா மாதிரியே இருக்கான்... “ என சிரித்து கொண்டே அவர்கள் அருகில் சென்றவர்

“வசந்தி மா.. பனி அடிக்குது பார்.. பாப்பாவுக்கு ஒத்துக்காது... கொடு.. உள்ள எடுத்து போகலாம்..." என்றார்...

"இருக்கட்டும் அத்தை... நானே தூக்கிட்டு வர்ரேன்.. “ என்றாள் வசந்தி...

“சரி வாங்க உள்ளே.. “ என்று அழைத்து வந்தவர் கௌதம் தங்கி இருந்த அறைக்கு அருகில் வந்ததும் 

“வசந்தி மா ... நீ இன்னைக்கு இந்த அறையிலயே தங்கிக்க... பாவம் கௌதம் உன்னை பிரிஞ்சு ரொம்ப கஷ்டபடறான் ... இந்த குட்டியை நாங்க கவனிச்சுக்கறோம்... நீ அவனை கவனிச்சுக்கோ... 

அதோடு சீக்கிரம் நீயும் ஒரு பேரனையோ பேத்தியையோ பெத்து கொடு.. பழசை எல்லாம் நினைக்க கூடாது...

குழந்தை இல்லாமல் தவித்த எனக்கு நிகிலனை தூக்கின பிறகுதான் குழந்தை பாக்கியம் கிடைத்தது.. அதே மாதிரி அவன் புள்ளையை தூங்கின உன் கைக்கு அந்த முருகன் சீக்கிரம் ஒரு குழந்தையை கொடுப்பான்... 

அதனால் நீ எதுவும் வருத்தபடாம உங்கள் புது வாழ்க்கையை ஆரம்பிங்க... “ என்றார் ரமணி...

வசந்தியும் கன்னம் சிவந்து அவர் காலில் விழுந்து வணங்க, அவளை தூக்கி ஆசிர்வதித்து 

"இனிமேல் உங்களுக்கு நல்ல காலம் தான்.. இரண்டு பேரும் சந்தோசமா இருக்கணும்.. “என்று கட்டி கொண்டார்....

அதே நேரம் மதுவும் ட்ரேயில் வைத்திருந்த பால் டம்ளர்களுடன் அங்கு வந்தாள்...

அவர்களிடம் ஆளுக்கொரு பால் டம்ளரை நீட்டியவள் 

“All the best அண்ணா...வசந்தி... சீக்கிரம் எனக்கு ஒரு மருமகனை பெத்து கொடுங்க... “ என்று கண் சிமிட்டினாள் சிரித்தவாறு... 

வசந்தியும் கன்னம் சிவக்க, மதுவை பார்த்து புன்னகைத்தவாறு பால் டம்ளருடன் உள்ளே சென்றாள்...

மது மற்ற அறைகளுக்கும் சென்று அனைவருக்கும் பாலை கொடுத்து விட்டு சிவகாமி அறைக்கு வந்தாள்....

ரமணியும் உள்ளே வந்திருக்க, தன் கையில் இருந்த ட்ரேயை வைத்து விட்டு தன் மகளை அள்ளி கொஞ்சி அவளுக்கு பால் ஊட்டியவள் மீண்டும் அவளை சிவகாமியிடம் கொடுத்தவள், 

“அத்தை... நான் இங்கயே இருந்துக்கறேனே.... நடுவுல பாப்பா எழுந்து அழுதா...?? “ என்று இழுத்தாள் தயக்கத்துடன்...

“ஹா ஹா ஹா அதெலலம் என் பேத்தி சமத்து... அவ அப்பனையும் ஆத்தாளையும் தொந்தரவு பண்ண கூடாதுனு அவளுக்கு தெரியும்.. அவ நல்லா தூங்கிடுவா.. காலையில் தான் கண் முழிப்பா.. நீ அவளை பத்தி கவலை படாத டா...

