தவமின்றி கிடைத்த வரமே-9



அத்தியாயம்-9 

டுத்த நாள் கீர்த்தியின் ஆப்ரேஷன்...

இன்றும் சிக்கிரம் எழுந்து காலை ஓட்டத்தை முடித்து குளித்து கிளம்பி நேராக பூஜை அறைக்கு சென்றான் வசீகரன்...

மீனாட்சி ஏற்கனவே காலையிலயே பூஜை முடித்திருக்க அந்த ஈசன் முன்னே கண் மூடி நின்றான்..

அவன் கண் முன்னே கீர்த்தியின் சிரித்து முகம் வந்து நின்றது....

“அந்த குழந்தையை காப்பாத்திடு ஈஸ்வரா... இந்த ஆபரேசன் சக்ஸஸ் ஆகணும்... “ என்று வேண்டி கொண்டவன் வெளியில் வந்தான்...

காலை உணவு தயாராக இருக்க, டைனிங் டேபிலுக்கு சென்றவன் தன் குடும்பத்தாருக்கு புன்னகைத்தவாறு காலை வணக்கத்தை சொல்லி, சிறிது நேரம் தன் தங்கையிடம் வம்பு இழுத்து விட்டு, பின் காலை உணவை முடித்து கிளம்பி சென்றான்….

அவன் கார் நேராக RJS மருத்துவமனைக்கு சென்று நின்றது...

தன் காரை நிறுத்தி விட்டு மருத்துவமனையின் உள்ளே சென்றவன் தன் அறைக்கு சென்று தன்னுடைய அசிஸ்டன்ட் ஐ அழைத்து அன்றைய ஆபரேசனுக்கான எல்லா ஏற்பாடுகளையும் ஒரு முறை சரி பார்த்து விட்டு கீர்த்தியை பார்க்க சென்றான்...

அங்கு மலர் கோவிலுக்கு சென்று வந்தவள் அந்த திருநீற்றை கொண்டு வந்து கீர்த்திக்கு வைத்து விட்டாள்.. .

அதே நேரம் வசியும் உள்ளே நுழைய அவனை பார்த்து புன்னகைத்தாள் மலர்...

அவனும் பதிலுக்கு புன்னகைத்தான்...அதில் வழக்கமாக மின்னும் குறும்பு புன்னகை இல்லை ...அவன் முகத்தில் ஒரு சீரியஸ்னஸ் கூடி இருக்க, புரபசனலாக இருந்தது அவன் முகம்.....

ஒரு மருத்துவனாக கீர்த்தியை பரிசோதித்தவன் அவனுடன் வந்திருந்த அசிஸ்டன்ட்ஸ் இடம் ஏதோ விளக்கினான்...

பின் கீர்த்தியிடம் குனிந்து

“Are you ready கீர்த்தி குட்டி?? ஆபரேசன் பண்ணிடலாமா?? மாமாதான் உனக்கு ஆபரேசன் பண்ணப் போறேன்.. சோ நீ எதுவும் பயந்துக்க வேண்டாம்... சும்மா கண்ணை மூடிகிட்டு ஜாலியா இருக்கணும்... “ என்றான் சிரித்தவாறு....

“ஹ்ம்ம்ம் ஓகே மாமா... எனக்கு பயமே இல்லை.. ஆனா அம்மாவும் ஜில்லு அக்காவும் தான் ரொம்ப பயந்துக்கறாங்க...அவங்க பயந்தாங்கொள்ளிங்க தான?? “ என்று கிலுக்கி சிரித்தாள் அந்த குட்டி....

“யெஸ்... நீதான் தைர்யமான பொண்ணு.. குட் கேர்ள்...” என்று குனிந்து கீர்த்தியின் கன்னத்தில் செல்லமாக முத்தமிட்டான்...

“சரி.. நாம இப்ப ஆபரேசன் தியேட்டருக்கு போகலாமா?? எல்லோருக்கும் பை சொல்லிட்டு வா... “என்றான் புன்னகையுடன்...

அவளும்ம் சிரித்துக் கொண்டே கை அசைத்தாள்....

மலரும் அவள் அருகில் வந்து அவள் கன்னத்தில் முத்தமிட்டு

“ஆல் தி பெஸ்ட் வாயாடி... “ என்று சிரித்தாள் அவள் பயத்தை மறைத்து கொண்டு..

கீர்த்தியின் பெற்றோர்கள் கண் கலங்கி நிக்க, அதை கண்ட மலர் அவர்களுக்கு கண்ணால் ஜாடை காட்ட, அவர்களும் தங்களை மறைத்துக் கொண்டு சிரித்த முகமாக கீர்த்தியை அனுப்பி வைத்தனர்....

பின் கீர்த்தியை ஆபரேசன் தியேட்டருக்கு அழைத்து சென்றனர்... உள்ளே நுழையும் வரையிலுமே கீர்த்தி சிரித்த முகமாக அனைவருக்கும் கை அசைத்து கொண்டே சென்றாள்...

