உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-16



அத்தியாயம்-16

ரவு 7 மணி அளவில் யாரோ வந்து அவள் அறைக்கதவை தட்டுவது கேட்டது.. மெல்ல எழுந்து சென்று கதவை திறந்தாள் பவித்ரா... வள்ளி தான் நின்றிருந்தாள்...

“அம்மா... உங்களை பார்க்க யாரோ ரெண்டு பேர் வந்திருக்காங்க.... அதான் கூப்பிடலாம் னு வந்தேன்..” என்றாள்...

“சரி நீங்க போங்க.. நான் வர்ரேன்.. அவங்களுக்கு குடிக்க ஏதாவது கொடுங்க “என்றவள் மீண்டும் குளியலறைக்கு சென்று முகத்தை கழுவிக்கொண்டு பின் தன் முடியை தளர பிண்ணிக் கொண்டு கீழ வந்தாள்...

கீழ அமர்ந்து இருந்தவர்களை சரியாக ஞாபகம் இல்லாததால் மீண்டும் தன் மூளையை கசக்கி யோசித்தாள்... பின் அவர்கள் அருகில் வரவும் அவர்கள் எழுந்து நின்று

“வணக்கம் மேடம்.. நாங்க உங்க மேரேஜ் அப்போ போட்டோ மற்றும் வீடியோ ஷூட் பண்ணவங்க.. “எண்று தங்களை அறிமுகப்படுத்தினர்...

அவளும் புன்னகைத்தவாறு அவர்களை அமர சொல்லி தானும் மற்றொரு ஷோபாவில் அமர்ந்தாள்..

அதே நேரம் பவித்ராவை அறைந்து விட்டு கோபமாக வெளியில் சென்ற ஆதியும் கொஞ்ச நேரம் சுத்தி முடித்தவன்

“அவளுக்கு எப்படி இருக்கோ?? அப்படியே விட்டுட்டு வந்திட்டமே” என்று மனது உறுத்த திரும்ப வந்திருந்தான்...

வந்தவன் அந்த போட்டோகிராபர்களை வரவேற்று எதிரில் சிரித்துக்கொண்டு அமர்ந்திருந்த பவித்ராவை முறைத்தவாறே அவள் அருகில் சென்று நெருக்கமாக அமர்ந்து அவள் தோள் மேல் கை போட்டுக்கொண்டான்...

அவளோ அவனை முறைத்தவாறே நகர முயன்றாள்... அவன் கை அவளின் தோளை அழுத்தி இருக்கவும் நகர முடியாமல் அப்படியே அமர்ந்திருந்தாள் நெளிந்தவாறு

பின் ஆதி அவர்களை பார்த்து

“வாங்க சங்கர்... போட்டோஸ் எல்லாம் நல்லா வந்திருக்கா?? “ என்றான்

“யெஸ் சார்... சூப்பரா வந்திருக்கு.... நீங்களும் மேடமும் பெர்பக்ட் மேட்ச்... எல்லா ஸ்டில்ஸ் ம் சூப்பரா இருக்கு... இன்னும் போஸ்ட் வெட்டிங் (post wedding) ஸ்டில்ஸ் மட்டும் பாக்கி இருக்கு... அதுவும் எடுத்திட்டம் னா ஆல்பம் முடிஞ்சிடும்... அது தான் உங்களை பார்த்து பேசிட்டு போகலாம்னு வந்தோம்... “ என்றனர்...

“போஸ்ட் வெட்டிங் ஸ்டில்ஸ் னா?? “ என்று புரியாமல் அவர்களை கேட்டாள் பவித்ரா...

“அவுட் டோர் ஷூட்டிங் மேடம்.. நீங்களும் சாரும் ஏதாவது ஒரு இடத்துக்கு அவுட்டிங் போய்ட்டு அங்க கொஞ்சம் போட்டோஸ் எடுத்துட்டு நாங்க அதை எடிட் பண்ணி ஆல்பத்துல சேர்த்திடுவோம்...”

