தவமின்றி கிடைத்த வரமே-5
அத்தியாயம்-5
மலருக்கு என்ன காபி பிடிக்கும் என்று கேட்டு இருவருக்கும் ஆர்டர் கொடுத்தவன் பின் அவளிடம் திரும்பி“ஆமா.. எங்க உங்க ஆருயிர் தோழியை காணோம்?? “ என்றான்...
“ஹ்ம்ம் எல்லாம் உங்களால தான் டாக்டர்... எங்க இரண்டு பேரையும் பிரிச்சு இப்படி என்னை தனியா சுத்த விட்டுட்டீங்க..” என்று செல்லமாக முறைத்தாள் மலர்..
“ஹா ஹா ஹா.. நான் என்ன பண்ணினேன்?? “என்று யோசித்தவன்
“ஓ... அந்த பெட் மேட்டரா??? என்ன?? சொன்ன மாதிரியே அவங்களுக்கு இரண்டு வாரத்துக்கு சுதந்திரம் கொடுத்திட்டீங்களா?? “ என்றான் குறும்பாக சிரித்தவாறு....
அவனை இலேசாக முறைத்தவள்
“ஹீ ஹீ ஹீ ரொம்பவும் சந்தோசமாகாதிங்க டாக்டர்... என் பிரண்ட் எப்பவும் என்னை விட்டு பிரியமாட்டாளாக்கும்...
அவளுக்கு ஆபிஸ் வேலை வந்திட்டதால இன்னைக்கு என்கிட்ட இருந்து தப்பிச்சுகிட்டா... “ என்று சிரித்தாள் மலர்...
அப்பொழுது அவர்கள் ஆர்டர் பண்ணிய காபி வர , அதை பருகியவள்
“இவ்வளவு விலை கொடுத்து இந்த காபியை குடிக்கிறதுக்கு பேசாம என் ஜோவோட காபிய குடிச்சிருக்கலாம் டாக்டர்.... இந்த காபி டே ,ஸ்டார்பக்ஸ் காபியை விட சூப்பரா இருக்கும்... “ என்றாள் அவனருகில் வந்து ரகசியமாக....
அவள் முகத்தை அருகில் காணவும் எகிறி குதித்தது அவன் இதயம்...
அதை அடக்கிக் கொண்டு
“ஓ.. ஸ்டார்பக்ஸ் காபி எல்லாம் குடிச்சிருக்கியா?? “ என்றான் ஆச்சர்யமாக
“ஹீ ஹீ ஹீ... அதெல்லாம் சும்மா ஒரு ப்ளோல சொல்றது டாக்டர்...
இப்ப அமிர்தம் சுவையா இருக்கும் னா அதை டேஸ்ட் பண்ணி இருக்கியானு கேட்பீங்களா ?? சும்மா மத்தவங்க சொல்றத வச்சு நாமளும் சொல்றதுதான.. இதுவும் அது மாதிரிதான்... “ என்று கண் சிமிட்டி சிரித்தாள்...
“ஆகா... இவகிட்ட வாய் கொடுத்தா நாமதான் மொக்க வாங்கணும் போல.. “ என்று உள்ளுக்குள் சிரித்து கொண்டவன்
“கரெக்ட் தான் பனிமலர்.. சரி யார் அந்த ஜோ?? “ என்றான் அவளை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில்...
“ஆங்... ஜோ தெரியாது டாக்டர்?? “ என்றாள் கேள்வியாக
“நம்ம ஆக்ட்ரஸ் ஜோ வா?? “ என்றான்
“ஹீ ஹீ ஹீ.. யூ நோ ஒன் திங்க் டாக்டர்.... நம்ம ஆக்ட்ரஸ் ஜோவுக்கு தோசையே சுட தெரியாதாம்.. ஒரு பேட்டியில சொல்லியிருக்காங்க... அப்படி பட்டவங்க கிச்சனுக்கு போய் காபி போடுவாங்களா?? உங்களுக்கு யோசிக்கவே தெரியல டாக்டர்.. “ என்றாள் நக்கலாக...
“அம்மா தாயே.. எனக்கு உன் அளவுக்கு ஜீகே தெரியாது.. நான் ஜீகே ல மக்குதான்.. சரி நீயே சொல் யார் அந்த ஜோ?? “ என்றான் இலேசாக முறைத்தவாறு...
“ஹீ ஹீ டோன்ட் பீ டென்சன் டாக்டர்... சரி..சரி... நீங்க அடிக்க வர்றதுக்கு முன்னாடி நானே சொல்லிடறேன்.. ஜோ யாருனா ??
இந்த கிரேட் பனிமலர் என்ற அறிவாளியை பத்துமாசம் சுமந்து இந்த உலகுக்கு அறிமுகபடுத்தி நம்ம சிங்கார சென்னையின் ஜீனியஸ் எண்ணிக்கையில் ஒன்றை உயர்த்தியவர்... “ என்று சிரித்தாள்...
