பவி வெட்ஸ் ஆதி

பவி வெட்ஸ் ஆதி



முன்னுரை:


பவி வெட்ஸ் ஆதி ஒரு ஜாலியான கதை... நான் ரசித்து, அனுபவித்து எழுதின கதை இது .. எழுதும்பொழுதே பல இடங்களில் சிரித்துக் கொண்டே எழுதினேன்... நீங்களும் என்ஜாய் பண்ணுவீங்கனு நினைக்கிறேன்...  Happy Reading!!!

*********

 "துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில்
பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும் நிமலனருள்
கந்தர் சஷ்டி கவசம் தனை.
..
..
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியினில் நோக்க
தாக்க தாக்க தடையறத் தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட…." 

என்று கந்தர் சஷ்டி கவசத்தை மனம் உருகி பாடிகொண்டிருந்தார் ஜானகி.

பின் நாற்பதில் இருந்தாலும் பார்ப்பவர்கள் நம்ப மாட்டார்கள்.
அதிகாலையிலயே குளித்து முடித்து மங்களகரமாக இருந்தார். இன்று மட்டுமல்லாமல் தினமும் அதிகாலையிலயே எழுந்து, குளித்து பூஜை செய்வது ஜானகியின் வழக்கம்.

ஒரு வழியாக தன் பூஜையை முடித்து , கையில் காபியுடன் ஷோபாவில்அமர்ந்தார்.

அவர் கண்கள் தானாக மாடியை நோக்கியது....

மாடியில் எந்த அரவமும் கேட்கவில்லை. கொஞ்ச நேரம் மாடியையே பார்த்து இருந்தவர், அதற்கு பின் மதிய சமையல் தயாரிப்பதற்காக சமையலறையில் நுழைந்தார்.

சமையலறையில் ரொம்ப பிசியாக இருந்தார் ஜானகி. அவரை பின்னாலிருந்து இரண்டு கைகள் கட்டிக்கொண்டன. பின்னாடி திரும்பாமலயெ புரிந்தது யாரென்று.

முகத்தில் குறும்பு சிரிப்புடன் நின்று கொண்டிருந்தாள் பவித்ரா ஜானகியின் குறும்பு மகள்.

“குட் மார்னிங் ஜானு”

“ஏண்டி இது மார்னிங் ஆ? வாட்ச் ஐ பாரு. மதியம் இப்போ.”

“ஹி ஹி எனக்கு இப்போதான் மார்னிங் ஜானு”

“அது சரி. இரண்டு மாதம் கழித்து வீட்டுக்கு வந்திருக்கே. அதுவும் லேட் நைட் வந்த. சரி எழுப்ப வேணாம்னு விட்ட இப்படியா மதியம் வரைக்கும் தூங்கறது.

நானும் நீ காபிக்கே கீழ வருவனு எத்தனை தடவை மாடியையே பார்க்கறது.
இப்படி தூங்கினா நாளைக்கு கல்யாணம் ஆகி போற இடத்துல எப்படி மேனேஜ் பண்ணுவ. எல்லாரும் என்னதான் திட்டுவாங்க என்ன பொண்ணு வளத்தி வச்சிருக்கானு.. என்று புலம்பி கொண்டே அவள் கையில் காபி ஐ கொடுத்தார்.

“இது தான் என் செல்ல மம்ஸ்” என்னதான் திட்டினாலும்... இல்ல இல்ல திட்டற மாதிரி ஆக்ட் பண்ணாலும் நீ செய்ற ட்யூட்டி கரெக்ட் ஆ பண்ணிடற. நான் காபி வேணும்னு கேட்காமலயே கொடுத்துட்டியே ... சான்ஸ்லெஸ் ஜானு “

“போதும்டி. ஐஸ் வச்சது. பேச்ச மாத்தாத “

“என்ன பேசினோம்.. என்ன மாத்தினேன் ? “

“அதான்டி உன் மேரேஜ் பத்தி”


“ஆதர்ஷ் வீட்ல இருந்து தினமும் கேட்டுட்டு இருக்காங்க. என்ன பதில் சொல்ல. நீயும் இழுத்துக்கிட்டே இருக்க”

“நான் எங்க ஜானு இழுத்தேன். நான்தான் முதலிலேயே என் ரிஷல்ட்ஐ சொல்லிட்டேனே எனக்கு மேரேஜ் ல இன்ட்ரெஸ்ட் இல்லைனு.”

இதையே தான் 4 வருஷமா சொல்லிட்டிருக்க. படிப்பு முடிந்த உடனே நல்ல வரன் வந்தது. ஆனால் நீ வேலைக்கு போகணும் அப்புறம் பார்க்கலாம்ன. சரினு விட்டுட்டோம்.

