என் மடியில் பூத்த மலரே-5
அத்தியாயம்-5
நர்ஸ் வெளியே செல்லவும் அந்த பெண் அவசரமாக பதட்டத்துடன் உள்ளே வந்தாள்.. அந்த பெண்ணை பார்த்ததும் ஜானகியின் முகம் மாறியது. இந்த பெண்ணை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே என்று யோசித்தார்..
அதற்குள் சுசிலா அந்த பெண்ணை பார்த்து ,
“வாம்மா.. ஜெயந்தி.. போன வாரம் தானே செக்கப்புக்கு வந்துட்டு போன.. எல்லாம் நார்மலா இருந்ததே.. இப்ப என்ன மீண்டும்? எனி ப்ராப்லம்?
“ஆமா டாக்டர்.. லைட் டா ப்லீடிங் ஆகிற மாதிரி இருக்கு. ரொம்ப பயமா இருக்கு. அதான் நேர்லயே உங்களை பார்க்க வந்திட்டேன்..”
“பயப்படாத.. ஒன்னும் ஆகாது.. வா செக் பண்றேன்” என்று உள்ளே அழைத்து சென்றார்
சிறிது நேரம் கழித்து வெளியே வந்தவர்
”ஒன்னும் பயப்படற மாதிரி இல்லமா.. எல்லாம் நார்மலா தான் இருக்கு.. இது சும்மா சில பேருக்கு இப்படி ஆகும் “ என்றதும் தான் அந்த பெண்ணின் முகத்தில் தெளிவு வந்தது..
“ரொம்ப நன்றி டாக்டர். பல வருடங்களுக்கு பிறகு எனக்கு கிடைத்திருக்கிற பாக்கியம் இது. அதான் ஏதாவது சின்ன மாற்றம் னா கூட உடனே பயந்திடறேன் “ என்று புன்னகைத்தவள் அருகில் அமர்ந்திருந்த ஜானகியை அப்பொழுது தான் கவனித்தாள்.. ஜானகியும் அந்த பெண்ணை தான் பார்த்து கொண்டிருந்தார்.
“அம்மா, நீங்க ஜானகி அம்மா தான.. என்னை ஞாபகம் இருக்கா. மூன்று மாதம் முன்னாடி நாம் பக்கத்தில இருக்க முருகன் கோயில்ல சந்தித்தோமே!!! “
ஜானகியும் அந்த பெண்ணை அடையாளம் கண்டு கொண்டு
“இப்ப ஞாபகம் வந்திருச்சுமா..நானும் உன்னை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கேனுதான் யோசிச்சிட்டு இருந்தேன்.. நல்லா இருக்கியா மா? “
“நல்லா இருக்கேன் மா.. உங்க வாக்கு பலிச்சிருச்சுமா.. இப்ப நான் மூனு மாசம்.. “ என்று வெட்கமும் மகிழ்ச்சியும் கலந்து இருந்தது அவள் குரலில்..
“நீங்க மட்டும் அன்று எனக்கு ஆறுதல் சொல்லி இந்த ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பி வைக்காமல் இருந்திருந்தால் என் வாழ்க்கையே தொலைஞ்சு போயிருக்கும்..தினமும் உங்களை தான் நினைச்சுட்டு இருப்பேன். மீண்டும் உங்களை பார்த்து நன்றி சொல்லனும் என்று.. இங்கயே பார்த்துட்டேன்... ரொம்ப நன்றிம்மா.. ” என்று தழுதழுத்த குரலுடன் கை குவித்தாள் ஜெயந்தி ...
“ஐயோ !! பரவால ஜெயந்தி.. ரொம்ப சந்தோஷமா இருக்கு கேட்க.. எல்லாம் அந்த முருகன் அருள். உன் மாமியார் நல்லா பாத்துக்கறாங்களா? “
“அவங்க வாரிசு என் வயிற்றில உண்டாகியிருக்குனு தெரிஞ்ச உடனே ரொம்பவும் மாறிட்டாங்க..என்னை அப்படி தாங்கறாங்க. ஒரு வேளையும் செய்ய விடறது இல்லை... என் ஹஸ்பன்ட் ம் இப்ப ரொம்ப அன்பா இருக்காங்கமா.. எல்லாம் உங்களால தான்” என்று கண்கள் கலங்கியது அவளுக்கு..
“என்னால என்னமா இருக்கு.. அது அது நேரம் வந்தா தானா நடக்கும்.. கண் கலங்காத... இனிமேல் தான் நீ சந்தோஷமா இருக்கனும்.. நல்லா சாப்பிடு. ரொம்ப கவனமா இரு... “
“சரிங்கம்மா. நீங்களும் உங்க உடம்ப பாத்துக்கோங்க” என்று விடை பெற்றாள்..
