உனக்காக நான் இருப்பேன்


உனக்காக நான் இருப்பேன்

முன்னுரை:

சிறு வயதில் இருந்தே  எனக்கு கதை படிக்க ரொம்ப ஆர்வம்.. நிறைய நாவல்கள், சிறுகதைகள் வாசித்திருக்கிறேன்.. அந்த வகையில் புதியதாக எதாவது கதை  படிக்கலாம் என்று நெட்டில் தேடிய பொழுது எனக்கு அறிமுகமானதுதான் ChillZee இணையதளம்..

இதில் வெளியாகும் கதைகள் எல்லாம் சுவாரசியமாக இருக்க, அன்றிலிருந்தே ChillZee ன் தீவிர வாசகியாகி போனேன்..
3 வருடமாக ChillZee ன் வாசகியாக இருந்த நான் இங்கு வெளியாகும் அனைத்து படைப்புகளையும் பார்க்கும்போது எனக்குள் சின்ன ஆர்வம் நானும் ஒரு கதை எழுத வேண்டும் என்று . 
அந்த ஆர்வத்தில் வந்ததுதான் எனது இந்த முதல்  சிறுகதை...

ChillZee ன்  சிறுகதை போட்டிக்காக நான் முதன் முதலில் எழுத ஆரம்பித்தது... 

எப்பொழுதுமே முதல் குழந்தை எல்லோருக்கும் ஸ்பெஷல்.. அந்த மாதிரி எனக்கு இந்த கதை  ரொம்பவும் ஸ்பெஷல் + பிடித்ததாக்கும்..... உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.. படித்து பாருங்கள்....

***************

பொழுது இன்னும் சரியாக புலர்ந்திராத அந்த அதிகாலையில், அந்த திருமண மண்டபம் மாவிலை தோரணங்கலுடனும், அலங்கார விளக்குகளுடன் அழகாக மின்னி கொண்டிருந்தது.

வாயிலில் இரண்டு பெரிய வாழை மரங்கள் கம்பீரமாக நின்று எல்லாரையும் வரவேற்றுக் கொண்டிருந்தது..

“பாரதி வெட்ஸ் தயாளன்” என்று மலர்களால் அழங்கரிக்கப்பட்டிருந்த அந்த திருமண வரவேற்பு பலகை, அந்த விழாவின் நாயகன், நாயகி பெயர்களை அனைவருக்கும் அறிவித்து அழகாக வீற்றிருந்தது.

மண்டபத்தின் உள்ளே எங்கு திரும்பினாலும் அழகழகான பெண்கள் வண்ண வண்ண பட்டுபுடவையும் அதற்கு பொருத்தமாக அணிகலன்களும் அணிந்து ஜொலித்தனர். எல்லார் முகத்திலும் திருமணத்திற்கே உரித்தான  மகிழ்ச்சி நிறைந்து இருந்தது.

அதிலும்  மணப்பெண்ணிண் பெற்றோர்களுக்கோ மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்று இருந்தனர்.

பின்னே தங்கள் ஒரே மகளின் வாழ்வு கருகி விட்டதே என்று உடைந்து இருந்தவர்களுக்கு வரனாக தங்கள் மகளுக்கும் திருமணம் கூடி வந்து இதோ மணமேடை வரை வந்து விட்டாளே என்று நினைக்கும் பொழுதே நெஞ்ஜை அடைத்தது ஆனந்தத்தில்.

நொடிக்கு ஒரு தரம் அந்த ஆண்டவனுக்கு நன்றி செலுத்திய வண்ணம் திருமண  வேலைகளை கவனித்து கொண்டிருந்தனர்.

மணமகன் தயாளனுக்கோ சொல்லவே வேண்டாம். இரண்டு வருடமாக காத்திருந்து, தான் காதலித்தவளையெ கை பிடிக்க போகிறான் என்பதே அவன் திருமண மகிழ்ச்சியை இரட்டிப்பு ஆக்கி இருந்தது...

