காதோடுதான் நான் பாடுவேன்-5
அத்தியாயம்-5
ஏதோ ஒரு வேகத்தில் தைரியமாக தனியாக போறேன் என்று சொல்லி கிளம்பி வந்துவிட்டாலும் ஆட்டோ சிறிது தூரம் சென்றதுமே உள்ளுக்குள் உதற ஆரம்பித்தது மதுவந்தினிக்கு...
சுற்றிலும் பார்வையை சுழல விட்டவளுக்கு அந்த இடமே புதியதாக இருந்தது.. அது ஒரு VIP க்கள் வசிக்கும் இடம் போல இருந்தது.. இந்த மாதிரி இடத்துக்கு முன்னாடி வந்ததில்லை...
அதோடு மூன்று நாள் முன்பு திருமணம் முடித்து இதே வழியாக வந்திருந்த போதும் மது தலை குனிந்த படியே வந்ததால் இதை எல்லாம் கவனித்திருக்கவில்லை...
அன்று வீட்டிற்குள் போனவள் தான்... அதன் பிறகு இன்றுதான் வீட்டின் வாயிலை தாண்டி வருகிறாள்.. அதுவும் முதல் முறை வெளியில் செல்லும் பொழுது இப்படி தனியா போக வேண்டி ஆயிருச்சே என்று மனதுக்குள் சுணங்கியது..
வெளியில் பார்த்தவள் எதேச்சையாக முன்புறம் பார்க்க, அங்கு இருந்த கண்ணாடியில் முன்புறம் இருந்த ஆட்டோ டிரைவர் அவளையே உற்று பார்ப்பதை போல இருந்தது...
உடனே அவள் இதுவரை ஆட்டோ டிரைவர் பற்றி படித்த, கேட்ட செய்திகள் எல்லாம் நினைவு வர, திக் என்றது அவளுக்கு.. அவசரமாக அகிலா சொல்லி கொடுத்த சேப்டி டிப்ஸ் ஐ மனதுக்குள் ஓட்டி பார்த்தாள்.. அதோடு தன் கேன்ட் பேக்கை தொட்டு பார்த்துக் கொண்டாள் அதில் உள்ள பொருட்கள் எல்லாம் பத்திரமா இருக்கா என்று....
அதோடு தன் அலைபேசியை எடுத்து கூகுல் மேப்பை திறந்து அதில் தான் போக வேண்டிய அட்ரஸை போட்டு அதன்படியே ஆட்டோ செல்கிறதா என்று கவனித்துக் கொண்டே வந்தாள்..
ஆனாலும் உள்ளுக்குள் உதற, அவள் மனம் பயந்து கொண்டே வந்தாள்...
“சே.. இதுக்குத்தான் அப்பா என்னை எப்பவும் தனியா விடலை போல இருக்கு... எவ்வளவு நல்லவர்.. எல்லா இடத்துக்கும் அவரே சேப் ஆ கூட்டி போனாரே .. ஏன் லாஸ்ட் ஆ நடந்த எக்சாம் க்கு கூட காலையில் கொண்டு வந்து விட்டுட்டு மதியம் வரை அங்கயே இருந்து திரும்ப கூட்டிகிட்டு வந்தாரே...
எவ்வளவு நல்லவர்.. ஐ லவ் யூ பா.... ஐ மிஸ் யூ பா.... “ என்று கண் கலங்கினாள்...
அதே நேரம் சற்று முன் தன் நாத்தனார் எவ்வளவு தைரியமாக எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறாள்...எத்தனை விசயம் தெரிந்து வைத்திருக்கிறாள் இந்த சின்ன வயதில்.. எங்கயும் தனியாகவே போய்ட்டு வந்திடறாளே....
அவள் அண்ணி நான் அவளுக்கு அட்வைஸ் பண்றது போய் இப்படி என் நாத்தனார் என்னை விட சின்னவ எல்லாம் எனக்கு அட்வைஸ் பண்றமாதிரி ஆயிருச்சே...
எல்லாம் இந்த அப்பாவால தான்... அவர் மட்டும் என்னையும் சின்ன வயசுலயே வெளில விட்டிருந்தா, தைரியமான பொண்ணா வளர்த்திருந்தா நான் இன்னைக்கு இவ்வளவு கஷ்ட படற மாதிரி வந்திருக்காதே... எல்லாம் உங்களால தான்.. ஐ ஹேட் யூ பா... “ என்று மனதுக்குள் தன் தந்தையை திட்டினாள் மது....
இப்படி மாறி மாறி அவரை புகழவும் அதே நேரம் அவரை திட்டியவள் பார்வை எதேச்சையாக அலைபேசியில் இருந்த புகைபடத்திற்கு செல்ல, அதில் மது தன் அப்பா அம்மா நடுவில் நின்று அவள் அப்பாவின் கழுத்தை கட்டி கொண்டு கொஞ்சும் அந்த புகைபடத்தை காண கண்கள் கரித்தது....
