உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-14






அத்தியாயம்-14

மாலை 4 மணி அளவில் பவித்ரா வரவேற்பறையில் அமர்ந்து டீ வி சேனல் ஒவ்வொன்றாக மாற்றி வைத்துக் கொண்டிருந்தாள்... சாப்பிட்ட உடன் மதியம் தூங்கும் பழக்கம் இல்லாததால் ரொம்ப போர் அடித்தது அவளுக்கு...

டீ வி யிலும் எதுவும் உருப்படியாக இல்லாததால் ஒவ்வொரு சேனலாக மாற்றிக்கொண்டிருந்தாள்... அவள் கைகள் மட்டும் ரிமோட்டை அழுத்திக் கொண்டிருக்க அவள் மனமோ ஆதியை சுற்றியே வந்தது...

அவனிடம் சொன்ன சவாலில் எப்படி ஜெயிப்பது??? எப்படி அவனை தன் மனைவியாக ஏற்க வைப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தாள்... எப்படி அவன் வெளித்தொடர்பை கட் பண்ணுவது என்று தீவிரமக யோசித்துக் கொண்டிருந்தாள்...

அவளின் அந்த தீவிர யோசனையில் ப்ரேம் உள்ளே வந்ததை கவனிக்கவில்லை... திருமணம் முடிந்து ஒரு வாரம் கழித்து ஆதியைக் காண அவன் வீட்டிற்கு வந்திருந்தான் ப்ரேம்...

உள்ளே வந்தவன் பவித்ரா வரவேற்பறையில் அமர்ந்து இருக்கவும் அவள் அருகில் சென்று

“ஹலோ சிஸ்டர்.. எப்படி இருக்கீங்க?? “ என்று புன்னகைத்தான்... அவனை யாரென்று தெரியாமல் முதலில் முழித்தாலும் பின் அவனை அடையாளம் கண்டு கொண்டவள்

“ஐம் பைன் ப்ரதர்.. நீங்க எப்படி இருக்கிங்க?? “ என்று சிரித்தாள் அவளும்...

“ஹ்ம்ம்ம் நான் நல்லா இருக்கேன் சிஸ்டர்... ஆமா எங்க நம்ம ஹீரோவை காணோம்?? “ என்றான் சுற்றிலும் பார்த்துவிட்டு

அவன் ஹீரோ என்கவும் அவளும் சுற்றிலும் தேடிப் பார்த்தாள்..

“என்ன சிஸ்டர் தேடறீங்க.?? “

“ஹ்ம்ம்ம் நீங்க ஹீரோ னு யாரையோ சொன்னீங்களே... அவங்களத்தான் “ என்றாள் நக்கலாக...

“ஹா ஹா ஹா... நம்ம ஆதி மச்சான் தான் ஹீரோ சிஸ்டர்... உங்களுக்கு தெரியாது.. வெளில வந்து பாருங்க எத்தனை பொண்ணுங்க அவன் பின்னால சுத்த ரெடியா இருக்காங்கனு “ என்று சிரித்தான்...

ஏற்கனவே அவனை எப்படி தன் பக்கம் இழுப்பது, அவன் வெளில பொண்ணுங்க கூட சுத்தாமல் இருக்க வைக்கிறது என்று குழம்பிக்கொண்டிருந்தவளுக்கு ப்ரேம் அவனின் வெளி நடவடிக்கைகளை பற்றி புகழ்ந்து பேசவும் கடுப்பானாள்...

“அவன் ஒன்னும் ஹீரோ இல்லை.. ஜீரோ தான் “ என்று மனதுக்குள் முனகியவள் ப்ரேமை பார்த்து முறைத்தாள்..

அவள் முறைப்பதை கண்டவன்

“எதுக்கு இப்படி முறைக்கிறாங்க” என்று யோசித்தவன் அப்பொழுது தான் தான் ஆதியை பற்றி உளறியது நினைவு வந்தது...

