புதுமைப் பெண்

புதுமைப் பெண்



முன்னுரை:

புதுமைப் பெண்-இதுவும் சிறுகதை போட்டிக்காக எழுதிய கதை..முடிவை கொடுத்து கதையை எழுத வேண்டும்... அதனால் இந்த கதையின் முடிவு என் மனதுக்கு பிடித்தமானதாக இல்லை... ஆனாலும் கொடுத்த முடிவு படி இருக்க வேண்டும் என்பதால் அப்படியே விட்டு விட்டேன்...

என் மனதை பாதித்த  கதை இது.....உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்..  Happy Reading!!!


************

சென்னை ECR ரோட்ல் பைக்ல் பறந்து கொண்டிருந்தான் தயானந்த்... அவன் முகம் கோபத்தில் இறுகி இருந்தது. அவன் கோபத்தையெல்லாம் பைக்ல் காட்டி விரட்டி கொண்டிருந்தான். 

கோபத்துக்கு காரணம் பாரதி...  இன்னும்,  இரண்டு வாரங்களில் அவனின் மனைவியாக போகிறவள்....

அவனை அறியாமலேயே அவன் பாரதியை முதன் முதலில் பார்த்த ஞாபகம் வந்தது...

அன்று அவன் அவசர அவசரமாக கிளம்பி அலுவலகத்துக்கு தன் பைக்ல் பறந்து கொண்டிருந்தான். ஒரு சிக்னலில் காத்திருக்கும் போதுதான் பாரதியை முதன் முதலில் பார்த்தது.

ஒரு பிங் ஸ்கூட்டி வந்து அவன் அருகில் நின்றது. அனிச்சையாக அவன் திரும்பி பார்த்தபோது ஒரு பெண் கையில் நீண்ட க்லௌஸ்ம் ,முகத்தில் துணியால் மூடி கண்கள் மட்டும் தெரிந்தது.

அவளுடைய நீண்ட கூந்தலும் அதை அழகாக பின்னி தொங்க விட்டு இருந்த அழகும் அவனை கவர்ந்தது.  அதன் மேலே அவள் சூடியிருந்த மல்லி இன்னும் அவனை ஈர்த்தது.

“பரவாயில்லையே !!  இன்னும் பெண்கள் இதையெல்லாம் ஞாபகம் வைத்திருக்கிறார்கள் “ என்று எண்ணியவனுக்கு மீண்டும் ஒரு முறை அவளை பார்க்க தோன்றியது.

மெதுவாக திரும்பி பார்த்தான். ஏனோ அவனுக்கு அவள் முகத்தை பார்க்க வேண்டும் போல இருந்தது. பின்னால் பார்க்கையில் இவ்வளவு அழகாக இருப்பவள் முகம் எவ்வளவு  அழகாக இருக்கும்.

“ஒரு முறையேனும் உன் திருமுகத்தைக் காட்டு பெண்ணே!” என்று மனதுக்குள் எண்ணினான்...

தன் எண்ணத்தை நினைத்து திடுக்கிட்டான் தயானந்த். 

இதுவரையில் எந்த பெண்ணும் இது மாதிரி கவர்ந்தது இல்லை அவனை. 

தயானந்த் சாதாரணமாக எந்த பெண்ணையும் திரும்பி பார்த்ததில்லை.
பெண்கள் என்றாலே அவனுக்கு ஒரு வித ஒதுக்கம். 

அவர்கள் என்னவோ ஆண்களை மயக்குவதற்காகவே பேசி சிரிக்கிற மாதிரி தோன்றும். யாரும் உண்மையாக பழகுவது மாதிரி தோன்றவில்லை.

அதுக்கு காரணம் வீட்டில் அவன் ஒரே பையன். உறவினர்களிலும் மோஸ்ட்லி எல்லாம் பையன்களே. பள்ளியிலும் 12 வரைக்கும் ஆண்கள் மட்டுமே. தன் அம்மாவை தவிர மற்ற பெண்களிடம் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதனாலயே அவனுக்குள்ளேயே ஒரு வட்டத்தை ஏற்படுத்திக்கொண்டு அதனை விட்டு வருவதில்லை. பெண்களை கண்டாலே தன்னை கடுமையாக்கி கொள்வான்.

காலேஜ் ல் கூட எத்தனையோ பெண்கள் அவனை சுற்றி வந்தனர். எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்த்ததில்லை. மாறாக நெருப்பையே உமிழ்ந்தான். ஆண் நண்பர்களிடம் மட்டுமே பழகினான்.

அப்படி இருந்தவன் தான் இன்று  ஒரு பெண்ணின் முகத்தைகூட பாராமல் அவளால் கவரப்பட்டான் என்று நினைக்கும்போது அவனுக்கே அவமானமாக இருந்தது.  ஆனாலும் அவன் மனமோ அவள் முகத்தைப் பார்க்க ஏங்கியது.