இத்தனை நாள் நீ பட்ட கஷ்டம் எல்லாம் போகட்டும்.. இனிமேலாவது உன் புருசனோட சந்தோசமா இரு.... “ என்று அவள் தலையை வாஞ்சயுடன் தடவினார் சிவகாமி.... 

அவளும் தலை அசைத்து தூங்கி இருந்த தன் மகளை மீண்டும் ஒருமுறை பார்த்து விட்டு மாடியில் இருந்தவர்களுக்கும் பாலை எடுத்துகொண்டு மேல சென்றாள்...

தன் சின்ன அண்ணன் வந்த சந்தோசத்தில் அவன் அறையில் அவனுடன் வம்பு இழுத்து அவனுடன் விளையாடி கொண்டிருந்தாள் அகிலா... 

அகிலாவை அப்படி சிரித்து பார்க்க, மதுவுக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது....

“இந்த மங்கிக்காக எத்தனை பேர் ஏங்கி போய்ட்டாங்க பார்... “ என்று அவனை திட்டி கொண்டே அவர்கள் அருகில் சென்றவள் அகிலாக்கு பால் டம்ளரை கொடுக்க, அதை எடுத்து கொண்ட அகிலா 

“All the best அண்ணி.… “ என்று கண் சிமிட்டினாள்...

அதை கண்டு கன்னம் சிவந்தவள் 

“ போடி வாலு.. “ என்று சிரித்து கொண்டே மகிழன் கையில் பாலை கொடுக்க, அவனும் அவளுக்கு நன்றி சொல்லி வாங்கி கொண்டவன் 

“All the best மது .. Have a happy life…நான் முன்பு போட்டோல உன்னை பார்த்த மாதிரி எப்பவும் சந்தோசமா சிரிச்சுகிட்டே இரு... “ என்றான் நெகிழ்ந்தவாறு... 

“ஸ்யூர்.... தேங்க்ஸ்... “ என்று அழகாக புன்னகைத்தவள் இருவருக்கும் குட் நைட் சொல்லி தங்கள் அறைக்கு வந்தாள்...

தங்கள் அறைக்கு அருகில் வந்தவள் ஏனோ உள்ளே காலடி எடுத்து வைக்க தயக்கமாக இருந்தது... 

முதல் முதலில் தன்னை அவள் மாமியார் இந்த அறைக்கு அனுப்பிய பொழுது எப்படி தயக்கமாக இருந்ததோ அதே தயக்கம் இப்பொழுதும்...

நெஞ்சு படபடக்க வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறக்க, கதைவை திறந்து கொண்டு மெல்ல உள்ளே வந்தாள்....

தன் படுக்கையில் அமர்ந்து கொண்டு அலைபேசியை நோண்டி கொண்டிருந்த நிகிலன் அவளை எதிர்பார்க்காதவன் மெல்ல தயக்கத்துடன் அடி எடுத்து வைத்து உள்ளே வந்தவளை கண்டதும் அதுவரை கொஞ்சம் அடங்கி இருந்த சூறாவளி மீண்டும் வீறு கொண்டு எழுந்தது...

அவளையே விழுங்கி விடும் பார்வை பார்க்க, மதுவோ இன்னும் படபடப்பானாள்...

மெல்ல அவன் முன்னே வந்து பால் டாம்ளரை நீட்ட அவள் சூடியிருந்த மல்லிகை சரம் முன்னே வந்து விழுந்து அவன் நாசியை தீண்டி இன்னும் சூடேற்றியது...

அவன் முன்பு போலவே பாலை எடுக்காமல் அவளையே கண்களால் பருகி கொண்டிருக்க, சற்று குனிந்திருந்தவள் விழி உயர்த்தி அவனை பார்த்தாள்... பின் மெல்ல

“சா.... சார் பால்... “ என்றாள் வார்த்தை வராமல்...

