தவமின்றி கிடைத்த வரமே-45


அத்தியாயம்-45

தோ ஒரு மாய லோகத்தில் சஞ்சரித்தனர் இருவரும்... அவர்களின் மோன நிலையை பொறுக்காமல் வெளியில் மக்கள் நடமாடும் சத்தம் கேட்க, அதில் விழித்து கொண்டவன் மனமே இல்லாமல் அவள் இதழை விடுவித்தான்..

“சோ ஸ்வீட் ஹனி... தேங்க்யூ சோ மச்... சீக்கிரம் மாமாகிட்ட சொல்லி நாள் பார்க்க சொல்லலாமா? இது நாள் வரை காத்திருந்தது போதும்.. இனிமேலும் உன்னை பிரிந்து என்னால் காத்திருக்க முடியாது.. “ என்றான் தாபத்துடன்..

அவனை பார்த்தால் அன்றுதான் அதுவும் 5 நிமிடம் முன்னர் தான் தன் காதலை சொன்னவன் போன்று இல்லை.

பல வருடங்கள் காதலித்து பழகியவனை போல உரிமையுடன் பேச மித்ரா வாயடைத்து மந்திரத்துக்கு கட்டுண்டவளை போல தலையை மட்டும் ஆட்டினாள்..

அவளுக்கு தெரியாது.. அவன்தான் அவன் உலகில் அவளுடன் தினமும் காதல் மொழிகளை பேசி அவளை கொஞ்சி சிராட்டி பாராட்டி வருகிறான் என்று.. அதனாலயே அவள் தன் காதலை ஏற்று கொண்டதும் எந்த தயக்கமும் இல்லாமல் ஷ்யாம் அவளிடம் பழக முடிந்தது...

அவள் தலை அசைக்கவும்

“தேங்க்யூ சோ மச் மிரா... ஐ லவ் யூ..” என மீண்டும் அவளை மெல்ல அணைத்து விடுவித்தான்..

மித்ரா வுக்கோ அவனை விட்டு விலகவே மனம் இல்லை... அவன் அணைப்பிலயே இருக்க தவித்தது அவள் உடலின் ஒவ்வொரு அணுவும்... அதை நினைத்து அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது..

“நானா இப்படி மாறி போனேன்..விட்டால் ஷ்யாம் பைத்தியம் ஆகிடுவேன் போல.. “ என்று தனக்குள்ளே சிரித்து கொண்டவள் மெல்ல கன்னம் சிவக்க, தன் உதடுகளை பிரித்து வார்த்தைகளை தேடி

“ஐ லவ் யூ ஷ்யாம்....” என்றாள் காதல் கலந்த குரலில். வசியிடம் சரளமாக சொன்ன இந்த மூனு வார்த்தை ஷ்யாமிடம் சொல்ல வராமல் தந்தி அடித்தது...

அதை கேட்டு ஷ்யாம் திகைத்து அவளை பார்க்க, அவளோ வெட்க பட்டு கன்னம் சிவந்து கீழ குனிந்து கொண்டாள்.. அந்த நொடி ஷ்யாமிற்கு புரிந்தது அவளும் தன் காதலை உணர்ந்து கொண்டாள் என்று..

அவள் வசிக்காகத்தான் தன்னை ஏற்று கொண்டாள் என்று இருந்த சிறு உறுத்தலும் விலகி இருக்க, அவளை அப்படியே இறுக்கி அணைத்தவன் அவள் முகம் எங்கும் முத்த மழை பொழிந்தான்...

“தேங்க்யூ... தேங்க்யூ சோ மச் பேபி....ஐ லவ் யூ... “ என்று மீண்டும் ஏதேதோ காதல் மொழிகளை பேசி அவளை சிவக்க வைத்து ரசித்தவன்

“ஓகே பேபி... நம்ம ரொமான்ஸ் ட்யூட்டியை அப்புறம் கண்டினியூ பண்ணலாம்.. இப்ப வா நம்ம புரபசனல் ட்யூட்டியை பார்க்கலாம்.. அல்ரெடி பேசன்ட்ஸ் ஆர் வெயிட்டிங்.. “ என்றான் குறும்பாக கண் சிமிட்டி..

