உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-9



அத்தியாயம்-9

தித்யாவின் ட்விட்டர் பக்கத்தை திறந்த பவித்ரா அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நின்றாள். அதில் அவன் அவர்களுடைய திருமண புகைப்படங்கள் சிலவற்றை போஸ்ட் செய்து இருந்தான்...

அதிலும் அவன் தாலி அணிவிக்கும் பொழுது அவளின் முகத்தில் தோன்றிய கலவையான உணர்ச்சிகளால் நிறைந்திருந்தது அப்படியே பிரதிபலித்தது அந்த படங்களில்..

பின் அவள் மாலை அணிவிக்கும் பொழுது அவனை பார்த்து மயங்கி நின்ற புகைப்படம் மற்றும் சில ரிசப்ஷன் படங்களும் அதில் இருந்தன...

அந்த புகைப்படங்களை பார்க்கும் பொழுது மனதினில் மழைச்சாரல் அவளுக்குள்ளே...இருவரும் விரும்பி மணந்த மாதிரியே அவ்வளவு அன்னியோன்யமாக இருந்தனர் இருவரும் அந்த படங்களில்...

ஒரு வேளை என்னை விரும்பித்தான் மணந்தானோ?? இல்லையென்றால் அவன் ஏன் திருமண படங்களை பப்ளிக் ஆ போடனும்?? “ என்று மகிழ்ந்து போனாள் சில விநாடிகள்..

பிறகு தான் கவனித்தாள் அந்த படங்களுக்கு வந்த வாழ்த்துக்களை.. அத்தனை வாழ்த்துகள் அதில் குவிந்திருந்தன....

அப்பொழுதுதான் நினைவு வந்தது பேருக்காக, ஊருக்காக , பழி வாங்க உன்னை மணந்தேன் என்று அவன் கூறியது...

“சே.. இதுவும் அவன் நாடகம்.. ஊருக்கெல்லாம் தனக்கு திருமணம் ஆகிவிட்டது என்று காமிக்கத்தான் அந்த படங்களை போஸ்ட் செய்திருக்கிறான்.. இது தெரியாமல் நான் பாட்டுக்கு என்னென்னவோ கற்பனை பண்ணிட்டேனே!! .. “என்று தன்னையே கொட்டி கொண்டாள்...

பின் அவனை பற்றி வேறு ஏதாவது செய்தி இருக்கிறதா என்று தேடிபார்த்தாள்.. முக்கியமாக அவனை பற்றி தவறான செய்தி, பெண்களிடம் எப்படி பழகுகிறான் என்று தேடினாள்..

ஆனால் எந்த ஒரு தப்பான தகவலும் இல்லை...”அவன் தப்பானவன் என்றால் ஒரு செய்தி கூடவா அவனை பற்றி இல்லாமல் போய்டும்??

ஹ்ம்ம்ம் அவன் பெரியம்மாவே சொன்னாங்களே அவனை பற்றி.. அவனின் மறுபக்கம் யாருக்கும் தெரியாமல் பார்த்துக்குவான் என்று.. அதை ஏன் அவங்களே சொல்லனும்?? .. ஒரு வேளை அவங்க தான் அவனை பற்றி தப்பா சொன்னாங்களோ??

இல்லையே அவனே சொன்னானே.. தனக்கு நிறைய கேள் ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க என்று.. அதுவும் திருமண நாள் அன்று நேர்லயே பார்த்தாளே.. அத்தனை பேர் முன்னாடியும் அவனை கட்டி பிடித்து முத்தம் கொடுத்தாளுங்களே...

சே .. இவன் நல்லவனா இல்லை கெட்டவனா னு கண்டு பிடிக்கறதுக்குள்ளயே கண்ணை கட்டும் போல.. எப்படியும் இன்னும் சில வாரங்களில் தெரிய போகுது.. அதுக்குள்ள என்னோட precious மூளையை ஏன் கசக்கனும்.. அதுவும் இவனுக்காக “ என்று அந்த கணினியை அணைத்தவள் அதை சரியாக வைத்துவிட்டு அடுத்த அறைக்கு சென்றாள்..

