என் மடியில் பூத்த மலரே-6



அத்தியாயம்-6 

ருத்துவமனையில் இருந்து திரும்பி வரும் வழியில், சுசிலா சொன்ன செய்திகளே திரும்ப திரும்ப நினைவு வந்தது.. அதிலும் அந்த வாடகை தாய் பற்றிய விளக்கமும், அந்த நடிகரோட செயலும் மீண்டும் மீண்டும் ஒலித்தது ஜானகிக்கு...

அவர் மனதுக்குள்ளே சில கணக்குகளை போட்டு பார்த்தார்.. அதற்கான விடை சரியாக வரவும் திருப்தியாகியது..

ஆனால் அவர் போட்ட கணக்கால் ஒரு பொண்ணோட வாழ்க்கை பாதிக்கபடும் என்பதை அறிந்திருக்கவில்லை ஜானகி அப்பொழுது..

மடமடவென ஒரு திட்டத்தை தீட்டினார்... ஆனால் இது சரியா வருமா?? என்ற குழப்பமும் தப்பாயிருச்சுனா என்ற பயமும் மாறி மாறி வந்தது..

அதே மன நிலையுடன் வீட்டை அடைந்தவர் நேராக பூஜை அறைக்கு சென்றார்..

தன் திட்டம் சரியா, தப்பா, நிறை வேறுமா , ஆகாதா என்று அந்த முருகனிடமே முடிவை வைத்தார்....

இந்த ஆட்டத்தையே ஆரம்பித்து வைத்தவன் அவன் அல்லவா... தனக்கு என்ன வேண்டுமோ, எப்படி அடுத்த காய் நகர்த்தனுமோ அதையே ஜானகிக்கு முடிவாக கொடுத்தான் சிரித்துகொண்டே!! ..

அந்த வேலன் அழித்த உத்தரவை கண்டதும் ஜானகிக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது....

அவர் முகம் புன்னகையில் மலர்ந்தது... ஒரு சில விநாடிகளில் மீண்டும் குழப்பம் சூழ்ந்தது அவர் முகத்தில்..

அவர் குழப்பத்தை தீர்க்க, மீண்டும் சுசிலாவிற்கு போன் பண்ணினார்..

அப்பொழுதுதான் கிளம்பி சென்ற ஜானகி மீண்டும் போன் பண்ணவும், சுசிலா பதட்டத்துடன் போனை எடுத்தார்..

“என்னாச்சு ஜானு. இப்ப தான் கிளம்பி போன . எனி ப்ராப்ளம்???? “

“ஹே... டென்ஷன் ஆகாத சுசி... எனக்கு ஒண்ணும் இல்லை... நான் நல்லாதான் இருக்கேன். இப்பதான் வீட்டிற்கு வந்தேன்...”

“அப்பாடா!!! நான் கூட என்ன ஆச்சோனு பயந்துட்டேன்... சொல்லு எதுக்கு இப்ப போன் பண்ணின??? “

“அது வந்து சுசி.... நீ அந்த வாடகை தாய் பற்றி சொன்ன இல்லியா??? “

“ஆமாம்.. அதுக்கும் நீ இப்ப போன் பண்ணதுக்கும் என்னடி சம்பந்தம்.. “

“இல்லை... ஒரு சின்ன சந்தேகம்... இந்த மாதிரி வாடகை தாய் மூலமாக பிறக்கிற குழந்தைங்க அந்த ஆணோட குணத்தை மட்டும் வச்சு பிறக்கிற மாதிரி ஏதாவது இருக்கா??? “

“அப்படி எல்லாம் இல்லை டீ அம்மா... ஒரு குழந்தை பிறப்பதற்கு ஒரு ஆணும் பெண்ணும் தேவைங்கிற பொழுது ரெண்டு பேரோட குணங்களும் தான் அந்த குழந்தைக்கு வரும்.. நீ சொல்ற மாதிரி எதுவும் கண்டு பிடிக்கலை இன்னும் .. இனிமேல் கண்டு பிடித்தாலும் ஆச்சரியமில்லை... “ என்று சிரித்தார்..