நொடிக்கு ஒரு தரம் தன் அருகில் அமர்ந்து இருந்தவளையே இமைக்காமல் பார்த்து இருந்தான்.

இப்படி எல்லாரும் ஒரு வித  மகிழ்ச்சியில் நிறைந்து அந்த திருமணத்தை எதிர்கொள்ளும்பொழுது ஒரு ஜீவன் மட்டும் இந்த திருமணம் ஏன் நடக்கிறது. எப்படியாவது இது நின்று விடாதா என்று மனதுக்குள்ளே மருகி கொண்டிருந்தது..

இந்த திருமணத்தை எப்படியாவது நிறுத்தி விடுமாறு எல்லா தெய்வங்களிடமும் யாசித்து கொண்டிருந்தாள் அந்த விழாவின் நாயகி , மணப்பெண்  பாரதி....

மணமேடையில் அமர்ந்திருந்தவளின் கண்களில் கண்ணீர்த்துளிகள் எட்டிப் பார்த்தன ... இதோ இன்னும் சில நிமிடங்களில் அருகே இருக்கும் இவன் அவளுக்கு தாலி அணிவித்து கணவனாக போகிறான்... நினைக்கும் போதே சுளீர் என வலித்தது பாரதிக்கு ...

இந்த திருமணத்தை நிறுத்த அவள் எடுத்த அத்தனை முயற்சிகளும் தோழ்வி...  இல்லை தோற்கடித்தான் தயாளன் மணமகனாக அருகில் அமர்ந்திருப்பவன்.

தன் கண்களில் எட்டிப் பார்த்த கண்ணீர்த்துளிகளை உள்ளிழுத்துக்கொண்டு  மெதுவாக அவனை திரும்பி பார்த்தாள் பாரதி...  அவனும் இவள் எப்படியாவது தன்னை பார்க்க மாட்டளா என்று இவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

அதுவும் இன்று மணப்பெண் அலங்காரத்தில் தேவதையாக ஜொளித்தவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
அருகில் இருந்த அவனுடைய நண்பர்களுடைய கிண்டல்கள் எதுவும் அவன் காதில் விழவில்லை. தன்னை பார்த்த பாரதியை பார்த்து குறும்பாக கண்ணடித்தான்...

அவனை பார்த்து முறைத்தாள் பாரதி...அவள் முகத்தில்  அவனை பார்த்து அப்படி ஒரு வெறுப்பு...

எப்படியாவது இந்த திருமணம் நின்று விடும் என்று கொஞ்சம் இருந்த நம்பிக்கையும் இழந்தாள் தயாளனின் இந்த செய்கையால்...

“இவன் ஏன் இவ்வளவு பிடிவாதமக இருக்கிறான் தன்னை மணப்பதில்?? “ என்று யோசித்தவள் எண்ணங்கள் தானாக பின்னோக்கி சென்றன....

பாரதி ஒரு  B.E. (Computer Science) பட்டதாரி..

2 வருடங்களுக்கு முன்பு பெங்களூரில் பிரபல IT கம்பெனியில் சாப்ட்வேர் இஞ்சினியராக பணிபுரிந்து வந்தாள்...

அவளுக்கு ஆரம்பத்தில் இருந்தே சாப்ட்வேர் டெவலப்மென்ட் ல் ரொம்ப ஆர்வம்...

கல்லூரியில் கடைசி வருடம் படிக்கும்போதே கேம்பசில் தேர்வானாள்...  ஆனால் வேலை பெங்களூர் என்றதும் அவள் பெற்றோர் அனுமதிக்கவில்லை.. எப்படியோ போராடி அவர்களிடம் அனுமதி பெற்று வேலையில் சேர்ந்தாள்...

