உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-18
அத்தியாயம்-18
மாலை பவித்ரா பார்ட்டிக்கு தயாராகி கொண்டிருந்தாள்.. அது ஒரு தம்பதியரின் 30 வது திருமணவிழா..
அவளுக்கான உடை மற்றும் நகைகளை ஆதித்யாவே எடுத்து வைத்துவிட்டு சென்றிருந்தான்..
அவளுக்கு புடவை மிகவும் பிடிக்கும் என்பதால் மிக நேர்த்தியாக கட்டி அதற்கு மேட்சிங் ஆக காதணிகளும் கையில் குலுங்கும் வளையல்களும் அணிந்திருந்தாள்.. தலையை பின்னி நீண்ட ஜடையாக்கியிருந்தாள்..அதில் மல்லிகை சரத்தை நான்கு பாகமாக மடித்து நீளமாக தொங்க விட்டிருந்தாள்
உள்ளே வந்த ஆதித்யா கண்ணாடியில் தெரிந்த அவளின் உருவத்தை கண்டு அசந்து நின்றான்...பின் அருகில் வந்தவன்
“வாவ்!! சூப்பரா இருக்க பேபி... “ என்று அவளை தன் பக்கம் திருப்பியவன்
“ஹ்ம்ம்ம் எதோ மிஸ்ஸிங்...” என்று யோசித்தான்.. பின் அருகில் இருந்த ட்ரெஸ்ஸிங் டேபிலின் ட்ராயரை திறந்து அதில் இருந்த கண் மையை எடுத்தான்.. ஒரு நிமிடம் கண்ணை மூடு என்றவன் அவள் கண்ணுக்கு மை இட்டான்...
பின் லிப்ஸ்டிக் ஐ எடுக்கவும் விழித்து பார்த்த பவித்ரா..
“ஐயோ!!! இதெல்லாம் வேண்டாம்... நான் போட்டது இல்லை... “என்று மறுத்தாள்..
“ஹே சும்மா இரு டீ .. உன் இத்துனூன்டு மூஞ்சில இந்த லிப்ஸ் இருக்கிறதே தெரியல.. அட்லீஸ்ட் இத போட்டாலாவது தெரியுதானு பார்க்கலாம்.. “ என்றவன் மெல்ல அந்த லிப்ஸ்டிக்கை போட்டு விட்டான்..
ஏற்கனவே மிக அழகாக திரண்டிருக்கும் அவளின் இதழ்கள் அவன் இட்ட சாயத்தால் அவளுக்கு மிகவும் எடுத்து காட்டியது.. அதில் கிறங்கியவன் அவளின் இதழ்களை மெல்ல வருடினான்.. அவனின் எண்ணம் புரிந்து அவன் கையை வேகமாக தட்டிவிட்டு முறைத்தாள் பவித்ரா ..
அவனும் சிரித்துகொண்டே சென்று ஒரு சோகர்(Choker) மாதிரி ஒன்றை கொண்டு வந்து அவள் கழுத்தில் அணிவித்தான்..
“வாவ்!! இப்ப இன்னும் கொஞ்சம் சுமாராயிட்ட... இப்பதான் எனக்கு கொஞ்சமா பொருத்தமா இருக்க” என்று கண்ணடித்தான்..
அவள் முறைத்து
“ஆமாம் இதெல்லாம் எப்படி உங்களுக்கு தெரியும்?? “ என்று கொக்கி போட்டாள்..
“மற்ற பொண்ணுங்களை பார்த்து... ”என்று ஆரம்பித்தவன்
“ஐயோ!! உண்மையை சொன்னா இவள் சாமியாட ஆரம்பிச்சுடுவா...” என்று அடக்கி கொண்டான்..
“ஹ்ம்ம்ம் உன் ஹஸ்பன்ட் இந்த ப்யூட்டி ப்ராடக்ட்ஸ் கம்பெனியின் ஓனர் பேபி.... இத எல்லாம் எப்படி, யாருக்கு பயன்படுத்தறது னு தெரிஞ்சுக்கலைனா நான் எப்படி பிசினஸ் பண்றதாம் “ என்றான் கண்ணடித்து
அப்பொழுது தான் அந்த பொருட்களை பார்த்தாள்..
“AN Beauty Products and Cosmetics” என்று பெயரிடப்பட்டிருந்தது..
“அப்படியென்றால் இந்த ப்ராடெக்ட்ஸ் எல்லாம் உங்களுதா?? .. என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் இந்த ப்ராடெக்ட்ஸ் தான் பயன்படுத்துவாங்க.. ஒரே புகழ்ந்து தள்ளுவாங்க... “என்று தன் கண்களை அகல விரித்தாள்...