“ஹ்ம்ம். அப்புறம் இன்னொரு சந்தேகம்... இந்த மாதிரி வாடகை தாய்க்காக பெண்கள் இங்க சென்னையில் கிடைப்பாங்களா? “ என்று மெல்ல கேட்டார்..

“ஹ்ம்ம்ம் இருக்காங்க ஜானு. சில பேர் இதை ஒரு தொழிலாகவும் பணத்துக்காக செய்யறாங்க.. சில பேர் ஒரு சேவையாகவும் செய்யறாங்க.. இதுவும் ஒரு தானம் மாதிரி தான் சில சமயம்... “

“ஆமாம்.. நீ எதுக்கு இவ்வளவு ஆர்வமா இதை பற்றி விளக்கமா கேட்குற???? “

“ஹி ஹி ஹி . சும்மா தெரிஞ்சுக்கலாம்னு தான். சரி சுசி.. அப்ப நான் வைக்கிறேன். அப்புறம் பார்க்கலாம் “ என்று போனை அனைத்தார்..

அவர் மனம் மீண்டும் குழம்பியது....

இதுக்கு ஆதி ஒத்துக்குவானா?? என்ற அடுத்த கேள்வி முன் வந்தது..

எதுக்கும் முயற்சி செய்து பார்க்கலாம் என்று நினைத்தவர் ஆதியின் வருகைக்காக காத்திருக்க ஆரம்பித்தார்..

தான் சென்ற மீட்டிங் திருப்திகரமாக இருந்ததால், மகிழ்ச்சியுடன் வீடு திரும்பி கொண்டிருந்தான் ஆதித்யா.. வீட்டை நெருங்கையில்தான், தான் காலையில் அம்மாவிடம் கொஞ்சம் கடுமையாக பேசியது ஞாபகம் வந்தது..

“சே!.. நான் ஏன் அப்படி நடந்துகிட்டேன்.. இனிமேலாவது கோபத்தை அம்மா கிட்ட காட்ட கூடாது.. பாவம் அப்பாக்கு பிறகு என்னை மட்டுமே நம்பி இருக்காங்க.. பார்த்து நடந்துக்கனும் என்று தீர்மானித்தவனாக காரை நிறுத்தி விட்டு வீட்டினுள் சென்றான்..

நேராக தன் அறைக்கு சென்று கொஞ்சம் ரிப்ரஸ் ஆகிட்டு அன்னையை சந்திக்க கீழே வந்தான்..

ஜானகியும் மகனின் வருகையை கண்டு அவன் சாப்பிட என்று எல்லாம் எடுத்து வைத்தார்

ஆதி கீழே வரவும் அவனை பார்த்து புன்னகைத்தார்..

தன் அன்னையின் அந்த புன்னகை அவனுக்கு வியப்பாக இருந்தது.. கொஞ்சம் காலமாக மறைந்து விட்ட புன்னகை அல்லவா அது..

அதை ரசித்தவாறே அவர் அருகில் சென்றவன்

“சாரி மா.. காலையில கொஞ்சம் கோபமா பேசிட்டேன் “

“பரவால கண்ணா.. நானும் தான் காலையிலயே உன்கிட்ட புலம்பியிருக்க கூடாது.. “

“சரி விடுங்க.. இனிமேல அப்படி நடந்துக்க மாட்டேன்.. அப்புறம் என்ன மா விஷேசம்.. உங்க முகம் டாலடிக்குது. எனிதிங்க் ஸ்பெஷல்?? ... ” என்று தன் அன்னையின் புன்னகைக்கான காரணத்தை தெரிந்து கொள்ள ஆர்வமானான்..

“அதெல்லாம் ஒன்னும் இல்லை கண்ணா.. “ என்று சிரித்தார்..

