தவமின்றி கிடைத்த வரமே-11



அத்தியாயம்-11

டுத்த வாரம் ஞாயிற்றுகிழமை....

காலையில் எழும்பொழுதே மிகவும் உற்சாகமாக இருந்தான் வசி... வாயில் தானாக தனக்கு பிடித்த பனிவிழும் மலர்வனம் பாடலை பாடி கொண்டே குளியலறைக்குள் சென்று ரெப்ரெஸ் ஆகி வந்தான்...

அவன் உற்சாகத்திற்கு காரணம், பனிமலர் கேட்டுகிட்டதற்காக அவள் இன்று ஏற்பாடு பண்ணியிருந்த இதயம் பற்றியதான விழிப்புணர்வு முகாம்தான்...

இந்த மாதிரி முகாம்களை ஏற்கனவே நடத்தியிருக்கிறான்.. அப்பொழுதெல்லாம் இல்லாத உற்சாகம் இன்று ஏன் என ஆராய, அப்பொழுதுதான் புரிந்தது..

அந்த முகாமை விட அதில் முக்கிய பொறுப்பேற்று நடத்துபவள் தன் இதய ராணி, அந்த வாயாடியை இன்று நாள் முழுவதும் பார்த்து கொண்டிருக்க போகிறான்...

எப்பயாவது ஒரு மணி நேரம் மட்டுமே கிடைக்கும் அவளின் தரிசனம் இன்று ஒரு நாள் முழுவதும் என நீண்டிருப்பதே அவன் உற்சாகத்துக்கு காரணம்...

திருப்பதிக்கு செல்பவர்கள் மணிக்கணக்கில் கால் வலிக்க காத்திருந்து அந்த பாலாஜியை சந்திக்கும் பொழுது சில நொடிகள் மட்டுமே அவரை காண அனுமதி கொடுத்து ஜர்கண்டி ஜர்கண்டி என விரட்டி விடுவது மாறி ஒரு நாள் முழுவதும் அங்கயே அமர்ந்து அந்த பாலாஜியை தரிசிக்கலாம் என்ற வரம் கிடைத்தால் அந்த பக்தர்கள் எப்படி மகிழ்ந்து போவார்களோ அதே மகிழ்ச்சி வசீகரனுக்கு இன்று...

அதோடு இன்று எப்படியாவது தன் காதலை அவளிடம் சொல்லி விடவேண்டும் என்று நேற்றிலிருந்து ஒத்திகை பார்த்து வருகிறான்...

அதற்கான சந்தர்ப்பம் இன்றுதான் அமைந்திருக்கிறது..

எப்படியும் முகாம் முடிந்து திரும்பும்பொழுது அவளை தன்னுடன் காரில் அழைத்து வந்து அவளிடம் தன் காதலை சொல்ல வேண்டும் என்று இரண்டு நாட்கள் முன்பே முடிவு செய்திருந்தான்...

காதலை சொல்ல வேண்டும் என்றதும் உடனே என்ன காதல் பரிசு கொடுப்பது என யோசித்து வழக்கமாக எல்லா காதலர்களும் கொடுக்கும் அதே மோதிரத்தையே பரிசாக கொடுக்கலாம் என்று முடிவு செய்தான்....

அடுத்து என்ன மாதிரி டிசைன் வாங்குவது என்று குழம்ப அப்பொழுதுதான் AN Jewellery ன் மகளிர் பிரிவில் நமக்கு பிடித்த டிசைன்களை நாமே வடிவைத்து கொள்ளலாம் என்று மித்ரா அவனிடன் ஒரு முறை சொல்லியிருந்தது நினைவு வந்தது...

அவள் தன் பெற்றோரின் திருமண நாளுக்கு அது மாதிரி ஒரு புது டிசைனில் மோதிரம் வடிவமைத்து அவர்களுக்கு பரிசாக கொடுத்திருந்தாள்..

அதை பற்றியும் அந்த கடையை நடத்தி வரும் பவித்ரா மற்றும் சரண்யாவை பற்றியும் சிலாகித்து பேசினாள் ஒரு முறை..

(ப்ரண்ட்ஸ்... உன்னை விட மாட்டேன் – என்னுயிரே படித்தவர்கள்க்கு AN Jewellery ன் மகளிர் பிரிவை பற்றியும் மற்றும் பவித்ரா மற்றும் சரண்யாவை பற்றியும் தெரிந்திருக்கும்... அவர்களே தான் இவர்கள்... )

மித்ரா சொன்னது இப்பொழுது ஞாபகம் வர, உடனே அந்த கடையின் வெப்சைட்டிற்கு சென்று ஆராய்ந்தான்....

மித்ரா சொன்ன மாதிரியே அந்த வெப்சைட்டில் கஸ்டமர்கள் அவர்களுக்கான டிசைனை வரைய என்ற வசதியும் அதோடு எப்படி அதை உருவாக்குவது என்ற செய்முறை விளக்கமும் ( demo) இருந்தது....

