உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-12
அத்தியாயம்-12
நேற்றைய குழப்பத்தால் தேங்கியிருந்த வேலையில் பிசியாக இருந்தான் ஆதித்யா...மதிய வேளையில் அவனுடைய அலுவலக அறையில் அமர்ந்து பைல்களை ஆராய்ந்து கொண்டிருந்தான் ... அவனிடம் வந்த வள்ளி,
“ஐயா!! இன்று மதியம் சமையலுக்கு என்ன செய்யட்டுங்க??? “ என்று நின்றாள்..
எப்பொழுதும் விடுமுறை நாட்களில் மதிய சாப்பாடு அவனை கேட்டு செய்வது வழக்கம்.. இந்த இரண்டு நாட்கள் தான் ஐயா வீட்டில் சாப்பிடுவது. அவருக்கு பிடித்ததாக செய்ய வேண்டும் என்பது வள்ளிக்கு... அதன் படி இன்று என்ன செய்யலாம் என்று அவனிடம் கேட்டு நின்றாள்...
அவன் ஏதோ மெனுவை சொல்ல வாயெடுக்கவும்
“சின்னம்மா கிட்ட கேட்டேங்க.. அவங்க அவங்களுக்கு தெரியாது. உங்களை கேட்டுக்க சொன்னாங்க” என்று வள்ளி தொடரவும் அவன் தான் சொல்ல வந்த மெனுவை நிறுத்தினான்...
“சரி வள்ளி.. நீ போய் பவிதராவை வர சொல்” என்றான்...
நேற்று நடந்த நிகழ்வுக்கு பிறகு அவன் முன்னே வராமல் கண்ணாமூச்சி ஆடி கொண்டிருந்தவள் வள்ளி கூப்பிடவும் மறுக்க முடியாமல்
“இவன் எதுக்கு இப்ப என்னை கூப்பிடறான்” என்று முனகி கொண்டே அவனுடைய அலுவலக அறைக்குள்ளே வந்தாள்..
அவளை கண்டதும் முகத்தை கடுமையாக்கி கொண்டு
“என்ன?? மேடம்க்கு ஒரு சமையலுக்கு மெனுகூட சொல்ல முடியாதா?? “ என்றான் கோபமாக
“ஹ்ம்ம்ம் நான் எதுக்கு சொல்லனும்?? .. நான் என்ன இந்த வீட்டு எஜமானியா??? பேருக்காக கல்யாணம் பண்ணிகிட்டதுக்கு எல்லாம் வீட்டு பொறுப்பை எடுத்துக்கனுமா? “ என்று அவளும் கோபமாக திருப்பினாள்...
“ஏய்... பேருக்காக கல்யாணம்ங்கிறது நம்ம ரெண்டு பேருக்குள்ள மட்டும்தான்.. மத்தவங்களுக்கு நீ என் மனைவி.. அது ஞாபகமிருக்கட்டும்..
வேலைக்காரங்களுக்கு நீ இந்த வீட்டு எஜமானிதான்.. “ என்று உறுமினான்
“அப்படியா??? “ என்று நக்கலாக கேட்டாள்..
“ஹ்ம்ம்ம் ஆமாம்.. இனிமேல் இந்த வீட்டு பொறுப்பு உன்னோடது.. புரிஞ்சுதா??”
“சரிங்க எஜமான்... பொறுப்புனா எந்த மாதிரி...? கொஞ்சம் விளக்கறீங்களா??? “ என்றாள் வாயில் கை வைத்து பவ்யமாக ஆனால் இதழில் நக்கல் இழையோட..
“ஹ்ம்ம்ம் முன்ன பின்ன இந்த மாதிரி வீட்டை பார்த்து இருந்தால் தெரியும்.... என்ன செய்யனும் என்று” என்று அவளுக்கு கேட்குமாறு முனகியவன்
“சமையல் மெனு சொல்றது ,வேலைக்காரங்களுக்கு என்னென்ன தேவையோ அதை செய்வது.. இந்த மாதிரி... இனிமேல் எல்லாம் பொறுப்பையும் உன்கிட்ட ஒப்படைக்கிறேன்...”
