தவமின்றி கிடைத்த வரமே-7
அத்தியாயம்-7
பனிமலர் முன்னால் செல்ல பின்னால் அவள் வண்டி ஓட்டும் அழகையே ரசித்த வண்ணம் காரில் பின் தொடர்ந்தான் வசீகரன்.. அந்த மருத்துவமனையை அடைந்ததும் இருவரும் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு அந்த மருத்துவமனைக்குள் உள்ளே செல்ல, எதிரில் வருபவர்கள் வசியை அடையாளம் கண்டு கொண்டு அவனுக்கு விஷ் பண்ணினர்...
அவனும் புன்னகைத்தவாறு முன்னே நடந்தான்...
மலருக்கு ஆச்சர்யமாக இருந்தது..
“எப்படி எல்லாருக்கும் இவனை தெரிந்திருக்கிறது ?? என்று..
அவள் அறியவில்லை.. வசி அந்த மருத்துவமனைக்கு விசிட்டிங் டாக்டர்... வாரத்தில் ஒரு நாள் மட்டும் அங்கு வருவான்.. அதோடு கிரிட்டிகல் அன்ட் காம்ப்ளக்ஷ் ஆன ஹார்ட் சர்ஜரிக்கு அவனைத்தான் அழைப்பார்கள்...
எல்லாவித இதய நோய்க்கும் அவன் புகழ்பெற்று விழங்குவதால், அவன் வரும் அந்த ஒரு நாளில் மட்டும் பேசன்ட்ஸ்கள் எண்ணிக்கை நிரம்பி வழியும்.. கலெக்சனும் கூடத்தான்...
வழியில் பார்க்கும் சில டாக்டர்கள் மற்றும் செவிலியர்களை கூட புன்னகையுடன் எதிர் கொண்டு முன்னே நடந்த அவனை காணவே அவளுக்கு வியப்பாக இருந்தது...
இங்கயே பல டாக்டர்களை பார்த்திருக்கிறாள்.. ஏனோ அவர்களுக்கு கொம்பு வந்ததைப் போல ஒரு புன்னை கூட சிந்த மாட்டார்கள்.. ஆனால் இவன் அனைவரிடமும் சிரித்த முகமாக எதிர்கொள்ள ஆச்சர்யமாக இருந்தது அவளுக்கு...
மலர் அதற்குள் கீர்த்தி அட்மிட் பண்ணியிருந்த அறைக்குள் நுழைய , அவர்களை கண்டதும் அந்த குட்டியின் தாய் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தார்....
அவள் கணவன் ஒரு ஆட்டோ ட்ரைவர் என்றும் அன்று ட்யூட்டிக்கு போயிருப்பதாகவும் அவர் கூற, வசியும் புன்னகைத்து கீர்த்தியின் அருகில் சென்றான்...
அவனை பார்த்து அந்த குட்டியும் அழகாக புன்னகைத்தாள்..
நோயின் தாக்கத்தால் மெலிந்திருந்தாள்...ஆனாலும் தன் வேதனையை மறைத்துகொண்டு அழகாக சிரித்தாள்
பின் வசியின் பின்னால் நின்றிருந்த மலரை கண்டதும்
“ஹை... ஜில்லு அக்கா... “ என்று கை தட்டினாள்...
“ஜீல்லு அக்காவா?? “என்றான் மலரை குறும்பாக பார்த்தவாறு
“ஆமாம் மாமா.... பனி னா ஜில்லுனு தான இருக்கும்.. அதான் அக்காவுக்கு நான் ஜில்லு னு பேர் வச்சிருக்கேன்.... நல்லா இருக்கா மாமா?? .. பிடிச்சிருக்கா... ?? “ என்றாள் சிரித்தவாறு...
“ஓ.. சூப்பர்.. ரொம்ப பிடிச்சிருக்கு... “ என்றான் அவளை குறும்பாக சிரித்தவாறு...
அவனுக்கு ஆச்சர்யம் நான் வைத்த அதே பெயரை அந்த குட்டியும் வச்சிருக்காளே என்று...