வேலைக்கு போய் 2 வருஷம் கழித்து கேட்டப்போ ப்ரமோஷன் கிடைக்கட்டும் ன. இப்போ ப்ரமோஷன் கிடைச்சு ஒரு வருஷம் மேல ஆயிருச்சு. இன்னும் ஏண்டி மேரேஜ் வேண்டாங்கிற ? இப்பவே உனக்கு 26 வயது ஆகிவிட்டது. இதுக்கும் மேலயும் தள்ளி போட முடியாது. “

“ஹி ஹி அதெல்லாம் நான் மேரேஜ் தள்ளிபோட அப்ப அப்ப எனக்கு கிடைச்ச சின்ன சின்ன காரணங்கள் ஜானு. நீயும் அதை நம்பிட்ட. Actually எனக்கு மேரேஜ் ல கொஞ்மும் இன்ட்ரெஸ்ட் இல்லை. “

“ஏண்டி யாரையாவது லவ் பண்றியா? அப்படினாலும் சொல்லுடி. எங்களுக்கு வேலை மிச்சம். அவனுக்கே மேரேஜ் பண்ணி வச்சர்ரோம். “

“ஐ ஆசை தோசை. எப்படி ஜானு இவ்வளவு நல்லவளா இருக்க. அதனால் தான் என்னவோ எனக்கு யாரையும் பிடிக்கல.”

“என்னதான் பிரச்சனை உனக்கு. ஏன் மேரேஜ் பிடிக்கலை? ஆதி ரொம்ப நல்ல பையன் டி. உன் அண்ணா ப்ரென்ட் வேர. சின்ன வயசில இருந்தே நல்லா தெரிஞ்ச பையன்.

அதுவும் U.S ல உன் அண்ணா கூடவே ஒரே ரூம்ல இருந்திருக்கான். உன் அண்ணனும் ரொம்ப தங்கமான பையனு சொல்றான். உன் அடாவடி குணத்துக்கு அவனால் தான் பொறுத்து போக முடியும்.”

“என்ன அந்த குரங்கு U.S ல இருந்துகிட்டு வாங்குற டாலருக்கு வேலை செய்யாம எனக்கு மாப்பிள்ளை பார்க்கிற வேலை பார்க்கறானா. அவனுக்கு இருக்கு.

அது யாருமா அந்த குரங்கோட ப்ரென்ட் எனக்கு தெரியாம? அதுவும் இன்னொரு குரங்காதான் இருக்கும்“

“பவி, குரங்கு, கிரங்குனு இது என்ன பேச்சு. மரியாதையா பேசி பழகு “

“ஆமா உன் பையன சொன்னா மட்டும் கோவம் வந்திடுமே? சரி மேல சொல்லு. யாரு அந்த மதிப்புக்குரிய திருவாளர்“

“உன் அண்ணனை பார்க்க அடிக்கடி உயரமா ஒரு பையன் வருவானே. லாஸ்ட் இயர் கூட அண்ணனுக்கு நிறைய திங்க்ஷ் இங்க இருந்து கொடுத்து விட்டேனே?”

“ஓ அந்த ஒட்டட குச்சியா?”

“ஒட்டட குச்சியா?. இப்ப ரொம்ப ஹென்ட்சம் ஆ இருக்கான் தெரியுமா. உன்னை பிடிச்சிருக்கறதா 3 வருடம் முன்னாடியே மணக்க கேட்டான். அப்ப தான் நீ இன்னும் ஒரு வருடம் போகட்டும் னு சொன்னியா.

அவனும் wait பண்றேன் ஆன்டினுட்டான். ஒவ்வொரு வருடமும் அவனும் follow பண்ணிகிட்டே இருக்கான்

எனக்கு என்ன சந்தேகம்னா, உன் குணம் தெரிஞ்சும் உன்னைத்தான் கல்யாணம் பண்ணிப்பேனு வந்து மாட்டறானே அவனை என்ன சொல்ல. இதுக்குதான் காதலுக்கு கண் இல்லைங்கறது.” என்று சிரித்தார் ஜானகி.

செல்லமாக அம்மாவை முறைத்தாள் பவித்ரா

“நீ எனக்கு அம்மாவா இல்லை அவனுக்கா. அவனுக்காக சப்போர்ட் பண்ற?”

“நான் மட்டும் அவனுக்கு அம்மாவா இருந்தா நீ இருக்கிற பக்கமே அவன அனுப்பி இருக்க மாட்டேன்.”

“ஜானு நீ ரொம்ப ஓவரா என்னை ஓட்டர. இரு உன் ஆளுகிட்டயே சொல்றேன்.”

“என்னடி கொஞ்சமாவது அப்பா னு மரியாதை இருக்கா. உன் ஆளுன்ற.”

“நீ மட்டும் என்ன அம்மா மாதிரியா பேசுற “

“ஓகே ஓகே கம் டு தெ பாய்ன்ட். நீ மேரேஜ் பிடிக்கலைங்கறதுக்கு காரணம் சொல்லு. சரியான காரணமா இருந்தா கன்சிடர் பண்ணலாம்.

“காரணம் தானே நோட் பண்ணிக்கோ

நம்பர் 1:  மேரேஜ் ஆனதுக்கப்புறம் நான் உங்களை எல்லாம் விட்டு பிரியனும். ஆனால் பசங்க மட்டும் எப்பவும் அவங்க பேரண்ட்ஸ் கூட இருக்கனும். அவங்க வீட்டை விட்டு வரமாட்டாங்க. இது எப்படி நியாயம் ஆகும்.

என்னால உன்னை, அப்பாவை, இந்த வீட்டை எல்லாம் விட்டுட்டு போக முடியாது. நான் எப்பவும் உங்க கூடவே தான் இருப்பேன்.

