காதோடுதான் நான் பாடுவேன்-4
அத்தியாயம்-4
“எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லை..” என்று தன் மருமகள் சொன்னதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து அமர்ந்தார் சிவகாமி....
அவரின் அதிர்ந்த முகத்தை கண்ட மது பதறி
“ஐயோ!! அத்தை.. நீங்க பாட்டுக்கு நான் வேற யாரையாவது காதலிக்கறதாகவோ இல்ல வேற ஏதாவது கற்பனை பண்ணிக்காதிங்க...
எனக்கு ஏன் இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லைனா??... எனக்கு இன்னும் நிறைய படிக்கணும் னு ஆசை அத்தை... அதான்....” என்றாள் தயங்கியவாறு...
அதை கேட்டு நிம்மதி அடைந்த சிவகாமி
“அப்பாடா... அவ்வளவு தான மது... நான் கூட இங்க ஏற்கனவே இருக்கிற பிரச்சனை பத்தாதுனு நீ வேற என்ன புதுசா சொல்ல போறியோனு கொஞ்ச நேரத்துல பயந்து போய்ட்டேன்... படிக்கறது தான.. நீ தாராளமா படி... ஆமா உனக்கு என்ன படிக்கணும்?? “ என்றார் சிரித்தவாறு...
“ஹ்ம்ம்ம் எனக்கு சின்ன வயசுல இருந்தே IAS எக்ஷாம் எழுதி கலெக்டர் ஆகனும் னு ஒரு கனவு அத்தை...
நான் இரண்டாம் கிளாஸ் படிக்கிறப்போ எங்க ஸ்கூலுக்கு ஒரு லேடி கலெக்டர் வந்தாங்க.. நல்ல உயரமா, ஸ்டைலா கொண்டை போட்டு கிட்டு அவ்வளவு கம்பீரமா ஜீப்பில வந்து இறங்கினாங்க...
எங்கஸ்கூல் ஹெச் எம் எப்பவும் சிடுசிடு னு எல்லாரையும் திட்டிகிட்டே இருப்பவர் கூட அவங்களை பார்த்து கை கட்டி நின்னார்...
அவங்க போனதுக்கு அப்புறம் எங்க மிஸ் கலெக்டர் னா என்ன செய்வாங்க அப்படீனு விளக்கமா சொன்னாங்க... நீங்களும் நல்லா படிச்சு இந்த மாதிரி கலெக்டர் ஆகி மக்களுக்கு நல்லது செய்யணும் அப்படீனு சொன்னாங்க...
அதிலிருந்து எனக்கு அவங்க மாதிரி நானும் கலெக்டர் ஆகணும்னு மனசுக்குள்ள பதிஞ்சிடுச்சு..
அதான் டிகிரி முடிச்சிட்டு ஒரு வருடம் UPSC exam எழுத பிராக்டிஸ் பண்ணனும் னு நினைச்சுகிட்டு இருந்தேன்.. அதுக்குள்ள எங்க அப்பா அவசரப்பட்டு கல்யாணம் பண்ணி இங்க தள்ளி விட்டுட்டார்.. எனக்கு அவர் பேச்சை தட்ட முடியலை...
அதனால நீங்க உங்க பையன போர்ஸ் பண்ணாதிங்க அத்தை.. அவருக்கும் இது எதிர்பார்க்காத கல்யாணம் தான... அவருக்கு கொஞ்சம் டைம் குடுங்க... அதுக்குள்ள நானும் படிச்சிடுவேன்..
நீங்க போர்ஸ் பண்ணீங்கனா அவருக்கு என் மேல வெறுப்பு தான் வரும்... எனக்காக அவருடைய பழக்கத்தை திடீர்னு மாத்த சொன்னா கோபம் தான் வரும்.. அதான் உங்க மேல காமிக்கிறார் போல...
அதனால் நீங்க எனக்காக பார்த்து அவர் கிட்ட எதையாவது சொல்லி அதுக்கு அவர் திட்டி நீங்க கஷ்டப்படாதிங்க.... அவர் இஷ்டத்திற்கே விட்டுடுங்க.. எனக்கு இதனால ஒரு வருத்தமும் இல்ல.... “ என்றாள் தயங்கியவாறு
தன் மருமகள் சின்ன பிள்ளை ஒன்னும் தெரியாதவள் னு நினச்சுகிட்டு இருந்தவருக்கு அவள் இவ்வளவு தெளிவாக பேசவும் மனம் குளிர்ந்து போனது சிவகாமிக்கு.. அப்படியே அவளை கட்டிக் கொண்டார்...
“வந்த இரண்டு நாள் ல அவன இந்த அளவுக்கு புரிஞ்சு வச்சிருக்கியே !! இது போதும் மது மா...
கல்யாணம் ஆகி இரண்டாவது நாளே கூட புருஷன் இரவு லேட்டா வந்தா சண்டைக்கு நிக்கற பொண்ணுங்க நடுவுல அவன் குணத்த புரிஞ்சுகிட்டு அவனுக்காக பேசறீயே...உன்ன மாதிரி ஒரு பொண்டாட்டி கிடைக்க என் பையன் கொடுத்து வச்சிருக்கணும்...
இனிமேல் எனக்கு அவன பத்தி கவலை இல்ல... நீ எப்படியும் அவன் குணத்துக்கு அனுசரிச்சு போய்டுவ னு நம்பிக்கை வந்திடுச்சு... உன்னாலதான் அவன மாத்தமுடியும் னு நினைக்கிறேன்..
எத்தனை பேருக்கு வாய்க்கும் இப்படி ஒரு மருமகள்?? ...நல்ல வேளை.. அந்த மகிழன் பண்ணின கூத்தால உன்னை இழந்திருப்பேன்... சரியான நேரத்துல அந்த வடிவேலன்தான் மனசு வச்சு உன்னை எங்க கிட்ட சேர்த்துட்டான் மூத்த மருமகளா....“ என்று சிரித்தவாறு அவள் நெற்றியில் முத்தமிட்டார் சிவகாமி....
இதை கேட்டு
“ஹா ஹா ஹா உன் சின்ன மகனை கூத்து ஆட வச்சு ஓட வச்சதே நான் தான் சிவா...” என்று அந்த வேலன் நமட்டு சிரிப்பை சிரித்து கொண்டான்...
“உன் நல்ல எண்ணத்திற்கு நீ நல்லா இருப்ப மது மா... நிகிலன் கொஞ்சம் முரடன் தான்.. ஆனால் உள்ளுக்குள்ள ரொம்பவும் நல்லவன்...என்ன சின்னவனாட்டம் பெரியவன் வெளில காமிச்சுக்க மாட்டான்.. நீயே போகப் போக புரிஞ்சுக்குவ...... “ என்று அவளின் கன்னத்தை வருடினார் சிவகாமி..
“சரி அத்தை..” என்று சிரித்தாள் மது
“அப்புறம் உன் படிப்பை இப்பவே ஆரம்பி...ஆமா அந்த பரிட்சை எழுதறதுக்கு எங்கயும் படிக்க போகணுமா?? “
“ஹ்ம்ம் ஆமா அத்தை...இந்த எக்சாம் க்கு டெல்லியில போய் கோச்சிங் கிளாஸ் ல சேர்ந்து எல்லாம் படிக்கிறாங்க... அவ்வளவு தூரம் போக முடியலைனாலும் இங்க சென்னையிலயே கோச்சிங் கிளாஸ் நிறைய இருக்கு அத்தை..
அந்த அட்ரெஸ் எல்லாம் எடுத்து வச்சிருக்கேன்.. நானும் அப்பாவும் போய் விசாரிச்சுட்டு வர்றதா இருந்தது.. அதுக்குள்ள எல்லாம் சொதப்பிட்டார்... “ என்றாள் வருத்தமாக...
“அவ்வளவுதான.. நாளைக்கே நாம இரண்டு பேரும் போய் விசாரிச்சுட்டு வரலாம்...நீ வருத்தபடாத “ என்று சிரித்தார் சிவகாமி...
“நிஜமாகவா அத்தை...?? ரொம்ப தேங்க்ஸ் அத்தை.. “ என்று அவரை கட்டிகொண்டாள் மதுவும்...