அங்கு ஒரு மினி தியேட்டரே இருந்தது.. இருக்கைகள் குஷன் வைத்து படுத்து கொண்டும் பார்க்க வசதியாக நவீன வசதியில் இருந்தது...

“ஒரு ஆளுக்கு ஒரு தியேட்டரா??? நல்லாதான் வாழ்க்கையை அனுபவிக்கிறான்“ என்று அடுத்த அறையை திறந்தாள்..

அது ஒரு குளியலைறை. பெரிய பாத் டப் இருந்தது.. அப்பொழுதுதான் கவனித்தாள் அவனுடைய அறையிலும் பெரிய பாத்டப் இருந்தது.. இது எதுக்கு தேவை இல்லாமல்..? ஒரு வேளை விருந்தினருக்காக இருக்கும் என்று அடுத்த அறையை திறந்தாள்..

அது ஒரு படுக்கை அறை .. அதுவும் நவீனமாக எல்லா வசதிகளும் கொண்டு இருந்தது.. ஒரு ஓரத்தில் மது பாட்டில்கள் அடுக்கி வைக்கபட்டிருந்தன.. மினி பாரே வைத்திருக்கிறான் போல..

ஒரு பெரிய ப்ரிட்ஜ், கப்போர்ட், பெரிய LED TV, ஓவன் என்று எல்லா வசதிகளும் இருந்தன ... ஒரு கப்போர்டை திறந்தவள் அதிர்ந்தாள்.. அதில் எல்லாம் வெறும் பெண்களின் உள்ளாடைகள் மற்றும் விதவிதமான் பெண்களின் ஆடைகள்.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சைசில் இருந்தது...

பக்கத்து கப்போர்டை திறந்தவள் அதில் ஆதியின் உடைகள் சில இருப்பதை கண்டாள்.. எதேச்சையாக குனிந்தவள் கட்டிலுக்கு அடியில் ஒரு பெண்ணின் உள்ளாடை அப்படியே கழட்டி விடப்பட்டிருந்ததை கண்டாள்... ஒரு சில மது கோப்பைகளும் பயன்படுத்தி விட்டு அகற்றாமல் அப்படியே விடப்பட்டிருந்தன...

அதை பார்த்ததுமே புரிந்து விட்டது... இந்த அறையும் அங்கிருந்த பெரிய பாத் டப் எல்லாம் எதற்காக என்று... அதை உணர்ந்ததுமே அவள் முகம் அருவருப்பில் சுருங்கியது...

“சீ... எத்தனை பெண்களோட கூத்தடிச்சானோ....இப்பதான் அந்த தோட்டத்து தாத்தா சொன்ன “இங்கு வர்ற பொண்ணுங்க எல்லாம் பூவை பறிச்சிருவாங்கனு” சொன்னது நினைவு வந்தது... அந்த பொண்ணுங்கனு யாரை சொல்லி இருப்பார் என்று இப்பொழுது புரிந்தது...

சீ.. வீட்டுக்கேவா கூட்டி வந்திருக்கான்?? அந்த பொண்ணுங்களோட உல்லாசமாக இருக்க தான் இவ்வளவு வசதிகளா?? .”..

அவன் பல பொண்ணுங்களோட இருக்கிற மாதிரி கற்பனை பண்ணி பார்த்தவளுக்கு குமட்டி கொண்டு வந்தது...

“சீ .. இப்படிபட்டவனிடமா நான் மயங்கி நின்றேன்.. சரியான வுமனிஸ்ட்.. முதலில் வேற ஒரு அறைக்கு போய்டனும்..அவன் அறையில் நிம்மதியா இனிமேல் தூங்க கூட முடியாது.. இனிமேல் அவன் இருக்கிற பக்கம் கூட திரும்ப கூடாது...” என்ற உறுதியோடு அவனின் வருகைக்காக காத்திருந்தாள்..