அவள் குரலில் தன் நிலைக்கு வந்தவன் 

“இந்த சார் ஐ இன்னும் விடலையா நீ...” என்று குறும்பாக சிரித்தவாறு அவள் கையில் இருந்த பாலை வாங்கி கொண்டான்....

அவளும் பதில் எதுவும் சொல்லாமல் புன்னகைத்தவாறு நிற்க, பாலை பருகிய பின் அதை வாங்கி சென்று வைத்தவள் மீண்டும் தன் பழைய இடமான அந்த சோபாவிற்கு செல்ல திரும்பினாள்...

அதற்குள் எட்டி அவள் கையை பற்றியவன் மெல்ல சுண்டி இழுக்க இதை எதிர்பாராதவள் தடுமாறி அவன் மார்பில் வந்து விழுந்தாள்...

பூச்சென்டாக தன் மேல் விழுந்தவளை இறுக்கி அணைத்தவன், 

“எங்க டி அங்க போற ?? “ என்றான் அதே குறும்பு சிரிப்புடன்.... 

“அ அது.. அது தான என்னிடம்.... “ என்றாள் தயங்கியவாறு...

“ம்கூம்.. இனிமேல் இதுதான் உன் இடம்.. “ என்று தன் மார்பை கண்ணால் சுட்டி காட்ட அவளோ இன்னும் சிவந்து போனாள்... 

அவளை இன்னும் இறுக்கி அணைத்தவன், 

“சாரி மது... என்னோட முட்டாள்தனத்தால உன்னை ரொம்ப கஷ்ட படுத்திட்டேன்...என்னை மன்னிச்சிடு ... " என்றான் கண்களில் வேதனையுடன்... 

அவன் வருந்துவது பிடிக்காமல் 

"இட்ஸ் ஓகே....பழசையெல்லாம் விடுங்க... சரி .. அத்தை சொன்னது எல்லாம் உண்மையா?? நீங்க நிஜமாகவே என்ன லவ் பண்ணீங்களா?? " என்றாள் ஆர்வமாக அதோடு அவன் வருத்தத்தை மாற்ற எண்ணி....

அவனோ மெல்ல வெக்க பட்டு 

"ம்ம்ம்ம்ம்ம் " என்றான்... 

“ஆனால் அதுதான் காதல் என்றெல்லாம் அப்ப தெரியலை... முதல் முதலா கார் ல வெயிட் பண்ணிகிட்டிருந்தப்போ நீ திடீர்னு வெளில வந்து அந்த ரோஜா கிட்ட ஏதோ பேசிகிட்டிருந்த.... 

ஏனோ உன்னுடைய இந்த எழிலான குழந்தை தனமான முகத்தை கண்டதும் அப்பயே என்னுள் சின்ன தடுமாற்றம்... மனதில் அலை அடிக்க ஆரம்பித்தது...

அதுவரை எத்தனையோ பெண்களை பார்த்திருக்கேன்... ஏன் என்னை மயக்க என்று எத்தனையோ பெண்கள் ஆபாச உடைகளில் கூட என் கண் முன்னே வந்திருக்கிறார்கள்.. 

ஆனால் எதற்கும் அசையவில்லை என் மனம்.. அப்படிபட்ட நான் உன் முகத்தை பார்த்ததும் அந்த நொடியே என் உள்ளே அதிர்வலைகள்....

இந்த முகத்தை அப்படியே கையில் ஏந்தி கொஞ்ச வேண்டும் போல இருந்தது..... அதற்குள் உன் அப்பன்... " என்றவன், அவள் அவனை செல்லமாக முறைக்க

ஹீ ஹீ ஹீ உன் அப்பா வந்திட்டார்... அப்புறம் உள்ளே சென்றதும் மீண்டும் கையில் காபி டம்ளருடன் நீயே வரவும் பக்கத்தில் உன்னை பார்க்கவும் இன்னும் என் மனம் எகிற ஆரம்பித்தது... 