கண்ணை மூடி இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொண்டான். எப்படியாவது அவள் முகத்தை எனக்கு காட்டு...

அவன் வேண்டிய தெய்வம் செவி சாய்த்தது. திடீரென்று அந்தப் பெண்ணின் குரல் காதில் விழுந்தது. அவள் குரலும் இனிமையாக இருந்தது. அவனை கவர்ந்த தேவதையின் முகம் பார்க்க அவன் மனம் விரைந்தது. மெல்ல அவளை திரும்பி பார்த்தான்.

எவ்வளவோ எதிர்பார்ப்போடு அவள் முகத்தை  நோக்கியவன் திடுக்கிட்டான். அவள் முகம் கோபத்தில் அக்னி குழம்பாக கொதித்தது. இப்படிகூட ஒரு பெண்ணின் முகம் கோபத்தால் மாறுமா என்று திகைத்தான்.

அவள் கோபத்துக்கான காரணத்தை அறிய அவள் புறம் நன்றாக திரும்பி பார்த்தான். அவள் ஒரு பெண் கையில் குழந்தையுடன் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தவளைத்தான் அவ்வளவு கோபமாக திட்டிக்கொண்டிருந்தாள்.

“ஏம்மா உனக்கு அசிங்கமா இல்லை. இப்படி வந்து பிச்சை எடுக்கறியே. உன் உடம்பு நன்றாகத்தானே இருக்கிறது. ஏதாவது வேலை செய்யக்கூடாதா? இப்படி ரோட்ல வந்து பிச்சை எடுக்கறியே அதுவும் கைக்குழந்தையுடன்.”

“என்னம்மா செய்யறது. வேலை எதுவும் கிடைக்கலையே !”

“பொய் சொல்லாத. இப்பல்லாம் வீட்டு வேலைக்கு ஆள் கிடைக்காம எத்தனை பேர் கஷ்ட படறாங்க தெரியுமா. ஒரு வீட்ல பாத்திரம் கழுவி துணி துவைச்சாலே உன்னை பாத்துக்கிற அளவுக்கு சம்பாதிக்கலாம்.

இது மாதிரி இரண்டு,மூனு வீடு பாத்தினா போதும். உன் குழந்தையை தாராளமாக வளர்க்கலாம். அதை விட்டுட்டு இப்படி வந்து ரோட்ல கை ஏந்தி நிற்கிறியே!”

“உனக்கு என்னம்மா சாதாரணமா சொல்லிட்ட. என்னை நம்பி யார் வேலை தருவா? இந்தா பாரு காசு இருந்தா கொடு இல்லைனா விடு.அடுத்த ஆளையாவது பார்க்கனும்.”

“இரும்மா.நான் ஒரு கம்பெனி அட்ரஸ்  தரேன். அங்க போனினா அவங்களே எங்க வேலைக்கு ஆள் வேணும்ன்னு சொல்வாங்க. நீ எங்கயும் வேலை தேடி அலைய வேண்டாம்”

“அதெல்லாம் எழுத படிக்க தெரியாத எனக்கு ஒத்து வராதும்மா “
“சரி போகட்டும். நீ என் வீட்டுக்கே வா. அம்மாக்கிட்ட சொல்லி நானே  வீட்டு வேலை வாங்கி தர்றேன். 

மாசம் உனக்கும் குழந்தைக்கும் ஆகுற செலவை ஈசியா சமாளிக்கலாம். தயவுசெய்து இந்த மாதிரி பிச்சை எடுக்காத “

தயானந்தனுக்கு பெருமையாக இருந்தது. 

இப்படி கூட பெண்கள் இரக்க படுவாங்களா? இதுவரைக்கும் அவன் பார்த்த பெண்கள் யாரும் இப்படி அடுத்தவருக்காக பர்த்ததில்லை.
மீண்டும் அவர்கள் பேச்சைக் கவனித்தான்.

அந்தப் பெண் பாரதியின் உதவியை ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை.

“இந்தாம்மா பாப்பா இதெல்லாம் சரி வராது. என்னால கை வலிக்க நாள் முழுவதும் வேலை செய்ய முடியாது. எனக்கு இதுதான் வசதி. ஒரு நாள் நின்னாலே 1000 ரூபாக்கு மேல கிடைக்கும்.

அத வுட்டு 1000 ரூபாக்கு உன் வீட்டில ஒரூ மாசம் வேலை செய்ய என்னால முடியாது. நீ ஆள விடு. நான் அடுத்த ஆள பார்க்கறேன். நீ ஒன்னும் காசு கொடுக்கிற மாதிரி தெரியல.. “ என்று வேகமாக அந்த பெண் நகர்ந்தாள்.

இதை கேட்டதும் தயானந்தனுக்கே கோபமாக வந்தது. பாரதியின் முகம் இன்னும் கோபத்தில் கொதித்தது.

