உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-20





அத்தியாயம்-20 

டின்னர் ஆரம்பமாகியது.. பப்பே முறையில் இருந்ததால், ஆதித்யா தன் உணவை எடுத்து கொண்டு ஒரு முக்கியமான நபருடன் பேசிகொண்டிருந்தான்..

அவர் விலகியதும் இதுவரை தனியாக மாட்டாமல் நழுவி வந்தவன் கிடைக்கவும் அவனை சுற்றிலும் பெண்கள் கூட்டம் அவனை சூழ்ந்தனர்..அனைவரும் அவனுடன் வழிந்து கொண்டிருந்தனர்..

என்றும் இல்லாமல் ஆதித்யாவும் இன்று அனைவருடனும் சிரித்து பேசிக் கொண்டிருந்தான் பவித்ராவை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே...

பவித்ரா மட்டும் தனித்து இருந்தாள்..அவனை கண்டு கொள்ளாமல் தானும் தன் உணவை எடுத்துக் கொண்டு சென்று தனியாக சாப்பிட்டு கொண்டிருந்தாள்..

“ஹாய் சிஸ்டர்.. ஹவ் ஆர் யூ ??? “ என்று புன்னகைத்தவாறு ப்ரேம் அவளின் அருகில் வந்தான்..

“ஹாய்... வாங்க ப்ரதர்.. ஐம் பைன் அன்ட் யூ?? “ என்று அவளும் புன்னகைத்தாள்...

“ஹ்ம்ம்ம் பைன் சிஸ்டர்... “ என்று சிரித்தான்

“என்ன ப்ரதர்?? .. கரெக்டா உங்க டைம்க்கு வந்திருக்கீங்க.. “ என்றாள் குறும்பாக

முதலில் முழித்தாலும் பின் அவள் தான் சாப்பாட்டு நேரத்துக்கு வந்ததை சொல்கிறாள் என்று புரிந்து கொண்டவன்

“ஹீ ஹீ ஹீ.. இந்த மாதிரி பார்ட்டி இல்ல பங்சன்க்கு நாம முன்னாடியே வந்து என்ன சிஸ்டர் பண்றது?? .. அதில்லாம இன்னைக்கு புரோக்ரம் அஜென்டா பார்த்தேன்.. எல்லாம் கல்யாணம் ஆனவங்களுக்கா இருந்தது... நான் மட்டும் சிங்கிளா வந்து என்ன பண்றது?? " என்றான்

“என்ன ப்ரதர் அப்படி சொல்லீட்டீங்க.. நீங்க சிங்கிளா வந்தாலும் வேற யாராவது பிகர் சிங்கிளா வந்திருந்தா ஜாயின் பண்ணி விட்டிருப்பம் இல்ல ... “ என்று கண் சிமிட்டினாள் குறும்பாக...

“ஆகா... இது தெரியாமல் போச்சே.. நல்ல சான்ஸ் மிஸ் பண்ணிட்டனே .. “என்று அவனும் சிரித்தான்...

“ஹ்ம்ம் முன்னயாவது ஆதி மச்சான் சிங்கிளா இருந்தான்.. அதனால எந்த பார்ட்டினாலும் கம்பெனி கொடுத்தான்.. இப்பதான் அவன் சம்சார கடலில் குதிச்சிட்டான்... நான் என்ன பண்றதாம்...” என்று மேலும் புலம்பினான்

“ஹ்ம்ம்ம் நீங்களும் அந்த கடல் ல குதிக்க வேண்டியது தான ப்ரதர்.... “

“அட போங்க சிஸ்டர் .. முதல்ல நம்ம மச்சான் நீந்தி மேல வரட்டும்.. அவன் எந்த கோலத்துல மேல வர்ரானு பார்த்துட்டு அதுக்கப்புறம் குதிக்கலாமா வேண்டாமானு முடிவு பண்ணலாம்... “ என்றான் சிரித்தவாறு

அதை கேட்டு முறைத்தாள் பவித்ரா...

