தவமின்றி கிடைத்த வரமே-6



அத்தியாயம்-6 

றுநாள் மாலை 5 மணி அளவில் தன் அன்றைய பணிகளை எல்லாம் முடித்து தன் அறையில் நேற்று பனிமலர் அனுப்பி வைத்திருந்த அந்த குழந்தையின் ரிப்போர்ட் ஐ ஆராய்ந்து கொண்டிருந்தான் வசீகரன்...

அப்பொழுது அவன் அறையின் கதவை மெல்ல திறந்து கொண்டு ஒரு பெண் மெதுவாக அவனுக்கு கேட்காமல் தன் மூச்சை அடக்கி கொண்டு பதுங்கியவாறு நுனிக்காலில் நடந்து உள்ளே வந்தாள்..

அந்த அறையில் நடந்து கொண்டே அந்த ரிப்போர்ட் ஐ ஆராய்ந்து கொண்டிருந்தவன் இப்பொழுது வாயிற்பக்கம் முதுகு காண்பித்து நிக்க, உள்ளே வந்த அந்த பெண் வசியின் கண்களை தன் இரு மென்கரங்களால் அழுந்த மூடிக் கொண்டாள்....

திடீரென்று யாரோ தன் கண்ணை பொத்தவும் திடுக்கிட்ட வசி, அடுத்த நொடி அது யாரென்று புரிந்ததால் உதட்டில் புன்னகை தவழ

“ஹே ... மிது.. எப்படி இருக்க?? எப்ப ஜெனிவால இருந்து வந்த ?? “ என்று கேட்டவாறு அவள் கையை விளக்கி அவளை தன் பின்னால் இருந்து முன்னால் இழுத்தான் வசி ....

“ஹா ஹா ஹா யூ ஆர் சோ ஸ்மார்ட் வசி டார்லிங்... அது எப்படி என் கையை கூட தொடாமல் நான் தான் னு கண்டுபிடிச்ச?? ..” என்றாள் கொஞ்சலாக சிரித்தவாறு...

“ஹா ஹா ஹா.. உன்னை தெரியாத எனக்கு மிது?? சரி .. ஏன் அதுக்குள்ள வந்திட்ட?? .. இன்னும் இரண்டு நாள் இருக்கே கான்ப்ரென்ஸ் முடிய..?? எப்படி வந்த?? “என்றான் கேள்வியாய்....

“டேய்... இப்ப எப்படி வந்தனு கேட்கறீயா?? இல்ல எதுக்கு வந்தனு கேட்கறீயா?? “ என்றாள் கோபமாக முறைத்தவாறு..

“ஹீ ஹீ ஹீ.. நான் போய் உன்னை எதுக்கு வந்தேனு கேட்பேனா மிது?? கான்ப்ரென்ஸ் இன்னும்இரண்டு நாள் இருக்கே... அதுக்குள்ள எப்படி வந்தனுதான் கேட்டேன்... “ என்று அசடு வழிந்தான்..

“ஹ்ம்ம்ம் அது... “என்று விரல் நீட்டி மிரட்டினாள்...அவனும் சிரித்துக்கொண்டே

“ஆமா... கான்ப்ரென்ஸ் எப்படியிருந்தது?? யூஸ்புல்லா இருந்ததா?? “

“ஐயா சாமி... நீ தொழில தெய்வமா மதிக்கிறவன் னு எனக்கு தெரியும்.. அதுக்குனு ஓவரா போகாத.. வந்ததில் இருந்து நான் எப்படி இருக்கேன் எப்படி தனியா அங்க சமாளிச்சேனு கேட்காம பார் அந்த வீணாப்போன கான்ப்ரென்ஸ் பத்தியே கேட்கறியே.. இது உனக்கே நியாயமா?? அடுக்குமா...?? “ என்றாள் அவனை முறைத்தவாறு.....

அவன் பதில் எதுவும் சொல்லாமல் புன்னகைக்க,

“இப்படி சிரிச்சே ஆளை மயக்கிடு டா.. “ என்று மனதுக்குள் திட்டியவள்

“ஹ்ம்ம்ம் கான்ப்ரென்ஸ் எல்லாம் நல்லாதான் போச்சு டா... ஆனா அது முடிந்த பிறகுதான் சரி போர்... தனியா என்ன செய்யறதுனு தெரியல.. அதுக்குத்தான் உன்னையும் வரச் சொன்னேன்..

இரண்டு பேரும் போயிருந்தால் எவ்வளவு ஜாலியா இருந்திருக்கும் தெரியுமா?? “ என்றாள் கண்ணில் அவனை காணாத ஏக்கத்துடன்....

“ஹ்ம்ம்ம்ம் அதான் அங்க நிறைய சைட் சீயிங் ப்ளேஸ் இருக்கே... நீ பாட்டுக்கு ஈவ்னிங் நல்லா சுத்த வேண்டியது தான?? “ என்று சிரித்தான்...