டெவலப்மென்ட் ல் ஆர்வமாக இருந்தவளுக்கு எடுத்தவுடன் டெவலப்மென்ட் கிடைக்காமல் புரடக்சன் சப்போர்ட் கிடைக்கவும் ஏமாற்றமாக இருந்தது...
அடுத்து பெங்களூர் கல்சர்... இதுவரை வீடு , காலேஜ் மட்டும் உலகம் என்று இருந்தவளுக்கு பெங்களூர் கல்சர் ரொம்பவும் பயமுறுத்தியது...

இருந்தாலும் தன்னை சமாளித்துக்கொண்டு அவள் வேலையில் ஈடுபட்டு வந்தாள்...  அவளுடைய ப்ராஜெக்ட் U.S க்ளையன்ட் என்பதால் வேலை இரவு நேரம்தான்.

அவள் கம்பெனியில் இரவு வேலை செய்பவர்களுக்கு Cab ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது... 

ஆனால் பாதுகாப்பு அந்த அளவுக்கு  இல்லை. இப்பொது பெண்கள் பாதுகாப்பு என்பது கம்பெனி விதிகளில் ஒன்று. அப்போது அந்த அளவுக்கு செக்யூரிட்டி சிஸ்டம் இல்லை...

ஒரு நாள் வழக்கம் போல வேலை முடித்து கேப் ல் திரும்பி கொண்டிருந்தாள்... அன்று தினமும் வரும் டிரைவர் இல்லை... புது டிரைவர். அன்று இருந்த வேலை சுமையிலும் தூக்க கலக்கத்திலும்  டிரைவர் பார்வை தன் மீது படிந்திருப்பதை கவனிக்கவில்லை.

கேப்ல் அமர்ந்ததும் தன் இடத்தை சொல்லிவிட்டு கண் அயர்ந்தாள்...  அவள் இருந்த களைப்பில் கேப் வழக்கமாக செல்லும் பாதையில் செல்லாமல் வேறு பாதையில் செல்வதை கவனிக்கவில்லை...

திடீரென்று கேப் நிற்கவும் கண் விழித்தாள்....  டிரைவர் அவள் முகத்தில்  வைத்து அழுத்திய கை குட்டையால் மயக்கமானாள்...

மீண்டும் கண் விழித்தபோது முதலில் ஒன்றும் புரியவில்லை பாரதிக்கு...  கஷ்டப்பட்டு நினைவு படுத்திய பிறகு, இரவு டிரைவர் எதையோ வைத்து அழுத்தியது நினைவு வந்தது...

மெல்ல கண்ணை சுழற்றி பார்த்தவள் தான் சாலையோரம் கிடப்பதை உணர்ந்தாள்....  அவசரமாக எழ முயன்றவளாள் கால்களை அசைக்க  முடியவில்லை.

“ஐயோ! எனக்கு ஏதோ விபரீதம் நடந்துவிட்டது... “  என்று நினைக்கு முன் மீண்டும் மயக்கமானாள்...

மீண்டும் கண் விழித்ததும் தான் ஒரு மருத்துவமனையில் இருப்பதை உணர்ந்தாள் பாரதி...

தயாளன் நேற்று இரவு வேலை முடித்து அதிகாலை அந்த வழியாக வந்து கொண்டிருந்தான்...

சாலையோரம் மயக்கமுற்று இருந்தவளை கண்டதும் அப்படியே விட்டுச்செல்ல மனமில்லாமல்  உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தான்...

அவள் அருகில் கிடந்த கேன்ட்பேக்கில் இருந்து எடுத்த அவளுடைய மொபைலில் இருந்து அவளுடைய  பெற்றோருக்கு தகவல் கொடுத்து, அவர்களை பெங்களூர் வரவழைத்தான்...

கிழிந்த நாராக துவண்டு கிடந்த தங்கள் மகளை கண்டதும் அதிர்ச்சியில் உறைந்து போயினர் அவள் பெற்றோர்கள்...

அவர்களை தேற்றி ஹாஸ்பிட்டலில் கூடவே இருந்து அனைத்து உதவிகளையும் செய்து, பின் பாரதியை அவள் ஊருக்கு அனுப்பி வைத்தான்...