அவள் சொன்னதன் அர்த்தம் புரிவதற்குள் தலை சுத்தியது அவனுக்கு...
“ஆகா.. இப்பயே கண்ணை கட்டுதே... இவள வச்சு காலம் பூரா எப்படி ஓட்டறது?? “ என்று உள்ளுக்குள் சிரித்து கொண்டான்...
“என்ன டாக்டர் சார்?? இப்பயே கண்ணை கட்டுதா?? “ என்று மீண்டும் சிரித்தாள்
“ஆங்க்.. நான் மனசுல நினைச்சதே அப்படியே சொல்றாளே.. இவகிட்ட கொஞ்சம் பார்த்துத்தான் யோசிக்கணும் போல.. “ என்று நினைக்கையிலயே
“நீங்க இப்ப மனசுல நினைக்கிறது கூட எனக்கு கேட்குது டாக்டர்...” என்று சிரித்தாள் மலர்...
“ஹ்ம்ம்ம்.. சரி சொல்லு பார்க்கலாம் நான் என்ன நினைத்தேன் என்று.. “ என்றான் அவனும் குறும்பாக..
“ஆங்க்.. நான் மனசுல நினைச்சதே அப்படியே சொல்றாளே.. இவகிட்ட கொஞ்சம் பார்த்துத்தான் யோசிக்கணும் போல.. இதைத்தானே நினைச்சீங்க..” என்று சிரித்தாள்..
அவன் ஆச்சர்யத்தில் விழி விரிக்க,
“டாக்டர்... இப்படி எல்லாம் முழிச்சு என்னை பயமுறுத்தாதிங்க... பாவம் சின்ன புள்ள பயந்துடுவேன்.. அப்புறம் அந்த ஜோ என்னை கறுப்பசாமி கோயிலுக்கு இழுத்துட்டு போய் வேப்பிலை அடிக்க வச்சுடும்.. “
“அப்புறம் இன்னொன்று டாக்டர்.... நீங்க இப்படி விழி விரிச்சா நல்லாவே இல்லை.. உங்க ஹாஸ்பிட்டல் ரிசப்சனிஷ்ட்.... அந்த தக்காளி.. விரிச்சா செம க்யூட் டாக்டர்... “ என்று சிரித்தாள்...
அதை கேட்டு வசி அவளை செல்லமாக முறைக்க
“ஒகே.. ஒகே... டாக்டர்.. உங்க பொருமை எல்லாம் ஜெட் வேகத்துல பறந்துகிட்டு இருக்குனு நினைக்கிறேன்... இப்ப நாம் ஜாலிமோட் ஆப் பண்ணிட்டு சீரியஸ் மோட்க்கு ஷிப்ட் பண்ணிடலாம்... “ என்று சிரித்தவள் நொடியில் அவள் முகத்தை சீரியசாக வைத்து கொண்டு
“நீங்க காலையில் ஹெல்ப் பண்றேனு சொன்னீங்களே.. சொல்லுங்க டாக்டர்..எவ்வளவு பணம் தர முடியும்?? நீங்க பிளாங் செக் கொடுத்தா கூட ஓகே தான்.. நான் எனக்கு தேவையான தொகையை மட்டும் அதில் எழுதிக்கறேன்.. “ என்று சிரித்தாள்...
நொடியில் மாறிய அவள் முகத்தை ஆச்சர்யமாக பார்த்து கொண்டே
“ஹா ஹா ஹா பிளாங் செக் கொடுக்கிற அளவுக்கு நான் மல்டி மில்லினர் இல்லமா... “என்று சிரித்தான் வசி ...
“ஹா ஹா ஹா பொய் சொல்லாதிங்க டாக்டர்... ஒரு நாளைக்கு எத்தனை பேசன்ட்ஸ் பார்க்கறீங்க.. ஒருத்தருக்கு நீங்க வாங்கிற ஃபீஸ் ஐ பார்த்தா மயக்கமே வருது...
அவங்கவங்க இலட்சம் இலட்சமா இல்ல இப்ப எல்லாம் டாக்டர் சீட் கோடிக்கு போயிருச்சாம்...
கோடியா கொடுத்து வாங்கின டாக்டர் பட்டத்தை வச்சுகிட்டு அந்த கோடிய திரும்ப எடுக்கிறதுக்குனு பாவம் இல்லாதவங்க கிட்ட கூட பெரிய தொகைய புடுங்கறீங்க இல்ல.. அதெல்லாம் அப்படியே உங்க பேங்க் அக்கவுண்ட்ல தான இருக்கும் டாக்டர்...
அதோட அவ்வளவு பெரிய ஹாஸ்பிட்டல் ல இருக்கீங்க... நீங்க அப்படி சொல்லாமா?? “ என்றாள் மீண்டும் சிரித்தவாறு...