“ஹ்ம்ம்ம்ம் சுத்தினேனே.... ஆனா எங்க போனாலும் எல்லா இடத்துலயும் உன் நினைவாகவே இருந்தது வசி....

லாஸ்ட் டைம் நாம் இரண்டு பேரும் சேர்ந்து சுத்தினோம் இல்ல.. அதுதான் ஞாபகம் வருது.. நாம இரண்டு பேரும் சேர்ந்து ரசித்த இடங்களை தனியாக பார்க்க பிடிக்கலை...

சரினு ரூம்லயே இருந்தாலும் அதை விட கொடுமையா இருந்தது... என்னால உன்னை பார்க்காம இருக்க முடியல டா...

அதான் இரண்டு நாள் இருக்கவே கிளம்பிட்டேன்... “ என்று கண் சிமிட்டினாள்...

“அடிப்பாவி... நான் எவ்வளவு கஷ்டபட்டு அந்த கான்ப்ரன்ஸ்க்கு அட்மிசன் வாங்கி கொடுத்தா அது போர் அடிக்குதுனு இப்படி பாதியில விட்டுட்டு வந்திட்டியே.. “ என்றான் வருத்தமாக

“எனக்கு உன்னைவிட கான்ப்ரன்ஸ் ஒன்னும் முக்கியமில்லை டா... நான் தான் அப்பயே உன்னை விட்டு போக மாட்டேன் னு சொன்னேன் இல்லை.. நீதான் இது இம்பார்டன்ட் கான்ப்ரன்ஸ்.. நிறைய பேரோட நெட்வொர்க் கிடைக்கும்.. அது இது னு என்னை கன்வின்ஸ் பண்ணி அனுப்பிட்டு நீ எஸ்கேப் ஆகிட்ட...

எனிவே.. ரொம்ப பீல் பண்ணாத... மீதி இருக்கிற அஜென்டா பார்த்தேன்.. அவ்வளவு ஒன்னும் இம்பார்டன்ட் டாபிக் கிடையாது... அது எல்லாம் எனக்கு தெரிந்ததுதான்.....

அதான் பிளைட் டிக்கெட் ஐ பிரிபோன் பண்ணி உன்னை பார்க்க ஓடோடி வந்திட்டேன்....

காலையிலயே உன்னை பார்க்க கிளம்பளாம்னு பிளான் போட்டு அலார்ம் வச்சுட்டு தூங்கினா இந்த டாட் அந்த அலார்ம் ஐ ஆப் பண்ணி வச்சுட்டார் நான் நல்லா தூங்கணும்னு... பேட் டாட்...

ஈவ்னிங் தான் எழுந்தேன்... அதுவும் மம்மி வந்து எழுப்பின பிறகு..

அப்பதான் மணி பார்த்தேன்... உனக்கு போன் பண்ணினா நீ தான் ட்யூட்டி நேரத்துல எடுக்க மாட்டியே... உடனே கிளம்பி வந்திட்டேன்.. “ என்று சிரித்தாள்...

“ஹா ஹா ஹா.. நீ செய்யறது எல்லாம் பார்த்தா நீ ஒரு ஃபேமஸ் கைனிக் டாக்டர் னு யாருமே சொல்ல மாட்டாங்க மிது.. இன்னும் வளராமல் நான் காலேஜ் பர்ஸ்ட் டே பார்த்த அதே சின்ன குழந்தையாவே இருக்க... “ என்றான் வசி நெகிழ்ச்சியுடன்....

“ஹீ ஹீ ஹீ... மத்தவங்களுக்கு தான் நான் டாக்டர்.... உனக்கு எப்பவும் நான்....... “என்று ஏதோ சொல்ல வந்தவள் பாதியில் விழுங்கி கொண்டு

“நான் எப்பவும் உன் பெஸ்ட் பிரண்ட் மிதுதான்...” என்று சிரித்தவள்

“நீயும் தான் வசி மாறவே இல்லை.. அதே முதல் நாள் பார்த்தப்ப எப்படி திருதிருனு முழிச்சுகிட்டு பயந்து பயந்து கிளாஸ்க்குள்ள வந்தியோ அதே வசிதான்... “என்று அவன் முன் உச்சி முடியை செல்லமாக கலைத்தாள்....

அவளின் செய்கையை ரசித்தவாறு

“அப்புறம் மிது.. நேற்று அங்கிளை பார்த்தேன்...முன்னைக்கு இப்ப ரொம்ப டல்லாயிட்டார்... “ என்றான் வருத்தமாக

“ஹ்ம்ம் வயசாகுது இல்ல.. அப்படிதான் ஆகும்.. “ என்றாள் சமாளித்தவாறு

“ஐ திங் அவருக்கு வயசாவறது விட உன்னை பத்தின கவலைதான் அதிகம் மிது... நீ ஏன் இப்படியிருக்க?? .. பேசாம அவர் சொல்ற மாதிரி, ஆசை படற மாதிரி நீ கல்யாணம் பண்ணிக்கலாம் இல்லை... “ என்றான்...

