தவமின்றி கிடைத்த வரமே-10



அத்தியாயம்-10

காலதேவன் அவன் கடமையை கண்ணும் கருத்துமாக செய்ய, கடிகார முட்கள் முன்பை விட அதி வேகமாக சுற்ற, அதற்குள் ஒரு வாரம் ஓடியிருந்தது...

இந்த ஒரு வாரத்தில் படு பிசியாக இருந்தான் வசீகரன்...

இப்பொழுது தான் இதய நோய் என்பது பொதுவான ஒன்றாக மாறிவிட்டது... தினமும் எத்தனை விதமான பேசன்ட்ஸ் இதயத்தில் பிரச்சனை என்று வருகிறார்கள்...

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரியான பிரச்சனை.. இதய அடைப்பு, இதயத்தில் ஓட்டை, இதய அழுத்தம், ஹார்ட் அட்டாக் என ஒரு இதயத்திற்கு பல வியாதிகளின் பெயர்களை வைத்து மருத்துவரை அணுகுகின்றனர் மக்கள்...

இதெல்லாம் எதனால் என்று ஆராய்ந்தால் உணவு பழக்கமும் அடுத்ததாக ஸ்ட்ரெஸ்(stress) என்று ஒரு வார்த்தையில் முடித்து விடுகின்றனர்....

ஸ்ட்ரெஸ்—என்ற வார்த்தை இப்பொழுது எல்லோர் வாயிலும் வரும் ஸ்லோகன் ஆக மாறிவிட்டது...

IT என்ற புதிய துறை அறிமுகமான பிறகு கடந்த 30 ஆண்டுகளில்தான் இந்த ஸ்ட்ரெஸ் என்ற ஸ்லோகன் ம் அறிமுகமானது போல...

ஆனால் இப்ப இருக்கிற தலைமுறையில் IT நிறுவனங்களில் வேலை செய்பவர்கலுக்கு தான் மனம் அழுத்தம் அதிகம் என்று இருந்த நிலை மாறி ஒவ்வொரு துறையிலுமே stress என்பது famous ஆகிவிட்டது....

எல்லா துறைகளிலும் இருக்கும் சேல்ஸ் டீம் க்கு டார்கெட் அச்சீவ் பண்ண வேண்டும் என்ற stress…மற்ற துறைகளிலும் தங்களுடன் பணிபுரியும் மற்றவர்களை விட சிறப்பாக வேலை செய்து நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற stress…

எம்ளாய்ஸ்க்கு மட்டு மின்றி சொந்தமாக ஒரு தொழிலை ஆரம்பித்து அது வளரும் ஆரம்ப நிலையில் பயங்கர மன அழுத்தம் என்றால் அந்த தொழில் வளர்ந்த பிறகும் அதை எப்படி நிலை நாட்டுவது என்பதில் ஸ்ட்ரெஸ்..

அதுக்கு உதாரணம் சமீபத்தில் நிகழ்ந்த இந்திய புகழ் பெற்ற Café Coffee Day ன் உரிமையாளர் சித்தார்த்தாவின் மரணம்..

அவ்வளவு பெரிய பிசினஸ் ஐ டெவலப் பண்ணியவரால் அதற்குமேல் இருக்கும் பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் உயிரை மாய்த்துக் கொண்டார்...

சரி.. அரசு அலுவலகங்களில் வேலை செய்பவர்களாவது நிம்மதியாக மன அழுத்தம் இன்றி வேலை செய்கிறார்களா என்றால் அதுவும் இல்லை...

சமீப காலங்களில் தமிழக அரசின் அரசு தேர்வுகளின் மூலம் நிறைய இளைய தலைமுறையினர் தேர்வாகி அரசு வேலைகளில் சேர்ந்தனர்...

யெங் ஜெனரேசன், இள இரத்தம்.... தான் பணி புரியும் இடத்தில் நீதி , நேர்மை, நியாயம் என்று கடைபிடித்து ஒரு சின்சியர் குடிமகனாக திகழ வேண்டும் என்ற குறிக்கோளுடன் உள்ளே நுழைகின்றனர்...

ஆனால் உள்ளே சென்றதும் ஒவ்வொரு டிபார்ட்மென்ட் லும் நடக்கும் குழறுபடிகளை கண்டதும் ஆரம்பத்தில் அதை கண்டு பொங்கி எழ, அதற்கு மேலிடத்தில் இருந்து அவர்களுக்கு சப்போட் கிடைக்காததோடு அந்த குளறுபடிக்கு அவர்களையும் சப்போர்ட் பண்ண சொல்லி கட்டாயபடுத்த, தங்கள் மனசாட்சி சொல்வதை கேட்பதா இல்லை மேலிடம் சொவதை கேட்பதா என்று குழம்பி மன அழுத்ததிற்கு ஆளாவோர் நிறைய பேர்....

கவர்ன்ட்மென்ட் ஜாப் என்று காலரை தூக்கி விட்டு கொண்ட நிலையும் தற்பொழுது மாறி வருகிறது....

( Sorry Friends… கொஞ்சம் அவுட் ஆப் சிலபஸ் போய்ட்டேன் போல.. ஹீ ஹீ ஹீ... வாங்க நம்ம டாக்டர் என்ன பண்றார் னு பார்க்கலாம்...)

இப்படி எல்லோரையும் பாதிக்கும் இந்த மன அழுத்தமும் அதனால் இதயத்திற்கு வரும் பாதிப்பையும் பற்றியதான ஒரு ஆராய்ச்சி கட்டுரையை ஆழ்ந்து படித்து கொண்டிருந்தான் வசீகரன்....

அதை படித்து சில குறிப்புகளையும் அவனுடைய நோட்சில் எழுதி கொண்டிருந்தான்...

அப்பொழுது அவன் அலைபேசி ஒலிக்க, அதை எடுத்து அதன் திரையை பார்க்கவும் அவன் முகத்தில் தானாக புன்னகை மலர்ந்தது....

அதை காதில் வைத்து தன்னவளின் குரலை கேட்கவும் அவன் இதயம் எகிறி குதித்தது....

இன்றோடு ஒரு வாரம் ஆகி விட்டது அவளை பார்த்து அவள் குரலை கேட்டு... கடந்த ஒரு வாரமாக பிசியாக இருந்ததால் அவளை அழைத்து பேச நேரமில்லை...

மலரும் அவள் அலுவலகத்தில் பிராஜக்ட் வொர்க்கில் பிசியாகி விட, அவனை அழைத்திருக்க வில்லை.....

அவள் குரலை கேட்டதும் குதித்த தன் இதயத்தை அடக்கியவன்

“ஹாய் ஜில்லு.. எப்படி இருக்க?? “ என்றான் உற்சாகமான குரலில்...

மறுமுனையில் அவளும் சிரித்து கொண்டே வழக்கமான நல விசாரிப்புக்கு பிறகு மாலை 7 மணிக்கு அவனை சந்திக்க வேண்டும் என்றாள்....

அவனுக்கு அடுத்த நாள் சர்ஜரிக்காக இன்னும் கொஞ்சம் தயார் பண்ண வேண்டி இருந்தது.... ஆனாலும் அவளே அழைக்க, அவனுக்குமே அவள் முகத்தை பார்க்க வேண்டும் போல இருக்க, உடனே சரியென்றான்....

தாங்கள் வழக்கமாக சந்திக்கும் இடத்திலயே சந்திக்கலாம்... என்று சொல்லி அலைபேசியை வைக்க, அதே நேரம் அறை கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாள் மித்ரா....

“ஹாய் டா... என்ன பிசியா?? ஒரு வாரமா ஆளை பார்க்கவே முடியலை.... “ என்று சிரித்துக் கொண்டே வந்தாள்...