“உங்களை எல்லாம் திருத்தவே முடியாது. உங்களை சொல்லி குற்றம் இல்லை. உங்களுக்கெல்லாம் பாவம்னு காசு போடறாங்களே அவங்களை சொல்லனும். 

அவங்க போடறதாலேதான் கஷ்ட படாம சம்பாதிக்க கிளம்பிட்டிங்க. யாரும் பிச்சை போடக்கூடாதுனு சட்டம் கொண்டு வரனும்... “ என்று பொரிந்து கொண்டிருந்தாள்.

அவனுக்கே அப்போதுதான் புரிந்தது. 

தான் கூட எத்தனை தடவை பாவமா இருக்குனு எத்தனை பேருக்கு போட்டிருக்கோம். நாமே அவங்களை உருவாக்குறமாதிரி  ஆயிருச்சே.
அவள் சொல்வதுதான் சரி. இனிமேல் உடல் நல்லாயிருக்க யாருக்கும் பிச்சை போடக்கூடாது என்று முடிவெடுத்தான். 

அவள் முகம் இன்னும் கோபத்தில்தான் இருந்தது.

ஏனோ பாரதியின் புதுமைப்பெண் ஞாபகம் வந்தது. 

"நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் யாரையும் கவனியாமல் அந்த பெண்ணை அவள் தட்டி கேட்ட விதவும்..”

மீண்டும் ஒரு முறை அவளை பார்க்க திரும்புகையில் க்ரீன் சிக்னல் வந்து அவள் புயலென் பறந்து இருந்தாள்.

அவன் பின்புறம் நின்ற வண்டிகளின் ஹார்ன் சத்தம் கேட்டுதான் தானும் கிளம்பவேண்டும் என்ற எண்ணமே வந்தது.

“சே, இப்படியா ஒரு பெண்ணை பார்த்து மயங்கி நடு ரோட்ல நிற்பது” என்று தன்னைத் தானே திட்டிக்கொண்டே கிளம்பினான்.

ன்றிலிருந்து அவள் முகம் அவன்  நினைவில் அடிக்கடி வந்து இம்சித்தது. ஒரு சில நிமிடங்கள் தான் என்றாலும் ஏனோ அவளை மறக்க முடியவில்லை.

ஒவ்வொரு சிக்னலில் பிச்சைக்காரர்களை பார்க்கும்போதும் அவள் முகமும் வார்த்தைகளும்  வந்துபோகும். மீண்டும் ஒரு முறையேனும் அவளை பார்க்க மனம் ஏங்கியது.

ஒவ்வொரு நாளும் அதே சிக்னலில் நிற்கும்போதும் அவனை அறியாமலேயே கண்கள் அவள் அன்று நின்ற இடத்தை ஆவலோடு நோக்கும். 

ஆனால்  அவளின் தரிசனம் தான் கிடைக்கவில்லை அவனுக்கு.

அவனுக்கே வியப்பாக இருந்தது தன்னை நினைத்து.. தானா இப்படி மாறியது என்று. இது சும்மா ஒரு மயக்கம் சீக்கிரம் மறைந்து விடும் என்று சமாதானம் செய்து கொண்டான்.

ஆறு மாதங்கள் கடந்தது. ஆனாலும் அவளை பார்க்க முடியவில்லை. அவள் நினைவும் மறையவில்லை.

இந்த நிலையில்தான் அவன் அம்மா அவனை திருமணத்திச்கு வற்புறுத்தி கொண்டிருந்தார். அவரும் எத்தனையோ அழகான பெண்களின் போட்டோ காட்டி பார்த்தார்.

பெண்ணின் அழகை பார்த்தாவது சரி சொல்ல மாட்டானா என்று நப்பாசை. அவனோ போட்டோ வை பார்க்காமலே பிடிக்கவில்லை என்றான்.

எங்கே இவன் திருமணத்தை வெறுத்து இப்படியே இருந்து விடுவானோ என்று கவலை அடைந்தார் லட்சுமி. இருந்ந்தாலும் அவர் முயற்சியை கை விடாமல் வற்புறுத்தி வந்தார்.

ன்றும் அப்படிதான். ஒரு  பெண்ணை பார்க்க அவனை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றார். அவன் எவ்வளவோ மறுத்தும் அம்மா விடவில்லை.

“நீ நேரில் பார்த்து பிடிக்கவில்லைனா சொல்லு, நான் விட்டுடறேன் என்றார்.”

வேறு வழியில்லாமல் அவனும் செல்ல வேண்டியதாயிற்று. 

ஆனால் அவன் நேரடியாக பெண்ணிடமே தனக்கு பிடிக்கவில்லை என்று சொல்லி விட வேண்டும் என்று மனதினில் தீர்மானித்துக்கொண்டான்.






பெண் வீட்டை அடைந்ததும் வழக்கமான வரவேற்பு, நல விசாரிப்புகள் முடிந்து பெண்ணை வரச்சொன்னார்கள்.