“ஹீ ஹீ ஹீ இதே கேள்வியை நான் திருப்பி கேட்டா?? “ என்று தன் புருவங்களை உயர்த்தினாள்....

“நானும் தான் ஆன்டியை ஐ மீன் உங்கம்மாவை பார்க்கும் பொழுதெல்லாம் அவர் புலம்பறார்... நீ இன்னும் கல்யாணம் பண்ணிக்கலைனு... அவங்களுக்காகவது நீ கல்யாணம் பண்ணிக்கலாமே வசி... “ என்று மடக்கினாள்...

“ஹே... என்னை எது க்கு கம்பேர் பண்ற?? நான் ஜென்ட்ஸ்.. எப்படி வேணாலும் இருந்திடுவேன்.. ஆனால் நீ ஒரு பொண்ணுடா.. கல்யாணம் ஆகாம இருந்தால் சொசைட்டில தப்பா பேசுவாங்க...

அதோட இப்ப கல்யாணம் ஆகாம அப்புறம் வயசாயிடுச்சுனா மாப்பிள்ளை கிடைக்காது மிது.. அதான் காலா காலத்துல கல்யாணம் பண்ணிக்கோ...”என்றான் அக்கறையாக

“அது என்ன ஆம்பளைனா மட்டும் கல்யாணம் பண்ணிக்காம ஜாலியா இருக்கலாம்.. ஆனா பொண்ணுங்க கல்யாணம் பண்ணிக்காம இருந்தா இந்த சொசைட்டி தப்பா பேசும் னு சொல்றது..

This is not fair.. ஆணுக்கு தன் வாழ்க்கையை நிர்ணயிக்க எவ்வளவு உரிமை சுதந்திரம் இருக்கோ அதே உரிமையும் சுதந்திரமும் பெண்களுக்கும் இருக்கு டாக்டர் சார்... சோ இந்த மாதிரி எல்லாம் இன்னொரு தரம் சொல்லாதிங்க.. “ என்று முறைத்தாள் கோபமாக...

“ஓகே ஒகே... டோன்ட் பி டென்சன்...மிது... நான் கல்யாணம் வேண்டாம்னு சொல்லலையே... என் மனசுக்கு பிடிச்சவளை தேடிகிட்டிருக்கேன்... இப்ப கண்டு புடிச்சிட்டேன்.. “ என்று மனதுக்குள் ரகசியமாக சொல்லிக் கொண்டான்...

அவளை கண்டு பிடிச்சுட்டா உடனே கல்யாணம் தான்... நான்தான் சொல்லி இருக்கேன் இல்ல மது..

எனக்கு திகட்ட திகட்ட காதலித்து கல்யாணம் பண்ணனும்..

ஒரு பொண்ணை பார்க்கிறப்போ “இவதான் எனக்கானவள்” அப்படீனு என் இதயம் சொல்லனும்.. அவளை கண்ட நொடியில் உள்ளே சில்லென்ற பனிமழை பொழியணும்...

அவளை காணாத நொடிகளில் என் இதயம் அவளை காண துடிக்கணும்..அவளை பிரிய நினைக்கும் நொடிகளில் அந்த இதயம் அந்த வலியை உணரணும்...

என்று கண்ணை மூடி அனுபவித்து சொன்னான்... அதை கண்டவள்

“ஏன் டா.. என்னை பார்த்தா உன் இதயம் துடிக்கலையா?? பனிமழை பொழியலையா?? உன் மேல பைத்தியமா,உன்னையே சுத்தி கிட்டு இருக்கிற என்னை ஏன் உனக்குபிடிக்கலை?? ..

என்னை விட உனக்கு அழகா, வசதியா யார் வந்திடப் போறா?? “ என்று மனதுக்குள் புலம்பியவள் தன்னை மறைத்துக் கொண்டு

“நீ சொல்றதெல்லாம் சினிமாவுக்குத் தான் லாயக்கு டா.. உண்மையில அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை... நீ பாட்டுக்கு உன் பிடிவாதத்தை விட்டு வா...

எத்தனையோ பொண்ணுங்க உனக்காக காத்துகிட்டிருக்காங்க... “ என்று சமாதானம் படுத்த முயன்றாள்..

“சில நேரங்களில் சினிமாவும் வாழ்க்கையின் எதார்த்தங்களை தான் காட்டறாங்க மிது.. எனிவே என் டாபிக் ஐ விடு... உன் மேட்டர்க்கு வரலாம்... நீ ஏன் கல்யாணம் வேண்டாங்கிற.. ஒரு வேளை நீ இப்படி இருக்கிறதுக்கு நான் தான் காரணமா?? “ என்றான் அக்கறையாக....

“ஹா ஹா ஹா நீ காரணமா?? .. ஹ்ம்ம்ம்ம் குட்ஜோக்..