“ஹ்ம்ம் எனக்கு தெரியுமே!!! உங்க ப்ரெண்ட் ஐ பார்த்ததனால தான இந்த சிரிப்பு உங்க முகத்துல... சுசிலாம்மாவை பார்த்தீங்களா.. எல்லாம் செக் பண்ணாங்களா?? “ என்று அக்கறையாக விசாரித்தான்..

சுசிலா என்றதும் ஜானகியின் திட்டம் நினைவு வந்தது..

“எப்படி ஆதியிடம் பேச்சை ஆரம்பிப்பது??? “ என்று யோசித்தார்..

“என்னமா யோசிக்கிறீங்க ??? “

“ஆங்.... ஆதி என்ன கேட்ட??? “

தன் அன்னை ஏதோ யோசிப்பதும், தன்னிடம் ஏதோ கேட்க தயங்குவதும் புரிந்தது..

“எனனமா யோசனை?? சுசிலாம்மாவை பார்த்தீங்களா.. எல்லாம் செக் பண்ணாங்களா?? அவங்க நல்லா இருக்காங்களா?? “

“டேய்... போதும்..போதும்.. ஒன்னு ஒன்னா கேளு.. எனக்கு உடம்புக்கு ஒரு குறையும் இல்லையாம்..நல்லா ஆரோக்கியமா இருக்கேனாம்..

அப்புறம் சுசிலாம்மா ?? நீதான் காலையிலயே பேசிட்டியே. நீயே கேட்க வேண்டியது தானே அவ எப்படியிருக்கானு?? இரண்டு பேரும் சொல்லி வச்ச மாதிரி எங்கிட்ட விளையாடறீங்க.. அவ என்னடான்னா நீ எப்படி இருக்கனு எங்கிட்ட கேட்கிறா” என்று முறைத்தார்..

“ஹி ஹி சொல்லிட்டாங்களா?? “ என்று சிரித்து கொண்டே சாப்பிட ஆரம்பித்தான். ..

அவன் சிரிப்பதையே ரசித்து பார்த்து இருந்தார் ஜானகி... இப்பொழுது ஏதாவது சொல்லி அவனின் இந்த நல்ல மனநிலையை கலைக்க வேண்டாம் என்றவாறு அமைதியானார்...

இரவு உணவை முடித்து மேலெ சென்ற ஆதி சிறிது நேரம் அலுவலக வேலையை பார்த்துவிட்டு படுக்க சென்றான்..

ஏனோ அவன் மனம் கனத்து இருந்தது... இன்று அவ்வளவு பெரிய டீல் க்கான மீட்டிங் நன்றாக முடித்து வந்திருந்தான்..கிட்ட தட்ட அந்த டீல் அவனுக்கு கிடைத்த மாதிரிதான்.. ஆனால் அதற்கான மகிழ்ச்சி மட்டும் ஏனோ தோன்றவில்லை

எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதது போல வெறுமையாக இருந்தத அவனுக்கு..

எப்படி மகிழ்ச்சியாக இருந்த வாழ்க்கை!! எல்லாம் தலை கீழாக மாறிவிட்டதே..

தன் அன்னையின் முகத்தில் சிரிப்பே இல்லை...

அப்பொழுதுதான் ஞாபகம் வந்தது அவன் வந்த உடன் கண்ட அவரின் புன்னகை...

அதுக்கப்புறமோ அவரின் சிரிப்பை பார்க்க முடியவில்லை..

ஏதேதோ நினைவுகளில் புரண்டு புரண்டு படுத்தவனுக்கு தூக்கம் மட்டும் எட்டவில்லை..

இதற்கு மேல் தூக்கம் வராது என்று இறங்கி கீழே வந்தவன்

ஜானகியும் வரவேற்பறையிலயே அமர்ந்து இருப்பதை .கண்டு உடனே அவர் அருகில் சென்றான்

“என்ன ஆச்சுமா?? இன்னும் தூங்காமல் உட்கார்ந்து இருக்கீங்க.. உடம்பு எதுவும் சரியில்லையா?? ” என்று அவரின் அருகில் அமர்ந்தவன் அவரின் நெற்றியில் கை வைத்து பார்த்தான் காய்ச்சல் எதுவும் இருக்கா என்று ...”

