காதோடுதான் நான் பாடுவேன்-7



அத்தியாயம்-7

ன் டாஸ்க்கை வெற்றிகரமாக முடித்து வெற்றி வாகை சூடி வீடு திரும்பிய மதுவந்தினி தன் அனுபவங்களை தன் மாமியாரிடம் பகிர்ந்து கொண்டிருந்தாள்....

தன் மருமகளின் குழந்தை தனமான மாசு மறுவற்ற முகத்தையும் கன்னம் குழிய அவள் சிரித்து கையை ஆட்டி முகத்தில் அத்தனை பாவணைகளுடன் அந்த நாளை விவரித்து கொண்டிருக்க, அவளையே மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் ரசித்து கொண்டிருந்தார் சிவகாமி...

அகிலாவும் மது வந்ததை அறிந்து தன் அறையில் இருந்து வேகமாக இறங்கி வந்து மதுவின் அருகில் அமர்ந்து கொண்டு அவள் கதையை சுவராசியமாக கேட்டுக் கொண்டிருந்தாள்...

ஒரு வழியாக தன் கதையை முடித்ததும் அகிலா தன் அண்ணியை பார்த்து

“வாவ்... சூப்பர் அண்ணி... கலக்கிட்டீங்க... உங்கள் அனுபவங்க்ளை எல்லாம் சேர்த்து “Madhu’s Day Out” என்று புத்தகமா போட்டா, சும்மா பிச்சுகிட்டு போகும்..” என்று சிரித்தாள் அகிலா...

அவள் தன்னை கலாய்க்கிறாள் என்று புரிய, அவளை பார்த்து முறைத்தாள் மது...

அதை கண்டு கொள்ளாமல் சிரித்த அகிலா

“அப்புறம் ஒரு முக்கியமான விசயம் அண்ணி...

இன்னும் ஒரு இரண்டு நாளைக்கு உங்க புருசன் கண்ணுல மாட்டிறாதிங்க.... நீங்க ஹெல்மெட் போடாம போய் மாட்டினதுக்கு, அண்ணா செம டென்சனா இருப்பான்... அவன் கண்ணுல பட்டீங்க, ஏன் ஹெல்மெட் போடாம போனனு திட்ட ஆரம்பிச்சு, அப்புறம் ஹெல்மெட் போடறதோட நன்மைகள் னு பயங்கர லெக்சர் அடிச்சே கொல்லுவான்...அதனால Be Careful… “ என்று மதுவின் வயிற்றில் புளியை கரைத்தாள் அகிலா....

அதை கேட்டதும் மதுவின் முகம் வெளிறியது...

அதை கண்ட சிவகாமி

“ஏய் அகிலா... சும்மா இரு... அவள ரொம்ப பயமுறுத்தாத.... நீ ஒன்னும் பயந்துக்காத மது மா.. அவ சும்மா உன்னை ஓட்டறா.. “ என்று சிரித்தார் சிவகாமி...

“ஹ்ம்ம்ம்ம் கரெக்ட் அத்தை... காலையில அப்படிதான் என்னென்னவோ சொல்லி என்னை ரொம்பவும் பயமுறுத்திட்டா... ஆனால் அவ சொன்ன மாதிரி எல்லாம் இல்லை... எல்லாரும் நல்லவங்களா தான் இருக்காங்க...

இவ கொடுத்த பில்டப் ல தான் நான் ரொம்ப பயந்து போய்ட்டேன் அத்தை…இனிமேல் இவ சொல்றத எல்லாம் நம்ப மாட்டேன் “ என்று அகிலாவை முறைத்தாள் மது...

“அண்ணி... ஒரு நாள் experience ஐ வச்சு உடனே எல்லாரும் நல்லவங்கனு முடிவு பண்ணிடாதிங்க...

அப்புறம் இன்னும் நிறைய என்கிட்ட தான் நீங்க கத்துக்கணும்.. நினைவு இருக்கட்டும்... “என்று கையை நீட்டி மிரட்டினள் அகிலா....

“ஹீ ஹீ ஹீ... சாரி குருவே ... ஏதோ ஒரு வேகத்துல தங்களை பற்றி குறைத்து சொல்லி விட்டேன்... இந்த சிஷ்யை மன்னித்து அருளுங்கள் குருவே... இனிமேல் இந்த சிஷ்யை உங்களுக்கு எதிரா எதுவும் சொல்ல மாட்டா....தாங்கள் தங்களுக்கு தெரிந்த டிப்ஸ் மற்றும் ரகசியங்களை எல்லாம் இந்த சிஷ்யைக்கும் சொல்லி கொடுங்கள்... “ என பயந்தவாறு கூற

“அப்படியே ஆகட்டும் சிஷ்யை... “ என்று சிரித்தாள் அகிலா...

பின் மூவரும் கலகலப்பாக சிறிது நேரம் பேசி கொண்டிருக்க, மீதி பொழுதும் இனிமையாக கழிந்தது அந்த மூவருக்கும்....

அன்று இரவும் மது அகிலா அறையில் தங்கி கொள்ள, சிறிது நேரம் படித்த அகிலா தன் ஹோம் வொர்க்கை பண்ணி கொண்டே மதுவிடம் கதை அடிக்க ஆரம்பித்தாள்..

அன்று இரவும் தாமதமாக வீடு திரும்பிய நிகிலன் வழக்கம் போல தன் அறைக்கு சென்று குளித்துவிட்டு தலையை ஒரு டவலால் துவட்டிக் கொண்டே வெளியில் வந்தான்.. பின் மேஜையில் ஒரு பிளாஸ்க்கில் இருந்த சூடான பாலை அருகில் இருந்த டம்ளரில் ஊற்றி குடித்து விட்டு படுக்கையில் விழுந்தான்...

வழக்கம் போல அன்றைய நாளை மனதில் ஓட்டி பார்த்தவன் அன்றைய ஹைலைட்டாக மதுவின் வெளிறிய முகம் அவன் கண் முன்னே வந்தது...

தன் மனைவியாக்கப்பட்டவளை பற்றி இதுவரை கேள்வி பட்டதில் இருந்து அவள் பய்ந்த சுபாவம் கொண்டவள்... தனியாக வெளியில் செல்ல மாட்டாள் என்று எண்ணியிருந்தான்...

காலையில் அவன் தனியாக அவளை போக சொல்லி மிரடடியதற்கு பயந்து கொண்டு வீட்டிலயே இருப்பாள் என்று நினைத்து அதை பற்றி மறந்து இருந்தான்...

நிகிலன் மதியம் ஒரு வேலையாக சென்று கொண்டிருக்கும் பொழுது கான்ஸ்டபிள் டேவிட் இரண்டு பெண்களிடம் வாக்குவாதம் பண்ணிக் கொண்டிருப்பதை கண்டு தன் காரை நிறுத்தியவன் அவர்கள் அருகில் வர, அப்பொழுது தான் தெரிந்தது இரண்டு பெண்களில் ஒருத்தி மது என்று...

அவளை உற்று பார்க்க, அவளோ டிராபிக் போலிசிடம் மாட்டியதற்கு பயந்து வெளிறிய முகத்துடன் உடல் சிறிது நடுங்க தலையை குனிந்தவாறு நின்றிருந்தாள்... அவளை காண்கையில் அவனுக்கே ஒரு மாதிரி இருந்தது...

பின் டேவிட்டின் விளக்கத்தில் நடந்தது புரிய, அவள் எப்படி அந்த சூழ்நிலையை சமாளிக்கிறாள் பார்க்கலாம் என்றே தன்னை வெளிபடுத்திக் கொள்ளாமல் இருந்தான் நிகிலன்...

அவள் பயந்து போய் தன்னை அவளுக்கு தெரிந்தவனாக கை காமிப்பாள் என்று எதிர்பார்த்தவனுக்கு அவளும் தன்னை தெரியாதவாறு காட்டி கொள்ள, கொஞ்சம் சுவராசியமாக இருந்தது நிகிலனுக்கு...

அதோடு சந்தியா அவனை பற்றியே அளந்து விட்ட கதையில் அவனுக்கு சிரிப்பு வர, மதுவை கொஞ்சம் சீண்டி பார்க்க தூண்டியது அவனுக்கு...

மேலும் என்னதான் சந்தியாவிடம் பேசி கொண்டிருந்தாலும் மதுவின் அந்த குழந்தை தனமான முகத்தை பார்க்க அவன் கட்டுபாட்டையும் கட்டளையையும் மீறி அவன் கண்கள் அவள் பக்கமே சென்றன....

அவன் வேண்டும் என்றே அவள் கணவன் பெயரை கேட்க அவள் சொன்ன “விருமாண்டி... “ என்றதில் எப்படி அவனுக்கு கோபத்திற்கு பதிலாக சிரிப்பு வந்தது என்று அவனுக்கே ஆச்சர்யம்....