மலரும்

“இந்த ஆபரேஸன் சக்ஸஸ் ஆகணும்...இந்த குழந்தை இதே சிரித்த முகத்துடன் திரும்பி வரணும்.. “ என்று வேண்டிக் கொண்டே ஆபரேஸன் தியேட்டர் முன்னே அமர்ந்தாள்...

கீர்த்தியின் பெற்றோர்களும் அவளுடன் அங்கயே அமர்ந்தனர்...

அவர்கள் இன்னும் பயத்தில் இருக்க, மலர்தான் அவர்களுக்கு தைர்யம் சொல்லி கொண்டிருந்தாள்..

உள்ளே சென்ற கீர்த்திக்கு அனதீசியா கொடுக்கபட்டு சில பேசிக் புரசிஜர்ஸ் முடிந்தது...

ஆபரேசன் ஆரம்பிக்க இருக்க, வசி அவனுடைய மருத்துவ உடை அணிந்து சர்ஜரி பண்ணுவதற்கான அந்த பச்சை நிற கோட் அணிந்து முகத்தில் மாஸ்க் ஐ அப்பொழுதுதான் அணிந்தவாறு வேகமாக அந்த அறையை நோக்கி வந்து கொண்டிருந்தான்...

கீர்த்தியை தயார் பண்ணி கொண்டிருக்கும் பொழுது மற்றொரு கேஸ் வந்திருக்க அதை பார்க்க சென்றிந்தான்...

அவனுடைய அசிஸ்டன்ட் ஸ் இடம் சொல்லி எல்லா ஏற்பாடுகளையும் செய்ய சொல்லியிருந்தான்...

அவன் நடந்து வரும் வேகத்தையும் அதற்கு தகுந்த மாதிரி அசைந்தாடும் அவன் கேசமும், சீரியசான முகம் என அவனின் புதிய தோற்றத்தை கண்டு ஒரு நிமிடம் மலைத்து நின்றாள் மலர்...

ஆபரேசன் தியேட்டர் அருகில் வந்தவன் அதன் கதைவை திறந்து கொண்டு நேராக உள்ளே சென்றான்... திரும்பி ஒரு பார்வை கூட பார்க்கவில்லை அவளை...

மற்ற அசிஸ்டன்ட்ஸ் தயாராகி அந்த ஆப்ரேஸன் தியேட்டர் உள்ளே அவனை பின்பற்றி உள்ளே சென்றனர்…

சில நிமிடங்களில் ஆபரேசன் ஆரம்பித்ததற்கான அறிகுறியாக அறையில் வாயிலில் விளக்கு எரிய ,வெளியில் இருந்தவர்களுக்கு மனம் திக் திக் என்று அடித்து கொண்டது....

மூவருமே ஒருவித டென்சனோடு அமர்ந்து இருந்தனர்...

மலர் அன்று விடுப்பு எடுத்திருந்தாள்.. ஏனோ அந்த குட்டியை விட்டு செல்ல முடியவில்லை... பழகிய கொஞ்ச நாளிலயே மலருடன் நன்றாக ஒட்டிக் கொண்டாள் கீர்த்தி...

அதனாலயே என்னவோ இன்று அவளால் அந்த குட்டியை விட்டு செல்ல முடியவில்லை...

அவளும் கீர்த்தியின் பெற்றோர்களும் ஆபரேசன் தியேட்டருக்கு வெளியில் பதற்றத்துடன் காத்திருக்க, மலரோ மனதிற்குள் அந்த ஈசனை நொடிக் கொருதரம் வேண்டிக் கொண்டிருந்தாள்...

கிட்ட தட்ட ஐந்து மணி நேரத்துக்கு பிறகு ஆபரேசன் முடிந்ததற்கான அறிகுறிகள் தெரிய ஒரு டாக்டர் வெளியில் வந்து

“ஆபரேசன் சக்ஸஸ்... இன்னும் ஒரு மணி நேரத்தில கண்ணை முழிச்சிடுவா... ஆனா நாங்க அதுவரைக்கும் ICU ல observation ல வச்சிருப்போம்...

நீங்க இன்னும் ஒரு மணி நேரம் கழித்து வந்து பாருங்க..” என்றார்...

அதை கேட்டு பெரும் நிம்மதி மற்றும் சந்தோசம் அடைந்தனர் அந்த மூவரும்...

மலரும் அந்த ஈசனுக்கு உடனே நன்றி சொன்னாள்...

பின் மலரின் கண்கள் தானாக வசீகரனை தேட, அவன் அங்கு இல்லை... பின் அந்த டாக்டரிடம்

“ டாக்டர்... டாக்டர் வசீகரன் .... “ என்று இழுத்தாள் எப்படி அவனை பற்றி கேட்பது என்று தயங்கியவாறு...

“அவர் ஒரு சீனியர் டாக்டர்.... ஆப்ரேஸன் முடிஞ்சதும் அவர் அப்பயே கிளம்பிட்டார்...மீதி பாதி வேலை நாங்க ஜூனியர்ஸ் பார்த்துக்குவோம்... உங்களுக்கு வேற எதுவும் சந்தேகம் இருந்தால் டாக்டர் அப்புறம் ரவுண்ட்ஸ் வருவார்... அப்ப கேட்டுக்கங்க... “ என்று சொல்லி உள்ளே சென்றார்...

