தவமின்றி கிடைத்த வரமே-8



அத்தியாயம்-8 

று நாள் அதிகாலை எழுந்து தன் காலை ஓட்டத்தை முடித்து சிக்கிரம் வீடு திரும்பினான் வசீகரன்.

வேகமாக கிளம்பி அதே அவசரத்தில் காலை உணவை வேகமாக உண்டு பின் தன் அன்னையிடம் விடைபெற்று அவசரமாக கிளம்பி சென்றான்..

அன்று கீர்த்தியை RJS hospital க்கு மாற்ற எல்லா ஏற்பாடுகளும் செய்திருந்தான் வசி... அதன்படி கிளம்பி கீர்த்தி தங்கியிருந்த அந்த மருத்துவமனைக்கு சென்றான்...

அங்கு பனிமலர் முன்னதாகவே வந்து அவனுக்காக காத்திருந்தாள்... காலையிலயே தலைக்கு குளித்து தன் கூந்தலின் ஈரம் இன்னும் காயாததால் பிரியாக விரித்து விட்டு இரண்டு பக்கமும் முடி எடுத்து நடுவில் ஒரு கிளிப் ஐ போட்டிருந்தாள்...

கோயிலுக்கு சென்று வந்ததன் அடையாளமாக அவள் நெற்றியில் வைத்திருந்த சின்ன ஸ்டிக்கர் பொட்டுக்கு மேல கீற்றாக திருநீற்றை வைத்திருந்தாள்... கூந்தலில் சிறு மல்லிகை சரத்தையும் வைத்திருக்க, வசியை கண்டதும் புன்னகைத்தவாறு அவன் அருகில் வந்தாள்....

அவளின் பளிச்சென்ற முகம் அவனுக்கு பனியில் நனைந்த ரோஜாவை நினைவு படுத்த அவளின் குண்டு கன்னத்தை தொட்டு பார்க்க துடித்த தன் கைகளை அடக்கி கொண்டு அவனும் புன்னகைத்தான் அவளை பார்த்து...

அவள் அருகில் வந்ததும்

“ஹாய்... ஜில்லு... குட்மார்னிங்... “ என்றான் புன்னகைத்தவாறு...

“ஹலோ டாக்டர்... என் பெயர் ஒன்னும் ஜில்லு இல்ல...” என்றாள் செல்லமாக முறைத்தவாறு...

“ஹா ஹா ஹா உன்னை அப்படித்தான் கூப்பிடணும்னு கீர்த்தி குட்டியோட ஆர்டர்... பொதுவா குழந்தைங்க எது கேட்டாலும் நாம மறுக்காம செய்திடணுமாம்... அதுவும் இவள் உடம்பு சரியில்லாமல் இருக்கா... அதனால அவள் மனதை கஷ்ட படுத்தலாமா?? “ என்றான் குறும்பாக சிரித்தவாறு....

“ஹ்ம்ம்ம் வர வர நீங்களும் நல்லா பேச கத்துகிட்டீங்க டாக்டர்... சரி.. போனா போகட்டும்.. கீர்த்தியோட ஆபரேசன் முடியற வரைக்கும் தான் அப்படி கூப்பிட உங்களுக்கு பெர்மிசன்.... “ என்றாள் விரலை நீட்டி எச்சரித்தவாறு...

“உத்தரவு மேடம்... “ என்று வாயில் கை வைத்து குனிந்து பணிவாக சொல்ல, மலரும் மலர்ந்து சிரித்தாள்... அவளின் சிரிப்பையே இமைக்க மறந்து ரசித்தவன் “சரி.. வா... உள்ள போகலாம்.. “ என்றவாறு ரிசப்ஷனுக்கு சென்றனர்...

ஏற்கனவே கீர்த்தியை மாற்றுவதை பற்றி பேசி ஒப்புதல் வாங்கியிருந்ததால், எல்லா பார்மாலிட்டிஸ் ம் சீக்கிரம் முடித்து கீர்த்தியை அவன் காரிலயே RJS க்கு அழைத்துச் சென்றான்..

மலர் கீர்த்தியை மடியில் வைத்துக் கொண்டு முன்னால் அமர்ந்து கொள்ள, கீர்த்தியின் பெற்றோர்கள் பின்னால் அமர்ந்து கொண்டனர்..

கீர்த்தி இயல்பாக அவனிடம் கதை அடித்து கொண்டு வந்தாள்....

RJS மருத்துவமனையை அடைந்ததும் வசி அவர்களை இறக்கி விட்டு பார்க்கிங் ல் தன் காரை நிறுத்திவிட்டு வேகமாக அவர்களிடம் வந்தவன் அவர்களை உள்ளே அழைத்து சென்றான்..

கீர்த்தியை அவள் பெற்றோருடன் வரவேற்பறையில் அமர்த்திவிட்டு அங்கயே இருந்த MD அறைக்கு மலரை அழைத்து சென்றான்....

அந்த மருத்துவமனையின் தோற்றத்தை கண்டவள் வியந்து போனாள்... பொதுவாக மருத்துவமனைக்கே உரித்தான அந்த ஸ்மெல் எதுவும் இல்லாமல் தரை,சுவர், மற்றும் சுவற்றின் வண்ணம் எல்லாம் பளிச்சென்றுமனதை வருடுவதாக இருந்தது.....

ஒரு ஸ்டார் ஹோட்டல் தோற்றத்தை கொடுத்தது அதன் அமைப்பு...

“இந்த சுற்றுபுறத்தை பார்த்தாலே பாதி நோய் குணமாகிடும்.. “ என்று மெச்சி கொண்டே வசியுடன் இணைந்து நடந்தாள் பனிமலர்...

அறை கதவை தட்டிவிட்டு இருவரும் ஒன்றாக உள்ளே நுழைந்தனர்..

ஏதோ பைலை புரட்டிக் கொண்டிருந்த சுசிலா நிமிர்ந்து பார்த்தார்...

