உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-17
அத்தியாயம்-17
மதியம் லன்ச் சாப்பிட்டப்போ பவித்ரா அவன் அருகில் இருந்து ஒவ்வொன்றாக அவனுக்கு பார்த்து பார்த்து எடுத்து வைத்தது நினைவு வந்தது... அந்த சாப்பாட்டின் சுவையை விட அவள் அருகில் இருந்து பரிமாறியதுதான் அவனுக்கு நிறைந்து இருந்தது...
சிறு வயதிலயே பெற்றோர்களை இழந்து விட்டதாலும் மேலும் உறவினர்கள் என்று யாரும் நெருக்கமாக இல்லாததாலும் யாரும் அவனுக்கு இது மாதிரி அருகில் இருந்து பரிமாறியதில்லை...
என்னதான் வேலைக்காரங்க பரிமாறினாலும் அதில் ஒரு கடமை மட்டுமே இருக்கும். இந்த மாதிரி பாசம் இருந்ததில்லை...
எப்பயாவது அவன் பெரியம்மா மரகதம் வந்தால் மட்டும் அவன் அருகில் இருந்து அவனுக்கு பிடித்ததை செய்து தருவார்...
சிறுவயதில் இருந்தே பழகி விட்டதால் அவன் உறவு, பாசம் என்று எதையும் தேடியதில்லை.. அது மாதிரி தேடக்கூடாது என்று தன்னை எப்பவும் பிசியாக வைத்துக்கொண்டானோ இல்லை பிசியாக இருப்பதால் யாரையும் தேடியது இல்லையோ அத ஆராய்ச்சி பண்ணியதில்லை அவன்..
இருக்கும் வரை ப்ரியா ஜாலியா இருக்கனும் என்பது தான் அவன் கொள்கை...
அப்படி இருந்தவனுக்கு இன்று பவித்ரா தனக்கு பார்த்து பார்த்து செய்தது மனதில் நிறைந்து நின்றது...
அதன் பின் ப்ரேமுடனான கலாட்டாவை நினைத்து மீண்டும் சிரித்தான்.. பின் அவன் மனம் பவித்ராவை தண்ணியில் இருந்து தூக்கி வந்த நிகழ்வு கண் முன்னே வர அவன் உடல் விரைத்தது இப்பொழுதும்.... அவன் இதயம் அப்பொழுது துடித்தது இன்னும் அவனுக்கு சிலிர்த்தது....
இதுவரை யாருக்காகவும் அவன் இப்படி துடித்ததில்லை... ஏன் இதே மாதிரி வேற ஒரு நண்பனை காப்பாற்றிய பொழுது கூட இது மாதிரி துடித்ததில்லை...
“ஏன் இவளுக்காக அப்படி துடித்தது என் மனம்.??.. மேலும் இவளை பழி வாங்க தானே இந்த நாடகம்..இந்த கல்யாணம்... எங்க போச்சு அந்த பழி வாங்கும் வேகம்?? ...” என்று யோசித்தான்...
“அவள் பக்கம் சாய்ஞ்சு விட்டேனோ?? .. இல்லை என்னை அவள் பக்கம் இழுத்து விட்டாளா..? அப்படி என்ன இருக்கிறதாம் அவளிடம்??...இது வெறும் உடல் கவர்ச்சியோ...??
இல்லையே.. இவளை விட எத்தனை அழகான கவர்ச்சியான பெண்களை பார்த்திருக்கான்.. அவங்க கூட உல்லாசமாக இருந்திருக்கான்.. ஆனால் அவங்க முகம் எல்லாம் அடுத்த நிமிடமே மறந்து விடும். ஜஸ்ட் பார் தட் டைம் ஒன்லி பாலிசி தான்.. யார் கிட்டயும் கமிட் ஆகக்கூடாது என்பதைத்தான் பின் பற்றி வந்தான்... அப்படி இருந்த நான் எப்படி இப்படி மாறினேன்??..
அவளை முதல் முதலில் பார்த்த பொழுதே அவள் முகம் என் மனதில் பதிந்து விட்டதோ??...
“என்ன மாதிரியான பீல் இது?? “ என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான்..
“இதற்கு பெயர் தான் காதலா??? Am I in love with her??
இல்லை... நான் யார் கிட்டயும் என் வாழ்க்கையை அடகு வைக்க மாட்டேன்... இது ஜஸ்ட் ஒரு க்ரஸ் ஒரு லஸ்ட் அவள் மேல.. அவ்வளவுதான்.. பார்க்கலாம் இந்த க்ரஸ் எவ்வளவு நாள் போகும் என்று ... “ என்று தன்னைத்தானே சமாதானம் படுத்திக்கொண்டான்..
ஆனால் அவன் ஆழ் மனதை கேட்க மறந்து இருந்தான் அவன் பீல்க்கு என்ன பெயர் என்று..