“ஐயோ.!!! உளறிட்டேனோ??? இனிமேல் இவங்ககிட்ட பார்த்து பேசணும் “என்று எண்ணிக் கொண்டவன் மெல்ல

“ஆதி இல்லையா சிஸ்டர் .. “என்று மெதுவாக கேட்டான்..

“ஆமா இப்ப என்ன உங்க ஜீரோ சாரி ஹீரோ வை பார்க்கனுமா?? அவர் ஏதோ ஆபிஸ் பைலை எல்லாம் வச்சு P.hD பண்ணிக்கிட்டி இருக்கார்...

இப்படியெ லெப்ட் ல போய் அப்புறம் ரைட் ல போய் அப்புறம் திரும்பவும் லெப்ட் ல போன உங்க ஜீரோ சயின்டிஸ்ட் ஐ பார்க்கலாம் “ என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தாள்...

“ஆங்... என்று முழித்தான் “ ப்ரேம்...

“என்ன சிஸ்டர் .. அவன் ஆபிஸ் ரூம்ல இருக்கானா?? “ என்றான் குழம்பியவாறு

“ஹ்ம்ம்ம் அதே.. அதுக்குத்தான் வழி சொன்னேன் ப்ரதர்... “ என்று திருப்பி முறைத்தாள்...

அதுக்குத்தான் எனக்கு ஏற்கனவே வழி தெரியுமே என்று திருப்பி சொல்ல நினைத்தவன் அவள் இன்னும் முறைத்துக் கொண்டு நிற்பதை கண்டு

“ஆத்தாடி.. திரும்பவும் எதையாவது சொல்லி மாட்டறதுக்கு முன்னாடி எஸ்கேப் ஆகிடு ப்ரேம் “ என்று புலம்பியவாறு அசட்டு சிரிப்பை சிரித்து நகர்ந்தான்..

“எப்படித்தான் இந்த ஜான்சி ராணியை வச்சு சாமாளிக்கிறானோ இந்த மச்சான்... “ என்று புலம்பி கொண்டெ ஆதித்யாவின் அலுவலக அறைக்கு சென்றான்...அவன் அருகில் சென்று எதிரில் இருந்த இருக்கையை நகர்த்தி

“என்ன மச்சான் .. இப்படி கல்யாணம் ஆனதும் வைபை கட்டிகிட்டு கொஞ்சாமல் இந்த பைலை கட்டிகிட்டு அழுதுகிட்டுஇருக்க??? அங்க பாவம் சிச்டர் ஹாலுல தனியா உட்கார்ந்து இருக்காங்க ...

ஆமா கல்யாணத்தன்னிக்கு சிஸ்டரை நீ பார்த்த லுக்குக்கு இந்நேரம் ஒரு மாதத்திற்கு ஹனிமூன் இல்ல போயிருப்பேன் னு நினைச்சேன்... இப்படி இன்னும் இந்த ஆபிஷையே கட்டிகிட்டு அழுவறியே போகாமல் “ என்று அவன் முன்னே அமர்ந்தான்...

அவனின் குரலை கேட்டு நிமிர்ந்தவன்

“வாடா... ஹனிமூன் தானே .... ம்ம்ம் மெதுவா போலாம் டா.. கொஞ்சம் வேலை நிறைய இருக்கு.. முடிச்சிட்டு ஒன் மந்த் போலாம்னு இருக்கேன்.." என்று சிரித்தான்...

"இல்லையே.. என்னவோ தப்பா இருக்கிற மாதிரி இருக்கே.. நீ ஆயிரம் வேலை இருந்தாலும் இந்த மேட்டர் முன்னாடி வேலை பின்னாடினு சொல்ற ஆள் ஆச்சே .. “என்றான் ப்ரேமும் விடாமல்...

“நிஜமாகவே இந்த ப்ராஜெக்ட்ல நிறைய வேலை இருக்குடா. இதெல்லாம் செட்டில் பண்ணி முடிச்சிட்டனா அப்புறம் ப்ரீ ஆகிடலாம். அதுக்கப்புறம் ஜாலியா சுத்தலாம் “ என்று அவனை சமாளிக்க முயன்றான்..