தனக்கு நடந்த விபரீதத்தை நினைத்து நடை பிணமானாள் பாரதி...  அவள் விரும்பி சேர்ந்த வேலையில் விருப்பம் இல்லாமல் வேலையை விட்டாள்.
எதுவும் பிடிக்காமல் வாழ்க்கையே பிடிக்காமல் வீட்டுக்குள்ளே சுருண்டாள்...  இன்னும் அடைந்து கிடக்கிறாள்...

அவளுடைய நிலையை கண்டு அவள் பெற்றோர் மிகவும் வருந்தினர்... ஆசையாக வளர்த்த ஒரே மகளின் வாழ்வு இப்படி கருகி விட்டதே என்று கண்ணீர் விட்டனர்.

பாரதியை எவ்வளவோ தேற்ற முயன்றும் முடியவில்லை. பாரதி நத்தையாக சுருண்டு கிடந்தாள். இவ்வளவு கஷ்டத்திலும் அவள்  பெற்றோருக்கு ஒரே ஆறுதல் தயாளன் தான் .    

பாரதியை ஹாஸ்பிட்டலில் இருந்து அனுப்பியதுடன் தன் கடமை முடிந்தது என்று நில்லாமல் தினமும் அவளுக்கு மொபைலில் அழைத்து பேசுவான்...

எப்படியாவது அவளை பழைய நிலைக்கு கொண்டு வர போராடி வருகிறான் இரண்டு வருடமாக...  ஆனால் பாரதியின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை...  
அவள் எந்த மாற்றத்துக்கும் ஒத்துழைக்கவில்லை...
இந்த நிலையில்தான் பாரதியை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவளுடைய பெற்றோரிடம் சம்மதம் வாங்கி இதோ மணமேடை வரை வந்துவிட்டான் தயாளன்...

பாரதி அவனிடம் எவ்வளவோ கெஞ்சி பார்த்து விட்டாள் இந்த திருமணம் வேண்டாம் என்று... அவனை பிடிக்கவில்லை என்று திட்டினாள்.

அவன் எதையும் காது கொடுத்து  கேட்கவில்லை. அவள் பெற்றோரிடமும் அவளின் அனைத்து போராட்டங்களும் தோல்வியே...

அவள் பெற்றோருக்கோ எப்படியாவது மகளின் வாழ்வு பழைய மாதிரி திரும்பாதா என்று ஏக்கம்...

தயாளன் தான் அதை சரி செய்யமுடியும் என்று நம்பினர். அதனால்தான் பாரதியை திருமணத்திற்கு கட்டாயப் படுத்தினர்.





ழைய நினைவுகளின் வலியோடு வெளிவந்தவள் ஐயர் சொன்ன கெட்டிமேளம்! கெட்டிமேளம்!  என்ற சத்தத்தில் திடுக்கிட்டாள்...  எப்படியாவது திருமணத்தை நிறுத்த  மணமேடையில் இருந்து எழ முயன்றாள்...

அதற்குமுன் தயாளன் அவள் கலுத்தில் மாங்கல்யத்தை கட்டியிருந்தான்... 

 இனி தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று தொய்ந்தாள் பாரதி...
அதற்கு பிறகு அனைத்து சடங்குகளும் முடிய வழக்கம் போல நடை பிணமாய் பங்கேற்று இதோ அவர்களுடைய முதலிரவு அறையில் அவள்...

கால்கள் தள்ளாட அந்த அறையில் நுழைந்தவளை தயாளன் ஓடி வந்து தாங்கிகொண்டான்.

தலையை நிமிர்ந்து பார்த்தவள் எதிரில் பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாய், கண்ணில் குறும்புடனும்,  உதட்டில் மெல்லிய புன்னகையுடன் தயாளன் நின்றிருந்தான்.

அவளை மறந்து அவனை ரசித்தாள் சில விநாடிகள் தான்.... மீண்டும் அவள் மனம் பழைய நிலைக்கு திரும்பியது...