“அப்புறம் நான் ஏதாவது தப்பா பேசியிருந்தால் மன்னிச்சிடுங்க....” என்றாள் தயங்கியவாறு..
“அடடா.. இப்பதான் என் மருமகளுக்கு தைரியம் வந்து அவ மாமியார்கிட்டயே இவ்வளவு நீளமா பேசியிருக்கானு சந்தோச பட்டேன்.. அதுக்குள்ள மறுபடியும் சுருங்கிக்கறாளே...
நீ எல்லாம் சரியாதான் சொன்ன மது .. இனிமேல் தப்பு சரி னு எல்லாம் யோசிச்சு யோசிச்சு பேசக்கூடாது.. உன் மனசுல பட்டத தைரியமா பேசணும்...நீ இந்த சிவகாமி மருமகள் னு பார்த்தாலே எல்லாருக்கும் தெரியணும்... என்ன சரியா?? “ என்று செல்லமாக கண்டித்தார்...
மதுவும் சரியென்று தலை ஆட்டினாள் சிரித்தவாறு..
அன்று இரவும் மதுவை அகிலாவின் அறையிலயே தங்க வைத்தார் சிவகாமி...
“அப்பாடா... ஒரு வழியா எதையோ சொல்லி இந்த அத்தையை சமாளிச்சாச்சு.. இனிமேல் நிம்மதியா இருக்கலாம்... “என்று மனதுக்குள் குதித்து கொண்டாள் மதுவந்தினி...
மறுநாள் காலை எழுந்த நிகிலன் வழக்கம் போல ஜாகிங் சென்று விட்டு திரும்பி வந்தவன், ஹாலில் அமர்ந்து அன்றைய செய்திதாளை எடுக்க, அதன் அருகிலயே அவன் எப்பவும் அருந்தும் சத்துமாவு கஞ்சி தயாராக இருக்க, அதை கண்டவன்
“பரவாயில்லையே... நேற்று கத்தியதுக்கு இந்த அம்மா மூஞ்சிய தூக்கி வச்சிருப்பாங்க... எப்படி சமாதானம் படுத்தறதுனு நினச்சா, கஞ்சி எல்லாம் ரெடியா வச்சிருக்காங்க... அப்ப கோபம் அந்த அளவுக்கு இல்ல போல... அப்ப சமாளிச்சுடலாம்... “ என்று நினைத்தவாறு கஞ்சியை குடித்தவன் தன் அறைக்கு எழுந்து சென்றான்..
சிறிது நேரம் கழித்து கிளம்பி கீழ இறங்கி வந்தவன் பார்வை டைனிங் டேபிலுக்கு செல்ல, அங்கு மூன்று பெண்களும் அமர்ந்து சிரித்து பேசி கொண்டிருப்பதை கண்டான்...
அதுவும் குளித்து முடித்து ஒரு சுடிதாரை அணிந்து கொண்டு வெளியில் செல்ல கிளம்பி தயாராக இருந்த மதுவிடம் சென்றது அவன் பார்வை... இதுவரை புடவையில் மட்டும் கண்டிருந்தவன் அவளை முதல் முறை சுடிதாரில் பார்க்க, அதுவும் அவளின் அந்த குழந்தை தனமான பளீரென்ற சிரிப்பு அவனுக்கு அந்த ரமணியை நினைவு படுத்த அவன் முகம் இறுகி, உடல் விரைத்தது...
கோபத்தில் தன் பற்களை கடித்தவாறு தன் அன்னை முன்பு கோபத்தை காட்டி கொள்ளாமல் இருக்க, தன்னை முயன்று கட்டுபடுத்தி கொண்டவன் வேக நடையுடன் டைனிங் டேபிலுக்கு சென்றான்....
அவன் அங்கு வருவதை கண்டு கொண்ட மது உடனே தலையை குனிந்து கொண்டாள்.. அகிலாவும் சிரித்து கொண்டிருந்ததை அப்படியே பாதியில் நிறுத்தி கொண்டாள்...
அங்கு வந்தவன் ஒரு சேரை இழுத்து போட்டு அமர்ந்தான் எதிரில் இருந்த மதுவை முறைத்து கொண்டே...
சிவகாமி அவனை பார்த்து புன்னகைத்தவாறு அவன் முன்னே தட்டை எடுத்து வைத்தார்...
நேற்று கத்தியதற்கு முகத்தை திருப்பாமல் தன்னை கண்டு புன்னகைக்கும் தன் அன்னையின் முகத்தை காணவும் அவன் கோபம் கொஞ்சம் குறைந்தது....
அவனும் இலேசாக புன்னகைத்து எதுவும் பேசாமல் தன் காலை உணவை உண்டவன் அப்பொழுது தான் அகிலா அங்கு இருப்பது நினைவு வர
“ஏய் அகிலா.. என்ன ஸ்கூல் இல்லையா?? ஸ்கூல் போகாம இன்னும் இங்க என்ன பண்ணிகிட்டிருக்க?? “ என்று முறைத்தான்..
அவனின் திடீர் கேள்வியால் திடுக்கிட்ட அகிலா
தான் ஏன் ஸ்கூல் போகவில்லை என்பது மறந்து போக முழித்து கொண்டிருந்தாள் அவனை பார்த்து....
“ஏய்.. எதுக்கு இப்படி முழிக்கிற?? அதான் போன வாரமே கல்யாணம் னு சொல்லி இரண்டு நாள் லீவ் போட்ட இல்ல.. இன்னும் ஏன் ஸ்கூல் போகாம கட் அடிச்சிகிட்டிருக்க... “ என்று அதட்டினான்...
அவன் அதட்டலில் விழித்து கொண்டவள் ஒரு வழியாக யோசிக்க, அப்பொழுதுதான் இன்று ஸ்கூல் லீவ் என்பது நினைவு வந்தது...
“அது வந்து ணா... இன்னைக்கு ஸ்கூல் லீவ் விட்டிருக்காங்க... “ என்றாள் இழுத்தவாறு...
“ஹ்ம்ம்ம் அத சொல்றதுக்கு எதுக்கு இப்படி முழிக்கிற ??ஆமா எதுக்கு லீவ் ?? “என்றான் கண்கள் இடுங்க...
“ஆஹா... இவன் சாதாரணமா கேட்டாலெ எனக்கு எல்லாம் மறந்து போகும்.. இப்படி அதட்டி கேட்டா?? ஸ்கூல் லீவ் விட்டது கூட மறந்து போச்சு... இப்ப எதுக்கு லீவ் னு வேற இப்படி குறுக்கு கேள்வி கேட்கறானே...
போன வாரம் மிஸ் இன்று ஸ்கூல் லீவ் னு சொன்னது மட்டும் தான் காதுல விழுந்தது.. அது எதுக்கு லீவ் னு காரணத்தை சொன்னப்ப கேட்காமல் பக்கத்துல அரட்டை அடிச்சுகிட்டிருந்தது தப்பா போச்சே..
இப்ப என்ன காரணத்தை சொல்றது?? “ என்று மீண்டும் முழித்து கொண்டிருந்தாள் அகிலா...
நிகிலன் அகிலாவையே பார்த்த வண்ணம் இருக்க,
“அது வந்து..... எதுக்கு லீவ் னு சொல்லலை னா… “ என்று மென்று முழுங்கினாள்....
“மிஸ் சொல்லலையா?? இல்லை.. நீ காதுல வாங்கலையா?? “என்றான் மீண்டும் கண்கள் இடுங்க...
“சே... இவன் ஒரு போலிஸ்காரன்ங்கிறது சரியாதான் இருக்கு...ஒன்னு சொன்னால் அத நம்பாமல் நோண்டி நோண்டி கேட்கறானே... “ என்று மனதுக்குள் புலம்பியவள்
“ஹீ ஹீ ஹீ.. கல்யாண பிசியில என்ன காரணம் சொன்னாங்கனு மறந்து போச்சு னா... நமக்கு காரணமா முக்கியம்?? லீவ் தான் முக்கியம்... “ என்று அசடு வழிந்தாள்....
