உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-11
அத்தியாயம்-11
அந்த அதிகாலையில் கையில் இருந்த சூடான காபியை பருகிக்கொண்டே தோட்டதில் கன்னம் குழிய சிரித்துக் கொண்டிருந்த பவித்ராவை ரசித்துக் கொண்டிருந்தான் ஆதித்யா... அவன் மனமோ நேற்று மாலை நடந்ததை அசை போட்டது...
காலையில் கோபமாக கிளம்பி சென்றவனுக்கு மாலை வரையுமே அடங்கவில்லை அவனின் கோபம்.. மாலை ஐந்து மணிக்கு மேல் இனிமேல் தாங்க முடியாது என்று தோன்றவும் தன் பெர்சனல் மொபைலை ஆன் செய்தான் ப்ரேம் கிட்டயாவது பேசலாம் என்று..
அப்பொழுதுதான் கவனித்தான் ஸ்வீட்டி கிட்ட இருந்து வாய்ஸ் மெசேஜ் வந்திருந்தது...
ஸ்வீட்டி அவனை சுற்றி வரும் பல பெண்களில் ஒருத்தி.. அந்த மெசேஜை திறந்தான்..
“ஹாய் டார்லிங்... நாம சந்தித்து ரொம்ப நாள் ஆகிறது.. ஐ மிஸ் யூ ... ஐ வான்ட் டு பி வித் யூ டு நைட்” என்று கொஞ்சும் குரலில் அனுப்பி இருந்தாள் அவனுக்கு...
அதை கேட்டதும் காலையில் பவித்ராவின் செயலும் அவள் தன்னை நிராகரித்ததும் மீண்டும் ஞாபகம் வந்தது...
“போடி.. உன்னை விட்டா எனக்கு ஆளா இல்லை “ என்று முனகியவன் உடனே அந்த ஸ்வீட்டியை அழைத்தான்...
திருமணத்திற்கு பிறகு மீண்டும் ஆதித்யா தன்னை தேடி வர மாட்டான்.. இருந்தாலும் முயற்சி செய்து பார்க்கலாம் என்று தான் அந்த மெசேஜை அனுப்பி இருந்தாள் ஸ்வீட்டி.. அவனே தன்னை அழைக்கவும் மகிழ்ச்சியுடன் அவன் போனை அட்டென்ட் செய்தாள்..
“ஹாய் பேபி...Lets meet in our regular place at 6 pm .. I will start soon” என்று கூறி அவள் பதிலுக்கு காத்திராமல் அலைபேசியை அணைத்தான்..
பின் வேகமாக கிளம்பி தன் காரை எடுத்து கொண்டு ஒரு விலை உயர்ந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலை அடைந்தான்..
அது AN (ஆதித்யா நிஷாந்த்) குரூப் ஆப் கம்பெனிஸ் ஹோட்டல்களில் ஒன்று..
இதே மாதிரி நகரின் பல பகுதிகளிலும் மற்றும் சில முக்கிய நகரங்களான பெங்களூர், மும்பை, டெல்லியிலும் அதன் கிளைகள் இருந்தன.. ஒவ்வொரு ஹோட்டலிலும் அவனுக்கு என்று ஒரு பிரத்யேக அறை இருக்கும்...
இந்த மாதிரி பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் பொழுது அந்தந்த பகுதிகளில் உள்ள தன் ஹோட்டலில் உள்ள அறைக்கே சென்று விடுவான்... வேறு எங்கும் தங்க மாட்டான்..
அதே மாதிரி தன்னை நாடி வரும் பெண்களிடமும் எந்த ஒரு பொருளையும் கூட எடுத்து வர அனுமதிக்க மாட்டான் அலைபேசி முதல் கொண்டு.. அவர்கள் தன்னை தெரியாமல் புகைப்படம் எடுத்து விட்டால் என்று முன்னெச்சரிக்கையாக சில கட்டுபாடுகளை வைத்திருந்தான்..
தன் மற்றொரு பக்கம் யாருக்கும் தெரியாமல் பார்த்து கொள்வான்.. அதனாலயே அவனை பற்றி எந்த ஒரு ரகசியமும் கசிந்ததில்லை இதுவரையிலும்...