“எனக்கு ஒன்னும் இல்லை கண்ணா.. நல்லாதான் இருக்கேன்.. தூக்கம் வரல. அதான் இப்படியே உட்கார்ந்து இருக்கேன்.. நீ ஏன் இன்னும் தூங்கல ஆதி?? “ ,

“எனக்கும் தூக்கம் வரல மா.. “

“பாவம் என் பையன். அவனும் தூக்கம் வராமல் கஷ்ட படுகிறானே??? நான் நினைத்த திட்டம் மட்டும் நல்ல படியா நடந்தால் அவன் வாழ்வு சரியாகிடும்.. அவனிடம் இப்ப கேட்கலாமா “ என்று மீண்டும் யோசனையில் ஆழ்ந்தார்...


அதற்குள் ஆதி

“அம்மா.. நான் கொஞ்ச நேரம் உங்க மடில படுத்துக்கறேன் “ என்று அவர் மடியில் தலை சாய்த்து படுத்தான்..

ஜானகியின் கைகள் தானாக தன் மகனின் தலையை வருடியது...அந்த சுகத்தில் அப்படியே மெய் மறந்து கண்களை மூடினான்..

அவனின் ஆறடி உயரத்துக்கு அந்த நீண்ட ஷோபா வில் இடம் இல்லாமல் கால்களை தரையில் நீட்டி, தலைய மடியில் வைத்து, கண்களை அழுந்த மூடியிருந்த காட்சி ஜானகிக்கு மனதை பிசைந்தது..

இந்த சின்ன வயதில் இவனுக்கு தான் எத்தனை கஷ்டம் .. தொழிலில் வந்த எவ்வளவு பெரிய சோதனைகளையும் அசாதரணமாக தாங்கி ஜெயிச்சுட்டானே என் பையன்... ஆனால் இவ்ளோ பெரிய ஆண்மகன், மனசுல எதையோ நினைச்சு கிட்டு இப்படி தூக்கம் வராமல் கஷ்ட படறானே..

அவனுக்கு என்று ஒரு குடும்பம் இருந்தால் இப்படி கவலை பட மாட்டானோ?? .. எப்படியாவது தன் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று உறுதியாகினார் ஜானகி..

ஆனால் எப்படி ஆதி கிட்ட அந்த பேச்சை ஆரம்பிப்பது என்று தான் மனம் மீண்டும் அதே யோசனையை தொடர்ந்தது..

மெல்ல கண் விழித்த ஆதி தன் அன்னையின் முகத்தில் தெரிந்த குழப்ப ரேகையை கண்டு,

“அம்மா.. எங்கிடட்ட எதுவும் கேட்கனுமா??? நானும் வந்ததில் இருந்து பார்த்துட்டே இருக்கேன்.. ஏதோ கேட்கணும்னு நினைக்கிறீங்க?? ஆனால் யோசிச்சுட்டே இருக்கீங்க.. எதுனாலும் தயங்காமல் கேளுங்க” என்று ஊக்க படுத்தினான்.

“அது வந்து ஆதி... நீ இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்படியே இருக்க போற??? பாரு உனக்குனு ஒரு குடும்பம், ஒரு குழந்தைனு இருந்தால் வாழ்க்கை போரடிக்காமல் இருக்கும். இல்லைனா இப்ப இருக்கிற இந்த வாழ்க்கையில் சீக்கிரம் உனக்கு சலிப்பு வந்திடும்.. அப்ப உனக்குனு யார் இருப்பா ?? “ என்று மெல்ல ஆரம்பித்தார்..

அதை கேட்டு கோபப்படாமல் மெதுவாக விளக்கினான்

“அம்மா.. ஒரு பொண்ணால நாம ஒரு தரம் பட்டது போதும். இனிமேலும் காயப்பட முடியாது..”