மலருக்கு ஏனோ ஏமாற்றமாக இருந்தது.. அந்த ஆபரேசன் முடிந்ததும் தன்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே என்று..

பின் அவர் எவ்வளவு பெரிய டாக்டர்..!! அவர் போய் எதற்காக என்னிடம் வந்து தனியாக சொல்ல வேண்டும்?? நான் ஒரு லூசு தான்..” என்று தன் தலையை தட்டி கொண்டாள்...

ஆனால் ஏனோ அப்பொழுது அவனை பார்க்க வேண்டும் என்று அவள் இதயம் துடித்தது ..

“பார்த்து ஒரு நன்றியாவது சொல்ல வேண்டும்.. “ என்று அந்த ஹாஸ்பிட்டல் ஐ சுற்றி வந்தாள்...ஆனால் அவனை காணவில்லை எங்கும்...

சரி என்று அவன் எண்ணிற்கு அழைக்க, அது அணைக்க பட்டிருந்தது...

பின் சுசிலாவின் அறைக்கு செல்ல, அவர் அறையில் இல்லை... அவர் அப்பொழுதுதான் ரவுண்ட்ஸ் போயிருப்பதாக சொல்ல, மீண்டும் இங்கும் அங்கும் சுற்றி கொண்டிருந்தாள்.....

வழியில் வசீகரனுடைய அசிஸ்டன்ட் ஐ பார்த்ததும் வேகமாக அவன் அருகில் சென்றவள்

“டாக்டர்.. நான் டாக்டர் வசீகரனை பார்க்க முடியுமா?? “ என்றாள் ஆர்வமாக

“அவர் இப்ப ஆபரேசன் தியேட்டர்ல இன்னொரு கேஸ்ல பிசியா இருக்கார் மேடம்...”

“என்னாச்சு?? “ என்றாள் பதற்றமாக

“ஒரு 45 வயது இருக்கும் ஒருத்தருக்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்க, அதுவும் பர்ஸ்ட் அட்டாக்.. வேற மருத்துவமனைக்கு கொண்டு போய் அங்க முடியாமல் டாக்டர் வசீகரன் இங்க இருக்கவும் இங்க அனுப்பி வச்சுட்டாங்க...

இன்னும் கொஞ்சம் முன்னயே கொண்டு வந்திருந்தாலாவது காப்பாற்றியிருக்கலாம்.. ஆனால் லாஸ்ட் மினிட்ல கிரிடிகல் ஸ்டேஜ்ல கூட்டி வந்திருக்காங்க..

ஆனாலும் வசீகரன் டாக்டர் உள்ளதான் இருக்கார்.. டாக்டர் அவரை எப்படியாவது காப்பாற்றி விட போராடிகிட்டிருக்கார்...

இது ரொம்பவுமே அவருக்கு சவாலான கேஸ்தான்... என்ன ஆகுமோனு இருக்கு.... இதுவரைக்கும் அவர் கிட்ட வந்து தோற்ற கேஸ் எதுவும் இல்லை... இதையும் அவர் காப்பாற்றிடனும்....” என்று நிறுத்தியவர் பின் மலரை பார்த்து

“ ஆமா நீங்க எதுக்காக பெரிய டாக்டரை தேடறீங்க?? .. கீர்த்தி பற்றி எதுவும் தெரிஞ்சுக்கணுமா?? நான் கெல்ப் பண்றேன்...“ என்றான்....

“இல்ல.. சும்மாதான் அவரை பார்க்கணும்... நான் அப்புறம் அவர் பிரியானதுக்கு பிறகு பார்த்துக்கறேன்.. தேங்க்ஷ் டாக்டர்... “ என்றவாறு நகர்ந்து சென்றாள்...

சிறிது தூரம் சென்றதும் அவள் கால்கள் தானாக அந்த மற்றொரு ஆபரேசன் நடந்து கொண்டிருந்த அந்த தியேட்டருக்கு அருகில் வந்து நின்றன...

அந்த அசிஸ்டன்ட் டாக்டர் சொன்னதை கேட்டு மலருக்கே கஷ்டமாக இருந்தது ..

“அந்த பேசன்ட் நல்லபடியா குணம் ஆய்டணும்... அதை விட வசி தோற்க கூடாது... “ என்று மனதிற்குள் உருப்போட்டாள்....

கீர்த்திக்கு நினைவு வந்திருக்க, அவளைக் கூட சென்று பார்க்காமல் ஒரு இடத்தில் தனிமையில் அமர்ந்து வசீகரனுக்காக அந்த ஈசனிடம் போராடிக் கொண்டிருந்தாள்...

எவ்வளவு நேரம் அப்படி அமர்ந்திருந்தாளோ?? தூரத்தில் வசியின் குரல் கேட்க திடுக்கிட்டு விழித்தாள்...

சிறிது தொலைவில் வசீகரன் இன்னும் சில பெரிய டாக்டர்களுடன் சீரியசாக எதையோ விவாதித்து கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தான்...

அவசரமாக அவன் முகத்தை ஆராய அவன் முகத்தில் இருந்து எதையும் கண்டு பிடிக்க முடியவில்லை... 