“ஆமாம்... இவர் பெரிய மோடி ஜி.. அப்படியே இந்த நாட்டோட ஹோம் மினிஸ்டர் பதவியை தூக்கி என்கிட்ட ஒப்படைக்கிறார்... “என்று முனகியவள்
“அப்படினா இந்த வீட்டில நான் சொல்றது தான் எல்லாரும் கேட்பாங்களா எஜமான் ?? “ என்றாள் மீண்டும் நக்கலாக
“ஆமாம்.. நான் எல்லார்கிட்டயும் சொல்லிடறேன்.. இனிமேல் எதுனாலும் உன்னை கேட்டு செய்ய சொல்லி... மேனேஜர் சுரேஷ் யையும் இனிமேல் எல்லாம் உன்னையே கேட்டு செய்ய சொல்றேன்... “
“ஹ்ம்ம்ம்ம் அப்ப நீங்களும் கூடத்தான் நான் சொல்றதை கேட்கனும்” என்று அவனுக்கு செக் வைத்தாள்..
“நானா?? “ என்று முழித்தான் ஆதித்யா..
“ஆமாம்.. நீங்களும் இந்த வீட்டில ஒரு மெம்பர் தான... இங்க இருக்கிற வரைக்கும் நான் சொல்ற ரூல்சை எல்லாம் பாலோ பண்ணனும். என்ன டீலா??? “என்று தன் புருவத்தை உயர்த்தினாள்...
அவளின் அந்த செயல் அவனுக்கு சுவாரசியமாக இருந்தது....மனதிற்குள அதை ரசித்துக் கொண்டே
“அப்படி என்னதான் சொல்றானு பார்க்கலாம்” என்று நினைத்தவன்
“சரி சொல்லு. பார்க்கலாம். “ என்றான் ஒரு ஆர்வத்துடன்
“ஹ்ம்ம்ம் இனிமேல் இரவு 10... இல்லை மேக்சிமம் 11 மணிக்குள்ள வீட்டிற்கு வந்திடனும்... அப்புறம் வீட்டுக்கு வரும் பொழுது குடிச்சிட்டு வரக்கூடாது... வெளியில எப்படி வேணா ஆட்டம் போடுங்க.. ஆனால் வீட்டுக்குள்ள வரும்பொழுது எந்த ஒரு இதுவும் இருக்ககூடாது ஒத்துக்கறீங்களா?? “ என்றாள்..
அவன் நேற்று இரவு நீண்ட நேரம் ஆகியும் திரும்பாதது மற்றும் குடித்து விட்டு வந்தது அவளுக்கு கஷ்டமாக இருந்தது... இதை எப்படி நிறுத்துவது என்று யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு அவனே அதற்கான ஒரு சந்தர்ப்பத்தை கொடுக்கவும் அப்படியே பிடித்துக்கொண்டாள்...
“ஹேய்... என்னையே கட்டுபடுத்தறியா??? இந்த ஆதித்யா யாருக்கும் அடங்கமாட்டான்..” என்று கர்ஜித்தான் ஆதித்யா
“ஷ் அப்பா.... உன்னை யாரு அடங்க சொன்னது... நீ எப்படி வேணா ஆட்டம் போடு வீட்டுக்கு வெளில.. வீட்டுக்குள்ள வந்தா இப்படித்தான் இருக்கனும்.. ஒத்துக்கறதா இருந்தா நான் இந்த ஹோம் மினிஸ்டர் பதவியை ஏத்துக்கறேன்..
இல்லையா நீ அந்த பதவியை வேற எவளுக்கோ கொடு...எனக்கு வேண்டாம்.... என்ன டீலா?? நோ டீலா?? “ என்று ஒருமைக்கு தாவியவள் இடுப்பில் கை வைத்து அவனை மிரட்டினாள்...