நீ என்னை கல்யாணம் பண்ணிக்கலை... என் லவ் ஐ ஏற்றுக்களைன உடனே காதல் தோழ்வியில் எனக்கு கல்யாணமே வேண்டாம் னு நினைச்சிட்டேனாக்கும்?? நினைப்புத்தான்...அதெல்லாம் ஒன்னுமில்லை.. “என்று சமாளித்தாள்..

உதடுகள் இல்லை என்றாலும் அவள் இதயம் அது தான் உண்மை அன்று அடித்து சொல்லியது... அதை அடக்கியவள்

“உனக்கு எப்படி ஒரு கொள்கையோ அதே போலத்தான் எனக்கும் டா... ஏனோ யாரை பார்த்தாலும் அதில் உன்னைத்தான் தேடுகிறேன் போல.. உன்னை மாதிரி அன்பா அக்கறையா என்னை யாரும் பார்த்துக்க மாட்டாங்க வசி ..

என்னால வேற யார் கூடயும் இவ்வளவு குளோசா, பிரியா இருக்க முடியாது டா

பேசாமா நீயே என்னை கல்யாணம் பண்ணிக்கோயேன்... எவ்வளவு ஜாலியா இருக்கும்.. ப்ளீஸ் டா... “ என்றாள் கெஞ்சலாக...

“ஹா ஹா ஹா.. அப்ப சொன்னதுதான் எப்பவும் மிது.. நீ எனக்கு ஆதி நிகில்,ஷ்யாம் மாதிரி ஒரு பெஸ்ட் பிரண்ட்...உனக்கு எதுனாலும் பிரண்ட் ஆ முன்னாடி நிப்பேன்...

என் மனைவிக்கும் மேல உன்னை என் இதயத்துல வச்சிருக்கேன்... அதிலிருந்து கீழ வர முடியாது டா ... ப்ளீஸ் புரிஞ்சுக்கோ... அங்கிள் சொல்ற மாதிரி... “என்று ஆரம்பிக்க,

அவள் கையை வேகமாக நீட்டி அவனை அடக்கினாள் போதும் என்ற அர்த்தத்தில்..

“இதே டயலாக் ஐ கேட்டு கேட்டு போரடிச்சிருச்சு....

சரி விடு.. ஆமா... நான் இல்லாம உனக்கு எப்படி இருந்தது?? ஜாலியா இருந்திருப்ப போல.. என்னடா நான் இல்லாத நேரத்துல யாரையாவது சைட் அடிச்சியா?? கரெக்ட் பண்ணிட்டியா?? முகத்துல ஒரு தனி கலை தெரியுதே... “ என்றாள் குறும்பாக சிரித்தவாறு ஆராயும் பார்வையுடன்....

“அதெல்லாம் இல்... “ என்று சொல்ல வரும்பொழுதே அவன் அலைபேசி ஒலித்தது... அதை எடுத்து அதன் திரையை பார்த்தவன் அதில்

“Jillu calling….” என்று ஒளிர,அவன் முகத்தில் தானாக புன்னகை அரும்பியது.. அவன் இதயம் வேகமாக எகிறி குதித்தது....

“ஒரு நிமிசம் மிது.. “ என்றவன் அந்த அறையை விட்டு வேகமாக வெளியேறி தனிமையான இடத்திற்கு சென்று அந்த அழைப்பை ஏற்று பேசினான்....

அவன் முகத்தில் வந்து போன மெல்லிய வெக்கமும், உதட்டில் தோன்றிய புன்னகையும் அவளுக்கு சந்தேகத்தை கொடுத்தது...

இத்தனை நாள் இல்லாத ஏதோ ஒன்று அவனிடம் அவள் வந்ததில் இருந்தே தெரிந்தது...

அதுவும் இன்று அவன் அலைபேசியை எடுத்துகொண்டு வெளியில் சென்றது மனதிற்குள் குடைந்தது.. இது வரை எந்த கால் வந்தாலும் அவள் முன்னேயேதான் பேசுவான்...

இன்று தனக்கு தெரியாமல் மறைத்து வேற பக்கம் போகிறான் என்றால்????

“ஏதோ சம்திங் ராங்..... அப்படி என்கிட்டயே மறைக்கிற அளவுக்கு என்னவா இருக்கும் ??? .... கண்டு புடிக்கிறேன்... “ என்று உளுக்குள் சொல்லி கொண்டாள் மிது என்கிற மித்ரா..

மித்ரா-சென்னையின் புகழ் பெற்ற முன்னனி தொழிலதிர்பர்களில் ஒருவரான நாதன் என்பவரின் ஒரே செல்ல மகள்... அவரின் உயிர் மூச்சு...