அவனை சுற்றி இருப்பவர்கள் எல்லாம் வயது முதிர்ந்து அனுபவம் மிக்க பெரிய டாக்டர்களை போல இருக்க இவன் மட்டுமே இளைஞன்.. ஆனாலும் அவர்கள் இவன் விளக்குவதை கவனமாக கேட்டுக் கொண்டிருப்பதை கண்டு பெருமையாக இருந்தது மலருக்கு...

“பிரிலியண்ட் டாக்டர் தான் போல.. ஆனால் அந்த ஆபரேசன் என்ன ஆச்சோ??” என்ற கேள்வியுடன் ஓரமாக நின்று கொண்டிருந்தாள்...

முன்பாக இருந்தால் நேராக அவனிடம் சென்று என்னாச்சு என்று கேட்டிருப்பாள்.. இப்பொழுது அவனை பற்றியும் அவனுடைய புகழைப் பற்றியும் தெரிந்ததால் அவனிடம் சென்று முன் நிக்க மனம் வரவில்லை..

அதோடு இப்ப அவன் தனியாக இல்லை ...சில பெரிய டாக்டர்கள் உடன் இருக்க அவனுடைய தோற்றமே படு புரபசனாலக இருக்க அவனை நெருங்கவே அவளுக்கு அச்சமாக இருந்தது..

ஆங்கிலத்தில் மற்றவர்களுடன் உரையாடிக் கொண்டே அவளை கடந்து சென்றான்.. சில அடிகள் சென்றதும் நின்று திரும்பி பார்க்க, மலர் ஓரமாக நிற்பதை கண்டு கொண்டான்...

“Execuse me…You all carry on. I will be back in few minutes..” என்று சொல்லி அவன் உடன் வந்தவர்களை முன்னே அனுப்பி விட்டு மலரை நோக்கி வேக நடையுடன் வந்தான்...

மலருக்கே ஆச்சர்யமாக இருந்தது.. அவ்வளவு பெரிய டாக்டர் தன்னையும் மதித்து தன்னை நோக்கி வருவதை கண்டு...

அவள் அருகில் வந்தவன்

“ஹோய்... ஜில்லு... இங்க என்ன பண்ற?? இந்நேரம் கீர்த்தி குட்டியோடு கொஞ்சி கிட்டு இருப்பனு நினைச்சா?? ஆபரேசன் Success .She is perfectly alright now..

ஒரு ஒன் வீக் ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறம் அவள் எல்லார் மாதிரியும் ஓடி விளையாடலாம்... Are you happy now? “ என்று புன்னகைத்தான்....

அவளுக்கு என்ன பேச என்றே தெரியவில்லை... ஆனந்தத்தில் கண்ணீர் வர

“Thank you so much டாக்டர்... “ என்று அவன் கையை பிடித்துக் கொண்டாள்...

“ஹே... இதெல்லாம் பத்தாது... நீ சொன்ன அந்த கிப்ட் வேணும்.. “ என்று கண் சிமிட்டி குறும்பாக சிரித்தான்....

அதை கேட்டு அவள் கன்னம் சிவக்க, சில நொடிகள் யோசித்தவள்

“ஓகே டாக்டர்... நான் ரெடி கிப்ட் ஐ கொடுக்க... நீங்க ரெடியா அதை வாங்க ?? “ என்றாள் அவளும் கண் சிமிட்டி குறும்பாக சிரித்தவாறு...

அவளின் தடாலடி சம்மதத்தை கேட்டு திகைத்தவன்

“ஆங் .. “ என்று முழித்தான் வசீகரன்..

அவனின் அந்த பார்வையை கண்டு சிரித்தவள்

“ என்ன டாக்டர் ??... ஆக்சுவலா நீங்க கேட்டதுக்கு நான் இல்ல இப்படி முழிக்கணும்.. எனக்கு பதிலா நீங்க முழிக்கறீங்களே... ஆனாலும் இந்த முழி சுமாரா தான் இருக்கு.. “ என்று கண் சிமிட்டினாள்...

“ஹே வாயாடி... சரி.. உன் கிப்ட் ஐ பத்திரமா வச்சிரு.. இன்னொரு நாள் வசூல் பண்ணிக்கறேன்.. இன்னைக்கு கொஞ்சம் பிசி செட்யூல்.. ஓகே டேக் கேர் கீர்த்தி... “ என்று கிளம்ப எத்தனிக்க

“டாக்டர்... ஒரு நிமிசம்.... நீங்க அப்ரேசன் பண்ணிய அடுத்த பேசன்ட் எப்படி இருக்கார்?? “ என்றாள் கொஞ்சம் படபடப்புடன்...

ஒரு நிமிடம் ஆச்சர்யபட்டு நின்றவன்

“அவர் உனக்கு தெரிந்தவரா?? “ என்றான்

“இல்லை டாக்டர்.. உங்க ஜூனியர் டாக்டர் தான் சொன்னார்... அது ரொம்பவும் கிரிட்டிகல் ஆன ஆபரேசன்... உங்களுக்கு ரொம்பவும் சவால் ஆனதும் கூட னு சொன்னார்..

