காதோடுதான் நான் பாடுவேன்-9
அத்தியாயம்-9
கௌதம் ன் அழைப்பை ஏற்ற நிகிலன் தன் அலைபேசியை எடுத்துகொண்டு பால்கனிக்கு சென்றதும் இதுவரை கட்டுபடுத்தி வைத்திருந்த சிரிப்பு வெடிக்க வாய்விட்டு சிரித்தான்.....அவன் சிரிப்பை கேட்டதும் மறுமுனையில் ஒன்றும் புரியாமல் முழித்தான் கௌதம்....
“டேய்.. மச்சான் எதுக்குடா இப்படி சிரிக்கிற?? “ என்றான் ஆர்வமாக மறுமுனையில்...
நிகிலன் மீண்டும் சிரிக்க, கொஞ்சம் பொருத்து பின் கடுப்பான கௌதம்
“டேய்... சொல்லிட்டு சிரிடா... நானும் கூட சேர்ந்து சிரிப்பேன் இல்ல... நீ பாட்டுக்கு தனியா சிரிச்சா என்ன அர்த்தம்.?? “ என்று திட்டினான்...
ஒரு வழியாக அவன் சிரித்து முடித்ததும்
“சரியான காமெடி டா ... “ என்றான் இன்னும் சிரித்தவாறு....
அவனின் அந்த வாய் விட்டு சிரித்த சிரிப்பை ரசித்த கௌதம்,
“அப்படி என்ன காமெடிடா பார்த்த?? எந்த சேனல் னு சொல்லு.. நானும் பார்க்கறேன்... “ என்றான் கௌதம் ஆர்வமாக...
“ஹ்ம்ம்ம் இது எந்த சேனலிலும் வராத காமெடி...”என்று மீண்டும் சிரித்தான் நிகிலன்...
“டேய் மச்சான்.. நிஜமாகவே உன் வீடு தேடி வந்து அடிப்பேன்.. கடுப்பேத்தாம என்ன நடந்தது?? எதுக்கு சிரிக்கிற னு சொல்லு.. “ என்றான் எரிச்சலுடன்.....
“ஹா ஹா ஹா அந்த இம்ச இருக்காளே.... “ என்று மீண்டும் சிரித்தான்..
“யாருடா அது இம்ச?? “ என்று யோசித்தவன்
“ஓ.. சிஸ்டரா?? “ என்றான் கௌதம்
“ஹ்ம்ம்ம் உன் தொங்கச்சி தான் ...எனக்கு IAS எழுத சொல்லித் தர்ராளாம்.... நான் நல்லா படிச்சு இந்த வருசம் பரிட்சை எழுதனுமாம்.... “ என்று மீண்டும் சிரித்தான்...
அதை கேட்டு கௌதம் விழுந்து ` விழுந்து சிர்த்தான்...
“டேய் சூப்பர் மச்சான்...அப்ப நீயும் சிஸ்டர் கிட்ட பாடம் கத்துக்க வேண்டியது தான... ஒரு படத்துல ராதா கமல் க்கு பாடம் சொல்லி கொடுப்பாங்களே...அந்த மாதிரி
ஹ்ம்ம்ம் என்ன பாட்டு அது?? ஆங்..
ABC நீ வாசி எல்லாம்
என் கைராசி சோ ஈஸி
ABC நீ வாசி சோ ஈஸி
உன் ராசி வா ரோஸி
என்று கௌதம் அந்த பாடலை பாட, அதுவரை சிரித்து கொண்டிருந்த நிகிலன் கடுப்பானான்...அவன் கடுப்பானது தெரியாமல் கௌதம் தொடர்ந்தான்
“வாவ்.. செம ரொமாண்டிக் சாங்க் டா மச்சான்...அப்புறம் எப்ப இருந்து சிஸ்டர் உனக்கு க்ளாஸ் எடுக்க போறாங்களாம்...?? “ என்றான் நமட்டு சிரிப்புடன்...
“டேய்... போதும் நிறுத்து... சும்மா அவ சொன்னதுக்கு கிண்டல் அடிச்சா.. நீ ரொம்ப ஓவரா போற... “ என்று சிடுசிடுத்தான்...
“”ஹீ ஹீ ஹீ... மச்சான் இது நல்ல சான்ஸ் ... மிஸ் பண்ணிடாத... சிஸ்டரே வாலண்டியரா கேட்டிருக்காங்க பாடம் நடத்தறேனு....