“நீ எந்த காலத்துல இருக்கடி. இப்பல்லாம் எங்க பொண்ணுங்க மாமியார் வீட்டுக்கு போறாங்க. மேரேஜ் பிக்ஷ் ஆனதும் மண்டபம் பார்க்கறாங்களோ இல்லையோ முதலில் அவங்க வேலை செய்யற இடத்திலேயே வீட்டை பார்க்கறாங்க.

உள்ளூர்னாலும் தனிக்குடிததனம் போக முதலில் வீட்டை தான் பார்க்கறாங்க.

பொண்ணு போய் பையன் வீட்ல குடும்பம் நடத்துனது எல்லாம் அந்த காலம்.

மேரேஜ் முடிஞ்சதும் பார்மலிடிக்கு பொண்ணு வீட்ல ஒரு நாள், பையன் வீட்ல ஒரு நாள் ஹனிமூன் ஒரு வாரம் அப்புறம் பேக் டு வொர்க். இதில் நீ எங்க அங்க போய் இருக்க போற.

அப்புறம் என்ன சொன்ன எங்களை விட்டு இருக்க முடியாதா ? இப்ப மட்டும் என்ன எங்க கூடவா இருக்க?

நீ வேலைக்காக வேற இடத்துல இருக்க. 2 மாதத்திற்கு ஒரு முறை தொடர்ந்து லீவ் வந்தாதான் இங்க எட்டி பார்க்கற.

மேரேஜ் ஆனாலும் அதேதான் தொடர போகுது. லீவ் கிடைக்கறப்ப எல்லாம் வந்திரு.
ஆதி உனக்காகவே U.S project ஐ சீக்கிரம் முடிச்சிட்டு ஆன் சைட் கூட விட்டுட்டு வரேன்றான். இல்ல நீ U.S போறதானலும் போ.


நீ உன்னோட கேரியர் எதுவும் விட்டு கொடுக்க வேணாம். அவங்க வீட்ல போய் இருக்கவும் வேணாம். இரண்டு பேருமே உங்க வீட்ல இருக்க போறீங்க. அதனால் இது செல்லாது செல்லாது. அடுத்த காரணம் என்ன? “

“ஆமா இவங்க பெரிய நாட்டாமை. நான் சொல்றத செல்லாதுனு சொல்றதுக்கு”

“நீ தாண்டி சொன்ன சரியான காரணம்னு ? இது சரியானது இல்லை. அடுத்து என்ன?"

நம்பர் 2: என்னால காலைல எழுந்து காபி போட்டு, அவனை எழுப்பி , காபி கொடுத்து , சமையல் பண்ணி, ஆபிஸ் ரெடியாகி ஓடனும். ஆனால் அவன் மட்டும் ராஜா மாதிரி எழுந்து, செஞ்சு வச்சத சாப்டிட்டு ஆபிஸ் போய்டுவான். அப்பா, என்னால இதையெல்லாம் சகிக்க முடியாது.

லேட் ஆ எழுந்தமா, மெஸ் லயோ, ஹொட்டலயோ  சாப்டமா போனமானு தான் இருக்க முடியும்.”
“சமைக்கறது எல்லாம் ஒரு மேட்டரா? இப்ப I.T ல இருக்கறவங்க பாதி பேர் வீட்ல சமைக்கறதே இல்லை. மோஸ்ட்லி வீக் என்ட் ஒரு டைம் சமைக்கறதே பெரிசு.

இப்பதான் எத்தனையொ ஆன்லைன் செர்விஸ் வந்துருச்சே.
ப்ரேக்பாஸ்ட், லன்ச், டின்னர் எதுனாலும் ஆன்லைன் ல ஆர்டர் பண்ணா போதும். வீடு தேடி டெலிவரி பண்ணிடறாங்க. இப்ப இது மாதிரி ஆன்லைன் செர்விஸ் க்கு ஏக டிமாண்ட் தெரியுமா?

அத விடு. ஆதியே நல்லா சமைப்பான். U.S ல இருந்தப்போ அவனே கத்துகிட்டு சமையல் ல எக்ஷ்பெர்ட் ஆகிட்டானாம்.

ஒரு வேளை நீ எப்படியும் சமையல்கட்டு பக்கம் போக மாட்டேனு தெரிஞ்சுதான் முன்னாடியே பிரிபேர்டு ஆகிட்டானு நினைக்கிறேன். நீ கவலைய விடு. நீ சொன்ன எல்லா வேலையும் அவன் செஞ்சுடுவான்  என்று சிரித்தார் ஜானகி.

“ஒரு காலத்துல Jio 4G SIM free ஆ கிடைச்சுதுனு உனக்கு ஒரு சிம் போட்டு குடுத்து ப்ரௌஸ் பண்ண சொல்லி கொடுத்தது தப்பா போச்சு . எல்லாம் தெரிஞ்சு வச்சுருக்க ஜானு”

“ஹி ஹி டெக்னாலஜி க்கு தகுந்த மாதிரி நாங்களும் upgrade ஆகணும். இல்லைனா உன்னை மாதிரி இந்த தலைமுறை ஐ சமாளிக்க முடியாது.”

“போதும் போதும் ரொம்ப excite ஆகாத மம்ஸ். சரி என்ன ப்ரேக்பாஸ்ட்.. சாரி லன்ச்?”