அதான் கொஞ்சம் பயந்துட்டேன்.. நீங்க எப்பவும் எதுலயும் தோற்க கூடாது னு அந்த ஈசன் கிட்ட நொடிக்கொரு தரம் இப்பதான் வேண்டி கிட்டிருந்தேன்... அதான் என்னாச்சுனு கேட்கலாம் னு... “ என்று இழுத்தாள்...

அதை கேட்டு ஒரு நொடி அசந்து நின்றான்.. அவளை அப்படியே அள்ளி எடுத்து அணைத்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது...

அவள் சொன்ன மாதிரி அது ஒரு அவனுக்கு சவாலான சர்ஜரி தான்.. கடைசி நொடி வரை போராடி தான் அவரை காப்பாற்ற முடிந்தது..

அதுவும் அவர் இதயம் சில நொடிகள் நின்று போனது... மீண்டும் வசீகரன் போராடிதான் அதை இயுங்க வைக்க முடிந்தது ....

ஒரு வேளை இவளின் பிரார்த்தனையும் கூட எனக்கு பாசிட்டிவ் வைப்ரேசனை கொடுத்ததோ??... எப்படியோ ஒரு உயிரை காப்பாற்றி ஆச்சு.. அதனால் ஒரு குடும்பத்தை காப்பாற்றி ஆச்சு..” என்று பெருமுச்சு விட்டவன்

“உன்னுடைய பிரார்த்தனையால் தான் அவர் பிளைச்சுகிட்டார்னு நினைக்கிறேன் பனிமலர்...

தேங்க்ஷ் பார் யுவர் பிரேயர் பார் மி அன்ட் தட் பேமிலி .. “ என்று புன்னகை த்தவாறு

“ஓகே.. அல்ரெடி லேட்...They are waiting for me… நாம் அப்புறம் பேசலாம்.. பை... “ என்று கை அசைத்து விடைபெற்று வேகமாக நகர்ந்தான்...

மலருக்கு இப்பதான் நிம்மதியாக இருந்தது ....

“எப்படியோ அந்த குடும்ப தலைவரை காப்பாற்றியாச்சு.. “ என்று மகிழ்ந்தாள்..

கூடவே வசீகரனும் ஜெயித்து விட்டான்.. என்று பெருமையாக இருந்தது....

அதே மகிழ்ச்சியுடன் துள்ளி குதித்து நடந்தவள் கீர்த்தியின் அறைக்கு சென்று கொஞ்ச நேரம் அவளிடம் கொஞ்சி விளையாண்டாள்..

கீர்த்தி அதிகம் பேசமுடியாததால் மலர்தான் கதை அடித்துக் கொண்டிருந்தாள்..

மலர் எதிர்பார்த்த மாதிரியே கீர்த்தி அவள் பேசுவதையெல்லாம் கேட்டு சிரித்துக் கொண்டிருந்தாள் தன் வலி வேதனையை மறந்து...

அன்று பிரதோசம் என்பதால் தன் மகளை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு சென்றிருந்தார் மீனாட்சி...

எவ்வளவு வேலை இருந்தாலும் இந்த பிரதோச விரதத்தை மட்டும் அவர் விட்டதில்லை.. அதே மாதிரி அந்த ஈசன் கோவிலுக்கு வந்து அவனை மனதார வணங்கி விட்டு தான் செல்வார்...

அன்று ஏனோ மனம் பாரமாக இருக்க, தன் மகளையும் உடன் அழைத்து கொண்டு வந்திருந்தார்....

வசுந்தராவுக்கும் இந்த மாதிரி கோவிலுக்கு செல்ல ரொம்ப பிடிக்கும்... தற்பொழுது அவள் பதினொன்றாம் வகுப்பை முடித்து பன்னிரண்டாம் வகுப்பில் அடி எடுத்து வைக்க இருக்கிறாள்...

தன் அண்ணனைப் போல டாக்டர் ஆகாமல் அவளுக்கு ஒரு Engineer ஆக வேண்டும் என்ற ஆசை... அதுவும் இந்தியாவின் தலைசிறந்த Engineering college ஆன IIT ல் சேர வேண்டும் என்பது அவள் ambition…

அதற்கென்று தனியாக இருக்கும் நுழைவு தேர்வான JEE( Joint Entrance Examination) தேர்வுக்கு பிரிப்பேர் பண்ணுவதற்காக ஒன்பதாம் வகுப்பில் இருந்தே தனியார் பயிற்சி மையத்துக்கு சென்று வருகிறாள்...

இந்த தேர்வை பற்றி இன்னும் நிறைய கிராமங்களை சேர்ந்த மாணவர்களுக்கு விழிப்புணர்வு வரவில்லை...

மருத்துவ படிப்புக்கான NEET தேர்வை கட்டாயமாக்கிய பிறகுதான் NEET தேர்வை பற்றி விழிப்புணர்வு வர, அப்பொழுது தான் அகில இந்திய அளவில் Engineer க்கான பொது நுழைவு தேர்வான JEE பற்றியும் மாணவர்களிடையே விழிப்புணர்வு வர ஆரம்பித்தது...

