காதோடுதான் நான் பாடுவேன்-10



அத்தியாயம்-10 

திருமணத்திற்கு பிறகு முதல் முதலாக இருவரும் தனியாக செல்லும் கார் பயணம் அது..இதுவே நல்லபடியாக திருமணம் முடிந்திருந்தால் இந்த பயணம் அவ்வளவு சுகமானதாக இருந்திருக்குமோ ?? ஆனால் கார் கதவை திறக்கும் பொழுதே தன் கணவனாகியவன் கடித்ததில் மிரண்டவள் உள்ளே அமர்ந்ததும் கார் கதவை ஒட்டி அமர்ந்து வெளியில் வேடிக்கை பார்த்து வந்தாள் மதுவந்தினி...

அவள் கணவனோ விரைத்த உடலுடன் சாலையை நேராக பார்த்தவாறு காரை செலுத்தி கொண்டிருந்தான்...

சிறிது நேரம் வெளியில் வேடிக்கை பார்த்து வந்தவள் தன் மாமியார் சொன்னது நினைவு வர இப்பொழுது சுற்றிலும் எதையோ தேட ஆரம்பித்தாள்..

ஓரக்கண்ணால் அவளை பார்த்து கொண்டே வண்டியை ஓட்டியவன் சாலையின் இரு பக்கமும் பார்வையிட்டு கொண்டே சென்றான்...

வேடிக்கை பார்த்து வந்தவள் திடீரென்று

“சார்... சார்... சார்... காரை நிறுத்துங்க... “ என்று கத்தினாள் மது...

அவளின் அலறலை கேட்டு திடுக்கிட்டவன் பின்னால் வண்டி எதுவும் வருகிறதா என்று ரியர்வ்யூவில் பார்த்து உறுதி செய்து கொண்டு தன் காரை ஓரமாக நிறுத்தினான்.. பின் அவளை பார்த்து

“ஏய்... எதுக்கு இப்படி கத்தற??... கார் ஓட்டறப்ப இப்படி கத்த கூடாதுனு தெரியாது .. அறிவில்ல?? “என்று திட்ட ஆரம்பித்தான்...

அதை கேட்டு பெரிதாக முழித்தவள் மது

“ஹ்ம்ம்ம் சொல்லு.. எதுக்கு அப்படி அலறுன?? “ என்றான் அவளை முறைத்தவாறு...

அவன் மிரட்டியதில் அவள் எதற்கு நிறுத்த சொன்னாள் என்பது மறந்து போக, திருதிருவென்று முழித்தாள்

“ஏய் சொல்லித் தொலை.. “ என்று மீண்டும் அதட்ட, ஒரு வழியாக நினைவு வர

“வந்து.... சார்.... அத்தை வழியில ஏதாவது ப்ரூட்ஸ் கடை இருந்தால் ப்ரூட்ஸ் வாங்கி கிட்டு போக சொன்னாங்க.. வெறும் கையோட போக கூடாதாம்... அதான் கடைய தேடிகிட்டே வந்தேன்...

இப்பதான் அங்க ஒரு கடை இருக்கு....அங்கயே வாங்கிக்கலாமா??? “ என்றாள் சாலையின் மறுபக்கம்இருந்த கடையை காட்டி தயங்கியவாறு....

“ஹ்ம்ம்ம் காரை எங்க நிறுத்தறதாம்?? “ என்றான் முறைத்தவாறு..

“இங்கயே நிறுத்திட்டு வாங்க சார்... போய்ட்டு உடனே வந்திடலாம்.. “ என்றாள்....

அவளை பார்த்து முறைத்தவன்

“ஏய்.. இது என்ன உங்க அப்பன் வீட்டு ரோடா... அப்படியே காரை நிறுத்திட்டு போக... அங்க பார் “No Parking” போர்ட் இருக்கிறது கண்ணு தெரியல.. இங்க எல்லாம் நிறுத்த கூடாது...

கலெக்டர் ஆகணும்னு கனவு கண்டா மட்டும் பத்தாது.. முதல்ல இந்த மாதிரி டிராபிக் ரூல்ஸ் எல்லாம் முதல்ல கத்துக்க.. “ என்று டிராபிக் ரூல்ஸ் பத்தி குட்டி லெக்சர் அடிச்சான்...

“ஹ்ம்ம்ம் பெரிய டிராபிக் ரங்கசாமினு நினைப்பு... “ என்று திட்டி கொண்டே முன்னால் பார்க்க, அங்கு ஏற்கனவே ஒரு கார் அதே சைன் போர்டின் கீழயே நின்றிருந்தது....

“இங்க நிறுத்தி வைச்சிருக்கிறவங்க எல்லாம் என்னவாம்?? அவங்களும் இந்த நாட்டுலதான இருக்காங்க... இவனுக்கு மட்டும் தனியா ரூல்ஸ்... “

என்று மனதுக்குள் திட்டியவள் அந்த காரை பார்த்தவாறே அவனை பார்த்தாள்..