அவளின் குறும்பு பேச்சில் இருக்கும் உண்மை புரிந்தாலும் அவள் அவனை கிண்டல் அடித்து பேசினாலும் ஏனோ அவள் மேல் அவனுக்கு கோபம் எதுவும் வரவில்லை.. மாறாக அவளின் பேச்சை இன்னும் ரசித்து கொண்டிருந்தவன் மெல்ல சிரித்து
“ஹா ஹா ஹா அவ்வளவு பெரிய ஹாஸ்பிட்டல் ல நான் மாத சம்பளத்துக்கு வேலை செய்யும் மருத்துவன் மட்டும் தான் மேடம்.. அந்த ஹாஸ்பிட்டல் MD நானில்லையே......” என்று சிரித்தான்..
“ஹ்ம்ம் ஓகே டாக்டர்.. அப்ப நீங்களும் அந்த மாதிரி ஒரு மருத்துவமனை கட்டி MD ஆகிடுங்க.. “ என்றாள்...
“ஹ்ம்ம் அதுவும் என் கனவுதான்.. பார்க்கலாம்.... “ என்றான் மெல்ல புன்னகைத்தவாறு
“உங்க கனவு சீக்கிரம் பலிக்கட்டும் டாக்டர்... “ என்று சிரித்தாள்..
“தேங்க்ஷ் பனிமலர்.. சரி அந்த குழந்தைக்கு ஹார்ட் பிராப்ளம் னு சொன்னீயே?? என்னாச்சு?”என்றான்..
“சே.. நான் ஒருத்தி... வந்த வேலையையே மறந்துட்டேன்.. இதுக்குத் தான் என் கயல் டார்லிங் கூட வேணுங்கிறது.. இப்படித்தான் டாக்டர் நான் அடிக்கடி அவுட் ஆப் சிலபஸ் போய் வேற எதாவது கதை அடிச்சுகிட்டு இருந்தா அவதான் என்னை புடிச்சு இழுத்துகிட்டு வந்து நாங்க வந்த மேட்டரை ஞாபக படுத்து வா...
அவ இல்லாம நான் பாட்டுக்கு எதையோ பேசிகிட்டிருக்கேன்.. ஞாபக படுத்தியதுக்கு ரொம்ப நன்றி டாக்டர்... “என்று தன் தலையில் கொட்டிக் கொண்டவள் தன் அலைபேசியை எடுத்து அதில் இருந்த ஒரு குழந்தையின் புகைபடத்தை காட்டினாள்...
“இந்த குட்டி பெயர் கீர்த்தி டாக்டர்.. வயது மூனு ஆகுது.. நல்லா ஓடி விளையாண்ட குழந்தை திடீர்னு மயக்கம் போட்டுட்டாளாம்... செக் பண்ணி பார்க்க அவ ஹார்ட் ல ஓட்டைஇருக்காம்.. அத உடனே அடைக்கணும்னு சொல்லிட்டாங்க...
அந்த குட்டியோட பெற்றோர் அவ்வளவு வசதி இல்லை.. அதான் நான் ஹெல்ப் பண்றேன்... “ என்றாள் கொஞ்சம் வருத்தமாக...
“பாருங்க இந்த சின்ன வயசுல மத்த பசங்க சந்தோசமா சிரிச்சு விளையாடறப்போ இந்த குட்டி மட்டும் அதை எல்லாம் ரசிக்கத்தான் முடியுது.. அதுவும் எத்தனை நாளைக்கோ எனும் பொழுதுதான் கஷ்டமா இருக்கு...
இவ என்ன பாவம் பண்ணினா?? எதுக்கு இவளுக்கு போய் இப்படி ஒரு நோயை கொடுத்து படைத்தான் அந்த ஈஸ்வரன்?? னு சொல்லி அவன் கிட்ட நல்லா சண்டை போட்டுட்டேன்.. நீ கொடுத்த அந்த வியாதிய நீதான் குணபடுத்தணும் னு சொல்லி திட்டிட்டு வந்திட்டேன்... “ என்றாள் வேதனையுடன்...
அதுவரை சிரித்து பேசியவள் நொடியில் எமோசனலாக மாறிப்போக, அவனுக்குமே கஷ்டமாக இருந்தது அந்த குழந்தையின் நிலையை நினைத்து...
இது மாதிரி நிறைய பேசன்ட்ஸ் களை பார்த்திருக்கிறான்... அவர்களை பார்க்கும் பொழுது அவனுக்குமே இதே கேள்விதான் வந்து போகும்...
அந்த ஈசன் இது மாதிரி குறையோடு படைத்த உயிர்களை எப்படியாவது காப்பாற்றி அவர்களும் இந்த உலகில் மகிழ்ச்சியாக, தங்களுக்கு கிடைத்த இந்த வாழ்க்கையை அனுபவிக்க வைப்பதற்காக போராடி இருக்கிறான்...அதில் வெற்றியும் பெற்றிருக்கிறான் இதுவரை...