“ம்ஹூம் நான் நம்ப மாட்டேன்.. இந்த கதையை வேற யார் கிட்டயாவது சொல்.. உன்னை பற்றி எனக்கு தெரியாதா??... நீ ஏதோ மறைக்கிற.. இத விட பெரிய ப்ராஜெக்ட் வந்தப்போ கூட அப்பப்ப நீ உல்லாசமா இருந்தது எனக்கு தெரியாதா மச்சான்.. இதெல்லாம் ஒரு காரணம்னு சொல்லாத.. ஏதோ சம்திங் சம்திங்.... நீ என்கிட்ட மறைக்கிற “ என்று விடாமல் நச்சரித்தான்..

“டேய்.. அதெல்லாம் ஒன்னுமில்லைடா... நீயா ஏதாவது கற்பனை பண்ணிக்காத “ என்று முறைத்தான் ஆதி ....

“ஹ்ம்ம்ம் சரி.. நீ சொல்லாட்டி போ.. நான் போய் சிஸ்டர் கிட்டயே கேட்டுக்கறேன் “

“ஹ்ம்ம்ம் அவகிட்ட போய் என்ன கேட்ப?? “ என்றான் புரியாமல்..

“என்னவோ கேட்பேன்.. உனக்கென்ன?? ...

ஏன் நீங்க ஹனிமூன் போகல?? ஆதி ஏற்கனவே எல்லா இடத்தையும் சுத்தி பார்த்துட்டான் மற்ற பொண்ணுங்களோட... அதனால தான் உங்களை எங்கயும் கூட்டி போக மாட்டேங்குறான்.. அவனை விடாதிங்க... இப்படி எக்ஷ்ட்ரா எக்ஷ்ட்ரா “ என்று சிரித்தான்...

“டேய்.. அவ ஏற்கனவே என் மேல ரொம்பபப நல்லலல அபிப்ராயத்துல இருக்கா... இதுல நீ வேற போட்டு கொடுக்கறியா?? “என்று திட்டியவன்

“ஹ்ம்ம்ம் சரி.. இப்ப உனக்கு என்ன வேணும் ?? “ என்றான் அவனை முறைத்தவாறு

“எனக்கு ஒரு உண்மை தெரியனும்”

“என்ன உண்மை?? “

“நீ ஏன் ஹனிமூன் போகலைன்ற உண்மை.. “

“ஹ்ம்ம்ம் உனக்கு ரொம்ப முக்கியம் “ என்று மனதுக்குள் திட்டினான்

அவர்கள் பேசி கொண்டிருக்கும் பொழுது பவித்ரா கையில் ஒரு ட்ரேயுடன் அங்கு வருவது தெரிந்தது... ஏதாவது குடிக்க எடுத்து வந்திருப்பாள் என்று உணர்ந்தவன்

“டேய் மச்சான்.. உனக்கு உண்மை தான வேணும்.. இப்ப பாரு எப்படி உனக்கு புரிய வைக்கிறேன் “என்று மனதுக்குள் சிரித்தவன் அவசரமாக ஒரு பேப்பரை எடுத்து அதில் கடகடவென எதையோ எழுதி ப்ரேம் கிட்ட கொடுத்து அதன் படி பேசு என்று சைகை செய்தான் ஆதித்யா...

ப்ரேம் தனக்கு விரித்த வலை என தெரியாமல் அதன் படி பேச, இல்ல படிக்க ஆரம்பித்தான்..

“என்ன மச்சான்... கல்யாணம் ஆனதுக்கப்புறம் நீ உன் பொண்டாட்டி பின்னாடியே சுத்தறியோ?? ... நாம ஒன்னா பாருக்கு போய் எவ்வளவு நாளாச்சு.. முன்னாடி கல்யாண வேலைனு வர மாட்டேனுட்ட.. இப்ப தான் எல்லாம் முடிஞ்சிடுச்சு இல்ல.. இனிமேல் நீ ஜாலியா உன் பழைய லைப் மாதிரியே இருக்க வேணாமா??.