ஓரளவுக்கு இப்பொழுது தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்களும் இந்த IIT களில் அதிகமாக இடம்பெற ஆரம்பித்திருக்கின்றனர்....

முன்பெல்லாம் மாணவர்கள் என்ன படிக்க வேண்டும் என்பதை பன்னிரண்டாம் வகுப்பு முடிந்த பிறகுதான் முடிவு செய்வர்..

ஆனால் இப்பொழுதெல்லாம் ஒன்பதாம் வகுப்பு இல்லை பத்தாம் வகுப்பிலயே மாணவர்கள் என்ன படிக்க வேண்டும் மருத்துவமா, இல்லை எஞ்சினியரா, இல்லை சட்டம் மா என்று முடிவு செய்து அதுக்கு தகுந்த மாதிரி தங்களை தயார் படுத்தி கொள்ள ஆரம்பித்து விடுகின்றனர்.....

அவர்களுக்கு எது பிடிக்கும், எந்த துறையில் நன்றாக வரமுடியும் என்று கண்டறிந்து சொல்வதற்கென்றே கேரியர் கவுன்சிலிங்(career counselling) நிறுவனங்கள் நிறைய வந்து விட்டன...

அவர்கள் மாணவர்களுடன் நடத்தும் கலந்துரையாடலையும், சிறு தேர்வையும் வைத்து அவர்களுக்கு தகுந்த கோர்சை சஜஸ்ட் பண்ணுகிறார்கள்...

நகரங்களில் வாழும் நிறைய பெற்றோர்களும் இப்பொழுது கண்ணை மூடி கொண்டு டாக்டர் , எஞ்சினியர் என்று போகாமல் தங்கள் பிள்ளைகளின் விருப்பத்தையும் திறமையையும் அறிந்து அவர்கள் விரும்பும் படிப்பை படிக்க அனுமதி தருகின்றனர்...

அந்த வகையில் வசுந்தராவையும் ஒரு கவுன்சிலிங் செச்சனுக்கு அழைத்து சென்றான் வசி...

அந்த கவுன்சிலிங் செச்சன் மூலம் முதலில் தெரிய வந்தது அவளுக்கு மருத்துவத்தில் விருப்பம் இல்லை.. என்று...

பின் அவர்களே மற்ற படிப்புகளை பற்றி விளக்கி அதுவும் IIT கல்லூரிகளையும் பற்றி விளக்கி சொல்ல, ஏனோ வசுந்தராவுக்கு அதில் விருப்பம் தொற்றி கொண்டது....

வீட்டிற்கு வந்த பின் அந்த கல்லூரிகளை பற்றி நெட்டில் தேட, நிறைய ஆச்சர்யமான விசயங்கள் அவளுக்கு கிடைத்தன....

இன்றைய புகழ்பெற்ற நிறைய இன்டியன் ஸ்டார்ட்அப் கம்பெனிகளான் Flipkart, Zomato, OLA, Snapdeal etc போன்ற பல கம்பெனிகள் IIT மாணவர்களால் ஆரம்பிக்கபட்டன...

அதை விட தமிழகம் பெருமை கொள்ளும் தமிழகத்தை சேர்ந்த Google CEO சுந்தர் பிச்சை ஒரு IIT மாணவர் என தெரிய, அடுத்த நொடியே அவள் முடிவு செய்தாள்...தானும் ஒரு IIT மாணவியாக வேண்டும் என்று...

அதன் பிறகு அதற்கான வழிமுறைகளை ஆராய, அப்பொழுதுதான் JEE தேர்வை பற்றியும் தெரிந்து கொண்டாள்...

அதிலிருந்தே அதற்கு தன்னை தயார்படுத்தி வருகிறாள்...

பதினொன்றாம் வகுப்பு முடிந்து கோடை விடுமுறையிலும் அந்த பயிற்சி வகுப்புகள் நடை பெற அவளுக்கு டைட் செட்யூலாக இருந்தது...

இன்று அந்த பயிற்சி வகுப்பு கேன்சல் ஆகியிருக்க, தன் அன்னை உடன் கோவிலுக்கு கிளம்பி விட்டாள்..

மீனாட்சியும் அவளுக்கும் ரிலாக்சாக இருக்கும் என்று மறுக்காமல் உடன் அழைத்து வந்தார்...

கம்பீரமாக வீற்றிருக்கும் அந்த ஈசன் முன் நின்று தன் இரு பிள்ளைகளின் வாழ்வில் இருக்கும் இருள் விலகி சீக்கிரம் அவர்களுக்கு நல்ல வழியை காட்டு... “ என்று மனம் உருகி வேண்டிக் கொண்டார் மீனாட்சி...

பின் அந்த பிரகாரத்தை சுற்றி வந்தவர்கள் ஒரு இடத்தில் அமர அவர் கண்களோ யாரையோ தேடின.. அதை கண்ட வசு

“யாரை மா தேடற?? “ என்றாள்...

“ஹ்ம்ம்ம் ஒரு பொண்ணு... அடிக்கடி இங்க பார்ப்பேன்... பார்க்க மஹாலட்சுமி மாதிரி இருப்பா... ஒவ்வொரு பிரதோசத்துக்கும் இந்த கோவிலுக்கு வருவா... அதான் இன்னைக்கும் வந்திருக்காளா னு பார்த்தேன்.. “ என்று சிரித்தார்...