அதை ஒரு முறை பார்த்துவிட்டு அவன் ஏதோ டிசைன் ஐ ஊருவாக்க முயல, ட்ராயிங் லயும் கிரியேட்டிவிட்டிலயும் ஜீரோ ஆன வசிக்கு எதுவும் சரியாக வரவில்லை...

சே.. என்று சலித்துகொண்டு மேலும் அந்த சைட் ஐ நோண்ட அடுத்து இவனை போன்ற ஆட்களுக்கு உதவ என்றே இன்னொரு வசதி இருந்தது...

கஸ்டமர்களுக்கு எந்த மாதிரியான டிசைன் வேண்டும் என்று கண்டறிய சில கேள்விகளை (questionaries) கேட்டு அதிலிருந்து அவர்கள் எது மாதிரி எதிர்பார்க்கிறார்கள் என்று கண்டறிந்து அதற்கு தகுந்த மாதிரியான சில ரெடிமேட் டிசைன்களை அவர்களே சஜஸ்ட் பண்ணுவதை போலவும் இருக்க, வசி உடனே அதை ட்ரை பண்ணினான்...

அதில் முதல் கேள்வியே யாருக்காக இது என வர அதில் எல்லா உறவு முறைகளும் இருந்தது.. அதில் Lover என்று செலக்ட் பண்ண, அடுத்து இருக்கும் கேள்விகள் அதற்கு தகுந்த மாதிரி மாறின...

ஒவ்வொன்றையும் படிக்க அவனுக்கு சுவாரஷ்யமாக இருந்தது..

காதலர் ஆணா, பெண்ணா என்று ஆரம்பித்து அவர்களுடைய பெயர் அல்லது பெயருடன் தொடர்புடையவை, காதல் தோன்றியதையும், காதலர்களுடைய குணம் என்று சில கேள்விகள் இருக்க, இதெல்லாம் தேவையா என்று சிறு எரிச்சல் வந்தாலும் அதை பில் பண்ணும் பொழுதே தங்கள் காதல் பிறந்த நொடிகளை மீண்டும் ஒரு முறை நினைத்து பார்த்து பரவசமடைய வைத்தது....

எல்லா கேள்விகளையும் முடிக்க, சில விநாடிகள் ப்ராசஸ் ஆகி திரையில் சில டிசைன்கள் தோன்றின... அதை கண்டு துள்ளி குதித்தான் வசி...

அவன் பதில் சொல்லியதை வைத்து எல்லா டிசைன்களுமே இதயம் சம்பந்தமாக இருக்க, ஒரு டிசைனில் இதயத்திற்குள் ஒரு ரோஜா மலர் வீற்றிருக்க, அதன் மேல பனித்துளிகள் இருப்பதை போல இருந்தது....

அது அவன் இதயத்தில் அந்த பனிமலர் வீற்றிருப்பதை அழகாக எடுத்து காட்ட, அதை கண்டு வாவ்... என்று துள்ளி குதித்தான்...

தான் அளித்த விவரங்களை கொண்டே அந்த டிசைனை கண்டு பிடித்து ரெகமண்ட் பண்ணும் அந்த வசதியை அறிமுகபடுத்திய அந்த கடையின் உரிமையாளரான அந்த இரண்டு பெண்களையும் மெச்சி கொண்டான்....

அதனால்தான் இன்று சென்னை மட்டும் இல்லாமல் பிற மாநிலங்களிலும் ஏன் உலக அளவில் இருக்கும் இந்தியர்கள் மத்தியில் இந்த கடை மிகவும் பிரபலமடைந்து வருவது புரிந்தது...

அந்த டிசைனை உடனே தேர்வு செய்து ஆர்டர் பண்ணி, அவனே நேரில் சென்று வாங்கி கொள்வதாக சொல்லியிருந்தான்.... நேற்று மாலை மறக்காமல் அந்த கடைக்கு சென்று அந்த மோதிரத்தை வாங்கி வந்திருந்தான்....

“அதை இன்று என்னவளுக்கு அணிவித்து என் காதலை சொல்ல போகிறேன்.. “ என்று நினைக்க, இன்னும் மனதில் உற்சாகம் கூடியது அவனுக்கு...

அதே உற்சாகத்துடன் தன் காலை ஓட்டத்தை முடித்து திரும்பி வந்து அவசரமாக குளித்து தயாராகி நேற்று வாங்கி வைத்திருந்த அந்த சின்ன பெட்டியை எடுத்தான்

பெட்டியை கூட அழகாக வடிவமைத்திருந்தனர்....

இதய விடிவிலான பெட்டியை திறந்து உள்ளே இருந்த அந்த மோதிரத்தை மீண்டும் கையில் எடுத்து பார்க்க, அவனுள்ளே பனிமழை பொழிந்தது...

இதை அவளின் அந்த மென்மையான விரலில் அணிவித்து அழகு பார்த்தான் கற்பனையில்..

அந்த கற்பனையே தித்திக்க, இதுவே நேரில் இருந்தால் இன்னும் எப்படி இருக்கும் என்று குதூகாலித்து அந்த பெட்டியை தன் பான்ட் பாக்கெட்டில் வைத்து கொண்டு துள்ளலுடன் மாடிப்படியை இரண்டு இரண்டாக தாவி இறங்கினான்....