அதோட அந்த ஸ்வீட்டி உன்னை காணாம ஏங்கி போறாடா.. எப்ப என் டார்லிங்க் திரும்ப வருவானு என்னை அரிச்சுகிட்டு இருக்கா....” என்று நிறுத்தினான்

“டேய்... நான் இப்ப மாறிட்டேன் டா .. இனிமேல அந்த மாதிரி இடத்துக்கெல்லாம் நான் வர மாட்டேன் “ என்றான் ஆதி மனதுக்குள் சிரித்தவாறு

“டேய் மச்சான் இது அடுக்குமா?? .. நீ மாறிட்டா எனக்கு கம்பெனி யாரு கொடுப்பா?? .. எனக்கு தெரியாது.. நீ இன்னைக்கு என் கூட வர்ற.. சரக்கு அடிக்கிறோம்.. அப்புறம் அந்த ஸ்வீட்டி வீட்டுக்கு போறோம். ஜாலியா இருக்கோம்”

என்று ஆதி அந்த பேப்பரில் எழுதி இருந்ததை அப்படியே படித்து முடிக்கு முன்னே கதவை திறந்து கொண்டு வேகமாக உள்ளே வந்தாள் பவித்ரா...

வந்தவள் அவள் கொண்டு வந்திருந்த பழச்சாற்றை டங்குனு மேஜை மேல வைத்தவள் ப்ரேம் ஐ பார்த்து முறைத்தாள்...அதை பார்த்து அதிர்ந்த ப்ரேம்

“ஐயோ!! சிஸ்டர்... என்ன இது?? எதுக்கு இப்படி காளி அவதாரம் எடுக்கறீங்க??... “ என்றான் பயந்தவனாக

“என்ன ப்ரதர்?? ... அவர் தான் வரமட்டேங்குறார் இல்லை.. அவரை ஏன் கட்டாய படுத்தறீங்க??? ஒருத்தர் திருந்த முயற்சி செய்தால் பிடிக்காதே... உங்களை மாதிரி ஃப்ரெண்ட் இருக்கிறதால தான் பாதிபேர் திருந்தனும் னு நினைக்கிறவங்க கூட திருந்த முடியாம போய்டறாங்க” என்று பொரிந்து தள்ளினாள்...

ஒன்றும் புரியாமல் ஆதியை பார்த்தான் ப்ரேம்.. அவன் சத்தம் வராமல் குலுங்கி குலுங்கி சிரித்து கொண்டிருந்தான்... அப்பொழுது தான் ஆதியின் சதி புரிந்தது அவனுக்கு. ..

“அடப்பாவி நண்பா. .. இப்படி என்னை மாட்டி விட்டுட்டியே டா.. நீ எல்லாம் ஃப்ரெண்ட் ஆ” என்று மனதிற்குள் திட்டிக்கொண்டான்

அவள் இன்னும் முறைத்து கொண்டு இருப்பதை கண்டவன்

“ஐயோ!!! சாரி சிஸ்டர்.... இனிமேல் இவனை கட்டாய படுத்த மாட்டேன்..ம்ஹூம் இந்த டாபிக் பத்தியே பேச மாட்டேன்.. போதுமா “ என்றான் கெஞ்சலுடன்

“அது... அந்த பயம் இருக்கட்டும்... நீங்க வேனா எப்படியோ வீணா போய் ஒழிங்க.. அவரை விடுங்க..இப்ப இந்த ஜூஷை குடிங்க” என்று அவன் கையில் ஒன்றை எடுத்து திணித்து விட்டு ஆதியையும் பார்த்து “நல்ல ப்ரெண்ட் “ என்று ஒரு முறை முறைத்து விட்டு வேகமாக வெளியேறினாள்...

அவள் சென்றதும்

“ஹா ஹா ஹா... “என்று சிரித்தான் ஆதித்யா...

அருகில் இருந்த ஒரு பைலை எடுத்து அவன் தலையில் அடித்தான் ப்ரேம்..

