காதோடுதான் நான் பாடுவேன்-6
அத்தியாயம்-6
ஒரு வழியாக தனக்கு வேண்டிய விவரங்களை கேட்டு குறித்து கொண்டதும் அந்த பயிற்சி மையத்தில் இருந்து வெளியில் வந்தவள் லிப்ட் வழியாக மீண்டும் கீழ வந்து அந்த ஆட்டோ இறக்கி விட்ட இடத்திற்கு வந்து நின்று கொண்டாள் ..“அப்பாடா... ஒரு வழியா Stage 2 ம் completed… அடுத்து Last and final stage திரும்ப வீட்டிற்கு போவது... இப்ப எப்படி இங்கிருந்து வீட்டிற்கு போவது ?? “ என்று யோசித்துக் கொண்டிருந்தாள்..
பசி வேறு வயிற்றை கிள்ள ஏதாவது சாப்பிடலாம் என்று சுற்றிலும் பார்த்தவள் அங்கு எதிர்பக்கம் புட்கோர்ட் இருப்பதை கண்டாள்... ஆண்களும் பெண்களும் கும்பல் கும்பலாக நின்று சிரித்து பேசி கொண்டே சாப்பிட்டு கொண்டிருக்க எல்லா கவுண்டர் லயும் வரிசையில் நிக்க,அதில் தான் மட்டும் தனியாக எப்படி போவது என்று பயந்து தன் எண்ணத்தை கை விட்டாள்...
“நேரா வீட்டிற்கே போய்டலாம்..” என்றவள் தன் அலைபேசியை எடுத்து ஆட்டோ புக் பண்ணுவதற்கான ஆப் ஐ ஒபன் பண்ண அந்த நேரம் பார்த்து அவள் நெட் வேலை செய்ய மறுத்தது...
“ஐயோ!! இப்ப எப்படி ஆட்டோ புக் பண்ணுவது?? அகிலா வேற சாதாரண ஆட்டோல வரக்கூடாது னு சொன்னாளே.. “ என்று மீண்டும் பயந்தாள்....
அந்த நேரம் பார்த்து அவள் முதுகில் யாரோ ஓங்கி தட்ட, அதில் இன்னும் அதிர்ந்தவள் பயத்துடன் திரும்பி பார்க்க,
“ஹேய்... மந்தி.. எப்படி இருக்க?? “ என்று வாயெல்லாம் பல்லாக இவளை பார்த்து சிரித்து கொண்டிருந்தாள் மதுவின் பிரெண்ட் சந்தியா....
சந்தியா மதுவின் வீட்டின் பக்கத்து வீட்டில் இருந்தவள்...இரு குடும்பங்களும் நட்புடன் பழகி வந்தனர் பல வருடங்களாக.. மதுவின் அம்மாவும் சந்தியாவின் அம்மாவும் நல்ல தோழிகள்...சந்தியா பிறந்த பொழுது மதுவின் அம்மா 8 மாத கர்ப்பினி.. அந்த நிலையிலும் சந்தியாவின் அம்மாவை பார்த்து கொண்டார்... அதன் பிறகு மது பிறக்க, இரு குழந்தைகளுமே எப்பவும் ஒன்றாகவே விளையாடுவார்கள்...
மதுவந்தினி என்ற பெயர் சந்தியாவின் வாயில் வராமல் மந்தி என்றே அழைக்க, மதுவும் அவளை ஓட்ட என்று சந்தி என்றே அழைப்பாள்...
சொல்லி வைத்த மாதிரி இருவருமே ஒரே பிள்ளையாக நின்று விட தங்களுடன் விளையாட தம்பி யோ தங்கையோ இல்லாததால் இருவருமே ஒருவருக்கொருவர் மற்றவளை கூட பிறந்தவளாக எண்ணிக் கொள்வர்..
ஆரம்ப பள்ளியில் இருந்து 12 வரைக்குமே இருவரும் ஒன்றாக படித்தனர்.. சந்தியா 12 ஆம் வகுப்பு முடிக்கவும் அவள் தந்தை சென்னையின் வேறு பக்கத்தில் அபார்ட்மென்ட் ஒன்றை வாங்கி கொண்டு அங்கு குடி பெயர்ந்தனர்...
இரு பெண்களும் அவர்கள் பிரியும் நாளில் பயங்கர அழுகை.. அதுவும் மது இரண்டு நாள் சாப்பிடவே இல்லை...
ஒரு வழியாக அவளை சமாதான படுத்துவதற்குள் சாரதாவுக்கு போதும் போதும் என்றாகியது... அப்புறம் இருவரும் வேறு வேறு கல்லூரியில் சேர்ந்து விட, கடந்த மூன்று வருடமாக இருவரும் பிரிந்திருக்கின்றனர்...எப்பயாவது இருவரும் போனில் பேசிக்கொள்வர்...
அதுவும் சந்தியா தான் அதிகம் பேசுவாள்.. மது அவள் சொல்லும் கதை எல்லாம் ஆவலுடன் கேட்பாள்.. சிறு வயதில் இருந்தே மது அதிகம் பேச மாட்டாள்..ஆனால் சந்தியா அதற்கு எதிர்மாறாக அவள் பேசுவதையும் சேர்த்து பேசுவாள்....
ஆனாலும் மது தன் மனம் விட்டு பேசுவது என்றாள் சந்தியாவிடம் மட்டுமே....
இந்த திருமணம் திடீரென்று முடிவானதும் மது சந்தியவை தேட அவளோ அவள் கிராமத்திற்கு சென்றிருந்தாள்... அதனால் அவளிடமும் தன் குறையை கூறி ஆறுதல் தேட முடியவில்லை... கிட்ட தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு இப்பொழுது தான் நேரில் சந்திக்கின்றனர் இருவரும்....
தன்னை கண்டு மது இன்னும் முழித்து கொண்டிருப்பதை கண்ட சந்தியா
“என்னடி?? இப்படி பேயறைந்த மாதிரி முழிக்கிற... நான் தான் உன் தோழி சந்தியா...என்ன அதுக்குள்ள மறந்துட்டியா?? ” என்று மீண்டும் சிரித்தாள் சந்தியா ..
“ஹ்ம்ம்ம்.... அது எனக்கு தெரியுது சந்தி... நீ எங்க இங்க னு தான் முழிச்சுக்கிட்டு இருக்கேன்... அதுவும் ஸ்கூட்டியோடு?? சைக்கிள் ஓட்டறதுக்கே பயந்து ஓடுவ.. நீ எப்படி ஸ்கூட்டி எல்லாம் ஓட்டற?? “ என்று ஆச்சர்யமாக பார்த்தாள் மது...