அவள் வரும்பொழுது அவன் மலருடன் அலைபேசியில் பேசிவிட்டு அதை வைக்க அவன் முகத்தில் இருந்த புன்னகையை கண்டு கொண்டாள்..

அது ஏனோ வித்தியாசமாக இருந்தது.... அவசரமாக அவனை ஆராய, அந்த நொடியில் முற்றிலும் வேறாக தெரிந்தான்.... மித்ராவை கண்டதும் உடனே பழைய நிலைக்கு வந்திருந்தான்.....

அவன் முகத்தில் வந்து போன வித்தியாசமான உணர்வுகளை மித்ரா குறித்து கொண்டாள்...

“ஹாய்... மிது... எப்படி இருக்க?? ..அங்கிள் எப்படி இருக்கார் ??... கொஞ்சம் பிசிதான் ... டைட் செட்யூல்... “ என்று புன்னகைத்தான்...

இது அவனின் வழக்கமான புன்னகை... இந்த புன்னகையை அவள் வரும் பொழுது அவன் முகத்தில் இருந்த புன்னகையுடன் ஒப்பிட்டு பார்க்க, 6 வித்தியாசத்துக்கு மேலயே இருந்தது....

ஏதோ அவசரமாக யோசித்தவள்

“ஆமா... நான் வரும்பொழுது யார் கூட பேசிகிட்டிருந்த?? “ என்றாள் அவனை ஊடுருவும் பார்வையுடன்..

“யார் கூடயும் இல்... “ என்று சொல்ல வந்தவன் தான் மலரிடம் பேசியது நினைவு வர,

“ஓ.. யெஸ்... பிரண்ட்... “ என்றான் மீண்டும் புன்னகைத்தவாறு...

“பாய் பிரண்ட் ஆ ?? இல்ல கேர்ள் பிரண்ட் ஆ?? “ என்றாள் தன் மார்புக்கு குறுக்காக கைகளை கட்டி கொண்டு தன் புருவங்களை உயர்த்தி அவனை மிரட்டும் விதமாக....

அவன் எதுவும் சொல்லாமல் சிரிக்க, அவளுக்கு ஏதோ உறுத்தியது....

“என்னடா ?? .. நீ முழிக்கிறத பார்த்தால் எனக்கு தெரியாம யார் கிட்டயோ விழுந்திட்ட போல... யார் அந்த அதிர்ஷ்ட தேவதை ?? ...

என் வசியையே மயக்கி தன் வலையில் விழ வைத்தவள்?? “ என்று குறும்பாக சிரித்தாள் உள்ளுக்குள் அப்படி எதுவும் இருந்து விடக்கூடாது என்று வேண்டி கொண்டே....

அவள் கேட்டதும் அவனுக்கு மீண்டும் பனிமலரின் முகம் நினைவு வந்தது...

“பேசாமல் பனிமலரை பற்றி சொல்லிவிடலாமா?? “ என்று அவசரமாக யோசித்தான்...

“ம்ஹூம்.. இன்னும் அவள் மனம் தெரிய வில்லையே... முதலில் அவளிடம் தன் காதலை சொல்லி அவளின் விருப்பத்தையும் சம்மதத்தையும் பெற்ற பிறகுதான் வெளியில் சொல்ல வேண்டும் .. “ என்று முடிவு செய்தான்....

அவன் அப்பொழுதே தன் காதலை பற்றி சொல்லி இருந்திருக்கலாம்... இதனால் பின்னால் வரப்போகும் பல சிக்கல்களையும் அதனால் அவன் இதயம் படப்போகும் பெரும் வலி வேதனையையும் தவிர்த்திருக்கலாம்....

ஹ்ம்ம்ம்ம் ஈசனின் திட்டம் வேறாக இருக்க, பாவம் அந்த வசீகரன் என்ன பண்ணுவான்??

மித்ரா இன்னும் தன் முகத்தையே பார்த்து கொண்டிருக்க, தன்னை சமாளித்தவன்

“ஹீ ஹீ ஹீ... அப்படி எல்லாம் எதுவும் இல்லை மிது.... “ என்று அசடு வழிந்தான்.. அதை கேட்டு நிம்மதி அடைந்தாள் மித்ரா....

“அதை சொல்றதுக்கு எதுக்குடா இவ்வளவு தயக்கம்?? ....சரி நீ இன்னும் உன் தேவதையை பார்க்கலைனா நான் வேணா தேடவா?? “ என்றாள் அவன் மனதை அறிந்து கொள்வதற்காக.....

அதே நேரம் அறை கதவை தட்டி விட்டு பின் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் ஷ்யாம்....

உள்ளே வந்தவன் அங்கு மித்ராவை காணவும் ஆச்சர்யத்தில் விழி விரித்து பின் அதே விழிகள் ரசனையோடும் ஆர்வத்தோடும் அவள் மீது படிந்து மீண்டன...

பின் இருவரையும் பார்த்து புன்னகைத்தவன்

“ஹாய் மித்ரா... எப்படி இருக்க ??.. ஹாய் டா... “ என்றவாறு உள்ளே வந்தான்....

“ஹ்ம்ம்ம் பைன் ஷ்யாம்... ஒரே ஹாஸ்பிட்டல் ல வேலை பார்க்கறோம் னு தான் பேர்.. ஒருத்தரை ஒருத்தர் சந்தித்து கொள்ள கூட முடியலை... “ என்று பெருமூச்சு விட்டாள் மித்ரா....

“ஹா ஹா ஹா.. நாம பிசியா இருந்தால் தான் மக்கள் நன்றாக இருக்க முடியும் மிது ...

அதோடு உன் பேங்க் பேலன்ஸ் இன்னும் ஏறும் இல்ல.. இப்பயே சென்னையின் டாப் மல்ட்டி மில்லினரில் ஒருத்தி நீ....இன்னும் நம்பர் 1 இடத்திற்கு வர வேண்டாமா?? “ என்று சிரித்தான் வசீகரன்....

“ம்ச்... பணம் என்னடா பணம்??... அதை வைத்து கொண்டு நமக்கு பிடித்த சந்தோசமான வாழ்க்கையை வாழ முடிகிறதா??

பணத்தால எல்லாத்தையும் வாங்க முடியாதுனு நல்லா புரிஞ்சுகிட்டேன்.... இப்பல்லாம் அதன் மேலயும் ஏன் வாழ்க்கை மேலயே ஒரு சலிப்பு வந்திடுச்சு.... “ என்றாள் சலிப்புடன....

அவள் தன்னை பற்றிதான் சொல்கிறாள் என்று புரிந்தாலும் அதை வெளிகாட்டி கொள்ளாமல் அவளை சமாதான படுத்த எண்ணி

“ அடடா... மிது இப்படி சலிச்சு நான் பார்த்ததில்லையே.!!! வாழ்க்கையில் சலிப்பு வராமல் இருக்க, பேசாம அங்கிள் சொல்ற மாதிரி கல்யாணம் பண்ணி கிட்டு உன் ஹஸ்பென்ட் கூட வோர்ல்ட் டூர் போய்ட்டு வா...

லைப் எவ்வளவு சூப்பரா இருக்கும் னு அப்ப தெரியும்... “ என்று சிரித்தான்...

மித்ராவின் திருமணம் என்றதும் ஷ்யாமின் கண்களில் ஏதோ ஒரு மாற்றம் வந்தது... அது வசியின் கண்களிலிருந்தும் தப்பவில்லை..

இது மட்டும் இல்லை. ஷ்யாம் உள்ளே வந்ததும் மித்ராவின் மீது படிந்த ஆர்வமான பார்வையும் அவளை சந்திக்கும் பொழுதெல்லாம் அவன் கண்களில் தெரியும் ஒளியும் ஏதோ சம்திங் சம்திங் என்று சொல்லியது வசீகரனுக்கு ....

பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல இப்பொழுது தானும் காதல் வயபட்டிருக்க, ஷ்யாமின் முகத்தில் அடிக்கடி வந்து போகும அந்த மாற்றத்தை கவனித்து 1+1=2 என்று கணக்கிட்டான்...

பின் அவசரமாக ஏதோ யோசித்தவன் அப்பொழுதுதான் பனிமலர் அவனை சந்திக்க அழைத்தது நினைவு வந்தது...

பின் இருவரையும் பார்த்து

“சாரி கைஸ்... நான் கொஞ்சம் அவசரமா வெளில போகணும்... நீங்க இரண்டு பேரும் பேசிகிட்டிருங்க.... “ என்று சொல்லி அவனுக்கு தேவையான சில பைல்களையும், கார் சாவியையும் எடுத்து கொண்டு நகர முயல

“வசி.... என்னை அப்படியே என் வீட்ல ட்ராப் பண்றியா?? என் கார் ரிப்பேர் ஆகிடுச்சு.. இன்னும் சரியாகி வரலை.. அதுக்குத்தான் வெய்ட் பண்ணிகிட்டிருக்கேன்... “ என்றாள் மித்ரா கொஞ்சலாக

“ஓ.. நான் வேற பக்கம் போறேன் மிது.. உன் வீட்டுக்கு வந்திட்டு திரும்பவும் அங்க போறதுனா கஷ்டம்... வேணும்னா நீ ஷ்யாம் கூட போயேன்.. அவன் அந்த பக்கமாதான் போறான்...

ஷ்யாம்... நீ மிது வை அவ வீட்ல ட்ராப் பண்ணிடு டா.... “ என்றான்...

தனக்கு கிடைத்த அதிர்ஷ்டத்தை நினைத்து மகிழ்ந்தவன்

“ஸ்யூர் டா... யூ carry on… “ என்று அவனை அனுப்பி வைத்தவன் மித்ராவிடம் திரும்பி

“என்ன மித்ரா.... என் கூட வர ஒன்னும் பிரச்சனையில்லையே... “ என்றான் ஷ்யாம்...

வசியின் இந்த புறக்கனிப்பை கண்டு திகைத்து ஏதோ யோசித்து கொண்டிருந்தவள் ஷ்யாமின் கேள்வியில் நினைவுக்கு வர

“சே... சே... அதெல்லாம் ஒன்னும் இல்லை ஷ்யாம் .. சரி வா போகலாம்... “ என்றவாறு இருவரும் கிளம்பி ஷ்யாம் ன் கார் க்கு சென்றனர்.....

ஷ்யாம் – வசி , மித்ரா படித்த அதே மருத்துவ கல்லுரியில் அவர்களுடன்தான் படித்தான்... சிறு வயதில் இருந்தே மருத்துவனாக ஆசை பட்டு அதன்படி நல்ல மதிப்பெண் பெற்று கவர்ன்மென்ட் கோட்டாவில் அந்த தனியார் மருத்துவ கல்லூரியில் சேர்ந்திருந்தான்....

அந்த கல்லூரியில் முழுவதும் பணக்கார வீட்டு பிள்ளைகள் தான் அதிகம்..மிடில் கிளாஸ் ல் பிறந்த ஷ்யாம் அவர்களின் நடை உடையை கண்டு மிரண்டு போனான் ஆரம்பத்தில்...

பள்ளியில் இருந்து கல்லூரித்கு செல்வது என்பது suddern change .. அந்த environment ஏ முழுவதும் வித்தியாசமாக இருக்க, அவன் முழித்து கொண்டிருந்தான்...

அவன் விழித்து கொண்டிருப்பதை கண்டு வசிதான் அவனிடம் வந்து தானாக அவனை அறிமுக படுத்திக் கொண்டான்...

வசியும் மிடில் கிளாஸ் தான் என்றாலும் அவன் பள்ளியில் ஆரம்பத்தில் இருந்தே ஆதி மற்றும் அவன் குடும்பத்தாருடனும் பழகியதால் பணக்காரர்களை கண்டு மிரளாமல் இயல்பாக அந்த கல்லூரி சூழ்நிலையை ஏற்று கொள்ள முடிந்தது...

ஆனால் ஷ்யாம் தடுமாறி நிக்க, அவன் மனநிலையை புரிந்து கொண்ட வசி அவனுடன் நட்பானான்...

இதில் வசியை முதலில் பார்த்ததுமே மித்ராவுக்கு அவனை ரொம்பவும் பிடித்து விட்டது...

மற்ற பசங்க மாதிரி இவன் எதுவும் அலட்டி கொள்ளாமல் அமைதியாக அதே சமயம் தெளிவாகவும் அதை விட அந்த வசீகர புன்னகையுடன் இருந்தவனை கண்டு பிடித்து விட அவளாகவே அவனை நாடி சென்று தன்னை அறிமுகபடுத்தி நட்பு பாராட்டினாள்....

வசீகரனுடன் வழவழக்கும் அவள் ஏனோ ஷ்யாமிடம் சிறிது ஒதுக்கம் காட்டியே இருந்தாள்.... மித்ரா எங்கு சென்றாலும் வசியை அழைக்க, வசி ஷ்யாமையும் வற்புறுத்தி இழுத்து கொண்டு செல்வான்...

அதனால் மூவருமே ஒன்றாகவே இருப்பர்... ஷ்யாமிற்கு மித்ராவும் வசியும் உரிமையாக சிரித்து பேசி கொள்வதை கண்டு ஏக்கமாக இருக்கும்..

தானும் அவளுடன் இது மாதிரி சிரித்து பேசவேண்டும்... “ என்று பல முறை முயன்றிருக்கிறான்... ஆனால் ஏதோ ஒன்று தடுக்க அவளுடன் இயல்பாக பேச வரவில்லை...

மேலும் தனக்கு இருக்கும் பொருப்பை நினைத்து வேற எதிலும் கவனத்தை செலுத்தாமல் படிப்பில் கவனத்தை செலுத்தி படிக்க, அதுவே அவனுக்கு வடிகால் ஆகி போனது....

அதோடு அவன் மனம் தளரும் வேளைகளிம் வசிதான் அவனை மோட்டிவேட் பண்ணி அவனை தடம் மாறாமல் தன்னுடன் அழைத்து வந்தான்..

படிப்பு முடிந்ததும் மித்ரா வின் மருத்துவமனையிலயே அவனுக்கும் வேலை வாங்கி கொடுக்க, அதில் மகிழ்ந்து போனான்...

அவன் ஒரு டாக்டர் ஆனதும் அவன் குடும்பம் கொஞ்சம் மேல உயர ஆரம்பித்தது.. தன் இரு தங்கைக்கும் திருமணம் முடித்து விட்டான்.. இனி அவனுக்கு கடமை எதுவும் இல்லை....

இந்த நிலையில் தான் அவன் அம்மா ஷ்யாம் திருமணத்தை பற்றி சொல்லி பொண்ணு பார்க்கவா?? என்று கேட்க, ஏனோ அவனுக்கு மித்ராவின் முகம் தான் ஞாபகம் வந்தது ....

தன் அன்னை காட்டிய சில புகைபடங்களை பார்த்த பொழுது அதில் மித்ரா வே சிரித்து கொண்டிருப்பதை போல இருந்தது....

அப்பொழுதுதான் தன்னையே ஆராய்ந்து பார்க்க, மித்ராவின் மேலான அவனுடைய காதல் புரிந்தது....

கல்லூரியில் அவளை பார்த்த அந்த நொடியே அவள் தன் மனதில் வந்து விட்டதும் ஆனால் அப்போதைய வயதிலும் படிக்கும் காலத்தில் அதை பெரிதாக எடுத்து கொள்ளாமல் தன் மனதிற்குள்ளயே புதைத்து வைத்ததும் இப்பொழுது புரிந்தது....