“இப்படி பழி வாங்கிட்டியேடா “

“ஹா ஹா ஹா.. என்னடா?? இந்த உண்மை போதுமா?? .. இல்லை இன்னும் கொஞ்சம் வேணுமா??? வேணும்னா என் பவி டார்லிங் ஐ கூப்பிடவா “ என்றான் சிரித்தவாறு..

“ஐயோ!!! மச்சான்.. போதும்டா...எனக்கு எந்த உண்மையும் தெரிய வேண்டாம்.. நீயாச்சு உன் பொண்டாட்டி ஆச்சு... நீ ஹனிமூன் போ, இல்ல போகாம இரு.. எனக்கு என்ன வந்தது...”

“ஹா ஹா ஹா... அது... அந்த பயம் இருக்கட்டும் “ என்று மீண்டும் சிரித்தான் ஆதித்யா

“ஹ்ம்ம்ம் ஆனாலும் நான் சொன்ன மாதிரியே சிஸ்டர் ஜான்சி ராணி தான்டா.... பார்த்த இல்லை எப்படி முறைச்சாங்கனு... பார்க்கலாம் நீ அவங்க கிட்ட எப்படி அடங்க போறனு?? “ என்று சிரித்தான் ப்ரேம்....

“டேய்... இந்த மாதிரி முரட்டு குதிரையை அடக்குறதல தனி சுகம் மச்சான்...இந்த ஜான்சி ராணியை எப்படி அடக்கி காட்டறேனு பார் “ என்று மீண்டும் உல்லாசமாக சிரித்தான் ஆதி...

“ஹ்ம்ம்ம்ம் பார்க்கலாம்..பார்க்கலாம்.... யார், யார் கிட்ட அடங்கறாங்கனு... “என்று ப்ரேமும் சிரித்தான்... பின் கொஞ்சம் நேரம் மற்ற கதைகளை பேசிவிட்டு கிளம்பி சென்றான்...

மாலை பவித்ரா தோட்டத்திற்கு சென்றவள் கொஞ்ச நேரம் உலாவிவிட்டு அங்கு இருந்த நீச்சல் குளத்திற்கு சென்றாள்.. அதன் அருகில் அமர்ந்து தன் கால்களை நீரில் விட்டு விளையாடி கொண்டிருந்தாள் ஒரு கையில் நாவலை வைத்து படித்த படி...

அது ரமணிச் சந்திரனின் வலை ஓசை என்ற நாவல்.. ஏற்கனவே ஒரு முறைப் படித்துவிட்டாலும் அதில் வரும் கதாநாயகியின் கேரக்டர் அவளுக்கு மிகவும் பிடிக்கும்.. கடைசிவரை நாயகனோடு வைராக்கியமாக மல்லுக்கு நின்று ஜெயிப்பாள்...

அதனாலயே திரும்ப அதே நாவலை படித்துக் கொண்டிருந்தாள்... அந்த நாவலின் சுவாரசியத்தில் நீச்சல் குளத்தின் மறுமுனையில் ஆதித்யா நீந்தி கொண்டிருப்பதை கவனிக்கவில்லை.. அவளை கவனித்தவன் இந்த பக்கம் நீந்தி வந்தான்.. அவளின் அருகில் வந்தவன் தண்ணிக்குள் இருந்தவாறே

“ஹாய் பேபி.. என்ன நான் நீந்தற அழகை ரசிச்சுகிட்டிருக்கியா “ என்று கண்ணடித்தான்..

அவன் குரலை கேட்டதும் திடுக்கிட்டவள்

“ஐயோ!! இவன் இங்க இருக்கிறது தெரியாமல் இங்க வந்திட்டனே.. இனிமேல் எழுந்து போகவும் முடியாது... ஹ்ம்ம்ம் சமாளிப்போம் “ என்று வடிவேல் பாணியில் சொல்லி கொண்டவள்

“ஆமா நீங்க பெரிய மன்மதன்.. உங்க அழகை ரசிக்கேறானாக்கும் “ என்று பழிப்பு காட்டினாள்...

