உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-6



அத்தியாயம்-6 

தித்யாவின் அறைக்குள் நுழைந்தவள் மெல்ல அடி எடுத்து வைத்து உள்ளே சென்றாள் தலையை குனிந்த படி..அவன் இருப்பதற்கான அரவம் எதுவும் கேட்க வில்லை.. எங்க போய்ட்டான் என்று மெல்ல தலையை நிமிர்த்தினாள் பவ்த்ரா...

அந்த விசாலமான அறை தான் தெரிந்தது.. அவர்களின் முழு வீடும் இந்த அறைக்குள் அடங்கி விடும் போல.. ஒருத்தனுக்கு இவ்வளவு பெரிய அறையா என்று எண்ணியவாறே கண்களால் துலாவினாள்..

சிறிது நேரம் அலைப்புறுதலுக்கு பிறகு அவளின் கண்கள் கண்டு கொண்டன அவனை... அந்த அறையின் நடுவில் இருந்த கட்டிலில் அமர்ந்திருந்தான் இவளையே இமைக்காமல் பார்த்த வண்ணம்...

அவனின் பார்வையை மெல்ல எதிர் கொண்டவளுக்கு கன்னங்கள் சிவந்தன... பட்டாம்பூச்சிகள் பறக்க ஆரம்பித்தன அவளின் அடி வயிற்றில் !!!..

இருந்தாலும் வெளி காட்டி கொள்ளாமல்,

“சார் எழுந்திருச்சு வரமாட்டாரோ “ என்று திட்டி கொண்டே மெல்ல நடந்து அவனருகில் சென்றாள்.. போகும் வழியிலயே தன் அம்மா மற்றும் அவனின் பெரியம்மா சொன்ன அறிவுரைகள் ஞாபகம் வர, அவன் அருகில் சென்றவள் அருகில் இருந்த டீபாயின் மேல் பால் சொம்பை வைத்து விட்டு

“இவன் காலில் எல்லாம் விழ வேண்டியிருக்கே!! “ என்று மீண்டும் அர்ச்சனையை பண்ணி கொண்டே அவன் காலில் விழுந்தாள்..

திரைப்படங்களில் வருவது போல் அவன் குனிந்து அவளை தூக்குவான் என்று எதிர்பார்த்தவளுக்கு அவன் இன்னும் அசையாமல் அவளையே பார்த்த வண்ணம் இருக்கவும் கொஞ்சம் நேரம் குனிந்து இருந்தவள், பின் தானாகவே எழுந்து சென்று அவன் அமர்ந்து இருந்த கட்டிலில் கொஞ்சம் இடைவெளி விட்டு அமர்ந்தாள் ...

“என்னாச்சு இவனுக்கு??? ஒன்னும் பேசாமல், ஒரு ரியாக்சனும் இல்லாமல் இப்படி கல்லு பிள்ளையாராட்டும் உட்கார்ந்திருக்கானே!!!” என்று புரியாமல் தலையை குனிந்தவள்

சிறிது நேரம் அவளின் கை விரல்களுடனும் , புடவை முந்தானையின் ஓரத்துடனும் விளையாடி கொண்டிருந்தாள்.. அப்பொழுது தான் ஞாபகம் வந்தது தான் கேட்க நினைத்த கேள்விகள்..

மெல்ல நிமிர்ந்து ஒட்டியிருந்த அவளின் இதழ்களை பிரித்து அவள் தன் கேள்வியை கேட்க நினைக்க, அடுத்த நொடி அவனின் இறுகிய அணைப்பில் இருந்தாள் பவித்ரா...

அதுவரை அவளையே மௌனமாக பார்த்து கொண்டிருந்தவன் அவள் வந்து அவன் அருகில் அமர்ந்ததும் அவனையும் மறந்து தன்னவளை இறுக்கி அணைத்தவன் அடுத்து அவளின் திரண்ட செவ்விதழ்களையும் சிறை பிடித்திருந்தான்...

அவ்வளவுதான்...!!

பவித்ராவுக்கு கேட்க நினைத்த கேள்விகள் எல்லாம் காற்றோடு போயின.. முதலில் தயங்கி அவன் பிடியிலிருந்து திமிறி விடுபட முயன்றவள் தோழ்வியுற்று மெல்ல மெல்ல அவனின் இறுகிய அணைப்பில் அடங்கினாள்...

அவள் கணவனோ அவளின் முகம் எங்கும் முத்த மழை பொழிய அவளுக்கோ உடல் எடையற்று, விண்ணில் பறப்பதுபோல இருந்தது.. மெல்ல கண் மூடி அந்த சுகத்தை அனுபவித்தாள்...அவனின் ஆண்மையில் உருகி குழைந்து நெகிழ தொடங்கியிருந்தாள் பெண்ணவள்...