“ஆமாம்... நம்ம சென்னை பஸ்ல ஒரு இடத்துக்கு போய்ட்டு வர்றதுக்குள்ள அந்த சந்திரனுக்கே போய்ட்டு வந்திடலாம் போல.... அதான் முதல் மாசம் சம்பளத்துல இந்த ஸ்கூட்டியை தவணை முறையில வாங்கிட்டேன்...“ என்றாள் பெருமையாக
“என்னது?? நீ வேலைக்கு போறீயா ?? ... எப்படி டீ உனக்கெல்லாம் வேலை கொடுத்தாங்க.. நாட்டுல அவ்வளவு ஆள் பற்றாக்குறையா?? “ என்று மது கிண்டல் பண்ணவும் மீண்டும் அவள் முதுகில் அடித்தாள் சந்தியா...
“ஹ்ம்ம்ம் நீயெல்லாம் என்ன ஓட்டற மாதிரி ஆகியிருச்சு.. “ என்று பெருமூச்சு விட்டவள்
“நான் டிகிரி படிச்சிகிட்டு இருக்கறப்பயே கம்பூட்டர் டெஸ்டிங்(testing) கோர்ஸ் பண்ணிட்டு டிகிரி முடிக்கும் முன்னே ஒரு MNC கம்பெனில டெஸ்டிங் ல ஜாயின் பண்ணிட்டேன் டி .... இங்க தான் என் ஆபிஸ்...” என்று சிரித்தாள்
“டெஸ்டிங் ஆ.. நீ எப்படி டீ டெஸ்ட் பண்ணுவ?? நீ படிச்சது B.Sc Physics அதுக்கும் கம்ப்யூட்டருக்கும் என்ன சம்பந்தம்?? “ என்றாள் புரியாதவாறு
“ஆமாம்.. அது பெரிய கம்ப சூத்திரம்.. போடி... Software testing இருக்கே.. அது ரொம்ப ஈசி டீ. இந்த இன்புட் கொடுத்தா என்ன ரசல்ட் வரும் னு முன்னாடியே எழுதி வச்சுகிட்டு அதே மாதிரி வருதானு டெஸ்ட் பண்ற வேலைக்கு என்ன மாதிரி ஆளுங்க போதும்...”என்று சிரித்தாள் சந்தியா..
“ஆமா.. நீ எப்படி இருக்க??... உனக்கு கல்யாணம் ஆகிடுச்சுனு கேள்வி பட்டேன்.. “ என்றவளை மது முறைக்கவும்
“சரி சரி.. சாரி டி ஊருக்கு போயிருந்தேனா... அதான் உன்னை தொடர்பு கொள்ள முடியலை... திரும்பி வந்தப்புறம் தான் வீட்ல உன் இன்விடேஷனை பார்த்தேன்.. ..
சரி நம்ம மந்தி கலயாணத்துக்கு போய் கலக்கிடலாம்னு நினைத்து தேதிய பார்த்தால் அது முடிந்து இருந்தது... ரொம்பவுமே கஷ்டம் ஆயிருச்சு மந்தி....உன் கல்யாண சாப்பாட்டை மிஸ் பண்ணிட்டேனு... “ என்றாள் வருத்தமாக... அவளை மது மேலும் முறைக்கவும் சந்தியாவும் சிரித்து கொண்டே
“ஆமா.. நம்ம மாம்ஸ் எப்படி இருப்பார்??... என்ன பண்றார் ?? “ என்றாள் சந்தியா
“என்ன பண்றார் ?? ” என்று யோசித்தவள் அகிலா சொன்ன எங்க அண்ணா ஒரு போலிஸ் என்பது நினைவு வரவும் போலிஸா இருக்கார் என்றாள் மது முறைத்தவாறே...
“ஓ.. அப்ப நீ போலிஸ்காரன் பொண்டாட்டியா??
“பாத்துடி.. நீ எதாவது தப்பு பண்ணின உன்னை முட்டிக்கு முட்டி தட்டிட போறார்... ” என்று சிரித்தாள் சந்தியா..
அதற்குள் அவர்கள் பின்னால் இருந்த வாகனம் ஹார்ன் அடிக்கவும்
“ஆமா .. நீ எங்க இங்க?? உன்னோட பாடி கார்ட்... அதான் நீ எங்க போனாலும் உன் பின்னாடியே சுத்துவாரே உன் அப்பா... எங்க அவர் ?? “ என்றாள் சுற்றிலும் பார்த்தவாறு...
“ஹ்ம்ம்ம் இங்க UPSC exam பற்றி டீடெய்ல்ஸ் கேட்கறதுக்காக நான் தனியாதான் வந்தேன்...” என்றாள் மது
“என்னது?? நீயா?? தனியாவே வந்தியா?? உலக அதிசயத்துல எட்டாவது அதிசயமா இத தாண்டி சேர்க்கணும்.... “ என அதிர்ந்து சிரித்தாள் சந்தியா... மது மீண்டும் முறைக்கவும்
“சரி...நீ இப்ப எங்க போகனும் டீ?? ..” என்று கேட்க மது தன் அலைபேசியை எடுத்தவள் அதில் அகிலா குறித்து கொடுத்த அவள் புகுந்த வீட்டின் முகவரியை காட்ட,
“ஹே மந்தி.. எங்க வீடும் அங்க தான் இருக்கு... உங்க ஏரியாவை தாண்டி தான் போகனும்.. வா நான் உன்னை ட்ராப் பண்ணிடறேன்.. ” என்றாள் சந்தியா..
அதை கேட்டு 2 அடி பின் வாங்கினாள் மது.. சின்ன வயதில் சந்தியா சைக்கிளில் டபுள்ஸ் போய் மதுவை கீழ விழ வைத்தது இன்னும் மறக்க வில்லை மதுவிற்கு...
சந்தியாவும் அதையே நினைத்து சிரித்து கொண்டு
“ஹே மந்தி... அது அப்போ.. இப்போ நான் நல்லா வண்டி ஓட்டுவேன்... என்னை நம்பி நீ தாராளமா வரலாம்..” என்று சிரித்தாள்....
“இல்லடீ.. நான் ஆட்டோலயே போய்க்கிறேன்... உன்னை நம்பி நான் வரமுடியாது.. “ என்று மது மிரள,
“அடியே.. இங்க இருந்து அவ்வளவு தூரம் போறதுக்கு 150 ரூபாயாவது ஆகும்... அந்த காசுக்கு நாம இரண்டு பேரும் ஐஸ் கிரீம் வாங்கி சாப்டிட்டு உன்னை பத்திரமா நான் உங்க வீட்ல இறக்கி விட்டுடுவேன்... காசு மிச்சம் .. என்ன டீலா?? “ என்று மதுவிடம் டீல் பேசினாள் சந்தியா..