அவளின் பார்வையின் அர்த்தம் புரிந்துகொண்டவன் தன் அலுவலக அலைபேசியை எடுத்து முன்னால் நிறுத்தியிருந்த காரை அந்த சைன் போர்டுடன் படம் எடுத்து அதை வாட்ஸ்அப்பில் யாருக்கோ அனுப்ப, அடுத்த நிமிடம் டிராபிக் போலிஸ் வாகனம் வந்து அங்கு நின்றது...

சாலை விதிகளை மீறும் வண்டியை அப்புற படுத்தும் வாகனம் அது... அங்கு வேகமாக வந்து நின்றதும் அவசரமாக அங்கு நின்றிருந்த காரை அந்த வண்டியில் ஏற்றி அந்த இடத்திலிருந்து அப்புற படுத்தியிருந்தார்கள்...

அதில் இருந்த ஒரு கான்ஸ்டபிள் நிகிலன் கார்க்கு அருகில் வர, நிகிலன் தன் கார் கண்ணாடியை இறக்கி தன் கண்ணில் அணிந்திருந்த கூலிங்க் கிளாசை கழற்றிய படியே வெளியில் பார்த்தான்...

அதற்குள் அருகில் வந்தவர் நிகிலனுக்கு ஒரு சல்யூட் வைத்து

“சாரி சார்... இப்பதான் இந்த பக்கம் ரவுண்ட்ஸ் போனோம்.. அப்ப இந்த கார் இங்க இல்லை.. இப்பதான் கொண்டு வந்து நிறுத்தியிருக்கானுங்க.. எவ்வளவுதான் பைன் போட்டாலும் திருந்தவே மாட்டேங்கிறாங்க.. திரும்ப திரும்ப அதையேதான் செஞ்சு கிட்டிருக்காங்க....” என்று புலம்பினார்...

அவரை பார்த்ததும் மதுவிற்கு இவரை எங்கயோ பார்த்த மாதிரி நினைவு வர, தன் மூளையை கசக்கி அவசரமாக யோசித்தாள்....

நிகிலனிடம் பேசிகொண்டே போனவர் காரின் உள்ளே பார்க்க, அங்கு முன் இருக்கையில் நிகிலன் அருகில் அமர்ந்திருந்த மதுவை கண்டதும் அவளை அடையாளம் கண்டு கொண்டவர்

“இதுதான் அன்னைக்கு ஹெல்மெட் போடாம வந்து மாட்டின பொண்ணு... சார் கூட பணம் கட்டினாரே.... இப்ப எப்படி சார் கூட கார்ல ஒன்னா போகுது ?? என்று அவசரமாக யோசித்தவர் மதுவின் கழுத்தில் மின்னிய புது மஞ்சள் தாலி கயிற்றையும் நெற்றியில் வைத்திருந்த குங்குமத்தையும் கண்டதும் ஏதோ புரிந்த மாதிரி இருந்தது...

நிகிலனுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது என்று காலையில் யாரோ சொல்லி கேட்டவர்க்கு ஒரு வழியாக அன்று நடந்த கலாட்டா நினைவு வரவும், மதுவை பார்த்து

“சாரி...மேடம்... நீங்க யார்னு தெரியாமல் அன்னைக்கு கொஞ்சம் அதிகமா மிரட்டிட்டேன்... “ என்று தலையை சொரிந்தார்..

மதுவுக்கும் அவர்தான் அன்று சந்தியாவையும் அவளையும் மிரட்டிய கான்ஸ்டபிள் டேவிட் என்பது நினைவு வர, அதை விட அவர் தன்னை மேடம் என்று அழைத்தது உரைக்க, மயக்கம் போடாத குறையாக முழித்தாள் அவரை பார்த்து...

இருந்தாலும் மறைத்து கொண்டு ”இட்ஸ் ஓகே சார்...” என்று மெல்ல புன்னகைத்தாள்...

பின் நிகிலனிடம் திரும்பியவர்,

“சாரி சார்.. அன்னைக்கு உங்க வொய்ப் னு தெரியாமல் ... “என்று ஏதோ சொல்ல வர,

“நோ மிஸ்டர் டேவிட்.. அன்னைக்கு நீங்க சொன்னது தான் சரி... யாரா இருந்தாலும் ரூல்சை பாலோ பண்ணலைனா தண்டனை உண்டு.. அது நானே இருந்தாலும்...இதை நினைவில வைங்க... “என்றான்....

அந்த டேவிட் ம் ஓகே சார் என்று மீண்டும் ஒரு சல்யூட் ஐ வைக்க, நிகிலன் புன்னகைத்து தலை அசைத்தவாறு கார் கண்ணாடியை ஏற்றி காரை கிளப்பி சென்றான்....