தன் மகனின் முகத்தில் தெரிந்த மலர்ச்சியையும் , வித்தியாசத்தையும் கண்டு மீனாட்சி மற்றும் சுந்தர்க்கும் சந்தோசமாக இருந்தது....

அவர்களும் அவனை சிரித்து கொண்டே வரவேற்று எதுவும் நோண்டாமல் காலை உணவை முடித்து அவர்களுக்கு கை அசைத்து விடை பெற்று தன் காரை எடுத்து முகாம் நடக்கும் அந்த கிராமத்தை நோக்கி செலுத்தினான்....

சாலையின் இரு பக்கமும் பச்சை பசேல் என்ற வயல் வெளிகளுடன் அழகாக மிளிர்ந்தது அந்த கிராமம்... நகரத்தின் இரைச்சல் இல்லாமல் மனதிற்கு இதம் தருவதாய் இருக்க, மாலையில் இங்கு வந்துதான் காதலை சொல்ல வேண்டும் என்று குறித்து கொண்டான்....

அந்த வயல் வெளிகளையும் அங்கு வேலை செய்பவர்களையும் ரசித்து கொண்டே மலர் அனுப்பி இருந்த மேப் ஐ பாலோ பண்ணி காரை ஓட்டினான்...

கார் சென்று ஒரு இடத்தில் நிக்க அங்கு முகாம் நடைபெற எல்லா ஏற்பாடுகளும் செய்யபட்டு தயாராக இருந்தது...

அந்த கிராமத்தின் மத்தியில் இருக்கும் ஆரம்ப பள்ளியில்தான் முகாமிற்கான ஏற்பாடுகள் செய்ய பட்டிருந்தன...

மலருக்கு தெரிந்த நண்பன் சேகர் இந்த கிராமத்தில் சேர்ந்தவன்... அவன் கேட்டு கொண்டதற்காகத்தான் இந்த முகாமை தன் தொண்டு நிறுவனத்துடன் பேசி முடிவு செய்தாள்....

முகாமிற்கான எல்லா ஏற்பாடுகளையும் சேகருடன் கலந்தாலோசித்து பின் இங்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகளை எல்லாம் அவனே தன் நண்பர்களுடன் இணைந்து பார்த்து கொண்டான்....

நேற்று இரவே அந்த ஊர் தலைவரிடம் சொல்லி கூட்டம் போட்டு இந்த முகாம் பற்றியும் அதன் முக்கியத்துவத்தை பற்றியும் விளக்கினர்...

அதோடு அந்த கிராமத்தில் இருந்த ஒவ்வொரு வீட்டிற்கும் மற்றும் அந்த கிராமத்தை சுற்றி இருக்கும் மற்ற கிராமங்களின் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பிட் நோட்டிஸ் கொடுத்து இருந்தனர்....

தன் காரை நிறுத்தியவன் விழிகள் தானாக தன்னவளை தேட, அவளோ படு சுறுசுறுப்பாக இங்கும் அங்கும் ஓடி கொண்டிருந்தாள்...

அதை கண்டு மெச்சி கொண்டே காரை விட்டு இறங்கி அங்கு சென்றான்...

அவனை கண்டதும் மலர் வேகமாக ஓடி வந்து

“ரொம்ப தேங்க்ஷ் டாக்டர்.. எனக்காக உங்க பிசி செட்யூலை விட்டு இவ்வளவு தூரம் வந்ததற்கு ...” என்று புன்னகைத்தாள்....

“உனக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் அன்பே.. இதை செய்ய மாட்டேனா?? “ என்று மனதுக்குள் சொல்லி கொண்டவன் அவளை பார்த்து புன்னகைத்தான்...

பின் மலர் அவனை அழைத்து சென்று அந்த தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் மணியம்மை என்பவருக்கு அறிமுக படுத்தினாள்....

60 வயதுக்கும் மேல் இருக்கும் அந்த பெண்மணி அந்த வயதிலும் உற்சாகமாக இந்த முகாமை பார்க்க இவ்வளவு தூரம் வந்தது ஆச்சர்யமாக இருந்தது வசிக்கு ....

அதையே அவரிடம் வாய் விட்டு சொல்ல

“ஹா ஹா ஹா... பனிமலர் போன்ற இளைஞர்கள் உடன் இருக்கும் பொழுது எனக்கு வயது ஆனதே தெரியறதில்லை டாக்டர்... அவளை பார்த்தாலே எனக்கும் ஒரு எனர்ஜி வந்திடுது... “ என்று சிரித்தார்....

“உங்களுக்கு மட்டுமா... எனக்கும் தான்.. “ என்று உள்ளுக்குள் சிரித்து கொண்டான்..

பின் அவர் கீர்த்தியின் ஆபரேசனை அவன் நல்ல படியாக முடித்ததற்கு நன்றி சொல்ல அவனும் இட்ஸ் ஒகே மேடம் என்றவாறு புன்னகைத்தான்....