கொஞ்ச நேரம் நடந்து முடித்தவன் பின் தன் அறைக்கு திரும்பினான்.. அவனை அறியாமலயே அவன் மனம் அவளிடம் தாவியது...
வழக்கம் போல போர்வையை இழுந்து போர்த்தி கொண்டு தூங்கினாள் பவித்ரா.. அவள் பாதம் மட்டும் வெளியில் தெரிந்தது...
நேராக அவளிடம் சென்றவன் குனிந்து அவளின் மெட்டிக்கு மெல்ல முத்தமிட்டான்...
“ஸ்வீட் ராட்சசி... “ என்று முனகியவன் பின் தன் படுக்கைக்கு சென்று படுத்தவன் கண் மூடி உறங்க ஆரம்பித்தான்...கனவிலும் அவன் ராட்சசி வந்து தொல்லை பண்ணினாள் அவனை....
மறுநாள் காலை கண் விழித்தவன் நேற்றை போலவே காலை உடற்பயிற்சிகளை செய்து விட்டு பின் கையில் சூடான காபியை ஊற்றி பருகிக்கொண்டே அந்த தோட்டத்தை ரசித்துக்கொண்டிருந்தான்...
பவித்ரா தோட்டத்தில் அந்த ரோஜா செடிகளுக்கு நீ பாய்ச்சி கொண்டிருந்தாள்.. மாடியிலிருந்து அவளை கண்டவன் ஏதோ நினைவு வர கீழ இறங்கி வந்தான்...
ஆளுயரம் வளர்ந்திருந்த ஒரு ரோஜா செடியில் இருந்த ஒரு பெரிய ரோஜா அழகாக சிரித்து கொண்டிருந்தது.. அதை கண்ட பவித்ரா எட்டி அதில் முத்தமிட்டு சிரித்தாள்...
அவளின் அந்த கன்னம் குழிய சிரிப்பும் அவனுக்கு அவள் முகமும் இன்னொரு ரோஜாவை நினைவு படுத்தியது.. அதை ரசித்துக் கொண்டே அவள் அருகில் சென்றான்...
அவள் அருகில் வந்தவன்
"ஹாய் குட்டை.... " என்று குட்டை என்பதை அழுத்திச் சொன்னான் அவளின் முறைப்பை எதிர்பார்த்து..
அவன் தூரத்தில் வருவதை முன்பே கண்டு கொண்டவள் அவனின் குரல் கேட்டு உடனே அவனிடம் திரும்பாமலே
"ஹாய் நெட்டை... " என்றாள் அலட்டிக்காமல் நக்கலாக...
அவளின் அந்த அலட்சியத்தையும் ரசித்தவன்
"என்னது நான் நெட்டையா?? " என்றான் முறைத்தவாறு
"ஆமாம்.. பனமரத்துக்கு மேல இருந்துகிட்டு நெட்டை இல்லாமல் என்ன சொல்லுவாங்களாம்... நெட்டைடைடை .... " என்று இழுத்து சொன்னாள்..பின் நினைவு வந்தவளாக
“ஆமா... என்னை குட்டைனு சொன்னீங்களே... நான் மட்டும் என்ன குட்டையா?? என்ன கொஞ்சம் உயரம் கம்ம்மி....அவ்வளவுதான் “ என்று இழுத்தாள்..
"ஹா ஹா ஹா .ஏன் டி நாலரை அடி உங்க ஊர்ல கொஞ்சமா??? கணக்குல நீ வீக் போல “ என்று சிரித்தான்
"ஹலோ பாஸ்!! நான் கணக்குல சென்டம் ஆக்கும்... " என்று முறைத்தாள்
“சரி சரி ஒத்துக்கறேன்.... உங்கிட்ட சண்டை போட்டதுல நான் சொல்ல வந்ததை மறந்துட்டேன்" என்று தன் தலையை தட்டிக்கொண்டான்
“"ஹலோ ... அப்ப நான் என்ன சண்டக்காரியா” என்று மீண்டும் சண்டைக்கு வந்தாள்...
“அம்மா தாயே .. நான் சொல்றதை சொல்ல விடு. அப்புறம் முடிவு பண்ணலாம்.. நீ சண்டைக்காரியா இல்லையானு"
"நான் என்ன உங்க வாய பிடிச்சா வச்சிருக்கேன்... “என்று ஆரம்பித்தவள் அவன் திரும்ப முறைக்கவும்
“சரி சரி சொல்லுங்க" என்றாள்
"இன்னைக்கு ஈவ்னிங் ஒரு பார்ட்டிக்கு போகணும்.. ரெடியா இரு னு சொல்ல வந்தேன்..” என்று அவன் முடிக்கும் முன்னே
"நான் வரலை... " என்றாள்
"ஏன்?? " என்றான் கண்கள் இடுங்க
"எனக்கு இந்த மாதிரி பார்ட்டிக்கு போய் பழக்கம் இல்லை"
"இனிமேல் பழகிக்கோ..."
