உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-19
அத்தியாயம்-19
ஆதியின் கார் அந்த பெரிய பங்களாவை அடைந்ததும் இருவரும் இறங்கி விழா நடக்கும் இடத்திற்கு சென்றனர்...
அழகிய வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டிருந்தது அந்த வீட்டு தோட்டம்... தோட்டத்திலயே விழாவையும் டின்னரையும் ஏற்பாடு செய்திருந்தனர்...
பார்ட்டி என்கவும் திரைப்படங்களில் காண்பிப்பதை போல பெரிய ஹோட்டலும் அதில் நவீனமாக உடை அணிந்து கையில் மதுக் கோப்பையுடனும் அப்புறம் எல்லாம் டான்ஸ் ஆடற மாதிரியும் நினைத்து வந்தவளுக்கு அது ஒரு எளிமையான பார்ட்டி எனவும் நிம்மதியாக இருந்தது...
“அடச் சே !! இதுக்குத்தான் இவ்வளவு பில்ட் அப் கொடுத்தானா ?? என்று நினைத்தவள் அவன் எதுவும் இந்த பார்ட்டியை பற்றி சொல்ல வில்லையே என்பது நினைவு வந்தது.. “நானா தான் பில்ட் அப் கொடுத்து கற்பனை பண்ணிகிட்டேன் போல .. “ என்று தலையை கொட்டிகொண்டாள் மானசீகமாக..
விழா நடக்கும் இடத்தை அடைந்தனர் இருவரும்.. சின்னதாக ஒரு மேடை.. அதன் மேல டேபில் போட்டு அதன் மேல ஒரு பெரிய கேக் வைக்கப்பட்டிருந்தது...அதன் மேல்
“Happy 30th Wedding Anniversary !! “ என்று எழுதப்பட்டிருந்தது.. அதன் அருகில் ஒரு தம்பதியினர் நின்று கேக் வெட்ட ரெடியாக இருந்தனர்...
ஆதியை கண்டதும் அவர்கள் முகம் மலர்ந்தது... இவனுக்காகவே காத்திருந்தார்கள் போல...
அவர்கள் அருகில் சென்றதும்
“Happy 30th Wedding Anniversary dear Uncle and Aunty!! Both of you have many more years together” என்று வாழ்த்தி அவன் கொண்டு வந்த பரிசினை கொடுத்தான்...
பின் பவித்ரா அவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கவும் ஆதியும் குனிந்து அவர்கள் காலை தொட்டான்..
அவர்கள் பதறி
“God bless my children” என்று அவர்களை தூக்கினர்.. பின் பவித்ராவை பார்த்து “மஹாலட்சுமி மாதிரி இருக்க மா... எங்க ஆதி சாய்ஸ் எப்பவுமே பெஸ்ட் ஆ தான் இருக்கும்.. அதை உன்னை தேர்வு செய்றதிலும் காட்டிட்டான்...
நாங்கலும் எவ்வளவோ பொண்ணுங்களை காட்டினோம்.. ஏன் ஒரு மினிஸ்டர் பொண்ணு கூட இவனைத்தான் கல்யாணம் பண்ணிக்கனும் னு ஒத்த கால்ல நின்னா... ஆனால் இவன் பிடிவாதமா எல்லாரையும் மறுத்துட்டான்... கடைசியில உன் பார்வையில விழுந்திட்டான்.. “ என்று சிரித்தார்....
“ஆமா ... இவன் ஊரை ஏமாத்தறதுக்கு பண்ணின கல்யாணத்துக்கு இது ஒன்னுதான் குறைச்சல்” என்று பொருமிக்கொண்டாள் பவித்ரா மனதில்...
“அப்புறம் நாங்க யாருனு சொன்னானா??? “ என்றார் அந்த பெண்மனி... இவள் எதுவும் பேசாமல் தயங்கி நிற்கவும்
“இவன் நாங்கள் பெறாத பையன்...எங்கள் கம்பெனியை விற்கும்பொழுது எங்களுக்கு அறிமுகம் ஆனான்... எங்க கம்பெனியை நல்ல படியாக நடத்தி அதிலயே இவரையும் அட்வைசராக நியமித்து அப்புறம் எங்களுக்கு எதுனாலும் பெர்சனல் ஹெல்ப் னாலும் இவன் தான் பார்த்துக்கறான்.. சச் எ க்ரேட் கை ...” என்று புகழ்ந்தார் அந்த பெண்...