அவன் மனமோ அவளின் செய்கையை கண்டு கோபப்படாமல் அவளின் செயலை ரசித்தது இப்பொழுதும்...
“சரி சரி... கேட்டு தொலைக்கிறேன்.. உனக்காக இனிமேல் சீக்கிரம் வர்ரேன்” என்று உனக்காக என்பதை அழுத்தி சொன்னான்...
“ப்ராமிஸ் ? ” என்று நண்பர்களிடம் நீட்டுவதை போல கையை நீட்டியிருந்தாள் அவன் முன்னே...
“ஹ்ம்ம்ம் ப்ராமிஸ் “ என்று அவளின் கையின் மேல் தன் கையை வைத்தவன் அவளின் கையின் மென்மையால் அவளின் கையை விட மனமில்லாமல் மெல்ல அழுத்தினான் உதட்டில் குறும்பு மின்ன...
அவனின் கையில் முதலில் தெரிந்த அழுத்தத்திற்கும் பின் மாறியதையும் உணர்ந்தவள் வெடுக்கென்று கையை உருவிகொண்டாள்
அவனும் சிரித்து கொண்டே
“சரி சரி .. உன் பொறுப்பை மதிய சமையலில் இருந்தே ஆரம்பி.. வள்ளிக்கிட்ட என்ன செய்யனுமோ அந்த மெனுவை சொல் “ என்றான்..
“யெஸ் பாஸ்... “ என்றாள் அவளும் கிண்டலாக
“என்னது பாஸா??? “ என்று முழித்தான்..
“யெஸ் பாஸ்.. எனக்கு இவ்வளவு பெரிய பதவியை கொடுத்து இருக்கீங்க... இனிமேல் உங்களை பாஸ் னு தான் கூப்பிட போறேன்.. ” என்று கன்னம் குழிய சிரித்தாள் பவித்ரா..
அவளின் அந்த சிரிப்பில் அப்படியே மயங்கி நின்றான்.. இதுவரை அவளின் இதழ்களிலும், அவள் கால் பாதத்திலும் மயங்கி இருந்தவன் அவள் கன்னக் குழியையும் முதன் முறையாகக் கண்டு அதிலும் விழுந்திருந்தான்..
ஆம் பவித்ரா அவன் முன்னே சிரிப்பது இதுவே முதல் முறை...
“என்ன பாஸ்.. கண்ணை திறந்து வைத்துகொண்டு தூங்கறீங்க?? “ என்று அவன் முன்னே சொடக்கு போட்டாள்...
தன்னை சமாளித்தவன்
“நோ பேபி... இந்த பாஸ் நல்லா இல்லை... எனக்கு வேணும்னா வேற ஏதாது பேர் வைத்து கூப்பிடு “ என்று சிரித்தான் குறும்பாக...
“ஹா ஹா ஹா.. அதெல்லாம் நீங்க என் சவாலில் ஜெயித்த பிறகுதான்.. “ என்று கண்ணடித்தாள் அவளும் குறும்பாக...
“சவாலா??? என்ன சவால் “ என்று புரியாதவனைப் போல கேட்டான்
“என்ன பாஸ்... அதுக்குள்ள மறந்திட்டீங்களா??? சரிதான்... உங்களை எல்லாம் எப்படி பெரிய பிசினஸ்மேன் னு சொல்றாங்களோ??? ஒருவேளை நீங்களாதான் அப்படி சொல்லிக்கிறீங்களா??? ஆதித்யா நிஷாந்த் தி கிரேட்னு??
சரி போனா போகுது... நானே ஞாபக படுத்தறேன்... நம்ம சவால் என்னன்னா??? நீங்க
என் மனதார உங்களை பார்த்து ஐ லவ் யூ னு என்னை சொல்ல வைக்கனும்...