“கீர்த்தி பேபி.. அப்ப நானும் இந்த அக்காவை ஜில்லுனு கூப்பிடவா?? “என்றான் மலரை ஓரக் கண்ணால் பார்த்தவாறு...அதை கேட்டதும்
“ஐ.. சூப்பர் மாமா...
நான் கூப்பிடறதை விட நீங்க கூப்பிடறது தான் இன்னும் சூப்பரா இருக்கு.. இல்ல ஜில்லு... " என்று மலரை பார்த்து கண் சிமிட்டினாள் அந்த குழந்தை..
"ஏய்.. வாயாடி...விட்டா எங்கப்பா அம்மா வச்ச பேரை அழிச்சுட்டு இதையே நிரந்தரமா ஆக்கிடுவ போல இருக்கு... ஹ்ம்ம் போனா போகுது.. இந்த கீர்த்தி குட்டி சந்தோசத்துக்காக நீ எப்படி வேனா என்னை கூப்பிடலாம்... "என்று அவளை கட்டி கொண்டாள் மலர்..
இதுவரை வாடியிருந்த தன் குழந்தை இப்படி சிரித்த முகமாக இருக்க அதை கண்ட அந்த தாய்க்கு மனம் மகிழ்ந்தது....
“என் குழந்தை இப்படியே சிரிச்சுகிட்டு இருக்க வச்சுடு ஆண்டவா .. “என்று வேண்டிக் கொண்டாள்....
பின் மலர் சென்று கீர்த்தியின் அம்மாவிடம் டாக்டர் சொன்ன பிளானை விளக்கினாள்...
வசீகரன் அந்த குழந்தையின் நாடி பார்த்தும் கண்ணை விரித்து சில டெஸ்ட்களை செய்தான் ஒரு மருத்துவனாய்...
“எல்லாம் சரியா இருக்கா மாமா?? “ என்றாள் சிரித்து கொண்டே....
“ஹ்ம்ம்ம் எல்லாம் சூப்பரா இருக்குடா கீர்த்தி குட்டி..நீயும் சீக்கிரம் எழுந்து உன் ப்ரண்ட்ஸ் மாதிரி விளையாடலாம்..” என்றான் சிரித்தவாறு...
அவளும் புன்னகைக்க, பின் அந்த குழந்தையின் அருகில் குனிந்தவன்
“கீர்த்தி பேபி.. அது என்ன என்னை மாமானு கூப்பிடற?? “என்றான் ரகசியமாக....
“ஹீ ஹீ ஹீ.. நீங்க ஜில்லு அக்கா கூட ஒன்னா நின்னப்போ சூப்பரா இருந்துச்சு மாமா... அக்காவுக்கு பொருத்தமா இருந்தீங்க.... அதான் உடனே மாமானு கூப்டிட்டேன்.... பிடிச்சிருக்கா?? .” என்றாள் சிரித்தவாறு...
“ஹ்ம்ம்ம்ம்....” என்றான் கண்களை மூடி தலையை மெல்ல அசைத்து...
“எது பிடிச்சிருக்கு??? நான் மாமானு கூப்பிடறதா?? இல்லை ஜில்லு அக்காவையா?? “என்றாள் கண் சிமிட்டி....
“ஹா ஹா ஹா... இரண்டும் தான்....” என்று அவனும் கண் சிமிட்டி குறும்பாக சிரித்தவாறு குனிந்து அவள் பட்டு கன்னத்தில் முத்தமிட்டான்....
அதை கண்ட மலர்,
“ஓய்... வாயாடி... என்ன அங்க ரகசியம் பேசறீங்க இரண்டு பேரும்...”என்றவாறு அருகில் வந்தாள்...
“ஹீ ஹீ ஹீ.. நீயே அதை ரகசியம்னு சொல்லிட்ட... ரகசியத்தை போய் யாராவது வெளில சொல்லுவாங்களா?? ...ஐயோ... மக்கு ஜில்லு அக்கா....” என்று தலையில் அடித்து கொண்டாள் கீர்த்தி....