இப்பொழுது அவன் வளர்ந்து 31 வயதாகிய பொழுதும் அவள் மேல் இருக்கும் காதல் இன்னும் குறையாமல் இருப்பதும் புரிந்தது அவனுக்கு....

ஆனால் ???

இது கை கூடாத காதல்...

அவளுக்கு வசியின் மேல் ஆர்வம் இருப்பது தெரியும்.. ஆனால் வசி அவளை விரும்பவில்லை என்பது தெரிந்ததும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது....

ஆனாலும் அடுத்து அவளுடைய பொருளாதார நிலை....

“அவள் நிலை என்ன?? தன் நிலை என்ன?? ராக்கெட் வச்சாலும் எட்டி பிடிக்க முடியாத உயரம் அவள்... அவளை போய் எப்படி என் மனைவியாக்கி கொள்ள முடியும்?? “ என்று எண்ணி தன் காதலை மனதுக்குள்ளயே புதைத்து கொண்டான்....

ஆனாலும் அவளை பார்க்கும் பொழுதெல்லால் அவன் காதல் மனம் துள்ளி குதிக்கும்.. அதன் பிரதிபலிப்பே அவன் கண்களில் அப்பப்ப தெரிவது....

அப்படிபட்ட அவன் காதல் தேவதையுடன் இன்று தனியாக அதுவும் வசி இல்லாமல் இருவர் மட்டும் தனியாக செல்வது இதுதான் முதல் முறை என்பதால் அவன் உள்ளம் துள்ளி குதித்தது...

அவளுடன் இணைந்து நடப்பதே பெரும் வரம் கிடைத்த மாதிரி ஒரு பீல் அவன் உள்ளே...

அந்த நொடிகளை ரசித்தவாறே அவளுடன் இணைந்து நடந்தான் ஷ்யாம்...

இருவரும் காரை அடையவும் அவளுக்கு கார் கதவை திறந்து விட்டு அவள் உள்ளே அமர்ந்ததும் மறுபக்கம் வந்து ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்ததும்

“போகலாமா?? .. “ என்று கேட்டு தன் காரை ஸ்டார்ட் பண்ணி கிளப்பி சென்றான்...

இன்னுமே அவனால் நம்ப முடியவில்லை.. தன் மனதில் இருப்பவளுடன் தனியாக அவள் அருகில் அமர்ந்து இருக்க காரை ஓட்டி கொண்டிருப்பதை.... அவளுக்கு தெரியாமல் தன் மொபைலில் ஒரு செல்பி எடுத்து கொண்டான்...

கார் சாலையை அடைந்து சிறிது தூரம் சென்றதும் மெல்ல திரும்பி அவளை பார்க்க, அவள் ஏதோ யோசனையில் இருப்பதாக தெரிந்தது...

அவளால் இன்னும் வசியின் செயலை ஏற்று கொள்ள முடியவில்லை..எவ்வளவு பெரிய முக்கியமான வேலையாக இருந்தாலும் அவள் ஒன்றை கேட்டால் அதை செய்து முடிப்பான் வசி..

அப்படி பட்டவன் தான் கேட்டும் அதை தவிர்த்து விட்டு சென்றான் என்பதை அவளால் ஏற்று கொள்ள முடியவில்லை....

இதுவரை தான் கேட்டு ஏன் கேட்காமலயே தான் எல்லாமே அவளுக்கு கிடைத்திருக்கிறது....

ஆனால் இந்த வசி ஒருத்தன் மட்டும்தான் அவளே வெக்கத்தை விட்டு கேட்டும் தன்னை, தன் காதலை ஏற்று கொள்ளாதது அவள் மனதிற்குள் எரிந்து கொண்டே இருக்கிறது....

அவள் முகத்தில் இருந்த குழப்பத்தை கண்ட ஷ்யாம்

“என்னாச்சு மித்ரா??... டல்லா இருக்கற மாதிரி தெரியுது?? எனி பிராப்ளம்??... “ என்றான் அக்கறையாக

அவன் கேள்வியில் தன்னை சமாளித்தவள்

“ம்ச்.... கொஞ்சம் தலைவலி ஷ்யாம்... அதான்... “ என்றாள் நெற்றி பொட்டில் கை வைத்து...



னோ அவள் முகத்தில் வந்த அந்த வேதனையை கண்டு அவன் மனம் வாடியது... அவள் தலைவலியை தான் வாங்கி கொள்ள வேண்டும் போல துடித்தது அவன் இதயம்...

அவளை எப்பொழுதுமே சிரித்து கொண்டே இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும் போல துடித்தது அவன் உள்ளே...

“வேணா ஒரு காபி சாப்பிடலாமா?? தலைவலி பெட்டரா இருக்கும்... “ என்றான்...

“ம்ச்.. வேண்டாம் ஷ்யாம்... நான் வீட்டுக்கு போய் நல்லா தூங்கினாலே சரியாய்டும்... சாரி... உன்னையும் மூட் அவுட் ஆக்கறேனா?? “ என்று சிரித்தவள்

“உன் MD preparation எப்படி போய்கிட்டிருக்கு?? “ என்றாள்..

ஷ்யாம் இப்பொழுது அவன் கடமை எல்லாம் முடிந்திருக்க, மேற்படிப்பாக MD பண்ண அதற்கான நுழைவு தேர்வுக்கு prepare பண்ணி வருகிறான்..

மித்ரா அதை பற்றி விசாரிக்க, அவனும் அவளுக்கு விளக்கினான்...

பின் அவர்கள் உரையாடல் மருத்துவம் சம்பந்தமாக இருக்க, மித்ராவும் உற்சாகமாகி அவனுடன் இயல்பாக பேச ஆரம்பித்தாள்...

கையை அசைத்து அசைத்து சிலவற்றை விளக்க அவள் கை அசைப்புக்கு தகுந்த மாதிரி காதில் தொங்கிய நீளமான தோடும் ஊஞ்சல் ஆட அந்த அழகில் மயங்கி அவன் மனமும் ஊஞ்சல் ஆட ஆரம்பித்தது....

அவளையே இமைக்க மறந்து ரசித்து கொண்டு வந்தான்... இந்த பயண்ம் இப்படியே தொடராதா?? என்று இருந்தது...

இதே போல இவளுடன் காலம் முழுவதும் ஒன்றாக பயணிக்கும் வரம் கிடைக்குமா?? என்று தன்னுள்ளே கேட்டு கொண்டான் ....

கார் அதன் வேலையை செய்ய அவள் வீட்டை அடைந்திருந்தது...

மித்ரா முன்னால் அமர்ந்திருப்பதை கண்டு செக்யூரிட்டி அந்த கேட் ஐ திறந்து விட, ஷ்யாம் காரை உள்ளே ஓட்டி சென்றான்...

கேட்டில் இருந்து வீட்டை அடைவதற்கே கிட்டதட்ட 1 கிலோ மீட்டர் தூரம் இருக்கும் போல....

வீட்டின் வெளியில் காரை நிறுத்தியவன் அண்ணாந்து அவள் வீட்டை பார்த்தான்.. மாளிகை போல இருந்தது...

இந்த வீட்டின் ஒரே ஒரு ராஜகுமாரி அவள் அல்லவா.. அதனால் அவளுக்காக அவர் தந்தை பார்த்து பார்த்து அந்த வீட்டை கட்டியிருந்தார்....

சில முறை அவள் பிறந்த நாள் விழா மற்றும் சில விழாக்களுக்கு மித்ரா வசியை அழைக்க, வசி ஷ்யாமையும் அழைத்து கொண்டு வந்திருக்கிறான் இந்த வீட்டிற்கு...

வெளியில் பார்க்கையிலயே இவ்வளவு பிரமாண்டம் என்றால் உள்ளே சொல்ல வா வேண்டும்....!!!