சிறிது தூரம் சென்றதும் அவர்கள் செல்லும் சாலையின் ஓரத்தில் ஒரு பழக்கடையும் ஸ்வீட்ஸ் ஸ்டாலும் இருக்க, அங்கு பார்க்கிங் ம் இருக்க, அதில் ஓரமாக காரை நிறுத்தியவன்

“ஏய்... சீக்கிரம் போய் என்ன வேணுமோ வாங்கிட்டு வா.. லேட் ஆகுது.. “ என்றான் முறைத்தவாறு... அதை கேட்டு அதிர்ந்த மது

“ சார்.... வந்து நீங்களும் வர்ரீங்களா??..நான் இதுவரைக்கும் தனியா போய் இந்த மாதிரி எல்லாம் வாங்கினது இல்ல.... இந்த ஒரு முறை மட்டும் நீங்களும் கூட வாங்க.. ப்ளீஸ் சார்..... “ என்று முகத்தை பாவமாக வைத்து கொண்டு கெஞ்ச, அவளின் ப்ளீசில் கொஞ்சம் இலகியவன்

“சரி.. இறங்கு.. இந்த முறை மட்டும்தான்.. இனிமேல் இதெல்லாம் நீ தனியா தான் மேனேஜ் பண்ணனும்.. “ என்று சொல்ல, சரி சார்.... “ என்று தலையை வேகமாக உருட்டினாள் முகத்தில் மலர்ச்சியுடன்...

அவளின் மலர்ந்த முகத்தை ஒரு விநாடி உற்று பார்த்தவன் பின் தன் தலையை உலுக்கி கொண்டு கீழ இறங்கி அந்த கடையை நோக்கி நடந்தான்...

மதுவும் தன் கேன்ட் பேக்கை எடுத்து கொண்டு அவன் நடைக்கு ஈடு கொடுக்க வேகமாக ஓடினாள் அவன் பின்னால்....

கடையை அடைந்ததும்

“உனக்கு என்ன வேணுமோ வாங்கிக்க.. “ என்றவன் தன் அலைபேசி ஐ எடுத்துகொண்டு பேச செல்ல, மது என்ன வாங்குவது என்று முழித்து பின் தன் பெற்றோர்களுக்கு பிடித்தமான பழங்களை வாங்கியவள் அங்கயே ஸ்வீட்ஸ் ம் இருக்க, அதில் கொஞ்சம் வாங்கி கொண்டாள்..

கூடவே ஒரு பெரிய பேக் 5 ஸ்டார் சாக்லெட்ம் எடுத்து வைத்து பில் போட சொல்லி கொண்டிருக்கும் பொழுதே அவள் அலைபேசிக்கு அழைப்பு வர, தன் அன்னை தான் அழைக்கவும் முகத்தில் மலர்ச்சியுடன் அதை ஏற்று காதில் வைத்து கொண்டு சிறிது தூரம் நகர்ந்து சென்றாள்..

அதற்குள் நிகிலன் திரும்பி வந்திருக்க, அந்த கடைக்காரர் அந்த பில்லை அவனிடம் நீட்டினார்.. அதை வாங்கி பார்த்தவன் அதில் 5 ஸ்டார் சாக்லெட் பெரிய பேக் இருக்க, அதை கண்டவன்

இது என்ன என்று அந்த கடைக்காரரை முறைக்க,

“சாரி சார்... உங்க தங்கச்சிதான் இதை வாங்கினாங்க.. “ என்றார்...

அதை கேட்டவன் கடுப்பாகி என்னது தங்ககச்சியா?? யார்?? “என்று மேலும் முறைக்க

“அதோ அங்க நிக்கிறவங்க தான் சார்... “ என்று மதுவை கை காட்டினார்...

அதை கேட்டு அவன் மேலும் முறைப்பதை கண்டு

“ஒ சாரி சார்.... அவங்க உங்க வொய்ப் ஆ?? பார்க்க சின்ன பொண்ணா இருக்காங்களா அதான் தங்கச்சினு நினைச்சிட்டேன்.. “என்று அசடு வழிந்து சிரித்தார்... அதை கேட்ட மது உள்ளுக்குள் கிழுக்கி சிரித்து கொண்டாள்...

அவனொ அந்த கடைக்காரரை முறைத்து விட்டு அவர் நீட்டிய பில்லுக்கு பணத்தை கட்டிவிட்டு அந்த பொருட்களை தூக்கி வந்தான்... அவள் அருகில் வரவும் அவளும் அவசரமாக தன் அழைப்பை துண்டித்து அவனை பார்க்க,

அவளை முறைத்தவாறெ அந்த பேக்கை அவளிடம் நீட்டினான்... அவளும் பயந்தவாறே வாங்கி கொண்டு அவனுடன் இணைந்து நடந்தாள்...