ஐஸ் கிரீம் என்றதும் மதுவும் வாயை பிளந்தாள்.... அவளும் சரி என்க
“சூப்பர் மந்தி.. சரி வா போகலாம்... “ என்று தன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் பண்ணினாள்
“ஹே.. அதெல்லாம் இருக்கட்டும்... எத்தன தடவை சொல்றது என்னை மந்தி னு கூப்பிடாதனு..” என்று முறைத்தாள் மது...
“ஹா ஹா ஹா... மதுவந்தினி னு இழுத்து சொல்ல கஷ்டமா இருக்கு டி... மந்தி தான் ஈசியா வருது.... அதான் மந்தி.. “ என்றாள்...
மது மீண்டும் முறைக்க, அதற்குள் அவள் ஸ்கூட்டியை ஸ்டார்ட் பண்ணி இருக்க வேறு வழி இல்லாமல் பயந்து கொண்டே அவள் பின்னே உட்கார்ந்தாள் மது...
கொஞ்ச தூரம் போனதும் தான் மதுவுக்கு ஞாபகம் வந்தது தான் ஹெல்மெட் அணியவில்லை.. என்று
“ஹே .. சந்தி.. நான் ஹெல்மெட் போடலை டி ... ட்ராபிக் போலிஸ் புடிச்சிடுவாங்க.. நீ நிறுத்து.. நான் இறங்கிக்கறேன் “ என்றாள் மது..
“சும்மா இரு டி.. இந்த வழில போலிஸ் இருக்க மாட்ட்டாங்க.. நாந்தான் தினமும் இந்த வழியாதான் போய்ட்டு வர்ரேன்.. “ என்று சொல்லி முடிக்கு முன்னே திடீர் என்று ப்ரேக் போட்டள்..
அதில் கீழ விழப் போன மது சமாளித்து அமர்ந்து ஏன் நிறுத்தினாள் என்று முன்னாடி பார்த்தாள்..
அங்கு டிராபிக் போலிஸ் இவர்களின் வண்டியை மறித்தவாறு நின்று முறைத்து கொண்டிருந்தார்...
சந்தியா எப்படியாவது தப்பித்து போய்டலாம் என்று வழி தேட இவளின் எண்ணம் புரிந்தவராக ஸ்கூட்டியின் சாவியை உடனே எடுத்து கொண்டார்...
“ஹ்ம்ம்ம் இதில் எல்லாம் பாஸ்டா இருங்க.. ஒரு திருடன பிடிக்க மட்டும் ஸ்லோவா போங்க... ”என்று மனதிற்குள் திட்டிய சந்தியா வண்டியை நிறுத்தி கீழ இறங்கினாள்...
மதுவும் உடனே இறங்கினாள்..
“எங்க ஹெல்மெட்..?? “என்று முறைத்தார்...
“இதோ இருக்கு சார்.. “என்று தன் தலையில் இருந்து கழட்டி கையில் வைத்திருந்த ஹெல்மெட்டை காட்டினாள் சந்தியா...
“அது தெரியுது...பின்னால் உட்கார்ந்திருந்த பொண்ணோட ஹெல்மெட் எங்க ??” என்றார் முறைத்தவாறு...
“அதான் சார் இது...” என்று அசடு வழிந்தாள் சந்தியா...
“ஏம்மா... உன் மொக்க காமெடிய கேட்கவா நாங்க இந்த வேகாத வெய்யில்ல இப்படி நடு ரோட்ல நின்னுகிட்டிருக்கோம்.. “ என்றார் கடுப்பாகி...
“சார்....கொஞ்சம் அவசரமா போகனும்... அதான் மறந்துட்டு வந்திட்டோம்..” என்று மீண்டும் அசடு வழிந்தாள் சந்தியா...
“ஹ்ம்ம்ம் அவசரமா போகனும் னு இப்படி ஹெல்மெட் போடாம வண்டி ஓட்டினா நீ அவசரமா மேல போய்டுவ.. பரவாயில்லையா ?? சரி.. அதெல்லாம் இருக்கட்டும்.. முதல்ல லைசென்ஸ் எடு “ என்றார்...
“ஐயோ!! லைசென்ஸா ?? ... நான் வெறும் LL (Learning License) மட்டும் தான் அப்பளை பண்ணி இருந்தேன்.. அதுவும் தேதி முடிந்து விட்டது.. இன்னும் லைசென்ஸ் வாங்கலையே... இதை எப்படி இவர் கிட்ட சொல்றது?? “ என்று முழித்தவள் தன் பையில் கையை விட்டு தேடுவது மாதிரி நடித்தாள்....
பின் அவரை பார்த்து
“சாரி சார்... மறந்து அதையும் வீட்லயே வச்சுட்டு வந்திட்டேன்.. இந்த ஒரு தரம் விட்டுடுங்க சார்.. இனிமேல் இந்த மாதிரி செய்ய மாட்டோம்” என்று கெஞ்சுவதை போல நடித்தாள் சந்தியா....
இதே டயலாக்கை போனவாரம் ECR சாலையில் சொன்னது நினைவு வரவும் மனதிற்குள் சிரித்து கொண்டாள் சந்தியா...
மதுவுக்கோ கை கால்கள் நடுங்க ஆரம்பித்தன.. அவளுக்கு போலிஸை கண்டாலெ அலர்ஜி...இவர் வேறு அவர்களை பார்த்து முறைத்து கொண்டு நிக்க உள்ளுக்குள் உதற ஆரம்பித்தாள்... சந்தியாவின் சமாளிப்பை கண்டு கொள்ளாதவர்,
“அப்ப பைன் கட்டுங்க....ஹெல்மெட் போடாததற்கும் லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டினதுக்கும் சேர்த்து 500 ரூபாய் பைன்...” என்றார்...
சந்தியாவிற்கு தலை சுத்தியது..
மதுவோ
“அடிப்பாவி.. நான் ஆட்டோல போயிருந்தா வெரும் 150 ரூபாய் தான் ஆகி இருக்கும்.. இப்ப 500 கட்டற மாதிரி ஆயிடுச்சே” என்று சந்தியாவை முறைத்தாள்...
“சார் சார் சார்.. எங்ககிட்ட அவ்வளவு கேஷ் இல்லை சார்.. ”என்று மழுப்பினாள் சந்தியா..
“பரவால மா... கிரெடிட் கார்ட், ஏடிம் கார்ட் இருக்கா.. நாங்க எல்லா கார்ட் ம் வாங்குவோம்.. ஏன் Paytm கூட உண்டு... எது வசதி?? ” என்றார்...
“ஐயோ.. டிராபிக் பைன் கட்டறதுக்கெல்லம் கார்ட் பயன் படுத்தற அளவுக்க நம்ம நாடு முன்னேறிடுச்சா?? .. மோடி ஜீ சொல்ற டிஜிட்டல் இந்தியா வா அதுக்குள்ள மாறிடுச்சா?? இப்ப எப்படி சமாளிப்பது?? “ என்று அவசரமாக யோசித்தவள்..