“அப்பா மட்டும் இருந்தால் இப்படி தனியா என்னை அனுப்பியிருப்பாரா?? “ என்று நினைக்கையிலயே அவள் அலைபேசி ஒலித்தது... அதன் திரையில்
“Appa Calling…” என்று ஒளிர்ந்த எழுத்துக்களையும் அதோடு அவருக்காக அவள் செட் பண்ணியிருந்த அந்த புகைபடத்தில் அவர் சிரித்தவாறே அவளை அழைப்பதை காணவும் தன் அப்பாவையே நேரில் கண்ட மாதிரி அவரை ஓடி போய் கட்டிகொண்டு அவர் மார்பில் முகம் புதைக்க வேண்டும் போல இருக்க, அதே உணர்ச்சி பெருக்கில் அலைபேசியை ஆன் பண்ணியவள்
“அப்பா.... “ என்றாள் தழுதழுத்த குரலில்....
தன் மகளின் தழுதழுத்த குரலை கேட்டதும் சண்முகத்திற்கு அதிர்ச்சியாக இருந்தது... அவரும் உடனே பதறி,
“மது கண்ணா... நல்லா இருக்கியா?? என்னடா ஆச்சு?? ஏன் உன் குரல் ஒரு மாதிரி இருக்கு?? ஒன்னும் பிரச்சனை இல்லையே?? “ என்றார்
அவர் குரலில் இருந்த பதற்றத்தை கண்ட பிறகு தான் தன் தவறு புரிந்தது மதுவிற்கு... உடனே தன் கண்ணில் தேங்கி நின்ற கண்ணீரை உள்ளிழுத்து கொண்டவள், அவசரமாக தன்னை சமாளித்து கொண்டு,
“I’m fine பா..நீங்க எப்படி இருக்கீங்க?? .. அம்மா எப்படி இருக்காங்க...?? “ என்றாள்..
“நாங்க நல்லா இருக்கோம் மா... ஆமா உன் குரல் ஏன் ஒரு மாதிரி இருந்தது.. நீ எங்க இருக்க?? “ என்றார் சந்தேகமாக...
“ஐயோ!! அப்பா கிட்ட எப்படி சமாளிப்பது?? “ என்று முழித்தவள்
“அது....வந்து.... உங்க குரலை கேட்கவும் டக்குனு ஒரு மாதிரி ஆயிருச்சு பா.. “ என்றாள் உண்மையை மறைக்காமல்....
“சரி டா... நீ இப்ப எங்க இருக்க?? “ என்றார் அவரும் விடாமல்
“நான் இப்ப ஆட்டோ ல போய்கிட்டிருக்கேன் பா.. நான் அப்புறம் பேசவா?? “ என்று அழைப்பை துண்டிக்க முயன்றாள்.. இல்லைனா எல்லாத்தையும் தன் அப்பாவிடம் உளற வேண்டி இருக்கும் என்று பயந்தவாறு....ஆனால் சண்முகம் அவளை விட வில்லை..
“என்னது ஆட்டோ லயா?? ஏன் மாப்பிள்ளை கார் என்னாச்சு?? கூட யார் வர்ரா?? “ என்றார் சந்தேகமாக...
“ஐயோ.. இப்படி எல்லாம் கேட்டா நான் என்ன சொல்றது?? ஏற்கனவே எனக்கு மாத்தி சொல்ல வராது.. இதுல இவர் வேற இப்படி மாற்றி மாற்றி கேள்வி கேட்கறாரே.. “ என்று புலம்பியவள் அவசரமாக யோசித்து
“அவர் ஏதோ வேலைனு கார் எடுத்து கிட்டு போய்ட்டார் பா... நான் மட்டும் தனியா IAS exam கோச்சிங் க்ளாஸ் பத்தின டீடெய்ல்ஸ் கேட்க போய்கிட்டிருக்கேன்.. “ என்று மென்று முழுங்கினாள்..
அதை கேட்டு மேலும் அதிர்ந்தார் சண்முகம்..
“என்னது தனியாவா?? அவ்வளவு தூரம் தனியா எப்படி போவ டா ?? மாப்பிள்ளைக்கு வேலை இருந்தால் அவர் வேலை முடிச்சதுக்கப்புறம் நீ போக வேண்டியது தான?? அப்படி என்ன இப்பயே போய்தான் நீ கேட்கணும்னு அவசியம்..??
இரு.. நான் இப்பயே சம்மந்தி கிட்ட போன் பண்ணி கேட்கறேன்?? எப்படி அவங்க உன்னை தனியா அனுப்பலாம்?? “ என்று அவர் கோபத்தில் குதிப்பது தெரிந்தது...
தன் அப்பா இவ்வளவு கோபப்பட்டு அவள் பார்த்ததில்லை.. .அவரா இந்த அளவுக்கு கோபபடறார்?? என ஆச்சர்யமாக இருந்தாலும் அவரை எப்படியாவது சமாதான படுத்தனும் என எண்ணி
“அத்தை வேண்டாம்னு தான் சொன்னாங்க பா..நான்தான் அடம் பிடிச்சு நானே போய் பழகறேன் னு சொல்லிட்டு கிளம்பி வந்தேன்... நான் தைரியமா போய்ட்டு வந்திடுவேன்... நீங்க கவலை படாதிங்க...
அவங்க கிட்ட எதுவும் போன் பண்ணி கேட்காதிங்க .. அப்புறம் என்னைதான் தப்பா நினைப்பாங்க..வீணா எங்களுக்குள் சங்கடம் வேண்டாம்... “ என்று தடுத்தாள்....