“எல்லாம் உனக்கு பிடித்த ஐடெம்ஸ் தான். “

“பவி, பேச்சை மாத்தாத. இந்த விசையத்த நீ இன்னைக்கு முடிக்கனும். அவங்களுக்கு நான் ஒரு முடிவை சொல்லனும். அவங்களும் எத்தனை நாள் தான் காத்திருப்பாங்க.“

“அம்மா, நான் அப்ப சொன்னது தான். என்னால என்னோட freedom விட்டுட்டு, கழுத்துல ஒரு லைசென்ஸ் ஐ மாட்டிட்டு, உன்னை மாதிரி குடும்பமே கோயில், கணவனே கண் கண்ட தெய்வம் னு எல்லாம் இருக்க முடியாது.

ப்ளீஸ் என்னை விட்டுடு மா. நான் இப்படியே இருக்கறேன். எனக்கு இந்த லைப் தான் பிடிச்சிருக்கு.
விரும்பியத செஞ்சுட்டு , பிடித்த இடத்துக்கு போயிட்டு, ஒரு free bird ஆ இருக்கனும். என்னை திருமணம் என்கிற சிறைக்குள்ள தள்ளாத.”


“திருமணம் என்கிறது சிறையா  உனக்கு?”

“இந்த சுதந்திரமான வாழ்க்கைனு  நீ நினச்சிட்டிருக்கிற இந்த வாழ்க்கை,  இப்ப உனக்கு பிடிக்கலாம். ஆனால் இதுவே இரண்டு வருஷம் தொடர்ந்தால் உனக்கு போரடிக்கும்.

சின்ன வயசுல நீயும் உன் அண்ணனும் சாக்லெட்காக அப்படி சண்டை போடுவீங்க. ஆனால் அதுவே வளர்ந்ததுக்கப்புறம் சாக்லெட் மேல இருக்க இன்ட்ரெஸ்ட் போயிருச்சு.

பட்டாசு வெடிக்க அப்படி அலைவீங்க. தீபாவளிக்கு ஒரு வாரம் முன்னாடியே பட்டாசு வாங்கி கொடுக்க சொல்லி அடம் பண்ணி வெடிப்பீங்க. இப்ப அதெல்லாம் எங்க போச்சு.

அதே மாதிரிதான் ஒவ்வொரு கால கட்டத்திலும் இன்ட்ரெஸ்ட் மாறிட்டே இருக்கும். ஒரு வயசுக்கு மேல லைப் போரடிக்காமல் இருக்க தான் ,கணவன், மனைவி , குழந்தைங்கனு ஒவ்வொருவருக்கும் ஒரு குடும்பத்தை அமைத்து கொடுக்கறது தான் திருமண வாழ்க்கை. இது என்றும் சுமையாகாது. சுகமானதுதான்.“




தன் அன்னை சொன்னதை கேட்டு கை தட்டினாள் பவித்ரா.

“சூப்பர் ஜானு. பிண்ணிட்ட. எப்படி இப்படி எல்லாம் பேசுற.

ஒன்னு செய். ஆன்லைன் எழுத்தாளருக்காக இப்பதான் நிறைய வெப்சைட்கள்  இருக்கின்றன. அதுல தொடர்கதை , சிறுகதை, கவிதை , ஜோக்ஸ்  எல்லாம் அனுப்பலாம். நீ உன்னோட கருத்துகளையும் அட்வைஸ் களையும் எல்லாம் அவங்களுக்கு அனுப்பி வை. பயங்கர ஹிட் ஆகும். இப்ப நீ என்னை ஆள விடு” என்று நழுவினாள்.

“இந்த காலத்து பொண்ணுங்களுக்கு எல்லாத்துலயும் விளையாட்டுதான். எப்பதான் மாறுவாளோ “ என்று முனுமுனுத்துக் கொண்டே சமையலை தொடர்ந்தார் ஜானகி.

அவரின் நினைவுகளோ பின்னோக்கி சென்றது. தனது 19 ஆம் வயதில் திருமணம் வேண்டாம் என்று தன் தாயிடம் அடம் பிடித்ததும், திருமணம் முடிந்தும் கூட தன் கணவன் முகததை பார்க்க தயங்கியதும், தன் வீட்டை விட்டு கிளம்புகையில் தாயின் முந்தானையை பிடித்துக்கொண்டு போகமாட்டேன் என்று அழுததும் நினைவில் ஆடியது.

ஆனால் இன்று எல்லாம் மாறிவிட்டது. தன் அன்பான கணவனை விட்டு ஒரு நாள் கூட அவரால் பிரிந்து இருக்க முடியாது.

திருமண வாழ்க்கை தன்னை எப்படி மாற்றிவிட்டது என்று தனக்குள்ளே சிரித்துக் கொண்டார். தன் மகளும் சீக்கிரம் மாறி விடுவாள் என்று நம்பினார்.


சீக்கிரம் மாற வேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொண்டார். அதையே நேரிடையாக கடவுளிடம் முறையிட, மாலை பவித்ராவையும் வற்புறுத்தி கோயிலுக்கு அழைத்துச் சென்றார்.