அவளின் அந்த அசட்டு சிரிப்பில் கொஞ்சம் இலகியவன் உள்ளுக்குள் சிரித்து கொண்டே
“சரி.. படிக்கிறதையாவது ஞாபகம் வச்சிருக்கியா ?? .. இல்லை அதையும் கல்யாண பிசியில மறந்துட்டு நிக்கறியா?? “ என்றான் தன் சிரிப்பை மறைத்து கொண்டு..
“அதெல்லாம் கரெக்டா ஞாபகம் வச்சிருக்கே ணா... நீ வேணா எந்த கேள்வி வேணும்னாலும் கேள்.. டக் டக் னு பதில் சொல்லுவேன்....“ என்று சிரித்து சமாளித்தாள்...
ஆனாலும் உள்ளுக்குள் கொஞ்சம் உதறல்தான் ஏதாவது கேட்டு விடுவானோ என்று..
மதுவோ குனிந்த தலை நிமிராமல் தன் தட்டை மட்டும் பார்த்து கொறித்து கொண்டிருந்தாள்.. சாப்பிட்டு முடித்து விட்டால் இவன் முன்னாடி எழுந்து வேற போகணுமே என்று பயந்து கொண்டு மெதுவாக கொறித்து கொண்டிருந்தாள்...
இரண்டு நாட்களுக்கு பிறகு தன் தன் மகனின் கொஞ்சமேயான இலகிய நிலையை கண்ட சிவகாமி,
“நிகிலா.. ஒரு ஹெல்ப் பண்ணனும்.... “என்று இழுத்தார்...
அவனும் தன் அன்னையின் முகத்தில் இருந்த தயக்கத்தை கண்டு மேலும் இலகியவன்
“ஹ்ம்ம்ம் சொல்லுங்க மா.. என்ன பண்ணனும்?? “ என்றான்..
“மது ஒரு இன்ச்டிடுயூட் க்கு போகனுமாம்... அவளை கூட்டிகிட்டு போறியா?? “ என்றார் தயங்கியவாறு
இதுவரை அவன் அகிலாவை திட்டி கொண்டிருந்ததை கண்டும் காணாமல் கீழ குனிந்து கொண்ட மது தன் பெயர் அடிபடவும் கூர்ந்து கவனித்தவளுக்கு சிவகாமி சொன்னதை கேட்டு திக் என்றது...
“ஐயோ.. இந்த அத்தை அவங்க தான கூட்டி போறதா சொன்னாங்க.. இப்ப திடீர்னு இந்த சிடுமூஞ்சி கூட கோத்து விடறாங்களே... இவன் கூட எப்படி தனியா போறது?? ம்ஹும்.. என்னால முடியாது..
வேல்ஸ்.. ப்ளீஸ் ஹெல்ப் மீ...அவன் கூட மட்டும் என்ன அனுப்பி வச்சிடாத “ என்று அவசரமாக அந்த வேலனை துணைக்கு அழைத்தாள் மது...
தன் அன்னை சொன்னதை காதில் வாங்கியவன்
“எதுக்கு?? என்ன இன்ச்டிடுயூட்.. “ என்றான் கண்கள் இடுங்க...
“அவள் ஒரு எக்ஷாம் எழுதனுமாம்.. அதுக்கு பிரிபேர் பண்ண?? “ என்றார் மெல்ல இழுத்தவாறு
“என்ன எக்ஷாம்..?? “ என்றான் அவனும் விடாமல்..
அவனின் குறுக்கு கேள்வியை கேட்ட அகிலா
“ஆஹா... இந்த ராஜமாத சிவகாமி தேவி தானா வாய கொடுத்து மாட்டிகிட்டாங்களே... நல்லா வாங்கி கட்ட போறாங்க...எப்படியோ நான் தப்பிச்சுகிட்டேன்.. அம்மா மாட்டிகிட்டாங்க...
அவங்க , அண்ணா முன்னாடி முழிக்கிறது கண் கொள்ளா காட்சியா இருக்கும்... அகிலா... என்ஜாய் பண்ணு.. “என்று உள்ளுக்குள் சிரித்து கொண்டே தன் அன்னையின் முகத்தை ஆர்வமுடன் பார்த்தாள் அகிலா...
சிவகாமியும்
“சே!! இவன் கிட்ட போய் தெரியாம கேட்டுட்டமே.. “ என்று தன்னையே நொந்துகொண்டு
“கலெக்டர் ஆகறதுக்கு எழுதற IAS பரிட்சையாம்” என்று மெதுவாக முனகினார்...
அதை கேட்டு புரை ஏறியது அவனுக்கு...
தன் முன்னே குனிந்து கொண்டிருந்த மதுவை ஏற இறங்க பார்த்தவன்,
“இந்த மூஞ்சி IAS ஆகுதாமா??.. IAS என்ன கடையில விக்குதா?? போய் வாங்கிட்டு வர?? “ என்று நக்கலாக சிரித்தான்..
குனிந்திருந்தாலும் இதுவரை சிடுசிடுவென்றெ கேட்ட தன் கணவனாகியவனின் குரலில் முதல் முதலாக தெரிந்த நக்கல் கலந்த சிரிப்பை கேட்டதும் அவன் தன்னை கிண்டல் அடிக்கிறான் என்று தெரிந்தும் அவளுக்கு கோபத்துக்கு பதிலாக ஆச்சர்யமாக இருந்தது...
“இவனுக்கு இப்படி கூட சிரிக்க வருமா?? “ என்று..
அவனின் கிண்டலை கண்ட சிவகாமி
“டேய்... என் மருமகளுக்கு என்னடா குறைச்சல்??.. உங்க அப்பா உன்னைய கலெக்டர் ஆக்கனும்னு நினைச்சார்... நீதான் மாட்டேனுட்ட.. அந்த மகிழன் ஆவது கலெக்டர் ஆவானு பார்த்தால் அவனும் கம்ப்யூட்டர் தான் கட்டிகிட்டு அழுவேனு போய்ட்டான் ...
என் மருமகளாவது உங்க அப்பா ஆசைய நிறைவேத்தி வைக்கட்டும்... “ என்று சிரித்தார் பெருமையாக
“ஹ்ம்ம்ம் ஆசைய மட்டுமா நிறைவேத்தி வைப்பா?? விட்டா அதுக்கு மேலயும் செய்வா...” என்று மனதுக்குள் திட்டினான்...
“சரி பெரியவா... நீ கூட்டிகிட்டு போய்ட்டு வர்ரியா?? “ என்று அவர் முடிக்கு முன்னே
“என்னது?? …நான் என்ன அவளுக்கு கார் ட்ரைவரா?? கலெக்டர் ஆகனும்னு நினைக்கிறவளுக்கு தனியா போய்ட்டு வரத் தெரியாதா??
முதல்ல அவள கத்திய ஒழுங்கா பிடிக்க சொல்லுங்க... அப்புறம் கலெக்டர் ஆகலாம்... “என்று மீண்டும் நக்கலாக சிரித்தான்...
“டேய்.. அதெல்லாம் அவ நல்லாதான் கத்திய பிடிக்கிறா... அன்னைக்கு நீ போட்ட கத்தல் லதான் பாவம் பயந்து போய் கீழ விட்டுட்டா... அத வச்சு அவள குறச்சு எடை போட்டுடாதா?? “ என்று முறைத்தார்....
“ஹ்ம்ம்ம் அவ்வளவு திறமை இருக்கிற உங்க மருமகளை அப்ப தனியாவே போய்ட்டு வர சொல்லுங்க... நான் எதுக்கு அவளுக்கு பாடி கார்டா?? “ என்றான் மீண்டும் நக்கலாக....
“கல்யாணம் ஆகி மூனாவது நாளே எப்படிடா அவளை தனியா அனுப்பறது?? “ என்று இழுத்தார்...
“ஏன் கல்யாணம் ஆனா என்ன கொம்பா முளச்சிருக்கு??...அப்படியே தான இருக்கா... அது ஏன் தான் இது ஒரு டயலாக் எல்லாரும் சொல்லிக்கறாங்களோ ?? கல்யாணம் ஆனா தனியா போகக் கூடாதுனு.. “ என்று முறைத்தான்....