ஆனாலும் அவன் நீந்துவதை ரசித்து பார்த்தாள் அவன் அறியாமல்.. அவளின் பார்வையை கண்டு கொண்டவன் மேலெ ஏறி வந்து அவளின் அருகில் மிக நெருக்கமாக அமர்ந்தான்.. பின் தன் தலையில் இருந்த நீரை சிலுப்பி அவள் மேலெ விழ செய்தான்...

அவனின் சட்டை இல்லாமல் பரந்து விரிந்த மார்பும் அவனின் கம்பீரமும் அவளை நிலை குலைய செய்தன... ஆனாலும் அவனை நேருக்கு நேராக பார்க்காமல் கெத்தாக அமர்ந்து இருந்தாள் எந்த உணர்ச்சியையும் தன் முகத்தில் காட்டாமல்..

“என்ன பேபி.. நான் கேட்டதற்கு பதில் இல்லை... என் நீச்சல் எப்படி இருந்தது” என்று வம்பு இழுத்தான் அவனும்..

“ஆமாம் பெரிய நீச்சல்.. காக்கா நீச்சல்!! “ என்று அவளும் விடாமல் திருப்பினாள்..

“என்னது காக்கா நீச்சலா ?? அப்படினா?? “ என்று புரியாமல் அவளை பார்த்தான்

“ஹ்ம்ம்ம் காக்கா தண்ணிக்குள்ள விழுந்தா இப்படி தான் அடிச்சிக்கும் “என்று சிரித்தாள் நக்கலாக...

“ஹ்ம்ம்ம் காக்கா நீச்சலா?? இரு என்னையா கிண்டல் பண்ற.. உனக்கு இருக்கு “என்று நினைத்தவன்

“ஆமாம்.. உனக்கு நீச்சல் தெரியுமா?? ... “

அவனிடம் நீச்சல் தெரியாது... எனக்கு தண்ணில கண்டம் னு இந்த அம்மா தண்ணி பக்கமே விட்டதில்லை என்று சொல்ல அவளின் தன்மானம் இடம் கொடுக்கலை... அதோடு அவனுடைய லாஜிக் தான் தெரிந்தது ஆச்சே.. 

எனக்கு தெரியாது னு சொன்னால் கண்டிப்பா நீச்சல் கத்துக்கோனு வம்பு பண்ணுவான்.. அதனால் அவன் லாஜிக் படி தெரியும்னு சொல்லிட்டா அப்ப விட்டுடுவான் “ என்று அவசரமாக திட்டமிட்டவள் அவனிடன் தன் கெத்தை விட்டு கொடுக்காமல்

“நீச்சல் எல்லாம் பெருசா??... நான் 3 வயது இருக்கும் பொழுதே நீச்சல் கத்துகிட்டேன்.. விட்டிருந்தா நான் நீச்சல் ல வோர்ல்ட் சேம்பியன் ஆகியிருப்பேன்.. எங்க அம்மா கெடுத்தாட்டாங்க" என்று அள்ளி விட்டுக்கொண்டிருந்தாள்...

"ஹ்ம்ம்ம் அப்படியா... அப்ப எங்க நீ நீச்சல் அடிக்கிற அழகை நான் பார்க்கறேன்" என்று அவள் எதிர்பாரதவாறு அவளை பிடித்து தள்ளி விட்டிருந்தான் நீச்சல் குளத்துக்குள்....

நீரில் விழுந்தவள் அதிர்ச்சியில் கையை காலை அசைக்க மறந்து முழித்து கொண்டு உள்ளே மூழ்கி மூழ்கி மேலெ வந்தாள் மூன்று முறை..

அதை கண்டு “என்னைய வா காக்கா நீச்சல் னு சொன்ன... இப்ப நீதான் டீ கோழி நீச்சல் அடிக்கிற " என்று சிரித்தான்...

கொஞ்ச நேரம் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தவன் கடைசியாக உள்ளே சென்றவள் வெளியில் வராததால் ஏதோ விபரீதம் என்று புரியவும் அடுத்த நொடி நீருக்குள் பாய்ந்திருந்தான்....



Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!