அவ்வளவுதான்.....!!

அடுத்த வினாடி தீ சுட்டவனை போல அவளை விலக்கி நிறுத்தி ஹா ஹா ஹா வென பலமாக சிரித்தான் ஆதித்யா...

கண்களை மூடி மாய உலகில் மிதந்து இருந்தவளுக்கோ என்ன நடக்கிறது என்று புரிய சில விநாடிகள் ஆனது... அவனின் இடியென ஒலித்த பலத்த சிரிப்பில் திடுக்கிட்டு விழித்து அவசரமாக கண்களை திறந்து பார்த்தாள் பவித்ரா..

அவளின் எதிரில் முகத்தில் அவ்வளவு கோபத்துடன் உடல் விறைத்து இவளை ஏதோ ஏளனமாக கேவளமாக பார்ப்பவனை போல பார்த்திருந்தான் ஆதித்யா, அவள் கணவன்...

இன்னும் அவளுக்கு ஒன்றும் புரியாமல் மலங்க மலங்க விழித்தாள்....

அதை கண்டவுடன்

“என்னடி?? இன்னும் மயக்கம் தீரலையா?? எப்படி தீரும்…?? அது தான் ஆதித்யா.. எப்படி இருந்தது இந்த ஆதித்யாவின் அணைப்பு...? .” என்று என்னென்னவோ பேசினான்..

ஆனால் அவளுக்கு தான் ஒன்றும் புரியவில்லை...

மெல்ல மெல்ல தன்னிலை அடைய சில நிமிடங்கள் ஆனது அவளுக்கு....

இப்பொழுது தான் அவன் என்ன சொல்லி கொண்டிருக்கிறான் என்று ஒரளவு புரிய ஆரம்பித்தது பவித்ராவுக்கு...

“ஆறு மாதத்திற்கு முன்பு என்ன சொன்ன?? இந்த பவித்ரா நிழல்கூட நான் இருக்கும் பக்கம் திரும்பாதா?? இப்ப பார்த்தியா பவித்ரா நிழல் மட்டும் இல்லை அவளே என் காலடியில்!!!!” என்று மீண்டும் ஹா ஹா ஹா என்று ஏளனமாக வெற்றி சிரிப்பை சிரித்தான்..

அதை கேட்டு திடுக்கிட்டவள்

“என்ன சொல்றீங்க??? எனக்கு ஒன்னும் புரியல “ என்று மெல்ல முனகினாள் பவித்ரா...

“ஓ!! நீதான் அதி புத்திசாலி ஆச்சே!! இன்னுமா கண்டு பிடிக்க முடியலை என் திட்டத்தை??” என்று மீண்டும் சிரித்தான்

“திட்டமா ??” என்று அதிர்ந்து அவனை பார்த்தாள்..

“ஆமான் டீ!! திட்டம் தான்.. ஆறு மாதமாக நான் போட்ட திட்டம் உன்னை பழி வாங்க...கடைசியில் பார்த்தியா யாரு ஜெயிச்சாங்கனு??? “

“என்ன உளறீங்க??? எனக்கு ஒன்னும் புரியலை...கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்க “

“சும்மா நடிக்காத டீ… ஆறு மாதம் முன்பு நான் சொன்னது ஞாபகம் இல்லை???” என்று நக்கலாக கேட்டான்..

மெல்ல அன்று கடைசியா என்ன சொன்னான் என்று யோசித்தாள் பவித்ரா..

“உன்னை விட மாட்டேன் “ என்றான்

“ஏன் சொன்னான்??? “ என்று யோசித்து கொண்டிருக்கும் பொழுது அவனே தொடர்ந்தான்

“அன்னைக்கு அத்தனை பேர் முன்னாடியும் என்னை கை நீட்டி அடிச்ச இல்லை...

எனக்கு எப்படி இருந்திருக்கும்?? இந்த ஆதித்யா போயும் போயும் ஒரு பொண்ணு கையால அத்தனை பேர் முன்னாடியும்ம்ம்.... சே.... “ என்று தன் கன்னத்தை தடவி கொண்டான்..

“வலி... நீ கொடுத்த அந்த வலி... இன்னும் அனலா எரிஞ்சுகிட்டு இருக்குடி என் உள்ளே... ”

அதான் ஆறு மாதமா திட்டம் போட்டு பழி வாங்கினேன்..

ஞாபகம் இருக்கா அன்று நான் என்ன சொன்னேனு???