“இல்லை கண்ணா. ஒரு பொண்ணு தப்பாயிட்டா எல்லா பொண்ணுங்களும் அப்படியா இருப்பாங்க... உன் தொழிலையே எடுத்துக்க. ஒரு தரம் தோத்துட்டா அப்படியே வா விட்டுடறோம்.. மீண்டும் முயற்சி செய்றது இல்ல.. அது மாதிரி தான் இதுவும். ஒரு பொண்ணு தப்பாயிட்டா எல்லா பொண்ணுங்களும் அப்படிதானு முடிவு பண்ண கூடாது...

“அம்மா... தொழில்ல விட்டா வெறும் பணம் நஷ்டம் மட்டும் தான்.. ஆனால் சொந்த வாழ்க்கையில்?? .. இழந்தது திரும்ப வருமா... அவளால் என் அப்பாவை இழந்தேன்.. அவரை திரும்ப கொண்டு வர முடியுமா?? இழந்த நம்ம குடும்ப சந்தோஷத்தை திரும்ப குடுக்க முடியுமா சொல்லுங்க..”

“அதில்ல ஆதி..... “

“போதும் மா... நீங்க எதையும் சொல்ல வேண்டாம்.. என் வாழ்க்கையில கல்யாணம் என்று ஒன்று இல்லை.. இந்த பேச்சை இதோட விடுங்க...”

“ஹ்ம்ம்ம் சரி ப்பா.. கல்யாணம் தான் வேணாங்கிற… என்னோட இன்னொரு ஆசையை யாவது நிறை வேற்றி வைப்பியா??? “ என்ற தன் அன்னையின் முகம் பார்த்தவன் அதில் தெரிந்த யாசிக்கும் பாவம் அவன் மனதை பிசைந்தது..

“தன் அப்பா இருக்கிற வரைக்கும் அம்மாவை எப்படி வைத்திருந்தார்.. கவலை என்றால் என்ன என்று தெரியாமல் இருந்தவர் இப்போ சிரிப்பையே மறந்து விட்டாரே..

எல்லாம் என்னால்தான்... இல்லை என்னால் வந்த அவளால்.. “ என்று தன்னையே நொந்துகொண்டு

“சொல்லுங்கம்மா.. என்ன ஆசைனாலும் கன்டிப்பா நிறைவேற்றி வைக்கிறேன்”.

“ப்ராமிஸ்?? “ என்று கையை நீட்டினார் ஜானகி..

“என்னமா இது??? சின்ன பிள்ளையாட்டம்.. நீங்க கேட்டு நான் செய்ய மாட்டேனா? இந்த திருமணத்தை தவிர. சொல்லுங்க என்ன செய்யனும்???

“ம்ஹூம்.. நீ ப்ராமிஸ் பண்ணா தான் சொல்லுவேன் “ என்று ஜானகி அடம்பிடிக்க

“சரி ப்ராமிஸ். சொல்லுங்க... “

“அது வந்து... ஆதி ... நம்ம வீட்டுக்கு ஒரு வாரிசு வரணும்..... “ என்று தயங்கியபடி மெல்ல தன்னுடைய ஆசையை சொன்னார்..

அதை கேட்டதும் “கல்யாணம் இல்லாமல் வாரிசு எப்படி மா ??? “ என்று புரியாமல் குழப்பத்துடன் தன் அன்னையை நோக்கினான் மைந்தன்...

“அது வந்து... இப்ப IVF னு ஒரு முறையில…. கல்யாணம் பண்ணிக்காமல் குழந்தை மட்டும் வாடகை தாய் மூலமாக உருவாக்கலாமாம்.. அதான் அந்த மாதிரி உன் குழந்தை நம்ம வீடடுக்கு வரணும்... அதான் என் ஆசை ... “ என்று மென்று முழுங்கி ஒரு வழியாக தான் நினைத்ததை சொல்லி முடித்தார் ஜானகி..

அதை கேட்டதும்

“வாட்??? “ என்று அதிர்ந்து எழுந்து அமர்ந்தான் ஆதித்யா..