“சார்.. சார்... இவள் ஹஸ்பன்ட் கூட போலிஸில் இருக்கார் சார்.. அதனால கொஞ்சம் தயவு பண்ணி விட்டுடுங்க சார்.. ” என்று அடுத்த காரணத்தை சொன்னாள் சந்தியா..
“என்னமா இது?? ஏடிசி பஸ் ல வேலை செஞ்சா அவர்களுக்கு குடும்ப பாஸ் னு தருவாங்க.. அத வச்சு அந்த குடும்பமே பஸ் ல ப்ரியா போலாம்...
அது மாதிரி, போலிஸ்ல இருந்தா ஹெல்மெட் போடக்கூடாது,.. லைசென்ஸ் தேவை இல்லைனு சட்டம் இருக்கா?? அதெல்லாம் செல்லாது.. நீ முதல்ல பைன கட்டு..” என்று தன் காரியத்திலயே கண்ணாக இருந்தார்...
“சார்.. வேணா ஒரு 100 ரூபாய் மட்டும் வாங்கிட்டு விட்டுடுங்க சார்ர்... “ என்று மெதுவாக சொன்னாள் சந்தியா..
“என்னது??? லஞ்சமா?? ஏம்மா .. படிச்ச பொண்ணு தான.. நீயே லஞ்சம் கொடுக்கலாமா?? உங்களை மாதிரி நாலுபேர் இருக்கிறதால தான் லஞ்சம் வாங்காதவன் கூட வாங்க ஆரம்பிச்சுடறான்..
எங்க ACP சார் வந்ததுக்கப்புறம் ஒரு பயலும் லஞ்சம் வாங்கறது இல்லை தெரியுமா...
இரு.. லஞ்சம் கொடுக்க முயன்றதுக்கும் சேர்த்து பைன் போடறேன் “என்று தன் நோட்டை எடுத்து பில்லை எழுத ஆரம்பித்தார்....
“சார்.. சாரி சார்...சாரி சார்.. அவள் ஏதோ தெரியாமல் சொல்லிட்டா.... எங்களை விட்டுடுங்க சார்… “ என்றாள் இதுவரை அமைதியாக பயந்து நின்று கொண்டிருந்த மது...
“அதெல்லாம் முடியாது மா ... ரூல்ஸ் னா ரூல்ஸ் தான்.. பைனை கட்டிட்டு நகருங்க “ என்று முறைத்தார்...
“சார்... இவள் ஹஸ்பன்ட் கிட்டயே சொல்லி உங்களை என்ன செய்றோம்னு பாருங்க... பொண்ணுங்கனு கூட பார்க்காம இப்படி நடு ரோட்ல வச்சு வம்பு பண்ணிகிட்டிருக்கீங்க... “ என்று கோபத்தில் குதித்தாள் சந்தியா...
“நீ என்ன வேணும்னாலும் பண்ணுமா... எங்க ACP சார் சொல்லி இருக்கார்... யார் ரூல்சை பாலோ பண்ணலைனாலும் பைன் போட சொல்லி இருக்கார்... அதுவும் முக்கியமா பொண்ணுங்க பாலோ பண்ணலைனா டபுளா போட சொல்லி இருக்கார்...
இப்ப நீ பைன கட்டு.. இல்லைனா நீ கோர்ட்டுக்கு வந்து பைன கட்டிட்டு வண்டிய எடுத்துக்கோ... இப்ப வண்டிய விட்டு நகரு ... “ என்று அவள் வண்டியின் மேல் கை வைத்தார் அந்த டிராபிக் போலிஸ்....அவர் கோர்ட் என்று சொன்னதும் கொஞ்சம் பயந்தவள்
“யாருய்யா உங்க ஏசிபி சார்?? ... சரியான லூசு ஏசிபி போல...” என்று முனகியவள் அடுத்து என்ன செய்வது என்று முழித்து கொண்டிருதாள் சந்தியா..
அப்பொழுது
“என்ன இங்க கலாட்டா ?? ..” என்று ஒரு நெடியவன் வந்து நின்றான் அங்கே...
“ஆமா... இங்க செந்தில் கவுண்டமணி வாழைப்பழ சண்டை நடக்குது... இவர் அந்த கோவை சரளா மாதிரி என்ன இங்க சண்டை னு நாட்டாமை பண்ண வந்துட்டார்..” என்று பொறுமியவள் நிமிர்ந்து அந்த நெடியவன பார்த்தாள் சந்தியா..
ஆறடி உயரத்தில் அடர்ந்த மீசையும் இறுகிய முகமும் சிரிக்க மறந்த கண்களுடன் தீர்க்கமாக பார்த்தான் அவர்கள் இருவரையும்...
அவனை கண்டதும் அந்த டிராபிக் போலிஸ் சல்யூட் ஒன்றை அடித்து விரைத்து நின்றார்...
“சாரி சார்.. இவங்க ஹெல்மெட் போடாமல் வந்தாங்க... லைசென்ஸ் ஐ கேட்டால் அதுவும் இல்லை... அதான் பைன் ஐ கட்டுங்கனு சொன்னா எனக்கே லஞ்சம் கொடுக்கறாங்க.... அதான் கோர்ட்ல வந்து வண்டியை வாங்கிக்க சொல்லி கிட்டிருக்கேன்...
அதோடு அவங்க ஹஸ்பன்ட் போலிஸ் ஆம்.. அதனால விட்டுட சொல்றாங்க “ என்று சந்தியா சொன்ன அனைத்தையும் ஒப்புவித்தார் அந்த நெடியவனிடம்...
அதை கேட்டதும் அவன் கண்கள் இடுங்க
“எந்த ஸ்டேஷன் உங்க ஹஸ்பன்ட்?? “ என்றான் சந்தியா வை பார்த்து.. அவனின் அந்த கூறிய பார்வைக்கு மருண்டு
“என் ஹஸ்பன்ட் இல்லை சார்.. எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலை.. இதோ இங்க நிக்கறாளே இவ ஹஸ்பன்ட் தான் போலிஸ் சார்... “ என்றாள் சந்தியா..
ஏற்கனவே பயந்து கொண்டிருந்த மது அந்த நெடியவனையும் அவனின் கோப பார்வையும் கண்டு இன்னும் நடுங்க ஆரம்பித்து இருந்தாள்...