தன் இரண்டு கைகளையும் தன் பேன்ட் பாக்கெட்டில் விட்டுகொண்டு அவர் கூறுவதையே சிரிப்புடன் கேட்டு கொண்டிருந்தான் ஆதி ... ஓரக்கண்ணால் அவனை பார்த்தவள் அவனின் அந்த மயக்கும் புன்னகையில் மயங்கி அவனையே ரசித்தாள் அவன் அறியாதவாறு
“ஆன்ட்டி.. போதும் ... ரொம்ப ஐஸ் வக்காதிங்க... எனக்கு ஏற்கனவே ரொம்ப கோல்ட்...எல்லாரும் வந்திட்டா வாங்க கேக் வெட்டலாம் “ என்று சிரித்தான்
“ஹா ஹா ஹா சரி ஆதி ...ஆரம்பிக்கலாம் “ என்று அனைவரும் அருகில் வர அவர்கள் இருவரும் அந்த கேக்கை வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டனர்.. பின் ஆதிக்கும் பவித்ராவுக்கும் ஊட்டினர்.. ஆதியும் ஒரு கேக் துண்டை எடுத்து அவர்கள் இருவருக்கும் ஊட்டி விட்டான்.. பின் மற்றவர்கள் வந்து வாழ்த்தவும் ஆதியும் பவித்ராவும் நகர்ந்து சென்றனர்...
எல்லா முகமும் புதுமுகமாக இருந்தது பவித்ராவுக்கு... யார் யாரையோ அறிமுகப்படுத்தினான்.. ஆனால் யாரும் அவள் கவனத்தில் நிக்க வில்லை... எல்லாமே பெரும் புள்ளிகளாக இருந்தனர்...அவளுக்கே ஆச்சர்யம்.. அவள் இதுவரை கேள்வி பட்டும் பத்திரிக்கையில் படித்த பெரும் புள்ளிகள் எல்லாம் தான் நேரில் சந்திப்போம் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை...
எல்லாரையும் வேடிக்கை பார்த்தவளுக்கு கொஞ்ச நேரத்துலயே போர் அடிக்க ஆரம்பித்தது...ஆதியோ யாரிடமோ தீவிரமாக பேசிக்கொண்டிருந்தான்...சரி.. வீட்டையாவது சுற்றி பார்க்கலாம் என்று கிளம்பி விட்டாள்...
வீட்டிற்குள் சென்றவள் அந்த வீட்டின் அமைப்பையும் அதில் இருந்த நவீன ஓவியங்களையும் ரசித்துக்கொண்டிருந்தாள்... அப்பொழுது உள்ளே வந்த அந்த பெண்மனி பவித்ராவை கண்டு
“அடடே... பவிக்குட்டிக்கு போர் அடிக்குதா?? எங்க போய்ட்டான் இந்த ராஸ்கல் உன்னை தனியா விட்டுட்டு??? . சரி.. நீ என்னோடு இரு... “ என்று சிரித்துக்கொண்டே அவளை ஒரு அறைக்குள் கூட்டி சென்றார்...
விழாவிற்கு வந்தவர்களுக்கு எல்லாம் பரிசு கொடுப்பதறகாக அவர் எல்லாம் சரிபார்க்க அவருக்கு கூட உதவினாள் பவித்ரா.. இது மாதிரி சிறு சிறு வேலைகளை அவர் கூடவே இருந்து செய்யவும் அவருக்கு பவித்ராவை ரொம்ப பிடித்து விட்டது.. கொஞ்ச நேரத்தில் அவருடன் ப்ரீயாக அரட்டை அடிக்க ஆரம்பித்து விட்டாள்....
மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருந்தாலும் ஆதியின் பார்வை அடிக்கடி அவளை சுற்றியே வந்தது... எப்படி அதுக்குள்ள ஒட்டிகிட்டா இங்க என்று சிரித்துக்கொண்டான்..
பின் சிறு சிறு விளையாட்டுகள் நடத்தினர்... பவித்ரா எல்லாவற்றிலும் ஆர்வமாக கலந்து கொண்டாள்.... இறுதியாக சிறந்த தம்பதியினருக்கான போட்டி ஒன்று...

பவித்ராவுக்கு அதில் கலந்து கொள்ள விருப்பமில்லை... இந்த திருமணமே ஒரு நாடகம் னு சொன்னவன் கூட போய் தம்பதிகளாக கலந்து கொள்ள மனம் கசந்தது.... அவள் மறுத்தாலும் அந்த அம்மா அவளை கட்டாயப்படுத்தி கலந்துக்க வைத்தார்...