சே... எனக்கு இப்படி ஒரு சான்ஸ் கிடைக்கலையே... “ என்றான் புலம்பியவாறு கௌதம்..
“அதனால் என்னடா... நீயும் உன் பொண்டாட்டிய IAS எழுத சொல்.. நீயும் வசந்திக்கு சொல்லி கொடு... “ என்று சிரித்தான் நிகிலன...
“வாவ்.. சூப்பர் ஐடியா மச்சான்.. வாழ்க்கையிலயே இன்னைக்கு தான் ஒரு உருப்படியான ஐடியா கொடுத்திருக்க... நீ நல்லா இருப்ப மச்சான்... இப்பயே அப்ளிகேசன் போட வச்சிடறேன்... அப்புறம் பார்...
ABC நீ வாசி எல்லாம்
என் கைராசி சோ ஈஸி "
என்று மீண்டும் பாடினான் கௌதம்
"டேய்... உன் இராமயணத்த அப்புறம் வச்சுக்க... இப்ப எதுக்கு போன் பண்ணின னு சொல்... " என்றான் நிகிலன்...
“ஆங்.. எதுக்கு போன் பண்ணினேன்?? ... “என்று யோசித்தான்... பின் ஒன்றும் தோண்றாமல் போக
“சாரிடா மச்சான்... நீ சொன்ன ரொமான்ஸ் மேட்டர்ல நான் சொல்ல வந்த வீணாபோன ஆபிஸ் மேட்டர் மறந்து போச்சுடா.... நான் நியாபகம் வர்றப்போ உனக்கு போன் பண்றேன்... நீ போய் சிஸ்டர் கிட்ட இன்னைக்கே உன் பாடத்தை ஆரம்பி... இந்த பாடத்தை எல்லாம் தள்ளி போடக்கூடாது.... “ என்று சிரித்தான் கௌதம்..
“டேய்....அடங்கு... ரிவால்வர் என் பக்கத்துல தான் இருக்கு... மறந்திடாத... “என்று சிடுசிடுத்தான் நிகிலன்...
“ஹீ ஹீ ஹீ நான் உன் பக்கத்துல இல்லையே.... அப்ப எப்படி என்ன ஷூட் பண்ணுவ?? “ என்று நக்கலாக சிரித்தான் கௌதம்…
“ஹா ஹா ஹா... இப்ப போன் வழியாகவும் மறுபக்கம் பேசறவங்களை ஷூட் பண்ற மாதிரி டெக்னாலஜி வந்திருக்கு டா மச்சான்.. அதோட முதல் டெஸ்டிங் ஏ நீதான்.. எப்படி வசதி?? “ என்று தன் சிரிப்பை அடக்கி கொண்டு சீரியசாக சொன்னான் நிகிலன்...
“ஆத்தி... இப்படி எல்லாமா கண்டு பிடிச்சு தொலஞ்சானுங்க..அவனுங்கள முதல்ல என்கவுண்டர்ல போடணும்.... நான் வரல டா இந்த ஆட்டத்துக்கு... நீயாச்சு... உன் பொண்டாட்டியாச்சு....
நான் போய் என் வசந்திய கவனிக்கறேன்... பை டா... ABC நீ வாசி “ என்று பாடிகொண்டே போனை உடனே அனைத்தான் கௌதம்...
நிகிலனும் சிரித்துகொண்டே தன் அலைபேசியை அனைத்தவன் சற்றுமுன் மது பேசியதையும் அவள் முக பாவத்தையும் அசை போட்டவாறு பால்கனியில் நடந்தான்... மனதுக்குள் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு... மனம் இலேசானதாக இருந்தது...
“ஹ்ம்ம்ம் எத்தனை நாள் ஆச்சு ?? இந்த மாதிரி ரிலாக்ஷ்டா, நிம்மதியா இருந்து... “ என்று பெருமூச்சு விட்டான்...
நீண்ட நேரம் பால்கனியில் நடந்தவன் பின் தூக்கம் கண்ணை சொருக, தன் அறைக்கு திரும்பி வந்தான்...உள்ளே வந்தவன் பார்வை சோபாவிற்கு செல்ல, அங்கு மது போர்வையை இழுத்து மூடி கொண்டு உறங்குவது தெரிந்தது...