ன்று மிகவும் சோர்ந்து போய் வந்திருந்தான் ஆதித்யா..

புதிதாக ஆரம்பித்து இருந்த ப்ராஜெக்ட்டிற்காக பல மீட்டிங்கள் அட்டென்ட் பண்ண வேண்டியும் நிறைய பேரை சமாளிக்க வேண்டியும் இருந்தது... வீட்டிற்குள் வந்தவன் பவித்ராவை தேடினான்..அவள் வரவேற்பறையில் இல்லை..

நேராக அவன் ரூமுக்கு வந்தவன் அங்கும் அவள் இல்லாததால் எங்க போய்ட்டா?? என்று நினைத்து கொண்டே ரெப்ரெஸ் ஆகி கீழ வந்தான்.. டைனிங் ஹாலிலும் அவள் இல்லை.. அப்பொழுது அவன் பவித்ராவை தேடுவதை கண்டு, வள்ளி

“அம்மா முன்னாடியே சாப்பிட்டு போய்ட்டாங்க ஐயா “ என்றாள்..

அவனுக்குள் ஏதோ ஏமாற்றம்.. தான் வரும் வரை கூட அவள் காத்திருக்க வில்லையே என்று.. பின் அவனும் சாப்பிட்டு விட்டு மேலெ சென்றான்.. இப்பொழுது பவித்ரா உள்ளே வந்து அவளின் ஷோபாவில் அமர்ந்து இருந்தாள்...அவன் சாப்பிட்டு வரட்டும் என்று அவன் கண்ணில் படாமல் இருந்தாள்..

“ஹாய் பேபி.. எங்க போன இவ்வளவு நேரம்?? .. உன்னை காணாமல் தவிச்சு போய்ட்டேன் தெரியுமா” என்று கண்ணடித்தான் உதட்டில் மின்னும் குறும்புடன்...

“ரொம்பவும் அக்கறைதான் “ என்று முனுமுனுத்தவள்

நேராக அவனை பார்த்து

“எனக்கு தனி அறை வேணும்.. என்னால இங்க இருக்க முடியாது..” என்று வெறுப்பாக கூறினாள்...

“ஏன் ??? என்னாச்சு?? .. இந்த அறைக்கு என்ன??? “ என்று கண்கள் இடுங்க அவளை பார்த்து கேட்டான்

“கண்டவளுங்களும் இங்க வந்து தங்கி இருந்திருப்பாளுங்க. எனக்கு இங்க இருக்க பிடிக்கல... எனக்கு தனி அறை வேண்டும்..“ என்றாள் அவனை முறைத்தவாறு..

அதற்குள் ஆதி யூகித்திருந்தான் அவள் அந்த அறையை பார்த்திருக்கிறாள் என்று...

“ஹ்ம்ம்ம். நீ சொன்ன மாதிரி கண்டவளுங்களுக்கெல்லாம் இங்க அனுமதியில்லை பேபி... அந்த அறையோட மட்டும் தான்...இந்த அறைக்குள் என்னை தவிர வேற யாரும் வரமுடியாது.. இங்க இது வரை எந்த பொண்ணும் வந்ததில்லை.. நீ தான் பர்ஸ்ட் “ என்று கண்ணடித்தான் மீண்டும் உதட்டோரம் குறும்பு மின்ன...

“ஆமா மெச்சிக்கனும்... “ என்று முனகியவள்

“எனக்கு இங்க பிடிக்கலை.. எனக்கு பிரைவசி வேணும்” என்று வேறொரு காரணத்தை சொன்னாள்..

“பிரைவசியா?? ... நான் காலையில கிளம்பி போனதுக்கப்புறம் நீ தனியா தான இருக்க... அப்புறம் என்ன?? எங்க என் கூட இருந்தால் உன் மனது என் பக்கம் சாய்ந்து விடும் என்று பயமா இருக்கா?? ” என்றான் குறும்பாக...