உலகம் தெரியாமல் வளர்ந்த பொண்ணு இவ்வளவு தெளிவா பேசுவதை கேட்கையில் சண்முகத்திற்கும் ஆச்சர்யமாக இருந்தது...
”தன் மகள் மூனே நாள் ல இவ்வளவு பெரியவளா ஆயிட்டாளா?? “என்று நினைத்து கொண்டவர்
“ஹ்ம்ம்ம் என்னவோ கண்ணா.. எனக்கு மனசே ஆறலை.. உன்னை நல்லா பார்த்துக்குவாங்கனு தான இப்படி அவசர அவசரமா கல்யாணம் பண்ண வேண்டியதா போச்சு...
ஒரு வேளை நான் தப்பு பண்ணிட்டனோ.. நீ சொன்ன மாதிரி இன்னும் இரண்டு வருடம் கழித்து கல்யாணம் பண்ணியிருக்கனுமோ?? “ என்று புலம்பினார் வருத்தத்துடன்...
அவரின் வருத்தத்தை உணர்ந்தவள்
“அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா... நீங்க சரியா தான் செஞ்சிருக்கீங்க... இங்க எல்லாரும் என்னை நல்லா பார்த்துக்கறாங்க... நம்ம வீட்டை விட நான் இங்க நல்லா சந்தோஷமாதான் இருக்கேன்.. நீங்க கவலை படாதிங்க.. “ என்று சமாதான படுத்தினாள்...
“ஹ்ம்ம்ம் சரி டா.. மாப்பிள்ளை உன் கிட்ட நல்லா பழகறாரா?? எதுனாலும் கொஞ்ச நாள் ல எல்லாம் சரியாகிடும்.. எதையும் அனுசரிச்சு போ... என்ன பிரச்சனைனாலும் நீ அப்பாவுக்கு உடனே போன் பண்ணு... “ என்று பேசி முடிக்க அதற்குள் மதுவின் அம்மா சாரதா அவர் அலைபேசியை வாங்கி அவர் பங்குக்கு அவளுக்கு அறிவுரைகளை வாரி வழங்கினார்...
மதுவும் வேற வழி இல்லாமல் தலையை ஆட்டி கொண்டிருந்தாள்..
கடைசியாக
“மாப்பிள்ளை ய கேட்டதா சொல்லுமா... அவர் மனம் கோணாமல் நடந்துக்கோ... “ என்று சொல்லி போனை அனைத்தார் சாரதா...மதுவும் தன் அலைபேசியை அனைத்தவள்
“அப்பாடா... ஒரு வழியா சமாளிச்சாச்சு... “ என்று பெருமூச்சு விட்டவள் தன் அன்னை கடைசியாக சொன்ன மாப்பிள்ளை என்றதில் கொஞ்சம் கடுப்பாகி
“மாப்பிள்ளையாம் மாப்பிள்ளை... கொஞ்சம் கூட முன்ன பின்ன தெரியாத இடத்துக்கு ஒரு வயசு பொண்ணை தனியா அணுப்பறமே னு அக்கரை வேண்டாம்... சரியான கல் நெஞ்சுக்காரன் போல... சிடுமூஞ்சி விருமாண்டி....
எப்ப பார் அந்த விருமாண்டி மாதிரி முறைச்சுகிட்டே இருக்கான்.. “ என்று திட்டியவள் அவன் தன் தங்கை அகிலாவை இன்னும் சிறுவயதிலயே தனியாக அனுப்பி வைத்தது நினைவு வர
“ஹ்ம்ம்ம்ம் அவன் கூட பொறந்த அந்த பச்ச புள்ளையவே தனியா அனுப்பி வச்சவன்.. நேத்து வந்தவ நான்.. எனக்காக மாறிடப் போறானாக்கும்... சிடுமூஞ்சி.. “ என்று திட்டி கொண்டே மீண்டும் வெளியில் வேடிக்கை பார்த்தவள் அது போரடிக்க தன் அலைபேசியை நோண்ட ஆரம்பித்தாள்...
தன் அப்பாவுடனோ அம்மாவுடனோ இது மாதிரி வெளியில் போகும் பொழுது உட்கார்ந்த உடனே அலைபேசியை நோண்ட ஆரம்பித்து விடுவாள்... Whatsapp, Facebook என எல்லாம் ஒரு ரவுண்ட் பார்த்து முடித்து அன்றைய செய்திகளையும் பார்வையிட்ட பிறகு சில்சீயின் அந்த வாரத்தில் வந்திருக்கும் படைப்புகளையும் படித்து கொண்டு வந்தாலே அவர்கள் போகும் இடம் வந்துவிடும்..
தன் பெற்றோர் இடம் வந்தாச்சு இறங்குமா... என்று சொன்ன உடனே அவர்கள் பின்னால் இறங்கி அவர்கள் பின்னாலயே போய் விடுவாள்...
அதே மாதிரி இப்பொழுதும் Whatsapp ல் வந்திருந்த பார்வார்ட் மெசேஜ் களை பார்வை இட ஆரம்பித்தவள் அப்பொழுதுதான் அகிலா சொன்னது நினைவு வந்தது..
“அண்ணி.. ஆட்டோ ல முக்கியமா தனியா போறப்போ தயவு செய்து மொபைலை நோண்டாதிங்க... ஆதில் இருக்கும் செய்திகளை படிக்கிற ஆர்வத்தில நம்ம சுத்தி இருக்கிறத பார்க்க மறந்திடுவோம்..