முகாம் ஆரம்பிக்க இருக்க, ஓரளவுக்கு அந்த கிராமத்து மக்களும் சுற்றி இருக்கும் கிராமத்து மக்களும் மற்றும் அனைத்து ஊர் பள்ளி குழந்தைகளையுமே அழைத்து வந்திருந்தனர் அந்தந்த ஊர் தலைவர்கள்....

மாணவர்களுக்கும் இதை பற்றிய விழிப்புணர்வு இருந்தால் தங்கள் குடும்பத்தில் யாருக்காவது இந்த மாதிரி வந்தால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது தெரிந்திருக்கும் என்ற எண்ணத்தில்...

அந்த ஊர் தலைவர் அந்த முகாம் நடத்த வந்திருக்கும் அனைவரையு ம் வரவேற்று அவர்களுக்கு நன்றி சொல்லி முகாமை ஆரம்பித்து வைத்தார்...

பின் வசீகரன் எழுந்து சென்று அங்கிருந்த மைக்கை வாங்கி இதயத்தை பராமரிப்பதின் முக்கியத்துவத்தை பற்றியும் என்ன மாதிரியான இதய நோய்கள் வரலாம், அதன் அறிகுறிகள் அதை எப்படி முதல் உதவி செய்வது என்று சுவாரஷ்யமாக விளக்கினான்...

அவனின் ஆறடி உயரமும் அழகிய தோற்றமும் அவனுடைய் கம்பீரமான குரலும் புன்னகையோடு ஒவ்வொன்றையும் விளக்கிய விதமும் கண்டு, அனைத்து மக்களும் மெய் மறந்து கேட்டு கொண்டிருந்தனர்....

பனிமலரோ அசந்து நின்றாள்.. இதுவரை அவன் இதுமாதிரி ஒரு சீரியசாக, புரபசனாலக பேசி பார்த்ததில்லை... அவளுடன் பேசும் பொழுது எப்பவும் குறும்புடன் பேசுபவன் இப்பொழுது வேறாக மாறி இருந்தான்...

இவனை போயா நான் டுபாக்கூர் டாக்டர் னு ஓட்டினேன்.. என்று தன்னையே திட்டி கொண்டாள்...

வசீகரன் விளக்கி முடித்ததும் அனைவரும் கை தட்டி பாராட்ட அடுத்து ஹார்ட் அட்டாக் வந்தால் முதலுதவி எப்படி செய்வது என்ற செய்முறை விளக்கமும் காண்பித்தனர்....

அதன் பிறகு மூளையை பற்றி விளக்க, அங்கு வந்திருக்கும் neuro specialist டாக்டர் நந்தனை அழைத்தான் வசி...

நந்தன்—வசி எப்படி cadio ல் famous ஓ அதே மாதிரி neuro ல் ஒரு புகழ்பெற்ற மருத்துவன்... ஒரு கான்பிரன்ஸில் வசியும் நந்தன் ம் சந்தித்து கொள்ள, இருவரும் வேற வேற துறை என்றாலும் அவர்களுடைய துறையை பற்றி விவாதிக்க, அதில் இருந்து நண்பர்களாகினர்..

மலர் இந்த முகாம் பற்றி சொன்ன பொழுது, வசிதான் மூளையை பற்றியும் விளக்கலாம்... தற்பொழுது மூளை சமபந்தமான நோய்களும் பரவி வருகிறது.. அதை பற்றியும் ஒரு விழிப்புணர்வு இருக்க வேண்டும் என்று டாக்டர் நந்தனிடம் கேட்க அவனும் உடனே ஒத்து கொண்டான்...

மூளையில் வரும் சில நோய்களை பற்றி விளக்கி அதில் குறிப்பாக மூளையின் இரத்த குழாய் வெடிப்பு என்பது பரவலாக பரவி வருவதை அந்த கிராம மக்களுக்கு எடுத்து கூறினான் நந்தன்..

இரத்த குழாய் வெடிப்பு என்பதும் ஹார்ட் அட்டாக் ஐ போல உயிருக்கு ஆபத்தானது.. சில நேரம் இரத்த குழாய் வெடிக்கும் பொழுது அதை தாங்க முடியாமல் சிலர் மரணித்து விடுவர்...

ஒரு சிலர் மட்டும் அதிலிருந்து தப்பிக்க இரத்த குழாய் வெடிக்கும்பொழுது தலைவலி பெரிதாக இருக்கும்... இதை மக்கள் சரியாக கண்டு கொள்வதில்லை..

அதிலும் கிராமபுற மக்கள் அதை பெரிதாக கண்டு கொள்ளாமல் அது சாதாரண தலைவலி என்று அதற்கான வைத்தியம் செய்கின்றனர்...

அந்த வெடிப்பை சரி செய்யாவிட்டால் அது உயிருக்கு விரைவில் ஆபத்தாக முடியும்... அதனால் அந்த மாதிரி சிம்டம்ஸ் இருக்கும் பொழுது அவர்கள் உடனே நரம்பு சம்பந்தபட்ட மருத்துவமனையை அணுகி பரிசோதிக்க வேண்டும்.. என்று விளக்கினான்...