அவளும் வெட்க பட்டு தலை அசைக்க, அதற்குள் வசி கதவை மெல்ல தட்ட,

“உள்ள வாடா... “ என்றான் ஷ்யாம் சிரித்தவாறு

உள்ளே வந்த வசி ஷ்யாமை பார்த்து

“என்னடா பாஸ் பண்ணிட்டியா? இல்லை இன்னொரு அட்டெம்ப்ட் வேணுமா? “என்றான் குறும்பாக சிரித்தவாறு

“ஹா ஹா ஹா ஐயா பர்ஸ்ட் அட்டெம்ப்ட் லயே டிஸ்டிங்ஸன் ல பாஸ் ஆக்கும்.. பின்ன இந்த எக்ஸாமிற்காக 10 வருடமா பிரிப்பேர் பண்ணி வர்ரேன் இல்ல.. என்ன பேபி.. ஆம் ஐ கரெக்ட்? “ என்க அவளும் மெல்ல புன்னகைத்தாள் வெட்க பட்டு

அதை கண்ட வசிக்கு மனம் நிறைந்து இருந்தது

“வாழ்த்துக்கள் மிது அன்ட் ஷ்யாம்..இப்பதான் நிம்மதியா சந்தோஷமா இருக்கு.. நீங்க இரண்டு பேரும் எப்பவும் மனம் ஒத்த தம்பதிகளா இருக்கணும்.. சீக்கிரம் அங்கிள் கிட்ட பேசி கல்யாணத்துக்கு நல்ல நாள் குறிச்சிடலாம்... என்ஜாய் யுவர் டேஸ்.. “ என்று சிரித்தான் வசி..

ஷ்யாம் மற்றும் மித்ரா வும் தலை அசைத்து புன்னகைத்தவாறு வசிக்கு நன்றி சொல்லினர்...

“எப்படியோ.. நம்ம பாரதியோட ஆபரேஸன் சக்ஸஸ்.. மிஸ்ஸன் அக்காம்ளிஸ்ட்.. பாரதிக்குத்தான் நன்றி சொல்லணும்..” என்றான் ஷ்யாம்..

“ஆமாம் ஷ்யாம்...பாரதி மட்டும் சரியான நேரத்தில் மிதுவை வெளி கொண்டு வர திட்டமிடாமல் இருந்திருந்தால் நம்ம நால்வர் வாழ்வும் குழப்பத்திலயே போய்கிட்டு இருந்திருக்கும்... “ என்று வசியும் பாரதியை பாராட்டி தன் அலைபேசியில் பாரதியை அழைத்தான்..

பாரதியும் அந்த அழைப்பை ஏற்றதும்

“ஆங்.. சொல்லுங்க டாக்டர் சார்... என்ன மிஸ்ஸன் அக்காம்ளிஸ்ட் ஆ ? “ என்றாள் சிரித்தவாறு...

“யெஸ் பாரதி...பாரதினா கொக்கா?? பாரதி போட்ட திட்டம் என்னைக்காவது சொதப்புமா? சக்ஸஸ்..க்ரேட் சக்ஸஸ்.. ஆல் ஆர் ஹேப்பி.... “ “என்று சிரித்தான் வசி..

“அது.............அப்படியே என் புருஷன் காதுலயும் போட்டு வைங்க ப்ரோ.. அப்படியாவது என் அருமை பெருமை எல்லாம் அவருக்கும் தெரியட்டும்.. என்னை ஒரு நல்ல சைக்காலஜிஸ்ட் னு இன்னும் ஒத்துக்கவே மாட்டேங்கிறார் உங்க பிரண்ட்... “ என்று முகத்தை நொடித்தாள் பாரதி..

“ஹா ஹா ஹா.. கண்டிப்பா பாரதி..பேமஸ் கார்டியாலஜிஸ்ட் இந்த வசியாலயே இதயத்துல இருக்கறதை கண்டு புடிக்க முடியாத விசயத்தையெல்லாம் நீ கண்டு புடிச்சு அதுக்கு ட்ரீட்மென்ட் ம் கொடுத்து குணபடுத்திய நீதான் க்ரேட்.. தலைவா... இல்லை... தலைவி... யூ ஆர் க்ரேட்... “ என்று சிரித்தான் வசி...

“ஹீ ஹீ ஹீ... வசி அண்ணா... நீங்க சொல்ற கெட்டப்பை பார்த்தால் என்னை கலாய்க்கிற மாதிரி இருக்கே... என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே.. “ என்றாள் சந்தேகமாக...