வசியை கண்டதும் முக மலர எழுந்தவர்

“அடடா... வசி கண்ணா... வா.. வா... எப்படி இருக்க?? “ என்று எழுந்து வந்து அவனை கட்டிக்கொண்டார்...

அவனும் புன்னகைத்தவாறு

“உங்க ஆசிர்வாதத்தால நான் நல்லாயிருக்கேன் மா.. நீங்க எப்படி இருக்கீங்க??” என்று அவனும் மெல்ல அவரை அணைத்துக் கொண்டான்...

பின் மலரை அவருக்கு அறிமுகப் படுத்தினான்... அவளின் சமூக சேவையை பற்றி எடுத்துக் கூறி கீர்த்தியை அங்கு அட்மிட் பண்ண வந்திருப்பதாக விளக்கினான்...

அதை கேட்டு வியந்த சுசிலா

“உன்னை மாதிரி யெங்ஸ்டர்ஸ் நிறைய பேர் இந்த மாதிரி சமுதாயத்திற்கு உதவ முன் வரணும் மலர்...இந்த சேவை யை தொடர்ந்து செய்..” என்றார் சிரித்த வண்ணம்..

“கண்டிப்பா மேடம்...” என்றாள் மலரும் சிரித்தவாறு..

“மேடம்... அப்புறம் ஒரு சந்தேகம்...” என்று இழுத்தாள்..மலர்

“ஆஹா...இப்ப என்ன ஏடாகூடமா கேட்க போறாளோ?? “ என்று திடுக்கிட்டவன் அவளை பார்த்து கண்ணால் ஜாடை செய்ய அவளோ அவனை கண்டு கொள்ளாமல் சுசிலாவிடம் தன் சந்தேகத்தை கேட்டாள்..

“மேடம்...வந்து... இங்கு மருத்துவம் முழுவதும் இலவசம்... யாரிடமும் பணம் கொடுக்காதீர்கள்... யாராவது பணம் கேட்டால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.... என்று ஆங்காங்கே போர்டு எழுதி இருக்கறதே... எதற்கு மேடம்?? ...

இதுதான் இலவச மருத்துவமனை என்று எல்லோருக்கும் தெரியுமே.... அப்புறம் எதுக்கு இந்த விளம்... “ என்றவள் தன் நாக்கை கடித்துக் கொண்டாள் தான் கேட்பது அதிகமோ என்று உள்ளுணர்வு உறுத்த...

ஆனால் சுசிலா அதை இயல்பாக எடுத்து கொண்டு

“ஹா ஹா ஹா... அப்புறம் எதுக்கு இந்த விளம்பரம் னு கேட்கறியா மலர்??” என்று சிரித்தார்.. பனிமலர் அசடு வழிய

“எல்லாம் ஒரு காரணமாதான்...

என்னதான் மருத்துவம் இங்கு இலவசம் என்று சொன்னாலும் இங்கு வேலை செய்யும் சில பேர் எங்களுக்கு தெரியாமல் பணம் வாங்கிக் கொண்டு இங்கு வருபவர்களை அனுமதிக்கின்றனர்...

அவர்களை எல்லாம் கண்டறிந்து வேலையை விட்டு தூக்கினாலும் முழுவதுமாக கண்டறிய முடியவில்லை...

அப்பவும் எப்படியோ மறைந்து இந்த செயலை செய்கின்றனர்... இங்கு வருபவர்களும் முக்கியமாக இதய நோய்களுக்கு வெளியில் அதிகம் செலவாகும்..

அதுவே இங்கு முற்றிலும் இலவசம் எனும்பொழுது இந்த வேலையாட்கள் கேட்கும் ஆயிரமோ, இரண்டாயிரமோ அவர்களுக்கு பெரிதாக தெரிவதில்லை...

அவர்களும் உடனே கொடுத்து விடுகின்றனர்...மக்களா பார்த்து பணம் கொடுக்காமல் கேள்வி கேட்டால் தான் இதை தடுக்க முடியும்...

அதான் ஆங்காங்கே போர்ட் வைத்திருப்பது..அதோடு கண்காணிப்பு கேமராவிலும் கவனித்து வருகிறேன்..யாராவது தெரியாமல் பணம் வாங்குகிறார்களோ என்று...போதுமா விளக்கம்?? “ என்று சிரித்தார் சுசிலா..

அதை கேட்டு அதிசயித்த மலர்

“வாவ்... சூப்பர் மேடம்..!!! இந்த ஹாஸ்பிட்டல் பற்றி டாக்டர் நிறைய சொன்னார்...ஆனால் நேரில் பார்க்கும் பொழுதுதான் தெரிகிறது..

அதோடு நீங்கள் சொன்ன பணம் வாங்கும் விஷயம் 200 பெர்சன்ட் கரெக்ட் மேடம்..

போன மாசம் என் தம்பிக்கு ட்ரைவிங் லைசென்ஸ் வாங்க RTO ஆபிஸ் போயிருந்தோம்...

அங்க டெஸ்ட் முடிந்ததும் போட்டோ எடுக்க 10 ரூபாய் கேட்டாங்க.. அது முழுக்க இலவசம் அன்ட் லைசென்ஸ் அமவுண்ட் முன்னயே கட்டியாச்சு..ஆனாலும் போட்டோக்குன்னு 10 ரூபாய் கேட்டனர்...

யாருமே எதுக்குனு கேட்கலை..10 ரூபாய் தானேன்னு எல்லோரும் கொடுத்திட்டு போய்க்கிட்டு இருந்தாங்க..

ஆனால் என்னால் அப்படி இருக்க முடியலை..நான் எதுக்கு 10 ரூபாய் னு கேட்க அவங்களும் அதான் ரூல்ஸ்.. எல்லோரும் கொடுக்கணும் என்க, நான் நேரா அந்த RTO ஆபிசர்கிட்டயே போய்ட்டேன்...

அவரும் 10 ரூபாவுக்கு ஏம்மா பிரச்சனை பண்ற?? என்று சமாதானபடுத்த முயன்றார் .