“இவனை நான் நல்ல நிலைமையில்  சந்தித்திருக்க கூடாதா?? அன்பு மனைவியாக வாழ எனக்கு கொடுத்து வைக்கவில்லையே! “ என்று வருந்தியவள் சுதாரித்துக் கொண்டு தன்னை இன்னும் பிடித்துக்கொண்டு தன் முகத்தையே ரசித்துக் கொண்டிருந்தவன் கையை தட்டிவிட்டு அவனை முறைத்தாள்...

அவள் முறைப்பதையும் ரசித்துக் கொண்டே

“கூல் பேபீ கூல். என்ன ஆச்சு இப்போ ? நீ விழப்போன அதான் பிடிச்சேன்.”  என்றான் குறும்பாக சிரித்தவாறு...

“நான் விழுந்தாலும் நீங்க என்னை பிடிக்க தேவையில்லை” என்று எரிந்து விழுந்தாள்...

“பார்டா – நான் பிடிக்காமல் யார் பிடிப்பாங்களாம். ஐ ஹேவ் புல ரைட்ஸ் ஆன் யூ டார்லிங்..!! “ என்று மீண்டும் சிரித்தான்...

“புல் ரைட்ஸ்  நான் கொடுக்கனும். நீங்களா எடுத்துக்க கூடாது. நான் எவ்வளவு தரம் சொன்னேன் நான் உங்களுக்கு பொருத்தம் இல்லாதவனு. ஏன் இது மாதிரி ஒரு திருமணத்திற்கே நான் தகுதியானவள் இல்லை.. நான் கலங்கப்பட்டவள்...  ஏன் தயா கேட்கலை?? . 

என்னை மணந்தால் எல்லோரும் உங்களை பாராட்டுவாங்க...  முற்போக்குவாதினு சொல்லுவாங்கனு தானே. இப்ப திருப்தியா??

ஆனால் உங்களுக்கு பாராட்டும்,  முற்போக்குவாதினு பட்டம் மட்டும்தான் கிடைக்கும். என்னால வேற எந்த சுகமும் உங்களுக்கு கிடைக்காது. ஏண்டா இவளை  கல்யாணம் பண்ணுனேனு பீல் பண்ணுவீங்க “ என்று பொரிந்து தள்ளினாள் பாரதி.. 

அவள் பேசுவதையே அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்... பின் அருகில் இருந்த டம்ளரில் இருந்த தண்ணீரை எடுத்துக் கொடுத்தான். அவளுக்கும் தண்ணீர் தேவையாக இருக்கவே மறுக்காமல் வாங்கி குடித்தாள்...

அவள் குடித்து முடித்ததும் தொடர்ந்தான்.... 

“பேசி முடிச்சிட்டியா ரதி?? நான் ஒன்னும் பாராட்டுக்காகவோ, பட்டத்துக்காகவோ உன்னை கல்யாணம் பண்ணலை ரதி!!

என்னைக்கு நான் உன்னை முதன்முதலாக சாலை ஓரமாக கசங்கிய மலராக கண்டேனோ அன்றே என் மனதில் நீ  வந்துவிட்டாய்...

உன்னை அந்த நிலையில் பார்த்ததும் அப்படி ஒரு வலி என் இதயத்தில்...  ஏதோ என்னை மிகவும்  நெருங்கியவர்களுக்கு கஷ்டம் போல,.. 

நெருந்கியவர்களை விட எனக்கே அந்த கஷ்டம் போல இருந்தது...
உன்  வேதனையை பார்த்தபோது எப்படியாவது உன் வேதனையை போக்கி எப்பவும் உன்னை சந்தோசமா வச்சுக்கணும்னு தோனிச்சு...

நானும் எத்தனையோ ஆக்ஸிடென்ட் பார்த்துட்டு வண்டில இருந்து இறங்காம கூட போயிருக்கேன்...  ஆனால் ஏனோ உன்னை அப்படி விட்டுட்டு போக முடியலை.