“சரி... உங்க பிரெண்ட் ஓட ஹஸ்பன்ட் எந்த ஸ்டேஷன்?? “ என்றான் மதுவை பார்த்தவாறே
“ஹே.. எந்த ஸ்டேஷன் டீ ?? ...” என்று மதுவின் காதை கடித்தாள் சந்தியா
“எனக்கு தெரியாது டீ.. “ என்றாள் மதுவும் தலையை குனிந்தவாறு
“சுத்தம்ம்ம்.. உன்னை நம்பி நான் வேற கெத்தா சொல்லிட்டேன்... உன் ஹஸ்பன்ட் வேலை செய்யற ஸ்டேஷன் கூடவா உனக்கு தெரியாது.. மந்தி “ என்று திட்டினாள் சந்தியா...
மந்தி எனவும் அவளை பார்த்து முறைத்தாள் மது ..
“ ஆமா.. இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை...முக்கியமான தெல்லாம் தெரிஞ்சு வச்சுக்காத..” என்று முறைத்தவள் அவளே அவசரமாக யோசித்து
“அது.... மயிலாப்பூர் சார் “ என்று தனக்கு வாயில் வந்ததை சொன்னாள் சந்தியா..
“ஆமா... அவர் பேரு என்ன?? “ என்றான் அவனும் விடாமல்...
“ஐயோ!! இப்படி விடாமல் நோண்டி நோண்டி கேட்கறானே.. இதுக்கு அந்த சின்ன போலிஸ் ஏ பரவாயில்லை போல.. அவர் காசுலதான் குறியா இருந்தார்....
இந்த லூசு அவ புருசன் பேரையாவது தெரிஞ்சு வச்சிருக்காளோ என்னவோ?? “ என்று திட்டிகொண்டே
“ஹே.. லூசு மந்தி.. உன் புருசன் பேரையாவது தெரிஞ்சு வச்சிருக்கியா?? அதையாவது சொல்லித் தொலை.. “ என்று சிடுசிடுத்தாள் மதுவை பார்த்து... அதில் கடுப்பான மது
“விருமாண்டி.... “ என்று உரக்க சொன்னாள் அந்த நெடியவனுக்கும் கேட்குமாறு
“விருமாண்டி யாம் சார்.. “ என்றாள் சந்தியாவும்..
“ஹ்ம்ம்ம் அப்ப அந்த விருமாண்டி ஐ வந்து வண்டியை வாங்கிட்டு போக சொல்...” என்று முறைத்தான்...
“சார் சார் சார்... அவளுக்கு இப்பதான் சார் கல்யாணம் ஆகி இருக்கு... இப்ப போய் அவ ஹஸ்பன்ட் ஐ எதுக்கு சார் கோர்ட்டுக்கு எல்லாம் அலய விடறீங்க...அதோட அவர் பெரிய சின்சியர் சிகாமணி சார்...
கல்யாணம் ஆகி மூனே நாள் ல அவர் பொண்டாட்டிய இப்படி தனியா அனுப்பிட்டு அவர் டூட்டிய பார்க்க போய்ட்டாருனா பாருங்களேன்... “என்று சந்தியா தன் கதையை அளந்து விட்டு கொண்டிருக்க, மதுவோ சந்தியாவின் கையை கிள்ளி கண்ணால் ஏதோ ஜாடை செய்ய, அதை கண்டு கொள்ளாமல் தன் கதையை அள்ளி விட்டு கொண்டிருந்தாள்...
“ஹ்ம்ம்ம் அப்படி பட்டவரை போய் கோர்ட்க்கெல்லாம் அலைய சொன்னா இவள தான் சார் திட்டுவார்....அதனால கொஞ்சம் தயவு பண்ணி விட்டுடுங்க சார்... “ என்றாள் பாவமாக...
“ஆமா நீயே பேசி கிட்டிருக்கியே.. உன் பிரெண்ட் பேச மாட்டாளா?? “ என்றான் மதுவை முறைத்து பார்த்தவாறு...
“சார்... அவ கல்யாணம் ஆகி மூனே நாள் ஆன புது பொண்ணு சார்.. அதனால கல்யாண வெக்கம் இன்னும் போகலை சார்... “ என்று அசடு வழிந்தாள் சந்தியா...
அதை கேட்டு தன் சிரிப்பை முயன்று அடக்கி கொண்டவன்
“ஹ்ம்ம் அப்ப இரண்டு பேரும் சேர்ந்து பைனை கட்டுங்க...” என்றான் விடாமல்
“ஷ் அப்பா.... திரும்பவும் முதல்ல இருந்தா?? பைனை கட்டாமல் விட மாட்டான் போல இருக்கே... அந்த பைனை கட்டறதா இருந்தா நான் எப்பயே கட்டிட்டு போயிருப்பேனே.. எதுக்கு இவ்வளவு கதைய யோசிச்சு சொல்லி கிட்டிருக்கேனாம்...
நான் சொன்ன கதை எல்லாம் டீ.வீ சீரியல் டைரக்டர் கிட்ட சொல்லி இருந்தால், அதையே 1000 நாள் மெகா சீரியல் ஆக்கியிருப்பாங்க... .ஒரு 500 ரூபாய்க்காக இப்படி கெஞ்ச வைக்கிறானே... படுபாவி... “ என்று மனதுக்குள் திட்டியவள்
“சார்...எங்ககிட்ட பணம் இல்லை சார்... நான் வேணா நாளைக்கு வந்து பைன் கட்டறேன் சார்... தினமும் இந்த வழியாதான் போவேன் சார்... நீங்க ரெசிப்ட் போட்டு கொடுங்க.. நான் வந்து நாளைக்கு மறக்காமல் கட்டிடறேன் சார்.. “ என்று இளித்தாள்...
அதை கேட்டு சிறிது யோசித்தவன், பின் தன் வாலட்டை எடுத்து அதில் இருந்த பணத்தை எடுத்தவன்
“Mr. டேவிட்... இந்தாங்க.. அவங்க கட்ட வேண்டிய பைன்... ஒரு ரெசிப்ட் போட்டு கொடுங்க....
இந்தா பொண்ணே.. உங்களுக்காக நான் கட்டறேன்.. இந்த காசை திருப்பி கொடுத்தறனும் ... சரியா ?? .. அப்புறம் இனிமேல் ஹெல்மேட் ஓ லைசென்ஸோ இல்லாம எங்கயாவது பார்த்தேன்... பைன் எல்லாம் கிடையாது. நேரா வண்டி கோர்ட் லதான் நிக்கும்... என்ன புரிஞ்சுதா...?? “ என்று அதட்டினான்..
“ சரி சார்.. “ என்று சந்தியா மட்டும் தலையை வேகமாக ஆட்டினாள்.... மது இன்னும் குனிந்தவாறே இருந்தாள்..
“ரொம்ப தாங்க்ஷ் சார்... அப்புறம் இந்த காசை எப்படி உங்களுக்கு திருப்பி கொடுக்கிறது?? “ என்றாள் சந்தியா சந்தேகமாக
“ஹ்ம்ம்ம் உன் பிரெண்டுக்கு என் வீட்டு அட்ரஸ் தெரியும்.. அவ கிட்ட கேட்டு வந்து கொடு.... இப்ப இரண்டு பேரும் கிளம்புங்க.. எங்கயும் சுத்தாம நேரா வீடு போய் சேரணும்.. என்ன புரிஞ்சுதா ?? “ என்று விரட்டினான்...