அதனால் நீங்க எப்பவும் விழிப்போட இருந்து, உங்களை சுத்தி பார்த்து கிட்டே போங்க.. ஆட்டோ சரியா போகுதா, நம்மள யாரும் பாலோ பண்றங்களா?? ஆட்டோ ட்ரைவர் தப்பா எதுவும் பார்க்கறாரா னு நோட் பண்ணிகிட்டேபோங்க..
அதோட நீங்க போற இடங்களின் பெயர்களை எல்லாம் பார்த்து வச்சுக்கங்க.. நாளைக்கு அந்த இடத்துக்கே போக வேண்டி வந்தால் ஈசியா போய்டலாம்...
இதுவும் அண்ணா சொன்னதுதான்.. I’m repeating…. “என்று சொல்லி சிரித்தது நினைவு வர, அவசரமாக தன் அலைபேசியை மூடி விட்டு சுற்றிலும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் மது ...
அகிலா சொன்ன மதிரி வெளியில் பார்ப்பதும் இன்ட்ரெஸ்ட் ஆகவே இருந்தது... அவள் இதுவரை கேள்வி பட்ட சென்னையின் இடங்களை நேரில் பார்க்கும் பொழுது அவளுல் பரவசம்...
சில இடங்களை முன்னரே கூட தாண்டி சென்றிருக்கிறாள்.. அப்பொழுது எல்லாம் வெளியில் கவனம் செலுத்தி அது என்ன இடம் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்ததில்லை..
இன்று தான் மட்டும் தனியாக செல்லுகையில் இந்த மாதிரி இடங்களை எல்லாம் வேடிக்கை பார்ப்பதே ஒரு சுகமாக இருந்தது...
நடுவில் அவள் அப்பா வேறு அடிக்கடி போன் பண்ணி அவள் எந்த இடத்தில் இருக்கிறாள் என கேட்டு கொண்டே வர, ஒரு வழியாக அவள் செல்ல வேண்டிய இடம் வந்தது..
ஆட்டோ டிரைவர் ஆட்டோவை நிறுத்தி அவளை இறக்கி விட்டு செல்ல முயல, மது அவசரமாக தன் பர்சை எடுத்துக் கொண்டே
“கொஞ்சம் இருங்கண்ணா.... காசு வாங்காம போறீங்க... “ என்றாள்
அவரும் சிரித்தவாறு
“அது Ola Money ல இருந்து ஆட்டோமாடிக்கா டிடக்ட் ஆகிடும் மா...நீ காசு தர வேண்டாம்... அப்புறம் திரும்பி போறப்போ பார்த்து பத்திரமா போ மா.. “ என்று சிரித்தார்...
மதுவுக்கு அவள் பயந்து கொண்டு வந்ததை கண்டு தான் அவர் சிரிக்கிறார் என்று புரிய
“சரிங்க அண்ணா... ரொம்ப தேங்க்ஸ்... “ என்று மது புன்னகைக்க, அவரும் சிரித்தவாறு தன் ஆட்டோவை கிளப்பி சென்றார்....
“ஹ்ம்ம்ம் இவர் நல்லவராதானே இருக்கார்... அதுக்குள்ள இந்த அகிலா என்னை என்னமா பயமுறித்திட்டா...அவ கொடுத்த பில்டப் லதான் கொஞ்சம் இருந்த தைரியமும் போய் பயப்படற மாதிரி ஆகியிருச்சு...இல்லைனா இன்னும் தைர்யமாகவே வந்திருக்கலாம்...“ என்று மனதுக்குள் புலம்பினாள்....
“எப்படியோ Stage 1 completed… அடுத்து Stage 2 இவ்வளவு பெரிய இடத்துல இந்த இன்ச்டிடுயூட் ஐ எப்படி கண்டு பிடிச்சு டீடெய்ல்ஸ் கேக்கறது?? “ என்று முழித்தவாறு சுற்றிலும் பார்வையை ஓட்டினாள்...
அதற்குள் சிவகாமியும் போன் பண்ணி அவள் பத்திரமாக சென்று விட்டதை உறுதி செய்து கொண்டார்...
சுற்றிலும் பார்த்த மது அந்த பயிற்சி மையத்தை கண்டு பிடிக்க முடியாமல் போக மெல்ல தன் தைர்யத்தை வரவழைத்து கொண்டு அங்கு இருந்த ஒரு பெண்கள் கும்பலில் விசாரிக்க, அவர்கள் அங்கு இருந்த பெரிய வணிக கட்டிடத்தில் கிட்டதட்ட 12 இல்ல 13 ஆவது மாடியில் இருந்த அந்த இன்ச்டிடுயூட் ஐ காட்டினர்... அதை நிமிர்ந்து பார்க்கையிலயே கண்ணை கட்டியது அவளுக்கு...
“அவ்வளவு உயரம் ஏற வேண்டுமா?? “ என்று முழித்தவள் ஒரு வழியாக அதற்கு செல்லும் வழியை தேடி கண்டுபிடித்து லிப்ட் வழியாக சென்று அந்த மையத்தின் ரிசப்சனை அடைந்தாள்...