“என்னமா உள.... சொல்றிங்க??? இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்??? “

“சுசி தான் சொன்னா... “

“ஓ.. சுசிலாம்மாவோட ஏற்பாடா??? “

“இல்லை... இல்லை.. அவளுக்கு எதுவும் தெரியாது.. நான் இன்று சுசியை பார்க்க ஹாஸ்பிட்டல் போயிருந்தேன் இல்லை.. அங்க எனக்கு தெரிந்த ஒரு பொண்ணு இந்த மாதிரி முறையில தான் தாயாகி இருக்கா.. அப்பதான் சுசி இந்த மாதிரி மருத்துவ தொழில் நுட்பம் எல்லாம் இருக்கு என்று விளக்கினாள்..”

“அதை கேட்டதும் தான் எனக்கு இப்படி ஒரு எண்ணம் இல்லை ஆசை வந்தது.. எனக்கு உன் குழந்தையை என் கையால தூக்கனும் ஆதி... “

“அம்மா.. இதெல்லாம் சரி வராது..இதில் நிறைய சிக்கல் இருக்குமா.. உங்களுக்கு விவரம் தெரியலை னா சுசிலாம்மாவது சொல்லி இருக்கலாம்”

“குழந்தையை சுமக்க போற பொண்ணு மோசமா இருந்தா??? அதே குணம்தான் அந்த குழந்தைக்கும் வரும்..அதோடு நம்ம வசதியை தெரிந்து கொண்டு குழந்தைய வச்சு நம்ம வீட்டுக்குள்ள வர முயற்சி செய்வா.. இந்த பொண்ணுங்களை பற்றி தெரியாதா?? தேவை இல்லாமல் மறுபடியும் பிரச்சனைதான் வரும் “

“நாம் நல்ல பொண்ணா கண்டு பிடிக்கலாம் ஆதி.. அதோடு நிறைய சட்டம் எல்லாம் இருக்காம். முன்னாடியே நாம் எல்லாம் ஒப்பந்தத்துல எழுதிடலாம்..” என்று மகனை சமாதான படுத்த முயற்சி செய்தார்

“ம்ஹூம்ம்... நீங்க என்ன சொன்னாலும் இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்.. உங்களுக்கு குழந்தை தான் வேணும்னா ஏதாவது ஒரு குழந்தையை தத்து எடுத்துக்கலாம்.. இந்த மாதிரி வேண்டாம்..”

“இல்லை ஆதி.. எனக்கு என் ராமோட வாரிசு... உன் குழந்தைதான் வேணும். நம்ம சந்ததி உன்னோட நின்னு போயிட கூடாது .. ஒன்னு நீ கல்யாணம் பண்ணிக்கோ.. இல்லை எனக்கு ஒரு வாரிசாவது வேணும்.. நீயே முடிவு பண்ணிக்கோ” என்று முகத்தை கடுமையாக வைத்து கொண்டு கோபமாக கூறினார்..

தன் அன்னை இந்த மாதிரி கோப பட்டு பார்த்ததில்லை அவன்.. ஆனாலும் அவன் மனம் இளகாமல்

“இந்த இரண்டுமே எனக்கு பிடிக்கலை...என்னை விடுங்க... “ என்று கோபமாக எழுந்து மேலே சென்றான்..

“எனக்கு ப்ராமிஸ் பண்ணியிருக்க ஆதி.. அதை மறந்து விடாத.. “ என்று சத்தமாக உறைத்தார்..

அதை கேட்டும் கேளாமல் வேகமாக தன் அறைக்கு சென்று அறை கதவை வேகமாக அறைந்து மூடினான்..

அறைக்கு உள்ளே சென்றும் அவன் கோபம் தனியவில்லை. .. குறுக்கும் நெடுக்கும் கொஞ்சம் நேரம் நடந்தான்..