அது எப்படி மேடம் ??...ஒருத்தரா பார்த்தா 10 ரூபாய் தான்.. ஒரு ஐநூறு, ஆயிரம் பேராவது தினமும் வருவாங்க.. அப்ப எவ்வளவு பணம் ஒரு நாளைக்கு லஞ்சமா வாங்கறாங்க...

அதுக்கு நாமளே காரணமா ஆயிடறோம் இல்ல.. ஒருத்தர் தரமுடியாது ன்னு சொன்னா அவர் திரும்பி கேட்பாரா?? எல்லோரும் எதிர்த்து கேள்வி கேட்கணும் மேடம்....”

என்று படபடவென்று பொரிந்தாள் பனிமலர்...

அதை கேட்டு சிரித்த சுசிலா

“ஹ்ம்ம்... நீ சொல்றது கரெக்ட் தான் மலர்...உன்னை மாதிரி நாலு பேர் முன் வரணும்...பார்க்கலாம்... “ என்று பெருமூச்சு விட்டவர்

“அப்புறம் உன்னை நினைத்து எனக்கு பெருமையா இருக்கு மா... உன்னை பார்த்தால் அப்படியே எங்க மறுமகள் பாரதியை பார்க்கிற மாதிரி இருக்கு...keep it up… “ என்று சிரித்தார் சுசிலா.

அப்பொழுது தான் வசிக்கும் அதே தோன்றியது.. அதோடு தன் அன்னை முன்பு அவர் கோயிலில் பார்த்த பெண், பாதி ஆதி வொய்ப் பாரதி மாதிரி இருப்பதாக கூறியது நினைவு வந்தது..

இவளும் அதே மாதிரி இருப்பதால் தன் அன்னைக்கு கண்டிப்பாக இவளை பிடிக்கும் என்று உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்....

மலர் சுலிலாவிடம் மீண்டும் ஏதேதோ கதை அடித்துக் கொண்டிருக்க, அதை கண்டவன்

“எப்படி?? இவளால மட்டும் யாரை பார்த்தாலும் தயங்காமல் வாய் அடிக்க முடிகிறது?? “ என்று வியந்தவன் அவள் பேச்சை முடிப்பதாக தெரியாததால், இடையில் குறுக்கிட்டு அவர்கள் வந்த வேலையை ஞாபக படுத்தினான் அவளுக்கு....

“ஹீ ஹீ ஹீ... சாரி மேடம்... நான் பேச ஆரம்பிச்சா அப்பப்ப என்னை மறந்து அவுட் ஆப் சிலபஸ் போய்டுவேன்...”என்று அசடு வழிந்தாள்...

“ஹா ஹா ஹா.. இட்ஸ் ஓகே மலர்... இந்த மாதிரி எத்தனை பேர் இப்படி கலகலனு பேசறாங்க?? இதோ இந்த பயனே இருக்கானே.. நாலு வார்த்தைக்கு மேல அதிகமா பேசமாட்டான்...

இவன் மட்டும் னு இல்லை.. இவன் ப்ரண்ட்ஸ் ஆதி, நிகிலன் எல்லோருமே அப்படித்தான்...

நாங்க எல்லாம் கட்டாயபடுத்தி பேச வைக்கணும் இவனுங்களை...

என் பையன் ஆதி மட்டும் என் மறுமக வந்த பிறகு இப்பதான் கொஞ்சமா பேச ஆரம்பிச்சிருக்கான்....” என்று சிரித்தார்

“ஹா ஹா ஹா .. அவ்வளவுதான மேடம்.. டாக்டருக்கும், திறந்தா வாயை மூடாத பொண்ணா பார்த்து கட்டி வச்சிடலாம்.... அவ பேச்சை தாங்க முடியாதவர் அவளை நிறுத்தவாவது வாயை திறந்துதான ஆகணும்...எப்படி என் ஐடியா?? என்று தன் இல்லாத காலரை தூக்கி விட்டுக் கொண்டாள்...

அதை கேட்டு சிரித்த சுசிலா

“சூப்பர் ஐடியா மலர்.. என்ன கண்ணா?? அப்படியே நம்ம மலர் மாதிரி வாயடிக்கிற பொண்ணா பார்த்துடலாமா?? “ என்றார் அவனை குறும்பாக பார்த்தவாறு...

அவனோ மெல்ல வெக்கபட்டு வழக்கம் போல தன் வசீகர புன்னகையை பதிலாக சொல்ல

“பார்.. அப்ப கூட வாயை திறக்கறானா னு ?? .. பாவம் மீனாட்சி.. எப்படித்தான் இவனை வச்சு சமாளிக்கிறாளோ?? “ என்று சிரித்தவர்

“சரி கண்ணா... நான் ஏற்கனவே அட்மிசன் கவுண்டர்ல சொல்லிட்டேன்... நீ போய் அந்த குட்டியை அட்மிசன் பண்ணிடு.. அப்புறம் நாளைக்கு ஆபரேசனுக்கு வேண்டியதையும் எல்லாம் இன்றே தயார் பண்ணிடு...

ஒகே மலர்.. என்ன உதவினாலும் என்கிட்ட வா... நான் இங்கதான் இருப்பேன்... “ என்றார் சிரித்தவாறு ...

“ரொம்ப தேங்க்ஷ் மேடம்... “என்று மலரும் அவருக்கு நன்றி சொல்லி எழுந்து வெளியில் நடந்தனர்...

அட்மிசன் கவுண்டருக்கு சென்று கீர்த்தியை அட்மிட் பண்ண பார்மாலிட்டிஸ் முடித்து அவர்களை அழைத்து சென்று அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறையில் தங்க வைத்தான்.. ...

பின் வசி சென்று அங்கு இருக்கும் தன்னுடைய ஜூனியர்ஸ் cardiologist assistants இடம் கீர்த்தியை பற்றி விளக்கி அவளுடையை பைலை கொடுத்து நாளை நடைபெறும் ஆபரேஸனுக்கு எல்லா பார்மாலிட்டிஸ் ரெடி பண்ணி வைக்க சொல்லி விளக்கினான்….