“கைய பிடிச்சதுக்கே என்னை அடிச்ச இல்லை... நீயே வருவ என் பெட் ரூமுக்கு.. நீயே என்னை தேடி வருவ என் பெட் ரூமுக்கு... வர வைப்பான் இந்த ஆதித்யா “ என்று அவன் அன்று உறுமியது இப்பொழுது நினைவு வந்தது அவளுக்கு.....

“நினைப்பு தான்... இந்த பவித்ரா நிழலை கூட உன்னால தொட முடியாது.. பவித்ரா நிழல்கூட நீ இருக்கும் பக்கம் திரும்பாது.. முடிஞ்சால் நீ சொன்ன மாதிரி செஞ்சு காமி” என்று அவளும் அவனுக்கு சரிக்கு சமமாக சவால் விட்டாள் அன்று...அவளின் அந்த திமிர்.. இன்னும் அவன் கண் முன்னே வந்து போனது...

பவித்ராவிற்கும் கொஞ்சம் கொஞ்சமாக ஞாபகம் வந்தது அன்றைய நிகழ்வுகள்....

“எப்படி மறந்தேன் அதை...?? ’நல்லதை நினவில் வை.. கெட்டதை அன்றே மற’ என்று தன் அன்னை சொல்லி கொடுத்த பாடத்தை பின்பற்றுவதால்... அன்று நடந்ததை நான் பொருட்டாக எடுத்து கொள்ளாமல் அப்பொழுதே மறந்து விட்டேனே!!! இவன் அதையா இன்னும் நினைவு வைத்திருக்கிறான்!!! “ என்று திடுக்கிட்டாள் பவித்ரா...

ஆனால் அவள் கணவனோ இன்னும் தொடர்ந்து கொண்டிருந்தான்..

“இப்ப பார்த்தியா....? நீயா என்னை தேடி... என் பெட் ரூமுக்கே வந்திருக்க.... வந்ததும் இல்லாமல் என் காலில் விழுந்து ... “

“ஹா ஹா ஹா... “ என்று மீண்டும் வெறி வந்தவன் போல சிரித்தான் ஆதித்யா...

மெல்ல மெல்ல பவித்ராவுக்கு புரிய ஆரம்பித்தது... அவளுள்ளே ஒலித்து கொண்டிருந்த அந்த அபாய சங்கு கடைசியில் பலித்து விட்டது...தலையில் இடி விழுந்ததை போல இருக்க, தன் கண்ணை இறுக்க மூடி சில நொடிகள் ஆழ்ந்து யோசித்தாள்...

சில நொடிகளில் தன்னை சமாளித்து கொண்டவள், மெல்ல நிமிர்ந்து அவனை நேருக்கு நேராக பார்த்தாள்...

“அப்போ நீங்க என்னை பொண்ணு பார்க்க வராமல், பேசாமல் இருந்தது, என் ஸ்கூட்டியின் காற்று போனது....?? “ என்று அவள் முடிக்கும் முன்பே

“ஹ்ம்ம்ம்ம்...பரவாயில்லையே!!! அதுக்குள்ள டக்குனு புரிஞ்சுகிட்ட... ஹ்ம்ம்ம் எல்லாம் என் திட்டம் தான்...என்னை வெளிப்படுத்தாமல் உன்னை மடக்க நினைத்தேன்.. அதான் திட்டமிட்டு ஒவ்வொரு காயா நகர்த்தினேன்... என் பெயரைக் கூட உனக்கு தெரிய படுத்தாமல் பார்த்து கொண்டேன்... “ என்று மீண்டும் வில்லத்தனமாக சிரித்தான்

அவன் கூறியதை கேட்டு அதிர்ந்தவள்

“உங்க பெரியம்மாவுக்கும் இது தெரியுமா??? “ என்றாள் சந்தேகமாக.. ஏனென்றால் அவர்தானே அவள் வீட்டில் வந்து பேசியது.. அவனை பற்றி புக்ழ்ந்து சொல்லியது எல்லாம்...

“ம்ஹூம்.. அவங்களுக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை... உங்க வீட்டில வந்து பேச, உங்க அம்மாவை சரி கட்ட ஒரு பகடைக்காய் தான் அவங்க...மற்றபடி என்னுடைய திட்டம் எதுவும் அவங்களுக்கு தெரியாது... “

போதும்.. இது போதும்... அவளின் கேள்விக்கு விடை கிடைத்து விட்டது.. அவள் மனதில் அடித்து கொண்டிருந்த ஏதோ சரியில்லை என்றது சரியாகவே போய்விட்டது...