“ஐயோ சிஸ்டர்... நீங்க திரும்பவும் காளி அவதாரம் எடுத்திராதிங்க... “ என்று பயந்தவன் போல நடித்தான்...

அதை கண்டு குலுங்கி சிரித்தாள் பவித்ரா....

அவனும் சிரித்துக்கொண்டே சுற்றிலும் தேடினான் ஆதியை... பின் அவன் அங்கு இருந்த பெண்களுக்கிடையில் கடலை போட்டுகிட்டிருந்ததை கண்டவன் பவித்ராவை பார்த்து

“என்ன சிஸ்டர்?? .. நீங்க அன்னைக்கு என்னை போட்ட போட்டில நம்ம மச்சான் இனிமேல் பொண்ணுங்க பக்கமே போக மாட்டானு நினைத்தேன்.. இப்ப என்னடான்னா இன்னும் அப்படியே தான் இருக்கான்...

அங்க பாருங்க எத்தனை பேர் அவனை சுற்றி.. என்னை எல்லாம் யாரும் கண்டுக்கவே மாட்டேங்கிறாங்க... சரி.. மச்சானுக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. இனிமேல் என் காட்டுல மழை தான்.. எல்லாரும் இப்பயாவது என்னை பார்ப்பாளுங்கனு பார்த்தா, இன்னும் அவனையே தான் சுத்திகிட்டிருக்காளுங்க... “ என்று புலம்பியவனை கண்டு சிரித்து விட்டு

அவள் தன் உணவிலயே கவனமாக இருந்தாள் பவித்ரா...அவள் கோபமாகி ஆதியை முறைப்பாள் என்று எதிர்பார்த்தவனுக்கு அவளோ எந்த ஒரு உணர்ச்சியையும் முகத்தில் காட்டாமல் கூலாக சாப்பிட்டுகொண்டிருப்பதை கண்ட ப்ரேம் இன்னும் கடுப்பாகி

“போங்க் சிஸ்டர்.. நீங்க வேஸ்ட்... “ என்று முடிக்கு முன்னே

“ஐயோ ப்ரதர்.. உங்களுக்கு புரியவே இல்லை... உங்க ஜீரோ வை சுற்றி.. அத்தனை பேர் இருந்தாலும் அவர் கண்கள் என்னை சுற்றித்தான் இருக்கும் “ என்று ஏதோ ப்ரேமை சமாளிப்பதற்காக சொன்னாள் பவித்ரா....அதை கேட்டு மீண்டும் ஆதியை நோக்கியவன்

“வாவ்... சூப்பர் சிஸ்டர்... நீங்க சொன்ன மாதிரியே தான் மச்சன் நொடிக்கொரு தரம் உங்களையே தான் பார்த்துகிட்டிருக்கான் .. ஆனாலும் நீங்க பயங்கர ஆள் தான் சிஸ்டர்.. நான்கு நாள்லயே அவனை இப்படி மாத்திட்டீங்க” என்று சிரித்தான்

“ஹி ஹி ஹி.. “என்று சிரித்து சமாளித்தவள் மெதுவாக அவனை பார்த்தாள் யாருக்கும் தெரியாமல் ...

அவர்களுடன் பேசிகொண்டிருந்தாலும் ஆதித்யாவின் பார்வை இவளையே அடிக்கடி தழுவியது... அதை கண்டவளுக்கு உள்ளுக்குள் சிலிர்த்தது...

“திருடா.. அப்ப அந்த பொண்ணுங்க கூட பேசறது எல்லாம் உன் நாடகமா?? ... என்னைத்தான் சைட் அடிச்சிகிட்டிருக்கியா?? “ என்று செல்லமாக உள்ளுக்குள் திட்டிக்கொண்டாள்...