உன்னையே ரசித்து பார்த்துகிட்டிருந்தேன்... அதை தான் எப்படியோ அம்மா பார்த்துட்டாங்க போல...

அதற்குள் நீ என் தம்பிக்காக பார்க்க வந்திருக்கிற பெண் என தெரிய எனக்குள்ளே ஏதோ உடைந்ததை போல இருந்தது... அப்படி ஒரு வலி அந்த நொடியில்... 

அதற்கு பிறகு வேண்டும் என்றே உன் மேல் தேவையில்லாத கோபத்தை வளர்த்து கொண்டேன்.. அப்படியாவது நீ என் மனதை விட்டு மறைந்து செல்வாய் என்று...

உன்னை பார்க்காதவரை அடங்கியிக்கும் என் மனம் உன்னை பார்த்ததும் அடங்க மறுத்தது...

இந்த மங்கி மகி வேற என்னையே எல்லாத்துக்கும் முன் நிறுத்தினான்.. அவன் திட்டம் அப்ப தெரியாது.... 

உன்னை பார்க்கவும் அதுவும் என் தம்பியின் மனைவி ஆக போகிறவள் என்று தெரிந்தும் என் மனம் அடங்காமல் துடிக்க ரொம்பவும் தவிச்சு போய்ட்டேன்....

ஏனோ கற்பனையில் கூட உன்னை அவனுடன் சேர்த்து பார்க்கவே எனக்கு பிடிக்கலை...நீ எனக்கானவள் என்றே என் உள் மனம் சொல்லி கொண்டே இருந்தது....

நீ அவனை மணந்து அவன் மனைவியாக இங்கு வந்தால் எப்படி சமாளிக்க போகிறேன்.." என்று பயந்தே உன் மேல் வெறுப்பை வளர்த்து உன்கிட்ட இருந்து விலகி நிக்கணும்னு தயார் பண்ணி வந்தேன்....

என் மனம் தெரிந்து கொண்ட அம்மா அப்பவும் கேட்டார்கள்

நீயே கட்டிக்கோ.. என்று.. அப்பயே சரி சொல்லிடலாம் னு நினைச்சேன்.. ஆனால் என் ஈகோ விட்டு கொடுக்கலை.. வெக்கத்தை விட்டு நான் உன்னை விரும்பறேன்.... தம்பிக்கு பார்த்தவளை நான் விரும்பறேன் என்று சொல்ல மனசு வரலை.. மறுத்துவிட்டேன்....

ஒருமுறை மகி உன்னிடம் போனில் பேசி கொண்டிருப்பதாக சொல்லவும் அப்படியே மனம் வலித்தது...” என்று நிறுத்தினான் மீண்டும் கண்களை இறுக மூடி... 

"ஐயோ.. அவர் என்கிட்ட ஒரு நாளும் பேசியதில்லை... " என்றாள் மது அவசரமாக

"ஹ்ம்ம்ம் தெரியும்.. இந்த நாய் வேற யார் கிட்டயோ பேசிகிட்டு உன் பெயரை இழுத்து விட்டுட்டான்... அப்பதான் நீயும் அவனை விரும்பறனு நானே தப்பா நினைச்சுகிட்டேன்.....

மீண்டும் அவன் திருமணத்தில் இருந்து பாதியில் ஓடிப்போக, அம்மா என்னிடம் உன்னை மணக்க சொல்லி கேட்டப்போ என் மனம் துள்ளி குதித்தது... 

ஆனால் கூடவே என்னுடைய மற்ற பயங்கள், நீ என் தம்பியை விரும்பின என்று தப்பாக எண்ணியது எல்லாம் சேர்ந்து என்னை குழப்பி விட்டன.. அதனால் தான் திருமணத்திற்கு மறுத்தேன்.... 