அவளின் வேதனையான முகத்தை கண்டவன்
“ஹ்ம்ம்ம் கூல் டவுன் பனிமலர்... அந்த ஈசன் செய்யும் ஒவ்வொரு விசயத்திலும் ஏதாவது ஒரு காரணம் இருக்கும்... “ என்றவன்
“ஒரு வேளை நான் உன்னை சந்திக்கத்தான் இப்படி ஒரு நாடகம் ஆடுகிறானா ?? “ என்று யோசித்தவன் அவசரமாக
“சே.. அதுக்கு போய் ஒரு சின்ன குழைந்தைக்கு இப்படி ஒரு பெரிய வியாதி வந்துதான் என்னவளை சந்திக்க வேண்டும்.. என்று எப்படி நினைக்க முடிந்தது... ஈஸ்வரா.. சீக்கிரம் அந்த குழந்தையை காப்பாத்திடு.. “ என்று வேண்டிக் கொண்டவன்
“சரி.. அந்த குழந்தையை எப்படி உனக்கு தெரியும்?? உன் உறவா?? “ என்றான் கேள்வியாக
“இந்த உலகத்துல இருக்கிற எல்லோருமே அந்த ஈசனின் படைப்பு எனும்பொழுது எல்லோருமே ஒரு வகையில் நம்ம சொந்தக்காரர்கள் தான் டாக்டர்.. “ என்று சிரித்தாள் தன் முகத்தை இயல்பாக்கி கொண்டு
“நான் ஒரு தொண்டு நிறுவனத்தில மெம்பரா இருக்கேன் டாக்டர்... அந்த நிறுவனம் இல்லாதவங்களுக்கு தேவையான உதவி செய்வதற்காக.. இந்த குட்டியோட பேரன்டஸ் அங்க வந்து பணம் வேணும்னு வேண்டியிருக்காங்க...
ஒரு தொகையைத்தான் அவங்க கொடுக்க முடியும்.. முழு பணமும் தரமட்டாங்க.. அவங்க என்கிட்ட சொன்னப்பதான் சரி பன்ட் கலெக்ட் பண்ணலாம் னு முடிவு பண்ணி நானும் கயலும் இதை ஆரம்பித்தது..
தெரிஞ்ச ப்ரண்ட்ஸ் எல்லாம் கொஞ்சம் கெல்ப் பண்ணினாங்க... ஓரளவுக்கு ஹாஸ்பிட்டல் செலவுக்கு சேர்த்தாச்சு..
இப்ப அந்த சர்ஜரி பண்ற டாக்டர் ஃபீஸ்க்கு தான் மீதி வேணும்.. இன்னும் இரண்டு நாள் ல அந்த குட்டிக்கு ஆபரேசன் பண்ணியாகணும்..
நானும் அந்த டாக்டர் கிட்ட பேசி பார்த்துட்டேன்.. நீங்க ஆபரேசன் பண்ணுங்க .. நான் சீக்கிரம் பணம் கட்டிடறேன் னா அவங்க கேட்க மாட்டேனுட்டாங்க... பணம் கட்டினாதான் அடுத்த ஸ்டெப் போக முடியும்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாங்க..
சே.. ஒரு உயிருக்கு முன்னாடி பணம் தான் பெருசா போயிருச்சு டாக்டர்... “ என்றாள் வேதனையாக...
அவள் கையை மெல்ல அழுத்தியவன்
“டோன்ட் வொர்ரி.. பனிமலர்... கண்டிப்பா ஒரு வழி கிடைக்கும்..
சரி.. அந்த குழந்தையோட ஆபரேசனுக்கான பணம் தான கலெக்ட் பண்ணிகிட்டிருக்கீங்க... என்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது... ஆனா அந்த ஆபரேசன் ஐ நானே பிரியா பண்றேன்... “ என்றான்
அதை கேட்டவள் திகைத்தவாறு
“நீங்களா?? நீங்க எப்படி டாக்டர்??.. நீங்க ஒரு ஜென்ரல் டாக்டர் தான?? ஹார்ட் ஆபரேசன் னா நீங்க நினைகிற மாதிரி கத்தி எடுத்து வெட்டி ஓட்டைய அடைச்சு தையல் போடறது இல்லை டாக்டர்....
அது எவ்வளவு ரிஸ்க் ஆனது தெரியுமா?? .. நம்ம உடலிலயே முக்கியமானது இதயம் தான் டாக்டர்... அதை சரி பண்ண ஸ்பெஷலா படிச்சிருக்கணும்...
நீங்க பாட்டுக்கு சாதாரணமா நான் பண்றேன் னு சொல்றீங்க... நீங்க சரியான டுபாக்கூர் டாக்டர் தான்.... “ என்றவள் தன் நாக்கை கடித்துக் கொண்டாள்...
“வாட்?? டுபாக்கூர் டாக்டரா?? “ என்றான் அவளை முறைத்தவாறு...
“ஹீ ஹீ ஹீ .. சும்மா பன் க்காக டாக்டர்.. நீங்க சீரியசா எடுத்துக்காதிங்க.. “ என்று அசடு வழிந்தாள்...