“சே!! இந்த அம்மாவுக்கு ஏன் இப்படி புத்தி போகுது.. ஒரே விசயத்தை பிடிச்சுகிட்டு பிடிவாதமா இருக்காங்களே... எப்படி மாற்றுவது.. “

“பேசாமா சுசிலாம்மா கிட்டயே பேசலாம். அவங்ககிட்ட சொல்லிதான் இந்த அம்மாவை சமாதானம் செய்யனும்” என்று போனை கையில் எடுத்தவன் அப்பொழுதுதான் மணியை பார்த்தான்.. நேரம் அதிகாலை 1 மணியை காட்டியது..

“இந்நேரம் தூங்கியிருப்பாங்க.. காலையிலயே பேசலாம்” என்று முடுவு செய்தவன் போனை எறிந்துவிட்டு படுக்கையில் விழுந்தான்

ஏதெதோ எண்ணங்கள் வந்து இன்னும் அவனை வாட்டின.. ஒரு வழியாக விடிகாலையில் உறங்கி போனான்..

மறுநாள் காலையில் வெகு நேரம் கழித்தே எழுந்தான் ஆதித்யா.. இரவு தூங்காததால் கண்கள் எரிந்தன.. இருந்தாலும் அலுவலகத்தில் வேலை இருப்பதால் அவசரமாக தன் காலை பணிகளை முடித்து அவசர உடற்பயிற்சியையும் முடித்து அலுவலகம் செல்ல கிளம்பி கீழே வந்தான்..

வழக்கமாக ஜானகி இந்நேரம் எழுந்து ஆதி வரும் பொழுது அவனுக்கு காலை உணவை எடுத்து வைத்து அவனுக்காக காத்திருப்பார்..

இன்று உணவு ரெடியாக இருந்தது.. ஆனால் அவன் அன்னையை காணவில்லை..

அப்பொழுது தான் நினைவு வந்தது நேற்று இரவு நடந்த நிகழ்வு... தன் அம்மாவிடம் எவ்வளவு முயன்றும் கடைசியில் கோபத்தை காட்டியது அவன் மனதை சுட்டது.. எல்லாம் அவனுக்காக தான் செய்றார் என்றாலும் ஏனோ அவனால் இந்த ஒரு விஷயத்தை மட்டும் ஏற்று கொள்ள முடியவில்லை.. அவன் கற்று கொண்ட பாடம் அவனை அந்த மாதிரி பிடிவாதமாக இருக்க வைத்தது...

சமையல் அறையிலும் ஜானகி இல்லாததால், அவர் அறைக்கே தேடி சென்றான்..

ஜானகி இன்னும் எழுந்திருக்காமல் படுக்கையில் படுத்து இருந்தார்.. அவர் அருகில் சென்று கட்டிலில் அமர்ந்தவன்

”என்னாச்சுமா.... உடம்பு சரியில்லையா?? “ என்று நெற்றியில் கை வைத்தான்..

ஆதியின் கை பட்டதும் மெதுவாக கண் விழித்தவர்

“எனக்கு ஒன்னும் இல்லப்பா... நான் எழுந்து என்ன செய்ய போறேன்.. நீ சாப்பிட்டு ஆபிஸ் கிளம்பு. நான் மெதுவா எழுந்துக்கறேன்” என்றவர் குரலில் ஒரு வித சலிப்பு படர்ந்திருந்தது. அதை கண்ட ஆதி

“என் மேல கோபமா மா??“

“அதெல்லாம் இல்ல ஆதி.. நான் போறதுக்குள்ள உனக்கு ஒரு எதிர் காலத்தை அமைச்சு கொடுக்கனும் னு ஆசை.. என்ன செய்ய.. நாம ஆசை படறது எல்லாம் நடந்து விடுமா... “

அவருடைய அந்த குரலில் இருந்த வருத்தம் அவனை மேலும் சுட்டது.. தன் அம்மா இதுவரை எதையும் அவனிடத்தில் கேட்டது இல்லை..

“நான் ஏன் இவ்வளவு சுயநலமாக இருக்கேன்?? என்னுடைய பக்கத்தை மட்டுமே பார்த்து அதிலயே பிடிவாதமாக இருக்கேனோ?? ..