“டேய்... அதுவும் இல்லாம அவங்க வீட்ல செல்லமா வளர்ந்தவ...வெளில எங்கயும் தனியா இதுவரைக்கும் போனதில்லையாம்... அவங்க அப்பாதான் எங்க போனாலும் கூட்டிகிட்டு போவாரம்... அப்படி இருந்த பொண்ணை எப்படிடா தனியா அனுப்பறது?? .. “என்றார் தன் மகனை ஓரக் கண்ணால் பார்த்து கொண்டே...
அவருக்கு எப்படியாவது இந்த காரணத்தை சொல்லியாவது தன் மருமகளை தன் மகனுடன் அனுப்பி வைக்க திட்டமிட்டே அவனிடம் இந்த பேச்சை ஆரம்பித்தது ... அவன் எப்படியாவது சம்மதித்து விடுவான் என்று பார்த்தால் இத்தன கேள்வி கேக்கறானே.. என்று ஆயாசமாக இருந்தது சிவகாமிக்கு...
“இங்க பாருமா... அவ பொறந்த வீட்டு பழக்க வழக்கத்தை எல்லாம் அங்கயே மூட்டை கட்டி வச்சுட்டு வரசொல்லுங்க.. இங்க இருக்கிறப்ப நம்ம வீட்ல எப்படியோ அப்படிதான் இருக்கணும்...
அதோட வேற ஏதாவது திட்டத்தோட அவ வந்திருந்தாலும் அதை எல்லாம் மறந்திட சொல்லுங்க... இங்க நான் சொல்ற மாதிரிதான் கேக்கணும்...
அப்புறம் அவள தனியா எப்படி அனுப்பறதா?? அவள விட சின்னவ அகிலாவே எல்லா இடத்துக்கும் தனியா தான போய்ட்டு வர்ரா... இவளுக்கு என்ன?? .. தனியாவே அனுப்பி வைங்க.. “ என்று மீண்டும் முறைத்தான்...
“டேய்.. அவ வெளி உலகம் தெரியாம வளர்ந்த பொண்ணுடா...இப்பதான் காலம் கெட்டு கிடக்குதே... அவள தனியா எப்படி அனுப்பறது?? “ என்று முறைத்தார் சிவகாமி
“ஏன் பொண்ணுங்க தனியா போனா என்னவாம்??... பொண்ணுங்க தனியா நின்னு பழகனும்.. எப்ப பார் அப்பாவையோ, அண்ணனையோ, தம்பியையோ அப்புறம் கல்யாணம் ஆன அவ புருசனையோ துணைக்கு கூட்டிகிட்டே சுத்தறது...
நம்ம நாட்டோட பாதுகாப்பு துறை அமைச்சரே (defense minister) ஒரு லேடி தான் தெரியுமா??.. ஏன் வெளியுறவு துறை அமைச்சரும் ஒரு லேடி தான.. அவங்க எல்லாம் தைரியமா நின்னு சாதிக்கல...
இங்க சென்னைல இருக்கிற ஒரு இடத்துக்கு போய்ட்டு வர்றதுக்கு என்னவோ அந்த சந்திரனுக்கே போற மாதிரி எதுக்கு பில்டப் பண்றீங்க...
பொண்ணுங்க தனியா தைரியமா எங்கயும் வெளில போகனும்...அப்படியும் எதுவும் பிரச்சனைனா எதிர்த்து போராட தான் எவ்வளவோ சேப்டி ஐட்டெம்ஸ் இருக்கு இல்ல... அப்புறம் என்ன?? “
“என்ன அகிலா... உனக்கும் தான் புரிஞ்சுதா?? “என்றான் அருகில் அமர்ந்திருந்த அகிலாவை பார்த்து...
“ஹ்ம்ம்ம்ம்..புரிஞ்சுது ணா... ” என்று தலையை வேகமாக ஆட்டினாள் அகிலா..
“சரி மா... நான் கிளம்பறேன்...அவ இன்னைக்கு தனியாதான் போகணும்...
அகிலா.. நான் உனக்கு சொல்லி கொடுத்த சேப்டி டிப்ஸ் ஐ எல்லாம் அவளுக்கும் சொல்லி கொடு..
மா... நீங்க எதுவும் அவளுக்கு ஹெல்ப் பண்றேனு கூட போக கூடாது... கலெக்டர் ஆகணும் னு நினைக்கிறவ முதல்ல ஒரு இடத்துக்கு தனியா போய் வர சொல்லுங்க...அப்ப பார்க்கலாம் இவ கலெக்டர் க்கு லாயக்கா இல்லையா னு ?? ” என்று பொரிந்தவன் எழுந்து மதுவை பார்த்து முறைத்து விட்டு சென்றான்....
அவன் போன பிறகுதான் தன் தலையை நிமிர்த்தி நிம்மதி மூச்சு விட்டாள் மது...
அகிலாவோ
“என்ன அண்ணி.. இந்த லெக்சர் போதுமா?? இன்னும் கொஞ்சம் வேணுமா?? ....” என்று கண்ணடித்து சிரித்தாள்..
சிவகாமியோ அகிலாவை பார்த்து முறைத்தார்...பின் மதுவை பார்த்து
“நீ ஒன்னும் கண்டுக்காத மது... அவன் போய்ட்டு போறான்.. நான் உன்னை கூட்டிகிட்டு போறேன்.. “ என்று சிவகாமி அவளை சமாதானபடுத்த முயன்றார்... உள்ளுக்குள் சிறு கவலையுடன்..
ஆனால் மதுவிற்கோ அவன் கடைசியாக சொல்லியதே அவள் மனதில் ஓடிக்கொண்டிருந்தது...
அவன் அவளை திட்ட என்று சொன்னாலும் அவன் சொன்னதிலும் அர்த்தம் இருப்பதாக தோன்றியது...
சமீபத்தில் வந்த செய்திதாளில் woman empowerment என்ற தலைப்பில் இரண்டு புகைப்படங்கள் வெளியாகி இருந்தது... ஒரு Conference ல் நம் நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு பக்கம் அமர, அத்தனை ஆண் அதிகாரிகளும் எதிர்புறம் அமர்ந்திருந்த புகைபடமும்,
அதே மாதிரி சமீபத்தில் நடந்த உலக நாடுகளின் மாநாட்டில் மற்ற நாடுகளின் வெளியுறவு துறை அமைச்சர்கள் ஆண்களாக இருக்க, நம் நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மட்டும் தனித்து கம்பீரமாக அத்தனை ஆண்கள் நடுவில் நின்றிருந்த போட்டோவை கண்டு வியந்திருக்கிறாள்...
அதோடு சமீபத்தில் 6 பேர் கொண்ட இந்திய பெண்கள் குழு தனியாக கடலில் 8 மாதமாக இந்த உலகை சுத்தி வந்த செய்தி நினைவு வந்தது...
மேலும் அவளுக்கு பிடித்த லீடர் ஆன இந்திரா காந்தியை நினைத்து கொண்டாள்... இந்த நாட்டையே அவர் ஆளலையா?? எவ்வளவு சிக்கலான பிரச்சனை எல்லாம் எவ்வளவு தைரியமாக நின்னு சமாளித்தார்...
என் கனவு படி நான் கலெக்டர் ஆனால் எவ்வளவு சமாளிக்க வேண்டி இருக்கும்... படித்து பரிட்சை எழுதி கலெக்டர் ஆனா மட்டும் போதுமா?? ... மனதாலும் அதற்காக தயார் ஆக வேண்டும்... இப்படி இங்க இருக்கிற இடத்துக்கு போய்ட்டு வர்றதுக்கே ஏன் பயந்து நடுங்கணும்?? ...
அவன்/ இல்ல அவர் சொன்ன மாதிரி பொண்ணுனா என்ன?? வெளில தனியா போகக்கூடாதா ?? “ என்று தனக்குள்ளே சொல்லி கொண்டாள்...
ராவணன் சீதாவை சிறை எடுத்து இலங்கைக்கு கொண்டு சென்று விட்டதை அறிந்ததும் தன் சக்தியை உணராத அனுமான் தன் நண்பர்கலுடன் கடற்கரையில் நின்று கொண்டு இந்த கடலை தாண்டி இலங்கைக்கு எப்படி செல்வது?? ராமன் சொன்ன செய்தியை எப்படி சீதாவிடம் சொல்லுவது ?? என்று முழித்து கொண்டிருந்தார்...