அவன் காரை நிறுத்தவும் மித்ரா கீழ இறங்கியவள் அவனை பார்த்து

“வீட்டுக்கு உள்ள வா ஷ்யாம்.. காபி குடிச்சிட்டு போகலாம்.. “ என்றாள்...

அவனுக்கும் ஆசைதான் அவளை இன்னும் கொஞ்ச நேரம் பார்த்து கொண்டிருக்கும் பாக்கியம் கிடைக்குமே என்று ...

ஏனோ உள்ளே செல்ல தயக்கமாக இருக்க,

“இல்ல மித்ரா.. நான் இன்னொரு நாள் வர்ரேன்.. டேக் ரெஸ்ட்... குட் நைட்...” என்று புன்னகைத்து காரை கிளப்பினான்...

அவளும் கை அசைத்து சிரித்தவாறு அவனை வழி அனுப்ப, அந்த காட்சியையும் அவன் மனதில் பொக்கிசமாக பத்திரபடுத்தி வைத்து கொண்டான்....

வழக்கமாக சந்திக்கும் காபி சாப் ஐ அடைந்ததும் காரை நிறுத்தி விட்டு உள்ளே சென்றான் வசீகரன்...

அங்கு மலர் அவனுக்கக முன்னரே வந்து காத்திருந்தாள்....

அவனை கண்டதும் அழகாக புன்னகைக்க, அவளின் புன்னகையை கண்டதுமே ஒரு வாரம் பார்க்காமல் இருந்த ஏக்கம் தீர்ந்து போனது அவனுக்கு... அவனும் புன்னகைத்தவாறு அவள் அருகில் சென்றவன்

“ஹாய்... ஜில்லு.. எப்படி இருக்க?? “ என்றவாறு ஒரு நாற்காலியை இழுத்து அவள் எதிரில் அமர்ந்தான்...

“ஹாய் டாக்டர்... ஐம் பைன்.. நீங்க எப்படி இருக்கீங்க?? “ என்றவள்

“அப்புறம் டாக்டர்... என்னை ஜில்லுனு கூப்பிடாதிங்க... நம்ம டீல் படி கீர்த்திக்கு ஆப்ரேஸன் முடியற வரைக்கும் தான் நீங்க அப்படி கூப்பிடலாம்னு பர்மிசன் கொடுத்தேன்....

இப்பதான் ஆபரேசன் முடிஞ்சு அவள் நல்லாயிட்டாள் இல்ல.. இன்னும் ஏன் அந்த பெயரையே புடிச்சு தொங்கி கிட்டு இருக்கீங்க.. “ என்றாள் இலேசாக முறைத்தவாறு....

“ ஹா ஹா ஹா அது என்னவோ .. அந்த பெயர்தான் டக்குனு மனசுல வருது....” என்றவன்

“அதை சொல்லும் பொழுது உதடு மட்டும் இல்லை என் ஹார்ட்ம் ஜில்லுனு ஆகுது பேபி... “ என்று மனதுக்குள் சொல்லி சிரித்து கொண்டான்....

“அதுவும் கீர்த்தி ஆசையா உன்னை அழைக்க சொல்லி கேட்ட பெயர்.. அதான் அதை விட மனசு வரலை... “ என்றான்

“ஹ்ம்ம்ம்ம் அப்படீனா நானும் உங்களுக்கு ஒரு பெயர் வைப்பேன்... டீலா?? “ என்றாள் புருவங்களை உயர்த்தி....

“ஓ... ஸ்யூர்..” என்றவன்

“நீ என்னை செல்லமாக பெயர் சொல்லி அழைக்க தானே தவம் இருக்கிறேன் கண்மணி... “ என்று மீண்டும் மனதுக்குள் சொல்லி கொண்டான்...

அவளும் தன் கன்னத்தில் கை வைத்து யோசிக்க அவளின் அந்த ஆக்சனையும் அவள் என்ன பெயர் வைக்க போகிறாள் என்ற ஆர்வத்திலும் அவளையே ரசித்து பார்த்து கொண்டிருதான் வசி...

சில நொடிகள் யோசித்தவள்

“ஆங்... கண்டு புடிச்சிட்டேன்... இனிமேல் உங்க பெயர் மெக்கானிக்... “ என்றாள் சிரித்தவாறு ...

“என்னது மெக்கானிக் ஆ?? “ என்றான் அதிர்ந்தவாறு...

அவள் ரொமாண்டிக் ஆ செல்லமா க்யூட் ஆ ஏதாவது பெயர் சொல்லுவாள் என்று எதிர்பார்த்தவனுக்கு அவள் மெக்கானிக் என்கவும் சிறு ஏமாற்றம்....

அவனுடைய அதிர்ச்சியை கண்டவள்

“ஹீ ஹீ ஹீ.. இதுக்கு எதுக்கு டாக்டர் இவ்வளவு சாக் ஆகறீங்க...

ஒரு படத்துல சூர்யா ஜோ வை ஜில்லு னு கூப்பிடுவார்... ஜோ வும் அவரை மெக்கானிக் னு கூப்பிடுவாங்க... நீங்க என்னை ஜில்லு னு கூப்பிடறதால் இனிமேல் உங்க பெயர் மெக்கானிக் தான்....” என்று சிரித்தாள்...

“ம்ம்ம்ம் அப்ப நானும் நீயும் சூர்யாவும் ஜோவும் போலவா?? “ என்றான் குறும்பாக சிரித்தவாறு குறுகுறு பார்வையுடன்....

அதை கேட்டு விழித்தாள் மலர்..

“ஐயோ.. இதுக்கு இப்படி ஒரு விளக்கம் இருக்கும் னு தெரியாம நான் பாட்டுக்கு ஏதோ சொல்லி உளறிட்டேனே... ஹ்ம்ம் சமாளிப்போம்.. “ என்று அவசரமாக யோசித்தவள்

“ஹீ ஹீ ஹீ...நீங்க வேணா அந்த சூர்யா மாதிரி ஹேன்ட்சம் ஆ ஹீரோ மாதிரி இருக்கீங்க டாக்டர்... உங்களை வேணா சூர்யானு சொல்லிக்கலாம்....

ஆனா.. . நான் ஜோ ஆக முடியாது.. அவங்களோட அழகு என்ன?? பெர்சனாலிட்டி என்ன?? அதுவும் சிரிக்கும்பொழுது அவ்வளவு க்யூட் ஆ இருக்கும் டாக்டர்... ஜோ ஜோதான் மலர் மலர் தான்... “ என்று சிரித்தாள்...

அதை கேட்டு தலை சுற்றியது அவனுக்கு..

“என்ன சொல்ல வருகிறாள்?? தன் காதலை மறைமுகமாக சொல்லத்தான் தங்களையும் சூர்யா , ஜோவுடன் கம்பேர் பண்ணியது

“இவள் என்னடாவென்றால் அதை ஒத்துகொள்ளாமல் வேற ஏதோ கதை சொல்லுகிறாளே?? அப்படி என்றால் அவள் எனக்கு இணையாக முடியாது என்கிறாளா?? “ என்று உள்ளுக்குள் குழம்பி கொண்டிருந்தான்...

அவன் மனவோட்டத்தை அறியாத மலர் தொடர்ந்து வழவழத்து கொண்டிருந்தாள்...

“அப்புறம் டாக்டர்.. நான் ஏன் இந்த பெயர் செலக்ட் பண்ணினேனா??

அந்த படத்துல சூர்யா கார் ரிப்பேர் பண்ற கார் மெக்கானிக்..

நீங்க மத்தவங்களோட ஹார்ட் ஐ ரிப்பேர் பண்ற ஹார்ட் மெக்கானிக்...அதனாலதான் உங்களுக்கு மெக்கானிக் னு பேர் வச்சேன்...