எப்பொழுதும் பார்மல் உடையில் இருப்பவளை ஜானகி வற்புறுத்தி சேலை அணியச் சொன்னார்.
சேலையிலும் மிதமான ஒப்பனயிலும் அழகு ஓவியமாக திகழ்ந்தாள் பவித்ரா. ஜானகிக்கு தன் கண்ணே பட்டு விடும் போல இருந்தது. திருஷ்டி கழித்து அழைத்துச் சென்றார்.

தாயுடன் கோயிலுக்கு சென்றவள் சந்நதியில் கண் மூடி என்ன வேண்டுவது என்று தெரியாமல் அமைதியாக நின்றாள்.

2 நிமிடம் அமைதியாக நின்றவள் தன்னை யாரோ பார்ப்பது போல தோன்றவும், மெதுவாக கண்ணை திறந்தாள். அவள் எதிரில் 6 அடி உயரத்தில் கம்பீரமாக ஒருவன் நின்று கொண்டு இவளையே இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தான்..

பவித்ராவும் அவனை நேருக்கு நேராக பார்த்தாள். சில விநாடிகள் தான். அவன் கண்களில் பல விதமான உணர்வுகள். காதலும், ஏக்கமும் கலந்து இருந்ததை போல இருந்தது. ஏனோ அவன் பார்வை என்னவோ செய்தது அவளை.

அவள் கண்கள் தானாக தரையை பார்த்தது. அவள் முகமோ செந்தாமரையாக சிவந்தது. அவன் இன்னும் இவளையே பார்ப்பது பார்க்காமலே இவளுக்குப் புரிந்தது.

“ யாரிவன். இப்படி பப்லிக்ல அதுவும் கோயில நின்னு இப்படி சைட் அடிச்சிட்டிருக்கான். மற்ற நேரமாயிருந்தால் இந்நேரம் சண்டைக்கு போயிருப்பாள். ஏனோ அவனை நேராக பார்க்க முடியவில்லை அவளால்.

இது என்ன புதுசா இருக்கு. இதுவரை எத்தனையோ ஆண்களிடம் பழகியிருக்ள். அலுவலகத்தில் கூட அவள் டீமில் அனைவரும் ஆண்களே. அத்தனை பேரிடமும் நேருக்கு நேராக பார்த்துதான் பேசுவாள்.

எத்தனை சண்டை போட்டிருப்பாள். சண்டைக்கோழி னுதான் பேர் அவளுக்கு.
அப்படி பட்ட நான் இவனை மட்டும் ஏன் நேராக பார்க்க முடியவில்லை “ என்று புலம்பி கொண்டிருந்தாள்.

நல்ல வேளை. ஜானகியும் தன் பிரார்த்தனையை முடிக்கவும் அவசரமாக அம்மாவுடன் அவ்விடத்தை விட்டு அகன்றாள் பவித்ரா. பிரகாரம் சுத்தி முடித்து ஜானகியும் அவளும் ஒரு இடத்தில் அமர்ந்தனர்.

பவித்ராவின் கண்களோ அந்த நெடியவனையே தேடியது. எங்காவது இருந்து இன்னும் தன்னையே பார்க்கிறானா என்று தேடினாள்.

அவளை ரொம்ப நேரம் தேட வைக்காமல் தொலைவில் அவன் வருவது தெரிந்தது.

இவன் எதுக்கு இந்த பக்கம் வரணும். வேற எங்காவது போகக்கூடாதா என்று திட்டிக்கொண்டிருக்கையிலே அவன் காலடி ஓசை மிக அருகில் கேட்டது.

ஆம் அவன் இவர்களை நோக்கியே வந்து கொண்டிருந்தான்.


“ஐயோ! இவன் எதுக்கு நம்ம கிட்ட வர்றான். எதிரில் நிற்கையிலயே அப்படி பார்த்தான். இப்ப கிட்டயே வரானே” என்று படபடப்பாக இருந்தது அவளுக்கு.

அதற்குள் அருகில் வந்தவன்
“ஹாய் ஆன்ட்டி, எப்படி இருக்கீங்க? அங்கிள் சௌக்கியமா? என்று பவ்யமாக கேட்டான். “

“என்னது ஆன்ட்டி யா? அம்மாவுக்கு தெரிந்தவனா? தெரிந்தவனா அப்படி பார்த்தான். பட்டி காட்டன் மிட்டாய் கடையை பார்த்த மாதிரி”

அதற்குள் ஜானகி அவனை பார்த்து
“வாப்பா ஆதி. எல்லாரும் நல்லா இருக்கோம். நீ எப்படி இருக்க. வீட்ல எல்லாம் சௌக்கியமா “ என்று நல விசாரிப்பை தொடர்ந்தார்.

பவித்ராவுக்கோ “ஆதி” என்ற பெயரை கேட்டவுடனே இன்னும் படபடப்பு அதிகமானது. இவனா அம்மா சொன்ன அந்த ஒட்டடகுச்சி? எனக்காக 3 வருடமா காத்திருப்பவன்? “

மெதுவாக அவனை திரும்பி பார்த்தாள். அம்மா சொன்ன மாதிரி ஹேன்ட்ஸம் ஆ தான் இருக்கான் என்று நினைத்தாள்.