அப்பொழுது அவர் நண்பர்களில் ஒருவர்
"அனுமான்... உன்னால் இந்த கடலை தாண்ட முடியும்.. உன்னால் மட்டும்தான் இந்த கடலை தாண்டி மறுபக்கம் செல்ல முடியும் " என்று கூற, அனுமான் நண்பர்களும் உடனே உன்னால் முடியும் உன்னால் முடியும் என்று திரும்ப திரும்ப சொல்ல சொல்ல கொஞ்சம் கொஞ்சமாக அனுமான் தன் சக்தியை உணர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கடைசியில் வானை எட்டும் வரை வளர்ந்து நின்றார்..
பின் ஒரே அடியில் (step) அந்த முழு கடலையும் தாண்டி விடுவார்..
அந்த கதை மதுவுக்கு நினைவு வர, அவளும் மனதுக்குள் என்னால் முடியும் என்னால் முடியும் என்று திரும்ப திரும்ப சொல்லி கடைசியில் வீறு கொண்டு எழுந்தாள் மனதில்...
பின் ஒரு முடிவு செய்தவளாக சிவகாமியை பார்த்து
“வேண்டாம் அத்தை... நான் மட்டுமே தனியா போய்ட்டு வந்திடறேன்..” என்றாள் குரலில் திடத்துடன்...
அதை கேட்டு அதிர்ந்தார் சிவகாமி..
“என்னது தனியாவா?? நீயா?? உன்னை உங்க அப்பா அம்மா எங்க கைல புடிச்சு கொடுக்கையில அத்தனை தரம் உன்னை பத்திரமா பார்த்துக்க சொன்னாங்க மது மா... நானும் சரி னு சொல்லிட்டு தான் உன்னை கூட்டிகிட்டு வந்தது... அப்படி வந்திட்டு கல்யாணம் ஆகி மூனே நாள் ல உன்னை மட்டும் தனியா அனுப்பினா அவங்க என்ன நினைப்பாங்க??
அவங்க நினைக்கிறது இருக்கட்டும்.. என்னால தனியா உன்னை அனுப்பிட்டு நிம்மதியா இருக்க முடியாது.. அதனால நீ தனியா போறேங்கிற கதைய விடு... நாம இரண்டு பேரும் போய்ட்டு வந்திடலாம்... “ என்று மறுத்தார்...
“ஐயோ.... நானே இப்பதான் கொஞ்சம்ம்ம் தைரியம் வந்து தனியா போகலாம்னு நினைச்சா, இவங்க மறுபடியும் என்னை புடிச்சு வச்சுக்குவாங்க போல இருக்கே... அப்ப நான் எப்பதான் வளர்றது.??
இவங்களுக்கு எங்க அப்பாவே பரவாலை போல இருக்கு... “ என்று மனதுக்குள் புலம்பியவள்
“இவங்களை எப்படி சம்மதிக்க வைப்பது?? “ என்று அவசரமாக யோசித்தாள்.. பின் ஒரு வழி கிடைக்க, சிவகாமியை பார்த்து
“அத்தை... சொன்னா தப்பா எடுத்துக்காதிங்க...கல்யாணத்துக்கப்புறம் உங்க பையன் இப்பதான் முதல் முதலா என்கிட்ட ஒன்னு சொல்லி இருக்கார்... அவர் சொன்னதை தட்டற மாதிரி வேண்டாமே... அவர் சொன்ன மாதிரியே நான் தனியாவே போய்ட்டு வந்திடறேன்.... “ என்று சென்டிமெண்டாக பேசினாள்...
அதை கேட்டு சிவகாமியும் கொஞ்சம் யோசித்தார்...
“மது சொல்றதும் கரெக்ட் தான்... அவன் சொல்றபடி கேட்கலனா அவன் மீண்டும் வந்து கத்துவான்.. ஏன் அகிலா அவன் பேச்சை கேட்கலைனு அவன் கத்தியது இப்பொழுது நினைவு வர, தன் மருமகள் சொல்வதும் சரி என தோன்றியது...”
ஆனாலும் மதுவை பார்த்து
“நீ பத்திரமா போய்ட்டு வந்துடுவியா மது?? வேணா அகிலாவை கூட்டிகிட்டு போறியா.. ?? “ என்றார் பயத்துடன்...அவரின் பயத்தை கண்டவள் தன் முகத்தில் தைரியத்தை வரவழைத்து கொண்டு
“அதெல்லாம் நான் பார்த்துக்குவேன் அத்தை.. நீங்க கவலை படாதிங்க.. அதான் கையில போன் இருக்கு இல்ல.. எங்கயாவது தடுமாறினால் நானே உங்களுக்கு போன் பண்ணிடறேன்... “ என்று சிரித்தாள்..
பின் அகிலாவிடம் திரும்பி
“நிஜமா அவர் சொன்ன மாதிரி சேப்டி டிப்ஸ் பற்றி உனக்கு தெரியுமா அகிலா??.. “என்றாள் மெதுவாக..
அதுவரை அவர்கள் வாயை பார்த்து கொண்டிருந்த அகிலா, மதுவின் கேள்வியில் முழித்து கொண்டவள்
“தெரியுமா வா ?? .. இதை வச்சு ஒரு நாள் பெரிய கிளாஸ் எடுத்தான் நிக்கி அண்ணா... நீங்க வாங்க அண்ணி.. உங்களுக்கு நான் எல்லாம் சொல்லி தர்ரேன்....” என்று மதுவை அவள் அறைக்கு அழைத்து சென்றாள்... பின் தன் ஸ்கூல் பேக்கை திறந்து அதில் இருந்த பொருட்களை காட்டினாள்...
அவள் பாட புத்தகங்களை விட, அந்த சேப்டி ஐடெம்ஸ் தான் அதிகம் இருப்பதை கண்ட மது கண்கள் விரிய,
“இது எல்லாம் என்னது அகிலா?? இதை ஏன் நீ ஸ்கூல் பேக்ல வச்சிருக்க?? என்றாள்...
“இத பத்தி எல்லாம் உங்களுக்கு தெரியாதா அண்ணி?? அப்ப எப்படி தனியா வெளில போய்ட்டு வருவீங்க?? “ என்றாள் அகிலா மதுவை ஆச்சர்யமாக பார்த்து..
“ஹ்ம்ம்ம் தனியாவா?? நானா?? ம்ஹூம்.. எங்கப்பா என்னை எங்கயும் தனியா அனுப்ப மாட்டார்... காலேஜ் க்கே தனியா போக கூடாதுனு தினமும் என்னை கொண்டு வந்து விட்டுட்டு அப்புறம் வந்து கூட்டிகிட்டு வருவார்..
அவ்வளவு ஏன் எங்க வீட்டு தெரு கடைசியில இருக்கிற கடைக்கு கூட தனியா அனுப்ப மாட்டார்... ஒன்னு அவரே போய் வாங்கி வருவார்.. இல்லைனா என் கூடவே துணைக்கு வருவார்... “ என்றாள் கண்கள் மின்ன...
“ஹ்ம்ம்ம் எனக்கும் உங்கள மாதிரி ஒரு அப்பா இருந்திருக்கலாம்... “என்று தழுதழுத்தாள் அகிலா....
“ஏன் அகிலா..உனக்கு தான் இரண்டு அண்ணன்கள் இருக்காங்க இல்ல... அவங்க உன்னை கூட்டிகிட்டு போயிருப்பாங்க இல்ல... “ என்றாள் சந்தேகமாக...
“நீங்க வேற அந்த வயித்தெரிச்சலை ஏன் கேட்கறீங்க அண்ணி.. பேரு தான் இரண்டு அண்ணன்கள் னு...
அப்பா இல்லை ன உடனே இவனுங்க இரண்டு பேரும் என்னை பொருப்பா பார்த்துக்கணும்னு என்னை வச்சு அவனுங்க நாட்டாமை பண்ண கதை எல்லாம் கேட்டா கண்ணுல இரத்தம் வரும்... “ என்று சோகமாக முகத்தை வைத்து கொண்டு சிரித்தாள் அகிலா....