அவனும் சிரித்தவாறு
“நான் ஆபரேசன் பண்றேனா எனக்கு தெரிந்த ப்ரண்ட்ஸ் வழியானும் அர்த்தம் இருக்கு மேடம்... என் ப்ரண்ட்ஸ் cardiologist ஆ இருக்காங்க.. நான் அவங்க கிட்ட கேட்டு இந்த ஆபரேசனுக்கு ஒத்துக்க வைக்கிறேன்... “ என்று சமாளித்தான் சிரித்தவாறு..
“ஓ... சூப்பர் டாக்டர்.. உங்க பவர் தெரியாம உங்களை போய் தப்பா எடை போட்டுட்டேனே...சாரி... தப்பா எடுத்துக்காதிங்க.... உங்க உதவிக்கு ரொம்ப தேங்க்ஷ்... “ என்றாள்...
“இட்ஸ் ஓகே.. ஆமா.. என்ன மாதிரி எல்லாம் மத்தவங்களுக்கு ஹெல்ப் பண்ணுவ.. “என்றான் அவளை பற்றி இன்னும் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில்...
“உதவினு ஸ்பெசிபிக் ஆ எதுவும் இல்லை... என்னால முடிஞ்ச community service பண்ணுவேன் டாக்டர்.. எனக்கு நேரம் கிடைக்கிற பொழுதெல்லாம் அந்த NGO க்கு போய்ட்டு ஏதாவது ஒரு வேலையில உதவி பண்ணுவேன்..
இதெல்லாம் ஏன் பண்ணறேன் னு கேட்கறீங்களா..
வாரத்துல 5 நாள் வேலை செய்து மண்டை ரொம்ப சூடாகிடும் டாக்டர்.. அதை குளிர வைக்க, வார விடுமுறையில் நாள் முழுவதும் தூங்கியோ, இல்லை பீச், மால்னு சுத்தாம உருப்படியா நம்ம சொசைட்டிக்கு ஏதாவது பண்ணலாம்னு சனிக்கிழமை 11 மனிக்கு எல்லாம் கிளம்பிடுவேன்...
என்னால் முடிஞ்ச சின்ன சின்ன உதவி செய்வேன்..” என்றாள்
“ஓ.. வெரி குட்.. சரி அப்படி மண்டை சூடாகிற மாதிரி என்ன வேலை செய்யறீங்க.. “ என்றான் ஆர்வமாக
“ஹா ஹா ஹா.. அது சஸ்பென்ஸ் டாக்டர்... எல்லாத்தையும் இப்பயே சொல்லிட்டா இன்ட்ரெஸ்ட் போய்டும்... உங்க பிசி செட்யூல் ல ஒரு நிமிசம்மாவது என்னை பத்தி நினைச்சு நீங்க மண்டைய குடைஞ்சுக்கணும்.. அதான்.. “ என்று கண் சிமிட்டினாள் குறும்பாக...
“ஒரு நிமிடமா?? தினமும் 1440 நிமிடங்களும் எனக்கு உன்னை பற்றிய நினைவுதான் அன்பே... “ என்று உள்ளுக்குள் சிரித்து கொண்டான் வசி ....
“ஓகே டாக்டர்.. லேட் ஆகுது.. இதுக்கு மேல் லேட் ஆ போன அந்த ஜோ சாமியாடும்.. அதை வேற சமாளிக்கணும்.. உங்களுக்கு வேற ஏதாவது டீடெய்ல்ஸ் வேணுமா?? “ என்றாள் நேரம் ஆவதை உணர்ந்து...
அவனும் அப்பொழுது தான் மணியை பரத்தான்... அவளிடம் பேசி கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை...
“சரி பனிமலர்...எனக்கு அந்த குழந்தையோட மெடிக்கல் ரிப்போர்ட்ஸ் வேணுமே... நான் அதை பார்த்துட்டு... “ என்க அவள் சந்தேகமாக புருவத்தை உயர்த்தினாள்...
“ஹீ ஹீ ஹீ எகெய்ன் நான் னா என் பிரண்ட்... பிரண்ட் கிட்ட கொடுத்து பார்த்துட்டு அடுத்து என்ன செய்யலாம்னு சொல்றேன்.. சீக்கிரம் ஆபரேசன் முடிச்சிடலாம்... “ என்றான் சிரித்தவாறு..
“ஸ்யூர் டாக்டர்.. அப்ப நான் இப்பயே அந்த குட்டி இருக்கிற ஹாஸ்பிட்டலுக்கு போய் அந்த ரிப்போர்ட்ஸ் எல்லாம் எடுத்து வாட்ஸ்அப்பில் அனுப்பி வைக்கிறேன்... வாட்ஸ்அப் வச்சிருக்கீங்க இல்ல?? .. “என்றாள் குறும்பாக சிரித்தவாறு..