“ஏதோ தப்பாக இருக்கேனு பார்த்தால் இப்படி கட்டிய கணவனே தப்பாயிட்டானே... “ என்று கதறியது அவளின் மனம்...

ஆனால் தன்னை வெளிக்காட்டி கொள்ளாமல் மீண்டும் கண்களை மூடி யோசித்தாள் சில விநாடிகள்.. அவளை தன்னிலைக்கு கொண்டு வர அந்த அமைதி தேவையாக இருந்தது... பின் மெதுவாக அவனை பார்த்து

“சோ... நீங்க என்னை லவ் பண்ணி கல்யாணம் பண்ணலை?? “ என்று மெல்ல கேட்டாள்..

“என்னது?? உன்னை நான் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டனா??? க்ரேட் ஜோக் “ என்று மேலும் பலமாக சிரித்தான்...

“உன் முகத்தை முதலில் கண்ணாடியில் பார்த்திருக்கியா?? என்னை சுத்தி நின்ற , நிக்கிற பொண்ணுங்களை பார்த்திருக்கியா?? அவங்க எங்க?? நீ எங்க??

உனக்கும் எனக்கும் உயரம் தான் பொருத்தமா??? என்னில் பாதி கூட இல்லை...

உன்னை போய் லவ்... ?? “ என்று முடிக்காமல் மீண்டும் சிரித்தான்

“ப்ரேம் கூட சொன்னான்... என்னோட அந்தஸ்த்துக்கும் பெர்ஸ்னாலிட்டிக்கும் உன்னை போய் ஏன் கல்யாணம் பண்றேன் என்று திட்டினான்... அவனுக்கே தெரியுது நீ எனக்கு பொருத்தம் இல்லை என்று...

அப்படி இருக்க உன்னை போய் நான் லவ் பண்ணி.... ஹா ஹா ஹா நீ ஆசை படலாம்.. ஆனால் பேராசை பட கூடாது பவித்ரா... “ என்று அவளை நக்கலாக பார்த்து மீண்டும் சிரித்தான்

“அப்ப என்னை பழி வாங்க உங்களுக்கு...உனக்கு இந்த கல்யாணம் தான் கிடைத்ததா…?? ” என்று கோபமாக கேட்டாள்..

“ஹ்ம்ம்ம் வேற என்ன பண்ண?? .. நானும் என்னென்னவோ முயற்சி செய்து பார்த்தேன்.. நீ ஒன்னுக்கும் மசியலை..அப்ப தான் நீ உன் ஃப்ரெண்ட் கிட்ட பேசிகிட்டு இருந்ததை கேட்டேன்...

“ பிடிக்குதோ... இல்லையோ தாலி கட்டினவன் கூடத்தான் கடைசி வரை வாழணும் என்று”

அப்பதான் எனக்கு இந்த ஐடியா வந்தது... நான் தாலி கட்டிட்டா அப்புறம் எப்பவும் என் காலடியில் தான் நீ கிடக்கனும்...அதுதான் இப்படி ஒரு தண்டனை...”

இன்னுமே புரியாமல் பார்த்தாள் பவித்ரா இது எப்படி தண்டனை ஆகும் என்று..அதை புரிந்து கொண்டவன்

“லுக் பவித்ரா... நான் நேரடியாகவே சொல்றேன்.. நான் உன் கையை பிடித்ததுக்கே என்னவோ கண்ணகி அவதாரம் எடுத்த இல்லை அன்று... அதனால நீ கடைசி வரைக்கும் இப்படியே கண்ணகியாக கன்னியாக தான் இருக்கனும்..

கணவன் என்கிற எந்த சுகமும் உனக்கு கிடைக்காது.. என் தொடுகைக்காக நீ ஏங்கனும்.. என் காலடியில் வந்து நீ கெஞ்சனும்... அது தான் நான் உனக்கு கொடுக்கிற தண்டனை ... ” என்றான் இறுகிய முகத்துடன்..

அதை கேட்டதும் திகைத்தவள்

”இவன் என்ன லூசா?? இப்படி ஒரு கேவலமான திட்டத்தை வச்சிருக்கானே... இவனெல்லாம் எப்படிதான் பெரிய ஆளா தொழில் ல முன்னுக்கு வந்தானோ ??? “ என்று மனதுக்குள் திட்டி கொண்டாள்...

பின் சில விநாடிகள் தன்னை சுதாரித்து கொண்டு

“அப்ப நீங்க... நீ... காலையில நடந்து கொண்டது..அந்த சீண்டல்கள்.. அந்த ரூமுக்குள்ள.....” என்று திக்கி தினறி நிறுத்தினாள்..