காரில் ஏறியதும்

“ஏய்... இனிமேல் என் கூடா வர்றதா இருந்தால் லட்சணமா புடவையை கட்டிகிட்டு வா... “ என்று சிடுசிடுத்தான்...அவன் எதற்கு சொல்கிறான் என்று புரிய மீண்டும் உள்ளுக்குள் சிரித்து கொண்டவள்

“ஹ்ம்ம்ம் ஓகே சார்... “ என்று அவளும் தலையை வேகமாக ஆட்டினாள்...

பின் காரை கிளப்பி சென்றான்... நேராக பார்த்து ஓட்டினாலும் அவன் பார்வை சாலையின் இரு பக்கத்திலும் ஆராய்ந்து கொண்டே தான் வந்தது...

சில பேர் சாலை விதிகளை மீற , அவர்களை எல்லாம் தன் அலுவலக அலைபேசியில் படம் எடுத்து யாருக்கோ அனுப்பி வைக்க, அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் விதியை மீறி இருந்தவர்கள் எல்லாம் ஆங்காங்கே போலிஸ் மறித்து விசாரித்து கொண்டிருந்தனர்...

ஒரு சிக்னலிம் இரு சிறுவர்கள் பிச்சை எடுத்து கொண்டிருக்க, அவர்களையும் படம் எடுக்க, அடுத்த நிமிடத்தில் அவ்விடத்தில் இருந்து அந்த சிறுவர்கள் அப்புற படுத்த பட்டிருந்தனர்....

வெளியில் வேடிக்கை பார்த்து வந்தாலும் அவன் செய்கையெல்லாம் நோட் பண்ணிகொண்டேவந்தாள் மது....

அவன் செய்வதை கண்டு ஆச்சர்யமாக இருந்தது..

“போலிஸ் ன இப்படி யெல்லாம இருப்பாங்க?? ஒரு வேளை இவன் சின்சியர் போலிஸ் போல... மாமியார் வீட்ட்டுக்கு போகிறப்போ கூட ட்யூட்டி பார்த்துகிட்டே வர்ரானாக்கும்... “ என்று மனதுக்குள் எண்ணி சிரித்து கொண்டாள்....

சிறிது தூரத்தில் ஒரு சிக்னலில் அவன் கார் நின்றிருக்க, அவன் கார் கதவை தட்டினாள் ஒரு பூ விக்கும் நடுத்தர வயது பெண்மனி...

நிகிலனும் கார் கண்ணாடியை கீழ இறக்க,

“வணக்கம் சார்... “ என்றாள் முகத்தில் மலர்ச்சியுடன்...

“ஹ்ம்ம்ம்ம் வணக்கம்... நல்லா இருக்கீங்களா?? தொழில் எப்படி போய்கிட்டிருக்கு?? “என்றான் அக்கறையாக

“உங்க தயவால நான் நல்லா இருக்கேன் சார்....உங்க உதவியை என்னைக்கும் மறக்க மாட்டேன் சார்... இந்த ரோட்ல பிச்சை எடுத்துகிட்டிருந்த எனக்கு பணம் கொடுத்து இந்த பூ விக்கிற தொழிலைஆரம்பிச்சு வச்சீங்க...

உங்க தயவால வியாபாரம் நல்லா போகுதுசார்... இப்ப நானும் என் பசங்களும் ஒரு கௌரவமான வாழ்க்கை வாழறோம்... எல்லாம் உங்களால தான்... ரொம்ப நன்றி சார்.. உங்க பணத்தை சீக்கிரம் திருப்பி கொடுத்திடறேன் சார்... “ என்று நன்றி தெரிவித்தாள் நெகிழ்ச்சியுடன்....

“ஹ்ம்ம்ம் அதெல்லாம் இருக்கட்டும் மா ....அந்த பணத்தை நீங்களே வச்சுக்கங்க... சீக்கிரம் ஒரு பூ கடை போட்டு உட்கார்ந்து வியாபாராம் பண்ணுந்க்க.. இந்த மாதிரி சிக்னலில் வரக்கூடாது....” என்றான்

“கண்டிப்பா சார்.. அதுக்கு தான் காசு சேர்த்து வச்சுகிட்டிருக்கேன்.. சீக்கிரம் கடை போட்டுருவேன் சார்.. “ என்று சிரித்தாள்

“வெரி குட்... அப்புறம் அந்த ரவுடிங்க திரும்ப எதுவும் பிரச்சனை பண்ணாங்களா?? “

“ஐயோ இல்லசார்... நீங்க வந்து அன்னைக்கு அவனுங்கள மிரட்டி புடுச்சுகிட்டு போனதுக்கு அப்புறம் அவனுங்க இந்த பக்கம் வரவே இல்லை சார்.. இப்பதான் நிம்மதியா இருக்கு..