அவள் 5 வயது இருக்கும் பொழுது டாக்டர் செட் ஐ வைத்துக் கொண்டு விளையாண்டவள் தன் தந்தைக்கு வைத்தியம் பார்க்க, அதை கண்டு அவள் பாட்டி

“நீ வளர்ந்து பெரியவளாகி என்னவாக போகிறாய் ?? “ என்று கேட்டதற்கு

“நான் டாக்டராகி என் அப்பாவிற்கு வைத்தியம் பார்ப்பேன்.. “ என்று தன் தந்தையின் கழுத்தை கட்டிக் கொண்டாள்...

அதை கண்ட நாதன் நெகிழ்ந்து போய் தன் மகளை டாக்டராக்க வேண்டும் என்று உறுதி கொண்டார்... அதோடு அவள் படித்து முடித்து வரும்பொழுது அவள் ஒரு புகழ் பெற்ற அவளுடைய மருத்துவமனையில் தான் வேலை செய்ய வேண்டும் என்று அடுத்த நாளே மருத்துவமனையை கட்ட ஆயத்தமானார்...

அடுத்த ஆண்டிலயே சிம்பிளாக கட்டியும் முடித்தார்...அதற்கு தன் செல்ல மகளின் பெயரையே கொண்டு மித்ரா மல்ட்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல் என்று வைத்தார்...

அந்த மித்ரா வளர்ந்ததைப் போலவே அவளுக்காக ஆரம்பித்த அந்த மருத்துவமனையும் வளர்ந்து சென்னையின் புகழ் பெற்ற தனியார் மருத்துவமனைகளில் ஒன்றாகியது...

அவள் பன்னிரண்டாம் வகுப்பு முடிக்க மதிப்பெண் குறைந்து விட, மித்ரா தான் டாக்டர் ஆக முடியாது என ஒரே அழுகை.. உடனே கோடியை வாரி இறைத்து அவளுக்கு தனியார் மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கிக் கொடுத்தார் அவள் தந்தை...

அவள் படித்து முடித்ததும் தன் நண்பனுக்கு டாக்டர் வேலை வேண்டும் என கேட்க அதையும் யோசிக்காமல் தன் மகளுக்காக செய்தார்...

இப்படி தன் மகள் கேட்காமலயே வாங்கி குவித்த அந்த தந்தைக்கு தன் மகள் மனம் விட்டு ஆசையாக கேட்ட ஒன்றை மட்டும் வாங்கிதர முடியவில்லையே என்ற குறை மனதிற்குள் பாரமாக அழுத்தி கொண்டே இருக்கிறது...

மருத்துவமனை வாங்கிக் கொடுத்த அவருக்கு தன் மகள் அந்த மருத்துவமனையில் வேலை செய்யும் மருத்துவனையே கேட்க அவரும் அடுத்த நொடியே தயங்காமல் அந்த மருத்துவனிடம் சென்று நின்றார் தான் தன் மகள் விருப்பத்திற்காக....

ஆனால் அவனோ அதை மறுத்து விட்டான்...

“இந்த ஹாஸ்பிட்டலயே அவன் பெயருக்கு எழுதி வைப்பதாகவும் அதோடு அவர் தொழில்கள் எல்லாம் பின்னால் மித்ராவுக்கும் அவளை மணக்கப் போகிற அவனுக்குத்தான்.. “என்று தன் பணபலத்தை காட்டி அவனை வாங்க முயல, அவனோ அவருக்கு விலை போக மறுத்து விட்டான்....

அதோடு மித்ராவை தன் தோழியாக மட்டுமே பார்ப்பதாகவும் தன்னால் அவளை மனைவியாக ஏற்றுக் கொள்ள முடியாது என மறுத்து விட்டான் அந்த வசீகர மருத்துவன்....

பின் நாதன் அவன் பெற்றோர் வழியாக முயற்சி செய்ய, பணத்தை பெரியதாக மதிக்காத அவர்களும் தங்கள் பையன் விருப்பமே தங்கள் விருப்பம்... அவன் மறுத்து விட்டாள் அதற்கு மேல் தாங்கள் ஒன்றும் செய்ய முடியாது எனக் கையை விரித்து விட்டனர்....

அவருக்கே அது ஆச்சர்யமாக இருந்தது... இவ்வளவு பெரிய மருத்துவமனையும் பல கோடி சொத்தும் வர காத்து கொண்டு இருக்க அதை மறுக்கிறான் என்றால்???

உண்மையிலயே தன் மகள் ஒரு நல்லவனைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறாள்.. “என்று பெருமை அடைந்தார்... ஆனால் அந்த நல்லவன் தனக்கு மறுமகனாக வர மறுக்கிறானே என்றுதான் வருத்தமாக இருந்தது...

ஆரம்பத்தில் இது சரியாகிவிடும்... மனசு மாறி விடுவான் அந்த வசீகரன்.. என்று விட்டு பிடிக்க, அவனோ தான் பிடித்த பிடிவாதம், கொள்கையில் இருந்து மாறவேயில்லை...