ஆதித்யாவால் மையிடப்பட்டிருந்த அந்த பெரிய கண்கள் அவளின் ஆச்சர்ய விரிப்பால் இன்னும் பெரிதாக விரிந்து படபடத்தன...அதை கண்ட ஆதித்யா அப்படியே தலை கவிழ்ந்து விழுந்தான் அந்த கண்களில்...
“யப்பா.. என்னா கண்ணு இவளுது... ஒவ்வொரு பார்ட்ம் மே என்னை இப்படி படுத்துதே.. ... இவள் கிட்ட கொஞ்சம்.. ம்ஹூம் நிறையவே ஜாக்கிரதையா தான் இருக்கனும்” என்று நினைத்துகொண்டே
“ஹ்ம்ம் யெஸ் பேபி... நம்மளோடதுதான்..நீ இப்படி உன் கண்ணை பெருசா ஓபன் பண்ணுவனா இன்னும் நான் நாலு கம்பெனி கூட ஆரம்பிக்கலாம் போல .. “என்று கண்ணடித்தான்..
பின் எல்லா ஒப்பனையும் முடிந்து தன்னை கண்ணாடியில் பார்த்தவள் அசந்து நின்றாள்.. தானா அது என்று..
பின் ஆதி எழுந்து சென்று ஒரு செருப்பை கொண்டு வந்து கொடுத்து இதை போட்டுக்க என்றான்..
அதை கண்டவள்
“என்ன இது பாஸ்? .. இந்த ஸ்டூலை கொண்டு வந்து வச்சிருக்கீங்க?? “ என்று முழித்தாள்
“ஹே .. இது ஸ்டூல் இல்லை... இது வெட்ஜ்(wedge).. உன்னை மாதிரி குட்டையா இருக்கிறவங்க போட்டுக்கறது... “ என்று சிரித்தான்
“ஐய... இதெல்லம் எனக்கு வேண்டாம்.. இந்த ஸ்டூல் ஐ தூக்கி கிட்டு என்னால நடக்க முடியாது.. “என்று முறைத்தாள்..
“ஏ .. பேபி.. இத நீ போட்டா தான் என் இடுப்பாக்காவது இருப்ப.. இல்லைனா நீ என் பக்கத்துல இருக்கிறப்ப ரொம்ப குட்டையா தெரிவ... எல்லாரும் என்னைத்தான் கிண்டல் பண்ணுவாங்க.. அதனால நீ இத போட்டுக்க” என்று சிரித்தான்...
தன்னை குட்டை என்பதில் கோபமானவள் எழுந்து அவள் அருகில் நெருங்கி நின்று தன் உயரத்தை கை வைத்து அளந்து
“ஹ்ம்ம்ம் பாருங்க... உங்க இடுப்புக்கு மேல தான் இருக்கேன்... என்ன உங்க தோளுக்கு கொஞ்சம்ம் கம்மி...” என்றாள் முறைத்தவாறு...
“ஹா ஹா ஹா... இந்த கொஞ்சம் ங்கிறதுக்கு அர்த்தம் உன் கிட்ட தான் கேட்கணும்... நீ என் தோளுக்கு கொஞ்சம் கம்மி இல்லை.. இடுப்புக்கு கொஞ்சம்ம்ம்ம்ம் மேல ... “ என்று கொஞ்சம் என்பதை இழுத்து சொன்னான் அவளை சீண்ட.. அதில் கடுப்பானவள்
“ஆங்.. அப்பனா நான் வரலை.. நீங்க மட்டும் போய்ட்டு வாங்க... “ என்று முகத்தை திருப்பிக் கொண்டாள்..
“ஹ்ம்ம்ம் ஆனால் அவங்க என் வொய்ப் எங்கனு கேட்டா ..?? “
“இருக்கவே இருக்கு... உடம்பு சரியில்லைனு சொல்லிடுங்க... “
“ம்ஹும்.. எனக்கு பொய் சொல்ல வராது... “ என்று மறுத்தான்
“இத பாருடா... அரிச்சந்திரனுக்கு அண்ணன் நீங்க..பொய்யே சொல்லத் தெரியாது...இந்த கல்யாணத்தையே பொய் சொல்லி நடத்தல “ என்று தன் புருவங்களை உயர்த்தினாள்...
“ஹா ஹா.. ட்ரூ பேபி... நான் எதுக்கும் பொய் சொல்ல மாட்டேன்... நல்லா யோசிச்சு பார்.. இந்த கல்யாணத்துல எங்கயாவது நான் எதுவும் பொய் சொல்லி இருக்கேனானு...