என்ன இப்ப ஞாபகம் வந்திருச்சா??? அன்னைக்கு என்னவோ சிங்கம் மாதிரி அப்படி உறுமுனீங்க?? அதுக்குள்ள மறந்திட்டீங்களே !!” என்று நக்கலடித்தாள் பவித்ரா...
அவளின் அந்த பாவனையை ரசித்தவன்
“ஹா ஹா ஹா... எனக்கு எப்படி மறக்கும் பேபி?? .. எதையும் அவ்வளவு சீக்கிரம் மறக்க மாட்டான் இந்த ஆதித்யா....”
“பின்ன ஏன் தெரியாத மாதிரி நடித்தான்??? ” என்று முழித்தாள்...
“பின்ன ஏன் தெரியாத மாதிரி நடித்தேனு யோசிக்கிறியா....அது உன் வாயால ஐ லவ் யூ னு சொல்ல வைக்கத்தான்” என்று கண் சிமிட்டி சிரித்தான் மீண்டும்...
“ஆங்.... நான் எப்ப ஐ லவ் யூ னு சொன்னேன்?? “
“ஹா ஹா ஹா.... இதோ இப்பக்கூட சொன்னியே... சொல்லவே மாட்டேனுட்டு வார்த்தைக்கு வார்த்தை என்னை பார்த்து ஐ லவ் யூ னு சொல்றியே செல்லம்...” என்று வெண் பற்கள் தெரிய ரசித்து சிரித்தான் ஆதி..
“ஹ்ம்ம்ம் இல்லை... இது தப்பாட்டம்... சீட்டிங் “ என்று முறைத்தாள் பவித்ரா...
“ஹா ஹா ஹா... எப்படியோ உன் இதழ்கள் என்னை பார்த்து ஐ லவ் யூ னு சொல்லிருச்சு... உன் இதயமும் சீக்கிரம் ஐ லவ் யூ னு சொல்லும்... சொல்ல வைப்பான் இந்த ஆதித்யா... அதுவரைக்கும் உன்னை விட மாட்டேன் “ என்று கண்கள் இடுங்க கூறினான்...
“ஹ்ம்ம்ம்ம்ம் அதையும் பார்க்கலாம்....நீங்க வீணா தோற்கத்தான் போறீங்க...”
“யாரு?? நானா??? இந்த ஆதித்யா இதுவரை எதிலயும் தோற்றதில்லை...இனிமேல் தோற்கவும் மாட்டான்” என்று கர்ஜித்தான்..
“ஹ்ம்ம்ம்ம் அதே மாதிரிதான் இந்த பவித்ராவும்... யார்கிட்டயும் எதுக்காகவும் தோற்க மாட்டாள்.. நீங்க ஜெயிக்கறீங்களா?? இல்லை நான் ஜெயிக்கறனானு பார்க்கலாம் “என்று அவளும் திருப்பினாள்..
“பார்க்காலாம்...பார்க்கலாம்... “
“ஹேய்.. இரு இரு.. நீ ஐ லவ் யூ னு சொல்லிட்டா நான் ஜெயிச்சேன்.. ஆமா ... நீ எப்படி ஜெயிச்ச னு சொல்றது?? “ என்றான்..
“ஆங்.... அதானே.. நீங்க ஜெயிக்க மட்டும் தான் டெர்ம்ஸ் அன்ட் கன்டிசன்ஸ் பிக்ஸ் பண்ணினோம்.. ... ஹ்ம்ம்ம் நான் எப்படி ஜெயிக்கறதாம்??.. இத சொல்லலையே முன்னாடி....இப்ப என்ன செய்யலாம்??? “ என்று தன் கன்னத்தில் கை வைத்து சில விநாடிகள் யோசித்தாள்....
“சரி ... இப்படி வச்சுக்கலாம்.... நான் எப்படி ஐ.... “ ஐ லவ் யூ னு சொல்ல வந்திட்டு அவனின் குறும்பு பார்வையால் பாதியிலயே முழுங்கி கொண்டாள்..