“ஓ.. அப்படி என்ன பண்ணினாங்க உன்னை?? “ என்றாள் மது ஆர்வமாக...
“ஹ்ம்ம்ம் நீங்களாவது கேளுங்க என் சோக கதையை.. “என்று இழுத்தவள் தொடர்ந்தாள்..
“நான் 10 த் முடிச்ச உடனே அப்பாடா இனிமேல் படிக்கிற தொல்லை விட்டது.. ஜாலியா வீட்ல தூங்கலாம்னு வீட்டுக்கு வந்தா, அன்னைக்கு நைட் உங்க புருசன் என்னை கூப்பிட்டு உட்கார வச்சு பொண்ணுங்க சேப்டி பத்தி பெரிய லெக்சர் அடிச்சான்...
நானும் வேற வழி இல்லாமல் கேட்க வேண்டியதா போயிருச்சு...அடுத்த நாள் ஈவ்னிங் 5 மணிக்கு வீட்டுக்கு வந்திட்டு என்னை இங்க இருந்து மெரினா பீச் க்கு தனியா போய்ட்டு அங்க இருந்து சுண்டல் வாங்கிட்டு வரணும் னு டாஸ்க் வச்சான்...” என்றாள் சோகமாக
“ஹா ஹா ஹா என்னது?? மெரினா பீச் ல போய் சுண்டல் வாங்க வா உன்னை தனியா போக சொன்னார்?? ஏன் அது இங்க கிடைக்கலையா?? “ என்று சிரித்தாள் மது...
மது வாய்விட்டு சிரித்ததை ரசித்தாலும் கொஞ்சம் கடுப்பாகி,
“சிரிக்காதிங்க அண்ணி... என்று முறைத்தவள்
“ஹ்ம்ம்ம் நானும் அப்ப இதயே தான் மனசுக்குள்ள கேட்டுகிட்டேன்.. அவன்கிட்ட நேரடியா கேட்க முடியாதே.. எனக்கு பயமாயிருக்கு.. நான் தனியா போனதில்லைனு என்னென்னவோ சொல்லி சமாளிக்க முயன்றாலும் அவன் விடவே இல்லை...
அவனே ஒரு ஆட்டோ புடிச்சு என்ன ஏத்தி தனியா அனுப்பி வச்சுட்டான்.. அம்மா எவ்வளவோ சொல்லியும் கேட்கலை...எனக்கு தன்னம்பிக்கை, தைரியம் எல்லாம் வரணும்.. நான் தனியாவே எல்லா பார்த்துக்கணும்.. யாரையும் டிபென்ட் பண்ணக்கூடாது.. அப்படி னு ஏதேதோ லெக்சர் அடிச்சி அம்மா வாய அடைச்சிட்டன்... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உங்க கிட்ட சொன்னது மாதிரி லெக்சர் தான்...
நினைச்சு பாருங்க... அதுவரைக்கும் நான் வெளில எங்கயும் போனதே இல்லை.. திடீர்னு தனியா ஆட்டோ ல அவ்வளவு தூரம் போகணும்னா எப்படி இருக்கும்???
அழுது கிட்டே போனேன்... எப்படியோ போய் பீச் ல இறங்கிட்டேன்... அங்க இருந்த கும்பலை பார்த்தா எனக்கு பயத்துல மயக்கமே வந்திடுச்சு...
எல்லாரும் கும்பல் கும்பலா இருக்காங்க.. நான் மட்டும் பே னு முழிச்சு கிட்டு நிக்கறதை கண்டு எல்லாரும் என்னை ஒரு மாதிரி பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க... “
“ஐயோ!! அப்புறம் என்னாச்சு..?? “ என்றாள் மது பதறியவாறு
“ஹ்ம்ம்ம்ம் அங்க என்ட்ரன்ஸ் ல இருந்து எனக்கு எப்படி பீச் உள்ள போறதுனு கூட தெரியலை.. அதுக்கு மேல சமாளிக்க முடியாதுனு சொல்லி உடனே நான் மகிழன் அண்ணாவுக்கு போன் பண்ணி ஒரே அழுகை...
நான் அழுவறத பார்த்துட்டு அடுத்த 10 நிமிசத்துல அந்த மங்கி அங்க ஓடி வந்திட்டான்...
நான் தனியா இருக்கிறத பார்த்துட்டு அவனும் பெரிய அண்ணாவை நல்லா திட்டினான் என்கிட்ட மட்டும்.. நேர்ல பெரிய அண்ணாவ பார்த்தா அப்படி பம்முவான்.. “என்று சிரித்தாள்..
“மகி அண்ணா வந்ததுக்கப்புறம் ஜாலியாயிருச்சு.. நான் கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்தான்.. இரண்டு பேரும் ஜாலியா பீச் ஐ சுத்தி பார்த்துட்டு மறக்காமல் அங்க இருந்து ஒரு சுண்டல் பாக்கெட்டையும் வாங்கி கிட்டு அவனே என்ன ஆட்டோல திரும்ப கூட்டிகிட்டு வந்திட்டான்...
வீட்டுக்கு பக்கத்துல வந்த உடனே அவன் இறங்கிட்டு நான் மட்டும் தனியா வந்தது மாதிரி நிக்கி அண்ணாகிட்ட கதை சொல்லிட்டேன்.. அவனும் நம்பிட்டான்... ஒருவழியா என் டாஸ்க் ஐ வெற்றிகரமா முடிச்சிட்டேன்...” என்று சிரித்தாள்
"அதுல இருந்து அப்புறம் எங்க போறதா இருந்தாலும் என்னை தனியா தான் அனுப்புவான் பெரிய அண்ணா.. எனக்கும் அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா பழகிடுச்சு.. இப்ப சென்னைல எங்க போகனும்னாலும் தைரியமா போய்ட்டு வந்திடுவேன்.. அதுக்கு நிக்கி அண்ணாவுக்கு தான் தேங்க்ஸ் சொல்லனும்.. “என்று சிரித்தாள்....
அகிலா அறியாதது அன்று அவளை தனியா அனுப்பிவிட்டு நிகிலனும் அவளை தொடர்ந்து பின்னால் வந்ததும் அவள் பீச் வாசலில் நிற்கும் பொழுது அவனும் மறைந்து அவளை கண்காணித்ததும்... அவள் மகிழனை அழைக்க அவன் வந்த பிறகே நிம்மதியுடன் திரும்பி வந்து விட்டான் நிகிலன்...
தன் தங்கை தனியாக சென்று பழகவேண்டும்.. அதற்கு முதலில் மனதை தயார் படுத்தவே அன்று அவன் அப்படி செய்தது...
“சரி.. அதான் அவன் சொன்ன டாஸ்க் முடிச்சாச்சே.. இனிமேலாவது ஜாலியா இருக்கலாம்னு நினைச்சா, அடுத்த நாளே என்னை கொண்டு போய் கராத்தே க்ளாஸ் ல தள்ளிட்டான்...கராத்தே க்ளாஸ் அது முடிஞ்சா யோகா க்ளாஸ்.. அப்படினு அவன் டார்ச்சர் லிஸ்ட் பெருசாகிகிட்டே இருந்தது...
பத்தாதற்கு இந்த மங்கி மகி அண்ணா... அவன் ஒரு பேட்மிட்டன் சேம்பியன்.. ஒலிம்பிக்ல பி.வி சிந்து மெடல் வாங்கறத பார்த்துட்டு,
“நீயும் அதுமாதிரி பேட்மிட்டன் நல்லா விளையாண்டு அடுத்த ஒலிம்பிக் ல Bronze மெடல் ஆவது வாங்கணும்... அப்பதான் நீ என் தங்கச்சினு எல்லார் கிட்டயும் பெருமை அடிச்சிக்க முடியும்..
அதனால நீ பேட்மிட்டன் க்ளாஸ் போற.. கத்துக்கற.. மெடல் வாங்கற னு.. வீர வசனம் பேசி என்னை கொண்டு போய் பேட்மிட்டன் க்ளாஸ் லயும் தள்ளி விட்டுட்டான் அந்த சின்ன மங்கி...