அதே நேரம் அவனும் இவளை திரும்பி பார்த்து குறும்பாக கண்ணடித்தான்.
பவித்ராவின் முகம் சிவந்து போனது. பட்டாம் பூச்சிகள் பறக்க ஆரம்பித்தது.

அதற்கப்புறம் அவன் இருந்த பக்கமே திரும்ப வில்லை. என்னவோ பேசினான் ஜானுவிடம். சத்தியமாக ஒரு வார்த்தை கூட அவள் காதில் விழவில்லை. ஆனால் அவன் கண்கள் மட்டும் அடிக்கடி அவளிடம் வந்து சென்றதை உணர முடிந்தது. அப்படி பார்வை படும்போதெல்லாம் இவள் முகம் சிவந்தது தானாக.

இந்த காட்சி ஜானகியின் கண்களிலிருந்தும் தப்பவில்லை.

இடையில் அவனின் அம்மாவும் வந்து சேர்ந்தார்.

அவர் பங்குக்கு இவளிடம் நலம் விசாரித்தார்.
“பவிமா எப்படி இருக்க? ஸ்கூல் படிக்கறப்போ பார்த்தது. இப்படி வளர்ந்துட்ட?“

அவரை பார்த்து புன்னகை செய்தாள். மறந்தும் அவன் இருக்க பக்கம் திரும்ப வில்லை.
அவனும் இவள் ஒருத்தி அங்கே இருப்பதே தெரியாமல் அவள் அம்மாவிடமே கதை அடித்துக் கொண்டிருந்தான். இவளிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

மீண்டும் ஏதேதோ பேசி கடைசியில் விடை பெற்றனர் அந்த ஒட்டடகுச்சியும் அவன் அம்மாவும்.

கிளம்புகையில் “வீட்டுக்கு வாப்பா ஆதி. வந்து ரொம்ப நாளாச்சு “ என்றார் ஜானகி.

“கூடிய சீக்கிரம் எல்லோரும் வர்றோம் ஆன்ட்டி“ என்று இவளை பார்த்து மீண்டும் கண்ணடித்தான்.

பவித்ராவுக்கோ இவன் எப்படா இடத்தை காலி பண்ணுவான் என்று இருந்தது.

சிறிது தூரம் சென்றதும் அவன் அம்மா திரும்பி வந்தார்

“பவிமா, சொல்ல மறந்துட்டேன். எவ்ளோ அழகா இருக்க!. இப்பதான் தெரியுது ஏன் என் பையன் 3 வருடமா காத்திருக்கான் என்று.

இன்னும் அவன காக்க வைக்காம சீக்கிரமா கல்யாணத்துக்கு சரினு சொல்லுமா. சீக்கிரம் எங்க வீட்டுக்கு வந்து விளக்கேற்றி வை” என்று உச்சி முகர்ந்து சென்றார்.


பவித்ராவுக்கு என்ன சொல்ல என்று தெரியவில்லை. சின்னதாக புன்னகைத்தாள்.

அவர் சென்றவுடன் தன் அம்மாவிடம் திரும்பி
“என்ன மா குடும்பமே லூசு குடும்பமா இருக்கும் போல இருக்கு. அந்த ஒட்டட குச்சிதான் 3 வருடமா காத்திருக்கறதா சொல்றானா, இந்த ஆன்டியும் அவனுக்கு சப்போர்ட் பண்றாங்க” என்றவளை ஜானகி முறைத்தார்.

“ஆமான்டி, உன் மேல அக்கறையா இருக்கறவங்க எல்லாம் லூசு தான். நீ சொல்றதுக்கு எல்லாம் ஆடரமே நாங்களும் லூசுதான். இப்ப நீ முடிவா என்ன தான் சொல்ற? ஆதிய நீ கல்யாணம் பண்ணிக்க முடியுமா, முடியாதா?

ஒரு நிமிடம் ஆதியின் காதலுடனான முகம் நினைவில் வந்தது.

“இவன் அப்படி லுக் விட்டா உடனே நாங்க விழுந்துருவோமோ? இந்த பவித்ரா எதுக்கும் அசைய மாட்டா “ என்று மனதில் சொல்லிக் கொண்டெ

“மா. நான் நேற்று ஒரு பேச்சு, இன்று ஒரு பேச்சுனு இல்ல. அப்ப சொன்னது தான் இப்பவும். எனக்கு மேரேஜ் ல விருப்பம் இல்லை. “

“சரி டீ அப்ப நான் சொல்றதயும் கேட்டுக்கோ. உனக்கு மேரேஜ் ல விருப்பம் இல்லை என்ற காரணத்தை தவிர வேற காரணம் இல்லைனா உனக்கும் ஆதிக்கும் அடுத்த முகூர்த்தத்திலேயெ கல்யாணம். நீ என்னை மீற மாட்டேனு நினைக்கிறேன் “ என்று கடுமையான குரலில் கூறி நடந்தார்.

கோயிலில் இருந்து வீடு திரும்புகையில் யாரும் பேசவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர்.

பவித்ரா ஜானகியின் குரலில் அதிர்ச்சியாயிருந்தாள்.

என்ன தான் ப்ரென்ட்லியா தன் அம்மாவிடம் பழகினாலும், ஒரு சில விஷயங்களில் ஜானகி மிகவும் கண்டிப்பாக இருப்பார். அப்படி கண்டிக்கும்போது மட்டுமே இந்த மாதிரி குரலில் பேசுவார்.