ஹோட்டலுக்குள் நுழைந்தவன், சுற்றிலும் பார்வை இட்டான்... ஸ்வீட்டி முன்னரே வந்து அங்கு காத்திருந்தாள்.. அவள் பார்மல் ட்ரெஸ்ஸில் அவனை அபிஸியலாக சந்திக்க வந்திருப்பதை போல வந்திருந்தாள்..
இதுவும் அந்த கட்டுப்பாட்டில் ஒன்று. தன் எல்லா சந்திப்புகளையும் அபீஸியலாகவே காட்டி கொள்வான்... அதனால் யாருக்கும் இதுவரை எந்த சந்தேகமும் வந்ததில்லை...
அவன் நேராக ரிசப்ஷனை அடைந்து தன் அறைக்கான சாவியை வாங்கி கொண்டு ஸ்வீட்டியின் அருகில் சென்றான்... பின் அபீஸியலாக அவளிடம் கை குலுக்கியவன் அவளை தன்னுடன் தன் அறைக்கு அழைத்து சென்றான்..
அவன் அறையை அடைந்ததும் அவள் கொண்டு வந்திருந்த ஹேன்ட் பேக்கை வாங்கி லாக்கரில் பூட்டினான்..அவளும் மயக்கும் புன்னகை ஒன்றை சிந்தி வேகமாக உள்ளே இருந்த இன்னொரு அறைக்கு சென்று வேறு ஒரு உடைக்கு மாறி வந்தாள்...
அதற்குள் ஆதித்யாவும் ஒரு இலகுவான உடைக்கு மாறி இருந்தான்.. கொஞ்சம் ஆபாசமாக உடையை அணிந்து வந்தவள் வேகமாக ஆதித்யாவின் அருகில் வந்து அவனை கட்டிக்கொண்டாள்...
“ஐ மிஸ் யூ சோ மச் டார்லிங்... “என்று கொஞ்சும் குரலில் காதல் மொழியை பொழிந்தாள்...
ஆனால் ஆதித்யாவோ அவளை விலக்கி எழுந்து சென்று அங்கு இருந்த மினி பாரை திறந்து ஒரு மது பாட்டிலை எடுத்து அதை ஒரு கோப்பையில் ஊற்றி குடிக்க ஆரம்பித்தான்...
இன்னும் அவனுள்ளே பவித்ரா தன்னை விலக்கி நிறுத்தியது எரிந்து கொண்டிருந்தது...
ஸ்வீட்டிக்கோ
“என்னாச்சு இவனுக்கு?? .. எப்பவும் அவள் வந்து கட்டிபிடித்தாள் அவன் உடனே அடுத்த கட்டத்திற்கு போயிருப்பான்.. இன்று தன்னை கண்டுகொள்ளவே இல்லையே... ஒருவேளை அவன் பொண்டாட்டியின் நினைப்போ?? எதுவானாலும் இது ஒரு நல்ல சந்தர்ப்பம்... அவனை விட்டு விடக்கூடாது..
அதோடு அவள் வேறு ஒரு திட்டத்துடன் வந்திருந்தாள்... அதை எப்படியும் நிறைவேற்றியாகனும்.. அதுக்கு அவனை மயக்கியே ஆகனும்..” என்று முடிவு செய்தவள் அவன் அருகில் சென்று மீண்டும் சில கோப்பைகளை அவனுக்கு ஊற்றி கொடுத்தாள்...
அவனுக்கு நன்றாக போதை ஏறியதும் அவனை நெருங்கி மீண்டும் கட்டி பிடித்து அவன் உணர்ச்சியை தூண்டும் வகையில் நடந்து கொண்டாள்..
ஆனால் ஆதித்யாவிற்கோ அவளின் செயல் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை... மாறாக அவன் நினைவுகள் முழுவதும் பவித்ராவையே சுத்தி வந்தது...
அவளை காலையில் இறுக்க அணைத்து தூக்கிய பொழுது அவனுள்ளே எழுந்த உணர்வுகள் சுகத்தை கொடுத்தது.. அவள் மேனியின் மென்மையில் மயங்கிய சுகம் இன்னும் அவன் மனமெல்லாம் நிறைந்து இருந்தது....