அவன் செல்லமாக முறைக்க,
“ஹீ ஹீ ஹீ சும்மா டாக்டர்...சரி... நான் கிளம்பறேன் டாக்டர்.. உங்க உதவிக்கு ரொம்ப நன்றி... “ என்று புன்னகைத்தவள் எழுந்து தன் கேன்ட் பேக்கை எடுத்து கொண்டு முன்னால் நடந்தாள்..
பின் ஏதோ நினைவு வர, மீண்டும் திரும்பி அவன் அருகில் வந்தவள்
“டாக்டர்... நீங்க முறைக்கிறப்போ செம க்யூட் ஆ இருக்கு.. அதுக்குனு அடிக்கடி முறைக்காதிங்க... Have a good night and sweet dreams… “ என்று குறும்பாக கண் சிமிட்டி அவன் மீண்டும் முறைக்கும் முன்னே அங்கிருந்து ஓடி விட்டாள்...
அவளின் தைர்யத்தையும் குறும்பையும் கண்டு
“சரியான வாயாடி போல... டேய் வசி... ஏதோ இப்ப ஒரு நாலு வார்த்தையாவது பேசற.. இனிமேல் அதுவும் முடியாது போல.. இவ பேசறதை கேட்டாலே போதும்...உனக்கு பேச சான்சே கொடுக்க மாட்டா... உன் காதை நல்லா சரி பண்ணி தயாரா வச்சுக்க... “ என்று சிரித்தது அவன் மனசாட்சி....
அவனும் சிரித்துக் கொண்டே கிளம்பி தன் காரை எடுத்து கொண்டு வீட்டை அடைந்தான்...
காரை நிறுத்தியவன் அதன் சாவியை எடுத்து ஸ்டைலாக சுழற்றிய படி காலையில் கேட்ட பனிவிழும் மலர்வனம்..என்ற பாடலை ஹம் பண்ணிக் கொண்டே துள்ளலுடன் வீட்டின் உள்ளே சென்றான்..
அங்கு மீனாட்சி, சுந்தர், வசு அனைவரும் டைனிங் டேபிலில் அமர்ந்து இரவு உணவை அப்பொழுதுதான் சாப்பிட ஆரம்பித்து இருந்தனர்....
பொதுவாக வசி நேரத்துக்கு வீட்டுக்கு வரமாட்டான்... அவனை எதிர்பார்த்து காத்திருக்க மாட்டார் மீனாட்சி.... அவனுக்கு தேவையானதை எடுத்து வைத்து விட்டு உறங்க சென்று விடுவார்.. இது அவர் மகன் அவரை வற்புறுத்தி பழக்கியது தன் அன்னை நீண்ட நேரம் கண் விழித்திருக்க பிடிக்காமல்...
இன்று சீக்கிரம் வீடு திரும்பிய தன் மகனை ஆச்சர்யமாக பார்த்தார்... அவன் தங்கையோ தன் அண்ணன் முகத்தில் தெரிந்த ஒளிவட்டத்தை கண்டு ஆராய்ச்சியுடன் பார்த்தாள்...
“ஹாய்.... என்ன எல்லோரும் என்னை விட்டுட்டு சாப்பிட ஆரம்பிச்சிடீங்க... “ என்றவாறு அங்கு சென்றவன் அருகில் இருந்த வாஷ்பேசனில் கை கழுவி பின் அவனும் ஒரு நாற்காலியை இழுத்து அமர்ந்தான்...
அதை கண்டதும் மீனாட்சி இன்னும் ஆச்சர்யமாகி அவனை மேலிருந்து கீழாக ஆராய்ந்தார்...
வசி இரவு வீடு திரும்பியதும் முதல் வேலையாக தன் அறைக்கு சென்று குளித்து ரெப்ரெஸ் ஆகிதான் கீழ வருவான்... இன்று அதை மறந்து நேராக டைனிங் டேபிலுக்கு வந்தவனை வித்தியாசமாக பார்த்தவர் அவனுக்கும் ஒரு தட்டை எடுத்து வைத்து அதில் உணவை எடுத்து வைக்க, அவனும் அதை உண்ண ஆரம்பித்தான்...
தன் அண்ணனை அதுவரை ஆராய்ச்சியுடன் கண்கானித் து வந்த வசு
“அண்ணா... இன்னைக்கு என்னவோ உன் முகத்துல தனியா ஒரு கலை தெரியுதே.... ஹ்ம்ம்ம்ம் ஒரு ஒளிவட்டம் தெரியுதே... What is the secret?? “ என்றாள் கண் சிமிட்டி குறும்பாக சிரித்தவாறு....
“ஹீ ஹீ ஹீ அதெல்லாம் ஒன்னும் இல்லையே.... “ என்று மெல்ல வெக்கத்துடன் அசடு வழிந்து சமாளிக்க முயன்றான் வசி....