மீண்டும் கீர்த்தியை ஒரு முறை செக் பண்ணி சில டெஸ்ட்டுகள் எடுக்க அழைத்து சென்றனர்….

ஓரு வழியாக எல்லா டெஸ்ட்ம் முடிய நாளை காலை ஆபரேஸனுக்கு நேரத்தை குறித்தான் வசி..

எல்லாம் முடிந்து கீர்த்தியின் அன்னையிடம் சொல்லி விட்டு வெளியில் வர மலரும் அவனை பின் தொடர்ந்தாள்..

அவன் அருகில் வந்தவள்

“டாக்டர்....நீங்க ரொம்ப டயர்டா இருக்கீங்க… ஒரு காபி சாப்பிடலாமா??” என்றாள் அவன் தோற்றத்தை பார்த்து...

அப்பொழுது அவனுக்கும் அது தேவையாக இருக்க, அதை கவனித்து அவள் சரியாக கேட்கவும் ஆச்சர்யமாக இருந்தது அவனுக்கு...

சரி என தலையை அசைத்து அவளை கேன்டின் பக்கம் அழைத்துச் சென்றான்

கேன்டின் உள்ளே நுழைந்ததும் அசந்து நின்றாள் மலர்....மருத்துவமனையை போலவே கேன்டின் ம் பளிச்சென்று சுத்தமாக இருந்தது...அனைத்து உணவுகளும் சத்தாண உணவாக பார்த்து வைத்திருந்தனர்... நோயாளிகளுக்கு ஸ்பெஷல் கவுண்டர் இருந்தது...

அவர்களுடைய அறை எண்ணை சொல்லி அட்மிசன் அட்டையை காட்ட, நோயாளிகளுக்கு தகுந்த உணவை அங்கு இருக்கும் கணிணியில் பார்த்து அவர்களே எடுத்து தருகின்றனர்....

மறுபக்கம் நோயாளிகளுடன் தங்கியிருக்கும் அட்டென்டர்களுக்கும் அவர்களை காண வருபவர்களுக்கும் என பொதுவாண உணவு கவுண்டர் இருந்தது...




ந்த மருத்துவமனையின் மற்றொரு சிறப்பு அம்சம் அங்கு நோயாளிகளுக்கான மூன்று வேலை உணவு முழுவதும் இலவசம்...அவர்களின் அறைக்கு வந்தே வழங்குபவர்...

எக்ஷ்ட்ரா வேண்டும் என்றால், இங்கு கவுண்டரில் வந்து வாங்கிக் கொள்ளலாம்...

நோயாளிகளுக்காக மட்டும் இன்றி அவர்களுடன் தங்கி இருக்கும் உறவினர்கள் மற்றும் பார்க்க வருபவர்கள் என அனைவருக்கும் அங்கு மூன்று வேலையும் சாப்பாடு குறைந்த விலையில் வழங்கப்பட்டது...

அதை கண்ட மலர் வாயை பிளந்தாள் .. இந்த காலத்தில் கூட இப்படி இருக்கிறார்களா?? என்று வியந்த வண்ணம் இருவரும் ஓரு காபியை வாங்கி கொண்டு ஒரு மேஜையில் சென்று அமர்ந்தனர்...

மலரும் அவனுக்கு எதிர்புறமாக அமர்ந்தவள்

“டாக்டர்....உங்க பிரண்ட் உண்மையிலேயே கிரேட் தான் டாக்டர்..மருத்துவம் மட்டுமின்றி உணவையும் இலவசமாகவும் குறைந்த விலைக்கு கொடுக்கிறார்களே..” என்றாள் ஆச்சர்யமாக

“ஹா ஹா ஹா அவன் ஒரு மல்ட்டி மில்லினர் மா..அவனுக்கு இந்த செலவெல்லாம் ஒரு பொருட்டே இல்ல..அதோடு ராம் அங்கிள் அதான் ஆதியோட அப்பா பேர்ல ட்ரஸ்ட் ஆரம்பிச்சு இந்த ஹாஸ்பிட்டல் அந்த ட்ரஸ்ட் வழியாக நடத்திகிட்டு வர்ரான்...

நிறைய தெரிஞ்சவங்களும் உதவி செய்றாங்க…” என்றான் பெருமையாக...அவனும் அதில் ஒரு பார்ட்னர் என்று சொல்லாமல் தவிர்த்தான்...

“ஹ்ம்ம் சூப்பர் டாக்டர்... அப்புறம் சுசீலா மேடம் ஐ பார்த்தா ரொம்ப பெருமையா இருக்கு..இந்த வயதிலும் வீட்டோடு தங்காமல் இப்படி வந்து எவ்வளவு சுறுசுறுப்பா இந்த ஹாஸ்பிட்டல் ஐ மேனேஜ் பண்றாங்க... நானும் அவங்க கிட்ட இருந்து நிறைய கத்துக்கணும்.. “ என்று சிரித்தாள்...

“ஹ்ம்ம்ம்.. அவங்க ஒரு ஃபேமஸ் கைனிக் டாக்டர்... கடந்த 6 மாதம் வரைக்குமே வேற ஒரு மருத்துவமனையில் வேலை செய்தாங்க.. அவங்களுக்கு ஓய்வு வேணும்னு தான் ஆதி அவங்களை இங்க கொண்டு வந்து உட்கார வச்சது...

பார்த்தா முன்னை விட இப்ப இன்னும் பிசியாயிட்டாங்க... நாங்களும் எவ்வளவோ சொல்லிட்டோம்.. கொஞ்ச நேரம் மட்டும் இங்க வந்து போங்கனு..

ஆனாலும் அவங்க கேட்கவே இல்லை... ஆதி வைப் பாரதி சிஸ்டர் மட்டும்தான் அவங்களை கண்ட்ரோல் பண்ண முடியும்...” என்று சிரித்தான் வசி...

“ஹ்ம்ம்ம் இன்ட்ரெஸ்டிங் கேரக்டர் டாக்டர்... “ என்று சிரித்தாள்...