ஏன் அண்ணி.. அவன் பெருமை அடிச்சிக்கணும்னா அவன் நல்லா விளையாண்டு அவன் போய் ஒலிம்பிக் ல மெடல் வாங்க வேண்டியது தான... என்னை எதுக்கு டார்ச்சர் பண்ணனும்?? “ என்றாள் முகத்தை சோகமாக வைத்துகொண்டு....
அதை கேட்ட மது எவ்வளவு முயன்றும் தன் சிரிப்பை கட்டுபடுத்த முடியாமல் வாய்விட்டு சிரித்தாள்...
“ஹ்ம்ம்ம்ம் என் கதைய கேட்டு உங்களுக்கு சிரிப்பா இருக்கு??... என் பிரெண்ட்ஸ் எல்லாம் 10 த் லீவுக்கு மலேசியா சிக்கப்பூர் னு டூர் போனா என்னை மட்டும் ஊர்ல இருக்கிற எல்லா கோச்சிங் க்ளாஸ் லயும் போட்டு டார்ச்சர் பண்ணினானுங்க இரண்டு பேரும்... “ என்று பெருமூச்சு விட்டாள்....
மீண்டும் சிரித்த மது அகிலாவை பார்த்து
“அகி.. அப்ப உனக்கு பேட்மிட்டன் விளையாட தெரியுமா?? “ என்றாள் கண்கள் மின்ன...
“தெரியுமாவா?? அந்த மங்கி மகி அண்ணா பண்ணின டார்ச்சர்ல நான் இப்ப ஸ்டேட் சேம்பியன் அண்ணி...அடுத்து நேசனல் லெவல் ல விளையாட போறேன்...
இப்பனு பார்த்து அந்த மங்கி எங்கயோ ஓடிட்டான்.. அவன் இருந்தால் நிறைய டிப்ஸ் எல்லாம் சொல்லுவான்...எங்க போய் என்ன பண்றானோ?? எங்களை எல்லாம் விட்டுட்டு எப்படிதான் இருக்கானோ ?? “ என்று கண் கலங்கினாள் அகிலா....
மகிழனை பற்றி கேட்டதும் மதுவிற்கு உடல் விரைத்தது..அவளை அறியாமலயே மனதுக்குள் வெறுப்பு வந்தது... அந்த பேச்சை மாற்ற எண்ணி,
“எனக்கும் பேட்மிட்டன் னா ரொம்ப பிடிக்கும் அகி... அப்ப நாம இரண்டு பேரும் தினமும் விளையாடலாமா?? “ என்றாள் கண்ணில் ஆர்வத்துடன்.. அதற்குள் அகிலாவும் சமாளித்து கொண்டு
“ஓ.. அப்படியா அண்ணி?? அப்ப நீங்களும் காலேஜ் சேம்பியனா?? “என்றாள் ஆச்சர்யமாக...
“ம்ஹூம்... நான் சும்மா எங்கப்பா அம்மா கூட வீட்ல விளையாடறது தான்.. காலேஜ் ல அத்தனை பேர் முன்னாடியும் விளையாட கஷ்டமா இருந்தது.. அதனால நான் காலேஜ் ல எல்லாம் விளையாண்டது இல்லை... “ என்றாள் சோகமாக...
“ஓ... இதுல என்ன தயக்கம் அண்ணி... அண்ணா சொன்ன மாதிரி எல்லா இடத்துலயும் தைரியமா நிக்கனும்.. சரி வாங்க.. நான் உங்களுக்கு ட்ரெயினிங் கொடுக்கறேன்.. உங்களையும் அந்த தேவசேனா மாதிரி இரண்டு ஏரோவை ஒரே நேரத்துல விடற மாதிரி மாத்திடலாம்...” என்று சிரித்தவள்
பின் தன் ஸ்கூல் பேக் உள்ளே இருந்த பெப்பர் ஸ்ப்ரே, ஹேர் பிரஷ், ஸ்டன் கன் (stun gun) சேப்டி பின், கத்தி என்று பலவற்றை எடுத்து காட்டி அதை எல்லாம் எப்ப, எப்படி உபயோகிக்க வேண்டும் என்று டெமோ காண்பித்தாள் தன் அண்ணிக்கு..
அதை கண்டு ஆச்சர்யமானது மதுவுக்கு...இந்த வயதில் இதை எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறாளே என்று..
“அண்ணி.. இதை எல்லாம் நீங்க இன்னைக்கு எடுத்துகிட்டு போங்க.. நாம ஈவ்னிங் கடைக்கு போய் உங்களுக்கும் இது மாதிரி ஒரு செட் வாங்கிக்கலாம்.. இது உங்க ஹேண்ட் பாக் ல எப்பவும் வச்சிக்கங்க.. “
“இதெல்லாம் எதுக்கு அகிலா?? அப்படியா நம்ம கிட்ட வம்பு பண்ணுவாங்க?? “ என்றாள் கொஞ்சம் பயந்தவாறு...
“இப்ப இருக்கிற நாட்டு நடப்புல பொண்ணுங்க ஹேண்ட் பாக்ல லிப்ஸ்டிக் இருக்கோ இல்லையோ இந்த ஐடெம்ஸ் கண்டிப்பா இருக்கணும்...” இது உங்க புருசனோட பொன்மொழி... அடிக்கடி இதை அண்ணா சொல்லுவான்..
யாராவது எதுவும் வம்பு பண்ணினா நம்மள நாமே காத்து கொள்ள தெரிஞ்சிருக்கணும் அண்ணி.. அதுக்குத்தான்...தேவையோ இல்லையோ நம்ம முன் ஜாக்கிரதையா இருந்துக்கணும்... ” என்று சிரித்தாள்...
“அப்புறம் அண்ணி, உங்க மொபைல Ola ஆப் இருக்கில்ல?? ஆட்டோ புக் பண்ண “ என்றாள்
“அது எதுக்கு?? அப்பா எப்பவும் தனியா போர ஆட்டோவை தான் கூப்பிடுவார்.. “ என்றாள் மது
“ஹ்ம்ம் யார் கூடயும் சேர்ந்து போனா எந்த ஆட்டோல வேணாலும் போகலாம் அண்ணி.... நீங்க தனியா எங்கயாவது போனீங்கனா பெஸ்ட் இந்த மாதிரி ஆப் ல ஆட்டோ புக் பண்ணிக்கங்க... இதுல சேப்டி க்குனு ஒரு ஆப்சன் இருக்கு.
ஏதாவது நடுவுல ஆட்டோ ட்ரைவர் எதும் வம்பு பண்ணாலும் இல்ல ரூட் மாத்தி போனாலும் உடனே நீங்க அந்த ஆப்சனை அழுத்தினா அவங்க உங்கள் காண்டாக்ட் பண்ணுவாங்க.. அதனால இது சேப்... இன்னும் பயப்பட தேவை இல்லை..
இது மாதிரி woman safety க்குனு நிறைய ஆப் (app) வந்திருச்சு.... ஆனாலும் நம்பிக்கையான ஆப் ஐ உங்க மொபைல் ல டவுன்லோட் பண்ணி வச்சுகிட்டீங்கனா அவசரத்துக்கு உதவும்... “என்று விளக்கினாள்...
அகிலா சொன்னதை எல்லாம் கண்டு மது மிரண்டாள்...
“ஐயோ!! வெளில தனியா போகணும்னா இவ்வளவு இருக்கா?? அதனாலதான் எங்க அப்பா தனியாவே விட மாட்டார் போல.. “ என்றாள் பயந்தவாறு...
“ஹா ஹா ஹா.. நீங்க பயப்படறத பார்த்தா உங்களை சென்னையில வளர்ந்த பொண்ணு னு யாரும் சொல்ல மாட்டாங்க அண்ணி.. ஏதோ பட்டிகாட்டுல இருந்து வந்தவங்க மாதிரி இருக்கு.. “ என்று சிரித்தாள் அகிலா...அவளை பார்த்து மது முறைக்கவும் ,
“பயப்படாதிங்க அண்ணி.. எங்க பாரதி அண்ணி கூட கிராமத்துல இருந்து தனியாவே வந்து அவங்க அப்பா ஹார்ட் ஆபரேசனை தனி ஆளா நின்னு வெற்றிகரமா முடிச்சு அவரை ஊருக்கு கூட்டிகிட்டு போனாங்களாம்...” என்றாள் பெருமையாக...