ஹா ஹா ஹா .. எப்படி என் கண்டுபிடிப்பு ?? “ என்று தன் இல்லாத காலரை தூக்கி விட்டு கொண்டாள்....

அதை கேட்டு மேலும் அதிர்ந்தவன்

“அடிப்பாவி... ஒரு cardiologist க்கு ஹார்ட் மெக்கானிக் னு விளக்கம் சொன்ன முதல் ஆள் நீதான்.. தயவு செய்து வெளில யார்கிட்டயும் சொல்லிடாத.. எங்க association ல இருந்து போர் கொடி தூக்கிடுவாங்க... “ என்று நக்கலாக சிரித்தான்....

“டாக்டர்.... நீங்க பண்ற வேலையைத்தான லேமேன்(layman) டேர்ம் ல சொன்னேன்.. அதுக்கு போய் கிண்டல் அடிக்கறீங்களே.. பேட் மெக்கானிக்...” என்றாள் உதட்டை சுழித்தவாறு....

அவளின் உதட்டு சுழிப்பில் வளைந்த இதழ்களை கண்டு இன்னும் கவிழ்ந்தான் அந்த வசீகரன்...பின் தன்னை சமாளித்து கொண்டு

“ஹா ஹா ஹா.. ஓகே ஓகே.. நீ சொன்னா சரியாதான் இருக்கும்... உனக்கு எப்படி தோணுதோ அப்படியே கூப்பிடு.. “ என்று சரணடைந்தான்...

“ஆஹா.. என்ன மெக்கானிக்??.. இப்படி டக்குனு கால் ல விழுந்திட்டீங்க.. இன்னும் கொஞ்சம் கெத்து காமிப்பீங்கனு பார்த்தா...?? “ என்று சிரித்தவள்

“எனிவே உங்க வைப் ரொம்ப கொடுத்து வச்சவங்க... அவங்க சொல்றதுக் கெல்லாம் நல்லா ஆமா சாமி போடுவீங்க போல இருக்கே... “ என்று வாரினாள் சிரித்து கொண்டே...

“அந்த கொடுத்து வச்சவ நீ தான் பேபி.. “ என்று உள்ளுக்குள் சொல்லி கொண்டான்...

பின் மலருக்கு ஏதோ நினைவு வர

“ஆமா... நீங்க ஏன் டாக்டர் இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்கீங்க?? ஒரு வேளை யாரையாவது லவ் பண்றீங்களா?? “ என்றாள் தன் புருவங்களை உயர்த்தி குறும்பாக கண் சிமிட்டி...

அதை கேட்டு அவன் குடித்து கொண்டிருந்த காபி மூக்கில் ஏற புரை ஏறியது வசீகரனுக்கு.., வழக்கம் போல அவன் தலையை தட்டியவள்

“என்ன மெக்கானிக்??.. ஒரு காபி கூட ஒழுங்கா குடிக்க தெரியலை.. நீங்கல்லாம் என்னத்த வைத்தியம் பண்றீங்களோ?? “ என்றாள் நக்கலாக

அதை கேட்டு அவன் அவளை பார்த்து முறைக்க

“ஹீ ஹீ ஹீ சும்மா ஜோக் டாக்டர்... உங்களை, உங்க ட்ரீட்மென்ட் பற்றி தெரியாதா?? “ என்று சமாளித்தாள்...

அவனும் அவள் சமாளித்ததை கண்டு சிரித்து கொண்டே அவள் கேட்ட கேள்விக்கு “ பேசாம நான் உன்னைத்தான் லவ் பண்றேன் னு சொல்லிடலாமா??” என்று அவசரமாக யோசித்தான்....

பின்

“சேச்சே... எத்தனை வருசம் காத்திருந்தேன் என் காதலை கண்டுபிடிக்க.. அதை இப்படி எடுத்தேன் கவிழ்த்தேனு சொல்ல கூடாது... அதுவும் எந்த ஒரு காதல் பரிசும் இல்லாமல்..

என் காதலை நல்ல ஒரு ரொமாண்டிக் சிட்சுவேசன்ல தான் சொல்லணும்... " என்று மனதுக்குள் சொல்லி கொண்டான்...

தான் கேட்ட கேள்விக்கு அவன் பதில் சொல்லாமல் முழித்து கொண்டு இருப்பதை கண்டு அவனையே உற்று பார்த்த மலர்

"ஹ்ம்ம்ம் நீங்க முழிக்கிறத பார்த்தா நீங்க யாரையும் லவ் பண்ணலைனு தெரியுது டாக்டர்..

அப்ப பேசாம நீங்க வொர்க் பண்ற மித்ரா ஹாஸ்பிட்டல் MD யோட பொண்ணு மித்ராவையே கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணிக்கங்க டாக்டர்...

ஆளும் சூப்பரா இருக்காங்க... டேரக்டா ஹாஸ்பிட்டல் MD யும் ஆய்டலாம்... " என்று கண் சிமிட்டினாள்..

அதை கேட்டு அவன் கோபமாக முறைக்க

"ஓ.. அவங்களை புடிக்கலையா?? அப்படீனா நம்ம கீர்த்தி குட்டி முன்னாடி அட்மிட் ஆகியிருந்தாலெ அந்த ஹாஸ்பிட்டல் MD பொண்ணும் ஒரே பொண்ணாம் டாக்டர்..

அவங்க ஓகே வா?? .. ஒரு முறை நானும் பார்த்தேன்.. செமயா இருக்காங்க.. அவங்களும் டாக்டர் தானாம்.. நல்ல உயரம் வேற.. உங்களுக்கு பெர்பெக்ட் மேட்ச் ஆகும்..“

அந்த MD க்கும் உங்களை ரொம்ப பிடிக்கும் போல.. பேசாம ஓகே சொல்லி அந்த ஹாஸ்பிட்டலுக்கும் அவங்க பொண்ணுக்கும் MD ஆகிடுங்க... என் ஐடியா எப்புடி??

நீங்க சொன்ன உங்க MD கனவை நிறைவேற்ற இன்னும் எப்ப நீங்க பணம் சேர்த்து ஹாஸ்பிட்டலை விலைக்கு வாங்கறது??..இதுதான் ஈசியான வழி டாக்டர்.. " என்று சீண்டினாள் சிரித்தவாறு...

அதில் கடுப்பானவன்

"Will you please shut up?? " என்று தன்னையும் மறந்து கத்தினான் கண்களில் கோபம் கொப்புளிக்க...

அருகில் இருந்தவர்கள் இவர்கள் டேபிலை திரும்பி பார்க்க, மலருக்கோ கஷ்டமாகி போனது...

“என்னாச்சு இந்த டாக்டருக்கு?? இத்தனை நாள் பழகியதில் அவள் எவ்வளவோ அவனை ஓட்டியிருக்கிறாள்..ஏன் அவனை ஒரு டுபாக்கூர் டாக்டர் என்றெல்லாம் கூட ஓட்டியிருக்கிறாள்..

ஆனால் அப்பல்லாம் சிரிச்சுகிட்டே இருந்தவன் இப்ப இவள் ஜோக்குக்காக அவனை ஓட்ட, திடீர்னு இப்படி டென்சன் ஆகிட்டானே....” என்று அதிர்ந்து தான் போனாள்....

ஏனோ அவன் எரிச்சல் அவள் கண்ணில் ஈரத்தை கூட்ட, மெல்ல கண்ணீர் எட்டி பார்த்தது.. அவள் முகம் அனிச்ச மலராக வாடிவிட தன்னை மறைக்க உடனே தலையை கீழ குனிந்து கொண்டாள்....

அதற்குள் வசிக்கும் தன் தவறு புரிந்தது... தன் இதய சிம்மாசனத்தில் வைத்து பூஜித்து வரும் அவளே அவனை வேற ஒரு பெண்ணுடன் இணைத்து பேச அதை பிடிக்காமல் கத்திவிட்டான்...