எல்லோரும் பெண்ணை பார்க்க தயானந்த் மட்டும் தரையை பார்த்தான். அந்த பெண்ணிடம் பேச வேண்டிய டயலாக் ஐ மிண்டும் ஒரு முறை சொல்லி பார்த்துக்கொண்டான்.

அந்த பெண் அவனருகில் வந்து காபி தட்டை நீட்டினாள். குனிந்திருந்த அவன் கண்களில் அந்த பெண்ணின் விரல்கள் பட்டன. 

உடனே அவனுக்கு அன்று பார்த்த பெண்ணின் ஞாபகம் வந்தது. அவள் கைகளும் இப்படித்தான் இருக்குமோ?

அதற்குள் அம்மா காதை கடித்தார்.

“பெண்ணை பாருடா. அப்புறம் நான் பார்க்கலை எனக்கு பிடிக்கலைனு ஒரு காரணத்தை சொல்லக்கூடாது.”

இதற்குள் யாரோ “மாப்பிள்ளை ரொம்ப வெக்கப்படறார் போல “ என்று கிண்டல் செய்யவும் இவங்களுக்கெல்லாம் வேற வேலை இல்லை என்று  மனதில் திட்டிக்கொண்டே வேண்டா வெறுப்பாக தலையை நிமிர்ந்து பார்த்தான்.

அதே நேரம் அந்த பெண்ணும் காபி தட்டை நீட்டியும் காபி இன்னும் எடுக்காததால் லேசாக தலையை நிமிர்ந்து அவனை நோக்கினாள். 

இருவர் கண்களும் ஒன்றோடொன்று கலந்தது ஒரு சில வினாடிகளே..

தயானந்தனுக்கு தன் கண்களையே நம்பமுடியவில்லை. 

அவளா இது? இதுவரை அவன் தேடிய அவன் தேவதை தன் எதிரில்.. !! 

அவள் முகத்தைப் பார்த்தவன் திகைத்தான்.

அவள் முகம் அவனைப் பார்த்தவுடன் வெட்கத்தில் செந்தாமரையாக சிவந்திருந்தது. அன்றும் இதே சிவப்புதான் ஆனால் அது அவளின் கோபத்தினால்...

தான் கும்பிட்ட தெய்வங்களுக்கு ஆயிரம் முறை நன்றி தெரிவித்தான். 

அப்போது யாரோ “பாரதி மாப்பிள்ளையை நல்லாப் பார்த்துக்கோ” என்றனர்.

“பாரதி..” அன்றும் அவளைப் பார்த்ததும் பாரதியின் புதுமைப் பெண்ணாக கண்டான். 

அதே பாரதியின் பெயர். “ சரியான பெயர்தான் வைத்திருக்கிறார்கள்..”  என்று உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்..

அதன் பின் நடந்தவைகளை எல்லாம் அவனாலயே  நம்ப முடியவில்லை. 

அம்மா கேட்காமலயே தயானந்த் பெண்ணை பிடித்திருப்பதாக கூறவும் லட்சுமிக்கு மயக்கமே வந்தது. அவர்களால் நம்ப முடியவில்ல இப்படி உடனே சம்மதம் சொல்லுவான் என்று.

பாரதியும் அவனை பிடித்திருப்பதாக சொல்லவும் கையோடு நிச்சயத்தை அன்றே முடித்துவிட்டார்கள்.(இவன் எப்ப மனசு மாறுவான் என்று யாருக்கு தெரியும் என்று லட்சுமி நினைத்தே நிச்சயத்தை முடித்துவிட்டார் )

திருமணம் அடுத்த மாதம் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது.

தயானந்த் வானத்தில் மிதந்து கொண்டிருந்தான். இந்த இரண்டு வாரத்தில் எத்தனை பேசியிருக்கிறான் அவளுடன். அவளுடைய எல்லா புதுமையான கருத்துகளும் அவளை மற்ற பெண்களிடமிருந்து  வேறுபடுத்தி காட்டியது.

அவனுள் பெருமிதம். இப்படி ஒரு பெண்ணை எதிர்பார்த்துதான் இவ்வளவு நாள் காத்திருந்தானோ .!! 

ஆனால் இன்று அத்தனையும் பொய்யாக போய்விட்டது போல் தோன்றியது அவனுக்கு.

ன்று வழக்கம் போல அந்த சிக்னலை தாண்டி செல்கயில் பாரதியை  பார்த்த ஞாபகத்தில் சிரித்துக் கொண்டே சென்றான். 

திடீரென அவனை முந்திக் கொண்டு ஒரு பைக் வேகமாக சென்றது.

ஒரு ஆணும் பெண்ணும் ரொம்ப நெருக்கமாக அமர்ந்து இருந்தனர். 

அந்த பெண்ணின் முகம் பாரதியை போன்றே இருந்தது. 