அதை கேட்டதும் திக் என்றது பவித்ராவுக்கு...

“இந்த மாதிரி போட்டோன அவன் அருகில் நெருக்கமாக நிற்க வேண்டி இருக்குமே.....மேரேஜ் அன்னைக்கே அப்படி நில் இப்படி நில் என்று படுத்தி எடுத்தாங்க.... இந்த மாதிரி போட்டோஸ்க்கு சொல்லவே வேண்டாம்... இவன் பக்கத்தில் எப்படி நெருக்கமா நிற்பதாம்... என்னால முடியாதுப்பா... இத எப்படி தடுப்பது? ” என்று அவசரமாக யோசித்தாள்..

அப்பொழுது அவனுடைய மொக்க லாஜிக் நினைவு வரவும்

“ஐயோ... மேரேஜ் அன்னைக்கு ஸ்வீட் ஊட்டற மாதிரி போட்டோக்கு இவள் வேண்டாம் என்கவும் அவன் கட்டாயப்படுத்தி அந்த போட்டோவை எடுக்க வைத்தான்.. இப்பவும் நான் வேண்டாம்னு சொன்னால் கண்டிப்பா அது வேணும்னு தான் சொல்லப்போறான்... அவன் வழியிலயே போய் அவனை மடக்கணும்.. “என்று அவசரமாக திட்டமிட்டாள்....

அவள் ஏதோ யோசித்துக் கொண்டிருப்பதைக் கண்ட ஆதியும்

“ஆஹா.... இவள் யோசிக்கிறதை பார்த்தா கண்டிப்பா நான் தண்ணிக்குள்ள தள்ளிவிட்டதுக்கு என்னை பழி வாங்க தான் ஏதோ திட்டம் போடறா போல ... உசார் ஆதி” என்றது அவன் மனம்... இவள் என்ன சொல்ல போறா என்று அவளையே பார்த்து இருந்தான்...

அந்த சங்கர் மேலும் தொடர்ந்தான்...

“இப்பல்லாம் ஏதாவது ஒரு தீம் செட் பண்ணி அதுக்கு பொருத்தமா ஷுட் பண்றதுதான் ட்ரென்ட் மேடம்... “

“ஆங்க்... தீமா.. அப்படினா?? “ என்று மேலும் குழம்பியவள் அவனிடமே கேட்டாள்...

“உதாரணத்துக்கு கேரளாவுல ஒரு புட்பால் பேன் கபுல் சமீபத்துல நடந்த புட்பால் வோர்ல்ட் கப் அப்போ, அவங்களுக்கு பிடிச்ச புட்பால் டீம் ஓட ட்ரெஸ் ஐ போட்டுகிட்டு ரொமாண்டிக் ஆ புட்பால் விளையாடற மாதிரி போட்டோஸ் ஷூட் பண்ணி இருந்தாங்க.. அது சூப்பரா இருந்தது மேடம்.. அது மாதிரி ஒரு தீம் வச்சு நாமலும் ஷூட் பண்ணலாம். “

"வாவ்... சூப்பர் ஐடியா அண்ணா... அப்படியே பண்ணிடலாம்... நீங்களே ஏதாவது ஒரு தீம் சொல்லுங்க "என்றாள் ஆதியை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே!!

"ஹ்ம்ம்ம் நிறைய பண்ணலாம் மேடம்... நீங்களும் சார் ம் திருமணத்தன்று கொஞ்சம் எதிரும் புதிருமா இருந்தீங்க.. அதனால நீங்க ரெண்டு பேரும் ரொமாண்டிக் ஆ பைட் பண்ற மாதிரி பண்ணிடலாம்..

டிபரென்ட் டிபரென்ட் ஆ பைட் பண்ற மாதிரி எடுக்கலாம்.. முடிஞ்சா கத்தி சண்டைபோடற மாதிரி கூட எடுக்கலாம்.. உங்களுக்கும் சார்க்கும் சூப்பரா இருக்கும்” என்று சிரித்தான் சங்கர்..