அவனுக்கே ஆச்சரியம்.. தானா அது?? என்று.. இது வரை இந்த மாதிரி யாரிடமும் கத்தியதில்லை.. ஏன் பள்ளி நாட்களில் கூட ஆதியும் நிகிலனும் அவர்களுக்குள் சில நேரம் சண்டையிட்டு கத்தி பேசி இருக்கிறார்கள்... ஆனால் வசி யாரிடமும் தன் கோபத்தை காட்டியதில்லை ..

அவன் பணிபுரியும் இடத்திலும் அதே தான்.. தன் ஜீனியர்ஸ் சில நேரம் சொதப்பியதை கூட கூலாக கேண்டில் பண்ணியிருக்கிறான்...

அப்படி பட்டவன் இந்த அளவுக்கு டென்சனாகி கத்தி இருக்கிறான் என்றால் இது தான் அவன் உண்மையான குணமோ?? இவ்வளவு நாள் மற்றவர்களுக்காக நடித்துக் கொண்டிருக்கிறானோ??

என்று அவனையே ஆராய்ச்சி பண்ணினான்...

“எது எப்படியோ இவளிடம் மட்டும்தான் நான் நானாக இருக்கிறேன் போல... !!!” என்று எண்ணி கொண்டவன் மலர் இன்னும் தலையை குனிந்து கொண்டிருக்க, மெல்ல அவள் கையை அழுத்தியவன்

“சாரி பனிமலர்... ஐ ம் ரியலி சாரி... ஏதோ டென்சன் ல அப்படி கத்திட்டேன்.... " என்றான் வருத்தமாக...

உடனே அவளும் தலையை நிமிர்ந்து

"இட்ஸ் ஒகே டாக்டர்.. நானும் கொஞ்சம் ஓவராதான் பேசிட்டேன்.. அதிகமா உரிமை எடுத்துகிட்டேன் போல... " என்றாள்...

“சே.. சே.. அதெல்லாம் இல்லை... உனக்கு என்கிட்ட எல்லா உரிமையும் இருக்கு... என் மேரேஜ் பத்தி அதுவும் மற்ற பெண்களுடன் சம்மந்த படுத்தி பேசவும் டக்குனு கோபம் வந்திடுச்சி... சாரி அகைன்.. “ என்றான் அவசரமாக இன்னும் வருத்தம் விலகாமல்...

அதற்குள் தன்னை சமாளித்து கொண்டவள்

“இட்ஸ் ஓகே.. பிரியா விடுங்க டாக்டர்... “என்று அன்று அவன் சொல்லியதை போல சொல்லிக் காட்ட, அவன் முகத்திலும் மெல்ல புன்னகை தவழ்ந்தது...

"ஹ்ம்ம் டாக்டர்.. கெட்டதுலயும் ஒரு நல்லது என்னன்னா அன்னைக்கு நான் டென்சன்ல தண்ணியை எடுத்து உங்க மேல ஊத்தின மாதிரி நல்ல வேளை உங்க முன்னாடி மீதி இருக்கிற காபியை எடுத்து நீங்க என் மேல கொட்டலை..

அந்த வகையில உங்களுக்கு நான் நன்றி சொல்லிக்கிறேன் டாக்டர்..." என்றாள் சிரித்தவாறு

"சே.. ஆமாம் இல்ல... நல்ல சான்ஸ் மிஸ் பண்ணிட்டேனே..." என்று அவனும் குறும்பாக சிரிக்க, அவள் செல்லமாக முறைத்தாள்..

அப்பொழுது அவள் அலைபேசி ஒலிக்க, அதை எடுத்து காதில் வைத்தவள் மறுமுனையில் கேட்டதற்கு

"நான் ஒரு இம்பார்ட்டன்ட் மீட்டிங் ல இருக்கேன்... " என்றாள் அவனை பார்த்து கண் சிமிட்டியவாறு...

"ஹ்ம்ம்ம்ம் 9 மணிக்கு முன்னாடி வீட்டுக்கு வந்திடணுமா?? ஸ்யூர்.. கரெக்டா 8.59 க்கு இந்த மலர் வீட்டுக்குள்ள இருப்பா..."

"ஹ்ம்ம் ஓகே.. எல்லாம் புரியுது.. மறக்கலை... ஒகே.. பை... " என்றவாறு அழைப்பை துண்டித்தவள்

"எங்க வீட்டு ஜோ டாக்டர்.... காலையில் கிளம்பறப்பயே இன்று வீட்டுக்கு சீக்கிரம் வந்திட சொன்னாங்க.. அதுக்கான ரிமைண்டர்.. " என்று சிரித்தாள்...

“ஓ.. அப்ப தினமும் லேட்டாதான் வீட்டுக்கு போவியா?? “ என்றான் ஆச்சர்யமாக

“ஹ்ம்ம்ம் நாம இந்த social service ல இருக்கிறதால தினமும் ஏதாவது ஒரு வேலை வந்திடும் டாக்டர்.. எங்கயாவது சுத்திட்டு எப்பவும் வீட்டுக்கு போக மணி 10 ஆகிடும்..” என்றாள் சிரித்தவாறு...

அப்பொழுதுதான் அன்று கயல் சொன்ன

“அவ வீட்ல தண்ணி தொலிச்சு விட்டுட்டாங்க.. " என்பது நினைவு வர

“சரி.. உங்க வீட்ல யாரெல்லாம் இருக்கா?? “ என்றான் அவளை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில்...

"ஹ்ம்ம்ம் நாம் இருவர்.. நமக்கு இருவர் னு எங்க வீட்ல எங்கப்பா அம்மாவுக்கு நானும் என் தம்பியும் னு இரண்டே இரண்டு குட்டிகள் டாக்டர்...

அப்பா சிவசேகர்.. பிரைவேட் ஸ்கூல் ல டீச்சரா இருக்கார்...நான் செல்லமா வாத்தியார் இல்ல வாத்தி னு கூப்பிடுவேன்...

அம்மா ஜோதி.. நான் செல்லமா ஜோ னு கூப்பிடுவேன்.. நல்லா சமைப்பாங்க.. அதனால் வீட்ல வெட்டியா சீரியல் பார்த்துகிட்டு இருக்க கூடாதுனு நான் ஒரு food blog ஐ ஜோ கிச்சன் ன்ற பேர்ல அவங்களுக்கு ஸ்டார்ட் பண்ணி கொடுத்து அதை எப்படி யூஸ் பண்றதுனு சொல்லி கொடுத்தேன்....

ஆரம்பத்துல ஸ்டார்ட்டிங் பிராப்ளம்னு சொல்லி தயங்கினவங்க இப்ப என்னடான்னா ஆன் லைன் blogging ல லெட், ரைட் யூ டார்ர்ன் எல்லாம் எடுத்து கலக்குறாங்க..

நிறைய பாலோவர்ஸ்(followers) அவங்களுக்கு.... அதனால எப்ப பார் லேப்டாப் ம் கரண்டியுமா சுத்திகிட்டிருப்பாங்க...

தம்பி engineering படிக்கறான்.. இது பைனல் இயர்.. அவ்வளவுதான் டாக்டர்... எங்க வீட்டு மேட்டர் " என்றாள் சிரித்தவாறு...

"குட்.... அவங்களையெல்லாம் ஒரு நாளைக்கு introduce பண்ணி வை.. மீட் பண்ணலாம்.. " என்றான் சிரித்தவாறு...