எப்பவும் அவளயே நினைத்துக் கொண்டிருப்பதால் அப்படி தெரியலாம் என்று மீண்டும் ஒருமுறை நன்றாக பார்த்தான் ஒரு வேளை இது வேறு யாராக இருக்குமோ என்று.

ஆனால் அவள் கையில் அவன் அணிவிதத நிச்சயதார்த்த மோதிரம் இருந்தது. அதே பளீர் சிரிப்பு. கன்னத்தில் அவன் பலமுறை ரசித்த அதே அழகான குழி. இது அவளேதான்...

மனதுக்குள் ஏதோ நொறுங்கியதை போல  இருந்தது..

அவர்கள் பைக் ஒரு காபி ஷாப் ல் நுழைந்தது. அவனும் அவர்களை தொடர்ந்து அவர்களுக்கு தெரியாமல் ஒரு டேபிலில் அமர்ந்துகொண்டு அவர்கள் பேசுவதை கவனித்தான்.

“என்ன சிவா, இவ்வளவு வேகமாகவா பைக் ஓட்டறது??. என்னால் உட்காரவே முடியலை. உன்னோட கோபத்த வண்டிலயா காமிக்கிறது??. “

அவன் பேசாமல் அமர்ந்திருந்தான்.

“இன்னும் என் மேல கோவமா? “

“இது அன்ப்ளான்ட்  ஆ நடந்திருச்சு. நானே எதிர்பார்க்கலை நிச்சயம் வரைக்கும் போகும்னு. All went out of my control. ப்ளீஸ் சிவா.. அன்டஸ்டான்ட் மீ  ”

“ஹ்ம்ம்ம் இவ்ளோ நடந்திருக்கு. ஏன் என்கிட்ட சொல்லலை.”

“நான் எவ்வளவோ டைம் சொல்ல  ட்ரை பண்ணேன். நீதான் out of Country and not reachable any time”

“சரி விடு. நம்ம விசயம் சொல்லிட்டியா ?? “

தன் கை  விரல்களை ஆராய்ந்தவாறு அமைதியாக இருந்தாள் பாரதி.

“சொல்லு பாரதி. நம்ம விசயம் சொல்லிட்டியா??  “

“இன்னும் இல்லை ...” என்று இருபக்கமும் தலையை ஆட்டினாள்.. 

“ஏன்? “

“எவ்வளவோ டைம் ட்ரை பண்ணேன் சிவா.ஆனால் அதர்க்கான சந்தர்ப்பம் கிடைக்கலை.”

“சரி. அப்படினா இனிமே என்கிட்ட பேசாத. உனக்குதான் வேற ஆள் வந்தாச்சே...இனிமே என்னை மறந்திடு. “ என்றான் கோபமாக

“சிவா, அப்படி மட்டும் சொல்லாத. என்னால் உன்னை பார்க்காம, உன் கூட பேசாம இருக்கமுடியாது. நீ இல்லைனா நான் செத்துருவேன் சிவா “ என்றாள் கண்களில் கண்ணீருடன்...

அதற்கு மேல் தயானந்தால் அங்கு இருக்க முடியவில்லை. 

தன் பைக் ஐ எடுத்து கொண்டு கோபத்தால் இதோ பறந்து கொண்டிருக்கிறான்.

“சே, அவளா இப்படி?

அன்னைக்கு பார்த்ததில் எவ்வளவு தைரியமான பொண்ணுனு நினைத்தேன். இப்ப என்னடானா அவன் இல்லைனா இவ செத்துருவேன்கிறா. 

சே.. இவ்வளவு கோழையா அல்லது அவ்வளவு தூரம் அவனை சின்சியரா லவ் பண்றாளா?

அவ்வளவு சின்சியரா லவ் பண்றவ என்னை ஏன் மணப்பதற்கு சம்மதிக்கனும்? ஒரு வேளை அவங்க வீட்ல மிரட்டியிருப்பாங்களோ ? 

இல்லயே அப்படி மிரட்டினா என்னை பார்த்தவுடனே அவள் கன்னங்கள் வெட்கத்தால் சிவந்திருக்காது. ஏன் என்கூட பேசும்போது கூட அவள் குரலில், கண்களில் காதல் இருக்கும்.

அப்படீன்னா எல்லாம் நடிப்பா? இங்க இவனை லவ் பண்ணிகிட்டே என்னை கல்யாணம் பண்ணிகிட்டு அங்க அவனோட...... சீ சீ ! அதற்கு நான் ஏமாறமாட்டேன். 

நல்ல வேளை. இப்பயே இவளோட சாயம் வெளுத்திருச்சு.

உடனடியாக இந்த கல்யாணத்தை நிறுத்தனும்” என்று நினைத்தாலும் மனம் சமாதானம் ஆகவில்லை.