அதை இப்பொழுது நினைக்கையிலும் உதட்டில் புன்னகை இலேசாக எட்டி பார்த்தது... படுக்கையில் படுத்து கொண்டே தன் அலைபேசியை எடுத்து அதில் “விருமாண்டி “ என கூகுளில் செர்ச் பண்ண, பெரிய மீசையுடன் நடிகர் கமல் ன் புகைப்படங்கள் வந்தன...

அதை கண்டு அதே மாதிரி தன் மீசையையும் முறுக்கி விட்டுக் கொண்டான் நிகிலன்... நீண்ட நாட்களுக்கு பிறகு அவன் உதட்டில் புன்னகை மலர் அழகாக கொஞ்சமாக பூத்தது...

நீண்ட நாட்களாக சிரிப்பு என்றால் என்னவெண்று மறந்திருந்த அவன் இதழ்களுக்கு கோடை காலத்து மழையாக அவன் மெல்லிய சிரிப்பை காட்ட, அவன் இதழ்கள் மகிழ்ச்சியில் திளைத்தன...அதோடு

“அப்பா... முருகா.. நாங்கள் என்ன பாவம் பண்ணினோம்..?? எங்களை கொண்டு வந்து இவனுக்கு உறுப்பா படைச்சுட்டாரே உங்க அப்பா.... இந்த சிடுமூஞ்சி சிரிக்கவே மாட்டேங்குறான்...

இன்னைக்குதான் அதிசயமா ஏதோ கொஞ்சூண்டு சிரிக்க ஆரம்பிச்சிருக்கான்.... இதை அப்படியே கண்டினுயு பண்ண வை...உனக்கு புண்ணியமா போகும்... “ என்று அவைகள் அந்த வேலனை அவசரமாக வேண்ட, அவைகளின் கோரிக்கை அந்த வேலனை அடையும் முன்னே விழித்துக் கொண்டான் நிகிலன்....

தன் மனைவியின் பால் போன்ற குழந்தை தனமான முகத்தை கண்டு கொஞ்சம் இலகி அவள் மேல் அவனுக்கு வர ஆரம்பித்து இருந்த சாப்ட் கார்னருக்கான புள்ளியை வைத்தவன், நிமிடத்தில் அந்த ரமணியின் முகமும் சிரிப்பும் நினைவு வர, தான் வைக்க ஆரம்பித்த அந்த புள்ளியை உடனே அழித்தான்....

அடுத்த விநாடி அவன் முகம் இறுக, உடல் விரைக்க, உதடுகளை இறுக்கி பல்லை கடித்தான்...

“சே... எல்லாம் நடிப்பு...அந்த டேவிட் இடம் மாட்டினது கூட அவளோட நாடகமாதான் இருக்கும்...ஒரு விநாடியில் என்னையே அவள் பக்க்ச்ம் இழுக்க பார்த்தாளே... பெரிய ஆளுதான்.. இனிமேல் அவ கிட்ட ஜாக்கிரதையா இருக்கணும்... “ என்று பல்லை கடித்தவன் அதே இறுக்கத்துடன் கண்ணை மூடினான்....

அவனின் இதழ்களோ,

”சே!! கவுத்திட்டியே முருகா... “ என்று முறைத்தன அந்த வேலனை பார்த்து...

“ஹா ஹா ஹா.. யாமிருக்க பயமேன்..!!! இவனை எப்படி வழிக்கு கொண்டு வர்ரேன் பார்... “ என்று குறும்பாக சிரித்துக் கொண்டான் அந்த சிங்கார வேலன்...

மறுநாள் ஜாகிங் சென்று திரும்பியவன் வழக்கம் போல அன்றைய செய்திதாளை புரட்டி கொண்டே அவன் அருந்தும் கஞ்சியை எடுத்து குடிக்க ஆரம்பித்தான்....

அவன் காதுகளோ சமையல் அறை பக்கம் சென்றன அவனையும் அறியாமல்.... கடந்த மூன்று நாட்களும் அவன் இங்கு அமர்ந்து இருக்கும் வேளையில் சிவகாமி யும் மதுவும் கதை பேசிக் கொண்டே சமையல் அறையில் உருட்டி கொண்டிருப்பர்...

சிவகாமி மனம் விட்டு பேசிக்கொண்டிருப்பார்.. பாதி நேரம் மது அவர் சொல்லும் கதையை கேட்டுக் கொண்டிருப்பாள்... அவர் சொல்லும் சில நிகழ்ச்சிகள் சுவையாக இருந்தால் வாய்விட்டு சிரிப்பாள் இவன் இங்கு அமர்ந்திருப்பது தெரியாமல்....

அவனும் செய்திதாளில் கண் இருந்தாலும் காது மட்டும் அவர்களின் சிரிப்பும் பேச்சையும் கேட்டு கொண்டிருந்கும்... அதுவே பழகி விட, இன்றும் அவன் காது அங்கு செல்ல, வழக்கத்திற்கு மாறாக அமைதியாக இருந்தது சமையல் அறை...

சிறிது நேரம் அங்கு இருந்தவன் செய்திதாள் ஐ முழுவதும் புரட்டி முடித்ததும் அங்கு இருந்த ஜிம் மிற்கு சென்று சில பயிற்சிகளை முடித்து மீண்டும் ஹாலுக்கு திரும்பி வந்தான்...

அப்பொழுதும் அங்கு அமைதியாகவே இருந்தது... என்ன ஆச்சு அம்மாக்கு என்று யோசித்தவாறு தன் அறைக்கு சென்று பின் சிறிது நேரம் கழித்து வெளியில் செல்ல கிளம்பி கீழ வந்தான்..

மாடியில் இருந்து இறங்கும் பொழுதே அவன் பார்வை டைனிங் ஹாலுக்கு சென்றது... எப்பவும் மூன்று பெண்களும் அமர்ந்து சிரித்து பேசிக் கொண்டிருப்பர்... இன்று அதுவும் அமைதியாக இருந்தது...

“என்னாச்சு?? யாரையும் காணோம்.. ?? “ என்று மீண்டும் யோசித்தவாறு டைனிங் டேபிலுக்கு சென்றான்... அவனை கண்டதும் தன் அறையில் இருந்து வெளியில் வந்தார் சிவகாமி...

அவனை பார்த்து புன்னகைத்து பின் அவனுடைய தட்டை எடுத்து வைத்து காலை உணவை எடுத்து அவன் தட்டில் வைத்தார்....

அவனும் எதுவும் பேசாமல் தன் உணவை எடுத்து சாப்பிட்டான்...

எப்படி கேட்பது?? என்று யோசித்தவன் பின் தன் ஈகோவை விட்டு

“எங்கம்மா யாரையும் காணோம்..?? வீடு சைலன்ட் ஆ இருக்கு.. “ என்றான் மெல்ல...

சிவகாமியும் மனதுக்குள் சிரித்துகொண்டே

“யாரை கேட்கற நிகிலா??’ என்றார் தன் சிரிப்பை மறைத்து கொண்டு....

அவனும் அவசரமாக,

“அகிலா மா... எங்க போய்ட்டா? “ என்று சமாளித்தான்...

“அவ ஸ்கூல்க்கு போய்ட்டா டா.. இன்றையில் இருந்து ஸ்கூல் இல்ல... அதான் போய்ட்டா.. “ என்றவர்

“என்னாச்சு இவனுக்கு?? அகிலா ஸ்கூல் போற டைம் இவனுக்கு தெரியுமே... அப்புறம் ஏன் அவளை பத்தி கேட்கறான்... ?? ஒரு வேளை தன் பொண்டாட்டிய பத்தி கேட்கத்தான் இப்படி சுத்தி வர்றானோ ?? இருக்கட்டும்... இன்னும் கொஞ்சம் சுத்த விடறேன்.. “ என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டார்...

அவன் கை சாப்பாட்டில் இருந்தாலும் கண்கள் என்னவோ அவளையே தேடின...

“எங்க போய்ட்டா?? அம்மாகிட்ட எப்படி கேட்பது?? “ என்று யோசித்தவாறு தன் உணவை உண்டு கொண்டிருந்தான்...

அதற்குள் சிவகாமி சமையல் அறைக்குள் சென்று இன்னொரு டிஷ் இருந்த பாத்திரத்தை எடுத்து வர, அதை கண்டவன்

“நீங்க ஏன் மா இதை எல்லாம் செய்யறீங்க?? அதான் மருமகள் னு ஒருத்திய கூட்டி வந்து வச்சிருக்கீங்க இல்ல... அவள இதெல்லாம் செய்ய சொல்ல வேண்டியதுதான...