அவளையே பார்த்துக் கொண்டிருந்த ப்ரேம்

“ஷ் அப்பா.. போதும் சிஸ்டர்.. நீங்க அவனை சைட் அடிச்சது... நான் ஒருத்தன் இங்க இருக்கேன் “ என்றான் பரிதாபமாக..

அதை கேட்டு அவசரமாக தன் பார்வையை திருப்பியவள் ஒரு அசட்டு சிரிப்பை சிரித்தாள்.. பின் ஏதோ ஞாபகம் வந்தவள்

“ஆமாம் ப்ரதர் .. உங்க கிட்ட ஒன்னு கேட்கனும் னு நினைச்சிருந்தேன்... இப்பதான் ஞாபகம் வந்தது...” என்று பீடிகை போட்டாள்

“ஹ்ம்ம் சொல்லுங்க சிஸ்டர்... “

“அது என்ன?? நான் அவருக்கு பொருத்தம் இல்லை.. என்னை கல்யாணம் பண்ணிக்காதனு சொன்னீங்களாம் உங்க ஃப்ரெண்ட் கிட்ட.. அப்படி என்ன உங்க ஜீரோ மன்மதனா?? “ என்று முறைத்தாள்.. அதை கேட்டு அதிர்ந்த ப்ரேம்

“அடப்பாவி... நல்ல மூட்ல இருக்கிறப்போ பொண்டாட்டி கிட்ட எதெல்லாம் சொல்றதுனு விவஸ்தை இல்லாமல் நான் உளறுனதை எல்லாம் உளறி வச்சிருக்கானே... இவனை என்ன பண்ண? ” என்று மனதுக்குள் புலம்பியவன்

“அது வந்து சிஸ்டர்.... “என்று இழுத்து...

“அது நீங்க மே மு சொன்னது சிஸ்டர்... மே பி நீங்க மச்சானுக்கு பெர்பெக்ட் மேட்ச் னு சொன்னேனே... அதை சொல்லலலையா அவன்... ” என்று அசடு வழிந்தான்

“மே மு .. மே பி ... அப்படீனா “என்று புரியாமல் அவனை பார்த்தாள்....

“ஹீ ஹீ ஹீ அது வந்து ... மேக்கப் க்கு முன்னாடி , மேக்கப்க்கு பின்னாடி...

நீங்க கல்யாணத்திற்கு முன்னாடி கிளம்பி வந்தீங்க இல்லை...”

“ஆமாம் ஒரு எருமை வந்து எங்களை கூட்டிகிட்டு போச்சு.... “

“அந்த எருமை நான் தான் சிஸ்டர்... “

“ஹீ ஹீ ஹீ தப்பா எடுத்துக்காதிங்க ப்ரதர் “என்று சமாளித்தாள்

“இதெல்லாம் அரசியல் ல சாதாரணம் சிஸ்டர்... நீங்க என்ன வேணாலும் சொல்லி திட்டுங்க.. உங்களுக்கு முழு உரிமையும் இருக்கு “ என்று சிரித்தவன் தொடர்ந்தான்..

“நான் உங்களை கூப்பிட வந்தப்போ ஒரு சாதாரண சுடிதாரில் மேக்கப் எதுவும் இல்லாமல் அழுத மூஞ்சியோடு இருந்தீங்களா... அதுவும் நைட்ல சரியா பார்க்கலை.. அதான் மச்சான்கிட்ட அப்படி சொன்னேன்..

ஆனால் காலையில உங்களை மேக்கப் புல பார்த்தப்போ அசந்து நின்னுட்டேன்... அவனுக்கு ஏத்த ஜோடி நீங்க என்று.. ஆதி கூட உங்க மேல வச்ச கண்ணை எடுக்கலை தெரியுமா...

அப்ப மயங்கினவன் தான்... இன்னும் வெளில வரலைனு நினைக்கிறேன்.. இன்னும் உங்களையே தான் பார்த்துகிட்டிருக்கான். “ என்று சிரித்தான்..