வழக்கமான போட்டிதான்... தங்கள் மனைவிக்கு என்ன பிடிக்கும் என்றும் கணவன்களும், கணவன்களுக்கு என்ன பிடிக்கும் என்று மனைவியும் சரியாக எழுதனும்... யார் அதிக மதிப்பெண்கள் எடுத்தார்களோ அவர்களே சிறந்த தம்பதியினர்க்கான பரிசை வெல்வர்
போட்டிக்கான கேள்விகள் இருந்த பேப்பரை வாங்கியதும் பவித்ரா ஒரு நமட்டு சிரிப்புடன் அதை பில் பண்ணினாள்... சிறிது நேரத்தில் போட்டி முடிந்து ஆதித்யா நிஷாந்த , பவித்ரா தம்பதியினரே வெற்றி பெற்றனர் என்று அறிவித்தனர்.. அதை கேட்டதும் சாக் ஆகி நின்றாள் பவித்ரா...
பின் இருவரும் மேடைக்கு சென்று பரிசை வாங்கவும் எல்லாரும் அவர்களை பாராட்டினர்.. திருமணம் முடிந்து இன்னும் ஒரு வாரம் கூட ஆகாமலயே இருவருக்கும் நல்ல அன்டர்ஸ்டான்டிங்... பெர்பக்ட் கபுல் என்று வாழ்த்தினர்...
இருவருமே பே என்று முழித்து கொண்டு நின்றனர்_..
“இது எப்படி??? “ என்று இருவருமே தங்களுக்குள் கேட்டு கொண்டனர்... அதற்கு மேல் தாங்க முடியாமல் அந்த போட்டியை நடத்திய அந்த பெண்ணிடம் சென்று நின்றாள் பவித்ரா...
“Execuse me... உண்மையாளுமே நாங்கதான் வெற்றி பெற்றமா?? “ என்றாள் சந்தேகமாக
“யெஸ் மேடம்... “ என்று சிரித்தாள் அந்த பெண்
“இல்லையே.. இருக்க முடியாதே... இது எப்படி?? “ என்று மீண்டும் தலையை தட்டி யோசித்தாள்.. பின்
“என் ஹஸ்பன்ட் எழுதி கொடுத்த பேப்பரை கொஞ்சம் காட்டறீங்களா?? ... ஒரு சின்னதா செக் பண்ணனும்..” என்கவும் அந்த பெண் இவளை கொஞ்சம் வித்தியாசமாக பார்த்து பின் ஆதி எழுதி கொடுத்த அவனுக்கு பிடித்த பட்டியலையும் மற்றும் அவளுக்கு பிடித்ததாக அவன் குறித்திருந்த தாளையும் பவித்ராவிடம் கொடுத்தாள் அந்த பெண்...
அதை பார்த்தவள் அதிர்ந்து நின்றாள்.. அதில் ஆதி அவனுக்கு பிடிக்காததை எல்லாம் பிடித்ததாக மாற்றி எழுதி இருந்தான்...அதே மாதிரி பவித்ராவுக்கு பிடிக்காததை அவளுக்கு பிடித்ததாக எழுதி இருந்தான்...
நடந்தது இதுதான்... இந்த போட்டியில் ஜெயிக்க கூடாது என்று பவித்ரா வேணும் என்றே அவனுக்கு பிடிக்காததை பிடித்ததாக குறித்து இருந்தாள்... ஆதியும் இவள் கண்டு பிடித்து விடக்கூடாது என்று அவனுக்கு பிடிக்காததை பிடித்ததாக சொல்லி இருந்தான்..
அதே மாதிரியே பவித்ராவும் தனக்கு பிடிக்காததை பிடித்ததாக எழுதி இருக்கவும் அவனும் வேண்டும் என்றே அவளுக்கு பிடிக்காததையே எழுதி இருந்தான் இருவரும் ஒருவருக்கொருவர் அறியாமல்...
ஆக மைனஸ் X மைனஸ் = ப்ளஸ் ( - X - = +) ங்கிற மாதிரி இரண்டு பேரும் பிடிக்காததை எழுதி சிறந்த தம்பதிகளாயினர்.. அதிலும் ரெண்டு பேருமே மத்தவங்களுக்கு பிடிக்காததை கரெக்டா எழுதி இருந்தனர்...