டுதத 2 நாட்களும் பாரதி எத்தனயோ தடவை கால் பண்ணியும் அவள் அழைப்பை ஏற்கவில்லை அவன். ஏனோ அவள் குரலை கேட்க கூட பிடிக்கவில்லை  அவனுக்கு.

ஆனால் எத்தனை நாள் இப்படி இருப்பது? எப்படி இந்த திருமணத்தை நிறுத்துவது? என்று எண்ணிக்கொண்டிருக்கும்போது லட்சுமி அவனருகில் வந்தார்.

“ஏண்டா உனக்கும் பாரதிக்கும் ஏதும் பிரச்சனையா? அவள் 2 நாள் போன் பண்ணியும் நீ ஏன்டா எடுக்கலை?  பாவம் ரொம்ப பீல் பண்ணினா ?

எதுனாலும் டேரக்டா பேசுடா. பாரதி மாதிரி ஒரு நல்ல பொண்ணு கிடச்சுதே பெரிசு. ஏதாவது பண்ணி சொதப்பிடாத சொல்லிட்டேன்”

“ஆமாம்...  ரொம்பபப நல்ல பொண்ணு ! அவள் ஆக்டிங் எனக்கு மட்டும்தான் தெரியும் “ என்று முனகினான்.

அதே சமயம் பாரதி மீண்டும் கால் பண்ணவும் ஈவ்னிங் பீச்ல் பார்க்கலாம் என்றான்.

அன்று முழுவதும் ரெஸ்ட்லெஸ்  ஆக இருந்தது அவனுக்கு. எப்படி பேசுவது என்று மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்தான். மனது வலித்தது.

“சே...  இவளை எப்படி எல்லாம் லவ் பண்ணேன். கடைசில் எல்லாம் பொய்யாக்கிட்டாளே. அவள பார்த்து எப்படி சொல்வேன் நீ எனக்கு வேண்டாம் என்று..”என்று புலம்பினான்...

அதே நேரம் அவள் அந்த அன்னியனுடன் பேசிய வார்த்தைகள் நினைவு வரவும் இலக தொடங்கிய அவன் மனதை கடினமாக்கினான். இன்றே சொல்லி விடவேண்டும் என்று முடிவெடுத்தான்.

மாலை பீச் சென்றடைந்தபோது அவனுக்கு முன்னரே அவள் காத்திருந்தாள். 

இதுவும் அவளுடய ஸ்பெஷல். எங்கனாலும் பெர்பெக்ட் டைம்க்கு போய்டுவாள். இந்த குணமும் அவனை கவர்ந்ததில் ஒன்று.

தலையை உலுக்கிகொண்டு அவளை நோக்கி சென்றான்.

அவனை பார்த்ததும் அவள் முகம் மலர்ந்தது. மாலை வெயிலில் அவள் முகம் இன்னும் அழகாக இருந்தது.

“பாவி..  இந்த முகத்தை வைத்துக் கொண்டு எப்படி எல்லாம் நடிக்கிறாள். அன்று அந்த அன்னியனுடன் கொஞ்சியபோது வேறு முகமாக இருந்தது. “
அதற்குல் அவள் அருகில் வந்துவிட்டான்.

“என்ன தயா! ஏதும் பிராப்ளமா ? ஏன் போன் அட்டென்ட் பண்ணல ? உங்க கிட்ட பேசாம ரொம்ப கஷ்டமா இருந்தது. ஏதோ மிஸ் பண்ற மாதிரி... “
என்று அவள் முடிக்கும் முன்னே 

“போதும்...  இதுக்கு மேல பேசாத ..” என்று கத்தினான்.

அவன் முகத்தை பார்த்த பாரதி அதிர்ந்தாள். அவ்வளவு கோபமும் அருவெறுப்பும் அவன் முகத்தில்...

“என்னாச்சு தயா ?” என்றாள் மெல்லிய குரலில்...

“என்னை அப்படி கூப்பிடாத. உன் நாடகம் எல்லாம் எனக்கு தெரிஞ்சு போச்சு. இனிமேலும் கஷ்டப்பட்டு நடிக்க வேண்டாம்.” என்று உருமினான்..

“என்ன நடிப்பா? என்ன சொல்றிங்க த... “ என்று சொல்ல வந்து அவன் பேரை சொல்லாமல் பாதியில் நிறுத்திக் கொண்டாள்...

“ஆமாம் எல்லாம் நடிப்புதான்...  உன்னைப் போய் மற்ற பெண்களைப் போல் இல்லை. நீ ஒரு புதுமைப் பெண் என்று எவ்வளவு நம்பினேன். உன்னை எவ்வளவு லவ் பண்ணேன். பாவி எல்லாத்தையும் கெடுத்திட்டியே!

நீயும் எல்லா பெண்களைப் போல் ஏன் அதைவிட ஒரு படி கீழ னு காமிச்சிட்டியே..”