“பயமா?? ... எனக்கா?? ... அதெல்லாம் ஒன்னுமில்லை...” என்று திருப்பியவள் அடுத்து என்ன சொல்லி தப்பிப்பது என்று அவசரமாக யோசித்தாள்...

உண்மையிலயே எங்க அவன் தன்னை நெருங்கி விடுவானோ என்று பயந்து தான் தனி அறையை கேட்டது.. ஆனால் அவள் பயந்ததை எப்படி அவனிடம் ஒத்துகொள்வது என்று அவளின் தன்மானம் தலை தூக்க அடுத்த காரணத்தை யோசித்தாள்....

“என்னால் இப்படி ட்ரெஸ் பண்ணிகிட்டு தூங்க முடியாது.. நான் ப்ரீயா இருக்கனும் “ என்றாள் அடுத்ததாக...

“ஓ ஸ்யூர்.. நீ எதுவும் போடலைனாலும் எனக்கு ஓகே தான். இட்ஸ் யுவர் விஷ்” என்றான் சிரித்தவாரே

“சீ... புத்தியை பார் “ என்று உதட்டை சுளித்தாள்..

அவளின் சீ யில் கவிழ்ந்தவன் அவள் உதட்டு சுளிப்பில் இன்னும் கிறங்கி போனான்....

ஆனாலும் தன்னை கட்டு படுத்தி கொண்டு “நீ தான சொன்ன ப்ரீரீரீரீஆஆஆ இருக்கணும் என்று.. “ என்று மீண்டும் குறும்பாக சிரித்தான்..

“ஐயோ... ப்ரீ னா உங்கள மாதிரி இல்லை... நான் நைட்டியில் தான் தூங்குவேன்” என்றாள்..

“ஓ.. ஓகே அப்ப அப்படியே தூங்கு.. எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை...

ஓ.. உன்னை நைட்டியில் பார்த்ததும் உன் மேல பாய்ஞ்சிருவேனு பயமா இருக்க?? டோன்ட் ஒரி பேபி... நீ போட்ட சவால் ஞாபகம் இருக்கு இல்லை.. நீயா என்னை தேடி வரும் வரை நான் உன்னை தொட மாட்டேன்“ என்றான் அதே குறும்புடன்

“ஹ்ம்ம்ம் அப்புறம் எதுவும் வித்தியாசமா பார்க்க கூடாது .. ” என்று தன் ஆட்காட்டி விரலை நீட்டி மிரட்டியவள்

ஒரு நைட்டியை எடுத்து கொண்டு குளியலறைக்குள் சென்றாள்..

அவனே நெருங்க மாட்டேன் என்று சொன்னதுக்கப்புறம் கொஞ்சம் தைரியம் வந்தது பவித்ராவுக்கு..

“இரண்டு நாளாக இங்கு தான் தூங்கினாள்.. அவன் சொன்ன மாதிரி எதுவும் முயற்சிக்கலையே..அதனால எதுவும் செய்ய மாட்டான் “என்று தன்னை தானே தேற்றி கொண்டு நைட்டிக்கு மாறினாள்

ஆதித்யா கட்டிலில் அமர்ந்து மொபைலை நோண்டி கொண்டிருந்தான்...

பவித்ரா கதவை திறந்துகொண்டு வரவும் எதேச்சையாக அவன் கண்கள் அங்கு சென்றன..

இதுவரை புடவையிலும் சுடிதாரிலும் பார்த்து இருந்தவன் முதன் முதலாக நைட்டியில் பார்க்கவும் அதுவும் மேல சால் மாதிரி எதுவும் போடாததால் அவளின் பெண்மை அதுவரை அவனுள்ளே உறங்கி கொண்டிருந்த அவனின் ஆண்மையை தட்டி எழுப்பியது...

அவளை அந்த மாதிரி பார்க்கவும் நிலை தடுமாறித்தான் போனான் ஆதித்யா..