பவித்ரா அந்த பேப்பரையே உற்று பார்த்துக் கொண்டிருப்பதை கண்ட அந்த பெண்
“என்னாச்சு மேடம்?? ” என்றாள்..
“ஹீ ஹீ ஹீ.. நத்திங்... “ என்று அசட்டு சிரிப்பை சிரித்தாள்... மனதுக்குள்
“கவுத்திட்டானே!!! ப்ராடு... “ என்று சிரித்துக் கொண்டாள்...
அவளையே கவனித்துக்கொண்டிருந்த ஆதிக்கும் புரிந்தது அவளின் தந்திரம்...
“குட்டச்சி.. என் ட்ரிக்கையே ஃபாலோ பண்ணியிருக்கிறாளே...சரியான ப்ராடு.. “ என்று சிரித்துக் கொண்டான்...எதேச்சையாக அவனை பார்த்த பவித்ரா இருவருமே நல்லா பல்ப் வாங்கியது புரிந்ததும் மீண்டும் அசட்டு சிரிப்பை சிரித்துக் கொண்டனர்.....
பவித்ராவையே பார்த்துக் கொண்டிருந்த அந்த பெண்,
“மேடம்... உங்க மேக்கப் சூப்பரா இருக்கு மேடம்.. என்ன ப்ராடெக்ட்ஸ் யூஸ் பண்றீங்க?? “ என்கவும்
அருகில் நின்று அவர்களை கவனித்துக் கொண்டிருந்த ஆதிக்கு திக் என்றது...
“ஐயோ.. இந்த குட்டச்சி என்ன சொல்லி இப்ப மாட்ட வைக்க போகிறாளோ.. “ என்று இருந்தது....
அதற்குள் ஆதியை கவனித்த பவித்ரா அவன் இவள் என்ன சொல்லப்போகிறாளோ என்று டென்சனாக இருப்பதை புரிந்து கொண்டாள்... பின் அவனை இன்னும் டென்சன் படுத்த எண்ணி,
“அதுவா... அதுவா... “ என்று வேணும் என்றே இழுத்து அவனுக்கு பிபியை எகிற வைத்தாள்...
பின்
“எங்க கம்பெனி ப்ராடெக்ட்ஸ் தான்... “ என்று கண்ணடித்தாள் ஆதியை பார்த்து குறும்பாக...
அவனுக்கு அப்பதான் நிம்மதியாக இருந்தது... இந்த குட்டச்சி காப்பாத்திட்டா... இல்லைனா இவ பாட்டுக்கு வேற ப்ராடெக்ட்ஸ் பெயரை பயன்படுத்துவதாக ஏதாவது உளறி அதை யாராவது கேட்டு அது மீடியாவுக்கு போய்ட்டா, அதை சமாளிக்கிறது கஷ்டம்..
வேற யாராவது சொன்னால் அவன் பெரிதும் கண்டுகொள்ள மாட்டான்.. மீடியால “ஆதித்யா மனைவியே அவங்க ப்ராடெக்ட்ஸ் ஐ பயன்படுத்தவில்லை” அப்படீனு ஒரு ஹை லைட் அ வேற போட்டு தொலைப்பானுங்க.“ என்று மனதுக்குள் புலம்பினான்...
பவித்ரா சொன்னதைக் கேட்ட அந்த பெண்
“உங்க கம்பெனி.?? .. “ என்று இழுத்தவள் அப்பொழுதுதான் நினைவு வந்தவளாக
“ஓ.. நீங்க ஆதித்யா சார் ஓட வைப் இல்ல.. சாரி மேடம் மறந்துட்டேன்.. AN Beatury products ஆ… நானுமே அதுதான் யூஸ் பண்றேன்... அப்புறம் ஆதி சார் இஸ் ஸோ ஸ்வீட்.. நீங்க ரொம்ப லக்கி என்று அவனை பற்றி புகழ இல்ல அவள் ஜொள்ளு விட்டதை ஆரம்பிக்க பவித்ரா முகம் கடுப்பானது...அதற்கு மேல் அவள் ஜொள்ளை தாங்க முடியாத பவித்ரா
“ஒகே மிஸ்.. அப்புறம் பார்க்கலாம் “ என்று அந்த இடத்தை விட்டு அகன்றாள்..அதை கண்டதும் ஆதிக்கு அவளை வெறுப்பேத்த என்று ஒரு ஐடியா கிடைத்தது என்று துள்ளி குதித்தான்...

Comments
Post a Comment