“சே... சே... உண்மையைத்தான் சொன்னேன் பாரதி...உண்மையிலயே உன்னை மாதிரி ஒரு பொண்டாட்டி கிடைக்க ஆதி கொடுத்து வச்சிருக்கணும்..” என்றான் தழுதழுத்தவாறு...

“ஓ..தேங்க்யூ... தேங்க்யூ... இதையெல்லாம் ரெக்கார்ட் பண்ணி என் புருஷனுக்கு மறக்காம அனுப்பி வைங்க.. அப்புறம் ந்யூ கபுல் என்ன சொல்றாங்க? “

“ஹ்ம்ம் இரு அவங்க கிட்டயே தர்ரேன்.. “ என்றவன் அலைபேசியை ஷ்யாமிடம் கொடுத்தான் வசி..

“ரொம்ப நன்றி சிஸ்டர்... “ என ஷ்யாமும், “ரொம்ப தேங்க்ஸ் பாரதி.. “ என மித்ராவும் ஒரு சேர பாரதிக்கு நன்றி சொல்லினர்...

“ஹா ஹா ஹா.. செல்லாது .. செல்லாது ...இதெல்லாம் செல்லாது.. நன்றியை வெறும் வாயால இப்படி போன் வழியா சொன்னா செல்லாது...எனக்கு, நம்ம கேங் எல்லாருக்கும் ட்ரீட் வேணுமாக்கும்.. அதுவும் எனக்கும் என் பொண்ணுக்கும் மட்டும் ட்புல் ஐஸ்கிரீம்..ஓகே? “ என்றாள் பாரதி சிரித்தவாறு..

“ஹ்ம்ம் கண்டிப்பா சிஸ்டர்...எங்க இரண்டு பேர் வாழ்க்கையையுமே மீட்டு கொடுத்திருக்கீங்க..பெரிய ஸ்டார் ஹோட்டல் லயே உங்க எல்லாருக்கும் ட்ரீட்.. உங்களுக்கும் உங்க குட்டிக்கும் மட்டும் ஒரு ஐஸ்க்ரீம் மேளாவையே ஏற்பாடு செய்திடறோம்.. உங்களுக்கு எத்தனை வேணுமோ சாப்பிடுங்க.. “ என்றான் ஷ்யாம் சிரித்தவாறு..

“வாவ்.. இது சூப்பர் ஐடியா... யூ போத் ஆர் சோ ஸ்வீட்... எனிவே அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.. சட்டு புட்டுனு கல்யாணத்தை முடிச்சு எங்களோட குடும்பஸ்தர்கள் சங்கத்தில் ஐக்கியம் ஆய்டுங்க.. “ என்று சிரித்தாள்...

மற்றவர்களும் இணைந்து நகைத்து பின் சிறிது நேரம் கலாய்த்த பின் அலைபேசியை அணைத்தனர்...

“ஷி இஸ் சோ நைஸ் அன்ட் க்ரேட் வசி.. “ என்றான் ஷ்யாம் முகத்தில் மகிழ்ச்சியுடன்...

“ஹ்ம்ம் கரெக்ட் டா.. ஓகே கைஸ்.. நாம இப்ப ட்யூட்டியை பார்க்க போகலாம்னு நினைக்கிறேன்.. மீதியை அப்புறம் பேசலாம்..” என்றான் வசி சிரித்தவாறு...

“ஹ்ம்ம் ரொம்ப தேங்க்ஸ் வசி... தேங்க்யூ சோ மச்..ஐம் சோ ஹேப்பி நௌ.. “ என்று மித்ரா மீண்டும் வசியை கட்டி அணைத்து அவனுக்கு நன்றி சொல்லி ஷ்யாமை ஒரு வெட்க பார்வை பார்த்துவிட்டு தன் அறைக்கு ஓடி விட்டாள்...

அதை கண்டு இருவருக்குமே ஆச்சர்யம்..

“எப்பவும் ஒரு நிமிர்வுடன் பேமஸ் கைனிக் ஆக விளங்குபவள் இப்படி சிறு பிள்ளையாக வெட்க பட்டு ஓடறாளே.. அந்த மித்ராவா இந்த மித்ரா? “ என்று ஆச்சர்யத்துடன்...