அந்த பெண் சென்றதும், ஜானகி சுசிலா வை பார்த்து
“பார்த்தியா சுசி. அந்த முருகனோட அருளை.. கல்யாணம் ஆகி ஏழு வருடம் குழந்தை இல்லாத பொண்ணு. இப்ப உண்டாகியிருக்காளே. அன்னைக்கு கோயில்ல பார்த்தப்ப ரொம்ப மனசு ஒடிஞ்சு இருந்தா... குழந்தை இல்லைனு எல்லாரும் அவளை தப்பா பேசுறாங்க. அவங்க மாமியார் வேற அவள் கணவனுக்கு வேற ஒரு கல்யாணம் கூட ஏற்பாடு பண்றதா சொல்லி புலம்பினா..
நான்தான் தைரியமா இரும்மா.. எல்லாம் அந்த முருகன் பார்த்துப்பான் என்று ஆறுதல் கூறி, எதுக்கும் உன்னை வந்து பார்க்க சொன்னேன்.
இப்ப பாரு நான் சொன்ன மாதிரியே அந்த பொண்ணுக்கு நல்லது நடந்திருக்கு.. எல்லாம் அந்த முருகனோட கருணை.. “ என்றார்
அதை கேட்டதும் சுசிலா விழுந்து விழுந்து சிரித்தார்..
“ஏன் சிரிக்கிற சுசி”
“பின்ன!! நீ சொன்ன ஜோக்கை கேட்டால் சிரிப்பு வராமல் என்ன வருமாம்???”
“ஜோக்கா? நான் எவ்வளவு சீரியஷா பேசிட்டிருக்கேன் “
“ஹ்ம்ம்ம் சோ , அந்த பெண் கர்ப்பமா இருக்கறதுக்கு உன் முறுகன் தான் காரணங்கறியா? “
“பின்ன? “
முருகன் இல்லமா.. எங்களோட மருத்துவ தொழில் நுட்பம்... “
“மருத்துவ தொழில் நுட்பமா.... ஒன்னும் புரியலையே.. “
“சரி . விளக்கமாகவே சொல்றேன்.. இந்த பெண், குழந்தை இல்லைனு என்கிட்ட வந்தப்போ, எல்லா டெச்ட் எடுத்து பார்த்ததில், இயற்கையாக கருத்தரிக்க வாய்ப்பில்லை என்று தெரிய வந்தது .. அதனால செயற்கயாக கரு உற்பத்தி செய்து அதை அந்த பெண்ணின் கர்ப்ப பைக்குள் செலுத்தி கருவை வளர வைப்பது... இததான் செயற்கை கருத்தறிப்பு என்பது....
அதை கேட்ட ஜானகி ஆச்சர்யமாகி,
“ஹே சுசி, .நிஜமா தான் சொல்றியா? இப்படி எல்லாம் இருக்கா ?”
“அமாம் ஜானு.. உனக்கு விளக்கமா சொல்றேன்”
இன் விட்ரோ பெர்டிலைசேஸன் (In vitro fertilization) எனப்படும் ஐவிஎப் (IVF) முறையைத்தான் சுருக்கமாக சோதனைக் குழாய் குழந்தை என்கிறோம்.
பெண்ணின் கருமுட்டைகளை வெளியில் எடுத்து, சோதனைக் குழாயில் வைத்து, ஆணின் வி்ந்தனுவுடன் சேர்த்து அதை கருத்தரிக்கச் செய்து பின்னர் கருப்பைக்குள் செலுத்தும் முறைதான் இந்த சோதனைக் குழாய் குழந்தை தொழில்நுட்பம்.
இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள இயலாத பல தம்பதியர்களுக்கு இன்று பெரும் வரப் பிரசாதமாக அமைந்துள்ளது இந்த சோதனைக் குழாய் குழந்தை முறை.. இதை கண்டுபிடித்த இங்கிலாந்து விஞ்ஞானி ராபர்ட் எட்வர்ட்ஸ் க்கு, மருத்துவத்திற்கான நோபல் பரிசே கொடுத்திருக்காங்க..
குழந்தை இல்லை என்பது முன்பெல்லாம் ஏதோ ஒரு வீட்டில் இருந்தது. ஆனால் இப்போதைய நகர சூழலில் 20 சதவீதம் குடும்பங்களில் குழந்தை இல்லை என்ற ஏக்க குரல் எதிரொலிக்க தொடங்கி உள்ளதாக தெரிவிக்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரம்..!