அவளை உற்று பார்க்க, போர்வை உள்ளே அவள் விரலை வாயில் வைத்து கொண்டு அது தெரியாமல் இருக்க போர்வையை மூடி இருப்பது நன்றாக தெரிய உள்ளுக்குள் சிரித்து கொண்டே தன் படுக்கையில் விழுந்தான் ஒரு வித மன நிம்மதியுடன்...
ஞாயிற்றுகிழமை அதிகாலையிலயே எழுந்து வழக்கம் போல தன் காலை ஓட்டத்தை முடித்தவன் ஹாலில் அமர்ந்து அன்றைய செய்திதாளை புரட்டி கொண்டிருந்தான் நிகிலன்....
“எப்படி சொல்றது?? “ என்று மனதுக்குள் புலம்பியவாறு அவன் அருகில் தயக்கத்துடன் வந்து அமர்ந்தார் சிவகாமி....
“ஹ்ம்ம்ம்ம் சொல்லு மா... என்ன விசயம் ?? “ என்றான் நிகிலன் தன் பேப்பரை விலக்காமல்...
“இந்த பயலுக்கு எல்லா பக்கமும் கண்ணு போல..” என்று நினைத்துக் கொண்டவர்
“பெரியவா.... இன்னைக்கு ஞாயிற்றுகிழமை.... “ என்று இழுத்தார்...
“ஹ்ம்ம்ம் அதுதான் தெரியும் மா... அதுக்கு என்ன இப்ப?? “ என்றான் மெல்ல புன்னகைத்தவாறு
“வந்து.... ஞாயிற்றுகிழமை க்கு ஒன்னும் இல்லடா... ஆனா இன்னைக்கு நீ உன் மாமியார் வீட்டுக்கு போகணும்.. அதான் ஞாபக படுத்தினேன்... “ என்றார் தயங்கியவாறு...
அதை கேட்டு விரைத்தவன்
“யார் எனக்கு மாமியார் ?? இந்த தொல்லையே எனக்கு பொண்டாட்டி இல்லைனு சொல்லிகிட்டிருக்கேன்...அப்புறம் எங்க வந்தாங்க மாமியார்??” என்று சிடுசிடுத்தான்...
“ஷ் அப்பா...விட மாட்டிக்கிறானே இந்த பழைய பல்லவியை...”என்று புலம்பியவர்
“இவன் கிட்ட எல்லாம் இப்படி தயங்கி பேசினா வேலைக்கு ஆகாது... நம்ம ஸ்டைல காட்டுவோம்.. “ என்று சிரித்து கொண்டவர்
“டேய்... அப்படி சொல்றவன் அன்னைக்கு அவங்க வந்து விருந்துக்கு கூப்பிட்டப்பயே என்னால வரமுடியாதுனு சொல்லியிருக்க வேண்டியதுதான?? “ என்று அவரும் சிடுசிடுத்தார்....
“ஹ்ம்,ம்ம் வயசுல பெரியவங்க... அவங்க கிட்ட எப்படி முகத்துக்கு நேரா சொல்றதாம் வரமுடியாதுனு...?? அதோட நீ தான எதுவும் சொல்ல வேண்டாம்னு ஜாடை காமிச்ச... அதான் வர்ரேனு சொன்னேன்.. அதுக்குனு வர்ரேனு சொல்ற இடத்துக்கெல்லம் போய்டவா போறோம்... “ என்று முறைத்தான்....
“எனக்கு தெரியாதுப்பா... நீ பாட்டுக்கு வர்ரேனு மண்டைய ஆட்டின... அதை நம்பி அவங்களும் காலையிலயிருந்து பொண்ணும் மாப்பிள்ளையும் வருவாங்கனு வாசலையே பார்த்துகிட்டிருக்காங்களாம்...
உன் மாமனார் இதோட 10 தரம் போன் பண்ணிட்டார்... மாப்பிள்ளை கிளம்பிட்டாரானு கேட்டு...அவங்களுக்காகவாது இந்த ஒரு முறை போய்ட்டு வந்திடு நிகிலா... அதுக்கப்புறம் நீ போக வேண்டாம்” என்றார் கொஞ்சம் குரலை தாழ்த்தி கெஞ்சும் குரலில்
“சே... மனுசனா நிம்மதியா இருக்க விடறீங்களா?? இதுக்குத்தான்... இந்த தொல்லைக்குத்தான் நான் கல்யாணமே வேண்டாம்னு சொன்னேன்...