எப்படியோ திருமணம் ஆனதும் ஒரு மூலையில் நிம்மதியாக இருந்தது... ஆனாலும் என்னுடைய மற்ற பயம் ஈகொ சேர்ந்து தான் என் மனதை திறக்க விடாமல் பண்ணியது..

அப்பவும் உன்னை பார்க்கும் பொழுதெல்லாம் என் மனம் தவித்து போகும்... அதுவும் பர்ஸ்ட் டைம் நீ என் அறைக்கு வந்தப்ப, அப்படியே உன்னை கட்டி அணைத்து கொள்ள துடித்தது என் ஒவ்வொரு அனுவும்.... 

அப்புறம் டான்ஸ் ப்ராக்டிஸ் அப்ப என் மேல வந்து விழுந்தியே.... சான்சே இல்ல.. அப்பயே நான் தொலைந்து விட்டேன்...

அப்புறம் உன் காலேஜ் பங்சன் ல நீ டான்ஸ் ஆடறதை பார்த்த பொழுது எனக்காகவே ஆடின மாதிரி இருந்தது...உன்னையே பார்த்து கிட்டிருந்தேன்...அப்பல்லாம் என்னை என்னிடம் இருந்து காப்பதே பெரும் கஷ்டமாகி விடும்...

ஏற்கனவே தவிச்சுகிட்டிருந்தவன் முன்னாடி அன்று இரவு நீ வந்து நிக்கவும் அதுக்கு மேல என்னை கட்டுபடுத்த முடியலை... 

அடுத்த நாள் காலை எழுந்த உடனே உன்னை அணைக்க, நீ வெக்கபட்டு சிவக்கும் உன் முகத்தை காண ஆவலாக வந்தால்.......நீ அப்படி பேசவும் மீண்டும் எனக்குள்ளே இருந்த பயம் மற்றும் நான் வளர்த்து வந்த கோபம் எல்லாம் மீண்டும் தலை தூக்கியது....

அதான் அடுத்த நாள் உன்கிட்ட மோசமா நடந்து கிட்டேன்.... 

ரியலி சாரி மது... அந்த சம்பவத்தை நினைத்து ரொம்ப வெக்க படறேன்... இனிமேல் அது மாதிரி எப்பவும் நடந்துக்க மாட்டேன்.... 

அப்புறம் நீ என்னை விட்டு முதல் முதலில் பிரிந்து சென்ற அந்த 7 நாட்களும் நரக வேதனை அனுபவித்தேன்.. சரியாக சாப்பிடாமல் , தூக்கம் வராமல் எனக்கே ஆச்சர்யமாக இருந்தது.....

ஒரு பொண்ணுக்காக இப்படி எல்லாம் ஏங்குவேன் என்று நான் கனவிலும் நினைத்திருக்கவில்லை... 

ஆனால் அந்த வேதனை….. 

அப்பா... இப்ப நினைச்சாலும் மனதை வலிக்குது... " என்றான் கண்ணை இறுக மூடியவாறு..... 

அவன் வேதனை படுவது கண்டு அவளுக்கு கஷ்டமாக இருந்தது... அதோடு அவன் தன்னை இந்த அளவுக்கு காதலித்திருக்கிறான் என்ற உண்மையே அவளுக்கு உயிர் வரை சென்று இனித்தது...

இதை விட வேற எதுவும் வேண்டாம்... இந்த பிறவியின் பயனை அடைந்து விட்டதை போல இருந்தது மதுவுக்கு..... 

பூரித்து போனாள் பெண்ணவள்.... மெல்ல அவன் முகம் பார்த்து 

"இவ்வளவு காதலை மனசுக்குள்ளே பூட்டி வச்சுகிட்டு மூச்சு விடலையே... சரியான சிவி... " என்றாள் அவன் கன்னத்தை செல்லமாக கிள்ளி.....

அவனும் தன் பழைய நினைவுகளில் இருந்து வெளிவந்தவன் 

"ஏய்.. என்ன அது சிவி...?? " என்றான் சிரித்தவாறு...