என் பெயர் முதற்கொண்டு எல்லாம் கரெக்ட் ஆ தான் சொன்னேன்.. உன்னால என்னை கண்டு பிடிக்க முடியல.. அதுக்கு நான் என்ன பண்ணமுடியும் ...” என்று அவனும் தன் புருவங்களை உயர்த்தினான் அவளைப் போலவே...
அப்பொழுது தான் பவித்ரா உணர்ந்தாள்.. அவன் எங்கயும் தன்னை பற்றி எதுவும் மாற்றி கூறவில்லை.. எல்லாம் தன் முட்டாள் தனத்தால் தான் சரியாக விசாரிக்காமல் விட்டது.. என்று மனதுக்குள் புலம்பினாள்... அவள் முழித்துக் கொண்டு நிற்பதை கண்டவன்
“ஆமா.. .. அது யாரு அரிச்சந்திரன்?? “” என்றான் சந்தேகமாக.. அதுக்குள் தன்னை சமாளித்து கொண்டவள்
“ஷ் அப்பா. ஒரு பெருமாள் தெரியல... அரிச்சந்திரன தெரியல.. நீங்க எல்லாம் எதுக்கு தமிழ்நாட்டுல இருக்கீங்களோ.. பேசாமல் அந்த வெள்ளக்கார நாட்டுலயே இருந்துக்க வேண்டியதுதான.. “என்று பொரிந்தாள்...
“ஒகே ஒகே .. கூல் டவுன்.. இப்ப எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகற.. சரி நீ உன்னோட அந்த பேட்டா செப்பலையே போட்டுக்க.. நான் சமாளிக்கறேன்” என்று சிரித்தான்..
அவளும் முறைத்தவாறு கிளம்பி வெளியில் வந்தாள்.. பின் இருவரும் காரை அடைந்து,
அவன் வாங்கியிருந்த BMW காரில் சென்றனர்...
திருமணம் முடிந்து அவர்கள் இருவரும் முதல் முதலில் வெளியில் கிளம்புவது இதுவே..
பவித்ராவுக்கு ஏதாவது கோயிலுக்கு போகனும் போல இருந்தது...
ஆதியிடம் ஏதாவது கோயிலுக்கு போய்ட்டு போகலாம் என்றதுக்கு தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை... என்று மறுத்து விட்டான்..
அதை கேட்டு அவள் முகம் வாடியது.. பின் ஒரு சிறிய அம்மன் கோயில் வரவும் அதன் அருகில் காரை நிறுத்தி “நீ மட்டும் போய்ட்டு சீக்கிரம் வா “ என்று அனுப்பி வைத்தான்..
அவளும் சந்தோஷமாக இறங்கி வேகமாக சென்று அவசரமாக அந்த அம்மனிடம் வேண்டி கொண்டு குங்குமத்தை எடுத்து கொஞ்சமாக வகிட்டிளும் அவன் அணிவித்திருந்த தாலியிலும் வைத்து கொண்டு வேகமாக ஓடி வந்தாள்... அவளின் செய்கையை உள்ளே இருந்து பார்த்துகொண்டிருந்தான் ஆதி ...
காரின் உள்ளே வந்ததும் அவன் கண்ணை மூட சொல்லி குங்குமத்தை கொஞ்சமாக எடுத்து அவன் நெற்றியில் வைத்து அவன் முகத்தில் கை வைத்து லேசாக ஊதி விட்டாள்...
இதை எதிர்பார்க்காத ஆதி ஆடி போயிருந்தான்.. அதுவும் அவளின் முதல் ஸ்பரிசம் அவனுக்குள்ளே புரட்டி போட்டது அவனை... கண் மூடி அந்த சுகத்தை அனுபவித்தான்..
“பாஸ்... கிளம்புங்க போகலாம்” என்று பவித்ரா சொல்லவும் தான் நினைவுலகத்திற்கு வந்தான்....
பின் அவளை பார்த்து புன்னகைத்து காரை கிளப்பினான்..கொஞ்ச தூரம் சென்றதும்
“ஆமாம்... அந்த அம்மா கிட்ட என்ன வேண்டிகிட்ட?? “
“ஹ்ம்ம்ம் அதெல்லாம் சொல்ல முடியாது... சொன்னா பலிக்காதாம் “
“ஹ்ம்ம்ம் சரி.. அந்த குங்குமத்தை தாலியில் வைத்தியே.. அது எதற்கு?? “ என்று புரியாமல் கேட்டான்..
“ஹ்ம்ம்ம் இதை கட்டியவன் நீண்ட நாள் ஆரோக்கியத்தோடு இருக்கணும் என்று... ” என்று வேகமாக அவனுக்கு விளக்கம் கொடுக்கும் எண்ணத்தில் கூறிய பிறகுதான் உறைத்தது தான் அவனுக்காக வேண்டியதை அவனிடமே சொல்லிட்டமே என்று நாக்கை கடித்து கொண்டாள் பாதியில் நிறுத்தி..