அதை கேட்டு அங்கிருந்த மக்களுக்கும் அப்பொழுதுதான் விளங்கியது... அந்த கிராமங்களிலயே ஒரு சிலர் டாக்டர் சொன்ன மாதிரி சிம்டம்ஸ் ல் இறந்திருக்க அனைவரும் அது ஹார்ட் அட்டாக் என்று தான் எண்ணியிருந்தார்கள்...

நந்தனின் பேசை கேட்ட பிறகு தான் மூளையும் இதயத்தை போல எவ்வளவு முக்கியமானது என்று புரிந்து கொண்டனர்..

ஒரு பெரியவர் எழுந்து இது எதனால் வருகிறது டாக்டர் என்று கேட்க, நந்தனும் அவரை பாராட்டி மேலும் விளக்கினான்...

முக்கியமாக மூளையில் இரத்த குழாய் வெடிப்பு என்பது இரத்த அழுத்தத்தால் (blood Pressure) வருவது என்று விளக்கி 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தங்களுடைய blood Pressure ஐ மாதம் ஒரு முறையாவது செக் பண்ணவேண்டும்..



Pressure இருந்தால் அதற்கான ட்ரீட்மென்ட் ஐ முன்கூட்டியே எடுத்து கொள்ள வேண்டும்.. என்று விளக்கினான்... அதோடு நரம்பு சம்பந்தபட்ட நோய்களுக்கான புகழ்பெற்ற மருத்துவமனைகளின் பெயர்களை சொல்லி உடனே அங்கு அணுக சொல்லி அவன் உரையை முடித்தான்....

அனைவருக்குமே அந்த இரண்டு மருத்துவர்களின் விளக்கம் நிறைய விசயங்களை புரிய வைத்தது.. அனைவரும் மகிழ்ந்து அவர்களை பாராட்டி நன்றி சொல்லி சென்றனர்...

மதிய உணவு இடைவேளைக்கு பிறகு அனைவருக்கும் pressure செக்கப் மற்றும் இதய பரிசோதனை ம் இருப்பதாக சொல்லி பெரியவர்கள் அனைவரையு ம் அதில் தவறாமல் கலந்து கொள்ள சொல்லி காலை செஸ்ஸனை முடித்தனர்....

அந்த ஊர் தலைவர்களும் அவர்களை சந்தித்து மனதார பாராட்டினர்... மதிய உணவு ஊர் தலைவர் வீட்டில் இருந்து அந்த முகாமிற்கே கொண்டு வந்து கொடுத்தனர்...

அனைவரும் அதை வேகமாக உண்டு முடித்து செக்கப் அப்பயே ஆரம்பித்து இருக்க, வசி மற்றும் நந்தன் உடன் வந்திருந்த அசிஸ்டென்ட்ஸ் மூன்று பிரிவாக நின்று வருபவர்களை பரிசோதித்தனர்...

இதய அடைப்பு இருப்பதாக கண்டறிந்த சிலரை பெரிய டாக்டர் வசீகரனை சந்திக்க சொல்லி அனுப்பி வைத்தனர்...

அவனும் அவர்களுடைய ரிப்போர்ட்களை பார்த்துவிட்டு , அவர்களுடைய பொருளாதர நிலையை கேட்டு அறிந்து கொண்டு மேலும் அடுத்த டெஸ்ட் எடுக்க அவர்களின் நிலைக்கு தகுந்த மாதிரி மருத்துவமனையை சென்று பார்க்குமாறு அறிவுறுத்தினான்...

தாமதிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டான்... அதே மாதிரி Pressure இருப்பவர்களுக்கும் அங்கேயே மாத்திரைகளை வழங்கி மேலும் அதை குறைக்க செய்யும் சில பயிற்சிகளையும் விளக்கினர்...

ஒரு வழியாக மாலை 6 மணி அளவில் அந்த முகாம் வெற்றிகரமாக முடிய, மீண்டும் அனைவரும் அவர்களுக்கு நன்றி சொல்லி விடைபெற்றனர்...

அங்கு வந்திருந்த டாக்டர்களுக்கும் மனதிருப்தியாக இருக்க இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த பனிமலர், அவளுடைய நண்பன் சேகர் மற்றும் அந்த தொண்டு நிறுவனத்தின் தலைவர் மணியம்மைக்கும் நன்றி சொல்லினர்....

பின் அனைவரும் கிளம்ப, வசியும் விடைபெற்று அவன் காரை நோக்கி நடக்க அப்பொழுதுதான் அவனுக்கு நினைனவு வந்தது அவனுடைய திட்டம்...

வேலைனு வந்திட்டா வெள்ளைக்காரன் என்பது போல இதுவரை தன்னவளை பற்றிய நினைப்பே இல்லாமல் தன் தொழிலை மட்டுமே பார்த்து வந்தவனுக்கு இப்பொழுதுதான் நினைவு வந்தது தான் மலரிடம் பேச நினைத்ததை.....