"ஹ்ம்ம்ம் க்யூட் விருமாண்டி ... அதான் உங்க பெயர்... “ என்றாள் கண் சிமிட்டி குறும்பாக சிரித்தவாறு... 

“அடிப்பாவி ... புருசனுக்கு வைக்கிற பேரா இது.. விருமாண்டி னு.. " என்று அவள் மூக்கை பிடித்து செல்லமாக ஆட்டினான்...

“ஹ்ம்ம் நீங்க மட்டும் இன்னும் என்னை ஏய் னு தான கூப்பிடறீங்க... அதுக்கு நான் கூப்பிடற சிவி எவ்வளவோ பரவாயில்லை.." என்றாள் செல்ல சிணுங்களுடன் அவன் மார்பில் கோலமிட்டவாறு...

"ஹா ஹா ஹா... அது என்னவோ ஏய்தான் சரளமா வருது டி...சரி உனக்கு என்ன பெயர் வைக்கலாம் ?? “ என்று தன் தாடையில் கை வைத்து சில விநாடிகள் யோசித்தவன் 

“ஆங் கண்டு பிடிச்சிட்டேன்..... ஹனி... இது எப்படி இருக்கு ?? " ...

“ஐய... என்னது ஹனியா?? அது என் பெயரோட ஆங்கில அர்த்தம் தான்... இது செல்லாது.. என் பெயர் வராத மாதிரி வேற செல்ல பெயர் சொல்லுங்க... " என்றாள் சிணுங்களுடன்... 

"ஹ்ம்ம்ம் எல்லாரும் அவனுங்க பொண்டாட்டிகங்களுக்கு வேற பெயர் வச்சிருப்பாங்க.. அதனால் ஹனி னு செல்லமா கூப்டிறாங்க.... என் பொண்டாட்டி பெயரே ஹனி னு இருக்கிறப்ப நான் அதை சொல்லித்தானே கூப்பிட முடியும்....டி ... 

அது ஏனோ மது னு சொல்றப்ப மனமெல்லாம் இனிப்பதை போலவும் மதுவுக்கு இன்னொரு அர்த்தமான மதுவை போல உள்ள போதை ஏறுதுதான்..... 

என் மாமனார் சரியான பெயர்தான் வச்சிருக்கார்...." என்று சிரித்தவன் 

“இரு டேஸ்ட் பண்ணி பார்க்கறேன்... " என்றவன் 

அவள் எதிர்பாராத நேரம் அவளை இறுக்கி அணைத்தவன் குனிந்து அவள் இதழ்களை சுவைத்தான்...

தன் கணவனின் இறுகிய அணைப்பும் அவனின் அந்த முரட்டு இதழ்களின் தீண்டலும் சேர, சிவந்து போனாள்.... 

சிறிது நேரம் கழித்து மனமே இல்லாமல் விட்டவன்

"வாவ்.. செம டேஸ்ட் டி... " என்று கண்ணடித்தான்....அவளோ மீண்டும் கன்னம் சிவக்க, தன் முகத்தை கையால் மூடி கொண்டாள்... அதில் இன்னும் கிறங்கியவன் 

“சரி.. நீ சொல்.. எப்ப இருந்து நீ என்னை லவ் பண்ண ஆரம்பிச்ச ?? “ என்றான் காதலுடன் தன் மனைவியை பார்த்தவாறு.... 

“லவ் ஆ?? நானா?? அதெல்லாம் ஒன்னும் இல்லையே...” என்றாள் மனதுக்குள் சிரித்தவாறு... 

“ஹா ஹா ஹா... இதுதான் இந்த வருடத்தோட மிகப்பெரிய பொய்... நீ என்னை எவ்வளவு லவ் பண்ணினனு உன் கண்ணே காட்டி கொடுத்ததே... என்னை பார்க்கிறப்ப எல்லாம் உன் கண் டாலடிக்குமே... அப்பல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கும்...உன்னை தள்ளி நிறுத்த..எப்படியோ மனசை கல்லாக்கிட்டுத்தான் இருந்தேன்....