அவர் பக்கம் பார்த்தால் அவருடைய ஆசையும் நியாயமானது தான்..” என்று அவன் யோசித்து கொண்டிருக்கும் பொழுது ஜானகியே தொடர்ந்தார்...

“என் கவலை எல்லாம் நம்ம சந்ததி உன்னோட முடிந்து விடுமே என்று தான்.. யாருக்கு தெரியும்?? இதுவே என் கடைசி ஆசையாக கூட இருக்கலாம்”

என்று அவர் முடிக்கும் முன்னே அவர் வாயை தன் கையால் பொத்தினான் ஆதி..

“ப்ளீஸ் மா.. இப்படி எல்லாம் சொல்லாதிங்க.. எனக்குனு இருக்கறது நீங்க மட்டும் தான்... உங்களையும் நான் இழக்க விட மாட்டேன்... “

“இப்ப என்ன... உங்களுக்கு ஒரு குழந்தை தான வேணும்.. சரி நீங்க சொன்ன மாதிரியே செய்யலாம்.. ஆனால் இனிமேல் இப்படி எல்லாம் பேசாதிங்க...” என்று கண் கலங்கினான்..

அதை கண்டதும் ஜானகியின் மனம் உருகியது...

“வேணாம் ஆதி.. எனக்காக உன்னை மாத்திக்க வேணாம்... “

“இல்லை மா. உங்க விருப்ப படியே ஆகட்டும்.. நீங்க இவ்வளவு வருத்த படறீங்கனா அதை என்னால தாங்க முடியாது..

“சரி.. நீங்க சொன்ன மாதிரியே ஏற்பாடு செய்யலாம். ஆனா அந்த பொண்ணு மட்டும் நான் சொல்ற மாதிரி இருக்கனும்..”

“சொல்லுடா கண்ணா.. நீ சொல்ற மாதிரியே பார்த்துடலாம் “ என்று குதூகலித்தார்..அவருக்கு எப்படியாவது ஆதி இதுக்கு சம்மதித்தால் போதும் என்று இருந்தது..

“அந்த பொண்ணு திருமணம் ஆகாத பொண்ணா, பணத்துக்காக இதை செய்யாமல் ஒரு சேவையாக இதை ஏத்துக்கனும்.. குழந்தை பிறந்ததும் நம்ம கிட்ட கொடுத்துட்டு உடனே கிளம்பிடனும்.. அதுக்கப்புறம் எந்த உரிமையும் கொண்டாடக்கூடாது.. அப்படி ஒரு பொண்ணு கிடைச்சா பார்க்கலாம்” என்றான்..

அதை கேட்டதும் ஜானகிக்கு அதிர்ச்சியாக இருந்தது... நான் நினைத்த மாதிரியே சொல்றானே!! ஒரு வேளை என் திட்டம் தெரிஞ்சிடுச்சோ?? “ என்று நினைத்தவர்

அதை வெளியில் காட்டி கொள்ளாமல்

“அப்படியே பார்த்துடலாம் கண்ணா.. நீ சரி சொன்னதே போதும்.. நான் எப்படியாவது நீ சொன்ன மாதிரியே பொண்ணை கண்டு பிடிச்சிடறேன்.. என்று மகிழ்ச்சியோடு எழுந்து அமர்ந்தார்...

ஆதி மனதுக்குள் “இந்த மாதிரி பொண்ணு கிடைக்கிறது கஷ்டம்.. கொஞ்ச நாள் இப்படியே தேடட்டும்.. எப்படியோ இப்போதைக்கு அம்மாவை சமாளிச்சாச்சு” என்று நிம்மதி அடைந்தான்

Comments

  1. அம்மாவின் திட்டம்
    நடக்க போகுதா

    ReplyDelete
  2. Hmkum idea kuduthave ponnayum anupivachiduvane adhan velan velayellam periya velai

    ReplyDelete

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!