வெளியில் இருந்து பார்க்கையில் அது சிறிய இடமாக தெரிந்தாலும் உள்ளே மிகவும் விசாலமாக இருந்தது.. தனித்தனியாக வகுப்புகள் நடத்த என்று பல க்ளாஸ் ரூம்கள், பெரிய லைப்ரரி, மற்றும் வரவேற்பறையிலயே படிக்க என்று பலவகையான புத்தகங்கள் மற்றும் எல்லா வகையான செய்திதாள்கள் இருந்தன...
வரவேற்பு பெண் அவளை ஒரு இருக்கையில் அமர சொல்ல, மதுவும் கொஞ்சம் டென்சனோடயே இருக்கையில் அமர்ந்திருந்தாள்...
கீழ குனிந்து கொண்டு தன் சுடிதாரின் சாலை திருகிக் கொண்டிருக்க, அவள் முன்னே இரண்டு நீண்ட கால்கள் வந்து நிப்பதை கண்டு திடுக்கிட்டு நிமிர்ந்து பார்க்க, அங்கு ஆறடிக்கும் கொஞ்சம் குறைவான உயரத்தில் ஒருவன் நின்று கொண்டு மதுவை பார்த்து முறுவலித்தான்...
அதை காண மதுவுக்கு திக் என்றது..
“யார் இவன்?? நான் இவனை பார்த்ததே இல்லையே.. முன்ன பின்ன தெரியாமல் இப்படி சிரிக்கிறானே? “ என்று பயந்தவள் மெதுவாக பயந்த முகத்துடன் அவனை மீண்டும் நிமிர்ந்து பார்க்க,
“ஹலோ மிஸ் மதுவந்தினி...I’m Jayanth..நீங்க UPSC exam coaching பற்றி டீடெய்ல்ஸ் க்காகத்தான வந்திருக்கீங்க... வாங்க நான் explain பண்றேன்..” என்று சொன்னவன் அவள் பதிலுக்கு கூட நிக்காமல் முன்னால் நடக்க, மதுவும் வேற வழி இல்லாமல் தன் ஹேன்ட் பேக்கை எடுத்து கொண்டு அவன் பின்னே சென்றாள்....
ஜெயந்த் திருநெல்வேலி பக்கம் ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன்... எல்லாரையும் போல IAS ஆக வேண்டும் என்ற கனவில் அங்கயே ஒரு டிகிரியை முடித்து விட்டு சென்னைக்கு வந்தவன்...
இங்கயே தன் நண்பன் ஒருவன் Software Engineer ஆக இருக்க அவன் அறையிலயே தங்கி UPSC Exam க்காக பிரிபேர் பண்ணி வந்தான்.. நேரம் கிடைக்கும் பொழுது சிறுசிறு வேலைகளை செய்து தன் மாத செலவை சமாளித்து வந்தான்...
கிட்ட தட்ட மூன்று வருட முயற்சிக்கு பிறகு UPSC Exam ல் தேர்வாகி இருந்தான்... ஆனால் அவன் ரேங்கிற்கு IFS (Indian Forest Service) ல் வேலை கிடைத்திருக்க, அவனும் முதலில் அதில் சேர்ந்திருந்தான்..
ஒரு வருடம் சென்றதும் அவனால் அந்த வேலையில் முழுவதுமாக ஈடுபட முடியவில்லை...
அவன் கனவு IAS ஆக வேண்டும் என்பதால் தன் வேலையை ராஜினாமா பண்ணி விட்டு மீண்டும் சென்னைக்கே வந்து முழு மூச்சாக IAS க்காக பிரிபேர் பண்ண ஆரம்பித்தான்...
அவன் ஒரு வருடத்தில் சம்பாதித்த பணம் அப்படியே இருக்க, அதோடு தன் நண்பன் திருமணம் முடித்து தனியாக வீடு வாங்கி சென்று விட அவன் ஒரு மான்சன் (manson) ல் தங்கி இருந்தான்...
அப்பொழுது அவனை மாதிரியே இன்னும் சிலரும் அரசு வேலை வாய்ப்புக்காக முயற்சி செய்தவர்கள் அங்கு தங்கியிருந்தனர்.. அவர்கள் ஜெயந்த் ஏற்கனவே IFS தேர்வாகி அந்த வேலையை விட்டு வந்தவன் என்று தெரிய கண்களை அகல விரித்தனர்..
“எப்படி பட்டவேலை?? நாங்கள்ளாம் TNSPSC Group 4 தேர்வுக்கே முக்கு முக்குனு முக்கிகிட்டு இருக்கோம் ப்ரோ.. நீ சாதாரணமா அவ்வளவு பெரிய வேலைய விட்டுட்டு வந்திட்டீங்க... பொழைக்க தெரியாதவன் ப்ரோ...” என்று அவனை பார்த்து பெருமூச்சு விட்டனர்...
“பேசாம அந்த வேலைய நீங்க எனக்கு கொடுத்திருக்கலாம் பாஸ்...” என்றான் மற்றொருவன்...
அதிலிருந்து அவர்கள் எல்லாரும் ஜெயந்த் ஐ சுத்தி வந்தனர்.. அவர்களுக்கு பாடங்களில் வரும் சந்தேகங்கள் மற்றும் ஒவ்வொரு பரிட்சையையும் எப்படி எழுதுவது, மற்றும் பாஸ்ட் ஆ முடிக்க டிப்ஸ் என்று அவனையே நாடினர்.