“ஹா ஹா ஹா ... எல்லாம் நடிப்பு தான்... உன்னை நம்ப வைக்க.. உனக்கு என் மேல எந்த சந்தேகமும் வராமல் இருக்க தான்....நீயும் அதையே நம்பிட்ட... ஆமாம்... கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியா ??

திடீர்னு ஒருத்தன் வந்து எதுவுமே பேசாமல் பழகாமல் கல்யாணம் பண்ணிக்கறனு சொன்ன உடனே மணமேடைக்கு வந்திட்ட...ஹ்ம்ம்ம் அப்புறம் எப்படி?? என்னை பார்த்த உடனே அப்படி சொக்கி போய்ட்ட!! ” என்று மீண்டும் ஏளனமாக சிரித்தான் ஆதித்யா..

அதை கேட்டதும் பவித்ராவின் கண்கள் கரித்துகொண்டு வந்தது...இவன் இவ்வளவு கேவலமாக பேசற மாதிரி நடந்து கிட்டமே என்று வருந்தினாள்... ஆனால் அவள் மனமோ

“கன்ட்ரோல் யுவர்செல்ப் பவித்ரா... இவனிடம் நீ தோற்க கூடாது...இவனில்லாமல் உனக்கு இழப்பு எதுவும் இல்லைனு இவனுக்கு காட்டு “ என்று ஆனை இட்டது...

அதை உணர்ந்ததும் பவித்ராவும் அவசரமாக தன் கண்ணிரை உள்ளே இழுத்து கொண்டாள்...

“இல்லை... இவனிடம் நான் தோற்க மாட்டேன்... இந்த பவித்ரா எப்படி பட்டவள் என்று இவனுக்கு காமிக்கறேன் “

என்று உள்ளுக்குள் சூளுரைத்தவள் அவன் சொன்னது எதுவும் தன்னை பாதிக்காததை போல , முகத்தில் எதையும் காட்டி கொள்ளாமல் அவள் ஐந்தடி உயரத்துக்கும் நேராக நிமிர்ந்து வெகு இயல்பாக நிமிர்ந்து நின்று கொண்டு அவனை நேராக பார்த்து.

“லுக் மிஸ்டர் ஆதித்யா.... உனக்காக இங்க யாரும் உருகலை...உன் கண் பார்வை படாதான்னா நான் ஒன்னும் ஏங்கி நிற்கலை...நிற்கவும் மாட்டேன்.. என்னை பிடிக்கலைனா எதுக்கு இவ்வளவு பிரமாண்டமா கல்யாணம் பண்ணனும்??

பழி வாங்கறதுன்னா ஒரு கோயில்ல வச்சே முடிச்சிருக்கலாமே உன் நாடகத்தை... இவ்வளவு பேரை கூப்பிட்டு இவ்வளவு செலவு பண்ணி எதுக்கு செய்யனும் இந்த திருமணத்தை “ என்று பொரிந்தாள் பவித்ரா..

“ஹ்ம்ம்ம்.. நீ இன்னும் என்னை முழுசா புரிஞ்சுக்கலை பேபி...

நீ ஆதித்யாவின் மனைவினு எல்லாருக்கும் தெரியனும்.. அப்பதான் உன்னை யாரும் நெருங்க மாட்டாங்க.. அதே மாதிரி என் கூட இருக்க முடியாது னு பிரிய நினைச்சாலும் நான் உனக்கு டைவர்ஸ் ம் கொடுக்க மாட்டேன்..

என் செல்வாக்கு அந்த மாதிரி.. நீ கடைசி வரைக்கும் என் மனைவியாக பெயரளவில் மட்டும் தான் இருக்க போற!! என்னால உனக்கு எந்த சுகமும் கிடைக்காது.. நீ எனக்காக ஏங்கி என்கிட்ட நீயா தேடி வரணும்... அப்பூடி என் ப்ளான்?? “ என்று கண் சிமிட்டி சிரித்தான்...

“அப்ப உனக்கும் கஷ்டம் தானே... “ என்று மெல்ல அவளின் சந்தேகத்தை கேட்டாள்..

“யார் எனக்கா???.. ஹா ஹா ஹா எத்தனை பொண்ணுங்க ரெடியா இருக்காங்க தெரியுமா.. என் காலடியில் வந்து விழ...ஐ வில் என்ஜாய் மை லைப் வித் மை கேர்ள்ஸ்...அதோட எனக்கு இந்த கல்யாணம், குடும்பம், குழந்தைங்கனு பெருசா எதுவும் இன்ட்ரெஸ்ட் இல்லை.... லைப் புல்லா சுதந்திரமா ஜாலியா அனுபவிக்கனும்.