இல்லைனா இப்படி வேகாத வெயில்ல நின்னு பூ விக்கறதுல பாதி காசை அவனுங்க புடிங்குக்குவானுங்க... இப்பதான் அவனுங்களுக்கு அழுவற தொல்லை இல்லாம நிம்மதியா இரு க்கோம்...

“அதுக்கும் ரொம்ப நன்றி சார்... “ என்றவரின் பார்வை காரின் உள்ளே இருந்த மதுவின் முகத்தில் படிய, மதுவும் அவரை பார்த்து புன்னகைத்தாள்..... அவளை கண்டவள்

“உங்க வொய்ப் ஆ சார்?? மஹாலட்சுமி மாதிரி இருக்காங்க... உங்களுக்கு ஏத்தவங்க சார்... “ என்று பேசிகொண்டே தன் கூடையில் இருந்த மல்லிகை சரத்தை நீளமாக அளந்து இரண்டு முழம் வெட்டினார்.. அதை சுற்றி

“சார்.. இத உங்க வொப்ய்ப்புக்கு கொடுங்க.. “என்று காரின் உள்ளே நீட்ட,

என்ன சொல்வது என்று புரியாமல் நிகிலன் முழித்து பின் வேணாம் என்று மறுக்க்க,

“கல்யாணம் ஆன பொண்ணு தலையில பூ இல்லாம வெளியில போக கூடாது சார்... தயங்காம வாங்கிங்க.. “ என்று அவன் கையில் திணித்தாள்...

நிகிலனும் வேற வழி இல்லாமல் அதை வாங்கி கொண்டு தன் வாலட்டை திறந்து அதில் இருந்த பணத்தை எடுக்க

“வேண்டாம் சார்.. நீங்க பண்ணின உதவிக்கெல்லாம் இது ஒரு சின்ன உதவி.. “என்று மறுத்தாள்...

“ம்ஹூம்... வியாபாரத்துல யாருக்கும் இலவசமா கொடுக்க கூடாது... அது யாரா இருந்தாலும்.. அதே மாத்ரி காசு கொடுக்காம எதையும் இலவசமா வாங்கினாலும் அது நம்ம பொருள் ஆகாது... அதனால இந்த காசை பிடிங்க.. “என்று திருப்பி கொடுத்தான்...

அதற்குள் பச்சை விளக்கு எரிய ஆரம்பிக்க,

“சரி மா... கவனமா இரு.. பொக்கு வரத்துக்கு எதுவும் தொல்லை கொடுக்ககூடாது... “ என்று சொல்லி தன் கார் கதைவை ஏற்றி காரை நகர்த்தினான்..

ஒரு கையால் காரை ஓட்டி கொண்டே மறுகையில் இருந்த பூவை அவளிடம் நீட்டினான்...

அவளும் அதை அவசர அவசரமாக வாங்கி கொண்டாள்....

பின் அதை நாலாக மடித்து தன் நீண்ட ஜடையில் தொங்க விட்டு வைத்துக் கொண்டாள்....சிறிது நேரம் அமைதியாக வேடிக்கை பார்த்து வந்தவள் அன்று சந்தியா கேட்டது நினைவு வர, மெல்ல அவன் புறம் திரும்பி,

“போலிஸ் சார்.... ஒரு சின்ன சந்தேகம்.. “ என்று இழுத்தாள் தயங்கியவாறு

அவனும் அவள் புறம் திரும்பி என்ன? என்று அவன் புருவங்களை உயர்த்தினான் வாயை திறக்காமல்....

“வந்து.... நீங்க டிராபிக் போலிஸ் ஆ இல்லை சாதாரண போலிஸா? .... எந்த ஸ்டேஷன்?? .” என்றாள் முகத்தை பாவமாக வைத்து கொண்டு கொஞ்சம் பயந்து கொண்டே...

அவளின் அந்த பாவமான முகமும் அவள் இழுத்து பயந்தவாறு கேட்ட தோரனையும் கண்டு, உள்ளுக்குள் பொங்கி வந்த சிரிப்பை அடக்கி கொண்டே அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவளை பார்த்து முறைத்தான்...

அவனின் முறைப்ப கண்ட மது பயந்து போய் மறுபுறம் திரும்பி கொண்டாள்....

“சே.. அப்படி என்ன நான் தப்பா கேட்டுட்டேன்...?? எதுக்கு இந்த சிடுமூஞ்சி விருமாண்டி இந்த முறை முறைக்குது?? சாதாரணமா கூட பேச கூடாது போல... விருமாண்டி.... “ என்று மனதுக்குள் திட்டி கொண்டே சாலையின் ஓரத்தை வேடிக்கை பார்த்து வந்தாள்...