“ஹ்ம்ம்ம்ம் உனக்கு ரொம்ப வாய் ஜாஸ்தி ஆயிடுச்சுடி... என்னை விட ரொம்ப பேசற..” என்றவாறு அவள் கன்னத்தை செல்லமாக கிள்ளினாள் மலர்....
வசீகரனும் சிரித்துக் கொண்டே
“நீங்க இங்க இருங்க...நான் போய் கீர்த்தியை பார்த்த டாக்டரையும் இந்த ஹாஸ்பிட்டல் MD ஐயும் பார்த்துட்டு வந்திடறேன்.. “ என்றவாறு வெளியில் சென்றான்....
பனிமலர் அந்த குழந்தையிடம் விளையாண்டு கொண்டிருக்க, சிறிது நேரத்தில் திரும்பி வந்தான் வசீகரன்....
“ஓகே.. பனிமலர்.. நான் அவர்களை பார்த்து பேசிட்டேன்.. அவங்களும் ஒத்துகிட்டாங்க.. நாளைக்கு காலையில் கீர்த்தியை RJS ல் சேர்த்துடலாம்.. ஆபரேசனுக்கான பார்மலிட்டிஸ் எல்லாம் ஆரம்பிச்சுடலாம்... மோஸ்ட்லி நாளை மறுநாள் ஆபரேசன் வச்சுக்கலாம்... “ என்றான்...
அதை கேட்டதும் மலரின் கண்கள் விரிந்தன ஆச்சர்யத்தில்...
அந்த தாய் அவன் அருகில் வந்து உணர்ச்சிவசப்பட்டு நன்றி சொல்லி கை குவிக்க,, அவன் சிரித்து கொண்டே அவரை சமாதானபடுத்தினான்.... பின் சிறிது நேரம் பேசிய பின் இருவரும் அவர்களிடம் விடைபெற்று கிளம்பிச் சென்றனர்.....
பார்க்கிங் ஐ நோக்கி நடக்க, எப்பொழுதும் வேக நடையில் நடப்பவன் இன்று அவளும் இணைந்து நடக்க என்று கொஞ்சம் மெதுவாக நடந்தான்... பனிமலரும் அவனுடன் ஒட்டி நடக்க, அவ்வபொழுது இலேசாக உரசிய அவள் மேனியின் மென்மை அவனுக்குள் சிலிர்த்தது...
ஹாஸ்பிட்டல் விட்டு வெளியில் வந்ததும்
“டாக்டர்.... ஒரு சந்தேகம்.... “ என்றாள் மலர்
“என்ன?? “என்றான் புருவங்களை உயர்த்தி...
“வந்து... நான் போய் கீர்த்தியை வேற ஹாஸ்பிட்டல் மாத்தறோம் என்று சொன்னதுக்கு அந்த சொட்டை மறுத்திட்டார்..”
“என்னது சொட்டையா?? “ என்றான் புரியாதவனாக
“ஹீ ஹீ ஹீ.. அந்த MD க்கு மண்டையில முடியே இல்லை டாக்டர்... வழுவழு னு இருந்ததா அதான் சொட்டைனு பேர் வச்சிருக்கேன்.. “ என்றாள் ரகசியமாக...
அவன் செல்லமாக முறைக்கவும்
“ஹீ ஹீ ஹீ அதை விடுங்க...ஆமா.. நான் போய் கேட்டப்போ இடையில் மாத்தறதா இருந்தா நிறைய பணம் கட்டணும் அது இது னு என்னை மிரட்டினார் அந்த MD ... அந்த டாக்டரும் கூடத்தான்... ஒத்துக்கவே இல்லை... அது எப்படி நீங்க கேட்டதும் ஒத்துகிட்டார்.?? “என்றாள் கேள்வியாக
கீர்த்தியை பார்த்த டாக்டர் , வசீகரன் ஜூனியர் தான்.. வசீகரன் அவனை தேடி வரவே ரொம்ப ஆச்சர்யமாகி போனது.. வசீகரனை சாதாரணமாக பிடிக்க முடியாது..