இந்த பொண்ணைத்தான் தன் அன்னை அண்ணனிடம் கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டது என புரிய,

“ம்ம்ம்ம்ம் நீங்க தேடி என்ன பண்றது மா?? தேட வேண்டிய அந்த சாமியார் வசி அண்ணா தேடாமல் இருக்கானே... “ என்று சிரித்தாள் வசு...

“ஹ்ம்ம்ம் அதுதான் எனக்கும் கவலையா இருக்கு வசு...இந்த பய எப்பதான் மாறுவானோ ?? “ என்று பெருமூச்சு விட்டார் மீனாட்சி...

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க அவர்கள் வீட்டின் பக்கத்தில் இருக்கும் அந்த மாமி அருகில் வந்து

“அடடா.. மீனாட்சியா?? ரொம்ப நாளாச்சே உன்னை பார்த்து.. “ என்றவாறு அருகில் அமர்ந்தார்...

அதற்குள் வசு தனக்கு அவள் தோழி ஒருத்தி அங்கு வந்திருக்க, அவளை கண்டதும் மீனாட்சியிடம் சொல்லி விட்டு எழுந்து தோழியை சந்திக்க சென்றாள்..

மீனாட்சி அந்த மாமியிடம் பேசிக் கொண்டிருக்க, ஊர் கதையெல்லாம் அவர் பேச, மீனாட்சி வெறும் தலையை மட்டும் ஆட்டி கொண்டிருந்தார்...

அவருக்கு இந்த மாதிரி அடுத்தவங்களை பத்தி பேசுவது பிடிக்காது... அந்த மாமியிடம் நேரடியாகவும் இந்த மாதிரி பேசாதிர்கள் என்று சொல்ல முடியவில்லை...

அந்த மாமிக்கும் இது ஒன்றுதான் பொழுது போக்கு... இந்த மாதிரி நாலு பேரை பார்த்து பேசினால்தான் அவருக்கு நிம்மதியாக கொஞ்சம் சந்தோசமாக இருக்கும்....

அதனால் பல்லை கடித்து கொண்டு பொருத்து கொண்டிருந்தார் மீனாட்சி....

எல்லா கதையையும் முடித்து அந்த மாமிக்கு வேற கதை கிடைக்காததால் மீனாட்சியின் குடும்பத்தை பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்...

பையனுக்கு இன்னுமா கல்யாணம் ஆகலைனு ஆரம்பிச்சு பேச்சு வசுந்தராவிடம் வந்து நின்றது...

“என்ன மீனாட்சி.. இப்பயாவது உன் பொண்ணு ஏதாவது நல்ல செய்தி சொன்னாளா?? “ என்றார் ஆராய்ந்தவாறு..

ஏற்கனவே வேதனையில் இருந்த மீனாட்சிக்கு அவரின் விசாரிப்பு இன்னும் வேதனையை கொடுத்தது....

“ம்ச்... இன்னும் இல்ல மாமி... “என்றார் வருத்தமாக...

“ஹ்ம்ம்ம் அவளுக்கு ஏன் இந்த ஈசன் இப்படி குறையை வச்சான் ??.. வேற ஏதாவது நல்ல டாக்டர் கிட்ட காட்டலாம் இல்ல... இப்ப வயது 17 முடிந்து இருக்கும் இல்ல.. “ என்றார்...

“ இப்பதான் மாமி 16 முடிந்திருக்கிறது...” என்றார் மீனாட்சி...

“ஹ்ம்ம்ம் இப்ப இருக்கிற பொண்ணுங்க எல்லாம் 10 இல்லைனா 11 வயசுலயே மூலைல உட்கார்ந்துடுதுங்க.. வசு குட்டி நல்லா ஆரோக்கியமா தான இருக்கா.. அப்ப ஏன் இவ மட்டும் இன்னும் உட்காரமா இருக்கா??...

எதுக்கும் நீ ஒரு நல்ல லேடி டாக்டர் கிட்ட கூட்டிப்போய் காமி.. ஏதாவது குறை இருந்தாலும் இப்பயே சரி பண்ணிடலாம்..இப்பயே போய் பார்.. நாளை தள்ளிப் போடாத.... சரி நான் வர்ரேன் டி அம்மா... “ என்று அவர் வந்த வேலை முடிந்த திருப்தியில் எழுந்து சென்றார்....

மீனாட்சிக்குத் தான் மனம் இன்னும் பாரமாகி விட்டது.. மனம் பாரம் தீர கோவிலுக்கு வந்தால், இப்படி சில பேர் வந்து எதையாவது சொல்லி இன்னும் மனதை காயப்டுத்துகின்றனரே.. “என்று இருந்தது...

ஆனாலும் அந்த மாமி நம்ம மேல இருக்கிற அக்கறையில் நல்லதுக்குத்தான் சொல்றாங்க....சொல்லிட்டு போகட்டும்.. “ என்று அந்த பெரியவர் மேல் கோவம் வராமல் தன்னையே தேற்றிக் கொண்டார்.... ..