விட்டால் போதும் என்று இருவரும் வேகமாக அங்கிருந்து நகர்ந்து பின் தன் வண்டியை எடுத்து விரட்டினாள் சந்தியா...சிறிது தூரம் சென்றதும்
“வாவ்.. சூப்பரா இருக்கார் டி அந்த நெட்டை...பெரிய போலிஸ் போல.. அந்த சின்ன போல்ஷ் அவருக்கு சல்யூட் எல்லாம் அடிக்கிறாரே...
ஹ்ம்ம்ம் எனக்கு மட்டும் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சா இவரை தான் கட்டிப்பேனு ஒத்த கால் ல நின்னிருப்பேன்.. “ என்று வழவழத்தபடி வந்தாள் சந்தியா..
மது அமைதியாக வரவும்
“என்னடி மந்தி சைலன்ட் ஆகிட்ட??.. ஒ அந்த நெட்டை மிரட்டினத வச்சு பயந்துட்டியா?? அரசியல் ல இதெல்லாம் சாதாரணம் டீ... ரோட் ல வண்டி ஓட்டினா இந்த மாதிரி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கும்....
அப்புறம்... சரியான லூசு டீ அந்த நெட்டை.. நம்மளை நம்பி 500 ரூபாய் ஐ தூக்கி கொடுத்திருக்கு... நாம எங்க திருப்பி தரவா போறோம்...இவ்வளவு ரூல்ஸ் பேசறவர் கடைசியில ஏமாந்துட்டாரே... ” என்று சிரித்தவள் ஏதோ நினைவு வர
“ஹே மந்தி... அவர் அட்ரஸ் உனக்கு தெரியும் னு தான சொன்னார்.... நிஜமாகவே அவர் அட்ரஸ் உனக்கு தெரியுமாடி...?? “ என்றாள் சந்தேகமாக
மது இப்பொழுதும் அமைதியாகவே இருந்தாள்
“ஹே மந்தி... வாயில என்ன கொலுக்கட்டையா வச்சிருக்க....ஒருத்தி இவ்வளவு தூரம் கத்திகிட்டே வர்ரேன்.. கல்லு பிள்ளையார் மாதிரி வாய திறக்காமல் அப்படியே உட்கார்ந்து இருக்க... சொல்லுடி அவர் அட்ரஸ் உனக்கு தெரியுமா???” என்று முறைத்தாள் சந்தியா
“ஹ்ம்ம்ம் “ என்று முனகினாள் மது
“எப்படி டீ ... ?? அப்ப யார் அவர் னு தெரிஞ்சிருக்கும் இல்ல.. சொல்லு டீ யார் அது?? “ என்றாள் சந்தியா ஆர்வமாக... சிறிது நேரம் அமைதியாக இருந்த மது மெல்ல தன் வாயை திறந்து
“ஹ்ம்ம்ம் என் ஹஸ்பன்ட் “ என்றாள் மது
அதை கேட்டதும் சடர்ன் ப்ரேக் போட்டாள் சந்தியா அதிர்ச்சியில்....
அவள் திடீரென்று வண்டியை நிறுத்தவும் பின்னால் வந்த இன்னொரு மோட்டார் பைக் ல் வந்தவன் வேகமாக ப்ரேக் போட்டு அவர்கள் வண்டி மேல் மோதாதவாறு தடுமாறி நிறுத்தியவன் கோபமாக இவர்களை பார்த்து..
“ஏம்மா ரெண்டு பேரும் வீட்ல சொல்லிட்டு வந்திட்டீங்களா ?? இல்ல அவங்களே தண்ணி தொலிச்சு விட்டுட்டாங்களா?? . இப்படி நடு ரோட்ல வண்டிய திடீர்னு நிறுத்தற... இந்நேரம் நான் பிரேக போடாம விட்டிருந்தா என்ன ஆகி இருக்கும்?? “ என்று திட்டினான்..
“சாரி ணா.. வண்டி திடீர்னு நின்னு போய்டுச்சு.. அதான்.. “ என்று அசடு வழிந்தாள் சந்தியா
“சரி.. சரி பாத்து பத்திரமா வீடு போய் சேருங்க.. “ என்றவாறு தன் வண்டியை ஸ்டார்ட் பண்ணி கிளம்பி சென்றான்...
“போடா டேய்...உன்ன மாதிரி எத்தன பேர பார்த்திருப்பேன்.. இந்த வண்டிய ஓட்ட ஆரம்பிச்சதுல இருந்து எத்தன பேர்கிட்ட திட்டு வாங்கி எல்லாம் பழகி போச்சு... “ என்று சிரித்து சமாளித்தவள் பின் தன் வண்டியை ஸ்டார்ட் பண்ணினாள்...
சந்தியா வேகமாக நிறுத்தியதில் பயந்துபோன மது அவள் வண்டியில் ஏற மறுத்து ஆட்டோவில் போவதாக சொல்ல, சந்தியா அவளை வற்புறுத்தி அவள் வண்டியில் அமர்த்தி அதன் பிறகு மெதுவாக ஓட்டினாள்...
சிறிது தூரம் சென்றதும் அருகில் இருந்த ஐஸ் கிரீம் கடையில் தன் வண்டியை நிறுத்தினாள் சந்தியா..
அதை கண்ட மது பதறி
“ஹே.. இங்க எதுக்கு டி நிறுத்தற?? .. நான் வீட்டுக்கு போகணும்.. ” என்றாள் மது
“ஹ்ம்ம்ம் அதெல்லாம் அப்புறம் போய்க்கலாம்.. முதல்ல உன் கதைய சொல்லு... “ என்று அவளை உள்ளே அழைத்து சென்று ஒரு டேபிலில் அமர்ந்தனர் இருவரும்....
தங்களுக்கு வேண்டிய ஐஸ் கிரீமை ஆர்டர் பண்ணிட்டு மதுவிடம் திரும்பிய சந்தியா
“ஹ்ம்ம்ம் இப்ப சொல்லுடி உன் கதையை.. “என்றாள் ஆர்வமாக
“என்ன கதை டீ “ என்றாள் மதுவும்
“ஹே.. அவர் யாரு டீ?? நிஜமாலுமே அவர்தான் உன் ஹஸ்பன்ட் ஆ?? ..ஹஸ்பன்ட் னா எப்படி?? கொஞ்சம் புரியற மாதிரி விளக்கமா சொல்.... “ என்றாள் சந்தியா....