“ப்ளீஸ் தயா.. சாரி தயானந்த். எனக்கும் ஒன்னும் புரியலை. என்ன நடந்ததுனு  சொல்லுங்க.”

“போது உன் நடிப்பு. நானே நேர்ல எல்லாத்தையும் பார்த்துட்டேன்.”

“என்ன பார்த்திங்க??”

“அதை வேற என் வாயால கேட்கனுமா ? கேட்டுக்கோ..நீ உன் ஆருயிர் காதலனோட பைக்ல் ரொம்ப க்லோஸா  போனத பார்த்துட்டேன். அப்ப கூட நம்பலை.

அப்புறம் நீங்க இரண்டு பேரும் காபி ஷாப் ல கொஞ்சுதனையும் கேட்டேன். எப்படி அவன் இல்லைனா நீ இருக்க மாட்டியா? எப்படி டீ அதே டயலாக் நீ இன்னைக்கு என்கிட்டயும் சொல்ற..

ஓ.. இதுதான் கான்ஸ்டன்ட் டயலாக் ஆ. நாங்க இரண்டு பேர்தானா இல்ல இன்னும் நிறைய பேரா?” என்றான் ஏளனமாக உதட்டை வளைத்து...

“ஸ்டாப் இட் மிஸ்டர் தயானந்த். இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுனீங்க நான் மனுசியா இருக்க மாட்டேன்.“

“ஓ உண்மைய சொன்னா இவ்வளவு சுடுதோ... இல்லை இவனுக்கு தெரிஞ்சு போச்சேனு இவ்வளவு கோவமா?” என்றான் அவனும் விடாமல். 

“சே, நீங்க இவ்வளவு கேவலமானவர்னு நினைக்கல. ஏனோ திருமணமே வேண்டாம் என்று இருந்த நான் உங்களைப் பார்த்ததும் மனதுக்குள் ஒரு பீலிங். நீங்க தான் எனக்கானவர்னு.

அதுதான் டக்குனு அன்னைக்கு ஓகே சொல்லிட்டேன். இப்பதான் தெரியுது நீங்க இவ்வளவு மட்டமானவர்னு”

அவன் அதிர்ந்தான். அவனுக்குள் தோன்றிய அதே பீலிங் அவளுக்கும்.
முதன்முறையாக தான் அவசரபட்டுட்டோமோ ? என்று தோன்றியது.

இருந்தாலும் மறைத்துக்கொண்டு

“உண்மைய சொன்னா நான் மட்டமானவனா?” என்றான் கோபமாக...

“எது சார் உண்மை? ஒரு ஆணும் பெண்ணும் ஒன்னா போனா அவங்க காதலர்களாதான் இருக்குமா ? ஏன் ஒரு அண்ணனோ, தம்பியோ,ஒரு ப்ரன்ட் ஆ இருக்க கூடாதா? “

“நான் ஒன்றும் பார்த்ததை மட்டும் வச்சு சொல்லல..நீ பேசினதை வச்சும்தான்.. “ என்றான் கொஞ்சம் சுருதி இறங்கி...

”என்ன கேட்டீங்க? நான் சிவா கிட்ட பேசுனத வச்சு மட்டும் நாங்க காதலர்கள்னு முடிவு பண்ணிடுவீங்களா?

உன்னை பார்க்காம இருக்க முடியாதுனு சொன்னா காதலர்களாதான் இருக்கனுமா? ஏன் ஒரு சகோதரனோ, ப்ரன்ட் ஆ இருக்க கூடாதா? ஏன் அப்படி யோசிக்க தோணல? “

“ஏனா ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து போனாலோ, பேசுனாலோ அது காதல் னு காலம் காலமா நினைப்பு. இப்ப மட்டும் மாறிடவா போகுது?

பெண்கள் எதுவும் வித்தியாசமா பண்ணினா புதுமை பெண்ணுனு சொல்றிங்க. அதே பொண்ணு ஒரு ஆணுடன் பழகினால் மட்டும் உங்களால புதுமையா, நினக்கமுடியலை. 

நாங்க புதுமையா யோசிக்கனும். நீங்க மட்டும் பழய காலத்திலேயெ இருப்பீங்க?

என்னை நடிப்புனு சொன்னீங்க..

ஒரு பொண்ணு எத்தனை விதமான உறவுகளுடன் பழகுகிறாள். ஒவ்வொரு உறவுக்கும் ஒரு மாதிரி பழகனும், பேசனும்.

நான் சிவா கிட்ட பேசினப்போ என்னுடய மனதை பார்த்திருந்தால் தெரிந்திருக்கும் அது காதல் அல்ல நட்பு என்று. அதுவே உங்களிடம் பேசறப்போ அதுல தெரிஞ்சிருக்கும் காதல். இத போய் நடிப்புனு சொல்லிட்டிங்களே..