சற்று தொலைவில் வசுந்தராவின் சிரிப்பு சத்தம் கேட்க நிமிர்ந்து பார்த்தவர் அவள் தன் தோழியிடம் சிரித்து பேசிக் கொண்டிருந்தாள்..

“இப்படி மான் குட்டியாக சிரித்து துள்ளி குதிக்கும் தன் மகளை இந்த இயற்கை ஏன் தான் சோதிக்கிறதோ??.. மற்ற பெண்களை போல இவளுக்கும் காலா காலத்துல நடக்கறது நடந்திருக்கலாம்...”என்று பெருமூச்சு விட்டார்...

வசுந்தரா 16 வயது முடிந்தும் இன்னும் பெண்ணாக மலராமல் இருக்க, மீனாட்சியும் சென்ற வருடம் வரை பெரிதாக கண்டு கொள்ளவில்லை..

பெண்மை என்பது அதன் பருவம் வரும்பொழுது தானாக மலர்வது... அவள் இன்னும் விளையாட்டு பிள்ளையாக இருக்க, அவரும் அப்படியே விட்டுவிட்டார்...

அதோடு அவள் படிப்பில் கவனம் செலுத்த ,அவள் அந்த மாதிரி மாதாந்திர தொந்தரவு எதுவும் இல்லாமல் இருப்பதே நல்லது என்று விட்டு விட்டார்...

ஆனால் அவர் உறவினர்கள், பக்கதில் இருப்பவர்கள் என்று பார்ப்பவர்கள் எல்லாம் அதைப் பற்றியே கேட்க ஆரம்பிக்க அப்பொழுதுதான் அவருக்கு அது குறையாக தெரிய ஆரம்பித்தது...

வசியிடம் இதை பற்றி சொல்ல, அவனுமே

“அவள் சிறு பிள்ளையாக இருக்கும் வரை என்ஜாய் பண்ணட்டும் மா...பிசிக்கலா நல்ல ஆரோக்கியமா இருக்கா... அவளுக்கு பருவம் வரும்பொழுது எல்லாம் தானாக நடக்கும்.. அதனால் இதை பெரிது பண்ணாதிங்க... அவ கிட்டயும் இதை பற்றி எதுவும் பேசாதிங்க..

இதை ஒரு குறை மாதிரி சொல்லி அவள் மனம் வருந்தும் படி செய்திடாதிங்க.. அதோடு பன்னிரண்டாம் வகுப்புதான் அவள் கேரியரை நிர்ணயிக்க போகும் வகுப்பு...

அவள் ஆசை படற மாதிரியே அவள் ஒரு நல்ல Engineer ஆகணும்.. அவளை எதுவும் டிஸ்டர்ப் பண்ணாதிங்க.. “ என்று சொல்லி அவரை சமாதான படுத்தினான்...

அவர் கணவர் சுந்தரும் அதையே சொல்ல, அதற்குமேல் எதுவும் செய்ய முடியாமல் விட்டு விட்டார்...

அப்பவும் மனம் கேட்காமல் சுசிலாவிடம் ஆலோசிக்க, அவருமே வசி சொன்னதையே திரும்ப சொல்ல அதற்கு மேல் அந்த ஈசன் விட்ட வழி என்று விட்டு விட்டார்....

ஆனாலும் அவளின் இந்த குறை மட்டும் அடிக்கடி வந்து அவர் மனதை அறிக்கும்...

அப்பல்லாம் அந்த ஈசனிடம் புலம்புவது தான் வேலையாகி போகும்… தன் மகள் கவலை ஒரு பக்கம் இருக்க, இப்ப அடுத்ததாக தன் மகனை பற்றிய கவலையும் சேர்ந்து கொண்டது...

அதுவும் நிகிலனுக்கு திருமணம் முடிந்து விட, இப்பொழுது வசி மட்டும் தனியாக இருக்க, அவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே என்ற கவலையும் அவரை அறிக்க ஆரம்பித்தது...

தன் மகன் புகழ்பெற்ற, கைராசியான ,திறமையான cardiologist னு வெளில எல்லாரும் புகழும் நல்லவன் தான்...

ஆனால் இந்த கல்யாணம் னு சொன்னால் மட்டும் ஏன் தான் குதிரை கடிவாளம் னு சொன்னா உடனே வாயை மூடிக்குமே அதே மாதிரி அமைதியாகி விடுகிறான்...

“எப்பதான் இவனுக்கு ஒரு விடிவு காலம் வருமோ?? “ என்று அதற்கும் சேர்த்து புலம்பினார் மீனாட்சி...

தன் தோழியிடம் பேசி முடித்து வசுந்தரா திரும்பி இருக்க, பின் நேரம் ஆவதை உணர்ந்து எழுந்தவர் மீண்டும் அந்த ஈசன் முன் நின்று

“சீக்கிரம்... என் இரண்டு புள்ளைங்களோட குறையையும் தீர்த்து வச்சுடு ஈஸ்வரா... “ என்று மனம் உருகி வேண்டிக் கொண்டு தன் மகளுடன் வீடு திரும்பினார் மீனாட்சி...


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!