ஜெயந்த் ம் தனக்கு தெரிந்ததை எல்லாம் சொல்லி கொடுக்க, அந்த நண்பர்கள் இன்னும் அவர்களுக்கு தெரிந்தவர்களிடம் ஜெயந்த் கோச்சிங் பற்றி பெருமையாக சொல்ல, நிறைய பேர் அவனை தேடி வர ஆரம்பித்தனர்...
அப்பொழுதுதான் அவன் நச்ண்பன்
“நீ ஏன் ஒரு பயிற்சி மையம் (coaching institute) ஆரம்பிக்க கூடாது?? உனக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு சொல்லி கொடுடா.. உனக்கும் பயிற்சி பண்ணின மாதிரியாகும்.. அதோட நீ சம்பாதிச்ச மாதிரி ஆகும்... “என்று ஆலோசனை வழங்க, ஜெயந்த் ம் யோசித்தவன் அது நல்லதாக பட, அருகிலயே சின்ன அறையை வாடகைக்கு எடுத்து Coaching Class ஐ ஆரம்பித்தான்...
அவனின் திறமையால் நிறைய மாணவர்கள் கவரப்பட விரைவிலயே நிறைய பேர் அவன் பயிற்சி வகுப்பில் சேர்ந்தனர்...
அதோடு கடந்த 15 ,20 வருடமாக IT Jobs ன் மோகத்தில் இருந்த இளைஞர்களுக்கு சமீபத்தில் வந்த recession னாலும், IT Jobs ல் வரும் stress னாலும் மற்றும் Job security இல்லாமல் எப்ப நம்மல தூக்குவாங்களோ( lay off ) என்று பயந்து கொண்டே அலுவலகம் செல்லும் நிலையில் இன்றைய IT field இருப்பதால் IT Jobs ன் மேல் இருந்த மோகம் விலக ஆரம்பித்தது இன்றைய தலைமுறையினரிடம்...
அதோடு அரசு வேலைகளிலும் Software Engineer க்கு நிகரான சம்பளம் உயர்ந்து விட, அதிகம் சம்பளம் கிடைத்த IT Jobs ஐ விட்டு விட்டு, குறைந்த சம்பளம் கிடைத்தாலும் எந்த stress ம் இல்லாமல் நிம்மதியா , Job security உடன் இருக்கும் அரசு வேலை வாய்ப்பின்(Government jobs) மேல் இன்றைய தலைமுறையினரின் பார்வை திரும்பியது....
அதனாலயே நிறைய பேர் Engineering சேராமல் ஏதாவது ஒரு டிகிரி படித்துக் கொண்டே இந்த மாதிரி அரசு வேலை வாய்ப்பிற்கான தேர்வுகளுக்கு தயார் பண்ண ஆரம்பித்தனர்...
அப்பொழுது தான் ஜெயந்த் தன் பயிற்சி மையத்தை UPSC Exam க்காக மட்டும் சிறியதாக ஆரம்பித்திருக்க, நிறைய பேர் மற்ற தேர்வுகளான TNSPC, Bank exams , Railway exams க்கும் பயிற்சி அழிக்கும் படி கேட்க, அதில் இருக்கும் Opportunity ஐ புரிந்து கொண்டு முழு மூச்சுடன் தன் பயிற்சி மையத்தை ஆரம்பித்தான்...
முன்பு அவன் உடன் தேர்வு எழுதி இன்று அரசு வேலைகளில் இருப்பவர்களையும் வார விடு முறையில் வகுப்பு எடுக்க சொல்ல அவர்களும் இந்த எக்ஷ்ட்ரா சம்பளம் கிடைக்கவும் அவர்களும் முன் வந்து சில வகுப்புகளை எடுத்தனர்...
இதில் முதல் செட்டிலயே நிறைய மாணவர்க்ள TNSPC தேர்வில் தேர்வாகியிருக்க, அதை வைத்தே விளம்பர படுத்தவும் மாணவர்கள் குவிய ஆரம்பித்தனர்...
அதில் வரும் லாபத்தை கொண்டே நகரின் மைய பகுதியில் இந்த பெரிய சென்டரை ஆரம்பித்தான்... நிறைய ஆட்களை அமர்த்தி நல்ல தரமான பயிற்சியை வழங்கி வருகிறான்...
இங்கு சேரும் மாணவர்களுக்கு முதிலில் இருந்தே சில தேர்வுகளை வைத்து அவர்களுடைய தகுதிகளை (Capacity) அளவிட்டு, நன்றாக pickup பண்ணுபவர்களை ஒரு பிரிவாகவும் கொஞ்சம் மந்த நிலையில் இருப்பவர்களை மற்றொரு பிரிவாகவும் பிரித்து அவர்கள் தகுதிக்கு தகுந்தவாறு பயிற்சி அழித்தான்..
அதோடு அவர்கள் தகுதிக்கு தகுந்தவாறு என்னென்ன தேர்வு அவர்கள் எழுதலாம், அதற்கு எப்படி பிரிபேர் பண்ண வேண்டும்.. என்று ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியாக விளக்குவதால், எல்லாரும் கண்ணை மூடி கொண்டு தங்கள் தகுதியை அறியாமல் IAS எழுதறேனு நாட்களை விரயம் செய்யாமல் அவர்களை காத்து வந்தான்..