“நீங்க என்னை விரும்ப வைக்கிற மாதிரி, நீங்க என்னை மனதார மனைவியா ஏத்துக்கனும்.. அந்த மாதிரி நான் உங்களை ஏத்துக்க வைப்பேன்.. யார் முதல்ல அப்படி செய்ய வைக்கிறாங்களோ அவங்களே இந்த கேமில் ஜெயிச்சாங்க... என்ன டீலா?? நோ டீலா?? “ என்று புருவத்தை உயர்த்தினாள் மிடுக்கோடு...
அதை கேட்டதும்
“ஐயயோ!!! ஏ குட்ட லூசு ... அவன் தான் ஏற்கனவே உன் பக்கம் சாஞ்சுட்டான்... இதுல நீ என்ன அவனை பெருசா சாய வைக்கிறியாம்???... அப்ப இந்த கேமோட ரிசல்ட் இப்பயே தெரிஞ்சிடுச்சு...
முடிவு தெரிஞ்ச விளையாட்டைப் போய் இந்த இரண்டு லூசுங்களும் விளையாடப் போகுதுங்க... அதை நாங்க உடகார்ந்து வேடிக்கை பார்க்கனுமாம்... என்ன கொடுமை சார் இது “
“ஹ்ம்ம்ம் இந்த ஆதித்யா எப்படியும் தோற்கத்தான் போறான்... அட்லீஸ்ட் நம்ம ஆளு கவிழ்ந்ததை அவகிட்ட சொல்லாமலயாவது கொஞ்ச நாள் ஓட்டனும்.. பார்க்கலாம் நம்ம ஹீரோ இந்த குட்டச்சியை ஐ லவ் யூ சொல் லவைக்கிறானா னு பார்க்கலாம்... எப்படியும் நம்ம ஆளுதான் ஜெயிக்கனும்” என்று புலம்பியது அவன் மனஸ்..
பவித்ரா இடுப்பில் கை வைத்து நின்று கொண்டிருந்த தோற்றத்தை கண்டு மயங்கியவன்
“ஓ... ஸ்யூர் பேபி... டீல்...வெரி இன்ட்ரெஸ்டிங் கேம் தான்... ஐ ம் ரெடி “ என்று கட்டை விரலை உயர்த்தி காட்டி உல்லாசமாக சிரித்தான்
அவனின் அந்த வசீகர சிரிப்பை கண்டு மயங்குவது இப்பொழுது பவித்ராவின் முறையானது...
அவனையே ரசித்து பார்த்து கொண்டிருந்தாள்.. அவளின் அந்த மயங்கிய தோற்றம் அவனை இழுக்க எட்டி அவள் கையை பற்றினான்.. அதற்குள் சுதாரித்து கொண்ட பவித்ரா அவனின் கைக்கு எட்டாமல் குனிந்து நழுவினாள்...
பின் தன் ஆட் காட்டி விரலை இரண்டு பக்கமும் ஆட்டி
“நம்ம கேம் முடியறவரைக்கும் நோ டச்சிங் பாஸ்..” என்றாள் குறும்பாக....
“ஹ்ம்ம்ம் அது கொஞ்சம் கஷ்டம் தான் “என்று மனதிற்குள் முனகியவன்
சிரித்து கொண்டே
“ஓகே பேபி... கம் டு அவர் இனிசியல் டிஸ்கஸன்.... சோ. இந்த வீட்டை இனிமேல் நீதான் பார்த்துக்கணும்.. உன் பொறுப்பை மதியம் சமையலில் இருந்து ஆரம்பி “
“யெஸ் பாஸ்... அஸ் பெர் யுவர் ஆர்டர் ...” என்று ஆங்கிலேயர் பாணியில் அவன் முன்னே இடைவரை குனிந்து வாயில் கை வைத்து சொல்லி சிரித்தவள்
“நீங்க உங்க வேலையை கன்டினியூ பண்ணுங்க...நான் இப்பவே என் வேலையை ஆரம்பிக்கறேன்.. “ என்று சிரித்துக்கொண்டே ஓடி மறைந்தாள் பவித்ரா.. ...