அப்போதுதான் தயா நினைத்தான் அந்த சிவாகிட்ட பேசறப்போ முகம் சிவக்கவில்லை. ஒரு குழந்தையை போல இருந்தது.

“சே !! இத கூட புரிஞ்சுக்காம அவள எப்படி பேசிட்டேன்??” என்று வருந்தினான்.

“லுக் மிஸ்டர் தயானந்த்... சிவாவும் நானும் சின்ன வயசில இருந்தே க்லோஸ் ப்ரண்ட்ஸ். அவன் கூடவேதான் எப்பவும் இருப்பேன். நாங்கள் வளர்ந்தும் எங்கள் நட்பு அப்படியே தான் இருக்கு. 

எங்க திருமணம் ஆனால் அவன பிரியணுமேனு தான் திருமணத்தை மறுத்து வந்தேன்...

எங்களுக்குள் ஒரு அக்ரிமென்ட். அவன் எனக்கு மாப்பிள்ளை பார்க்கனும் நான் அவனுக்கு பார்க்கனும். அவர்களிடம் எங்கள் நட்பை பற்றி சொல்லி தினமும் இருவரும் பேச அனுமதி கிடைத்தால்தான் எங்கள் திருமணம் என்று... 

சிவா லாஸ்ட் மந்த் வெளிநாடு போயிருந்தான். அப்போதுதான் நீங்க என்னை பொண்ணு பார்க்க வர்றதா அப்பா சொன்னார். நான் எவ்வளவோ தடுத்தேன் சிவா வந்ததுக்கு அப்புறம் வரலாம்னு.

அப்பா தன் இது சும்மா பார்க்க தான் வர்றாங்க. அப்படியே பிடித்தாலும் நம் விருப்பத்தை சிவா வந்ததுக்கப்புறம் சொல்லலாம் என்று சமாளித்து விட்டார்.

நானும் சரி மாப்பிளைகிட்டயே பிடிக்கலைனு சொல்லிடலாம்னு இருந்தேன். 

ஆனால் ஏனோ உங்களை பார்த்த அந்த ஒரு நொடியில் எனக்கு எல்லாம் மறந்து விட்டது. உடனே சம்மதம் சொல்லிட்டேன். நிச்சயம் முடிந்துவிட்டது.

அதுக்கப்புறம் உங்களிடம் எங்கள் நட்பை பற்றி சொல்லனும் நினைப்பேன். ஆனால் உங்கள் குரலை கேட்டாலே எனக்கு எல்லாம் மறந்து விட்டது.

சிவா அன்று தான் திரும்பியிருந்தான். என் திருமணம் விசயம் கேள்விப்பட்டு தான் அவ்ளோ கோபமா இருந்தான் அவனிடம் கேட்காமல் நான் சரி சொன்னதுக்கு. 

அதைதான் நீங்கள் கேட்டீர்கள்.

அதற்கப்புறம் அவனை உங்களிடம் அறிமுக படுத்ததான் இரண்டு நாளா உங்களுக்கு ட்ரை பண்ணேன். ஆனால் நீங்க போனை எடுக்கவே இல்லை..” என்றாள் முகத்தில் வேதனையுடன்...

அதை  கேட்ட தயா திடுக்கிட்டான்.. இதுக்கு இப்படி ஒரு விளக்கம் இருக்கும் என்று நினைக்க வில்லை... தன் மடத்தனத்தை உணர்ந்தவன்

“சாரி பாரதி. நான் ஏதோ தப்பா புரிஞ்சுட்டு.... “

“போதும் மிஸ்டர்  தயானந்த். ஏதோ திருமணத்திற்கு முன்பே உங்க சுயரூபம் தெரிந்ததே. இனிமேலாவது கண்ணில் பார்க்கிறதயும், காதுல கேட்கறதயும் வச்சு எதையும் முடிவு பண்ணாதிங்க.

உங்க மனசை கேளுங்க. அது சொல்லும் சரியானதை.. நீங்க என்னை உண்மையா லவ் பண்ணியிருந்தீங்கனா என் மனது உங்களுக்கு புரிந்திருக்கும்...

நமக்குள் எல்லாம் முடிந்து விட்டது. இனிமேல்
"என் மூஞ்சியிலேயே முழிக்காதீங்க...குட் பை " என்று எழுந்து நடந்தாள் நிமிர்ந்த நடையுடன் மனதில் வலியுடன்...

“சே !! நானும் எப்படி சராசரி ஆணாக மாறினேன். என்னுடைய அவசர புத்தியால் என் கைக்கு கிடைத்த பொக்கிஷத்தை நழுவ விட்டுட்டேனே..

எனக்கு இந்த தண்டனை தேவைதான். அவள் இப்பவும் ஒரு புதுமைப்பெண் என்று காட்டிவிட்டாள்...” என்று திரும்பி நடந்தான் தயானந்த் மனதில் வலியுடன்....



🌺 🌺 🌺 🌺 🌺

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!