சும்மா தண்டத்துக்கு சாப்டிட்டு தூங்கவா அவ அப்பன் வீட்ல இருந்து இங்க வந்திருக்கா?? ... “என்று பொரிந்தான்...

சிவகாமிக்கு அவன் சுத்தி வருவது நன்றாக புரிய,

“யாரை சொல்ற பெரியவா?? ஓ உன் பொண்டாட்டியவா?? “ என்றார் வேண்டும் என்றே

“யார்?? அவ எனக்கு பொண்டாட்டியா?? ஏதோ உங்களுக்காகத்தான் நான் அவ கழுத்துல தாலிய கட்டினேன்.. மத்தபடி அவ எனக்கு பொண்டாட்டி எல்லாம் இல்ல...

அதுக்காக சும்மா இங்க கூட்டி வந்து வச்சுகிட்டு சோறு போட்டுகிட்டு இருக்க முடியாது... அவ கிட்டயும் வேலை வாங்குங்க... நீங்க பாட்டுக்கு அவ கிட்ட செல்லம் கொஞ்சிகிட்டு இருந்தா, அப்புறம் அவ உங்க தலையில மொளகா அறைச்சுட்டு போய்டுவா..

நீங்க தான் எப்பவும் எல்லாத்தையும் செஞ்சுகிட்டு இருக்கணும்.. “ என்று மீண்டும் பொரிந்தான்...

“ஷ் அப்பா... இப்ப என்ன சொல்ல வர்ரான்.?? ... அன்றைக்கு கிச்சன் பக்கமே அவளை வரக்கூடாதுனு சொன்னான்.. இன்னைக்கு ஏன் அவ வேலை செய்யலைனு குதிக்கிறான்... இதுல நான் எதனு எடுத்துக்கிறது?? இப்பயே கண்ண கட்டுதே...“ என்று உள்ளுக்குள் புலம்பியவர்

“நிகிலா...மது இவ்வளவு நேரம் எனக்கு கூட உதவி செய்தா டா.. அகிலா ஸ்கூல்க்கு போறதால சீக்கிரம் சமையல் முடிக்கவும் வேற வேலை இல்லாததால் நான் போய் படிக்கிறேன் அத்தைனு மேல போய்ட்டா...

இப்ப கூட அவ மேல IAS பரிட்சைக்கு தான் படிச்சிகிட்டு இருக்கா.....”என்று தன் மருமகளுக்காக பரிந்து பேசினார் சிவகாமி...

“ஹ்ம்ம்ம் பாத்துமா.. ஓவரா அவளுக்கு இடம் கொடுக்காத... நல்ல மாமியாரா நடந்துக்கோ.. எல்லா வேலையும் அவளையே செய்ய சொல்....

இவ கலெக்டர்க்கு படிக்கிறதா இருந்தா அவ அப்பன் வீட்லயே இருந்து படிக்க வேண்டியது தான.. எதுக்கு அவங்க அப்பன் கல்யாணம் பண்ணி அடுத்த வீட்டிற்கு துரத்தி விடணும்??

ஒன்னும் சரியில்ல... நீ கொஞ்சம் ஜாக்கிரதையா இரு.. அவ ஏதோ திட்டத்தோட தான் வந்திருக்கா... “ என்று பொரிந்தவன் தன் உணவை முடித்து எழுந்து கை கழுவி விட்டு வெளியில் நடந்தான்...

அவன் சென்றதும்

“அப்பாடா... இந்த பயனை வெளில தள்ளறதுக்குள்ள மூச்சு முட்டுது.. எதுக்கெடுத்தாலும் இப்படி கடிக்கிறானே.. பாவம் என் மருமக.. எப்படித்தான் இவன வச்சு காலம் பூரா சமாளிக்க போறாளோ?? “ என்று சிரித்து கொண்டே சமையல் அறைக்குள் சென்றார்....

அகிலா நேற்று கொடுத்த டிப்ஸ் படி காலையில் சீக்கிரம் வேலை முடிந்ததும் அந்த விருமாண்டி கண்ணில் படக்கூடாது என்று திட்டமிட்டு அவன் ஜாகிங் சென்று திரும்பி வரும் முன்னே மாடிக்கு ஓடி விட்டாள் மது...

அகிலா கிளம்பி பள்ளிக்கு சென்றதும் அவள் அறையிலயே இருந்து அவள் வாங்கி வைத்திருந்த UPSC Exam guide ஐ புரட்டி கொண்டிருந்தாள்..

அவன் ஜாகிங் சென்று திரும்பி வந்ததும் அவன் அறைக்கு செல்லும் காலடி ஓசையும் அதன் பின் சிறிது நேரம் கழித்து அவன் கிளம்பி சென்றதையும் உள்ளே இருந்தே நோட் பண்ணிக் கொண்டிருந்தாள் மது ..

கீழ சென்றவன் தன் மாமியாரிடம் ஏதோ பொரிந்துக் கொண்டிருப்பது உள்ளே இருந்தவளுக்கு மெலிதாக கேட்டது... அதை கேட்டதும்

“Thanks வேல்ஸ்...எப்படியோ இன்னைக்கு என்னை அந்த சிடுமூஞ்சி கண்ணுல படாத மாதிரி காப்பாத்திட்ட... நல்ல வேளை... நான் கீழ போகலை.. பாவம் அத்தை மாட்டிகிட்டாங்க போல.. “ என்று தனக்குள் சிரித்து கொண்டாள்...

பின் சிறிது நேரம் கழித்து மெதுவாக வெளியில் எட்டி பார்த்தவள் அவன் டைனிங் டேபிலில் இல்லாததை கண்டு நிம்மதி மூச்சு விட்டவள் அந்த அறைக்கதவை மூடி, வேகமாக கடகடவென்று கீழ இறங்கினாள்...

கீழ குனிந்தவாறு வேகமாக மாடி இறங்கியவள் எதிரில் நிகிலன் மேல ஏறி வந்து கொண்டிருப்பதை கவனிக்க வில்லை...

தன்னை நோக்கி வேகமாக இறங்கி வருபவளை கண்டு

“ஏய்.. “ என்று கத்த, அவன் கத்தலில் மிரண்டவள் கால் இடறி அவன் அருகில் வந்திருந்தவள் அவன் மேல் நன்றாக முட்டிக் கொண்டு கீழ விழாமல் இருக்க மாடிப்படியின் கைபிடியை பிடித்து கொண்டாள்....

அவள் இடித்ததில் ஒரு விநாடி தடுமாறியவன் உடனே சுதாரித்துக் கொண்டு

“ஏய்...கண்ண எங்க வச்சுகிட்டு வர்ற?? எதிர் ல ஆள் வர்றது கூட வா தெரியல?? இல்ல தெரிஞ்சே தான் வந்து இடிக்கிறியா?? “ என்று உறுமினான்...

மதுவோ என்ன நடந்தது என்று புரியாமல் சில விநாடி திருதிரு வென்று முழித்தாள்...

“என்ன முழிக்கிற?? உன் கண்ணையும் நினைப்பையும் ஒரு இடத்துல வச்சுகிட்டு வேலை செய்.. இப்படி இடிச்சு ஆள மயக்கற வேலை எல்லாம் வேண்டாம்.. தொலச்சுருவேன்.. ஜாக்கிரதை... “ என்று உறுமி விட்டு கடகட வென்று மேல ஏறி சென்றான்.....

அவன் சென்றதும் அப்படியே விக்கித்து நின்றாள் மது சில விநாடிகள்... பின் தன்னை சமாளித்து கொண்டு மெதுவாக மாடி கை பிடியை பிடித்த படியே கீழ இறங்கினாள்...

,”சே... இந்த விருமாண்டி கண்ணுல மாட்டக் கூடாதுனு இதுவரைக்கும் தப்பிச்சது எல்லாம் வீணாப் போச்சே... கடைசியில போய் இப்படி ஆயிருச்சே...

இன்னும் கொஞ்ச நேரம் உள்ளயே இருந்திருக்க கூடாதா.. அவசர குடுக்கை மது.. “ என்று தன்னையே திட்டி கொண்டு கீழ இறங்கி வந்தாள்...

ஏதோ தோன்ற, தன் நெற்றியை தொட்டு பார்த்தவள், அவனை இடித்த இடத்தில் வலிக்கவும்

“ஐயோ.. இலேசா மோதினதுக்கே இப்படி வலிக்குதே.. இன்னும் வேகமா மோதியிருந்தால் என் நெற்றியே வீங்கி இருக்கும்...

மனசுதான் கல் மனசுனா இந்த விருமாண்டி உடம்பையும் கல்லு இல்ல பாற மாதிரி இல்ல வச்சிருக்கான்... நல்ல வேளை... பெருசா வீங்கல.. “என்று தன் நெற்றியை தடவி கொண்டே சமையல் அறைக்குள் சென்றாள்...