“சொல்லு டி... எப்ப இருந்து ?? “ என்றான் ஆர்வமாக 

“அதெல்லாம் தெரியலை...பூ எப்ப பூக்கும்னு யாருக்கும் தெரியாதோ, அதே போலத்தான் காதல் மலர்வதும்... எப்ப, எப்படி வரும்னு எல்லாம் தெரியாதாம்...

அது மாதிரிதான் எப்ப இருந்துனு எல்லாம் தெரியலை.. திடீர்னு உங்களை ரொம்ப பிடிக்க ஆரம்பித்தது... நீங்க என்னை திட்டினாலும் மிரட்டினாலும் ஏனோ என் மனம் உங்களையே சுத்தி சுத்தி வந்தது... “ என்றாள் கன்னம் குழிய சிரித்தவாறு...

“ஹ்ம்ம்ம்ம் ரொம்ப தேங்க்ஸ் டி.... நான் பண்ணின டார்ச்சர் ஐ எல்லாம் பொறுத்து கொண்டு என்னை இந்த அளவுக்கு காதலித்த உன்னை காலம் முழுவதும் கண் கலங்காமல் பார்த்து கொள்வேன்...லவ் யூ சோ மச்... “ என்று குனிந்து அவள் குண்டு கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்....

அதில் உருகியவள் “மீ டூ......” என்று அவன் திரண்ட மார்பில் முத்தமிட்டு தன் முகத்தை அவனுள் புதைத்து கொண்டாள்....

நிகிலனும் அதில் உருகி கரைந்து நிக்க, பின் ஏதோ நினைவு வர,

"ஹே... ஹனி.. நீ நல்லா பாடுவியாம்.. உன் பிரண்ட் சந்தியா சொன்னா... நான் இதுவரைக்கும் நீ டான்ஸ் ஆடி பார்த்திருக்கேன்... விளையாண்டு பார்த்திருக்கேன்.. நீ பாடி இன்னும் பார்க்கலை.. ஒரு பாட்டு பாடேன்.. "என்றான் கிறக்கத்துடன்...

"ம்ஹூம்.. அதெல்லாம் எனக்கு தெரியாது.. அந்த லூசு சந்தி ஏதோ உளறி வச்சிருக்கா... "என்றாள் நாணத்துடன்...

"பரவாயில்லை ... எனக்காக பாடு... நான் என்றும் மறக்க முடியாத பாட்டா ஒன்னு பாடு.... " என்று மீண்டும் அவளை வற்புறுத்த அவளோ அவனை சமாளிக்க முடியாமல் தன் மெல்லிய தேன் கலந்த குரலில் பாடினாள்..

காதோடுதான் நான் பாடுவேன்... 

மனதோடுதான் நான் பேசுவேன்... 

விழியோடுதான் விளையாடுவேன் - உன்

மடிமீதுதான் கண் மூடுவேன்... 



வளர்ந்தாலும் நானின்னும் சிறுபிள்ளைதான் - நான்

அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்... 

உனக்கேற்ற துணையாக எனை மாற்ற வா - குல

விளக்காக நான் வாழ வழி காட்ட வா... 



" என்று மையலுடன் பாடியவள் வெக்கபட்டு கன்னம் சிவக்க அவன் மார்பில் முகம் புதைத்து கொண்டாள்.... 

அதில் இன்னும் கிறங்கியவன் அடுத்த வரிகளை அவள் பாட விடாமல் இறுக்கி அணைத்தவன் அவன் சுவைத்திராத மற்ற பாகத்தின் தேனையும் சுவைக்க ஆரம்பித்தான் போதையுடன்.... 

