உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-15
அத்தியாயம்-15
பவித்ரா தனக்கு நீச்சல் தெரியும் என்று அளந்து விட்ட கதையை நம்பி அவளை வம்பிழுக்க என்று அவளை பிடித்து நீச்சல் குளத்திற்குள் தள்ளி விட்டிருந்தான் ஆதி... ஆனால் அவளோ நீச்சல் அடிக்காமல் நன்றாக மூழ்க ஆரம்பித்து இருந்தாள்.
கொஞ்ச நேரம் அவளையே பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தவன் கடைசியாக உள்ளே சென்றவள் வெளியில் வராததால் ஏதோ விபரீதம் என்று புரியவும் அடுத்த நொடி நீருக்குள் பாய்ந்திருந்தான்...
அவளை அப்படியே கையில் அள்ளி நடந்தே வந்து குளத்தின் மேலெ விட்டவன் வேகமாக மேலே ஏறி அவளை பார்த்தான்... அவள் மயங்கி இருந்தாள்....
அப்பொழுது தான் தெரிந்தது அவளுக்கு நீச்சல் தெரியாது என்று...அந்த குளம் ரொம்பவும் ஆழம் இல்லைதான்...ஆனால் பவித்ரா குட்டையாக இருந்ததாலும் மேலும் அவன் தள்ளிவிட்ட பயத்திலுமே உள்ளே முழ்கி நிறைய தண்ணியை குடித்திருந்தாள்...
அவள் அசையாமல் இருப்பதை கண்டவன் கொஞ்சம் ஆடித்தான் போனான்...
வேகமாக தனக்கு தெரிந்த முதலுதவியை செய்தான்... அவள் வயிற்றை நன்றாக அழுத்தி உள்ளே குடித்திருந்த நீரை வெளியேற்றினான்... பின் காலை நன்றாக தேய்க்க ஆரம்பித்தான்..
டாக்டரை அழைக்கலாம் என்றால் மொபைல் இல்லை அவனிடம்... அதை அவன் அறையிலயே விட்டு வந்திருந்தான்.. சுற்றிலும் பார்த்தும் யாரும் இல்லை அன்று...
இவளை இப்படியே எப்படி விட்டு சென்று மொபைலை எடுப்பது.. அதுக்குள் இவளுக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்று பயந்து அவசரமாக தான் ஏற்கனவே பயிற்சி பெற்றிருந்த முதலுதவிகளை வேகமாக செய்தான்...
நீர் முழுவதும் வெளியேற்றியதும் மீண்டும் அவள் கால்களை எடுத்து தன் மடியில் வைத்து நன்றாக தேய்த்துக்கொண்டிருந்தான்..
சிறிது நேரத்தில் மெல்ல கண் விழித்தவள் ஆதி தன் காலை தேய்த்துக் கொண்டிருப்பதை அரை விழியில் கண்டாள். பிறகு மெல்ல சற்று முன் நடந்த நிகழ்ச்சி ஞாபகம் வந்தது..கடைசியாக அவன் சிரித்துக்கொண்டே அவளை தள்ளியது நினைவு வந்தது...
உடனே
“டேய்... என்னையா.. தண்ணிக்குள்ள தள்ளி விட்ட... இதுக்கு நீ நல்லா அனுபவிப்ப..” என்று மனதுக்குள் திட்டியவள் அவன் இன்னும் தன் காலை தேய்த்துக்கொண்டிருப்பதை கண்டு
“தேய்க்கட்டும்.. நல்லா தேய்க்கட்டும்.. வேணும் அவனுக்கு... “என்று கண்ணை மூடியவள் அரை கண்ணால் அவனையே பார்த்து இருந்தாள்...
அவன் முகத்தில் வேதனையும் கண்ணில் வலியும் தெரிந்தது...
“எனக்கு இப்படியாகவும் அவனால் தாங்க முடிய வில்லையா?? ... நம்ப முடியவில்லையே!! "என்று நினைத்துக் கொண்டவள் ஆதி இவள் பக்கம் திரும்புவது தெரியவும் அவசரமாக கண்ணை மூடிக்கொண்டாள்...