தன் மகன் கத்தியதில் சமையல் அறையில் இருந்து வெளியில் வந்த சிவகாமி இருவரும் முட்டி கொண்டு நிற்பதை கண்டு சிரித்து கொண்டே உள்ளே வந்து விட்டார்... நெற்றியை தேய்த்துக் கொண்டே வரும் தன் மருமகளை பார்த்து

“என்ன மருமகளே... அடி பலமா?? எத்தனை தையல் போடணும்?? “ என்று கண் சிமிட்டி சிரித்தார்....

“போங்க அத்தை... நீங்க ரொம்ப மோசம்.. நானே வலிக்குது னு வர்ரேன்.. தைலத்த எடுத்து ரெடியா வச்சிருக்காம கிண்டல் அடிக்கிறீங்க?? “ என்று செல்லமாக சிணுங்கினாள்...

“ஹா ஹா ஹா.. அடி எந்த அளவுக்கு னு பார்த்துட்டு அதுக்கு தகுந்த மாதிரி வைத்தியம் பார்க்கலாம்னு தான் வெயிட்டிங் மருமகளே... ஹ்ம்ம்ம் சுமாரான அடிதான் போல.... “ என்றார் அவள் நெற்றியை பார்த்தவாறு குறும்புடன் சிரித்துக் கொண்டே...

“ஹ்ம்ம்ம் என்னத்த போட்டு உங்க பையன இப்படி வளத்தி வச்சிருக்கீங்களோ.. காலையில கஞ்சிதான கொடுக்கறீங்க.. இல்ல யாருக்கும் தெரியாமல் ரகசியமா இரும்பை எதுவும் மிக்ஷ் பண்றீங்களா?? ... அதான் அந்த Iron man மாதிரி இப்படி ஸ்ட்ராங்கா இருக்காரோ?? “என்று சிரித்தாள் மது...

அவளின் கலகலப்பான பேச்சை கேட்டு வியந்து நின்ற சிவகாமி,

“ஹா ஹா ஹா.. பரவாயில்லையே.. நாலே நாள்ல புள்ளபூச்சி மாதிரி இருந்த என் மருமகளும் இந்த வாய் அடிக்க ஆரம்பிச்சுட்டா...சிவகாமி மருமகள் னா சும்மாவா?? “ என்று சிரிக்க, மதுவும் அப்பொழுதுதான் தான் அதிகபடியாக பேசியதை உணர்ந்து தன் நாக்கை கடித்துக் கொண்டாள்....

“சாரி... அத்தை... நான் எதுவும் தப்பா இல்ல ஓவரா பேசியிருந்தால் மன்னிச்சுக்கங்க... “ என்றாள் தயங்கியவாறு....

“அடடா... இப்பதான் என் மருமக தேறிட்டானு நினைத்தால் மறுபடியும் சறுக்கறாளே....நீ எதுவும் தப்பா பேசலை மது ... நீ இந்த அத்தைகிட்ட உரிமையோட எதையும் பேசலாம்.. சண்டை போடலாம்... அப்பதான் எனக்கும் போரடிக்காம இருக்கும்...” என்று கண் சிமிட்டி சிரிக்க, மதுவும் அவருடன் இணைந்து நகைத்தாள்....

தன் உணவை முடித்த பின் கார் க்கு சென்று அமர்ந்த நிகிலன் அவன் உள்ளுக்குள் எதையோ மிஸ் பண்ற மாதிரியே இருந்தது.. எப்பவும் காரில் அமர்ந்ததும் அவன் அன்று செய்ய வேண்டிய எல்லா வேலைகளும் ஒரு முறை மனதில் ஓடும்...

அதே மாதிரி அவன் பொருட்கள் எல்லாம் எடுத்தாச்சா என்று ஒரு முறை சரி பார்த்துக் கொள்வான்... ஒரு திருப்தி வந்ததுக்கப்புறம் தான் தன் காரை கிளப்பி செல்வான்...

இன்று காரில் அமர்ந்ததுமே அவன் மனதில் சம்திங்க் மிஸ்ஸிங் போல இருந்தது.. என்ன வென்று யோசித்தவனுக்கு சரியாக புரிய வில்லை.. சரி எதுக்கும் அறைக்கு சென்று பார்த்துவிடலாம் என்றே மீண்டும் உள்ளே வந்தான்...

அவன் மாடியில் ஏறும் பொழுதே இதுவரை தன் முன்னே வராமல் கண்ணாமூச்சி ஆடியவள் கீழ இறங்கி வருவதை கண்டான்...

காலையிலயே குளித்து முடித்து பூஜை முடித்ததுக்கு அடையாளமாக திருநீற்றையும் நெற்றியின் வகிட்டில் குங்குமமும் வைத்து துள்ளலுடன் கீழ இறங்கி வருபவளை கண்டதும் தான் தேடியது கிடைத்ததை போல இருந்தது...

அவளை பார்த்துக் கொண்டே மேல ஏறி வந்தவன் அவள் விலகாமல் நேராக தன்னை நோக்கி வருவதை கண்டதும் நொடியில் சமாளித்தவன் கத்த ஆரம்பித்தான்... அதற்குள் அவன் மீது அவள் இடித்து கொள்ள, அவளின் அந்த பூப்போன்ற முகம் அவன் மார்பில் படவும் அவனுக்கு ஏதோ கூடை ரோஜா பூக்கள் அவன் மேல் மோதியதை போல இருந்தது....

அதில் ஒரு நொடி மயங்கி நின்றவன் அதற்குள் தன்னை சுதாரித்து கொண்டு கத்த ஆரம்பித்து இருந்தான்... அவளும் திருதிரு வென்று முழித்து பின் இறந்கி ஓடி விடவும் எரிமலையாக இருந்தவன் அறைக்கு உள்ளே சென்றதும் அவளின் அந்த அகன்ற விழியை கண்டு கோபம் தணிந்து மெல்ல சிரித்துகொண்டான்...

பின் வேகமாக தன் அறையை நோட்ட மிட்டவன் அவன் எதையும் தவற விட வில்லை என தோன்ற மீண்டும் திரும்பி இறங்கினான்...

மாடியில் இருந்து இறங்கி வந்தவன் காதில் மதுவின் சிரிப்பு சத்தம் கேட்க, அவனுள் ஏதோ ஒன்று அமைதியானது.... அதே நிறைவுடன் தன் காரை கிளப்பி சென்றான்...

அன்று பார்வையிட வேண்டிய ஸ்டேசனுக்கு சென்றவன் உள்ளே செல்ல அங்கு கௌதம் இவனுக்காக காத்துக் கொண்டிருந்தான்... நிகிலனை கண்டதும்

“வாடா மச்சான்... புது மாப்பிள்ளை.. எப்படி இருக்க?? “ என்று சிரித்தான்... அவனை கணடதும் நிகிலனும் புன்னகைத்தான்...

“பாருடா... உனக்கு கூட சிரிக்க வருது.. பரவாயில்லையே... என் சிஸ்டர் நல்லாவே உன்ன மாத்திட்டாங்க இந்த 4 நாள் ல.. “ என்று சிரித்தான்....

அதை கேட்டதும் கொஞ்சமாக சிரித்தவன் அதை அடக்கிகொண்டு கௌதம் ஐ பார்த்து முறைத்தான் நிகிலன்..

“அதான.. நீ கொஞ்சம் சிரிச்சா உடனே அந்த அந்நியன் வந்திருவானே... எங்கடா அந்த அந்நியன் இன்னும் வரக் காணோமேனு பார்த்தேன்... “ என்று நக்கலடித்தவன்

“அப்புறம் மச்சான்... கல்யாண வாழ்க்கை எப்படி போய்கிட்டிருக்கு?? “ என்றான் நமட்டு சிரிப்புடன்...

அவன் சிரிப்பில் இருந்த வித்தியாசத்தை கண்ட நிகிலன்

“டேய்.. காலங்காத்தால எதுக்கு மொக்க போட்டுகிட்டிருக்க?? என்ன வசந்தி ஊருக்கு போய்ட்டாங்களா?? “ என்றான் நிகிலன்...

“டேய்.. எப்படி மச்சான் கரெக்டா கண்டுபிடிச்ச?? அதான் போலிஸ் மூளைங்கிறது?? “என்றான் ஆச்சர்யமாக...

“ஆமா... இத கண்டுபிடிக்க CBI ஆ வேணும்.. உன் பொண்டாட்டி இருந்தா அவ பின்னாடியே சுத்திகிட்டு இருந்துட்டு 10 மணிக்கு மேல போனா போகுதுனு டூட்டிக்கு வருவ...