“ஹ்ம்ம்ம் எனக்கும் அவங்க ஒரு ரோல் மாடல்... இந்த மருத்துவ சேவைக்காகவே கல்யாணம் கூட பண்ணிக்காம தன் வாழ்வையே அர்ப்பணிச்சிருக்காங்க.... “ என்றான் பெருமையாக...

அதை கேட்டு முழித்தாள் மலர்...

“சுசிலா பேசும் பொழுது தன் மகன், மறுமகள் என்று தானே சொன்னார்.. இவன் என்னடாவென்றால் திருமணம் ஆகலைங்கிறானே... குழப்பறானே... “ என்று சந்தேகமாக அவனை பார்க்க, அவளின் எண்ணத்தை புரிந்து கொண்டவன் சுசிலாவை பற்றி சுருக்கமாக சொன்னான்...

அதோடு ஜானகி, ஆதி, பாரதி, ராம், அவர் தனக்கு செய்த உதவி பற்றி பெருமையாக சொல்ல, அதை கேட்டவள் இன்னும் வியந்து போனாள்..

“வாவ்... சூப்பர் டாக்டர்..நானும் சுசிலா மேடம் மாதிரி ஒரு கொள்கையோடு இருக்கணும்.. “ என்றாள்...

“ஆஹா... அப்ப என் நிலை ரொம்ப பாவம் மா... நானே இத்தன வருசத்துக்கு பிறகு இப்பதான் என் தேவதையை தேடி கண்டு பிடிச்சிருக்கேன்.. நீ பாட்டுக்கு அவங்களை மாதிரி சன்னியாசியா போறேனு கிளம்பிடாத.. மீ பாவம்... “ என்று உள்ளுக்குள் புலம்பினான்...

அதை அறியாத மலரோ

“அது எப்படி டாக்டர்?? ... உங்களை சுத்தி இருக்கிறவங்க எல்லாம் இவ்வளவு நல்லவங்களா இருக்காங்க?? அதனால் தான் நீங்களும் நல்லவரா இருக்கீங்களோ??

என்னையும் உங்க நல்லவங்க குரூப்பில சேர்த்துக்கறீங்களா?? “ என்றாள் தன் தலையை சரித்து குறும்பாக சிரித்தவாறு..

“குரூப்பில என்ன பெண்ணே ?? ..உன்னை என் இதயத்தில் எப்பயோ குடியேற்றி விட்டேன். விரைவில் மற்றவர்களையும் அறிமுக படுத்தி வைக்கிறேன்.. பேபி...” என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான்

அவன் நீண்ட நேரம் எதுவும் பேசாமல் யோசித்து கொண்டிருப்பதை கண்டவள்

“என்ன டாக்டர்?? என்னவோ உங்க சொத்தை எழுதி வைக்க சொல்லி கேட்ட மாதிரி இதுக்கு போய் இவ்வளவு யோசிக்கறீங்க?? .. உங்களுக்கு பிடிக்கலைனா விட்டுடுங்க....” என்று கழுத்தை நொடித்தாள்...

“No No.. அதெல்லாம் ஒன்னுமில்லை...பிடிச்சிருக்கு...” என்றான் அவரமாக..

அவள் என்ன பிடிச்சிருக்கு என்பதாக தன் புருவங்களை கேள்வியாக உயர்த்த அதற்குள் சுதாரித்து கொண்டவன்

“அது வந்து... நீயும் எங்களோட தானா சேர்ந்த கூட்டத்துல ஐக்கியம் ஆகிக்கலாம்.. ஒரு நாள் எல்லோரையும் அறிமுக படுத்தி வைக்கிறேன்...” என்று புன்னகைத்தான்...

“வாவ்... சூப்பர் டாக்டர்...இப்பதான் நீங்க குட் டாக்டர்... “ என்று மலர்ந்து சிரித்தாள்

“சரி டாக்டர்... நாளைக்கு யார் கீர்த்தி குட்டிக்கு ஆபரேஸன் பண்ணப் போறாங்க?? “ என்றாள் ஆர்வமாக

“ஹ்ம்ம்ம் எல்லாம் பெரிய டாக்டர் தான் ஆபரேஸன் பண்ணப் போறான்...” என்றான் சிரித்தவாறு

“யாருனு தான் சொல்லுங்களேன்?? ...அவர் பெரியவரா சின்னவரானு நான் முடிவு பண்றேன்... “ என்று நச்சரித்தாள்..

“சரி...உனக்கு யாரெல்லாம் famous cardiologist தெரியும்?? .. சொல்லு பார்க்கலாம்..” என்றான் குறும்பாக..

அவள் ஓவ்வொரு பெயராக சொல்ல சொல்ல ஒவ்வொருத்தரையும் இல்லை என்று ரிஜக்ட் பண்ணினான்..

“ஹ்ம்ம்ம் அவ்வளவு தான் டாக்டர் எனக்கு தெரிந்த famous cardiologist.. இதுல யாருமே இல்லைனா??

ஒரு வேளை யாராவது கத்துக்குட்டி cardiologist டாக்டரை கூட்டிவந்து கீர்த்தி குட்டிக்கு ஆபரேஸன் பண்றிங்களோ??

அவங்களும் அவங்க படிச்சதயெல்லாம் இந்த குட்டிய வச்சு டெஸ்ட் பண்றாங்களோ???..

வேண்டாம் டாக்டர்.... இது ஒரு குழந்தையோட லைப்..அதுகூட விளையாடாதிங்க...” என்றாள் சிரித்தவாறு

அதை கேட்டு வசி அவளை பார்த்து முறைக்க,

“ஹீ ஹீ ஹீ.. சும்மா ஜோக் டாக்டர்.. நீங்கள் எவ்வளவு பெரிய ஆள்.. உங்க பவர் தெரியாதா எனக்கு?? ..உங்க பவர்க்கு நீங்க பெரிய டாக்டரைத்தான் அரேஞ் பண்ணியிருப்பீங்க...” என்று அசடு வழிந்தாள்.