அம்மா கண்டிப்பாக சொன்னதை பவித்ராவும் அவள் அண்ணனும் இன்று வரை மீறியதில்லை.
இப்போ அதே மாதிரி கூறவும் அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

இனிமேல் தன் அம்மா முடிவை மாற்றுவார் என்ற நம்பிக்கை இல்லை. அவள் கோபம் இப்போ ஆதியின் பக்கம் திரும்பியது.

“எல்லாம் இந்த ஒட்டடகுச்சியால் வந்தது. இவன யாரு என்னை லவ் பண்ண சொன்னா. அப்படியே பண்ணுனானே எங்கிட்ட சொல்ல வேண்டியதுதானே. அத விட்டு அது என்ன நேரா அம்மாகிட்ட போய் கேட்கறது.

எங்கிட்ட கேட்டு இருந்தா நல்லா டோஸ் விட்டு என் பக்கமே திரும்பாம பண்ணியிருப்பேன். அதனால் தான் நேரா அம்மாகிட்ட போய் கேட்டு இருக்கான்.

பேர பாரு “ஆதியாம் ஆதி. அந்தம் னு வச்சுருக்கனும். இவனால இப்ப என் free bird லைப் முடிவாக போகுது. வரட்டும் இவனுக்கு இருக்கு” என்று கருவிக்கொண்டே வந்தாள்.

ஜானகிக்கு தெரியும் அடம் பிடிக்கும் குழந்தைக்கு கொஞ்சம் முரட்டுதனமாகத்தான் மருந்து கொடுக்கனும் என்று.

பவித்ராவும் திருமணம் வேண்டாம் என்று அடம் பிடிக்கும் சிறுபிள்ளையாகவே தெரிந்தாள். ஆனால் தன் மகளுக்கும் ஆதியிடம் ஈர்ப்பு இருக்கிறதை கோயிலில் கண்ட பார்வை பரிமாற்றத்திலேயே புரிந்தது.

எப்படியும் திருமணத்திற்கு பிறகு மாறி விடுவாள் என்று நம்பிக்கை இருந்ததால் கொஞ்சம் கடினமாக வே கூறினார்.

ஆதிக்கோ தன் இதய தேவதையை பார்த்து விட்ட சந்தோஷத்தில் இருந்தான். பள்ளி பருவத்தில் முதன் முதலில் அவளை சுட்டி பெண்ணாக பார்த்தபோதே அவளால் கவரப்பட்டான். அப்போ அது என்ன மாதிரி உணர்வு என்று புரியவில்லை.

பிறகு காலேஜ் முடித்து வேலைக்காக வெளிநாடு சென்ற போதும் அவளின் நினைவுகள் அப்படியே இருந்தது.

அப்போதுதான் தன் காதலை உணர்ந்தான். அவள் அண்ணன் வேறு அவளின் குறும்புகளை அடிக்கடி அவனிடம் கூறி அவனின் காதலுக்கு உரமிட்டு வந்தான்.

ஆதிக்கோ அவளிடம் தன் காதலை கூற தயக்கம். அவள் மறுத்து விட்டால்? அதனால்தான் அரேஞ்ஞுடு மேரேஜ் ஆகவே இருக்கட்டும் என்று ஜானகியிடம் 3 வருடம் முன்னமே மணக்க கேட்டது.

ஆனால் ஜானகி அவனுடைய பேச்சிலிருந்தே அவன் காதலை கண்டுகொண்டார்.

அவள் திருமணத்தை மறுத்து வருவதை கண்டு அவள் வேற யாரையாவது விரும்புகிறாளோ என்று கவலையாக் இருந்தது அவனுக்கு.

ஆனால் இன்று தன்னை பார்த்ததும் அவளின் முகம் சிவந்ததை கண்டே அவளுக்கும் தன் மேல் விருப்பம் இருப்பதை கண்டான். இனிமேல் அவள் மறுக்க மாட்டாள் என்று மகிழ்ச்சி அடைந்தான்.

அதற்கு பிறகு எல்லாம் ஜெட் வேகத்தில் நடந்தது. அடுத்த முகூர்த்தத்திலேயெ ஆதிக்கும் பவித்ராவுக்கும் திருமணம் நல்ல படியாக முடிந்தது.


3 வருடங்களுக்கு பிறகு:

ஆறு மணிக்கு மேல் அலாரம் இரண்டு முறை அடித்து நின்றது.
அவசர அவசரமாக எழுந்தாள் பவித்ரா.

சே! எப்படி இப்படி தூங்கினேன். 10 நிமிடம் லேட் ஆயிடுச்சு. எப்ப காபி போட்டு, டிபன் பண்ணி, லன்ச் ரெடி பண்றது. இதுல இந்த ஒரு வயது குட்டியயும் ரெடி பண்ணி கிரெச்ல விட்டு ஆபிஸ் கிளம்பனும். 10 நிமிடம் அல்ரெடி லேட்“ என்று புலம்பி கொண்டே தன் அன்றைய வேலையை துவங்கினாள் பவித்ரா.

கிச்சனில் படு பிசியாக இருந்தாள். இதில் திடீரென்று அவளின் மொபைல் அலறியது.