இப்பொழுது எப்படி அவளை அழைப்பது என்று நின்று திரும்பி பார்க்க மலர் இவனை நோக்கித்தான் வேகமாக ஓடி வந்து கொண்டிருந்தாள்....

அவன் அருகில் வந்ததும்

"ஹப்பா... என்னா வேகம் நடக்கறீங்க டாக்டர்... உங்களை புடிக்கத்தான் இவ்வளவு நேரம் ஓடி வந்தேன்... ஃபாஸ்ட் ஆ நடக்கற போட்டி இருந்தால் அதில் நீங்கதான் பர்ஸ்ட் ப்ரைஸ் .." என்று சிரித்தாள்...

அவனும் புன்னகைத்தவாறு என்ன விசயம் என்று கேள்வியாக பார்க்க,

"டாக்டர்.. நான் காலையில் வந்த காரில் இடமில்லை.. நான் உங்க கார்ல வரவா?? என்னை வழியில எங்கயாவது ட்ராப் பண்றிங்களா?? நான் அங்கிருந்து போய்டறேன்... “ என்றாள்...

"ஆகா... பழம் நழுவி பாலில் விழுந்து அது நழுவி வாயில் விழுந்த மாதிரி. நானே அவளை அழைக்க எண்ணி இருக்க அவளே தானாக வருகிறேன் என்கிறாளே... " என்று துள்ளி குதித்தான் வசி...

"ஸ்யூர்.. பனிமலர்... வா... " என்றவாறு அவளுக்கு கார் முன் கதவை திறந்து விட்டு மறுபக்கம் சென்று ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து காரை கிளப்பினான்....

பின் சிறிது தூரம் சென்றதும்

"ரொம்ப நன்றி டாக்டர்... சூப்பரா இருந்தது இந்த கேம்ப்... அதுவும் உங்க பேச்சு செமயா இருந்தது... சான்சே இல்ல... எனக்கே நிறைய விசயம் இன்னைக்குத்தான் தெரிஞ்சுகிட்டேன்.... அதோட நந்தன் டாக்டரையும் கூட்டி வந்ததுக்கு ரொம்ப நன்றி... " என்று படபடவென பொரிந்தாள்...

அவளின் அந்த குதூகலமான முகத்தையே ஆவலுடன் ரசித்தவன் எதுவும் பேசாமல் மெல்லியதாக புன்னகைத்தான்...

பின் மலர் ஏதேதோ பேசி கொண்டு வந்தாலும் செவி அவள் பேசுவதை கேட்டாலும் அவன் இதயமோ அவளிடம் தன் காதலை எப்படி சொல்வது?? என்றே யோசித்து கொண்டு வந்தது....

கார் சன்னலின் கதவை இறக்கி விட்டிருக்க, அந்த மாலை நேரத்து மஞ்சள் வெயிலில் அந்த கிராமத்து தென்றல் காற்றும் கார் உள்ளே புகுந்து தாலாட்ட, அருகில் அவன் மனம் நிறைந்தவள் அவனை ஒட்டி அமர்ந்து இருக்க அந்த காட்சியே ரம்மியமாக இருந்தது அவனுக்கு....

உடனே நினைவு வர காரில் இருந்த FM ஐ ஆன் பண்ண, அவன் மனதிற்கு ஏற்ப அந்த பாடலும் அழகாக ஒலித்தது...

அழகாய் பூக்குதே… சுகமாய் தாக்குதே…
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே…

ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்…
அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும்…
காதலன் கைச்சிறை காணும் நேரம்
மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம்…



வசி ஸ்டியரிங் ல் தாளமிட்டு அந்த பாடலை ரசிக்க அவனை கண்ட மலருக்கு ஆச்சர்யமாக இருந்தது...

இந்த மாதிரி ஒரு இலகிய நிலையில் அவனை கண்டதில்லை அவள்.. எப்பொழுதும் பிசியாக இருப்பான் இல்லையென்றால் அவளிடம் குறும்பு பேசுபவனாக இருப்பான்...

இப்படி பாடலை ரசித்து அதுக்கு தகுந்த மாதிரி தாளமிடும் இந்த மருத்துவன் புதியவனாக தெரிந்தான் அவள் கண்ணுக்கு....

ஏனோ அவனின் இந்த இலகிய நிலையும் அவளுக்கு ரொம்ப பிடித்தது....

“திருமாலின் 10 அவதாரம் மாதிரி இவனும் தனக்குள்ளே ஒவ்வோரு அவதாரத்தை வைத்திருப்பான் போல.. " என்று சொல்லி சிரித்துகொண்டாள்...

காரை செலுத்திக் கொண்டிருந்தவன் காலையில் அவன் குறித்து வைத்திருந்த அந்த இடம் வந்திருக்க உடனே தன் காரை நிறுத்தினான்.....

திடீரென்று கார் நிக்கவும்

"என்னாச்சு டாக்டர்...?? " என்றாள் மலர்....

"ஹ்ம்ம்ம் ஒன்னுமில்லை ஜில்லு... உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.. பேசலாமா??” என்றான் உள்ளுக்குள் இருந்த தன் படபடப்பை மறைத்து கொண்டு...