டேரக்டா சொல்லனும்னா I fell in love with you at first sight பேபி.. ” .

சினிமால வருகிற மாதிரி அழகான பொண்ணை பார்த்தா மட்டும் தான் காதல் வரணும்னு இல்லை...

தன்னவளை எந்த நிலையில் பார்த்தாலும் காதல் வரும்கிறத உணர்ந்தேன். 

நீதான் எனக்கானவள் னு அப்பயே தோனிச்சு...  அந்த நிமிடத்திலிருந்ந்து உனக்காக நான் இருக்கேன். எப்பவும் இருப்பேன்...

I Love you so much Rathi...  உன்னை நல்லா பார்த்துப்பேன்.

உன்னை என் பக்கத்திலேயே வச்சு பார்த்துக்கணும்னுதான் இந்த திருமணம். மத்தபடி உனக்கு பிடிக்காதது எதுவும் நடக்காது.  ட்ரஸ்ட் மீ...” என்றான் அவளுக்கு தன்னை புரிய வைக்க...

ஆனால் அவளோ அதை  புரிந்து கொண்டதாக தெரியவில்லை... 

“நீங்க எவ்ளோதான் சொன்னாலும் நான் திருமண வாழ்க்கைக்கு தகுதி இல்லாதவ...  கலங்கபட்டவ.... கெட்டுபோனவ...  I’m not suitable for you. please leave me... ” என்று கத்த ஆரம்பித்தவள் பின் குலுங்கி அழ  ஆரம்பித்தாள்....

அதை கண்டு கோபமடைந்தவன்

“ஸ்டாப் இட் பாரதி... என்ன கெட்டுபோனவ? 

உனக்கு நடந்தது ஒரு ஆக்ஸிடென்ட்...  உனக்கே தெரியாம அது நடந்தது...  ஆக்ஸிடென்ட் ல மாட்டற எல்லோரும், ஏன் ஏதாவது உறுப்புகளை இழந்தவர்கள் கூட அதுல இருந்து மீண்டு நார்மல் லைப் க்கு வரல??

அதே மாதிரிதான் இதுவும்.. அந்த ஒரு ஆக்ஸிடென்ட் னால என்னவோ உன் லைல் ஏ போயிருச்சுனு இந்த இரண்டு வருடமா உன் லைப் ஐ தொலைச்சுட்டு இருக்க... “ என்று திருப்பி கத்தினான்..

“அது ஒன்னும் ஆக்ஸிடென்ட் இல்லை... ” என்று மெல்ல முனகினாள் பாரதி

“ஷட் அப்...  பாரதி னு பேர் இருந்தா மட்டும் போதாது. பாரதி கண்ட புதுமை பெண்ணா இருக்க வேண்டாமா? இப்ப எத்தனையோ கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்யலையா?

என்னதான் பெண்கள் முன்னேற்றம் , பெண் விடுதலை அது இது னு வந்தாலும் பெண்களா பார்த்து வெளில வராம எதுவும் மாறாது.

நீயும் அது மாதிரிதான்...  நடந்ததையே நினைச்சுட்டு உன்னை சுத்தி வட்டம் போட்டுட்டு உன்னையே அழிச்சுக்காம அதுல இருந்து வெளியில் வா பாரதி...

உனக்காக நான் இருப்பேன் இப்பவும் எப்பவும்...  இப்ப எதுவும் குழப்பிக்காம படுத்து தூங்கு.. குட் நைட்” என்று அவளின் பதிலுக்காக காத்திருக்காமல் சோபாவில் படுத்து உறங்கிவிட்டான்.

ஒரு மாதம் கடந்து விட்டது....

தயாளன் ம்  பாரதி ம்  பெங்களூர் வந்துவிட்டனர்...  

தயாளன் வழக்கம் போல அலுவலகம் சென்று வந்தான்...