ஆனால் அவளோ இவனின் பக்கம் கூட திரும்பாமல் தன் ஷோபாவிற்கு வேகமாக சென்று படுத்தவள் போர்வையை இழுத்து போர்த்தி கொண்டாள்..

என்னதான் பயம் இல்லாத மாதிரி காட்டி கொண்டாலும் அவளுக்குள் ஒரு வித அச்சம் இருந்து கொண்டே இருந்தது... எங்கே தன்னை நெருங்கி விடுவானோ என்று ...

போர்வையை இழுத்து மூடியவள் மெல்ல அவனிடம் எதுவும் அசைவு தெரிகிறதா என்று கூர்ந்து கவனித்தாள்.. அவனிடமிருந்து எந்த சத்தமும் வராததால்

“பரவாயில்லை கொஞ்சம் நல்லவன் தான் போல... “ என்று மகிழ்ந்தாள்..

அவளின் மகிழ்ச்சி காலையில் பறி போகும் என்று அவள் அறிய வில்லை...

ஆதிக்கோ இன்னும் அவளை அப்படி கண்ட மயக்கத்தில் இருந்து மீள முடியாமல் தவித்து போய் அமர்ந்து இருந்தான்... மெல்ல திரும்பி அவளை பார்த்தான்... தன் முகம் தெரிய கூடாது என்று இழுத்து மூடியவள் கீழே கால் தெரிதை கவனிக்க வில்லை...

அவனின் பார்வை அவளின் காலை தழுவியது...

தந்தம் போல வெள்ளை வெளேரென்ற மெல்லிய வழுவழுப்பான அவளின் இரண்டு கால்களும், அதன் கணுக்காலில் அவள் அணிந்திருந்த மெல்லிய கொலுசும், அவளின் கால்விரலில் அவன் அணிவித்திருந்த மெட்டியும் அவனை பார்த்து குறும்பாக கண் சிமிட்டி அவனை அவள் அருகில் அழைத்தன..

அந்த மெட்டியை கண்டதும் ஆதிக்கு அதை அவன் போட்ட நிமிடம் நினைவு வந்தது...

திருமணத்தன்று ஐயர் அந்த மெட்டியை கொடுத்து அவளின் காலை பிடித்து போட சொன்னார்.. இப்படி ஒரு சடங்கு இருப்பது அவனுக்கு தெரியாது

“என்னது?? நான் இவள் காலை பிடிக்கனுமா?? அதெல்லாம் முடியாது..” என்று மனது முரண்டினாலும் அத்தனை பேர் முன்னாடியும் மறுத்து கூறவும் முடியவில்லை

அந்த மெட்டியை வாங்கியவன் அருகில் குனிந்து அவளின் காலை மெல்ல பற்றினான்..

அவளின் அந்த மெல்லிய வழுவழுப்பான கால்களை தொட்டதும் அவனுக்குள் மின்சார தாக்கம்... மெட்டியை அவளுக்கு வலிக்காமல் போட்டவன் அவனே எதிர்பார்க்காமல் குனிந்து அவளின் பாதங்களுக்கு முத்தமிட்டிருந்தான்...

“ஹோ “ என்று அனைவரும் கத்தவும் தான் தன் செயல் புரிந்தது..அவனிடம் மெல்லிய வெட்கம் தோன்றியது. நிமிர்ந்து அவளின் முகத்தை நோக்கியவன் அவளும் கன்னங்கள் சிவக்க அந்த நொடியின் இன்பத்தை அனுபவித்து கொண்டிருந்தாள்....

அந்த நொடியை இப்பொழுது நினைக்கும் பொழுதும் உடல் சிலிர்த்தது அவனுக்கு...அவளை அப்படியே அள்ளி கொள்ள கைகள் ஏங்கியது.. ஆனாலும் அவன் வாக்கு கொடுத்திருக்கிறானே!! அதை காப்பாற்றியாகனும்.. “ என்று தன்னை கட்டு படுத்தி கொண்டவன்

“ராட்சசி... ஏன்டி இப்படி என்னை படுத்தற??