சில பேர் இந்த மாதிரி exam clear பண்ண முடியாது என்று தோன்றியவர்களிடம் அவர்கள் திறமைக்கு தகுந்த மாதிரி வேற வேலைகளை suggest பண்ணி அவர்களுக்கு சரியான வழிகாட்டியாகவும் இருந்தான்...
தன்னுடைய கனவு நிறைவேறாவிட்டாலும் மற்றவர்கள் கனவுகளை தான் நிறைவேற்றுவதிலும் ஒரு சுகம் இருப்பதை உணர்ந்தவன் அதையே தன்னுடைய எதிர்காலமாக மாற்றிவிட்டான்
பணம் மட்டும் குறிக்கோளாக இல்லாமல் உண்மையிலயே திறமை இருப்பவர்களை ஊக்குவித்து அவர்களுக்கு பயிற்சி அழித்து வந்ததால் விரைவிலயே இந்த பயிற்சி மையம் சென்னையிம் நம்பர் 1 ஆக வளர்ந்தது...
இதை பற்றி கேள்விபட்டு தான் மது இங்க விசாரிக்க வந்தது.. அவளுக்கும் இந்த மாதிரி பயிற்சி மையத்தில் சேர்ந்து பயின்றால் விரைவில் IAS clear பண்ணிடலாம் என்று தோன்றவே தன் தைரியத்தை வரவழைத்து கொண்டு கிளம்பி வந்து விட்டாள்...
இந்த மாதிரி விவரம் கேட்டு வருபர்களுக்கு தங்கள் பயிற்சி மையத்தை பற்றியும் என்னென்ன எக்ஷம் க்கு பயிற்சி அளிக்கபடுகிறது என்பது பற்றி விளக்க என்றே மற்ற staff களை நியமித்திருந்தான் ஜெயந்த்..
அப்பொழுது அனைவரும் பிசியாக இருக்க, தன் வகுப்பை முடித்து வெளியில் வந்தவன் மது தனியாக வரவேற்பறையில் அமர்ந்து இருப்பதை கண்டு ரிசப்சனில் விசாரித்து பின் தானே விளக்குவதாக மதுவிடம் வந்தவன் அவளை வர சொல்லி முன்னே சென்றான்...
ஜெயந்த் வரவேற்பறையின் அருகில் இருந்த கவுன்சிலிங் அறைக்குள் நுழைந்தவன் மதுவும் அவன் பின்னே உள்ளே சென்றதும் அந்த அறை கதவை மூடினான்..
அதை கண்டதும் மேலும் அதிர்ந்தாள் மது...
வழக்கமாக டீடெய்ல்ஸ் எதுவும் வேணும்னா ரிசப்சன் லயே சொல்லி விடுவார்கள் என்று எதிர்பார்த்து ரிசப்சன் ஐயே பார்த்து கொண்டிருந்தவளுக்கு திடீரென்று ஒரு புதியவன் இங்கு அழைத்து வந்து அதுவும் கதவை மூடவும் கொஞ்சம் விலகி இருந்த அவள் பயம் மீண்டும் வந்து அவளை ஒட்டி கொண்டது...
“டீடெய்ல்ஸ் சொல்றதுக்கு எதுக்கு இப்படி தனியா கூட்டிட்டு வரணும்?? இவன் எதுக்கு இப்ப கதைவை மூடணும்? “ என்று பயந்தவாறு முழித்து கொண்டு நின்றிருந்தாள்...
அவசரமாக தன் நாத்தனார் சொல்லி கொடுத்த பாடத்தை மனதில் மீண்டும் ஒரு முறை ஓட்டி பார்த்து கொண்டாள்....
அதற்குள் ஜெயந்த் அவன் இருக்கையில் அமர்ந்தவன் மது இன்னும் நின்று கொண்டிருப்பதை கண்டு
“Please have your seat.. “ என்று புன்னகைக்க, அவளும் மெல்ல அங்கு அவன் எதிரில் இருந்த சேரின் நுனியில் அமர்ந்தாள் பயந்தவாறு....
அவளை நேராக பார்த்தவன்
“என்ன ஊருக்கு புதுசா?? “ என்றான் ஒருமையில்..
திடீரென்று அவன் தன்னை ஒருமையில் அழைப்பதை கேட்டு திடுக்கிட்டாலும் வெளியில் காட்டி கொள்ளாமல் தலையை மட்டும் இல்லை என்று இருபக்கமும் ஆட்டினாள்.... அவளின் வெளிறிய பயந்த முகத்தை கண்டவனுக்கு சிரிப்பு வர, தன் சிரிப்பை அடக்கிகொண்டு
“ஆர் யூ ஓகே மது ? ஏன் இவ்வளவு நெர்வஸ் ஆ இருக்கீங்க?? நான் ஒன்னும் உங்க மேல பாய்ஞ்சுட மாட்டேன்.. பி ரிலாக்ஸ்..” என்று குறும்பாக சிரித்தான் ....
அவள் மனதில் நினைத்ததை அப்படியே அவன் சொல்லவும் அவளுக்கு வெக்கமாகி போனது...தன்னை சமாளித்து கொண்டு, மெல்ல தன் தலையை நிமிர்த்தி அவனை பார்த்து அவளும் கொஞ்சமாக புன்னகைக்க, அவளின் கொஞ்சமேயான புன்னகை, அதி காலையில் ரோஜாவின் மொட்டு மெதுவாக கொஞ்சமாக அவிழ்ந்ததை போல இருந்தது அவனுக்கு... அவளின் அந்த மெல்லிய புன்னகையை ரசனையுடன் பார்த்தான் அவனையும் அறியாமல்....