பாரதியிடம் எந்த மாற்றமும் இல்லை... எப்பவும்  போல கடனேனு தன்  கடைமைகளை செய்து வந்தாள்...

தயாளனும் அவளை வெளிக்கொண்டு வர என்னென்னவோ முயற்சி செய்து அவள் மனம் மாறுவதற்காக பொறுமையாக காத்து இருந்தான்.

அன்று ஞாயிற்றுக்கிழமை காலை...

“பாரதி...  சீக்கிரம் கிளம்பு... ”  என்று பாரதி இருந்த அறையை நோக்கி குரல் கொடுத்தான் தயாளன்...

“நான் எங்கயும் வரலை... ” என்று திருப்பினாள் பாரதி

“ஹ்ம்ம்ம் நான் எங்கயும் போறதா சொல்லலையே...  அப்போ நான் எங்கயாவது கூட்டிட்டு போவேனு எதிர்பார்த்தியா ? சாரி டார்லிங் “  என்று குறும்பாக சிரித்தவாறு அவள் இருந்த அறைக்குள் வந்தான்...

“நினைப்புதான். கிளம்புனு சொன்னா என்ன அர்த்தம்? “ என்று முறைத்தாள் பாரதி...

அவள் முறைப்பதையும் ரசித்தவன்,  அவள் முகத்தில் தன் விரலால் கோலமிட்டு

“கிளம்புனா ரெடியாகுனு அர்த்தம்.... ஓகே ஓகே முறைக்காத...  நாம ஒரு முக்கியமான இடத்துக்கு போறோம்...  நீ வரலைனா நானே தூக்கிட்டு போய்டுவேன். எப்படி வசதி?” என்று குறும்பாக கண் சிமிட்டினான்...

அடுத்த சில நிமிடங்களில் பாரதி ரெடியாகி வந்தாள்...

இதுல எல்லாம் பொண்ணு பாஸ்ட் தான்... என்று உள்ளுக்குள் சிரித்து கொண்டான்..

அழகான பிங்  கலர் சுடிதாரில் வந்தவளையே சில நிமிடங்கள் இமைக்காமல் பார்த்து இருந்தான்.

அவன் பார்வையை கண்டு அவள் கன்னங்கள் தானாக சிவந்தது. உடனே சமாளித்துக் கொண்டு அவனை முறைத்தாள்.

“ராட்சசி, கொஞ்ச நேரம் சைட் அடிக்க விடறாளா “ என்று முனகியபடியே
வேகமாக அவளை அழைத்து சென்றான்.(இல்லைனா வேதாளம் திரும்பவும் மரம் ஏறிடும் )

அவன் அழைத்து சென்றது பெங்களூரில் இருக்கும்  கருநாஷ்ரயா(Karunashraya) என்னும் இல்லத்திற்கு.

கருநாஷ்ரயா – கேன்சரால் பாதிக்கப்பட்டு , டாக்டர்களால் கை விடப்பட்டு கடைசி நிலையில் இருப்பவர்களுக்கு(advanced stage cancer patients who are beyond cure), அவர்களுடைய வலியை குறைத்து அவர்களின்  கடைசி நிமிடங்களை அமைதியாக கழிக்க உதவும் ஒரு தொண்டு நிருவனம். 

“லுக் பாரதி, இங்கு இருக்கறவங்க எல்லாம் கேன்சர் பேசன்ட்ஸ் . 

டாக்டர்களால் கை விடப்பட்டு வாழ்வின் கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருப்பவர்கள்.

எத்தனை வலி வேதனை இருந்தும் அத்தனையும் தாங்கி இன்னும் கொஞ்ச நாள் உயிர் வாழ மாட்டோமா என்று போராடுகிறார்கள் பார்....

இதில் எத்தனை பேர் சிறு வயதிலே எதுவும் அனுபவிக்காமல் வாழ்வு முடிகிறது..