இன்னைக்கு இவ்வளவு சீக்கிரம் அதுவும் எனக்கு முன்னாடியே வந்திருக்கனா?? அது கூடவா தெரியாது?? “ என்று நக்கலாக சிரித்தான் நிகிலன்...

“ஹ்ம்ம்ம் நானாவது என் பொண்டாட்டி பின்னாடி சுத்தினாலும் அது வெளில யாருக்கும் தெரியாது மச்சான்.. உன்ன மாதிரி ஊருக்கே வெளிச்சம் போட்டு காட்ட மாட்டேன்...” என்றான் கௌதம் நமட்டு சிரிப்புடன்....

அவன் என்ன சொல்றான் என்று புரியாமல் குழம்பிய நிகிலன்

“என்னடா சொல்ற?? ஒன்னும் புரியல “ என்றான்...

“ஹ்ம்ம்ம் இன்னும் கொஞ்ச நாளைக்கு அப்படி தான் இருக்கும் மச்சான்.. யார் என்ன சொன்னாலும் புரியாது.. ஒரு மாதிரி புது மாப்பிள்ளை மயக்கத்திலயே தான் சுத்த தோணும்.. “ என்று மேலும் புதிர் போட்டான் சிரித்து கொண்டே...

“டேய்... அடி வாங்க போற... காலையிலயே என்னை கடுப்பேத்தாத.. இன்றைக்கு வேலை வேற நிறைய இருக்கு... சொல்றத தெளிவா சொல்லித் தொல..” என்று சிடுசிடுத்தான் நிகிலன்...

“ஆமா... இந்த டாபிக் பேசினா மட்டும் உன் போலிஸ் மூளை வேலை நிறுத்தம் செய்திடும்...” என்று முனகியவன்

“ஆமா..மச்சான்... சிஸ்டர் என்ன குங்கும பொட்டுதான் வைப்பாங்களா?? “ என்றான் மேலும் நமட்டு சிரிப்புடன்...

“நீ என்ன லூசாயிட்டியா டா ?? எதுக்குடா இப்ப சம்பந்தம் இல்லாம எதையோ உளறி கிட்டிருக்க? “ என்று கடுப்பாகி கௌதமை திட்டினான் நிகிலன்..

“ஹா ஹா ஹா .. நான் லூசு இல்லடா.. நீதான் லூசு....

பொண்டாட்டியா கொஞ்சிட்டு வர்றவன் கண்ணாடிய ஒரு தரம் நல்லா பார்த்துட்டு வரணும் ங்கிற பேசிக் ரூல்ஸ் கூட தெரியல... நீயெல்லாம் புது மாப்பிள்ளை....போலிஸ்காரன்...


ந்த மாதிரி உன் பொண்டாட்டி என்ன பொட்டு வைக்கிறாங்கனு ஊருக்கே வெளிச்சம் போட்டு காட்டக் கூடாது... “ என்று நிகிலன் சட்டையில் ஒட்டியிருந்த குங்குமத்தை காட்டி மேலும் நமட்டு சிரிப்பை சிரித்தான் கௌதம்...

“ஆனாலும் மச்சான்... நாலு நாள் முன்னாடி சாமியாரா சுத்திகிட்டிருந்த நீ இப்படி நாலெ நாள்ல சம்சாரியா மாறுவனு நான் எதிர்பார்க்கல மச்சான்.. ரொம்ப மகிழ்ச்சி... சந்தோசம் டா.. உன்னை இப்படி பார்க்க... “ என்று மேலும் அடுக்கி கொண்டே போக, அதில் கடுப்பான நிகிலன்

அப்பொழுதுதான் காலையில் மது வந்து அவன் மேல் இடித்துக் கொண்டது நினைவு வர,

“டேய்.. போதும் நிறுத்து... விட்டா நீ பாட்டுக்கு அளந்துகிட்டே போற... என்னை என்ன உன்னை மாதிரி பொண்டாட்டிதாசன் னு நினைச்சியா??

இது ஏதோ அந்த தொல்ல வந்து மேல இடிச்சதுல ஒட்டிகிட்டது போல இருக்கு... “ என்று தன் சட்டையில் ஒட்டியிருந்த குங்குமத்தை தட்டி விட்டான் நிகிலன்...

“யாரு மச்சான் அந்த தொல்ல?? “என்றான் கௌதம் குழம்பியவாறு...

“ஹ்ம்ம்ம் அதான் இந்த அம்மா என்ன கட்டாயபடுத்தி தாலி கட்ட வச்சு மருமகள் னு ஒரு இம்சையை கூட்டி வந்து வீட்ல உட்கார வச்சு செல்லம் கொஞ்சிகிட்டு இருக்கே அந்த தொல்லதான்... “ என்றான் எரிச்சலுடன்...

“ஹா ஹா ஹா பார்த்து மச்சான்.. பொண்டாட்டிய தொல்லைனு சொன்ன, பொண்டாட்டி ங்க சங்கத்துல இருந்து உன் மேல கேஸ் போட்ற போறாங்க... அதோட இல்லாம மகளிர் இயக்கமும் உனக்கு எதிரா போர் கொடி தூக்கிடுவாளுங்க....

அப்புறம் நம்ம பக்கத்துலயே வேற மகளிர் காவல் நிலையம் இருக்கு...இது மட்டும் அவங்களுக்கு கேட்டுச்சு , நாமும் அவங்க டிபார்ட்மென்ட்னு கூட பார்க்காம நம்மள வச்சு செஞ்சுடுவாங்க... ஜாக்கிரதை... “ என்று எச்சரித்தான்...

அதை கேட்டு முறைத்த நிகிலன் அவன் சட்டையில் ஒட்டியிருந்த குங்குமத்தை தட்டிவிட, அது இன்னும் நன்றாக ஒட்டிக்கொண்டது...

“டேய் மச்சான்.. நிஜமாவே இது சிஸ்டர் இடிச்சதால ஒட்டினது தானா?? “ என்றான் கௌதம் சந்தேகமாக...

“டேய் கௌதம்... காலையிலயே என்னை கடுப்பேத்தாத....அதான் சொன்னேன் இல்ல...” என்று மீண்டும் முறைத்தான் நிகிலன்...

“ஹீ ஹீ ஹீ.. நம்பிட்டேன் மச்சான்... கல்யாணம் ஆன எல்லா ஆம்பளைங்களும் ஒரு மூனு மாசத்துக்கு இந்த மாதிரி ஏதாவது ஒரு சாக்கு சொல்லிகிட்டுதான் சுத்துவாங்க... அதுல எனக்கும் நிறைய experience…

என்ன மாதிரி எல்லாம் காரணம் சொல்லலாம்னு என்கிட்ட டிப்ஸ் கேளு மச்சான்.. நான் கலெக்ட் பண்ணி வச்சிருக்கிற டிப்சை எல்லாம் சேர்த்து ஒரு புக்கே போடலாம் னு இருக்கேன்...” என்று சிரித்தான் கௌதம்..

அப்புறம் இந்த குங்குமத்தை இப்படி எல்லாம் தட்டினா போகாது.. இதுக்கு ஒரு வழி சொல்றேன்... அப்புறம் இன்னொரு விசயம்..

இன்னும் ஒரு மூனு மாசத்துக்கு சிஸ்டர் ஐ இந்த மாதிரி குங்குமத்தை எல்லாம் வைக்க வேண்டாம் னு சொல்லு டா ..

வசந்தி மாதிரி ஸ்டிக்கர் பொட்ட ஒட்டிக்க சொல்லு.. அதுதான் சட்டையில ஒட்டினாலும் ஈசியா எடுத்திடலாம்... “ என்று மீண்டும் சிரித்தான் கௌதம்...

அதில் மேலும் கடுப்பான நிகிலன் வேகமாக தன் ரிவால்வரை எடுக்க, அதில் அரண்டு போன கௌதம்

“டேய்.. இதுக்கெல்லாமா அந்த ரிவால்வரை தூக்குவ... ஆத்தி.. உன்கிட்ட இனிமேல் அடக்கி வாசிக்கனும் டா.. “ என்று அலறினான் கௌதம் ..

“ஹ்ம்ம்ம் அது.. அந்த பயம் இருக்கட்டும்...இனிமேல் இது மாதிரி ஏதாவது உளறின அடுத்த என்கவுண்டர் நீதான்... “ என்று கையை நீட்டி மிரட்டி விட்டு அவனை முறைத்தவாறு தன் வேலையை கவனிக்க சென்றான் நிகிலன்...

அன்று இரவு மூன்று பெண்களும் தங்கள் இரவு உணவை முடித்த பின் சிவகாமி டீ.வி யில் சீரியல் பார்த்துக் கொண்டிருக்க, அகிலா தன் அண்ணியிடம் அவள் அறையில் அன்று பள்ளியில் நடந்த சுவையான நிகழ்ச்சிகளை கதை அடித்து கொண்டிருந்தாள்...