அதை கேட்டதும் ஆதிக்கு திக் என்றது..

“இவள் இருக்கும் கடுப்பில நேரா என்னை ஒரிஜினல் கத்திய வச்சே சொருகிடுவா... எப்பவும் போட்டோ வேண்டாம் னு சொல்றவ இப்ப வேணும்னு ஆர்வமா சொல்றான்னா ஏதோ ப்ளான் பண்ணி இருக்கா என்ன வச்சு செய்ய..

அதில்லாமல் இவ கூட நெருக்கமாக நின்னா அவ்வளவுதான்... ஏற்கனவே என்னைய என்கிட்ட இருந்து காப்பாத்த பெரும்பாடு பட வேண்டி இருக்கு... இதுல இன்னும் க்லோசப்ப்ல இவ வந்தா அவ்வளவுதான்.... எனக்கு வேண்டாம் இந்த சத்திய சோதனை... இத எப்படியாவது தடுக்கனும் “ என்று அவசரமாக முடிவு செய்தான்..

சங்கர் சொன்னதை கேட்டதும் துள்ளிக்குதித்தாள்... ம்ஹும் துள்ளிக்குதிக்கிற மாதிரி நடித்தாள் பவித்ரா.. ஆனாலும் இவன் இதுக்கு சம்மதிக்க கூடாதே என்று உள்ளுக்குள் பயந்துகொண்டே

"வாவ்... சூப்பர் ஐடியா.. அப்படியே செஞ்சுடலாம்" என்று அவள் சொல்லி முடிக்கும் முன்னே

"நோ ... மிஸ்டர் சங்கர்.. எனக்கு இப்பொழுது நேரம் இல்லை... நான் ப்ரீயா இருக்கும் பொழுது இந்த மாதிரி ஷூட் பண்ணிக்கலாம். இப்ப எடுத்தவரைக்கும் நீங்க ஆல்பம் போட்டு கொடுங்க "என்று முடித்தான்..

அதை கேட்டதும்

"யெஸ்!! என்று தன் கையை மடக்கி பின்னுக்கு இழுத்தவள் குத்தாட்டம் போட்டாள் மனதுக்குள் பவித்ரா.. இது தான் எனக்கு கிடைத்த முதல் வெற்றி..

“டேய் நெட்டை !! எப்படி உன் வழிலயே போய் உன் வாயாலயே வேண்டாம் என்று சொல்ல வைத்தேன் " என்று மகிழ்ந்தவள் ஆதியை பார்த்து போலியாக முறைத்தாள்...

அதை கண்டு “உன் திட்டம் ப்ளாப் டீ.. என்கிட்டயா உன் வேலைய காட்டற .. “என்று உள்ளுக்குள் சிரித்துக்கொண்டே எழுந்து சென்றான் ஆதி...

ரவு உணவு நேரத்திலும் இருவரும் ஒன்றும் பேசாமல் ஒருவரை ஒருவர் முறைத்தவாறே சாப்பிட்டு பின் எழுந்து சென்றான் ஆதி..பவித்ராவும் சாப்பிட்டு முடித்து விட்டு எல்லாம் எடுத்து வைத்து விட்டு பாலை காய்ச்சி இரண்டு டம்ளரில் ஊற்றிக் கொண்டு அவர்கள் அறைக்கு சென்றாள்...

உள்ளே சென்றவள் கட்டிலில் அமர்ந்து தன் மொபைலை நோண்டிக் கொண்டிருந்தவனிடம் சென்று ஒரு டம்ளரை நீட்டினாள் முறைத்துக்கொண்டே... பின் அவள் ஒரு டம்ளரை எடுத்துக்கொண்டு அவளுடை ஷோபாவிற்கு சென்று அமர்ந்து கொண்டு இரண்டு கையிலும் டம்ளரை பிடித்துக்கொண்டு பாலை குடித்துக்கொண்டிருந்தாள்...