“ஹ்ம்ம்ம் ஹஸ்பன்ட் னா... என் கழுத்துல இருக்கே இந்த லைசென்ஸ்... இதை கட்டியவர் னு அர்த்தம்.. போதுமா விளக்கம்...” என்று தன் மாங்கல்யத்தை எடுத்து காட்டி குறும்பாக சிரித்தாள் மது....
சந்தியாவோ இன்னும் குழம்பி
“அப்புறம் ஏன் உன்னை தெரியாத மாதிரி காட்டி கிட்டார்...?? நீயும் ஏன் உன் புருசன பார்த்து வாய திறக்கல?? நீ ஏன் அவ்வளவு தூரம் தனியா வந்த?? “ என்று கேள்விகளை அடுக்கியவள் மேலும் தன் மூளையை கசக்கி யோசித்தவள்
“ஹேய்.. இரு.. இரு.. உன் இன்விடேசன் ல மாப்பிள்ளை சாப்ட்வேர் எஞ்சினியர் னு தான போட்டு இருந்தது.. பின்ன எப்படி போலிஸ்..??
ஐயோ!! தலைய பிச்சுக்கலாம் போல இருக்கு...சீக்கிரம் சொல்லித்தொலை டி “ என்று முறைத்தாள் சந்தியா... அவளின் குழம்பிய முகத்தை கண்ட மது
“ஹா ஹா ஹா “ என்று சிரித்தவள்
“சரி.. இரு சொல்லி தொலைக்கிறேன்.. இத கேட்டு கேட்டு இல்ல சொல்லி சொல்லி எனக்கு புளிச்சு போயிருச்சு.. அந்த புளிச்சு போன கதைய உனக்கும் சொல்றேன்...கேள்..” என்று நிறுத்தியவள் தன் கதையை தொடர்ந்தாள்
“எனக்கு திருமணம் நிச்சயம் ஆனது இந்த சிடுமூஞ்சியோட தம்பிக்கு... அந்த தம்பி.. தொம்பி கல்யாணத்தன்று யாருக்கும் தெரியாமல் ஓடி போய்ட்டான்.. எல்லாரும் சேர்ந்து இந்த சிடுமூஞ்சியை இன்ஸ்டன்ட் மாப்பிள்ளை ஆக்கி அவரை எனக்கு கட்டி வச்சுட்டாங்க..
போதுமா...?? . இன்னும் விளக்கம் வேணுமா..?? “ என்றாள் சிரித்தவாறு..
“ஆங்... எப்படி டீ இவ்வளவு சாதாரணமா சொல்ற... உனக்கு வருத்தமா இல்லையா...?? “என்றாள் சந்தியா மதுவை பாவமாக பார்த்தவாறு
“ஐயோ சாமி.. எனக்கு ஒரு வருத்தமும் இல்லை .. அந்த தொம்பி ஓடிபோனதும் கல்யாணம் நின்றிருந்தா இன்னும் சந்தோஷமா இருந்திருப்பேன்...” என்றாள் மது முகத்தில் விரக்தியுடன்
“ஹா ஹா ஹா செம இன்ட்ரெஸ்டிங் ஆ இருக்குடி... வழக்கமா இந்த சினிமா வுல காமிக்கற மாதிரி அக்கா ஓடி போய்ட்டா அடுத்து இருக்கிற தங்கச்சிய புடிச்சு கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க...
உன் கதைல வித்தியாசமா தம்பி கம்பி நீட்ட, பாவம் அண்ணன் மாட்டிகிட்டாரே...
ஆமா.. ஏன் அந்த தொம்பி ஓடி போய்ட்டான்..?? இந்த பால் வடியும் அழகு முகத்தை பார்த்துமா அவனுக்கு ஓடி போக மனசு வந்தது?? “ என்று மதுவின் முகத்தை வருடினாள் சந்தியா...
அவள் கையை தட்டிவிட்டு முறைத்தாள் மது...
“ஆனாலும் நீ ரொம்ப லக்கி டீ...நம்ம மாம்ஸ் செமயா ஹான்ட்ஸம் ஆ தான் இருக்கார்...என்ன கொஞ்சம் சிடுசிடு னு இருந்தாலும் காக்க காக்க சூர்யா மாதிரி சூப்பரா இருக்கார்...”என்று கண்ணடித்தாள் சந்தியா...
“ஆமா... வீட்லயும் சிடுமூஞ்சியாதான் இருக்காரா?? இல்ல ரொமான்டிக் ஹீரோ வா” என்றாள் சந்தியா சிரித்தவாறு
"ஆமா ... இந்த சிடுமூஞ்சி அப்படியே ரொமான்ஸ் பண்ணிட்டாலும்...” என்று மனதுக்குள் திட்டியவள்
“வீட்லயும் எல்லாரையும் கடிச்சுகிட்டே தான் இருப்பார் .. நானாவது பரவாலை டி.. பாவம் அகிலா.... “
“ யார் டி அது அகிலா..?”
“ஹ்ம்ம்ம் என் நாத்தனார்.. இந்த சிடுமூஞ்சியோட தங்கச்சி.. அவள் இவரை பார்த்தாலே ஓடி போய் ஒளிஞ்சுக்குவா... எப்ப பார் அவளை வருத்து எடுத்துகிட்டே இருக்கும்...
அதுவும் நான் மட்டும் தனியா மாட்டினேன்.. அவ்வளவுதான்...” என்று சிரித்தாள்
“ஹா ஹா ஹா... செம இன்ட்ரெஸ்டிங் டீ... “ என்று கூட இணைந்து சிரித்தாள் சந்தியாவும்
“ஹேய்.. நான் என்ன காமெடியா சொல்லி கிட்டிருக்கேன்...நீ சிரிக்க.. சரி சரி வா போகலாம்.. அத்தை தேடிகிட்டு இருப்பாங்க…” என்றாள் மது
“ஐயோ.. நான் பாட்டுக்கு அவர் தான் உன் ஹஸ்பன்ட் னு தெரியாம என்னென்னவோ கதை அடிச்சேனே... நீயாவது சொல்லி தொலைக்க வேண்டியதுதான??” என்று முறைத்தாள் சந்தியா..
“ஹீ ஹீ ஹீ ... நான் தான் உனக்கு ஜாடை காமிச்சேன் இல்ல.. நீ பாட்டுக்கு என்னை கண்டுக்காம உன் கதையை அள்ளி விட்டுகிட்டிருந்த..நானும் விட்டுட்டேன்...” என்று சிரித்தாள் மது ...