போதும்...இதுவரை பொறுத்தது போதும்.. இனிமேல் காத்திருக்க முடியாது... இந்த ஆட்டத்தை எல்லாம் நிறுத்தி விட்டு அவளோட சேர்ந்து வாழலாம்” என்றது ஒரு மனம். ஆனால் இன்னோரு மனமோ

“ம்ஹூம்.. ஆதித்யா நீ இதுவரைக்கும் எதுக்கும் யார்கிட்டயும் தோற்றதில்லை... போயும் போயும் இவள் கிட்ட தோற்கிறதா ? ” என்று அவனுக்கு கொம்பு சீவியது... என்ன செய்வது என்று தெரியாமல் தலையை பிடித்து கொண்டு அமர்ந்தான்...

இனி அவள் பக்கமே பார்க்க கூடாது என்று எண்ணியவன் எழுந்து பால்கனிக்கு சென்றான்... அங்கிருந்த நிலவிலும் அவள் முகம் வந்து சிரித்தது...

“இது எப்படி??? எங்க பார்த்தாலும் அவள் முகமே??? “

“இம்சை பிடிச்சவ.. சரியா தூங்கவே விட மாட்டேங்கிறாளே ! ” என்று கால்கள் வலிக்க நடந்தவன் நீண்ட நேரம் கழித்து வந்து படுத்தான் அவளின் பக்கம் திரும்பாமல்....

அடுத்த நாள் அவனின் ராட்சசி அவனை இன்னும் படுத்த போவதை அறியாமல் உறங்க முயன்றான்...

காலையில் கண் விழித்த பவித்ரா வழக்கம் போல ஆதி அங்கு இல்லாததால் நிம்மதி அடைந்தாள்..

“ஆனாலும் வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன் ங்கிற மாதிரி இப்படி காலைலயே எழுந்து ஆபிஸ்க்கு கிளம்பிடறானே!! தொழில் னா அவ்வளவு பைத்தியம் போல.. எப்படியோ போய் தொலையட்டும் என் கண் முன்னால் இல்லாமல் இருந்தால் சரி “

என்று நினைத்து கொண்டே குளியலறைக்கு சென்றவள் அன்று வெள்ளிக்கிழமை என்பது ஞாபகம் வரவும் தலைக்கு குளித்து இன்று கோயிலுக்கு போய்ட்டு அப்படியே ஒரு மொபைல் வாங்கிட்டு வரணும் என்று நினைத்தவாறு வெளியில் வந்தாள்..

வெள்ளிக்கிழமை னா ஸ்பெஷல் பவித்ராவிற்கு..

ஒவ்வொரு வெள்ளிகிழமையும் தலைக்கு குளித்து புடவை கட்டி அவள் வீட்டில் மலரும் மல்லிகையில் கொஞ்சமாக பறித்து தன் அன்னை கட்டி தரும் அந்த பூவை தலையில் வைத்து கொண்டு கோயிலுக்கு செல்வாள்..

சாமி தரிசினம் முடிந்து சிறிது நேரம் அங்கு அமர்ந்து விட்டு பிறகு தான் அலுவலகத்திற்கு செல்வாள்..

இன்று வெள்ளிக்கிழமை என்பதால் குளித்துவிட்டு வெளியில் வந்தவள் ஒரு புடவையை எடுத்துகொண்டு அதை கட்ட ஆரம்பித்திருந்தாள்... ஆதி அங்கு இல்லை என்ற தைரியத்திலும் அந்த அறைக்கு யாரும் வர மாட்டாங்க என்று ஆதி சொன்னதாலயும் அறைக்கதவு தாழிட்டிருக்கிறதா என்று சரி பார்க்க மறந்திருந்தாள்.. மேல ப்ளவுஸ் அணிந்து அப்பொழுது தான் புடவையை சுத்த ஆரம்பித்திருந்தாள்..

திடீரென்று அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த ஆதி அவள் நின்ற கோலத்தை கண்டு அசந்து கிறங்கி நின்றான்.....

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!