“இல்லையே... நீ ஒன்னும் இல்லையே னு இழுக்கும் பொழுதே ஏதோ விசயம் இருக்கும் போல இருக்கே.... ப்ளீஸ் னா... எனக்கு மட்டும் சொல்லேன்.... நான் யார்ர்ர்ர்ர்ர்ர்ர் கிட்டயும் சொல்லவே மாட்டேன்...” என்றாள் ஆர்வமாக சிரித்தவாறு...
அவளுக்கு ஒரு விசயம் தெரிந்தால் அது வாட்ஸ்அப் பார்வார்ட் மெசேஜ் மாதிரி உலகம் முழுவதும் அடுத்த நொடியில் பரவி விடும்..என்பது அந்த குடும்பத்தில் அனைவரும் அறிந்ததே....
அவள் இழுத்த தொனியில் அனைவரும் சிரிக்க, வசியும் இன்னும் அதே வெக்கத்துடன் மெல்ல சிரித்து கொண்டான்...
அவன் முகத்தையே உற்று பார்த்தவள்
“ஆங்....
கண்டுப் புடிச்சேன்… கண்டுப் புடிச்சேன்….
காதல் நோயை கண்டுப் புடிச்சேன்…
என்று பாடியவள்
“அண்ணா.... அப்பா போன வாரம் அட்வைஸ் பண்ணின மாதிரி நீ பொண்ணுங்களை சைட் அடிக்க ஆரம்பிச்சுட்ட தான ... அப்படி முன்னேறியதில நீ அண்ணிய கண்டுபிடிச்சிட்ட...
அண்ணிய பார்த்ததும்
முன்தினம் பார்த்தேனே...
பார்த்ததும் தோற்றேனே...
சல்லடைக் கண்ணாக... நெஞ்சமும் புண்ணானதே...
இத்தனை நாளாக... உன்னை நான் பாராமல்...
எங்குதான் போனேனோ…
என்று அண்ணி கால்ல விழுந்திட்ட... கரெக்ட் ஆ??? சொல்லுனா அண்ணி ஓகே சொல்லிட்டாங்களா?? “ என்றாள் கண் சிமிட்டி மீண்டும்...
அதை கேட்டு அருகில் இருந்த மீனாட்சி உள்ளம் குளிர்ந்தாலும் வசுவின் வயதுக்கு மீறிய பேச்சை கேட்டவர், ஒரு தாயாக தன் மகளை செல்லமாக கண்டித்தார்...
“வசு.. என்ன இது?? சைட் அது இது னு பெரிய பேச்செல்லாம் பேசற... உன் வயசுக்கு தகுந்த மாதிரி பேசணும்.. “என்றார் செல்லமாக முறைத்தவாறு...
“ஹா ஹா ஹா நான் ஒன்னும் சின்ன பொண்ணு இல்ல மா ... நானும் வளர்ரேன் னே மம்மி... எனக்கும் இதெல்லாம் தெரியுமாக்கும்.. எங்க ஸ்கூல்ல எல்லாரும் இந்த மாதிரி விசயத்தை தான் அதிகம் பேசுவாங்க... “என்றாள் வெகுளியாக சிரித்தவாறு...
மீனாட்சிக்கோ அவள் சொன்ன நானும் வளர்ரேன் னே என்றதிலயே மனம் வாடி விட்டது...
“ஈஸ்வரா... இப்படி மான் குட்டி மாதிரி துள்ளி விளையாடும் என் பொண்ணுக்கு ஏன் இப்படி ஒரு குறை வச்ச?? ... அவளும் மத்த பொண்ணுங்க மாதிரி இருந்திருக்கலாம் இல்ல... ஏன் இப்படி ஒரு குறை வர்ற மாதிரி அவளை படைச்ச?? .. நீதான் அவளுக்கு ஒரு வழி காட்டணும்..” என்று மனதுக்குள் அந்த ஈசனை வேண்டிக் கொண்டார்...
அவர் முகத்தில் தெரிந்த மாற்றத்தை கண்டு கொண்ட சுந்தர் அதற்கான காரணமும் புரிய, அருகில் இருந்த தன் மனைவியின் கையை மெல்ல அழுத்தி கண்ணால் ஜாடை காட்டிஅவரை அமைதி படுத்தினார்...
மீனாட்சியும் அதற்குள் தன்னை சமாளித்து கொண்டு அருகில் கவனிக்க, அவர்களின் இளவரசி இன்னும் தன் அண்ணனை வளைத்து வளைத்து வாரி கொண்டிருந்தாள்...
வசியோ அவளை சமாளிக்க முடியாமல் எங்க உண்மையை உளறி விடுவோமோ என்று அவசரமாக தன் உணவை முடித்து வேகமாக எழுந்து கை கழுவி அனைவருக்கும் இரவு வணக்கம் சொல்லி வேகமாக மாடிக்கு விரைந்து சென்றான்.....
மீனாட்சியும் தன் மகனின் நடவடிக்கையை கண்டு தன் கணவனிடம் ஜாடை காட்டி சிரித்து கொண்டார்....