அவனோ அவள் காலை தேய்த்தவாறே
"ப்ளீஸ் பேபி.... எழுந்திருச்சுக்கோ.. உனக்கு ஒன்னும் ஆகாது... உன்னை விட விடமாட்டேன்".. என்று அவள் முகத்தை பார்த்து அவன் வலியுடன் கூறுவது கேட்டது இவளுக்கு...
“வேணும்டா உனக்கு... என்னை தள்ளி விட்ட இல்ல. இன்னும் கொஞ்ச நேரம் அனுபவி “ என்று மீண்டும் திட்டிக்கொண்டே எழுந்திருக்காமல் அப்படியே படுத்திருந்தாள்...
அவள் இன்னும் எழுந்திருக்காததால் பயந்தவன் அவளின் முகத்தின் அருகில் குனிந்து அவளின் உதட்டின் அருகில் குனிந்தான் மூச்சை இழுத்து உள்ளே விட...
ஏதோ உந்த சட்டென்று முழித்தவள் அவன் முகத்தை அருகில் காணவும் அவன் அவளை நோக்கி குனிவதை கண்டவள் டக்குனு அவள் கையை கொண்டு அவன் வாயை மூடினாள்... பின் அவனை பின்னுக்கு தள்ளியவள் வேகமாக எழுந்து உட்கார்ந்தாள்...
அவளின் அந்த செயலை கண்டு திகைத்தவன்
"ஹே!! பேபி.. ஆர் யூ ஆல்ரைட்??? " என்று மகிழ்ச்சி பொங்க கேட்டான்..
அவன் முகத்தில் தெரிந்த அந்த நிமிடத்து உணர்ச்சிகரமான பாவத்தை ரசித்தாலும்
"ஹா ஹா ஹா... எப்படி ஏமாத்தினேன் பாஸ்.. தோத்து போய்ட்டீங்க... சும்மா விளையாண்டேன்..லுலுலாய்.. " என்று நாக்கை துருத்தி பழிப்பு காட்டி அவள் முடிக்கும் முன்னே ஒங்கி அறைந்திருந்தான் அவள் கன்னத்தில்...
"ஏன்டி விளையாட்டா ?? .... அறிவிருக்கா உனக்கு.. எதுல விளையாடறதுனு இல்ல.. உயிர் போச்சுடி எனக்கு கொஞ்ச நேரத்துல.. “ என்று கோபமாக திட்டிக்கொண்டே எழுந்தவன் வேகமாக வீட்டிற்கு உள்ளே சென்றான்...
பவித்ராவுக்கு அதிர்ச்சியாக இருந்தது... எதுக்கு இவ்வளவு கோபப் படறான்??? என்றவள் தன் கன்னத்தில் கை வைத்துக்கொண்டே எழுந்து தன் அறைக்கு சென்று உடை மாற்றிக் கொண்டாள்..
ஆனாலும் தண்ணிக்குள் விழுந்த அந்த நொடியை நினைக்கையில் அவளுக்கு உடல் நடுங்கியது.. அவன் மட்டும் தூக்காமல் இருந்திருந்தால்???...
“ஹ்ம்ம்ம் என்ன இந்நேரம் சொர்க்கத்துக்கு போய் அங்க ஜாலியா விளையாண்டு கிட்டிருந்திருக்கலாம்.... என்ன இந்த அம்மாதான் கொஞ்சம் பீல் பண்ணுவாங்க.. பாவம் அவங்களுக்கு என்னை விட்டா யார் இருக்கா?? “ என்று வருந்தியவள்
“ஹ்ம்ம்ம்ம் எல்லாம் அவனால வந்தது... அவன் தானெ வேணும்னு தள்ளி விட்டான்... இதுக்கு இருக்கு டா உனக்கு “ என்று மனதுக்குள் கருவியவள் இன்னும் களைப்பு தீராததால் சோபாவில் படுத்து ஓய்வு எடுத்தாள் பவித்ரா....
Comments
Post a Comment