கார் அவள் வீட்டின் தெருவில் நுழய அதை கண்டவளின் விழிகள் விரிந்தன...

ஒரு வாரம் தான் ஆனாலும் பல வருடங்கள் கழித்து தன் வீட்டை பார்ப்பதை போல உள்ளுக்குள் மகிழ்ந்தாள்...

நிகிலன் காரை நிறுத்தியதும் மது அவசரமாக இறங்கி, வேகமாக வீட்டை நோக்கி ஓடினாள்....

அதை கண்டவன்

“பார்.. எப்படி ஓடற?? கூட ஒருத்தன் வர்றது கூட தெரியாமல்.”. என்று உள்ளுக்குள் திட்டிகொண்டே அவளை பின் தொடர்ந்தான்.. இதற்குள் அவர்கள் காரின் சத்தம் கேட்டு வெளியில் ஆரத்தி தட்டுடன் வந்த சாரதா உள்ளே போக இருந்த தன் மகளை பிடித்து நிறுத்தி இருவரையும் ஒன்றாக நிக்க வைத்து ஆரத்தி எடுத்தார்....

பின் இருவரும் ஒன்றாக உள்ளே செல்ல, மது தன் அப்பாவை ஓடி சென்று கட்டி கொண்டாள்... மது வந்ததை அறிந்து அந்த தெரு குட்டீஸ்கள் எல்லாம் ஓடி வர, அவள் வாங்கி வந்திருந்த 5 ஸ்டார் சாக்லெட்டைஎடுத்து ஆளுக்கு ஒன்றாக கொடுக்க, அதை கண்டு அவர்கள் முகம் அழகாக விரிந்தது....

எல்லாரும் தேங்க்ஸ் சொல்லி விட்டு வெளியில் ஓடி விட, சாரதா இருவரையும் அழைத்து அமர வைத்து காலை உணவை பரிமாறினார்....

அந்த தட்டில் இருந்த ஐட்டங்களை கண்ட நிகிலன் அலறினான்...

“ஐயோ... அத்தை... எதுக்கு இவ்வளவு?? நான் காலையில் அதிகமா சாப்பிட மாட்டேன்... நீங்க எதுக்கு இவ்வளவு பரப்பி வச்சிருக்கீங்க... “ என்றான்...

“பரவாயில்லை மாப்பீள்ளை.. அங்கதான் தினமும் வெறும் கஞ்சி மட்டும் குடிக்கிறீங்க... இன்னைக்கு ஒரு நாளாவது வாய்க்கு ருசியா நல்ல சாப்பாடு சாப்பிடுங்க... “ என்று சிரித்தார்....

“ஹ்ம்ம்ம் நான் கஞ்சி குடிக்கிறது முதல் கொண்டு தன் அம்மா வீட்ல சொல்லி வச்சிருக்காளா?? பிசாசு.. பார்த்தாதான் பயந்துக்கற மாதிரி நடிக்கிறா.. பெரிய வேலையெல்லாம் பண்ணுவா போல... “

என்று உள்ளுக்குள் திட்டிகொண்டே மதுவை ஓரக்கண்ணால் பார்த்து முறைக்க, தன் அன்னை தான் சொன்ன விசயத்தை அவன் முன்னால் போட்டு உடைத்ததுக்கு கண்டிப்பா முறைப்பான் என்று தெரிந்து கொண்டவள் அவன் அவள் பக்கம் திரும்பும் முன்னே தன் தந்தையின் பக்கம் திரும்பி கொண்டாள்...

அவளை பார்த்து முறைத்தவன்

பின் அவர்களுடன் இயல்பாக பேசியவாறு சாப்பிட்டு முடித்தான்... சண்முகத்திற்கு ரொம்ப சந்தோஷம் ஆகிவிட்டது... எங்க மாப்பிள்ளை மிரட்டிகிட்டே இருக்கிறவர் இவ்வளவு இயல்பா பேசறாரே... “ என்று..

சிறிது நேரத்தில் நிகிலன் தனக்கு வேலை இருப்பதாக கிளம்பி விட, மது தன் அன்னையிடம் கதை அடிக்க ஆரம்பித்தாள்... பின்12 மணி அளவில் சிவகாமியும் அகிலாவும் வந்தனர்...

முதல் முறையாக வெளியில் கிளம்பும் தன் மகனுக்கும் மருமகளுக்கும் தனிமை கொடுக்க எண்ணியே அவர்கள் பின்னால் வந்தது... பக்கத்து வீட்டு சுகந்தியும் வந்து விட, அனைவரும் கலகலப்பாக பே சி கொண்டிருந்தனர்...பின் எழுந்து சாராதவிற்கு உதவி செய்ய சமையல் அறைக்கு சென்றார்

சிவகாமியின் கலகலப்பான பேச்சை கேட்ட சுகந்தி தனிமையில்

மதுவிடம்

“மது... நீ ரொம்ப கொடுத்து வச்சவ.. இப்படி ஒரு அன்பான மாமியார் நாத்தனார், கண்ணுக்கு அழகான கம்பீரமான புருசன் கிடைக்க.. “என்று அவளுக்கு திருஷ்டி சுத்தினாள்...