அவன் பிடிவாதத்திற்கு நிகராக தன் மகளும் வேற ஒருவனை மணக்க மறுத்து பிடிவாதமாக அவனுக்காக தவம் இருக்க , இதோ 31 வயதும் ஆகி விட்டது அவர் செல்ல மகளுக்கு....

இன்னும் இரண்டு பேரும் இறங்கி வராமல் இருக்க, அதை கண்டு நாதனுக்கு தான் வேதனையாக இருந்தது...

இவ்வளவு பணம் புகழ் இருந்தும் தன் மகளுக்கு அவள் ஆசை பட்ட மாதிரி ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க முடியவில்லையே... “என்று வேதனை தினமும் புழுவாக அறித்து கொண்டிருக்கிறது....

அவருக்குமே இதை எப்படி சரி பண்ணுவது என தெரியாமல் அந்த ஈசன் விட்ட வழி என்று மனதை தேற்ற முயன்று கொண்டிருக்கிறார்...

வெளியில் சென்ற வசி பேசி முடித்து அறைக்குள்ளே வந்தவன்

“ஓகே மிது.. நான் கொஞ்சம் அவசரமா வெளில போகணும்... நாளைக்கு பார்க்கலாம்... சீ யூ பை... “ என்று அவள் பதிலுக்கு கூட காத்திருக்காமல் தன் கார் கீயையும் டேபிலில் இருந்த வாலட் ஐ யும் எடுத்துக் கொண்டு அவசரமாக அந்த இடத்தில் இருந்து நழுவினான்....

அவனின் இந்த செயலும் மித்ராவின் சந்தேகத்தை பெரிதாக வளர்த்தியது....

காரை நேற்று பனிமலரை சந்தித்த அந்த காபி சாப் ஐ நோக்கி செலுத்திக் கொண்டிருந்தான் வசி...

மித்ராவிடம் பேசி கொண்டிருக்கும் பொழுது மலர் அவனை அழைக்க, அவன் அவளுக்காக சேவ் பண்ணி வைத்திருந்த ஜில்லு என்ற பெயரை கண்டதுமே அவன் இதயத்தில் பனிமழை பொழிய ஆரம்பித்தது...

ஆனாலும் அதை மித்ராவிடம் காட்டாமல் இருக்கத்தான் அவசரமாக வெளியேறி சென்றது...

மலர் அந்த குழந்தையின் ட்ரிட்மென்ட் ஐ பற்றி விசாரிக்க, அவளை பார்க்கும் சந்தர்ப்பத்திற்காக அவளை நேரில் பார்க்க வேண்டும் என்றான்.. அவளும் சம்மதிக்கவே இதோ பறந்து கொண்டிருக்கிறான் உல்லாசமாக விசில் அடிதத படி...

அந்த காபி சாப் ஐ அடைந்ததும் பார்க்கிங் ல் காரை நிருத்தி வெளியில் வர, பனிமலரும் தன் ஸ்கூட்டியில் அப்பொழுதுதான் உள்ளே வந்து கொண்டிருந்தாள்....

அவனை கண்டதும் கை அசைத்தாள்... அவள் ஹெல்மெட் அணிந்திருந்ததால் முகம் தெரியா விட்டாலும் அவள் கை அசைப்பும் அவளின் வாசமுமே அது தன்னவள் என உணர்த்த அவனும் சிரித்து கொண்டே பார்க்கிங் நுழை வாயிலில் நின்று கொண்டான் அவளுக்காக...

மலரும் தன் கவசத்தையெல்லாம் கழற்றி வைத்து விட்டு தன் ஹேன்ட்பேக்கை எடுத்துக் கொண்டு வேகமாக அவனை நோக்கி ஓடி வந்தாள்...

அருகிவ் வந்ததும் காதில் இருந்த இயர் போனை கழற்றியவள் அப்பொழுது அவள் கேட்டு கொண்டு வந்த பாடலைக் கொஞ்சம் சத்தமாக பாடினாள்...

ஹலோ டாக்டர்... ஹார்ட் திருட்டாச்சே...

பல்ஸ் ஆ பாத்தா

ஃபாஸ்ட்-யூ பீட் ஆச்சே...



கேட்பரீஸ் கசக்குதே

காலேஜ் போர் ஆச்சே

குஷன் பெட் வலிக்குதே

தூக்கம் போய் நாலாச்சே...



ஹலோ டாக்டர்... ஹார்ட் திருட்டாச்சே...



என்று பாடிக்கொண்டே அவனை நெருங்கியவள் அப்பொழுது தான் அவளுக்கு நினைவு வந்தது அவனும் ஒரு டாக்டர் என்று..

உடனே தன் நாக்கை கடித்து கொண்டாள்...

வசியும் அவள் பாடியதை கேட்டு அவளை குறும்பாக பார்க்க

“ஹீ ஹீ ஹீ . சாரி டாக்டர்... அந்த பாட்டை கேட்டுகிட்டே வண்டி ஓட்டினனா ?? அதான் அப்படியே வாயில்ல வந்திருச்சு.. நீங்க ஒன்னும் தப்பா எடுத்துக்காதிங்க.. “ “என்று அசடு வழிந்தாள்..