இப்பொழுது ஸ்வீட்டி தன் அருகில் இவ்வளவு நெருக்கத்தில் இருந்தும் தன்னுள் எந்த சலனமும் இல்லையே என்று யோசித்தான்..
அதோடு பவித்ரா தன்னை விடுவித்து கொள்ள ஓடியது நினைவு வர, தன் கணவனிடமிருந்தே தப்பித்து போகிறாள்.. இந்த ஸ்வீட்டி அடுத்த ஆணிடம் இப்படி இழைகிறாளே என்று அவள் மீது எரிச்சல் வந்தது அவனுக்கு...முன்பு அனுபவித்த அதே சுகம் இப்பொழுது கசந்தது அவனுக்கு...
அப்பொழுது ஸ்வீட்டி அவனை நெருங்கி முத்தமிட முயன்றாள்.. அதை கண்டதும் அவனுள்ளே அருவருப்பு உண்டாகியது... அவள் முகத்தை ஒரு கையால் மூடியவன் அவளை பிடித்து மறுபுறம் தள்ளினான்...
“Let’s stop this nonsense Sweety… I’m not interested.. You pack up now” என்று உறுமினான்...
அதை கேட்டதும் ஸ்வீட்டிக்கோ கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பதை போல ஏமாற்றமாக இருந்தது... ஆனால் அவனை மீண்டும் நெருங்க பயமாக இருந்தது.. ஆதித்யா ஒரு தரம் எதையும் சொல்லி விட்டால் அவன் முடிவை மாற்ற மாட்டான் என்று அவளுக்கு தெரியும்...
அதனாலயே எதுவும் பேசாமல் எழுந்து தன் ஆடையை மாற்ற உள்ளே சென்றாள்...
ஆதித்யாவோ கட்டிலில் படுத்தவாறு பவித்ராவின் நினைவுகளை அசை போட்டு கொண்டிருந்தான்..
திருமணம் முடிந்து அவன் அவளை அணைத்ததும் அன்று முதல் இரவில் அவன் முத்தமிட்டதும் அதற்கு அவள் மயங்கி நின்ற அந்த இனிய நினைவுகள் சுகமாக பரவின அவன் உள்ளே...
அந்த சுகத்தை கண்மூடி அனுபவித்து கொண்டிருந்தான்...
பின் எதேச்சையாக கண்ணை திறந்தவன் அங்க ஸ்வீட்டி அவனின் அருகில் நின்று அவனை தன்னுடன் சேர்த்து மிக நெருக்கமாக இருக்கிறமாதிரி செல்பி எடுக்க முயன்று கொண்டிருந்ததை கண்டான்...
ஆதித்யா அவளை சந்திக்க ஒத்துக் கொண்டதுமே ஸ்வீட்டிக்கு குஷியாக இருந்தது... அவளும் எத்தனயோ பெரும் புள்ளிகளை பார்த்திருக்கிறாள்.. ஆனால் ஆதித்யாவின் ஆண்மை தரும் சுகம் வேற எங்கும் கிடைத்ததில்லை..
மேலும் அவன் அள்ளி தெளிக்கும் பணம் அவளை இழுக்கும்.. எப்படியாவது அவனை மயக்கி மணந்து கொள்ள முயன்றாள்.. ஆனால் ஆதித்யா அவள் விரித்த வலையில் விழவில்லை...
நல்ல ஒரு சந்தர்ப்பத்திற்காக அவள் காத்துக் கொண்டிருந்தாள்..... அதற்குள் அவன் திடீரென்று பவித்ராவை மணந்ததும் அவன் தன் கையை நழுவி சென்றதாக வருத்தபட்டவளுக்கு மீண்டும் அவன் அழைக்கவும் அக மகிழ்ந்து வந்திருந்தாள்..
மேலும் எப்படியாவது அவனோடு நெருக்கத்தில் இருக்கிற மாதிரி ஒரு சில புகைப்பட்ங்கள் எடுத்து விட்டால் அதை கொண்டு மற்ற பெரிய புள்ளிகளை சுலபமாக பிடித்து விடலாம்..