அவனும் சிரித்து கொண்டே

“ஹ்ம்ம்ம்ம் அது.. “ என்று விரல் நீட்டி எச்சரித்தவன்

“சரி யார் அந்த பெரிய டாக்டர் னு சொல்லவா??.... சொல்லட்டுமா?? “ என்று அவளுக்கு போக்கு காட்டினான்..

மலரும் ஆவலாக அவனை பார்க்க, அவனோ இன்னும் அவளை சீண்ட எண்ணி சொல்லாமல் இழுத்தான்...

அதில் கடுப்பான மலர்

“டாக்டர்... இப்ப சொல்ல போறீங்களா ?? இல்லையா??

நீங்க சொல்லலைனா நான் நேரா போய் சுசீலா மேடம் கிட்டயே கேட்டுக்கறேன்.. அவங்க இப்ப என் பிரண்ட் ஆக்கும்... “ என்றாள் முறைத்தவாறு...

அவன் இன்னும் சொல்லாமல் வாய்விட்டு சிரிக்க

“ஹ்கூம்ம் ரொம்பத்தான்.. சொல்லாட்டி போங்க.. நான் நாளைக்கே யார் அவர்னு பார்த்துக்கறேன்...”என்று முகத்தை நொடித்தாள்..

அவளின் ஆக்சனை ரசித்தவன்

“சரி.. போனா போகுது... சொல்லிடறேன்...

நீ சொன்னியே கத்துக்குட்டி டாக்டர்..அவங்களுக்கும் கொஞ்சம் மேல சீனியர்... வசீகரன் தான் நாளைக்கு கீர்த்தி குட்டிக்கு ஆபரஷன் பண்ண போறான்...” என்றான் சிரித்தவாறு...

“வாட்?? திரும்பவும் சொல்லுங்க... சரியா கேட்கலை... “ என்றாள் குழப்பமாக...

“ஹ்ம்ம் வசீகரன் தான் இந்த ஆபரேஸனை பண்ண போறான்...”என்றான் மீண்டும்..

“யூ மீன் பேமஸ் cardiologist வசீகரன் டாக்டர் ?? “ என்றாள் கேள்வியாக இன்னும் நம்பாமல்...

“யெஸ்... “ என்று புன்னகைத்தான்..

“Are you kidding?? நீங்க சரியான டுபாக்கூர் டாக்டர் தான்... உங்களுக்கு எதில் எல்லாம் விளையாடறதுன்னு விவஸ்தையே இல்ல டாக்டர்…

அவர் எவ்வளவு பெரிய ஆள்...அவர் எப்பவும் பிசியாவே இருப்பாராம்..அவர் போய் கீர்த்திக்கு ஆபரேஸன் பண்றதாவது?? கிரேட் ஜோக்...” என்று நக்கலாக சிரித்தாள் மலர்...

“ஹ்ம்ம் உண்மையை சொன்னா இந்த காலத்துல நம்பவே மாட்டாங்க...நீ வேணும்னா போய் சுசிலா மா கிட்டயே கேட்டுக்கோ..” என்றான் அவளை முறைத்தவாறு...

“டாக்டர்... அப்ப நிஜமாத்தான் சொல்றீங்களா?? டாக்டர் வசீகரன் ஐ உங்களுக்கு தெரியுமா?? “ என்றாள் சந்தேகம்+ ஆச்சர்யமாக...

“ஹ்ம்ம்.. “ என்று தலையை ஆட்டினான் வசி..

“ரியலி?? வாவ்... சூப்பர் டாக்டர்.... அப்ப நாளைக்கு அவர் கிட்ட என்னை introduce பண்ணி வைக்கறீங்களா?? “ என்றாள் ஆர்வமாக

“ஹ்ம்ம் நாளைக்கு என்ன இன்னைக்கே அறிமுகப் படுத்தி வைக்கிறேன்... “ என்று குறும்பாக சிரித்தான்.

“Seriously?? அவர் இங்கதான் இருக்காரா?? பிளீஸ் டாக்டர்...நான் இப்பவே அவரை பார்க்கனும்...” என்று ஆர்ப்பரித்தாள் மலர்....

“ஆமாம்... உனக்கு முன்னயே அவனை பற்றி தெரியுமா?? எப்படி ?? “ என்றான் ஆச்சர்யமாக .

“நான் படிக்கிறது MBA hospital management டாக்டர்... எங்க புரபசர் கிழம் இருக்காரே... “

“என்னது கிழமா?? “ என்றான் சற்று கோபமாக....

அதற்குள் தன் நாக்கை கடித்து கொண்டவள்

“ஹீ ஹீ ஹீ கிழம் இல்லை டாக்டர்... பழம்... எங்க புரபசர் வயதாகி முடி எல்லாம் நரைத்து பார்க்க ஞானப்பழம் போல இருப்பாரா.. அதான் அவருக்கு பழம் னு பேர் வச்சிருக்கேன்...

நான் பழம் னு சொன்னா நீங்க கிழம் னு காதுல வாங்கறீங்க.. முதல்ல உங்க காதை போய் ஒரு நல்ல ENT டாக்டர் கிட்ட காட்டுங்க... “என்று சமாளித்தாள்...

அவள் சமாளித்ததை எண்ணி வசி சிரிக்க, அவளும் அசடு வழிந்தாள்...

“ஹ்ம்ம் எங்க விட்டேன்?? “என்று தன் தலையை தட்டி யோசித்தவள்

“ஆங்.. எங்க புரபசர் ஒரு ஹாஸ்பிட்டல் பற்றி ஆராய்ந்து ஒரு கட்டுரை எழுத சொன்னார்..

அந்த ஆர்வ கோளாறுல ஓவ்வொரு பிரிவிலும் இருக்கிற பேமஸ் டாக்டர் பற்றியும் நெட் ல நோண்டினேன் ..

எனக்கு Cardiolgy பற்றி நிறைய தெரிஞ்சுக்கனும்னு ரொம்ப ஆசை...அதை பற்றி ரொம்ப ஆராய, அப்பதான் டாக்டர் வசீகரனை பற்றி தெரிந்தது...