அவள் சொன்ன ஜோக் கை கேட்டு மது சத்தமாக சிரித்தாள்...அவளின் சிரிப்பை கண்ட அகிலா,

“நல்ல வேளை அண்ணி…உங்க புருசன் இங்க இல்ல... நீங்க இப்படி சிரிச்சதுக்கு இந்நேரம் உங்க புருசனுக்கு கேட்டிருந்தா அவ்வளவுதான்... “ என்று சொல்லி கொண்டிருந்தவள் பாதியிலயே நிறுத்திக் கொண்டாள்...

“ஹீ ஹீ ஹீ.. அந்த சிடுமூஞ்சிய பத்தி பேசாத அகி.... “என்று இன்னும் ஏதோ சொல்ல வந்தவள் அகிலாவிடம் இருந்து பதில் இல்லாமல் போக

“என்னாச்சு அகி ?? “ என்று திரும்பி அகிலாவை பார்க்க அகிலாவின் பார்வை கதவருகில் செல்ல மதுவும் அகிலாவை தொடர்ந்து கதவு அருகில் பார்த்தாள்...

அங்கே நிகிலன் இருவரையும் பார்த்து முறைத்த வண்ணம் நின்று கொண்டிருந்தான்...

அன்று சீக்கிரம் அவன் வேலை முடிந்து விட, வீட்டிற்கு சீக்கிரம் திரும்பி இருந்தான் நிகிலன்... உள்ளே வந்தவன் தன் அன்னையின் அருகில் அமர்ந்து சிறிது நேரம் பேசி கொண்டிருந்த பின் தன் அறைக்கு வர, அப்பொழுது பார்த்து அகிலாவின் அறையில் இருந்து மதுவின் சிரிப்பொலி கேட்க, அதில் கடுப்பானவன் அகிலாவின் அறைக்கு வந்து கதவை திறந்தான்...

கதை திறந்தவன் அப்படியே சாக்காகி நின்றான்..

அங்கு அகிலா அவள் study டேபிலில் அமர்ந்து ஹோம்வொர்க் பண்ணி கொண்டே கதை அடித்து கொண்டிருக்க, மதுவோ கட்டிலில் குப்புற படுத்துகொண்டு, காலை ஆட்டிகொண்டே ஒரு புத்தகத்தை வைத்து படித்து கொண்டிருந்தாள்....

அவளின் அந்த சிறு பிள்ளைத்தனமான நிலையில் இருந்தவளை கண்டு ஸ்தம்பித்து நின்றான் சில விநாடிகள்.. அதற்குள் மதுவும் அவனை காண, பயந்து போய் அவசரமாக கட்டிலில் இருந்து எழுந்து உட்கார்ந்தாள்....

உட்கார்ந்தவள் அப்பொழுது தான் பக்கதில் கிடந்த துப்பட்டாவை காண, வேகமாக அதை எடுத்து தன் மேல் போட்டு கொண்டே எழுந்து நின்று கொண்டாள் தலையை குனிந்தவாறே...

அதற்குள் தன்னை சுதாரித்து கொண்டவன், தன் தங்கையை பார்த்து

“என்ன சத்தம் அகிலா?? .. படிக்கற நேரத்துல என்ன அரட்டை?? என்று முறைத்தான்..

“இல்லண்ணா.. படிச்சுகிட்டு தான் இருந்தேன்.... “ என்று வாய்க்குள் முனகினாள்...

“ஹ்ம்ம்ம் நீ படிக்கிற லட்சணத்தை தான் பார்த்தேனே... “ என்று முறைத்தவன் பின் மதுவிடம் திரும்பி

“ஏய்.. நீ இங்க என்ன பண்ற?? நீ ஏன் அவ ரூம்ல இருக்க.. நீ வேறொரு ரூம்க்கு போக வேண்டியது தான .. படிக்கிற புள்ளையை எதுக்கு தொந்தரவு பண்ணி கிட்டு இருக்க ?? “ என்று அதட்டினான்....

மது எதுவும் சொல்லாமல் தலையை குனிந்த படியே இருக்க,

“இப்பத்தான் அப்படி இளிச்சா.. இப்ப பார் எப்படி முழிக்கிறா?? நல்லா நடிக்கிறா...

ஏய்... அம்மா கிட்ட சொல்லி வேற ரூம்க்கு போய்டு.. படிக்கிற புள்ளைய கெடுக்காத?? என்ன புரிஞ்சுதா ??

அகிலா... ஒழுங்கா நல்லா படி... மார்க் குறைஞ்சது அவ்வளவுதான்.. தொலச்சுடுவேன் “ என்று அவளையும் மிரட்டிவிட்டு வெளியேறி சென்றான்...

அவன் சென்றதும் சிறிது நேரம் தலையை குனிந்து கொண்டிருந்த மது மெல்ல நிமிர்ந்து அகிலாவை பார்க்க, அகிலாவும் தன் அண்ணனுக்கு பயந்த மாதிரி முகத்தை வைத்து கொண்டிருந்தவள் நிமிர்ந்து மதுவை பார்க்க,

இருவரும் ஒரே நேரத்தில் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டனர்....

அகிலாவை மிரட்டிவிட்டு தன் அறைக்கு சென்றவன், குளித்து விட்டு தன் அன்னை வைத்திருந்த பாலை பருகியவன் கட்டிலில் படுத்தவாறே தன் personal அலைபேசியை எடுத்து அதை நோண்டி கொண்டிருந்தான் நிகிலன்...

அப்பொழுது அவன் அறைக்கதவு தட்டும் ஓசை கேட்டு எழுந்து வந்து திறக்க, அங்கு மது பயந்தவாறே நின்று கொண்டிருந்தாள்.. ,

அவளை தன் அறை வாயிலில் கண்டதும் கடுப்பாகியவன்

“ஏய்... நீ எதுக்கு இங்க வந்த?? “ என்று அதட்டினான்...

அவன் அதட்டலில் வார்த்தை வராமல் தந்தி அடித்தது அவளுக்கு....

“ஏய்.. சொல்லித் தொலை... என்ன வேணும்?? இங்க எதுக்கு வந்த?? “என்று மேலும் மிரட்டினான்...

அவன் அதட்டலில் கொஞ்சமாக தெளிந்தவள்

“வந்து.... வந்து... “ என்று இழுத்தாள்...

“அதான் வந்திட்ட இல்ல... மேல சொல்லு.. “ என்றான் எரிச்சலுடன்... .

“ஹ்ம்ம்ம் அத்தை தான்... அகிலா படிக்கிறதால நான் இனிமேல் இங்க தான் தங்கனும்னு சொல்லிட்டாங்க... “ என்று மென்று முழுங்கினள்..

“உங்க அத்த சொன்னா உடனே மண்டய ஆட்டிட்டு நீ கிளம்பி வந்திடுவியா...நான் தான் உன்னை என் கண் முன்னாடி வரக்கூடாதுனு சொல்லியிருக்கேன் இல்ல..

நீ பாட்டுக்கு என் ரூம் க்கே வர்ற... என்ன தைர்யம்??? ஒழுங்கா போய் வேற ரூம் ல தூங்கு.. என்னை டென்சன் பண்ணாத... “ என்று கத்தினான்....

தன் மகன் வீட்டிற்கு சீக்கிரம் வந்ததை கண்ட சிவகாமி உள்ளம் குளிர்ந்து போனார்...அதுவும் இல்லாமல் தன்னிடம் அருகில் அமர்ந்து சிறிது நேரம் பேசி கொண்டிருந்து விட்டு செல்லவும் இன்னும் மகிழ்ந்து போனார்...

அதற்குள் அவன் மேலெ சென்று அகிலாவின் அறையில் கத்தி கொண்டிருப்பதை கண்டவர் அவர் பார்த்து கொண்டிருந்த சீரியல் முடியவும் எழுந்து மேல வந்து விசாரிக்க, நிகிலன் மதுவை அகிலா அறையில் தங்க கூடாது என்று மிரட்டியதாக சொன்னாள் மது...

அதை கேட்டதும், சிவகாமி மனதுக்குள் சில கணக்குகளை போட்டார்... பின் மதுவை பார்த்து

“மது... இனிமேல் நீ உன் புருசன் ரூம்லயே தங்கிக்க .. “ என்றார்... அதை கேட்டு அதிர்ந்த மது

“ஐயோ... அத்தை... நான் ஹால்ல வேணும்னாலும் தூங்கறேன்... அவர் ரூம் மட்டும் வேண்டாம்... “ என்று அலறினள்...