“டேய் ஷ்யாம்.. நீ பெரிய ஆள் தான் டா.. எப்படி இருந்தவளை கொஞ்ச நேரத்திலயே இப்படி மாத்திட்டியே.. என்னடா மந்திரம் அது.... “ என்று ஷ்யாமை கலாய்த்தான் வசி..

“ஹீ ஹீ ஹீ.. எல்லாம் நீ மலர் சிஸ்டர்க்கு போடும் அதே மந்திரம் தான் டா .. “ என்று கண் சிமிட்டி சிரித்தான் ஷ்யாம்...

வசியும் வெட்க பட்டு சிரித்து அவனை கட்டி கொண்டு மீண்டும் ஒரு முறை நன்றி சொன்னான் ஷ்யாம் க்கு....

அதன் பிறகு அன்று ரவுண்ட்ஸ் வந்திருந்த மித்ராவின் தந்தையை வசி மற்றும் ஷ்யாம் இருவரும் சந்தித்து ஷ்யாம் காதல் பற்றியும் மித்ரா அதை ஏற்று கொண்டு திருமணத்திற்கு சம்மதித்து விட்டதையும் கூற அடுத்த நொடி எழுந்தவர் ஷ்யாமை இறுக்கி அணைத்து கொண்டார்...

அவருக்கு ஷ்யாம் ஐயும் முன்னாலயே தெரியும்.. வசி அளவுக்கு அவனும் நல்லவன் அதை விட பொறுப்பானவன். தன் குடும்ப பாரத்தை சுமந்து இன்று அனைவரையும் ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்தவன் என்று அறிந்திருந்தார்...

வசி மித்ராவை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட, அவருக்கு ஷ்யாமை மாப்பிள்ளையாக்கி கொள்ள எண்ணம் இருந்தது தான்..

ஆனால் அவர் மகள்தான் திருமணமே வேண்டாம் என்று மறுத்து விட, அதற்கு மேல் அவர் அந்த முயற்சியை கை விட்டு விட்டார்.

நடக்கறது நடக்கட்டும் என்று இருந்தாலும் ஒவ்வொரு திருமணத்திற்கு செல்லும் பொழுதும் தன் மகளுக்கு இப்படி ஒரு நல்லது நடக்க வில்லையே என்ற கவலை அவரை அரித்து கொண்டேதான் இருந்தது

இன்று அந்த கவலைய தீர்க்கும் வகையில் நல்ல செய்தியை கேட்க அடுத்த நொடி எதுவும் யோசிக்காமல் திருமணத்திற்கு சம்மதம் சொன்னார்..

அதோடு வசிக்கும் அவர் நன்றி சொல்ல அவனும்

“மிதுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுப்பது என்னுடைய கடமை அங்கிள்.. “ என அவரை அணைத்து கொண்டான்..

அதன் பிறகு வசியே ஷ்யாம் வீட்டிலும் விசயத்தை சொல்ல அவர்களுக்கும் மிக்க மகிழ்ச்சி.. இத்தனை நாளாக தன் மகனுக்கு ஒரு நல்லது நடக்கவில்லையே என்று ஏங்கி இருந்தவர்களுக்கு ரொம்ப மகிழ்ச்சி ஆகி போனது..

அடுத்த இரண்டு வாரத்தில் ஒரு நல்ல முகூர்த்த நாள் இருப்பதால் அதிலயே அவர்கள் திருமணத்தை வைத்து கொள்ளலாம் என்று அப்பயே முடிவு செய்தனர்..

வசியும் மகிழ்ந்து போய் மீண்டும் ஷ்யாம் மற்றும் மித்ராவை சந்தித்து

“இந்த இரண்டு வாரத்தில் உங்களுக்கான நேரத்தை அனுபவிங்க..மனம் விட்டு பேசுங்க..

ஷ்யாம், 10 வருடமா தேக்கி வைச்சிருக்கிற காதலை எல்லாம் சேர்த்து ஒரே நாள்ல கொட்டிடாத..மிது தாங்க மாட்டா.. “ என்று கிண்டல் அடிக்க இருவரும் வசியின் முதுகில் அடித்தனர் செல்லமாக..

பின் அவர்களிடம் இருந்து விடை பெற்றவன் உற்சாகமாக தன் வீட்டை நோக்கி காரை செலுத்தினான் வசீகரன்...



Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!