நாளைக்கு ஏன் எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலைனு யாரும் கேட்க கூடாது பார்... அதுக்குதான்... இந்த சொசைட்டிக்காக இந்த திருமணம்... சோ உன்னை பழி வாங்கின மாதிரியும் இருக்கும் அதோட என்னோட மேரேஜ் முடிஞ்ச மாதிரியும் ஆச்சு.... எப்படி ஒரே கல்லுல ரெண்டு மாங்கா...?? இப்பயாவது புரியுதா இந்த ஆதித்யா நிஷாந்த் யாருனு!!! ” என்று தன் காலரை தூக்கி விட்டு கொண்டான்..

அப்பதான் அவனின் பெரியம்மா சொன்னது நினைவு வந்தது...

“பொண்ணுங்க விஷயத்துல அவன் கொஞ்சம் தப்பு பண்றவன் என்று”

அப்ப கூட அந்த மாதிரி எதுவும் இருக்காது என்று ஒரு 5 % நம்பியிருந்தாள் பவித்ரா.. ஆனால் இப்ப அவனே தன்னை பற்றி பெருமையாக பேசவும்

“சே!! சே!! போயும் போயும் ஒரு வுமனிஸ்ட் ஐ கல்யாணம் பண்ணியிருக்கேனே!! “ என்று கொதித்தது அவளுக்கு..

அவள் பேசாமல் அமைதியாக இருப்பதை கண்டு இன்னும் அவன் ஆர்பரித்து

“ஹா ஹா ஹா இப்பயாவது ஒத்துக்கிறியா??? நீ தோத்துட்ட என்று??

இப்பயும் ஒன்னும் கெட்டு போய்டலை.. நீ அன்னைக்கு செஞ்சதுக்கு சாரி கேளு.. போனா போகுதுனு உன்னை மன்னிக்கிறேன்.. என்னோட மற்ற கேர்ள்ஸ் ல நீயும் ஒருத்தியா இருக்கலாம். ஆனால் காதல் மனைவியா மட்டும் எப்பவும் உனக்கு உரிமை கிடையாது...

என் திட்டம் இவ்வளவு சீக்கிரம் நிறைவேறும் என்று நானே நினைத்து பார்க்கலை...

ஆனாலும் உங்க அம்மாவுக்கு தான் நன்றி சொல்லனும்... நான் பணக்காரன் என்று தெரிந்த உடனே எதுவுமே விசாரிக்காமல் உன்னை என் கையில புடிச்சு கொடுத்திட்டாங்களே ...

இவ்வளவு சுலபமா ஒத்துக்குவாங்கனு தெரிந்திருந்தால் கல்யாணம் வரைக்குமே போயிருக்க மாட்டேன்... வேற முறையில உன்னை என்கிட்ட வர வச்சிருப்பேன் ” என்று அவன் முடிக்கு முன்னே

பாய்ந்து வந்து அவன் சட்டையை எட்டி பிடித்திருந்தாள் பவித்ரா...

“டேய்ய்ய்.. போதும் நிறுத்து... இதுக்கு மேல எங்க அம்மாவை பற்றி ஏதாவது பேசின நான் மனுசியா இருக்க மாட்டேன்... நீ இவ்வளவு வசதியானவன் என்று தெரிந்திருந்தால் கண்டிப்பா எங்க அம்மா சம்மதிச்சு இருக்க மாட்ட்டாங்க...

ஏதோ உங்க பெரியம்மா நல்லா பழகறாங்கனு தான் எங்க அம்மா ஒத்துகிட்டதே... இப்ப கூட உன் வீட்டை பார்த்து உன் வசதியை பார்த்து எதுவும் தப்பாயிருமோ என்று பயந்து கொண்டே தான் போனாங்க..

மாப்பிள்ளை மாப்பிள்ளைனு எவ்வளவு பெருமையா உன்னை பற்றி சொல்லுவாங்க தெரியுமா??? அவங்களை போய்.....

“சீ !! நீ எல்லாம் ஒரு ஆம்பளை.. ஒரு பொண்டாட்டி கிட்ட எப்படி பேசறதுனு கூட தெரியலை...

இப்பவும் சொல்றேன்.. நீ அன்று பண்ணினது தப்பு. நீ செஞ்ச தப்புக்கு தான் நான் தண்டனை கொடுத்தேன்.. நான் பண்ணினது சரிதான்.... நான் பண்ணாத தப்புக்கெல்லாம் என்னால சாரி கேட்க முடியாது...

அப்புறம் என்ன சொன்ன??? நீ ஜெயிச்சுட்டியா?? எப்படி???