அதற்குள் தன் நிலை உணர்ந்து தன்னை சுதாரித்து கொண்டவன் தன் தலையில் மானசீகமாக கொட்டி கொண்டு
“ஹ்ம்ம்ம் சொல்லுங்க மதுவந்தினி.. உங்களுக்கு என்ன டீடெய்ல்ஸ் வேணும் ?? “ என்றான் முகத்தை சீரியசாக வைத்து கொண்டு..
மதுவும் ஓரளவுக்கு தன்னை சமாளித்து கொண்டவள் தன் ஹேன்ட் பேக்கை திறந்து அவள் எழுதி வைத்திருந்த தன் சந்தேகங்கள் இருந்த பேப்பரை எடுத்தாள்....
அந்த லிஸ்ட்டை கண்டதும் ஜெயந்த் க்கு மீண்டும் சிரிப்பு வந்தது... தன் சிரிப்பை அடக்கி கொண்டு அவளையே பார்க்க, மதுவும் அந்த பேப்பரை எடுத்து தன் சந்தேகங்கள் ஒவ்வொன்றாக கேட்க ஆரம்பித்தாள்...
அவனும் பொறுமையாக விளக்க, அதையும் அந்த பேப்பர்லயே குறித்து கொண்டாள்...
ஒரு வழியாக தன் சந்தேகங்களை கேட்டதும் அவள் முகத்தில் தெளிவு வந்திருந்தது...
“ஓகே மது.. அப்ப நெக்ஷ்ட் வீக் திங்கள் கிழமையில் இருந்து புது பேட்ச் ஸ்டார்ட் ஆகுது.. நீங்க அதுலயே ஜாயின் பண்ணிக்கறீங்களா?? “ என்றான்...
“ஹ்ம்ம்ம் நான் எங்க வீட்ல கேட்டுட்டு சொல்றேன் சார்... “ என்றாள் தயங்கியவாறு...
ஒரு விநாடி ஆச்சர்யத்தில் அவன் கண்கள் விரிந்தன...
“இப்ப இருக்கிற பெண்கள் எல்லாம் எவ்வளவு fast ஆ இருக்காங்க... தாங்கள் என்ன படிக்கணும் , என்ன வேலை செய்யணும் ஏன் எப்ப திருமணம் செய்யனும் என்பதெல்லாம் அவர்களே முடிவு செய்த பின் பெற்றோர்களுக்கு ஒரு information க்காக மட்டும் சொல்லும் இன்றைய நகர வாழ்க்கையில் ஒரு வகுப்புக்கு சேர்வதற்கு தன் வீட்டில் கேட்டு சொல்றேன் என்று அவள் கூறியதை கேட்டதும் ஆச்சர்யமாக இருந்தது...
அவள் இதுவரை கேட்ட கேள்வியில் இருந்தே அவளுக்கு தன்னை போலவே IAS ஆகணும் ற கனவு இருப்பதை புரிந்து கொண்டான்... ஆனால் அவளுல் இருக்கும் இந்த பயந்த சுபாவம் தான அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது...
“இந்த காலத்தில் கூட இப்படி ஒரு பெண்ணா?? “ என்று...பின் மதுவை பார்த்து
“Its ok.. As you wish..ஆமா தனியாவா வந்தீங்க?? “என்றான் சந்தேகமாக...
“ஏன் இப்படி கேட்கறான்?? “ என்று யோசித்தவளுக்கு
“அப்பொழுது தான் தான் முதலில் பயந்தது அப்படியே முகத்தில் தெரிந்தது போல இருக்கு.. அதான் இப்ப கேட்கறான்.. இனிமேல் நம்ம பயத்தை முகத்துல காட்ட கூடாது.. “என்று நினைத்து கொண்டவள்
“ஆமாம்..” என்று தலையை மட்டும் ஆட்டினாள்...
“சரி தனியா போய்டுவீங்களா?? “ என்றான் மீண்டும்..
“இப்படி பயந்து கொண்டிருப்பவளை எப்படி தனியா அனுப்பினாங்க ?? “ என்று யோசித்தவாறு...
“”போய்டுவேன் சார்... “ என்றாள் தன் முகத்தை தெளிவாக வைத்து கொண்டு..
“ஓகே.. All the best…Take care “ என்று அவன் தன் கையை நீட்ட மது ஒரு அடி பின்னால் நகர்ந்தாள்...
“Thanks sir.. “என்று முனகியவள் அவன் கையை தவிர்த்து வாயிலை நோக்கி வேகமாக நகர்ந்தவள் பின் வேகமாக அங்கிருந்து ஓடி விட்டாள்..
ஜெயந்த் க்கு இன்னும் ஆச்சர்யமாக நின்று கொண்டிருந்தான் அவள் சென்ற திசையை பார்த்தவாறு.. பின்
“Interesting girl...“ என்று தனக்குள் சிரித்து கொண்டு தன் அடுத்த வகுப்பிற்கு சென்றான்...
ஜெயந்த் அருமை
ReplyDelete