தன் அறைக்கு வந்தவன்
“அப்பாடா.. எப்படியோ அந்த குட்டிபிசாசிடம் இருந்து தப்பிச்சாச்சு.... அப்படியே நடந்ததை சொல்றாளே..” என்று சிரித்து கொண்டவன் அப்பொழுதுதான் நினைவு வந்தது தான் இன்னும் ஆடையை கூட மாற்ற வில்லை என்று....
“ஓ... அதான் அம்மா ஒரு மாதிரி பார்த்தாங்களா?? சே.. இப்படி ஒரே வாரத்துல என்னை முழுவதும் மாற்றி விட்டாளே அந்த வாயாடி... “ என்று சிரித்து கொண்டே குளியல் அறைக்கு சென்று குளித்து முடித்து இரவு உடைக்கு மாறியவன் தன் மெத்தையில் பொத்தென்று விழுந்தான்...
அப்பொழுது அவன் அலைபேசியில் மெசேஜ் வந்ததற்கான ஒலி எழுப்ப, அப்பொழுதுதான் நினைவு வந்தது.. அவன் பனிமலரிடம் அந்த குழந்தையின் ரிப்போர்ட்டை அனுப்ப சொல்லி இருந்தது...
வேகமாக சென்று தன் அலைபேசியை எடுத்து கட்டிலில் அமர்ந்தவன் வாட்ஸ்அப்பை திறந்து பார்க்க, புது எண்ணில் இருந்து பனிமலர் தன்னை அறிமுக படுத்திக்கொண்டு அவன் கேட்டிருந்த ரிப்போர்ட்களை அனுப்பி இருந்தாள்...
அதை திறந்து ஆராய்ந்தவன் அவனுக்கு வேண்டிய சில தகவல்களை தன் அலைபேசியில் இருந்த நோட்ஸ் ல் குறித்து கொண்டான்... சில விளக்கங்கள் தேவையானதாக இருக்க அதையும் தனியாக குறித்துக் கொண்டான்..
தனக்கு வேண்டிய தகவல்களை சேகரித்ததும் அவளுக்கு அந்த ரிப்போர் வந்ததாக சொல்லி பதில் அனுப்பினான்..
அவன் பதிலுக்காக காத்திருந்தவள் போல உடனே ஒரு ஸ்மைலி அனுப்பி மீண்டும் அவனுக்கு நன்றி சொல்லி பின் இரவு வணக்கத்தையும் சொல்லி தன் உரையாடலை முடித்தாள்...
வசியும் ஒரு தலையணையை எடுத்து பின்னால் வைத்து கொண்டு கட்டிலில் சாய்ந்து அமர்ந்து கொண்டு அவள் DP ஐ பார்க்க, அதில் அவன் தேவதை தன் குடும்பத்துடன் அழகாக சிரித்து கொண்டிருந்தாள்.....
அவள் அப்பா அம்மாவுடன் கூட ஒரு இளைஞனும் இருந்தான்.. மலர்தான் செல்பி எடுத்திருந்தாள்... அனைவரும் அதில் அழகாக சிரித்துக் கொண்டிருக்க, அவர்களை பார்த்த உடனே அவனுக்கு பிடித்து விட்டது...
ஒரு அழகான மிடில் கிளாஸ் பேமலி... அவர்கள் ஒவ்வொருவர் முகத்திலும் தெரிந்த மகிழ்ச்சியும் அவர்களின் நெருக்கமும் அவர்கள் குடும்பத்தைப் பற்றி ஒரு நல்ல மதிப்பை உருவாக்கியது
மலரின் அருகில் ஒட்டி நின்றிருந்த அந்த இளைஞனை உற்று பார்க்க அவன் முகத்தில் மலரின் சாயல் அப்படியே தெரிந்தது...
“ஓ.. அப்ப இவன் தான் என் மச்சானா?? ஆள் சூப்பராதான் இருக்கான்... என் அத்தை மாமாவும் சூப்பர் தான்...மேட் பார் ஈச் அதர்... சீக்கிரம் இவங்களை எல்லாம் சந்திக்கணும்... “ என்று மனதில் நினைத்து கொண்டான்...
பாவம் எந்த மாதிரி சூழ்நிலையில் அவர்களை அவன் சந்திக்கப் போகிறான் என்று அப்பொழுது அறிந்திருக்கவில்லை அந்த வசீகரன்...
தன்னவளையே இமைக்க மறந்து ரசித்தவன் அப்பொழுது தான் அவள் எண்ணை சேவ் பண்ணவில்லை என்று தெரிய,
“என்ன பெயரில் சேவ் பண்ணலாம்...?? “ என்று சிறிது நேரம் யோசித்தவன் ஒரு பெயர் மனதில் வர, அவன் முகத்தில் புன்னகை அரும்பியது....
அதே பெயரில் சேவ் பண்ணி அதை ஒரு முறை சொல்லி பார்க்க, அவன் மனதில் மீண்டும் பனிமழை பொழிந்தது... உடல் சிலிர்த்தது....
Comments
Post a Comment