“ஹ ஹா ஹா .. இவ இன்னும் வளரவே இல்லையோ ?? ” என்று சத்தமாக சிரித்து கொண்டவன் தன் வேலையை தொடர்ந்தான் உற்சாகமாக...
ஆதித்யாவின் அறையை விட்டு ஓடி வந்தவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது..
நேற்று காலையில் அப்படி நடந்துகிட்டவனிடம் எப்படி தன்னால் இப்படி இலகுவாக சிரித்து பேச முடிகிறது என்று வியப்பாக இருந்தது...
ஹ்ம்ம்ம் தான் இனிமேல் எதற்கும் கலங்ககூடாது.. எதையும் சமாளிக்க வேண்டும் என்று முடிவு செய்ததே அவனிடம் இப்படி இலகுவாக பேச முடிந்தது என்று முடிவு செய்தாள்...
இதுதான் அவளின் குணம்.. எதையும் விளையாட்டாக எடுத்து கொள்வாள்.. கடந்த நாட்களில் நடந்த சம்பவங்களால் தன் இயல்பான குணத்தையே மறந்து இருந்தாள்... இப்பொழுது அந்த குணம் மீண்டும் தலை தூக்க ஆரம்பித்தது.. இனிமேல் இப்படித்தான் இருக்கனும்..
“Take it easy… Don’t worry.. Be Happy” பாலிசி தான் என்று சிரித்துகொண்டே சமையல் அறைக்கு சென்றாள்.. பின் ஆதித்யாவிற்கு என்ன பிடிக்கும் என்று வள்ளியிடம் கேட்டு தெரிந்து கொண்டாள்...வள்ளியிடம் பேசிக்கொண்டிருக்கும்பொழுது அவளுக்குள் மின்னல் அடித்தது... அவளின் முகம் பிரகாசமானது...
“இருடா.. நேற்று என்னை ஓட விட்ட இல்ல.. உன்னை இன்று எப்படி ஓட வைக்கிறேன் பார் “ என்று மனதிற்குள் சிரித்து கொண்டே அவசரமாக ஒரு திட்டத்தை தீட்டினாள்..
“ஹ்ம்ம்ம் அப்புறம் எப்படி இவனை என் வழிக்கு கொண்டு வருவது?? “ என்று யோசித்தவள்
“முதலில் அவன் வெளியில் பொண்ணுங்க கூட சுத்தறதை நிறுத்தனும்... அப்பத்தான் என் பக்கம் வருவான்... எப்படி நிறுத்துவது??? “ என்று மீண்டும் யோசித்தாள்...
“எத்தனையோ தமிழ் படம் பார்த்திருக்கோம்.. அதில இருந்து ஏதாவது டிப்ஸ் கிடைக்காமலயா போய்டும் ?? ....
சரி அது நம்ம நீண்ட கால திட்டம் (Long term plan)… அத பின்னாடி பார்க்கலாம்.. இப்போதைக்கு நம்ம குறுகிய கால திட்டத்தை நிறைவேற்றி என்னை நேற்று ஓட விட்ட மாதிரி இன்னைக்கு அவனை ஓட வைக்கனும்” என்று சிரித்துக்கொண்டே தன் திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்தாள்....
பவித்ராவின் குறுகிய கால திட்டம் என்ன??? அது வொர்க அவுட் ஆனதா??? ஏற்கனவே அவள் பக்கம் சாய்ந்த நம் நாயகனை திறுத்துவதாக எண்ணி நம்ம பவிக்குட்டி என்ன வீர தீர செயல்களை செய்யப்போகிறாள் பார்க்கலாம்..தொடர்ந்து படியுங்கள்..

Comments
Post a Comment