“யாரு இந்த நேரத்தில் கால் பண்றது. நேரம் காலமே இல்லை என்று திட்டிகொண்டே போனை எடுத்தாள். அவள் அம்மா ஜானகி தான் லைனில்

“பவி, எப்படி டீ இருக்க. மாப்ள, குட்டி எல்லாம் சௌக்கியமா?"

“எல்லாரும் நல்லா இருக்கோம் மா. என்ன இந்த நேரத்தில போன் பண்ணி இருக்க. அங்க எல்லாம் சௌக்கியமா?”

“All are fine டீ. நைட் ஒரு கெட்ட கனவு கண்டேன். அதான் மனசு கேட்கல. உங்கிட்ட பேசணும்னு தோணிச்சு. போன் பண்ணேன்.”

“ஓஓ சரிம்மா.”

“பவி, எப்ப ஊருக்கு வருவ. நீ வந்தே ஆறு மாதம் ஆயிருச்சு. எனக்கு குட்டிய பார்க்கனும் போல இருக்கு. கண்லயே இருக்கா”

“உனக்கு என்னமா ஈசியா சொல்லிட்ட . எங்க, ஊருக்கு வரணும்னாலே பயமா இருக்கு. எல்லாருக்கும் பேக் பண்ணி கிளம்பி வரணும்.

அங்க வந்தா பாப்பாவுக்கு அந்த க்ளைமேட் ஒத்துக்க மாட்டேங்குது. அங்க 2 நாள் செட் ஆச்சுனா திரும்பியும் இங்க வர்ரப்போ இங்க ஒத்துக்க மாட்டேங்குது. அவள் கொஞ்சம் வளரட்டும். வர்ரோம்.

நீ வேனா கிளம்பி வா. ஒரு வாரம் இருந்துட்டு போகலாம். எனக்கும் கொஞ்சம் ரிலாக்ஷ் ஆ இருக்கும். சரி நான் போன் வைக்க வா. இன்னும் லன்ச் ரெடி பண்ணலை”

“ஏன்டி இவ்ளோ கஷ்ட படற. பேசாம ஆர்டர் பண்ணிட வேண்டியதுதானே ? “

“வெளி புட் ஆதிக்கு ஒத்துக்க மாட்டேங்குதுமா. லாஸ்ட் மந்த் புட் பாய்சன் ஆகி ரொம்ப கஷ்டப்பட்டார்.
குக் வச்சாலும் அவங்க சமையல் இவருக்கு பிடிக்க மாட்டேங்குது. உன் சமையல் மாதிரி இல்லைனு சரியா சாப்பிட மாட்டேங்கிறார். என்ன பண்ண. அதான் நானே சமைச்சிடறது.“

“ஆதி எதுவும் உதவி செய்யறது இல்லையா? “

“அவரும் பாதி செய்வார். நேற்று ஆபிஸ் ல வேலை அதிகம் னு லேட்டாதான் வந்தார். அதான் இன்னும் தூங்கிட்டிருக்கார். அவரை டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு தான் நானே செய்யறேன்.
சரி. நான் வீக் என்ட் ல கால் பண்றேன் “ என்று பேசி கொண்டு இருக்கையிலே ஆதியின் குரல் கேட்டது.

“பவி, பவி டார்லிங் .... என் டவல் எங்கே ? “

“இவர் வேற ப்ரஸ், பேஸ்ட், டவல் எல்லாம் நானே எடுத்து தரணும்.

"டவல் வாங்கினதோட விட்டா பரவால.... அதுக்கப்புறம்.....
5 நிமிடம் ஆகும் திரும்பி வர" என்று சின்ன வெட்கத்துடன் செல்லமாக திட்டிக் கொண்டே

“இதோ வர்ரேன் ஆதி “ என்று பறந்தாள்.

போனை ஆப் பண்ணி விட்டதாக எண்ணி பவித்ரா பேசியது இந்த பக்கம் இருந்த ஜானகிகு தெளிவாக கேட்டது.

தனக்குள்ளே சிரித்துக் கொண்டார். 3 வருடம் முன்னாடி இதே பொண்ணுதான் திருமணமே வேண்டாம் என்று அடம் பிடித்தவள்.

இன்று எப்படி மாறி விட்டாள். தன் கேரியரையும் பார்த்துக்கொண்டு, குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு., கணவனையும் விட்டு கொடுக்காமல் என்ன அழகாக குடும்பம் நடத்துகிறாள் என்று பெருமையாக இருந்தது.

30 வருடம் முன்னாடி தானும் திருமணத்துக்கு பயந்து அழுததும் அப்புறம் எல்லாம் மாறி விட்டதும் நினைவு வந்தது...

இதுதான் திருமண வாழ்க்கை என்பது... எத்தனை தலைமுறைகள் வந்தாலும், எவ்வளவு டெக்னாலஜி வளர்ந்தாலும் , திருமண பந்தம் என்பது எப்படிப் பட்ட பெண்களையும் மாற்றி விடுகிறது, அதற்கு பவித்ராவே ஒரு உதாரணம் என்று எண்ணி தனக்குள்ளே சிரித்துக் கொண்டார் ஜானகி!!!!

🌺 🌺 🌺 🌺 🌺🌺 🌺 🌺 🌺 🌺

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!