"ஓ.. ஸ்யூர் டாக்டர்.. இதுக்கு போய் எதுக்கு பெர்மிசன் கேட்கறீங்க... " என்று கனனம் குழிய சிரித்தாள்...

அந்த மஞ்சள் வெயிலில் அவள் முகம் இன்னும் அழகாக ஜொலிக்க, அவளின் கன்னத்து குழியை நிமிண்ட துடித்த கரங்களை இழுத்து கொண்டான்...

அவளிடம் எப்படி ஆரம்பிப்பது என்று மீண்டும் ஒரு முறை ஒத்திகை பார்த்து கொண்டான்...

மலர் இன்னும் அவனையே பார்த்து கொண்டிருக்க,

"ஹ்ம்ம் சொல்லுங்க டாக்டர்... ஏதோ பேசணும்னு சொன்னிங்களே.. " என்றாள்....

அவனும் ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டு கொண்டு

"என்னை பற்றி என்ன நினைக்கிற?? " என்றான் ஆர்வமாக....

அதை கேட்டு திகைத்தவள் எதுவும் யோசிக்காமல்

"நீங்க ஒரு நல்லவர், வல்லவர், நாலும் தெரிஞ்சவர்.. முக்கியமாக ஹார்ட் பற்றி கரைத்து குடித்த ஒரு பிரில்லியன்ட் ஹார்ட் மெக்கானிக்... " என்று சிரித்தாள்....

"ஹ்ம்ம்ம் அப்புறம்?? உனக்கு பெர்சனலா என்னை பற்றி எப்படி தோணுது ??” என்றான் அவள் இதயத்தில் இருப்பதை அறிந்து கொள்ள....

"ஹ்ம்ம்ம் பெர்சனலா னா... என்னுடைய பெஸ்ட் பிரண்ட் நீங்க ... நான் எவ்வளவு ஓட்டினாலும் அசராமல் தாங்கும் வல்லவர்... " என்று மீண்டும் சிரித்தாள் வெகுளியாக அவன் என்ன சொல்ல வருகிறான் என்று தெரியாமல்....

"ஹ்ம்ம்ம் பிரண்ட் மட்டும்தானா?? " என்றான் மீண்டும் அதே ஆர்வ பார்வையுடன் தன் புருவங்களை உயர்த்தி குறும்பாக சிரித்தவாறு...

அவன் என்ன கேட்க வருகிறான் என்று புரியாமல் குழம்பியவள்

"டாக்டர்... நீங்க என்ன கேட்கறதாலும் டேரக்டா வே கேளுங்க.. எனக்கு இந்த மாதிரி சுத்தி வந்து பேசினால் அவ்வளவு சீக்கிரம் புரியாது... " என்று அசடு வழிந்தாள்....

வசியோ எப்படி சொல்வது என்று மீண்டும் திகைத்து தடுமாறினான்...

உள்ளுக்குள் பலமுறை ஐ லவ் யூ என்று சொல்லி பார்த்து கொஞ்சம் தைர்யத்தை வரவழைத்து கொண்டு

"ஐ.... " என்று ஆரம்பித்தான்...

ஆனால் அதற்கு மேல் அவன் நாக்கு எழ வில்லை..

"சே... ஒரு காதலை சொல்வது இவ்வளவு பெரிய கஷ்டம் னு இப்பதான் தெரியுது... இதுக்கு பேசாம நான் இன்னும் மூன்று சர்ஜரி கூட பண்ணிடலாம் போல இருக்கு...

ஒரு மூன்று வார்த்தை... அதை சொல்ல இவ்வளவு கஷ்டமா இருக்கே " என்று புலம்பி கொண்டே தன்னை மேலும் தயார் பண்ணி கொண்டு அவள்புறம் திரும்பினான்...

அவளின் வெகுளியான முகத்தையும் குறும்பு மின்னும் கண்களையும் காண அவனுக்கு வார்த்தை வரவில்லை... மேலும் கஷ்டபட்டு முயன்று "ஐ....ல... " என்று ஆரம்பிக்க சரியாக அந்த நேரம் ஒலித்தது அவன் அலைபேசி...

அதில் அதிர்ந்தவன் சுதாரித்து கொண்டு அவன் அலைபேசியை எடுக்க மித்ராதான் அழைத்திருந்தாள்....

“சே.. இவள் எதுக்கு இப்ப அழைக்கிறாள் ??.. இன்னும் கொஞ்ச நேரம் கழித்து கூப்பிட்டிருக்க கூடாதா?? “ என்று நொந்து கொண்டே அவள் அழைப்பை ஏற்றான்

"ஹாய் டா... கேம்ப் எப்படி போச்சு ?? ... நீயில்லாமல் இந்த சன்டே படு போர்....பேசாம நானும் உன் கூட வந்திருக்கலாம்... அந்த ஊரை சுத்தி பார்த்த மாதிரியாவது இருந்திருக்கும் .. " என்றவாறு ஆரம்பித்தாள் மித்ரா....