சென்னையில் நாளுக்கு நாள் செயற்கை கருத்தரித்தல் மையங்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது தெரியுமா!!! . சென்னையில் மட்டும் 50 க்கும் மேற்பட்ட கருத்தரித்தல் மையங்கள் உள்ளனவாம்.
இப்பொழுது செய்தி தாள்களிலும் , சாலைகளின் ஓரங்களிலும் செயற்கை கருத்தரிப்பு மையங்களின் விளம்பரங்கள் தான் அதிகம்.. “
“ஓ. இதுக்கெல்லாம் என்ன காரணம் சுசி?”
“எல்லாம் இந்த கால பசங்களோட பழக்க வழக்கங்கள் தான்.. முக்கால் வாசி பசங்க எங்க வீட்டில சமைக்கிறத சாப்பிடறாங்க. எல்லாம் பர்க்கர், பீட்சா, பிரைடு ரஸ், நூடுல்ஸ் னு பாஸ்ட் புட் உணவுகளையும் அப்புறம் சிப்ஸ், குர்குரே னு ஜங்புட் தான் அதிகம் சாப்பிடறாங்க..
அதோடு வேலையில் இருக்கும் டென்சனை குறைக்க, புகைப்பிடித்தல், வார கடைசி ஆனா மது அருந்துதல், என்று எல்லா தவறான பழக்கங்களையும் பின்பற்றாங்க..
பசங்க மட்டும் இல்லாமல் பெண்களும் சரியான நேரத்தில் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடறது இல்லை. அதுவும் கணவன் மனைவி இருவரும் வேறு வேறு ஷிப்ட் களில் வேலை செய்பவர்களா இருந்தால் இன்னும் கஷ்டம். அவங்க ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கறதே வார விடுமுறையில் தான்.. ..
இதில் வீட்டை சுத்தம் பண்றது, துணி துவைக்கிறது, அடுத்த வாரத்துக்கான தேவையான பொருட்களை வாங்க அடுக்க என்று தயார் செய்யவே நேரம் சரியா இருக்கும்....இப்படி ஒரு இயந்திர தரமான வாழ்க்கை முறையைத்தான் பின்பற்றாங்க இன்றைய தலைமுறையினர்..
கல்யாணம் ஆகி மூன்று, நாங்கு வருடம் முடிந்ததும் தான் குழந்தையை பற்றி யோசிக்கிறங்க..அவங்க குழந்தை வேணும் னு நினைக்கிறப்போ அவங்க உடல் அதுக்கு தயாராக இருப்பதில்லை. அதுதான் இந்த மாதிரி செயற்கை கருத்தரிப்பு மையங்களை நாடறாங்க..
அதுவும் இல்லாமல் இப்ப லேட்டஸ்ட் ஆ, ஒரு பெண்ணால் தாயாக முடியவில்லை என்றால் அந்த கருவை சுமப்பதற்கு என்று வாடகை தாய்களையும் நாடறாங்க..
“வாடகை தாயா? அப்படீனா ? “
“ஹ்ம்ம்ம் ஒரு பெண்ணின் கற்ப பைக்கு குழந்தையை தாங்கும் சக்தி இல்லைனா, குழந்தையை சுமப்பதற்கென்றே மற்றொரு பெண்ணின் கற்ப பைக்குள் அந்த தம்பதியர்களுடை கருவை செலுத்தி வளர வைப்பது.. பிரசவம் முடிந்ததும் அந்த பெண் குழந்தையை அந்த தம்பதிகளிடம் கொடுத்து விட்டு சென்று விடுவாள்..அந்த பெண்ணிற்கு வாடகை தாய் (Surrogate Mother) என்று பெயர்...
“ஓஓ!!! அந்த குழந்தை அந்த வாடகை தாயோடது இல்லையா அப்போ? “
“ஹ்ம்ஹும்.. அந்த தம்பதியின் கருவில் உருவானதால் குழந்தை அந்த தம்பதியருக்கு தான் சொந்தம். இதுக்கு என்றே சட்டங்கள் இருக்கின்றன..
சில நேரம் மனைவியின் கரு முட்டை வலுவின்றி இருந்தால், அந்த கணவனின் விந்தணுக்களை அந்த வாடகை தாயின் கற்ப பைக்குள் நேரடியாக செலுத்தி கரு உண்டாக்கலாம். இதில் அந்த குழந்தை அந்த ஆணின் குணங்களும் அந்த வாடகை தாயின் குணங்களும் கலந்து இருக்கும்..