அதை புரிந்துகொண்டவன்
“ஓ!! தேங்க் யூ பேபி... நீ எனக்காக வேண்டி கிட்டதுக்கு “என்று குறும்பாக சிரித்தான்...
“ம்ம்ம்ம் நினைப்பு தான்.. நான் ஒன்னும் உங்களுக்காக இதை வைக்கல... அங்கு இருந்தவங்க எல்லாம் வச்சு கிட்டாங்களா... நான் மட்டும் வைக்கலைனா நான் பெண்கள் குலத்தில் பிறந்தவள் இல்லைங்கிறமாதிரி ஒரு லுக் விடுவாங்க..... அதான் “ என்று சமாளித்தாள் தன் தோழ்வியை ஒப்புக்கொள்ளாமல்...
பின் இருவரும் ஏதொ பேசி கொண்டிருக்கையில் ப்யூட்டி ப்ராடக்ட்ஸ் பத்தி பேச்சு வந்தது..
“என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சொல்லுவாங்க. உங்க ப்ராடக்ட்ஸ் எல்லாம் நல்ல தரமானதா இருக்குமாம்.. அது எப்படி?? “ என்றாள்
“ஹ்ம்ம்ம் அது தொழில் ரகசியம்” என்றான் சிரித்தவாறு
“ஆமாம்... பெரிய ரகசியம்... இதெல்லாம் போடாமலே எவ்வளவு பெண்கள் அழகா இருக்காங்க தெரியுமா. என்னை மாதிரி ” என்றாள் நக்கலாக
“ஹே .. பார்த்து டீ... நீ பாட்டுக்கு இந்த மாதிரி எங்கயாவது வெளியில் சொல்லிடாத.. இது எதுவும் பத்திரிக்கை காரங்களுக்கு கிடைச்சது அவ்வளவு தான்... “
“ஏன் என்னாகும்?? “என்று புரியாமல் கேட்டாள்...
“ஹ்ம்ம்ம் ஆதித்யா மனைவியே அவங்க ப்ராடக்ஸ் ஐ பயன்படுத்தலைனு ஒரு நியூஸ் வந்துச்சுனா நம்ம காம்பெடிட்டர் அதையே பெருசாக்கி மார்கெட் ட டவுன் ஆக்கிடுவானுங்க... “ என்றான் சீரியசாக
“ஓ.. அப்ப என் பேச்சுக்கு அவ்வளவு மதிப்பா??? “ என்றாள் ஆச்சர்யத்தில்
“ஹ்ம்ம்ம் உன் பேச்சுக்கு இல்லை... ஆதித்யா நிஷாந்த் ஓட மனைவி ங்கிற அங்கீகாரத்துக்கு... நீ எது செய்தாலும் இனிமேல் அது என் மனைவியா தான் இந்த உலகத்திற்கு தெரியும்.. புரிஞ்சுதா?? “
“ஹ்ம்ம்ம்ம்.. அப்பனா இனிமேல் நீங்க எதுவும் என்கிட்ட வாலாட்டினீங்க, நான் பாட்டுக்கு மீடியா வ கூப்பிட்டு உங்க ப்ராடக்ட்ஸ் பத்தி எதாவது சொல்லிடுவேனாக்கும்... சோ பி கேர்புல்..“ என்று கையை நீட்டி மிரட்டினாள் அவனிடம்...
அவள் விளையாட்டுக்கு சொன்னதே பின்னால் அவளுக்கு வினையாக போவதை அறியவில்லை...
அவள் கை நீட்டி மிரட்டி கொண்டிருப்பதை ரசித்தவன்
“யெஸ் மேடம் “ என்று பயந்தவன் போல நடித்தான்.. இருவருக்குமே சிரிப்பு வந்தது..
பின் அவள் தன் கல்லூரியை பற்றி பேச ஆரம்பித்தாள்... அவள் என்ன பேசினாள் என்று அவன் காதில் நுழைய வில்லை. அவள் கை ஆட்டி ஆட்டி ஆக்சனோட பேசுவதும் அப்பொழுது அவள் காதணிகள் அசைந்தாடுவதும் அதிலயே லயித்து இருந்தான்.. எப்படி காரை ஓட்டினான் என்றுதான் தெரியவில்லை..
அவன் எப்பொழுதும் செல்லும் பாதை என்பதால் கார் தானாக பார்ட்டி நடக்கும் இடத்தை அடைந்தது....
Comments
Post a Comment