"அதெல்லாம் எனக்கு ஒன்னும் பழக வேண்டாம்.. நீங்க மட்டும் போய்ட்டு வாங்க"
"நமக்கு கல்யாணம் ஆய்டுச்சுனு தெரிஞ்சு வைப்போட வர சொல்லியிருக்காங்க.. அதனால் தட்ட முடியாது... ஸோ.. நீ என்ன பண்ற .. ஈவ்னிங் ரெடியாகி வர்ற.." என்றான் அதிகாரமாக...
" ஹலோ பாஸ் ... இங்க பாருங்க.. நீ சொல்றதுக்கெல்லாம் என்னால ஆட முடியாது "
"நீ ஒன்னும் ஆட வேண்டாம் பேபி... என் கூட வந்தா போதும்" என்று சிரித்தான்..
"ஐய... ஜோக்!!! ஈஈஈஈ உங்க ஜோக்குக்கு இழிச்சுட்டேன் போதுமா??? என்று தன் வாயை இரண்டு பக்கமும் இழுத்து காட்டினாள்...
அவளின் அந்த செய்கையில் அப்படியே அசந்து நின்றான்... இப்படி ஒரு பெண்ணை இதுவரை அவன் பார்த்ததில்லை...
இவனுடைய கம்பீரம் மற்றும் வசதி தெரிந்து இவனை நாடி வந்த பொண்ணுங்க எல்லாம் இவன் சொல்வதுக்கெல்லாம் ஆமாம் சாமி போடறதுங்களா தான் இருக்கும்... இவனை எதிர்த்து யாரும் ஒரு வார்த்தை பேசியது இல்லை...
இவன் பார்வை தங்கள் மேல் படாதா என்று ஏங்குபவர்கள் தான் அதிகம்.
இந்த பூனைக்குட்டி என்னடான்னா என்கிட்ட சரிக்கு சரியா நிக்கறா.. கொஞ்சம் கூட அசராமல் நீ எவ்வளவு பெரிய பணக்காரனாலும் எனக்கு ஒன்னுமில்லை.. நீ, உன் பணம் என்னை ஒன்னும் செய்யாது என்ற ஒரு நிமிர்வு இருந்தது அவளிடத்தில்...
தன்னையே இமைக்காமல் பார்த்து இருப்பவன் முன்னே கை நீட்டி சொடக்கு போட்டாள்...
“என்ன பாஸ்.. தூங்கிட்டீங்களா??? “ என்றாள் நக்கலாக
“ஹ்ம்ம்ம் உன்னை எப்படி வச்சு உங்க அம்மா சமாளிச்சாங்கனு யோசிச்சு கிட்டிருக்கேன்”..
“ஹா ஹா ஹா... நான் இல்லாமல் அங்க எங்கம்மாவுக்கு போர் அடிக்குதாம் தெரியுமா?”
“ஐய.. இப்பதான் நிம்மதியா இருப்பாங்க...எப்படியோ உன்னை என்கிட்ட தள்ளிவிட்டாச்சுனு..” என்று சிரித்தவன்
“சரி பேச்சை மாத்தாத.. ஈவ்னிங் பார்ட்டிக்கு வர்ற அவ்வளவு தான் “என்று சீரியசாக சொல்லி விட்டு திரும்ப நடந்தான்...
அவன் சென்ற பிறகுதான் அவளுக்கு உரைத்தது..
“சே!! நேற்று பாலோ பண்ணின அதே ட்ரிக் ஐ இன்னைக்கும் பாலோ பண்ணி இருக்கனும்.. நான் வர்ரேன் னு சொல்லி இருந்தா வேண்டாம்னு சொல்லியிருப்பான்.. பவித்ரா!! இப்படி முந்திரி கொட்டையாட்டாம் வரலைனு எடுத்த உடனே வாய கொடுத்து மாட்டிகிட்டயே!!! இனிமேல் ஒன்னும் பண்ணமுடியாது..அனுபவி” என்று புலம்பினாள் மனதுக்குள்..
“ஹ்ம்ம்ம் எவ்வளவோ பார்த்துட்டோம்.. இந்த பார்ட்டி என்ன ஜுஜுபி.. அதையும் தான் பார்த்திடலாம்” என்று தன்னைத் தானே தேற்றிக்கொண்டாள் பவித்ரா...
நம் பவிக்குட்டி எப்படி பார்ட்டியை சமாளிக்க போகிறாள்.?. அங்கு இருந்து என்ன பிரச்சனையை இழுத்துக்கொண்டு வரப்போகிறாள்? என்று பார்க்கலாம்..தொடர்ந்து படியுங்கள்..

Comments
Post a Comment