“அது இல்ல டா... கல்யாணம் ஆனதுக்கப்புறம் இரண்டு பேரும் ஒரே ரூம்லதான் இருக்கணும்.. உனக்கு கொஞ்ச நாள் இந்த வீடு பழகட்டும் னு தான் அகிலா ரூம்ல தங்க வச்சேன்...

இப்பதான் அவன பத்தி தெரிஞ்சிடுச்சு இல்ல.. அவன் அப்படிதான் கத்திகிட்டு இருப்பான்.. நீ எதுவும் கண்டுக்காமல் அங்கயே இரு.. “ என்று சமாதான படுத்தினார்...

ஆனாலும் அவன் அறைக்கு செல்ல தயங்கி

“அத்தை... என்னை கண்டாலே அவருக்கு பிடிக்கலை... நான் வேணா எங்க வீட்டுக்கே போய்டறனே...என்னால உங்களுக்கும் அகிலாவுக்கும் தான் கஷ்டம்....” என்று கண் கலங்கினாள் மது....

அதை கேட்டு சிவகாமியின் மனம் வலித்தது...

“என் வீட்டுக்கு வந்த மஹாலட்சுமி நாலே நாள் ல இங்க பிடிக்கலைனு அவள் பிறந்த வீட்டிற்கு போறேனு சொல்றாளே... இதுக்கா நான் இவ்வளவு கஷ்ட பட்டேன்...

முருகா... நீ இதையும் பார்த்துகிட்டுதான் இருக்கியா? “ என்று அந்த வேலனை திட்டியவர் தன் வருத்தத்தை மறைத்து கொண்டு

“அடடா... இந்த சின்ன விசயத்துக்கு போய் என் மருமக கண் கலங்கலாமா?? அவன் கிடக்கறான் எப்பவும் இப்படிதான் இருப்பான்.. புதுசா என்ன சொல்லிட போறான்....

நீ தான் தைர்யமா அவன எதிர்த்து நிக்கணும்... நீ பயந்து கிட்டு இருக்கிறதால தான் உன்னை ரொம்ப திட்டறான்...

உன்னை மட்டுமா திட்டினான்.. அகிலாவையும் தான திட்டினான்.. ஏன் என்கிட்டயும் தான் எகிறறான்.. நீயாவது உன் அம்மா விட்டுக்கு போறேங்கிற.. நாங்க எங்க போறதாம்??

பேசாம எங்களையும் கூட்டிகிட்டு போய்டறியா?? “ என்று சிரித்தார் சிவகாமி....

அவரின் பேச்சில் கொஞ்சம் தெளிந்தாள் மது...

“இங்க பார் மருமகளே.. ஒரு பொண்ணுக்கு கல்யாணம் ஆகிடுச்சுனா அவ புகுந்த வீடு தான் அவ வீடு.. எத்தனை கஷ்டம் நஷ்டம் வந்தாலும் தைர்யமா எதிர்த்து நிக்கணும்.... கோழை மாதிரி அம்மா வீட்டுக்குள்ள போய் புகுந்தக்க கூடாது...என்ன புரிஞ்சுதா?? “ என்று சிரித்தார்....

அதுவரை அவளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அகிலாவுக்கும் மதுவை பார்க்க பாவமாக இருந்தது... ,தன் வருத்தத்தையும் மறைத்து கொண்டு

“ஆமா அண்ணி... அம்மா சொல்றதுதான் கரெக்ட்.. அதோட நீங்க நாளைக்கு கலெக்டர் ஆகறப்போ நிக்கி அண்ணா மாதிரி நிறைய பேர சந்திக்க வேண்டி இருக்கும்.. எல்லாரும் திட்டுவாங்க... மிரட்டுவாங்க... அப்ப நீங்க அவங்களை எல்லாம் எதிர்த்து தைர்யமா நிக்கணும் இல்ல...

அதனால அதுக்கு இப்பயே பிராக்டிஸ் பண்ணிக்கிற மாதிரி நினைச்சுக்கங்க... நீங்க தைர்யமா அங்க இருந்தா தான் அண்ணாவை உங்க வழிக்கு கொண்டு வர முடியும்..” என்று பெரிய மனுசியாக அறிவுரை சென்னாள்....

“ஐயோடா... அவர் ஒன்னும் என் வழிக்கு வர வேண்டாம்... அவர் வழியிலயே போகட்டும்... “ என்று முனகினாள் மது ....

அதை கேட்டு சிரித்த சிவகாமி

“அகிலா சொல்றதும் கரெக்ட் தான் மது .. நீ எவ்வளவு தைர்யமானவனு இந்த டெஸ்ட் ல தெரிய போகுது... அதனால இன்னைக்கு நீ அங்கதான் தங்கற..” என்று முடித்தார். சிவகாமி..

“ஐயோ அத்தை.. வேண்டாமே... இன்னைக்கு ஒரு நாள் இங்க இருந்துக்கறேன்.. நாளைக்கு வேணும்னா நான் அங்க போறேன்..” என்று கெஞ்சினாள் மது ...

“ம்ஹூம்.. அது சரி வராது மது... அவன் தான சொன்னான்.. உன்னை இங்க தங்க வேண்டாம்னு.. அதனால அவன் ரூம்லயே போய் இரு...என்ன செய்யறான் னு பார்க்கறேன்... “ என்று முடித்து விட்டார்....

தன் அண்ணி பயப்படுவதை கண்டு அருகில் வந்த அகிலா

“அண்ணி.. நான் வேணா ஒரு டிப்ஸ் சொல்லவா?? அண்ணா உன்னை திட்டினா virtual ஆ ஒரு பஞ்சை எடுத்து காதுல வச்சுக்கங்க... “என்று சிரித்தாள்..

“ பஞ்சா?? “ எ ன்று முழித்தாள் மது

“ஹ்ம்ம்ம் அதாவது அவர் திட்டறப்போ உங்க மைன்ட் ல அவர் வாய்ச mute பண்ணிடுங்க...ஐ மீன் அவர் பேசறது எதுவும் கேட்காது... வெறும் ஆக்சன் மட்டும் தான் தெரியற மாதிரி imagine பண்ணிக்கோங்க.. அப்புறம் பாருங்க அவர் திட்டறது எதுவும் காதுல விழவே விழாது.. அதோட அவர் பண்ற ஆக்சன் மட்டும் பார்க்க செம காமெடியா இருக்கும்...

இதுதான் என்னுடைய சீக்ரெட் அண்ணி.. இத பாலோ பண்ணிதான் முக்கால் வாசி நேரம் அவன் கிட்ட இருந்து தப்பிச்சுக்குவேன்... “என்று சிரித்தாள் அகிலா...

அதை கேட்டு மதுவும் சிரிக்க,

“ஹே வாலு.. உன் அண்ணன் கிட்ட மட்டும்தான் இந்த டெக்னிக் ஆ.. இல்ல என்கிட்டயும் இதே தானா?? அதான் நான் திட்டறப்ப எல்லாம் எரும மாட்டு மேல மழை பேய்ஞ்ச மாதிரி சிரிச்சுகிட்டே நின்னியா?? “ என்று முறைத்தார் சிவகாமி..

“ஓ சாரி.. மம்மி.... கொஞ்சம் உணர்ச்சி வசபட்டு நீங்க இருக்கிறத மறந்துட்டு என் ரகசியம் எல்லாம் உளறிட்டேன்.. நான் சொன்னதை எல்லாம் டெலிட் பண்ணிருங்க...அகிலா ஒரு நிமிடம் முன்னாடி சொன்னது எல்லாம் சொல்லவே இல்லை.. “ என்று கண்ணடித்து சிரித்தாள்..

“போடி வாலு... சரி .. நீ வா மது மா... நான் உன்னை அங்க விட்டுட்டு கீழ பேறேன்.. அப்படி எதுவும் அவன் ரொம்ப திட்டினா உடனே நீ என்னை கூப்பிடு.. “ என்று வெளியேறினார்...

“All the best அண்ணி... கலக்குங்க... “ என்று தன் கட்டை விரலை உயர்த்தி காட்ட, மது அவளை பார்த்து முறைத்தவாறு சிவகாமியின் பின்னே சென்றாள்...

அவளை நிகிலன் அறையில் விட்டு விட்டு வேகமாக கீழ இறங்கி சென்றவர் மாடிபடியின் அருகில் நின்று கொண்டு மேலே நடப்பதை கவனித்து கொண்டிருந்தார்...

அவர் எதிர்பார்த்த மாதிரியே நிகிலன் மதுவை திட்டி கொண்டிருக்க,

“நிகிலா...அங்க என்ன சத்தம்?? “என்று கீழ இருந்து சத்தம் போட்டார் சிவகாமி..