"ஹீ ஹீ ஹீ ஸ்யூர் டாக்டர்... " என்றவள் அப்பொழுதுதான் அவள் வந்த வேலை ஞாபகம் வர

“அச்சோ... டாக்டர்.. நான் பாட்டுக்கு வந்த வேலையை விட்டுட்டு வழக்கம் போல அவுட் ஆப் சிலபஸ் போய்ட்டேன்.. " என்று தலையை தட்டி கொண்டவள்

"டாக்டர்.. எங்க தொண்டு நிறுவனம் மூலமா பக்கத்துல இருக்கிற கிராமங்களில் ஹார்ட் அட்டாக் பற்றி ஒரு விழிப்புணர்வு முகாம் நடத்தலாம்னு பிளான் பண்ணி இருக்கோம்...

அதோடு 45 வயதுக்கு மேல இருக்கிறவங்களுக்கு இலவசமாக இதய பரிசோதனையும் செய்யலாம்னு திட்டமிட்டிருக்கோம்...

ஹார்ட் ன உடனே எனக்கு உங்க ஞாபகம் தான் வந்தது... " என்றாள்..

உடனே அவன் குறும்பாக அவளை பார்க்க, உடனே சமாளித்து கொண்டு

“ஐ மீன் நீங்கதான் ஹார்ட் டிசிஸ் ல லெட் ரைட் னு புகுந்து விளையாடறவர் ஆச்சே... அதான் உங்க கிட்ட அபிப்ராயம் கேட்கலாம்னு... " என்று இழுத்தாள்...

"ஹ்ம்ம்ம் குட் ஐடியா பனிமலர்... நானே இந்த மாதிரி ஒரு முகாம் நடத்தணும்னு ரொம்ப நாள் ஆசை.. ஆனால் நேரம் இல்லாததால் சரியாக திட்டமிட முடியவில்லை...

“சரி எந்த டேட் ??..” என்றான்...

“அடுத்த வாரம் ஞாயிற்றுகிழமை டாக்டர்...”

அதை கேட்டு சிறிது யோசித்தான் வசி....

"ஏன் டாக்டர்.?? .. நீங்க பிசியா??... நீங்க பிரியா இல்லைனா கூட உங்களுக்கு கீழ இருக்கிற கத்துகுட்டி டாக்டர்ஸ் யாராவது வந்தா கூட போதும்.. இது சும்மா விளக்கம் கொடுத்து அப்புறம் டெஸ்ட் பண்றது தான்....

அதோடு ஹார்ட் அட்டாக் ன எந்த மாதிரி மருத்துவமனையை அணுகவேண்டும் என்ற விளக்கமும் அந்த மருத்துவமனைகளின் தொலைபேசி எண்ணையும் எல்லோருக்கும் கொடுக்கலாம் னு இருக்கோம்....

"டாக்டர்.. உங்க பிரண்ட் டோட RJS ஹாஸ்பிட்டல் பற்றியும் சொல்லலாமா?? " என்றாள் ஆர்வமாக

“ஸ்யூர்... கண்டிப்பா.. ஆனா அது முழுக்க முழுக்க வறுமை கோட்டிற்கு கீழ இருக்கிறவங்க ட்ரீட்மென்ட் செய்ய முடியாத வசதி இல்லாதவங்களுக்கு மட்டும் தான்... " என்றான்....

"ஹ்ம்ம் ஒரு சந்தேகம் டாக்டர்... " என்றாள் மலர் இழுத்தவாறு..

"என்ன ?? “ என்பதாக புருவம் உயர்த்தினான் வசி...

"எப்படி அவங்க வறுமை கோட்டிற்கு கீழ இருக்கிறவங்கனு கண்டு பிடிப்பாங்க... யாராவது சும்மா கூட ஏமாத்தலாம் இல்லையா?? " என்றாள்...

"ஹ்ம்ம் குட் கொஸ்டின்... அதுக்குத்தான் வரும்பொழுது அவங்களோட ரேசன் கார்டை கொண்டு வரணும்.. அதில கடந்த 6 மாதம் இல்லை 1 வருடமாக வாங்கி இருக்கும் ரேசன் பொருட்களை வைத்தே தெரிந்து விடும் அவர்களின் பொருளாதார நிலை....

உடனே அதையும் ஏமாத்தினா ?? னு கேட்காதா?? அப்படியும் ஏமாற்றிதான் இந்த ட்ரீட்மென்ட் பண்ணனும்னு வர்ர்வங்களுக்கும் தாராளமா ட்ரீட்மென்ட் பார்ப்போம்... எதுனாலும் ஒரு உயிரை காப்பது என்பது இம்பார்ட்டன்ட்..." என்றான்...

"வாவ்... சூப்பர் ஐடியா டாக்டர்.. உங்க பிரண்ட் உங்களை மாதிரி இல்லை போல.. கொஞ்சம் புத்திசாலித்தனமா யோசிச்சிருக்கார்.. " என்று சிரித்தாள்..

அவளை செல்லமாக முறைத்தவன்

“இது என் பிரண்ட் ஓட ஐடியா இல்லை...அவன் வொய்ப் பாரதி சிஸ்டர் ஓட ஐடியா... இப்ப ஒத்துக்கறியா அவனும் என்ன மாதிரி தான் னு..” என்று சிரித்தான்...

“அதோட இங்கு வழங்கபடும் ட்ரீட்மென்ட் பார்த்து நிறைய பேர் டிஸ்சார்ஜ் ஆகி போகும் பொழுது தானாகவே முன் வந்து அவர்கள் கையில் இருக்கும் பணத்தை நன்கொடையாக அந்த ட்ரஸ்ட் க்கு வழங்கி செல்கின்றனர்.... " என்றான் பெருமையாக.

அதற்குள் அவனுக்கு அலைபேசியில் அழைப்பு வர, அதை எடுத்து பேசியவன் முகம் கலவரமானது...

"ஹ்ம்ம்ம் உடனே வர்ரேன்.. " என்றவாறு அழைப்பை துண்டித்தவன்

"சாரி. பனிமலர்... ஒரு அவசர கேஸ்.. RJS போகணும்.. நீ சொன்ன மாதிரியே அடுத்த வாரம் கேம்ப் ஏற்பாடு பண்ணிடலாம்..

நான் என் ஜூனியர் ஒருத்தரை ஏற்பாடு பண்றேன் உனக்கு டீடெய்ல்ஸ் கொடுக்க.. அவர் கிட்ட கேட்டு எல்லாம் பார்த்துக்கோ....

எதுவும் சந்தேகம் ன அப்புறம் போன் பண்ணு..பை "என்றவாறு அவசரமாக கிளம்பி சென்றான்....

அவன் சென்ற திசையையே பார்த்து கொண்டிருந்தாள் மலர்....

இதுவரை எவ்வளவு ஜாலியாக பேசிகிட்டிருந்தான்.. கொஞ்சம் கூட பெரிய டாக்டர் என்ற பந்தாவே இல்லாமல் இயல்பா பேசுவதை கண்டு ஆச்சர்யமாக இருந்தது....

அதோடு அவனுடைய வசீகர புன்னகையும் நினைவு வர,

"ஸ்வீட் மெக்கானிக்... " என்று சிரித்து கொண்டாள்... பின் தன் எண்ணம் போகும் போக்கை நினைத்து திடுக்கிட்டாள்...

அதே நேரம் அவள் அன்னை காலையிலும் சற்று முன்பும் அவளை அழைத்து ஒன்றை அவளுக்கு ஞாபக படுத்த, அப்பொழுது தான் அவள் நிலை என்னவென்று உணர்ந்தாள்....

உடனே தன் எண்ணத்திற்கு கடிவாளம் இட்டு தன் இதயத்தில் போட்டு பூட்டி வைத்து பின் பில்லை கட்டிவிட்டு எழுந்து வீட்டிற்கு கிளம்பினாள் பனிமலர்....



அப்படி என்னதான் அவள் இதயத்தில் இருக்கிறதாம்?? விரைவில் தெரிந்து கொள்ளலாம்....

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!