உன்னோட சவால் என்ன

“நானே உன்னை தேடி உன் பெட் ரூமுக்கு வரணும்... அதான ”

அப்படியே பார்த்தாலும் நீ சொன்ன மாதிரி நானா ஒன்னும் உன் பள்ளியறைக்கு ஆசைபட்டு ஓடி வரலை...நாலு பேரு என் கூட வந்து என்னை தள்ளி விட்டுட்டு தான் போனாங்க..

நான் கால்ல விழுந்தது கூட உனக்காக இல்லை.. நீ என் கழுத்தில கட்டினயே இந்த தாலி... இதற்கு குடுக்கிற மரியாதைக்காக தான்.. அதையே கொச்சை படுத்திட்டியே !!!

இப்ப சொல்றேன் கேட்டுக்க… உன்னால முடிஞ்சா நீ சொன்ன மாதிரியே நானே விரும்பி உன் பெட்ரூமுக்கு வரனும்... நானே உன்னிடம் மயங்கி என் மனதார ஐ லவ் யூ னு சொல்லனும்....உன்னுடைய தீண்டலுக்காக ஏங்கி நானே என்னை தரனும்... அப்படி செய்ய வை பார்க்கலாம்.. அப்ப ஒத்துக்கறேன் இந்த ஆதித்யா நிஷாந்த் தி க்ரேட்...நீ ஜெயிச்சுட்ட என்று..

சும்மா ரெண்டு பொம்பளைங்களை பொய் சொல்லி ஏமாற்றி விட்டு நான் ஜெயிச்சுட்டேனு மார் தட்டிக்கிற ” என்று உறுமினாள்..

அதை கேட்டதும் அவள் பிடித்திருந்த கையை தட்டி விட்டு

“ஹா ஹா ஹா அவ்வளவு தான... அதையும் செஞ்சு காமிக்கிறேன் டீ... நாலறை அடி கூட இல்லை.. நீ என்கிட்ட சவால் விடறியா...நீ சொன்ன மாதிரியே நீயா மயங்கி என் காலடியில் வந்து விழ வைக்கிறேன்... உன்னை விட மாட்டேன்“ என்று பதிலுக்கு அவனும் பல்லை கடித்தான்..

“ஆல் தி பெஸ்ட் மிஸ்டர் ஆதித்யா!! “ என்று பதிலுக்கு ஏளனமாக பார்த்து உதட்டை வளைத்து சிரித்தவள் அவன் கட்டிலில் கிடந்த ஒரு தலையணையும் பெட்ஷீட்டையும் வெடுக்கென எடுத்துகொண்டு வேகமாக சென்று அருகில் இருந்த ஷோபாவில் படுத்து போர்வையை இழுத்து மூடிகொண்டாள்...

இதுவரை தன்னை கட்டுபடுத்தி கொண்டவளுக்கு அதுக்கு மேல் முடியவில்லை... மூடியவளின் கண்களில் இருந்து கண்ணிர் கட கட வென வழிந்தது... ஏனென்று தான் தெரியவில்லை..

அவன் ஏமாற்றி விட்டதாலா??.. இல்லை தன்னை விரும்ப வில்லை என்பதலா??? எதையோ எதிர்பார்த்தவளுக்கு எல்லாம் தலைகீழாக நடக்கவும் உள்ளுக்குள் நொறுங்கி தான் போனாள் பவித்ரா...

“எப்படி எல்லாம் பொய்யாகும்???.. அவன் காலையில் அப்படி பார்த்தது, அவனுடைய சீண்டல்கள்..??. எல்லாம் நடிப்பா....? அவளால் நம்ப முடிய வில்லை... இல்லை கன்டிப்பா அது நடிப்பு இல்லை..

இப்பதான் நடிக்கிறான்.. தன்னை ஏதோ ஏமாற்ற தான் இப்படி பேசியிருக்கிறான்.. சீக்கிரம் இது எல்லாம் நாடகம் என்று அவளை அள்ளி கொள்ளத்தான் போகிறான்.. ” என்று பெண் மனம் கொஞ்சமே கொஞ்சமாக நம்பிக்கை கொன்டிருந்தது...

அந்த நம்பிக்கையும் பொய்யாக்கினான் அவளின் கணவன்...அவனிடம் எந்த அசைவும் கேட்கவில்லை அவளுக்கு...

“ஐயோ!! இதை அம்மா எப்படி தாங்குவாங்க??? அவங்களுக்கு தெரிந்தால் நொறுங்கி போய்டுவாங்க...