உனக்கு தெரியுமா??? ஹிந்தி நடிகர் துஷ்ஷர் கபூர் (Tusshar Kapoor) தனக்கு திருமணதில் விருப்பமில்லை.. ஆனால் தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று வாடகை தாய் மூலமாக தன் குழந்தையை பெற்றார். இதற்கு Single Father என்று பெயர்..
இந்த மாதிரியும் சில பேர் இருக்காங்க..
தொழில் நுட்பம் எவ்வளவு வளர்ந்து வருகிறது பார்.. இதில் வருத்தம் என்னனா, மக்கள் தங்கள் தேவைக்காக புதுசு புதுசா தொழில் நுட்பங்களை கண்டு பிடிக்கிறாங்க.. ஆனால் அவங்க மனசு மட்டும் இன்னும் அந்த பழய காலத்திலயே தான் இருக்குது..
இப்படி ஏதாவது ஒரு முறையை பயன்படுத்தியாவது தங்கள் வாரிசுதான் வேணும் னு நினைக்கிறாங்களே தவிர, பெற்றோர்கள் இல்லாமல் எத்தனை குழந்தைகள் அனாதைகளாக இருக்கின்றனர்.. அதில் ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்கலாம் என்ற மனப்பான்மை வரமாட்டேங்குது...
இன்னும் தங்கள் இரத்தம், தங்கள் வாரிசு என்று அதே மன நிலையில் தான் இருக்கின்றனர் ஒரு சிலரை தவிர. எப்பதான் இந்த எண்ணம் மாறுமோ “ என்று பெருமூச்சுவிட்டார்..
இப்ப புரியுதா நான் சிரித்ததுக்கு காரணம் ? சரி இப்ப சொல்லு.. அந்த பெண்ணின் கர்ப்பத்திற்கு அந்த முருகன் தான் காரணம்னு நீ இன்னும் நினைக்கிறியா... ?
சுசிலா கூறிய விளக்கத்தை கேட்டதும் ஜானகியின் மூலையில் மின்னல் வெட்டியது.... அவர் முகம் மகிழ்ச்சியில் பிரகாசித்தது..
அந்த புன்னகையுடனே
“ஆமாம் சுசி. என்ன தான் மருத்துவ தொழில் நுட்பத்தால் தான் அந்த பெண் கருவுற்றாள் என்றாலும், அவளை இங்கு , உன்னிடம் நான் அனுப்பி வைத்தது அந்த முருகனின் அருளால் தான்.. இல்லையென்றால் நான் ஏன் அந்த பெண்ணை சந்திக்க வேண்டும்? அவள் கவலைய பற்றி விசாரிக்க வேண்டும்.. அதை கேட்டு உன்னிடம் அனுப்பனும் ?? இது எல்லாம் அந்த முருகனின் கருணை தான்..”
“போ டீ. உன்னை எல்லாம் திருத்த வே முடியாது “ என்று ஜானகியை முறைத்தார் சுசிலா..
இவர்களின் உரையாடலை கேட்டு சிரித்துக் கொண்டான் அந்த வடிவேலன்..
சுசிலா அறிந்திருக்க வில்லை. இன்று அந்த ஜெயந்தி, ஜானகி இருக்கும் பொழுது இங்கு வந்ததும், அவளை பற்றி , அந்த மருத்துவ தொழில் நுட்பத்தை பற்றி அவர் வாயாலயே சொல்ல வைத்தது எல்லாம் அந்த வேலனின் விளையாட்டு என்று..
இல்லையென்றால் சுசிலா எந்த பேசன்டை பற்றியும் யாரிடமும் ஏன் ஜானகி கிட்ட கூட சொன்னது இல்லை. அதுவும் இது போன்ற மருத்தவ ரகசியங்களை கூறியது இல்லை..
ஆனால் இன்று ஜெயந்தியை பற்றிய உண்மையை, தன்னை மறந்து ஜானகியிடம் சொல்லியிருந்தார் சுசிலா.. இல்லை இல்லை ... சொல்ல வைத்திருந்தான் அந்த வடி வேலன்..
தான் நினைத்திருந்த ஆட்டத்தை இனிதே ஆரம்பித்து வைத்தான் சுசிலா மூலமாக..
வேலனின் இந்த விளையாட்டு வெற்றி பெறுமா? இல்லை வினையாகுமா? பொறுத்திருந்து பார்ப்போம்..
Eppo paru indha velanuku idha vela dhan writer namba nenachadha nadakave vidamattan
ReplyDelete