“ஹ்ம்ம்ம்ம் ஆனாலும் நான் ஒன்னு கவனிச்சேன் டி.. உன் ஆளு எங்கிட்ட பேசினாலும் பார்வை மட்டும் உன்கிட்டயே இருந்தது..உன்னையே தான் சைட் அடிச்சிகிட்டு இருந்தார்... அப்பயே எனக்கு உறைச்சிருக்கனும்.... “என்று கண் சிமிட்டி சிரித்தாள் சந்தியா
“ஹ்ம்ம்ம் நான் ஏதாவது பேசுவேன்.. கடிச்சு குதறலாம்னு காத்துகிட்டு இருந்திருக்கும்.. அதான் நான் வாயே திறக்கலை.. “ என்றாள் மது
“ஆனாலும் பயங்கர ரூல்ஸ் பேர்வழி போல.. பொண்டாட்டி கிட்ட கூட பைன் வாங்கறாரே.. ஆமா இவர் ட்ராபிக் போலிஸ் ஆ டி??..” என்றாள் சந்தியா
“எனக்கு தெரியாது டி..” என்று தலையை அட்டினாள் மது
“சுத்தம்.. முதல்ல அதை தெரிஞ்சுக்கோ.. புருஷன் எங்க வேலை செய்யறானு தெரியாதுனு சொன்ன முதல் பொண்டாட்டி நீ தான் டி” என்று சிரித்தாள் சந்தியா....
அவளை பார்த்து மது முறைக்கவும் பின் இருவரும் சிரித்து கொண்டே கிளம்பி வீட்டிற்கு சென்றனர்....
அவள் வீட்டை அடைந்ததும் வாசலிலயே இறக்கிவிட்டாள் சந்தியா...வீட்டின் முன்னால் அந்த பிரமாண்ட கேட்டை பார்த்ததும் மலைத்து நின்றாள் சந்தியா...
“ஹே மந்தி... பெரிய இடமா தான் உங்கப்பா பிடிச்சிருக்கார் போல... வீட்டு கேட்டே இவ்வளவு பெருசா இருக்கே... நிஜமாலுமே இது உன் புகுந்த வீடு தானா?? இல்ல அட்ரஸ் மாறி வந்திட்டமா?? “ என்றாள் சந்தேகமாக....
மதுவிற்கே இப்ப அந்த சந்தேகம் தான்... காலையில் செல்லும் பொழுது இவ்வளவு பெரிய கேட் இல்லையே... அதோடு கேட்டின் முன்னால் நின்றிருந்த முறுக்கு மீசையுடன் ஆன security guard ஐ பார்க்க, காலையில் இவரை பார்த்த மாதிரி இல்லையே என்று முழித்தாள் மது...
“ஹே மந்தி.. நீ முழிக்கிறத பார்த்தா கண்டிப்பா இது உன் வீடு இல்ல போல இருக்கு... எங்க அந்த அட்ரசை மறுபடியும் கொடு.. “என்று வாங்கி சரிபார்க்க அது இதே வீட்டை காண்பிக்க சந்தியாவும் குழம்பி போனாள்...
அப்பொழுது நிமிர்ந்து வீட்டை பார்க்க, அங்கு அகிலாவின் அறை தெரிய இது அவள் வீடுதான் என மதுவுக்கு தெளிவானது...
“இந்த வீடு தான் டி.. காலையில் கேட் திறந்திருந்ததால சரியா கவனிக்கல...” என்று சமாளித்தாள்..
“சரி உள்ள வாடி.. “என்று மது சந்தியாவை அழைத்தாள்
“இன்னொரு நாள் வர்ரேன் டீ...கல்யாணம் ஆனவளை பார்க்க வெறும் கையோட வரக்கூடாது.. நான் அப்பா அம்மாவோட இன்னோரு நாள் வர்ரேன்... என் மாம்ஸை பார்க்கவாது அடிக்கடி வருவேன்.. டோன்ட் வொர்ரி.. “ என்று கண்ணடித்து கிளம்பி சென்றாள்...
மதுவும் சிரித்து கொண்டே கேட்டை நோக்கி போனாள்.. அவளை கணடதும் அந்த security சல்யூட் வைத்து கேட்டை திறந்து விட, ஒரு விநாடி அதிர்ந்து போனாள்... அதற்குள் சமாளித்து கொண்டு அவரை பார்த்து மெல்ல புன்னகைத்து உள்ளே சென்றாள்...
வீட்டிற்கு உள்ளே வந்த மது வை சிவகாமி வந்து கட்டி கொண்டார்...
“எப்படி மருமகளே... உன் அனுபவம்.. என் மருமக தனியாவே போய்ட்டு வந்து கலக்கிட்டாளே...” என்று உச்சி முகர்ந்து அவளுக்கு குடிக்க கொண்டு வந்து கொடுத்தார்...
அவளும் அருகில் இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டு
“ஹ்ம்ம்ம் சூப்பரா இருந்துச்சு அத்தை... கொஞ்சம் பயமாதான் இருந்தது.. “ என்று தான் ஆட்டோவில் சென்றதில் இருந்து பயிற்சி மையத்தில் அவள் பயந்ததில் இருந்து அப்புறம் ட்ராபிக் ல் மாட்டியது வரை எல்லாம் தன் மாமியாரிடம் சொல்லி முடித்தாள்....
சிவகாமியும் ஆர்வமுடன் அவள் சொல்வதை கேட்டு கொண்டிருந்தவர்
“ஓ.. நீ பெரியவன வழியில பார்த்தியா?? பாரேன் அதான் போன் பண்ணி விசாரிச்சானா?? “ என்றார்...
“என்ன அத்தை சொல்றீங்க?? அவர் போன் பண்ணி என்னை பத்தி விசாரிச்சாரா?? “ என்றாள் ஆர்வமாக...
“ஹ்ம்ம்ம் இப்பதான் 10 நிமிடம் முன்னாடி உன் புருஷன் போன் பண்ணி உன்னை பற்றி விசாரிச்சான்…எனக்கு ஒரே அச்சர்யம்...
அதிசயமா பொண்டாட்டியை பத்தி அக்கரையா விசாரிக்கறானெனு.. ஒருவேளை மனசு மாறிட்டானோனு நினச்சு, சந்தோசத்துல அந்த முருகனுக்கு பால் அபிஷேகம் கூட பண்றதா வேண்டிகிட்டேன்... பார்த்தால் நீ வீட்டுக்கு வந்திட்டியானு கேட்கத்தான் போன் பண்ணி இருக்கான்...
முருகா... இன்னும் அவன் மனசு மாறலயா?? அப்ப உனக்கு பால் அபிஷேகம் கட்...” என்று புலம்பினார் சிவகாமி...
“ஹா ஹா ஹா எனக்கு சேர வேண்டிய அந்த பால் அபிஷேகத்தை எப்படி வரவைக்கிறேனு பொருத்திருந்து பார் சிவா... “ என்று சிரித்துக்கொண்டான் அந்த சிங்கார வேலன்....
சந்தியா அருமையான தோழி
ReplyDeleteஅலப்பறை