நான் பாட்டுக்கு சுதந்திரமா சுத்தி கிட்டிருந்தேன்.. என்னை எதுக்கு கட்டாய படுத்தி தாலிகட்ட வச்சீங்க?? எனக்கு இன்னைக்கு நிறைய வேலை இருக்கு மா.. வேணா அவள மட்டும் போய்ட்டு வர சொல்லுங்க... “ என்று எரிந்து விழுந்தான்....
“ஐயோ... மறுபடியும் முதல்ல இருந்தா...?? என்னால முடியல...
அப்பா முருகா .. எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணேன்.. கண்டிப்பா உனக்கு இன்னைக்கு பால் அபிஷேகம் பண்ணிடறேன்.. “ என்று அந்த வேலனை அவசரமாக துணைக்கு அழைத்தார்...
அதே நேறம் நிகிலனின் அலைபேசி அழைக்க, அதை எடுத்தவன் அழைப்பது யாரென்று பார்த்து முகத்தை சுழித்தவாறே காதில் வைத்தான்...
மறுமுனையில் கேட்டதுக்கு
“ஹ்ம்ம், ஆமா... இல்லை “ என்று சுருக்கமாக பதில் அழித்தவன் கடைசியாக
“ஹ்ம்ம்ம் சீக்கிரம் வந்திடறோம் மாமா... “ என்று போனை அனைத்தான்...
அவன் கடைசி வரிகள் சிவகாமியின் காதில் விழ, கொஞ்சம் உற்சாகம் ஆனார்...
“யார் பெரியவா போன் ல?? “ என்றார் தன் ஆர்வத்தை மறைத்து கொண்டு....
“ஹ்ம்ம்ம்ம் ஒரு தொல்லைய கூட்டி வந்து வச்சிருக்கீங்க இல்ல.. அந்த தொல்லைய பெத்த பெரிய தொல்ல.. “ என்றான் கடுப்புடன்...
“ஆஹா... நம்ம வேலன் வேலைய காட்டறான் போல.. “ என்று உள்ளுக்குள் சிரித்து கொண்டவர்..
“சரி ப்பா...நீயாச்சு... உன் மாமனாரோ தொல்லையோ அவராச்சு... நான் என் வேலைய கவனிக்கறேன்.. “ என்று எழுந்தார்...
“அம்மா.... அவள சீக்கிரம் ரெடியாக சொல்லுங்க... நான் போய்ட்டு வந்திடறேன்.. ரொம்ப கெஞ்சறார்... “ என்றான் அதே எரிச்சலுடன்...
“அப்படி வாடா வழிக்கு... “ என்ரு உள்ளுக்குள் சிரித்துகொண்டவர்
“என் மருமக அப்பயே ரெடியாகிட்டா... உனக்காகத்தான் வெயிட்டிங் பா... நீ போய் சீக்கிரம் ரெடியாகி வா... காலை சாப்பாட்டுக்கே அங்க போய்டுங்க... “ என்றார்...
“ஹ்ம்ம்ம் “ என்று அவரை முறைத்துக் கொண்டே எழுந்தவன் தன் அறைக்கு சென்றான்...
“அப்பாடா.. ஒரு வழியா இந்த பயலை மலையிலிருந்து இறக்கியாச்சு...
முருகா... இன்னும் அவன் மாமியார் வீட்டு வாசலை மிதிக்கற வரை இப்படியே மெய்ன்டெய்ன் பண்ணு... அப்பதான் உனக்கு பால் அபிஷேகம் கன்பார்ம் ஆகும்... “ என்று அந்த வேலனை எச்சரித்து வைத்தார் சிவகாமி....
“ஆஹா... இந்த சிவா ரொம்பத்தான் என்னை காக்க வைக்கிறாளே... சரி பொருத்து பார்ப்போம்.. “ என்று சிரித்து கொண்டான் அந்த வேலன்..
தன் அறைக்கு சென்ற நிகிலன் தயாராகி கீழ இறங்கி வந்தான்... ஏற்கனவே தயாராகி வரவேற்பறையில் அமர்ந்து தன் மாமியாருடன் சிரித்து பேசிக் கொண்டிருந்தாள் மது...
எதேச்சையாக மாடியை நோக்க, அங்கு தன் கணவனாக்கபாட்டவன் வழக்கம் போல அணியும் பார்மல் உடையில் இல்லாமல் ஜீன்ஸ் ம் டீ சர்ட்ம் அணிந்து கொண்டு மாடியில் இருந்து தாவி இறங்கி வந்து கொண்டிருந்ததை கண்டு ஆ வென்று வாயை பிளந்தாள் மது....