“இட்ஸ் ஓகே... “ என்று சிரித்தவன்

“அது என்ன வண்டி ஓட்டும்பொழுது இயர்போனை காதுல மாட்டிகிட்டு பாட்டை கேட்பது?? அந்த பாடலை அமைதியா இருக்கிறப்ப கேட்கலாம் இல்லை.. “ என்றான்....

“ஹீ ஹீ ஹீ வண்டி ஓட்டும் பொழுது போரடிக்கும் இல்ல டாக்டர்... அதான்.. ஜாலியா பாட்டு கேட்டுட்டு வந்தா நாம் சிக்னல் நிக்கிற நேரம் கூட தெரியாது...இல்லைனா அந்த கிரீன் சிக்னல் வர்றதுக்குள்ள கடுப்பாயிடும்... ” என்றாள்..

“ஹ்ம்ம்ம்ம் இதுதான் இந்த ஜெனரேனோட சாபக்கேடு போல ... ஹெட்செட் ஐ யோ இயர் போனையோ மாட்டாமல் சுற்றிலும் வேடிக்கை பார்த்துகிட்டே வரலாம் இல்ல....” என்றான் முகத்தை சுழித்தவாறு

“ஐயோ.. டாக்டர்.. வேடிக்கை பார்க்க அப்படி என்ன இருக்கு?? .. அதே ரோடு.. அதே பில்டிங்... அதே சினிமா போஸ்டர்.. அப்புறம் அதே பொலிடீயன் படம்.. இதயே எத்தனை நாளைக்கு டாக்டர் பார்க்க முடியும்..” என்றாள் சலிப்பாக

“ஆனால் மக்கள் வேற வேறதான?? “ என்றான் தன் புருவங்களை உயர்த்தி...

அவள் புரியாமல் பார்க்க,

“சுத்தி இருக்கிற இடங்கள் எல்லாம் போரடிச்சால் உன்னை சுற்றி இருக்கிற மக்களை பார்க்கலாம்.. ஒவ்வொருவர் கிட்டயும் ஒரு கதை இருக்கும்... ஒவ்வொருவரையும் உன்னால ரசிக்க முடியும்...

ஒவ்வொருவரையும் வேற கோணத்துல பார்த்தா ஒவ்வொருவரும் வித்தியாசமா தெரிவாங்க... அவங்களை ரசிப்பதே ஒரு சுகம் தான்.. “என்றான் அனுபவித்து...

“சரியான லூசு... ஹ்ம்ம் இல்ல டுபாக்கூர் டாக்டர் ஆ இருப்பார் போல..” என்று உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள்.... ஆனாலும் அதை வெளி காட்டாமல்

“ஹ்ம்ம் ஓகே டாக்டர்... நீங்க சொல்றதையும் பாலோ பண்ணி பார்க்கறேன்.. இதுவும் புதுசாதான் இருக்கு.. “ என்றாள்.

“ஹா ஹா ஹா புதுசு இல்ல மா.. இதுதான் பழசு.. இப்படித்தான் முன்னாடி இருந்தோம்.. இந்த gadgets எல்லாம் வந்து நம்மை ஆக்ரமித்கும் முன்னாடி.. “ என்று சிரித்தான்..

“ஆகா.. விட மாட்டேங்கிறானே...” என்று புலம்பியவள்

“ஒகே.. டன் டாக்டர்... ஒத்துக்கறேன்... சரி நாம் இப்ப ஒரு காபியை குடிக்கலாமா??... ரொம்ப பசிக்குது... “ என்றாள் பாவமாக..

“ஒ... சாரி பனிமலர்.... வா போகலாம்.. “ என்றவாறு உள்ளே சென்று நேற்று அமர்ந்த அதே டேபிலில் அமர்ந்தனர்.. காபியோட அவளுக்கு வேறு சில சிற்றுண்டியையும் ஆர்டர் பண்ணினான்...

“ஹ்ம்ம்ம் சொல்லுங்க டாக்டர்.. கீர்த்தியோட ரிப்போர்ட் எல்லாம் உங்க பிரண்ட் கிட்ட காட்டினீங்களா?? என்ன சொன்னாங்க..?? அந்த குட்டிய காப்பாத்திடலாம் இல்ல... “என்றாள் ஆர்வமாக....

அவளின் முகத்தில் தெரிந்த ஆர்வத்தில் பளிச்சிட்ட அவள் முகத்தை ரசித்தவன்

“ஹ்ம்ம்ம்ம்ம் பார்த்தேன்... “என்று சொல்ல வந்தவன்

“பார்த்தான்.... சரி பண்ணிடலாம்னுதான் சொன்னான்.. சீக்கிரம் ஆபரேசன் பண்ணனுமாம்... “என்றான்...