மேலும் இந்த புகைப்படத்திற்கு மீடியாவில் நல்ல டிமாண்ட்.. ஆதித்யாவை பற்றி எந்த ஒரு தப்பான தவலும் இதுவரை வந்ததில்லை தகுந்த ஆதாரம் இல்லாததால்.
இந்த புகைப்படம் மட்டும் கிடைத்து விட்டால் அவர்களுக்கு இது ஒரு ஹாட் நியூஸ் ஆகும். அவர்களிடம் நல்ல ஒரு சன்மானம் வாங்கலம்...
அதோடு அவள் பெயரும் ஆதித்யாவின் பெயரோடு இணைந்து பரவினால் அவளுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்று திட்டமிட்டு அவளின் இன்னொரு அலைபேசியை தான் அணிந்து வந்திருந்த ஆடைக்குள் ஒழித்து வைத்திருந்தாள்..
ஆதித்யா கட்டிலில் கண் மூடி படுத்து இருக்கவும் அவன் போதையில் தான் உறங்குகிறான் என்று நினைத்து அவனுக்கு தெரியாமல் செல்பி எடுக்க முயன்று கொண்டிருந்தாள்..
ஆனால் அவளுக்கு தெரியவில்லை.. ஆதித்யா எவ்வளவு குடித்தாலும் தன் நிதானத்தை எப்பவும் தவற விட மாட்டான் என்று....
தன் கண்ணை திறந்தவன் அங்கு ஸ்வீட்டி செல்பி எடுப்பதை கண்டான்... உடனே வேகமாக எழுந்து அவள் கையில் இருந்த அலைபேசியை பிடுங்கினான்.. அதை திறந்து வேகமாக அவள் எடுத்து இருந்த படங்களை அழித்தான் ...
பின் வேறு ஏதும் படங்கள் இருக்கின்றனவா என்று அவள் படங்களை ஆராய்ந்தவன் அதிர்ந்து போனான்... பல முக்கிய புள்ளிகளுடன் மிக நெருக்கமாக ஆபாசமான நிலையில் அவள் இருந்ததை படம் பிடித்து வைத்திருந்தாள்...
அதை கண்டதும் கோபம் தலைக்கேற
“யூயூ ப்ளடி இடியட்.... “ என்று ஓங்கி அறைந்தான் அவள் கன்னத்தில்.. பின் வேகமாக அந்த அலைபேசியை திறந்து அதில் இருந்த மெமரி கார்டை உறுவி விட்டு அவள் மொபைலை அவளிடம் தூக்கி விசிறினான்..
“இனிமேல் என் முகத்தில் முழிக்காத.. கெட் லாஸ்ட்” என்று அவள் கைப்பையையும் அவளிடம் தூக்கி விசிறினான்...
“சா... சாரி.... “என்று அவள் ஏதோ சொல்ல வருமுன்
“ஐ சே கெட் அவுட்.... “ என்று கர்ஜித்தான் முகத்தில் அவ்வளவு ஆக்ரோசத்துடன்..
அதை கண்டதும் ஸ்வீட்டி பயந்து போய் வேகமாக வெளியேறினாள்...
“சே!! “என்று தரையை எட்டி உதைத்தவன் பின் தானும் உடையை மாற்றிக்கொண்டு வேகமாக கிளம்பி சென்று காரை எடுத்து வீட்டிற்கு விரட்டினான்...
அவன் மனம் இன்னும் கொதித்து கொண்டிருந்தது.. அந்த ஸ்வீட்டியின் ஆபாச படங்கள் கண் முன்னே வந்தன..
“சீ .. எத்தனை பேருடன் இருந்திருக்கிறாள்... இப்படிபட்டவளுடனா நான் கூட உல்லாசமாக இருந்திருக்கிறேன் “ என்று அருவருப்பாக இருந்தது அவனுக்கு...
“எப்படி இத்தனை நாள் இந்த சாக்கடையில் மிதந்து கொண்டிருந்தேன்?? ” என்று உடல் எல்லாம் கூசியது அவனுக்கு...