இப்பொழுது எல்லாம் அவன் மிரட்டாமலயே பாலை குடித்து விடுவாள்.. அதன் சுவையும் ஒருவாறு அவளுக்கு பிடித்து விட்டது...

இரண்டு கையிலும் டம்ளரை இறுக்கி பிடித்துக்கொண்டு சின்ன பிள்ளை மாதிரி பால் குடிக்கும் அவள் அழகையே ரசித்துக்கொண்டிருந்தான் ஆதி ...

அவள் குடித்து முடித்ததும் வழக்கம் போல அவள் வாயில் மீசை வந்திருந்தது... அதை கண்டதும் அவன் உள்ளே இருந்த கோவம் பறந்து போனது

“ஹே பூனைக்குட்டி.... “ என்று சிரித்தான் அவளை பார்த்து..

இதுவரை முறைத்துக்கொண்டு இருந்தவன் திடீரென்று சிரிக்கவும் அவனை நிமிர்ந்து பார்த்தவள்

“என்ன?? “ என்று தன் புருவத்தை உயர்த்தி கேட்டாள் வாயை திறக்காமல்... அவளின் அந்த செய்கையும் அவனை ரசிக்க வைத்தது...

அவன் இன்னும் சிரித்து கொண்டிருக்கவும்

“எதுக்கு சிரிக்கறீங்க... சொல்லிட்டு சிரிங்க.. “என்று முறைத்தாள்...

அவன் இதுவரை கோபமாக இருந்ததாலும் இப்பொழுது சிரிக்கவும் அவன் சிரிப்பை ரசித்து பார்த்தாள் அவன் அறியாமல்...

“ஹே பூனைக்குட்டி.... “ என்று மீண்டும் சிரித்தான் அவளை பார்த்து..

“நான் ஒன்னும் பூனைக்குட்டி இல்லை... ” என்றாள் முறைத்தவாறு..

“ஆமா ஆமா நீ பூனைக்குட்டி இல்லை... உன் வாய் தான் பூனைக்குட்டி...” என்றவனின் பார்வை அதன் மேலயே தொக்கி நின்றது... அவளின் அந்த மீசையை ஒத்தி எடுக்க அவன் இதழ்கள் தவித்தன... பின் ஏதோ நினைவு வந்தவனாக

“ஹே பேபி.... நீ ஸ்விம்மிங் பூல் ல விழுந்து மயங்கினப்போ உனக்கு பர்ஸ்ட் எய்ட் பண்ணேன் இல்லை.. அதுல இன்னொரு பர்ஸ்ட் எய்ட் மட்டும் பண்ண மறந்துட்டேன்.. அத செய்யலனா அந்த ஸ்விம்மிங் பூல் வாட்டர் இன்னும் உன் வயித்துல தான் இருக்கும்... அப்புறம் உனக்கு வயிறு வலிக்கும்....” என்றான் உள்ளுக்குள் சிரித்தவாறு....

தனக்கு விரித்த வலையை அறியாமல்

“ஐயோ!! அப்படியா... என்னது அது?? “ என்று கண்களை அகல விரித்தாள் பவித்ரா

“ஹ்ம்ம்ம் கிட்ட வா சொல்றேன் ... “ என்றான் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு

பவித்ராவும் என்னவாக இருக்கும் என்று ஆர்வம் தாங்காமல் எழுந்து அவன் அருகில் சென்றாள்..

கட்டிலில் அமர்ந்து இருந்தவன் அவள் அருகில் வரவும் அவளை அப்படியே இழுத்து தன் மடியில் போட்டு அவளின் உதட்டின் மேல் இருந்த அந்த வெள்ளை மீசையை தன் இதழால் ஒத்தி எடுத்தான்... பின் அருகில் இருந்த அவளின் இதழ்கள் அவனை சுண்டி இழுக்கவும் அதையும் தாபத்துடன் சிறை பிடித்தான்.....

அவனின் இந்த திடீர் செய்கையால் தன் வசம் இழந்தவள் கிறங்கி கிடந்தாள் அவன் மடியில் ...