சச் எ பிரில்லியன்ட் டாக்டர் அவர்...அவர் பண்ணிய எல்லா ஆபரேஸனும் சக்ஸஸ் தான்...ஒவ்வொரு ஆபரேஸனுக்கும் ஹோம் வொர்க் மாதிரி பண்ணிதான் கத்தியை கையில எடுப்பாராம் ..

அவரை பற்றி நிறைய ஆர்ட்டிகள்ஸ் படிச்சிருக்கேன் டாக்டர்...” என்றாள் பெருமையாக

“ஆமா... நீ அவனை நேர்ல பார்த்திருக்கியா?? “ என்றான் குறும்பாக சிரித்தவாறு.

“ம்ச்......அந்த பாக்கியம் எனக்கு கிடைக்கவே இல்லை டாக்டர்...ஓரு ஆர்ட்டிக்கில் ளையும் அவர் போட்டோவும் வரலை...

எனக்கு ரொம்ப நாளா அவரை மீட் பண்ணணும் னு ஆசை...

ப்ளீஸ் இன்ட்ரடுயூஸ் பண்ணுங்களேன்....” என்றாள் கெஞ்சலாக.

“சரி...நான் அவனை இன்ட்ரடுயூஸ் பண்ணினா என்ன பண்ணுவ?? “என்றான் குறும்பாக அவளை இன்னும் கொஞ்சம் சீண்டி பார்க்கும் ஆசையில்..

“ஹ்ம்மம் அப்படியே இறுக்கி கட்டி பிடிச்சு லிப் டூ லிப் கிஸ் பண்ணிடுவேன் டாக்டர்...”என்றாள் அவளும் குறும்பாக கண் சிமிட்டி சிரித்தவாறு அடுத்து வரும் ஆப்பை அறியாமல்.

அவள் சொல்லியதை கேட்டதும் வசிக்கு புரை ஏறியது..

உடனே அவன் தலையை வேகமாக தட்டியவள்

“பார்த்து டாக்டர்..இப்படியா சின்ன புள்ளையாட்டம் மூக்குல ஏர்ற மாதிரி காபியை குடிப்பீங்க?? “ என்று செல்லமாக அதட்டினாள்...

அவளின் உரிமையான அதட்டலை ரசித்தவன்,

“ஆமா ஜில்லு...நீ இப்ப ஏதோ சொன்னியே கட்டிபிடித்து... லிப் டூ லிப்.....அது நிஜமாகவா?? “ என்றான் குறும்பாக சிரித்தவாறு..

“200% நிஜம் டாக்டர்... இந்த மலர் எப்பவும் சொல்றதைத்தான் செய்வா...செய்யறதைத்தான் சொல்லுவா....” என்று வீர வசனம் பேசினாள்.

“ Are you sure?? “ என்றான் மீண்டும் உதட்டில் குறும்பு மின்ன...

“Yes.. yes..” என்றாள் அவளும் குறும்பாக சிரித்தவாறு...

“ஹ்ம்ம் சரி..அப்ப நான் ரெடி..நீ ரெடியா?? “ என்றான் அதே குறும்பு புன்னகையுடன்..

“எதுக்கு??” என்றாள் மலர் குழம்பியவாறு ..

“ நீ இப்ப சொன்னியே.. ஏதோ வீர வசனம் எல்லாம் கூட பேசினியே.. அதுக்குத்தான்....” என்றான் மீண்டும் சிரித்தவாறு

“அது... நான் டாக்டர் வசீகரனுக்குத்தான்....” என்று இழுத்தாள்....

“ஹா ஹா ஹா... அந்த பாக்கியசாலி வசீகரன் நான் தான்….” என்றான் மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக்கொண்டு அதே குறும்பு சிரிப்பு மாறாமல்..

அதை கேட்டு திடுக்கிட்டாள் மலர்...

“டாக்டர்....நீங்க என்ன சொல்றிங்க?? கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்களேன்... “ என்றாள் இன்னும் குழம்பியவாறு...

“ஹ்ம்ம் நீ சொன்னியே அந்த வல்லவன் நல்லவன் famous cardiologist வசீகரன் சாத் சாத் அடியேன் நான் தான்...

இந்த பனிமலர் ஆசையாக கொடுக்க போகும் பரிசை ஏற்க தவம் இருக்கும் அடியேன், வசீகரன் நான்தான்..” என்றான் மீண்டும் சிரித்தவாறு.

அதை கேட்டு தலையை சுற்றியது மலருக்கு...

“இவன் என்ன சொல்கிறான்?? இவன் cardiologist என்றால் அன்று பார்த்தது ஜென்ரல் டாக்டர் தானே..அதுவும் வேறு ஏதோ பெயர்தான் போட்டிருந்தார்கள்?? இவன் எப்படி?? “ என்று குழம்பினாள்...

அவள் முகத்தில் வந்து போன குழப்ப ரேகைகளை படித்தவன்

“என்ன ஜில்லு?? இன்னும் நம்ப முடியலையா?? இந்தா என்னுடைய விசிட்டிங் கார்ட்..” என்று தன் வாலட்டில் இருந்த கார்டை எடுத்து அவள் முன்னே வைத்தான்...

அதை எடுத்து பார்த்தவள் இன்னும் குழப்பமாக

“வந்து. அன்று வேற பெயர்தானே போட்டிருந்தது.... அதுவும் ஜென்ரல் டாக்டராக?? “ என்றாள் இன்னும் தெளியாமல்

“ஹா ஹா ஹா...அன்று நான் என் பிரண்ட் ஷ்யாமை பார்க்க அவன் ரூம்ல வெயிட் பண்ணிகிட்டு இருந்தேன்.....அப்பதான் நீயும் உன் பிரண்ட் ம் உள்ள வந்திங்க..