ஆனால் நீ??? உனக்கு ஆண்டவன் நல்ல அறிவு, குணம், உடல் ஆரோக்கியத்தை கொடுத்தும் என்றோ எவனோ செய்த தப்புக்காக உன் வாழ்வை தொலைச்சுக்கிட்டு இருக்க...

இவர்களை பார்த்தாவது லைப் எவ்ளோ பெரிய கிப்ட் னு புரிஞ்சுக்கோ... உனக்கு கிடைச்சிருக்க இந்த நல்ல லைப் ஐ நீ வாழு..  இந்த மாதிரி இருக்கறவங்களுக்கு உதவி பண்ணு... 

இன்னும் எவ்ளோ செய்யலாம். Please come out and see this world” என்றான் அவள் மனதில் பதியுமாறு..

தயாளனையே பார்த்திருந்தாள் பாரதி.... அங்கு உள்ள நோயாளிகளை ஒரு முறை பார்த்து விட்டு விடு விடு என  திரும்பி நடந்தாள்....

வரும் வழியில் எதுவும் பேசவில்லை...  ஏன்  வீடு வந்தும் எதுவும் பேசவில்லை... தயாளனுக்கு திக் என்றது...

“இவளை மாத்தனும்னு நினைத்து இன்னும் மோசமாக்கிட்டேனோ?? . முன்பாவது அட்லீஸ்ட் முறைப்பா, சண்டை போடுவா. இப்ப என்னடான்னா இவ்ளோ அமைதியா வர்றாளே....” என்று புலம்பிக் கொண்டே வீட்டினுள் வந்தவன் பிரீஸ் ஆகி நின்றான்.

ஆம்...  அவனின் அன்பு மனைவி அவனை இறுக்கி கட்டிக் கொண்டிருந்தாள்.... 

ஒரு நிமிடம் அவனால் நம்ப முடியவில்லை. தன்னையே கிள்ளி பார்த்துக் கொண்டான்...

பாரதி அவனை கட்டிக்கொண்டு அவன் மார்பில் முகம் புதைத்து குலுங்கி கொண்டிருந்தாள்...

அதை கண்டு அதிர்ந்தவன்

“பாரதி, என்ன ஆச்சுமா? ப்ளீஸ் அழாத டா....  நான் உன்னை கஷ்ட படுத்தனும்னு அங்க கூட்டிட்டு போகல.... “

“I Love you தயா. Love you so much...

இப்பதான் லைப் அ  நல்லா புரிஞ்சுகிட்டேன்... எதுக்கு முக்கியத்துவம் கொடுக்கனும்னு புரிஞ்சிருச்சு...  புரிய வச்சிட்டீங்க...

சே! இரண்டு  வருடமா என் லைப் ஐ வேஸ்ட் பண்ணிட்டேன்...  எனக்காக இவ்ளோ பண்ணி, பொறுமையா காத்திருந்து... ரொம்ப தேங்க்ஸ் தயா!!” 

என்று எக்கி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்...

அதை கண்டதும் தயாளனுக்கு நிம்மதியாக, சந்தோஷமாக இருந்தது... 

இதற்காகத்தான் கடந்த இரண்டு  வருடமாக போராடி வந்தான்.... அவன் வேண்டிய தெய்வங்கள் கை விடவில்லை....

அவளை மெதுவாக அணைத்துக் கொன்டே

“சே!! நானும் ஒன்  மந்த் வேஸ்ட் பண்ணிட்டேன் ரதி... இப்படி நீ டக்குனு மாறுவேனு தெரிஞ்சு இருந்தா எப்பவோ அங்க கூட்டி போயிருந்திருப்பேன். இப்படி கல்யாணம் ஆகியும் ஒன் மந்த் வேஸ்ட் ஆகி இருக்காது...”  என்று குறும்பாக சிரித்து கண்ணடித்தான்.

அவனை செல்லமாக முறைத்து காதலுடன் மீண்டும் தன் கணவனை  கட்டிக் கொண்டாள் அவனின் ரதி!!!!

🌺 🌺 🌺 🌺 🌺

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!