அவனின் இறுகிய இதழ் முத்தத்தில் இருவரும் சிறிது நேரம் மோன நிலையில் லயித்து இருக்க, அதற்குள் சுதாரித்துக் கொண்டவள் தன் கையால் அவனின் மார்பில் கை வைத்து தள்ளினாள்..

அவனோ அவளை விடாமல் இன்னும் இறுக்கி அணைத்து கொள்ள, அவனிடமிருந்து விடுபட, தன் பலத்தை எல்லாம் ஒன்று திரட்டி அவனிடம் இருந்து திமிறி லாவகமாக அவன் பிடியில் இருந்து வெளிவந்து துள்ளி குதித்து எட்டி நின்று கொண்டாள்..

அவளை எட்டி பிடிக்க முயன்றவன் கைக்கு சிக்காமல் குனிந்து ஓடி தன் சோபாவில் படுத்துக்கொண்டாள்... பின் போர்வையை எடுத்து தலைவரை போர்த்திக் கொண்டாள்...

அவளுக்கு இன்னும் படபடப்பு அடங்கவில்லை...

“சே.. இன்னும் ஒரு நிமிடம் இருந்திருந்தால் என்னையே கட்டு படுத்த முடிஞ்சிருக்காது... ஏன் தான் அவனிடம் இப்படி மயங்கறேனோ..? “என்று தன்னைத் தானே திட்டிக்கொண்டவள் அப்பொழுதுது தான் தன் ஆயுதம் நினைவு வந்தது..

“ஹ்ம்ம்ம் அவன் இங்கு வந்திருந்தால் அந்த பின்னாலயே குத்தி இருக்கலாம்.. நான் இல்ல அங்க போய் மாட்டிகிட்டேன்.. இனிமேல் அவன் கட்டில் கிட்டயே போகக் கூடாது “என்று தன்னையே திட்டிக்கொண்டாள்...

அவனோ உல்லாசமாக சிரித்துக்கொண்டே

“எப்படி இருந்தது பூனக்குட்டி என் ட்ரீட்மென்ட்?? ... டூ இன் ஒன்னா உன் மீசையும் துடைச்சுட்டேன்.. மீதி இருந்த விட்டுப்போன பர்ஸ்ட் எய்டையும் செஞ்சுட்டேன்... “என்று சிரித்தான் குறும்பாக கண்ணடித்து...

“வவ்வே... “ என்று பழிப்பு காட்டினாள் தன் போர்வையை விலக்கி..

அடுத்த நொடி மீண்டும் எங்கே அவன் கிட்ட வந்திடுவானோ என்று முகத்தை மூடிக்கொண்டாள்...

அவனும் சிரித்தவாறு

“அப்புறம் பேபி... அடுத்த வாரத்துல இருந்து உனக்கு ஸ்விம்மிங் கிளாஸ்.. நான் தான் உனக்கு மாஸ்டர்... ரெடியா இரு.. “என்றான் சிரித்தவாறு...

“எனக்கு காது கேட்கலை.. நான் தூங்கிட்டேன்... “ என்று குறட்டை விடுற மாதிரி நடித்தாள்...

அவளின் அந்த நடிப்பை கண்டு ரசித்து சிரித்தவன் கட்டிலில் படுத்தான்....

மனம் எல்லாம் நிறைந்து இருந்தது... ஏதோ ஒரு புதுவித சுகம் உடலெல்லாம் பரவி இருந்தது..

சிறிது நேரம் கண் மூடி தூங்க முயன்றவன் தூக்கம் வராததால் எழுந்து பால்கனிக்கு சென்றான்.. அங்கு இருந்த அந்த பால்நிலா இன்னும் அவன் மனதுக்கு சுகத்தை கொடுத்தது...

அதை ரசித்தவாறே அன்றைய நிகழ்வுகளை ரிவைன்ட் பண்ணி பார்த்தான் ஆதித்யா..... 





Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!