“அதுதான் தெரிஞ்சது ஆச்சே..புதுசா ஏதாவது சொல்லுவார்னு பார்த்தா?? ” என்று உள்ளுக்குள் பொறுமியவள்

“சரி .. அவரே ஆபரேசன் பண்ண ஒத்துகிட்டாரா?? “ என்றாள் ஆர்வமாக

“ஹ்ம்ம்ம்ம் ஒத்துகிட்டான்...” என்றான் சிரித்தவாறு..

‘வாவ்.. சூப்பர்டாக்டர்.. நீங்கதான் பெஸ்ட் டாக்டர்.. “என்று அவன் கையை பற்றிக் குலுக்கினாள்...

அவனுக்கோ விண்ணில் பறப்பதை போல இருந்தது அவளின் முதல் தொடுகை...

ஆனாலும் தன்னை மறைத்துக் கொண்டு

“இட்ஸ் ஓகே பனிமலர்.. அப்புறம் இன்னொரு விசயம்...

கீர்த்தி பாப்பா இப்ப இருக்கிற ஹாஸ்பிட்டல் நிறைய செலவு ஆகும்... என் பிரண்ட் ஆதி இந்த மாதிரி முடியாதவங்களுக்கு ஹெல்ப் பணறதுக்குனு RJS hospital னு நடத்திகிட்டு வர்ரான்..

மெயின் ஆ ஹார்ட் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல் அது.. ஆனா இல்லாதவங்களுக்கு மட்டும் தான் சிகிச்சை முழுவதுமே இலவசம் அங்க..

அவன்கிட்டயும் பேசிட்டேன்... இந்த குழந்தையை அங்கயே சேர்க்க சொல்லிட்டான்.. அதனால எந்த ஹாஸ்பிட்டல் செலவும் தேவையில்லை.. “என்றான்..

அதை கேட்டதும் துள்ளிக குதித்தாள் மலர்..

“நிஜமாகவா சொல்றீங்க டாக்டர்.. ஆனால் இந்த ஹாஸ்பிட்டல் பற்றி கேள்வி பட்டதில்லையே.. “ என்றாள் யோசனையாக...

“அது இப்பதான் சமீபத்தில ஆரம்பித்தது.. நிறைய பேருக்கு அதைப் பற்றி தெரியல.. அதனால அங்கயே கீர்த்திய சேர்த்துடலாம்.. “

“ஹ்ம்ம் நல்லது டாக்டர்... ஆனா இந்த ஹாஸ்பிட்டல் லயிருந்து விடுவாங்களா டாக்டர்.. ?? “என்றாள் யோசனையாக..

“ஹ்ம்ம் நான் வந்து பேசறேன்.. அந்த ஹாஸ்பிட்டல் MD எனக்கு தெரிந்தவர் தான்... அதோட கீர்த்திய பார்த்த டாக்டர் ம் என் பிரண்ட் தான்.. நான் சொன்னா கேட்பாங்க... அந்த ஹாஸ்பிட்டலுக்கு மாத்திடலாம்..” என்றான்...

“வாவ்.. சூப்பர் டாக்டர்... ஆனால் நான் ஏற்கனவே இந்த குட்டிக்காக பன்ட் கலக்ட் பண்ணிட்டனே... அதை என்ன பண்ண?? “ என்றாள் யோசனையாக....

“அதை வேணும்னா அந்த குழந்தை பேர்ல பிக்ஸ்ட் டெபாசிட் ல போட்டிடு.. மாதா மாதம் அந்த குழந்தைக்கான மருந்து செலவும் மேலும் அவள் படிப்புக்கும் அது உதவும் இல்லை.. “என்றான்....

அதை கேட்டு மலர்ந்தவள்

“”கிரேட் டாக்டர்... அப்பப்ப உங்க மூளையும் கொஞ்சம் வேலை செய்யுது டாக்டர்.. “என்றாள் குறும்பாக சிரித்தவாறு...

அவளை முறைக்க, அதற்குள் அவள் நேற்று சொன்னது நினைவு வர, அவனும் வாய்விட்டு சிரித்தான்..அவர்கள் ஆர்டர் பண்ணியது வர, அதை சாப்பிட்டு கொண்டே

“டாக்டர்.. அப்படீனா இப்பயே வந்து பேசுங்களேன்... முடிஞ்சால் நாளைக்கு கீர்த்தியை மாத்திடலம்.. ஆபரேசன் ஐயும் சீக்கிரம் பண்ண வச்சுடலாம்... நாள் ஆக ஆக எனக்கு பயமா இருக்கு.. “என்றாள்...

அவனும் சரியென்று தலையாட்ட, பின் இருவரும் காபியை குடித்து முடித்து விட்டு வசி பணத்தை கட்டிவிட்டு காரை எடுத்துக் கொண்டு அந்த மருத்துவமனைக்கு சென்றனர்....

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!