"ஹாய் மிது... கேம்ப் சூப்பரா இருந்தது.. இப்பதான் முடிந்தது... வீட்டுக்கு திரும்பி வந்துகிட்டிருக்கேன்... " என்று அவளுடன் மேலும் பேச, மலரோ அவன் சொன்ன மிது என்ற பெயரை கேட்டதும் ஆச்சர்யமானாள்...

"யார் இந்த மிது?? டாக்டர் இந்த மாதிரி ஒரு பெயரை இது வரை சொல்லவே இல்லையே.. " என்று ஆராய அப்பொழுதுதான் அவன் தன்னை பற்றி எதுவுமே சொல்லியிருக்க வில்லை என புரிந்தது...

அவள் தான் ஓட்ட வாய் மாதிரி அவளை பற்றி அவள் குடும்பத்தை பற்றி அவனிடம் எல்லாமே ஒப்பித்து இருந்தாள்... ஆனால் அவன் எதுவுமே தன்னை பற்றி சொல்ல வில்லை...

“ஹ்ம்ம்ம் நான் அவரை பற்றி கேட்கவில்லை.. அதான் அவனும் சொல்ல லை போல... " என்று சமாதான படுத்தியவள்

"ஆமா... இந்த மிது யாரா இருக்கும்??.. செல்லமா சுறுக்கி கூப்பிடறான் னா க்ளோசாதான் இருக்கும்... " என்று தனக்குள்ளே ஆராய்ந்து கொண்டிருந்தாள் மலர்...

வசி மித்ராவிடம் பேசி முடித்து அவள் புறம் திரும்ப அடுத்த நொடியே சுசிலா அழைத்தார் அவனை...

அவனை உடனே RJS க்கு வர சொன்னார்... ஒரு எமர்ஜென்சி கேஸ் வந்திருப்பதாகவும் ஸ்கேன் எடுத்து பார்க்க அவருக்கு உடனடியாக சர்ஜரி பண்ண வேண்டும் என்றும் அப்பதான் அவர் உயிரை காப்பாற்ற முடியும்..

அது கொஞ்சம் சிக்கலான கேஸ் ஆக இருக்க, அங்கிருப்பவர்கள் வசியையே ரெகமண்ட் பண்ண, அவரும் அவனை அழைத்திருந்தார்....

மற்ற ஜூனியர்ஸ் ஆபரேசனுக்கான ஏற்பாடுகளை பண்ணி கொண்டிருப்பதாகவும் அவன் வந்த உடனே சர்ஜரி பண்ணிடலாம்.... என்றார்...

மற்ற விவரங்களை அவனுடைய அங்கு இருக்கும் ஜூனியர்ஸ் cardiologist இடம் கேட்டுக்க சொல்லி போனை வைத்தார்...

அலைபேசியை வைத்தவன் இலகிய மோட் ல் இருந்தவன் உடனே சீரியஸ் மோட்க்கு மாறினான்.....

மலரிடம் திரும்பி

“சாரி பனிமலர்.. ஒரு சின்ன எமர்ஜென்சி.... உடனே போகணும்... “ என்றவாறு காரை ஸ்டார்ட் பண்ணி அதில் இருந்த அலைபேசியில் தன் ஜூனியர் டாக்டர் அகிலேஷ் ன் எண்ணிற்கு அழைத்தான்....

அந்த பேசன்ட் ன் நிலை பற்றி விசாரித்து அவரின் ரிப்போர்ட்களை அனுப்ப சொல்லி, அந்த காரில் இருந்த சின்ன திரையில் அந்த ரிப்போர்ட் ஐ திறந்து அதை ஆராய்ந்து கொண்டே காரை ஓட்டி கொண்டிருந்தான்...

அதில் சிலவற்றை சுட்டி காட்டி மீண்டும் வேறு ஒரு ஸ்கேன் எடுக்க சொல்லி அதையும் ஆராய்ந்தவாறு என்னென்ன புரசிஜர்களை செய்ய வெண்டும் என்று விளக்கி கொண்டே வந்தான்....

அவனின் அந்த சின்சியாரிட்டியையும் அவனுடைய திறமையும் கண்டு இன்னும் மலைத்து நின்றாள் மலர்...

கார் சிட்டிக்குள் நுழைந்திருக்க, மலர் RJS போகும் வழியில் எங்கு இறங்கினால் அவளுக்கு வசதியாக இருக்கும் என்று கேட்டான் வசி...

அவளுக்குமே அவனுடன் அந்த மருத்துவமனைக்கு சென்று அந்த பேசன்ட் ஐ உடனே பார்க்க வேண்டும் போல இருந்தது....

ஆனால் வீட்டில் வேலை இருப்பதால் அவள் இறங்க வேண்டிய இடத்தை சொன்னாள்...

வசி அங்கு காரை நிறுத்த, மனமே இல்லாமல் அவனுக்கு ஆல் தி பெஸ்ட் சொல்லி எப்படியாவது அவரை காப்பாற்றிட சொல்லி இறங்கியவளுக்கு அவனும் புன்னகைத்து பின் கை அசைத்து அடுத்த நொடியே பறந்து சென்றான்.....

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!