“இந்த விருமாண்டிக்கு இப்படி எல்லாம் கூட ட்ரெஸ் பண்ண தெரியுமா?? “ என்று உள்ளுக்குள் நினைத்து கொண்டவள் அவன் பார்வை அவள் பக்கம் திரும்பவும் டக்கென்று கீழ குனிந்து கொண்டாள்....
நிகிலன் அவர்கள் அருகில் வர, சிவகாமி எழுந்து
“வாவ்.. சூப்பரா இருக்க பெரியவா… என் கண்ணே பட்டுடும் போல இருக்கு... “ என்று அவனுக்கு நெட்டி முறித்தார்....
“மா.. என்ன இது?? .. நான் என்ன சின்ன பையனா?? ‘ என்றான் மெல்லிய வெக்கத்துடன்...
அதை கண்டு இன்னும் சாக்கானாள் மது..
அவரும் சிரித்து கொண்டே இருவரையும் பூஜை அறைக்கு அழைத்து சென்று அங்கு இருந்த அந்த வேலன் முன்னால் இருந்த விபூதியை எடுத்து அவர்கள் இருவர் நெற்றியிலும் வைத்து விட்டார்....
உடனே மது அவர் காலில் விழுந்து வணங்க, அவளை தூக்கியவர் ,
“இந்த வருசம் உனக்கு எல்லாம் நல்லதா நடக்கும் மருமகளே... எப்பவும் சிரிச்சுகிட்டே இருக்கணும்..அந்த முருகன் எப்பவும் உனக்கு துணை இருப்பான்... “ என்று ஆசிர்வதித்தார்..
அதை கேட்டு மதுவின் கண்கள் பளிச்சிட, தன் மாமியாரை பார்த்து ஏதோ கேட்க நினைக்க, அதற்குள்
“சரி.. நேரமாகுது.. சீக்கிரம் கிளம்புங்க.. “ என்று அவசர படுத்தினார்...
பின் இருவரும் கிளம்பி வாசலை நோக்கி நடக்க, அவர்கள் இருவரின் ஜோடி பொருத்தத்தை மனம் குளிர கண்டு ரசித்து கொண்டிருந்தார் சிவகாமி...
முன்னால் நடக்கும் நிகிலன் பின்னால் பயந்தவாறெ மது சென்றாள்... அவன் கார் நிறுத்தியிருக்கும் ஷெட் ஐ அடைந்ததும் அங்கு இருந்த ஒரு காரின் அருகில் சென்றான்...
அங்கு மூன்று கார்கள் நின்று கொண்டிருந்ததை அப்பொழுது தான் கவனித்தாள் மது.. நேற்று அவசரத்தில் கவனிக்காமல் விட்டிருந்தாள்.. ஒரு காரின் முன்னால் இந்திய தேசியகொடி பறந்து கொண்டிருந்தது... அதில் தான் நேற்று சென்றான்...
இன்று அந்த காரை எடுக்காமல் அருகில் இருந்த மற்றொரு காரை அடைந்து அதில் ஏறி அமர்ந்தான்...
“ஒரு வீட்டுக்கு மூனு காரா?? போலிஸ் வேலைக்கு இவ்வளவு சம்பளம் வருமா?? ஒரு வேளை லஞ்சம் வாங்கற போலிஸ் ஆ இருப்பானாக்கும்... “ என்று யோசித்துக் கொண்டே அவன் அமர்ந்த காரின் முன் இருக்கை கதவை திறக்க அது திறக்காமல் அடம் பிடித்தது..
சிறிது நேரம் பார்த்தவன் காரின் இந்த பக்கம் வந்து உள்ளிருந்து கதவை திறந்து விட்டு
“என்ன மகாராணிக்கு கதவை திறந்து விட்டாதான் ஏறுவீங்களோ?? “என்றான் நக்கலாக...
மது எதுவும் பேசாமல் உள்ளே ஏறி அமர்ந்தாள்...
“எவ்வளவு கொழுப்பு பார் இவளுக்கு?? “ என்று முறைத்தவாறு தன் காரை கிளப்பி சென்றான்... கேட்டைஅடைந்ததும் அங்கு இருந்த செக்யூரிட்டி அவனுக்கு சல்யூட் வைக்க, அவனும் இலேசாக புன்னகைத்து தலை அசைத்து சென்றான்....
ஐ விருந்து என்ன ஆகுமோ
ReplyDelete