“அம்மா.. இந்த பிசாசை எதுக்கு என் ரூம்க்கு அனுப்பி வச்சிருக்க... “ என்று கீழ பார்த்து கத்தினான்

“நீதான்டா சொன்னியாம்.. மது இனிமேல் அகிலா ரூம் ல இருக்க கூடாது னு... அதான் இனிமேல் உன் ரூம்ல யே அவ இருக்கட்டும்…”

“ஏம்மா...என் ரூமை விட்டா இவளுக்கு வேற ரூம் எதுவும் இல்லையா?? ஏன் அந்த ஓடிபோனவன் தங்கி இருந்த அறை சும்மாதான இருக்கு.. இவள அந்த அறையில தங்க சொல்ல வேண்டியது தான..”

“ஆமாண்டா.. உன் பொண்டாட்டி போய் உன் தம்பி அறையில தங்கறதா?? .. இது நல்லா இருக்கே...” என்று முறைத்தார்...

“ஹ்ம்ம் எது அவன் ரூம்?? இனிமேல் அவனுக்கு இந்த வீட்லயே இடம் கிடையாது... அதான் அவன் வாங்கின ப்ளாட் இருக்குல்ல.. அங்கயே தங்கிக்க சொல்லுங்க.. என் கண் முன்னாடி மட்டும் வந்திடக்கூடாது னு சொல்லி வைங்க.. “ என்று தன் கோபத்தை தன் தம்பியின் மேல் திருப்பினான்....

“ஹ்ம்ம்ம் அவன் வந்தா சொல்றேன்டா.. அந்த நாய்தான் எங்க இருக்கானே தெரியலையே... சரி... நீ இப்ப மதுவை உன் ரூம்லயே தங்க வை.. “ என்று குரலை தாழ்த்தினார் தன் சின்ன மகனின் நினைவில்...

“ம்ஹூம்.. அதெல்லாம் முடியாதுமா.. “என்று அவன் அதிலயே நிக்க, அதில் கடுப்பான சிவகாமி மேல ஏறி வந்து

“ஏன் டா முடியாது?? இவ்வளவு பெரிய ரூம்ல என் மருமக தங்கிக்க கொஞ்சூண்டு இடமில்லையா?? இல்ல அவ கிட்ட இருந்தா அவள பார்த்து மயங்கிடுவோம்னு பயமா இருக்கா?? “ என்று தன் கடைசி ஆயுதத்தை பயன்படுத்தினார் அவனை நேராக முறைத்து பார்த்து கொண்டே...

அவர் எதிர்பார்த்த மாதிரியே அவர் வீசிய ஆயுதத்தின் தாக்கத்திற்கு பலன் கிடைத்தது

"நானா?? .. இவள பார்த்து பயமா?? எத்தனை மோகினி வந்தாலும் மயங்கர ஆள் நான் இல்லை.. சரி சரி இங்கயே இருந்து தொலைக்கட்டும்... ” என்று மதுவை முறைத்து விட்டு திரும்பி உள்ளே சென்றான்...

சிவகாமியும் தன் மருமகள் பார்த்து கட்டை விரலை உயர்த்தி காட்டி

“நீ ஒன்னும் பயந்துக்காத மருமகளே... தைர்யமா போ.. ஒன்னும் சொல்ல மாட்டான்.. “ என்று அவளை கட்டி அணைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டு பின் கீழ இறங்கி சென்றார்...

“டேய்.. சீக்கிரம் பார்.. உன்னை எப்படி வழிக்கு கொண்டு வர்ரேனு” என்று சிவகாமி சிரித்து கொண்டே கீழ சென்றார்...

அவர் சென்றதும் மெல்ல தயங்கியவாறு சிங்கத்தின் குகைக்குள் செல்லும் புள்ளிமானை போல தன் வலது காலை எடுத்து வைத்து உள்ளே சென்றாள் மது... திருமணம் ஆகி இங்கு வந்த பின் எல்லா அறைக்கும் சென்றிருக்கிறாள்... இந்த அறைக்கு மட்டும் வந்ததில்லை...

அதனாலயே மெல்ல தயங்கியவாறு கந்த சஷ்டி கவசத்தை மனதுக்குள் சொல்லியபடி உள்ளே அடி எடுத்து வைத்து சென்றாள்...

அவள் உள்ளே வந்ததும், கட்டிலில் இருந்த ஒரு தலையணையயும் போர்வையும் எடுத்து அவள் மேல் தூக்கி எறிந்தான் அவள் கணவன்...

“ஏய்.. இங்க பார்... உனக்கு அந்த ஷோபா தான் உன்னோட இடம்..அதை தாண்டி இந்த பக்கம் வரக்கூடாது… புரிஞ்சுதா???

“ஹ்ம்ம்ம்” என்று தலையாட்டினாள் மது பயந்தவாறு

“என்ன புரிஞ்சுது?? “

“நான் இந்த ஷோபாவை தாண்டி அந்த பக்கம் வரக்கூடாது “ என்று அவன் சொன்னதை திருப்பி சொன்னாள்...

“அது.. அந்த பயம் எப்பவும் இருக்கனும்..புரிஞ்சுதா??”

“புரிஞ்சுது சார்... அந்த பயம் எப்பவும் இருக்கனும்...” என்று அவன் கேட்கும் முன்பே திருப்பி சொன்னாள் பயந்தவாறு...

அவளின் பயந்த வெகுளியான முகத்தை கண்டவன் தன் கோபம் குறைந்து உள்ளுக்குள் சிரித்து கொண்டாலும் வெளியில் கெத்தாக அவளை முறைத்து கொண்டிருந்தான்...

அவன் எறிந்த தலையணையை எடுத்து கொண்டு சோபாவிற்கு செல்ல முயன்றவள் தயங்கி நின்றாள்.... பின் மெல்ல திரும்பி அவனை பார்த்து

“ஒரு சின்ன ரிகுவஸ்ட் சார்.... “என்று இழுத்தாள்...

“என்ன?? “ என்று வாயை திறக்காமல் தன் புருவங்களை உயர்த்தி பார்வையால் வினவ, மதுவும் தன் தைர்யத்தை கொஞ்சம் வரவழைத்துக் கொண்டு

“வந்து..... எனக்கு சின்ன வயசுல இருந்தே போலிச கண்டால் பயம் சார்..... நீங்க வேற ஸ்ட்ரிக்ட் போலிஸ்னு அகிலா சொன்னா.. யாராவது ஏதாவது தப்பு பண்ணினா முட்டிக்கு முட்டி தட்டுவீங்களாம்.... அதான் பயம் வந்திடுச்சு...

போலிஸ் சார்... நான் ஏதாவது தப்பு பண்ணினா குணமா வாயில சொல்லுங்க.. என்னை முட்டியில அடிச்சிடாதிங்க “ என்றாள் பயந்தவாறு....

அதை கேட்டதும் எவ்வளவு கட்டுபடுத்தியும் முடியாமல் தலையை குனிந்து கொண்டு சிரித்தான் அவளுக்கு தெரியாமல்....

ஓரளவுக்கு உள்ளுக்குள் சிரித்து முடித்தவன் தன்னை சமாளித்து கொண்டு

“ஹ்ம்ம்ம்ம் அது நீ நடந்துக்கறத பொருத்து... நீ என் வழியில வராம இருந்தால், நான் உன்னை ஒன்றும் சொல்ல மாட்டேன்... “ என்றான் மிடுக்காக....

“ஐயோ!! நான் எதுக்கு சார் உங்க வழிக்கு வர்ரேன்... நீங்க உங்க வழியிலயே போங்க.. நான் ஓரமா நின்னுக்கறேன்... “ என்றாள் அவசரமாக...

“ஹ்ம்ம்ம்ம் அது.. இப்படியே மெய்ன்டெய்ன் பண்ணனும்.. எதுவும் ஓவரா ஆடக்கூடாது... “ என்று இன்னும் கொஞ்சம் எக்ஷ்ட்ரா பில்டப் கொடுத்து அவளை பயமுறுத்த, மதுவும் தன் தலையை ஆட்டி பின் அவளுடைய இடத்துக்கு சென்று தன் துப்பட்டாவை நன்றாக இழுத்து மூடி படுத்தவள், போர்வையால் தலை முதல் கால் வரை இழுத்து போர்த்தி கொண்டு படுத்தாள்.....

தன் அலைபேசியை எடுத்து கொண்டு பால்கனிக்கு சென்ற நிகிலன் அதுவரை அடக்கி வைத்திருந்த சிரிப்பு வெடிக்க, வாய்விட்டு சிரித்தான் நீண்ட நாட்களுக்கு பிறகு....

அவனின் இந்த சிரிப்பு நிலைக்குமா?? பார்க்கலாம்...

Comments

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!