எப்பவும் பிசியாக இருக்கும் புகழ் பெற்ற வசியே தன்னை தேடி வரவும் ஓடி வந்து கை பிடித்து குலுக்கி என்ன விசயம் என வினவ, வசியும் கீர்த்தியை பற்றி சொல்லி தானே அவளுக்கு சர்ஜரி பண்ணுவதாக சொன்னான்...
அவனும் சரியென்று ஒத்துக் கொண்டான்.. கீர்த்தியின் நிலையை பற்றி அவனிடம் டிஸ்கஸ் பண்ணிவிட்டு அந்த மருத்துவமனையின் MD ஐ சந்தித்தான்....
அவருமே வசீகரனை ஆச்சர்யத்தோடு வரவேற்றார்....
அவரிடம் கீர்த்தியை பற்றி சொல்ல, முதலில் அவளை அனுப்ப தயங்கினார்....
“இந்த பொண்ணு உங்களுக்கு தெரிஞ்ச பொண்ணு னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா ஃபீஸ் எதுவுமே வாங்கி இருக்க மாட்டேன்... இப்பவும் ஃபீஸ் எதுவும் வேண்டாம் வசீகரன்.. இங்கயே பாருங்களேன்.. “ என்றார்..”
அவருக்கு வசியோட நட்பு வேண்டியதாக இருந்தது...
அந்த மருத்துவமனையில் அதிக வருவாய் வருவது முக்கியமாக வசி அந்த மருத்துவமனைக்கு விசிட்டிங் டாக்டராக வருவதாலேயே....
அவன் எத்தனையோ முறை இங்கு வர மறுத்தாலும் அவர் நாதனின் நண்பன் என்பதால் அவரிடம் சொல்லி ஒரு நாள் மட்டும் வசியை வரவைத்திருந்தார்....
அதோடு வசியின் குணம் அவருக்கு பிடித்து விட, எப்படியாவது அவனை தன் மறுமகனாக்கி கொள்ள முயன்று வருகிறார்...
அதனால் இப்பொழுது அவனே இந்த ஏழை பெண்ணிற்கு உதவ வர, தானும் அந்த பெண்ணிற்கு உதவ என்று அவனை வளைக்க நினைத்தார்....
ஆனால் அவர் என்ணம் புரிந்தோ என்னவோ வசி அதை மறுத்து விட்டான்... இலவசமாக பணி செய்யும் RJS க்கே அழைத்து செல்கிறோம்.. உங்களுக்கு வீணாக செலவு வேண்டாம்... “ என்று மறுத்து விட்டான்..
அவர் எவ்வளவோ வற்புறுத்தியும் அதை மறுத்து விட, கடைசியில் அவரும் ஒத்து கொண்டார்.. “இங்கு இது நாள் வரை தங்கியிருந்த பணத்தையாவது கட்ட வேண்டாம்.... “என்று கேட்க வசியும் ஒத்து கொண்டான்....
அதை நினைத்தவன் மலர் கேட்டதும் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன்
“ஹ்ம்ம்ம் இப்ப தெரியுதா?? அதான் ஐயாவோட பவர்... “ என்று தன் காலரை தூக்கி விட்டுக் கொண்டான்....
“ஐய.. ரொம்பத்தான்... “ என்று தன் கழுத்தை நொடித்தாள் பனிமலர் செல்லமாக முறைத்தவாறு...
அவளின் அந்த முக பாவத்தையும், செல்ல சிணுங்களையும், குறும்பு சிரிப்பையும் ரசித்து தன் இதயத்தில் பத்திரமாக பூட்டி வைத்துக் கொண்டான் வசீகரன்.....
ஆனால் தன்னவளின் மனதில் அவள் என்ன பூட்டி வைத்திருக்கிறாள் என்று அறிய, ஆராய மறந்து விட்டான்...
அப்படி என்ன பூட்டி வைத்திருக்கிறாள் அவன் நாயகி?? வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்..
Comments
Post a Comment