“பாரதியா?? அது யாரு அகி ?? “ என்றாள் மது
“ஓ.. உங்களுக்கு பாரதி அண்ணி தெரியாதா?? உங்க புருசனோட பிரெண்ட் ஆதி அண்ணா வைப்... அவங்க கல்யாணத்துலயும் நான்தான் நாத்தனார் முடிச்சு போட்டேன்... அதனாலதான்... “என்று இழுத்தவள்
“அதனாலதான் பாரதி அண்ணிக்கு சீக்கிரம் பாப்பா வந்தா என்று சொல்ல வந்தவள் ஜானகி சொன்ன இந்த ரகசியத்தை யார் கிட்டயும் சொல்லக் கூடாது என்றது நினைவு வர அப்படியே நிறுத்தி கொண்டாள்...
தான் சொல்ல வந்ததை பாதியில் முழுங்கி கொண்டவள்
“பாரதி அண்ணியும் ஆதி அண்ணாவும் சோ ஸ்வீட் அண்ணி.. அவங்க கூட உங்க கல்யாணத்துக்கு வந்திருந்தாங்களே..கூடவே என் மருமக கார்த்தி குட்டியும் வந்திருந்தா... உங்க கிட்ட கூட பேசினாங்க...
ஆமா.... நீங்க எங்க உங்க பக்கத்துலயே நின்னுகிட்டிருந்த என்னயே உங்களுக்கு தெரியல.. அவங்கள எங்க நினைவு இருக்கும்?? நீங்க போய்ட்டு வாங்க.. நாம இன்னைக்கு நைட் பாரதி அண்ணி கூட பேசலாம்... “ என்று சிரித்தாள்...
மதுவும் புன்னகைக்க, அகிலா மதுவின் கேண்ட் பேக்கை எடுத்து அந்த பொருட்களை எல்லாம் எடுத்து உள்ளே வைத்தாள்...
மீண்டும் ஒரு முறை அகிலா தனக்கு தெரிந்ததை எல்லாம் மதுவுக்கு விளக்கி அவளை போருக்கு செல்பவளை போல தயார் படுத்தி பின் இருவரும் கீழ இறங்கி வந்தனர்...
பத்தாதற்கு சிவகாமி தன் மருமகளை பூஜை அறைக்கு அழைத்து சென்று அந்த வேலனை வணங்கி பின் அந்த முருகன் திருநீற்றை எடுத்து அவளின் நெற்றியில் வைத்து விட்டார்...
அப்பொழுது அகிலா மதுவின் அலை பேசயில் இருந்து ஆட்டோ புக் பண்ணியிருக்க, ஆட்டோ வந்து வீட்டு வாசலில் நின்றது...
“நான் போய்ட்டு வந்திடறேன் அத்தை ..” என்று அவர் காலில் விழுந்து வணங்கினாள் மது ...
“தைரியமா போய்ட்டு வா மது மா..அந்த வடிவேலன் உன் கூடவே வருவான்... எங்க தடுமாறினாலும் அந்த முருகனை நினைச்சுக்கோ... அப்புறம் உடனே எனக்கு போன் பண்ணு.. “என்று ஆயிரம் அறிவுரைகளை வழங்கி அனுப்பி வைத்தார்..
அகிலாவோ
“All the best அண்ணி.... பாகுபலி ல தேவசேனா எப்படி தைரியமா எதிர்த்து எதிரிங்க கூட சண்டை போடுவாங்க... அவங்கள மனசுல நினச்சுகிட்டு, அதே மாதிரி உங்களோட முதல் டாஸ்க் ஐ வெற்றிகரமாக முடித்து வெற்றி வாகை சூடி வர, என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...“ என்று மதுவின் கை பற்றி குலுக்கி வாழ்த்தினாள்...
மதுவும் அவளை முறைத்து சிரித்து கொண்டே வாயில் நோக்கி நடந்தாள்...
மூவரும் வெளியில் வர, மது ஆட்டோவில் ஏற, சிவகாமி அந்த ட்ரைவரிடம் அவள் செல்ல வேண்டிய முகவரியை மீண்டும் ஒரு முறை சொல்லி பத்திரமா இறக்கி விட சொன்னார்...
பின் ஆட்டோ கிளம்பி செல்ல, மதுவும் கை அசைத்து விடை பெற்றாள் தன் போர்களத்தை நோக்கி...
தன் மருமகளை அனுப்பி விட்டு உள்ளே வந்த சிவகாமிக்கு மனசே இல்லை...கல்யாணம் ஆகி வந்த பொண்ணை மூனே நாள்ல தனியா அனுப்பும் படி ஆயிருச்சே!! என்று மனதுக்குள் புலம்பினார்
பொதுவா பொண்ணுங்க கல்யாணம் ஆகி புகுந்த வீடு வந்த சில நாட்களுக்கு, ஒவ்வொன்னுக்கும் தங்கள் பிறந்த வீட்டை கம்பேர் பண்ணுவது வழக்கம்.. புகுந்த வீட்டில் பழக்க வழக்கங்கள் வேறாக மாறும் பொழுது அதை ஏற்று கொள்ள கஷ்டமா இருக்கும்...
“எங்க வீட்ல எப்படி இருந்தேன்... இங்க வந்து இப்படி கஷ்ட படறேனு...” புலம்புவது வாடிக்கை தான்..
ஆனால் தன் மருமகள் அதுவும் வெளி உலகம் தெரியாமல் வளர்ந்தவள் அவள் கணவன் சொன்னதற்காக, கொஞ்சம் கூட முகம் சுணங்காமல் தனியாகவே போறேனு போய்ட்டாளே....
இப்படி பட்ட நல்ல பொண்ணை புரிஞ்சுக்காமல் இந்த பய ஏன் தான் கடிக்கிறானோ?? அந்த சின்னவன் ஓடிப்போனதுக்கு பாவம் இவ என்ன பண்ணுவா?? ஏன் அவன் கோபத்தை இவ கிட்ட காமிக்கிறான்??
பேசாம நானே அவன் கிட்ட சொல்லாமல் மதுவை கூட்டிகிட்டு போய்ட்டு வந்திருக்கணும்..” என்று யோசித்தவர் ஏதோ நினைவு வர,
“ஹ்ம்ம் கெட்டதுலயும் ஒரு நல்லது என்னன்னா மதுவை எப்படியோ இந்த வீட்டு பொண்ணா ஏத்துகிட்டானே... அதனால தான் அவ பிறந்த வீட்டு பழக்கத்தை எல்லாம் விட சொன்னான்...அப்படீனா அவன் மனசுல மதுவை இந்த வீட்டு பொண்ணாதான நினைக்கிறான்...
எப்படியோ முருகா... நீ இந்த அளவுக்கு அவன இறக்கி கொண்டு வந்ததே பெருசு.. அப்படியே என் மருமகளை அவன் மனசுல அவன் பொண்டாட்டியா வும் ஏத்துக்க வச்சிடு...உனக்கு நான் காவடி எடுக்கறேன்... “ என்று வேண்டி கொண்டார்....
அதை கேட்ட அந்த வேலனும்
“யாமிருக்க பயமேன் சிவா... இவ்வளவு பண்ணிய நான் அதை செய்ய மாட்டனா?? என் ஆட்டத்தை பொருத்திருந்து பார்... “ என்று சிரித்து கொண்டான் அந்த சிங்கார வேலன்...
அகிலா சொன்ன மாதிரி மதுகுட்டி தன் டாஸ்க்கை வெற்றிகரமாக முடிப்பாளா?? இல்லை சொதப்ப போறாளா?? நிகிலன் மனதில் வந்துபோன அந்த ரமணி யார்?? நம்ம வேல்ஸ் ன் அடுத்த மூவ் என்ன?? தொடர்ந்து படியுங்கள் ..
இந்த பதிவு ரொம்ப நல்லா இருக்கு
ReplyDelete