“என் மாமியாரும் இருக்காங்களே.. எப்ப பார் எதையாவது குத்தம் சொல்லி கிட்டே.. “ என்று தன் மாமியார் கதையை எடுத்து கூற மதுவிற்கு ஆச்சர்யமாக இருந்தது... அதெல்லாம் உண்மையா என்று?? ஆனால் என் மாமியார் அப்படி இல்லையே..” என்று யோசித்தவளுக்கு

“அதுக்கு பதிலாகதான் அந்த சிடுமூஞ்சி வந்து வாச்சிருக்கே என்னை எப்ப பார்த்தாலும் முறச்சுகிட்டே இருக்க.... “ என்று சொல்லி சிரித்து கொண்டாள்...

பின் சிறிது நேரத்தில் அகிலா சுகந்திக்கு கண்ணால் ஜாடை காமிக்க, அதை உணர்ந்து கொண்டவள் மதுவை அவள் வீட்டிற்கு அழைத்து சென்றாள்...

பின் கொஞ்ச நேரத்தில் மதுவை மட்டும் திருப்பி அனுப்பி இருந்தாள் சுகந்தி....

அவளும் குதித்து கொண்டே அவள் வீட்டிற்குள் உள்ளே வர, அப்பொழுது வெளியில் சென்றிருந்த நிகிலனும் வர, இருவரும் இணைந்து ஜோடியாக உள்ளே வந்தனர்...

மது உள்ளே வந்ததும் சில அடிகள் நடக்க, திடீரென்று ஏதோ வெடித்ததில் போல இருக்க, பயந்து போய் அருகில் நின்றிருந்த தன் கணவன் மார்பில் முகம் புதைத்து கொண்டாள் பயத்தில்....

இதை எதிர்பார்த்திராத நிகிலன் திகைத்து நின்றான் சில விநாடிகள்... முதலில் வெடித்தை தொடர்ந்து இன்னும் அந்த சத்தம் தொடந்து கேட்க, இன்னும் அவன் மார்பில் ஒன்றிக் கொண்டாள்.....

ஒரு சில விநாடிகள் வெடித்து முடித்ததும்

“Many more happy returns of the day…அண்ணி.. “ என்று அகிலா கை தட்டி ஆர்பரிக்க, அப்பொழுதுதான் அவள் நின்றிருந்த கோலம் நினவு வர சட்டென்று விலகி அந்த வரவேற்பறையை பார்த்தாள் மது...

அங்கு முழுவதும் பலூன்களால் அலங்கரிக்க பட்டிருக்க, நடுவில் பெரிய கேக் வைக்க பட்டிருந்தது...

மதுவை சுகந்தியின் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு அந்த குட்டீஸ்களை வைத்து கொண்டு இதை எல்லாம் அழகாக ஏற்பாடு செய்திருந்தாள்...

மதுவின் ஜாதகத்தை பார்த்து அவளுக்கு இன்று பிறந்த நாள் என்று முன்பே தெரிந்திருக்க, மதுவுக்கு தெரியாமல் இந்த சர்ப்ரைஸாக இதை ஏற்பாடு செய்திருந்தாள் அகிலா...

மதுவுக்கு அதை கண்டு வியந்து நின்றாள்... காலையில் இருந்தே யாரும் தன்னை வாழ்த்த வில்லையே என்று மனதுக்குள் புலம்பி கொண்டே வந்தவள் காலையில் சிவகாமி வாழ்த்தும் பொழுதே அவருக்கு தெரிந்திருக்கும் என்று தோன்றியது..

ஆனால் அவள் கேட்க வரும்பொழுது சிவகாமி அந்த பேச்சை மாற்றிவிட்டார்... அதை தெரிந்தெ கொண்டவள் தன் மாமியாரிஅபார்க்க, அவரோகண் சிமிட்டிசிரித்தார்...

போங்க அத்தை.. நீங்க ரொம்ப மோசம்... என்கிட்ட யாருமே சொல்லலையே... “

“ஹீ ஹ் ஹீ.இந்த அகிலா வாலுதான் உங்க்களுக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும் னு எங்க வாயை அடைச்சிட்டா... “ என்று சிரிதார்..

மது அகிலாவையும் கட்டி கொண்டு

“ரொம்ப தேங்க்ஸ் அகி... சூப்பரா இருக்கு.. “என்றாள் கண்கள அகல விரித்து...