அவளும் தன் கணவனின் அன்பு , காதல் மழையில் நனைந்து திக்கு முக்காடி போனவள் இதுவரை பட்ட கஷ்டம் எல்லாம் பறந்து போக மையலுடன் அவனுடன் ஒன்றி கொண்டாள்...

இதுவரை பிரிந்திருந்த இரு மனங்களும் ஒன்றிணைந்து ஒரு மனமாக, அழகாக அவர்களின் திருமண வாழ்க்கை மலர்ந்தது............. 



“ஹப்பாடா... எப்படியோ இறுதியில் போராடி ஜெயிச்சிட்டேன்.... எங்கே என் எதிரி... “ என்று நெற்றியில் கை வைத்து தேடுவதை போல தேடி பார்த்தான் அந்த வேலன்...

“ஹா ஹா ஹா என்ன வேலா... நீ ஜெயிச்சுட்டனு பெருமை அடிச்சுக்காதா.... நான் தான் உன்னை ஜெயிக்க வச்சேனாக்கும்.... “ என்று சிரித்தது அந்த விதி... 

"ஆங் .. இது என்ன புது கதை?? “ என்றான் வேலன் ஆச்சர்யத்துடன்....

“ ஹா ஹா ஹா புது கதை தான்.... போன ஜென்மத்து விதி படி இவர்கள் இருவரும் கஷ்டபடவேண்டும் என்று தான் என் ஆட்டத்தை ஆரம்பித்தேன்... 

ஆனால் இந்த ஜென்மத்தில் இந்த விருமாண்டி பிள்ளைகளால் கைவிடப்பட்ட எத்தனையோ முதியோர்களை காக்கும் இல்லத்தை அமைத்து அவர்கள் மனதை குளிர்வித்து விட்டான்...

அவன் மனையாளும் அதுக்கு உடன் இருக்க அந்த பெரியவர்களின் மனம் நிறைந்த ஆசிக்கு முன்னால் என்னால் எதிர்த்து நிற்க முடியவில்லை....

இந்த ஜென்மத்தில் செய்த புண்ணியத்தால் போன பிறவியின் பாவத்தையும் துடைத்து விட்டனர் இருவரும்... அதனால் இறுதியில் போனால் போகட்டும் என்று விட்டு விட்டேன்... நான் விட்டு கொடுத்ததால் தான் நீ ஜெயிச்ச.... " என்று சிரித்தது அந்த விதி..

“அதோடு இந்த ஜென்மத்தின் புண்ணியம் அவர்களுக்கு அடுத்த ஜென்மத்திற்கும் தொடர்ந்து இனி வரும் பிறவிகளிலும் இவர்கள் இருவரும் மனம் ஒத்த கணவன் மனைவியாத இதே காதலோடும் அன்போடும் வாழ்வர் என வாழ்த்துகிறேன்... நான் வருகிறேன் வேலா...." என்று விடை பெற்று மறைந்து சென்றது அந்த விதி... 

"ம்ஹூம்.. தோற்று போன பல பேர் சொல்ற டயலாக் இதுதான்.. அவங்க விட்டு கொடுத்ததால தான் மற்றவன் ஜெயிச்சானு... இந்த விதி மட்டும் என்ன அதுக்கு விதி விலக்கா ??.... இப்பவும் எப்பவும் ஜெயித்தவன், ஜெயிக்க பிறந்தவன் இந்த வெற்றிவேல் முருகன் தான்... " என்று தன் காலரை தூக்கிவிட்டு கொண்டான் அந்த சிங்கார வேலன்..... 



****** சுபம்******

Comments

  1. Magilan love va pathi sollave illaye akka

    ReplyDelete
    Replies
    1. Hi Pa, Magilan love patthi 'Azhagana Ratchashiye ... ' novel la varum.. Magilan is a Hero in this novel. This is available in Amazon. Will try to upload in this blog in future..

      Delete

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!