ஏனோ உங்களை பார்த்தபொழுது நீங்க ஏதோ ட்ராமா பண்ணுவது தெரிந்தது.. அதான் நானும் கொஞ்சம் உங்க கூட விளையாண்டு பார்க்கலாம்னு என்னை மறைத்து கொண்டேன்...

அதோடு நானும் ஜென்ரல் மெடிசின்ஸ் படிச்சிட்டுத்தான் வந்திருக்கேன்... எல்லா டிசிஸ் பற்றி எனக்கும் தெரியுமாக்கும்... ” என்றான் மீண்டும் சிரித்தவாறு...

அதை கேட்டு காரமானவள்

“யூ சீட்டர்....பிராட்...என்னை நல்லா ஏமாத்திட்டிங்க... “ என்று அருகில் இருந்த டம்ளரில் இருந்த தண்ணியை எடுத்து அவன் முகத்தில் அடித்தாள் கோபமாக....

இதை எதிர்பார்க்காத வசி ஒரு நொடி திகைத்து போனான்...

அதற்குள் தன்னை சமாளித்து கொண்டவன் சுற்றிலும் அவசரமாக பார்த்து

“நல்ல வேளை.. யாரும் பார்க்கலை.. “ என்று நிம்மதி அடைந்தான்...

மலர் இன்னும் அவனை முறைத்து கொண்டு இருக்க , மெதுவாக அவள் கையை அழுத்தியவன்

“சாரி ஜில்லு...உன்கிட்ட மறைக்கணும்னு இல்ல.... ஜஸ்ட் பார் ஃபன்... அதான் சொல்லலை.. “ என்றான்...

அதற்குள் தன் கையை இழுத்துக் கொண்டவள் மீண்டும் அவனை பார்த்து முறைத்தாள்...

“ஹப்பா... என்னா கோபம் வருது இவளுக்கு....டேய் வசி..நீ கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும் போல..இல்லைனா கையில கிடைக்கிறதை எல்லாம் எடுத்து அடிச்சிடு வா போல...” என்று தனக்குள் எச்சரித்து கொண்டான்..

அதற்குள் தன்னை சுதாரித்து கொண்டவள்

“சா... சாரி டாக்டர்... டக்குனு உணர்ச்சி வசப்பட்டுட்டேன்... “ என்றாள் தலையை குனிந்தவாறு...

“இட்ஸ் ஒகே பனிமலர்... பிரியா விடு... அப்புறம் இன்னும் வேற எதுவும் சந்தேகம் இருக்கா?? ஐ மீன் ஆபரேசனை பற்றி...” என்றான் விளையாடாமல்..

அதற்குள் இயல்பு நிலைக்கு திரும்பிய மலர்

“ஹீ ஹீ ஹீ தி கிரேட் அன்ட் famous cardiologist வசீகரன் ஏ ஆபரேஸன் பண்றப்போ எனக்கு என்ன சந்தேகம் வந்திட போகுது டாக்டர்..அவர் பார்த்துக்குவார் எல்லாம் ... “ என்றாள் சிரித்தவாறு. .

“ஹ்ம்ம் தட்ஸ் குட்.. சரி.. நீ கேட்ட மாதிரி வசீகரன் ஐ பார்த்துட்ட இல்ல.. அப்ப நீ கொடுக்கறேன்னு சொன்ன கிப்ட் எங்க ?? “ என்றான் கண் சிமிட்டி குறும்பாக சிரித்தவாறு ..

அதை கேட்டு கன்னம் சிவந்தாள் பனிமலர்...அவளின் கன்னத்து வெக்க சிவப்பு அவனை கட்டி இழுத்தது...அதை ரசித்து கொண்டிருந்தான் அவள் அறியாமல்..

அப்பொழுது அவன் அலைபேசி ஒலிக்க அதை எடுத்து பார்த்தவனுக்கு அப்பொழுதுதான் ஞாபகம் வந்தது.. அவனுடைய அடுத்த அப்பாயின்ட்மெண்ட் மித்ரா ஹாஸ்பிட்டலில்.. அதோடு மதியம் மற்றொரு சர்ஜரி இருப்பதும்...

“சே... இவளுடன் பேசிக் கொண்டிருந்ததில் நேரம் ஆனதே தெரியலையே... இப்படி என்னையே என் அஜென்டாவை மறக்கும் படி செய்திட்டாளே இந்த வாயாடி..!!! ” என்று உள்ளுக்குள் சிரித்து கொண்டவன்

“ஓகே ஜில்லு...நான் அப்ப கிளம்பறேன்...அடுத்த அப்பாயின்ட்மென்ட்ஸ் ஆர் வெயிட்டிங்... மீண்டும் நாளைக்கு பார்க்கலாம்...என் அசிஸ்டன்ட் ஸ் மற்ற பார்மாலிட்டிஸ் எல்லாம் பார்த்துக்குவாங்க.....”என்று புன்னகைத்தவாறு எழுந்தவன் பின் வேகமாக கிளம்பி சென்றான்...

மலரால் இன்னுமே நம்ப முடியவில்லை...அவ்வளவு பெரிய டாக்டர்... அவனா அவளுடன் இவ்வளவு நேரம் வம்பிழுத்து கொண்டிருந்தது?? அவன் யாரென்று தெரியாமல் அவனிடமே என்னென்னவோ தத்து பித்து னு உளறி வச்சிருக்கேனே...

சே... எனக்கு அறிவே இல்ல...இனிமேலாவது எல்லோர்கிட்டயும் பார்த்து பேசணும்.. “ என்று தன்னையே திட்டி கொண்டவள் அவன் கிளம்பி சென்ற திசையையே இமைக்க மறந்து பார்த்து கொண்டிருந்தாள்...

பின் தனக்கும் அலுவலகம் செல்ல நேரம் ஆவதை உணர்ந்து கீர்த்தியின் அறைக்கு சென்று அவள் பெற்றோரிடம் சொல்லிவிட்டு, ஏதாவது உதவி என்றால் அங்கு இருப்பவர்களை அணுக சொல்லி பின் விடை பெற்று சென்றாள் பனிமலர்.....

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!