“இட்ஸ் ஓகே அண்ணி...Enjoy your day..” என்று கண்ணடித்தாள்...

இவ்வளவு நாள் மூன்று பேர் மட்டும் இருப்பதால் பெரிதாக அவள் பிறந்த நாளை கொண்டாடியதில்லை... காலையில் குளித்து விட்டு குடும்பத்துடன் முருகன் கோவிலுக்கு சென்று வருவாள்.. அந்த தெரு பசங்களுகெல்லாம் சாக்லெட் வாங்கி தருவாள்...

ஆனால் இன்று இவ்வளவு அலங்காரம் செய்திருப்பதை கண்டு அவளுக்கு ரொம்ப மகிழ்ச்சி... பின் ஒவ்வொருவராக வாழ்த்த, சாரதா அவளுக்கு ஒரு புடவையை கொடுத்து சீக்கிரம் போஉகட்டிகிட்டு வர சொன்னார்...

அவளும் துள்ளி குதித்து கொண்டே உள்ளே சென்று புடவையை மாத்தி வர, பின் அனைவரும் அந்த கேக்கின் அருகில் வந்தனர்...

அகிலா நிகிலனையும் இழுத்து வந்து மதுவின் பக்கதில் நிக்க வைத்தாள்... மது அவன் அருகில் வரவும் கொஞ்சம் உதறல் ஆரம்பிக்க தன்னை சமாளித்து கொண்டு அந்த கேக்கை வெட்டினாள்..

பின் அதில் ஒரு துண்டை எடுத்து எப்பவும் போல தன் அப்பாவிடம் செல்ல, அவர் மறுத்து

“இனிமேல் உனக்கு எல்லாமே மாப்பிள்ளை தான் மது கண்ணா... அதனால் மாப்பிள்ளைக்கு முதல்ல கொடு.. “என்று சிரிக்க மெல்ல ஏறிட்டு பார்த்தாள் அவனை...

அவனும் அவளையே பார்த்து கொண்டு நிக்க,

“வெக்க படாம கொடுங்க அண்ணி... நீங்க சீக்கிரம் கொடுத்தாதான் எங்களுக்கு அடுத்து கிடைக்கும்.. பாவம் இந்த குட்டீஸ் வேற ரொம்ப நேரம் இந்த கேக்கையே பார்த்து கிட்டிருக்காங்க... “ என்று சிரித்தாள்...

மெர்துவாக தைர்யத்தை வரவழைத்து கொண்டு மது தன் கையில் இருந்த அந்த கேக் துண்டை அவன் வாயில் வைக்க, அவளின் மெல்லிய பிஞ்சு விரல்கள் அவனின் முரட்டு இதழ்களில் பட, இருவருக்குமே ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு முதல் முதலில் .... அந்த நொடிகளை ரசித்து இருந்தனர் இருவருமே அவர்கள் அறியாம்ல..

பின் ஏதோ சத்தம் கேட்க, மது தன் கையை வேகமாக இழுத்து கொண்டாள்... அடுத்து அகிலா நிகிலனை பார்த்து

“அண்ணா... இப்ப உங்க சான்ஸ்... நீங்க அதே மாதிரி ஊட்டுங்க பார்க்கலாம்... “ என்று சிரிக்க, நிகிலன் அவளை பார்த்து முறைத்தான்...

“இந்த முறைப்பெல்லாம் இன்னைக்கு ஒரு நாள் லீவ் விடுங்க..,அகிலாவுக்கு இன்னைக்கு தான் சான்ஸ் கிடச்சிருக்கு.. உன்னை வச்சு செய்ய... “ என்று உள்ளுக்குள் சிரித்து கொண்டவள் ..

”சீக்கிரம் அண்ணா... என்று விடாமல் அடம்பிடிக்க,, நிகிலனும் மற்றொரு கேக் துண்டை எடுத்து மதுவிற்கு ஊட்டி விட, அனைவரும் கை தட்டி ஓவென்று கத்தினர்.. ...

மது மெல்ல வெக்கபட்டு சிரித்து கொண்டே கீழ குனிந்து கொண்டாள்...,

பின் அனைவரும் தங்கள் பரிசினை கொடுக்க, நிகிலன் மாட்டும்

“சே... இந்த அகிலாவும் சொல்லலையே.. “என்று சங்கடமாக இருந்தது...

உள்ளுக்குள் புலம்பி கொண்டெ பின் அனைவரையும் உட்கார வைத்து அ ன்று ஷ் விருந்தை அனைவருக்கும் பரிமாற சிரித்து கொண்டே கலகலப்பாக அன்றைய மதிய பொழுது கழிந்தது...

மதுவுக்கு அது ஒரு மறக்கமுடியாத பிறந்த நாளாக அமைந்தது...



Comments

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!