“அதோடு இந்த புகைப்படங்களை பார்க்கு முன்பே அவளிடம் ஏன் எனக்கு எந்த ஒரு உணர்ச்சியும் தோன்றவில்லை...இவ்வளவு நாள் எத்தனை பெண்களுடன் உல்லாசமாக இருந்திருக்கிறேன்... இன்று என்ன ஆனது எனக்கு?? “ என்று மீண்டும் யோசித்தவனுக்கு ஏதோ புரிவதை போல் இருந்தது....
அதை உணர்ந்ததும் திடுக்கிட்டான்...
“எல்லாம் அந்த ராட்சசியால் வந்தது…!! எப்படி இருந்த என்னையே இப்படி மாற்றி விட்டாளே!!!” என்று உள்ளுக்குள் புலம்பினான்
மீண்டும் ஆழ்ந்து யோசித்தவன் முடிவு செய்தான்
“இனி என் வாழ்வில் அந்த குட்ட ராட்சசி மட்டும்தான்...அவளை தவிர வேறு யாரையும் இனி தன்னால் ஏற்க முடியாது “ என்று புரிந்து கொண்டான்...
அவள் தான் தன் வாழ்வில் இனி எல்லாம் என்று முடிவு செய்ததால் காலையில் அவள் மேல் இருந்த கோபம் இப்பொழுது வெயில் பட்ட பனித்துளியை போல மறைந்திருந்தது...
மாறாக காலையில் அவள் துள்ளி குதித்து புயலென ஓடியது விளையாட்டாக தோன்றியது இப்பொழுது அவனுக்கு...
தன்னை கண்டு பயந்து ஓடும் சிறு குழந்தையாக தெரிந்தாள் இப்பொழுது.. அதை நினைத்து சிரித்து கொண்டான் தனக்குள்ளே....
அதே சமயம் அவளின் சவால் ஞாபகம் வந்தது...
“உன்னால முடிஞ்சா நீ சொன்ன மாதிரியே நானே விரும்பி உன் பெட்ரூமுக்கு வரனும்... நானே உன்னிடம் மயங்கி என் மனதார ஐ லவ் யூ னு சொல்லனும்....
உன்னுடைய தீண்டலுக்காக ஏங்கி நானே என்னை தரனும்... அப்படி செய்ய வை பார்க்கலாம்.. அப்ப ஒத்துக்கறேன் இந்த ஆதித்யா நிஷாந்த் தி க்ரேட்...நீ ஜெயிச்சுட்ட என்று”
அன்று ஆக்ரோசத்தில் சிவந்து துடித்த அவளின் அந்த முகம் இன்றும் அப்படியே அவன் கண் முன்னே வந்தது...அன்று அவனும் பதிலுக்கு திருப்பி கத்தினான்.... ஆனால் அதெல்லாம் இன்று விளையாட்டாக தெரிந்தது அவனுக்கு...
“மை ஸ்வீட் ராட்சசி “ என்று மெல்ல சிரித்துக் கொண்டான்... மனமெல்லாம் அவள் நினைவே!!!
பின் அவள் சவால் விட்டமாதிரி அவளை எப்படி ஜெயிப்பது??? அவளை எப்படி தன் பக்கம் இழுப்பது? என்று யோசித்தான்..
“This game is getting more interested now.. Lets continue and enjoy this game” என்று தனக்குள்ளே சிரித்து கொண்டவன் வீட்டை அடைந்ததும் நேராக அவன் அறைக்கு சென்றான்...
நேராக அவளின் அருகில் சென்றவன் அவள் உறங்குவதை போல நடிப்பது தெரிந்தும் மீண்டும் சிரித்துகொண்டே அவளின் மெட்டிக்கு முத்தமிட்டு படுத்தான்...
அவை எல்லாம் மீண்டும் ஞாபகம் வரவும் தனக்குள்ளே மீண்டும் சிரித்து கொண்டு தோட்டத்தில் அந்த ரோஜாவை கொஞ்சி கொண்டிருந்த அவன் ராட்சசியை ரசிக்க ஆரம்பித்து இருந்தான் ஆதித்யா...
Comments
Post a Comment