வேண்டாம்... அவங்களுக்கு எதுவும் தெரிய வேண்டாம் இவனை பற்றி....பார்க்கலாம்... அப்படி என்னதான் செஞ்சுடுவான் என்று...” என்று தனக்கு தானே தைரியம் சொல்லி கொண்டாள்...

என்ன ஆனாலும் இவனிடம் மட்டும் தோற்ககூடாது என்ற உறுதியுடன் வெகுநேரம் ஆகியும் உறக்கம் இல்லாமல் புரண்டு புரண்டு படுத்திருந்தாள்..

இங்கு ஆதித்யாவோ கொதித்து கொண்டிருந்தான்... அவள் திமிராக நடந்து ஷோபாவில் சென்று படுக்கவும் அவன் கோபத்துடன் வேகமாக பால்கனிக்கு சென்றான்...பின் குறுக்கும் நெடுக்கமாக நடக்க ஆரம்பித்தான்..

“சே!! என்ன இப்படி பண்ணிட்டா...? அவனின் அணைப்பில் மயங்கியவள் தான் கேட்டவுடனே மன்னிப்பு கேட்டு விடுவாள்.. அதற்கப்புறம் அவளை ஏற்று கொள்ளலாம் என்று கணக்கு போட்டிருந்தான் ஆதித்யா...

இப்ப எல்லாம் தப்பாக போய்விட்டதே..பத்தாதற்கு என்கிட்டயே சேலஞ்ஜ் பண்ணியிருக்கிறாளே!!

ஆனாலும் ரொம்பவும் திமிர் தான் இந்த குட்டச்சிக்கு...நாலறை அடி கூட இல்லை.. என்னமா திமிரா பேசறா... அடக்கி காட்டறேன் அவளை.. இந்த ஆதித்யா யாருனு காட்டறேன் அவளுக்கு” என்று கொக்கரித்தவன் சில நிமிடங்கள் மீண்டும் தன் நடையை தொடர்ந்தான்...

சிறிது நேரம் நடந்து முடித்ததும் அறைக்கு திரும்பினான்...அவன் கண்கள் தானாக ஷோபாவை நோக்கியது...

பவித்ரா போர்வையை தலை முதல் கால் வரை இழுத்து போர்த்தி கொண்டு “தன்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது “ என்பதான இறுக்கத்துடன் படுத்து இருப்பது நன்றாக தெரிந்தது அவனுக்கு...

அதை கண்டதும் அவனுக்கு தன் கோபத்தையும் மீறி சிரிப்பு வந்தது..

மெல்ல தன் படுக்கையில் வந்து படுத்தவன் கொஞ்ச நேரம் முன்னாடி நடந்த நிகழ்வுகளை அசை போட்டான்...

சர சரக்கும் பட்டுபுடவையும், தலை நிறைய மல்லிகை பூவும், கன்னத்தில் வெட்கத்துடனும் , கண்களில் அவனை தேடிய அந்த தேடலும் கண் முன்னே வந்தது..

அவளை கண்டதும் தாவிய தன் மனதை கஷ்ட பட்டு அடக்கி கொண்டுதான் அவன் அமர்ந்து இருந்தான் அவள் தன்னை நெருங்கும்வரை...அவனின் திட்டத்தை பல முறை ஞபாக படுத்தி கொண்டான்...

அவளின் அந்த வெட்க தோற்றமும் அவன் அணைத்ததும் மயங்கிய அவளின் பெண்மையும் பின் தன் சட்டையை பிடித்தபொழுது தெரிந்த அவளின் கோபம், தன்னை எதிர்த்து சவால் விட்ட அவளின் திமிர் என்று அவளின் அத்தனை பாவங்களும் கண் முன்னே வந்து அவன் தூக்கத்தை கெடுத்தன...

“ராட்சசி...உன்னை என்கிட்ட கொண்டு வந்து உன்னை ஜெயிச்ச மாதிரி உன் மனதை எப்படி என்கிட்ட கொண்டு வர்றது??? “ என்று யோசித்தான்...

“ஹ்ம்ம்ம்ம் ஒரு ஐடியாவும் கிடைக்க மாட்டேங்குதே.... பார்க்கலாம்...எங்க போய்ட போறா??? என்ன ஒன்னு.. இனிமேல் லைப் தினமும் சுவாரசியமா இருக்கும்…Let’s enjoy this life too... ” என்று தனக்குள் சிரித்து கொண்டான் ஆதித்யா நிஷாந்த்...



ஆதித்யா நினைத்த மாதிரி அவனின் வாழ்க்கை சுவாரசியமா இருக்குமா?? இல்லை சூடு பறக்குமா..?? தொடர்ந்து படியுங்கள்...

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!