பவித்ராவோ “பின்ன ஏன் என்னை பிடிக்கலைனு சொன்னான் “என்று யோசித்தாள்...

“சாரி சிஸ்டர்... அதை மறந்திடுங்க... “ என்று மீண்டும் ஒரு அசட்டு சிரிப்பை சிரித்தான் ப்ரேம்..

“இட்ஸ் ஒகே ப்ரதர்... அப்புறம் உங்களை யாருமே பார்க்கலைனு வருத்தப்பட்டீங்க இல்லை.. அங்க பாருங்க... அந்த பொண்ணு உங்களையே ரொம்ப நேரமா சைட் அடிச்சுகிட்டிருக்கு... போய் ஜோதியில ஐக்கியம் ஆகிக்கங்க “ என்று கண்ணடித்தாள்..

“வாவ்.. நீங்க தெய்வம் சிஸ்டர்... “என்று சிரித்து அடுத்த நிமிடம் மறைந்து இருந்தான்..

பவித்ராவும் சிரித்துக் கொண்டே தன் உணவை முடித்து டெஸ்ஸர்ட் இருக்கும் இடத்திற்கு சென்று ஒரு ஐஸ்கிரீம் கப்பை எடுத்துகொண்டு வந்து ரசித்து சாப்பிட்டு கொண்டிருந்தாள்...

அந்த ஐஸ்கிரீம் அவளின் உதட்டில் வழுக்கிகொண்டு செல்வதை ரசித்துக் கொண்டிருந்தான் ஆதி...

அதையே இன்னும் இரண்டு கண்களும் ரசித்தன...

பின் அந்த கண்களுக்கு சொந்தக்காரன் அவளை நெருங்கி

“வாவ்... ப்யூட்டிபுள் ஏஞ்சல் “ என்றான் அவளை பார்த்து...

அதை கேட்ட பவித்ரா அவசரமாக  சுற்றிலும் தேடிப் பார்த்தாள்..

"என்ன தேடறிங்க " என்றான் அவளை பார்த்து..

"அது... நீங்க ப்யூட்டிபுள் ஏஞ்சல் னு சொன்னீங்களா... அதான் யாரு ஆது?? நாமும் பார்ப்போமே என்று தான் தேடிப்பார்த்தேன்.. பட் யாரையும் காணோமே! ” என்று சோகமாக முகத்தை திருப்பினாள் பவித்ரா...

"ஹா ஹா ஹா... நான் உன்னைத்தான் சொன்னேன் ஏஞ்சல் " என்று சிரித்தான்

"ஹி ஹி ஹி.. நீங்க சொல்ற மாதிரி ஏஞ்சல் நானில்லை... எனிவே தேங்கஸ் பார் யுவர் காம்ளிமென்ட் "என்று சாதாரணமாக கூறினாள் பவித்ரா..

வந்தவனுக்கோ ஒரு மாதிரி ஆகி விட்டது.. “ஏஞ்சல் ன உடனே பொண்ணுங்க மயங்குவாங்கனு பார்த்திருக்கான்.. இவள் இவ்வளவு திமிரா பதில் சொல்றாளே” என்று நினைத்தவன் தன் முயற்சியை விடாமல்

"பை தி வே I'm Rishi... Rishi group of companies chairman " என்று கை நீட்டினான்...

"ஒ.. ஐம் மிஸ்ஸஸ் ஆதித்யா " என்று அவன் கையை பிடிக்காமல் கை குவித்தாள்...

அவனுக்கு இன்னும் பல்ப் வாங்கியதை போல இருந்தது..

அதற்குள்

"சாரி.. தப்பா எடுத்துக்காதிங்க... இப்பதான் சாப்பிட்டனா.. கை இன்னும் வாஷ் பண்ணலை.. அதான் " என்று புன்னகைத்தாள்... அவள் புன்னகைக்கும் பொழுது விரிந்த அவளின் இதழ்கள் மேல் படிந்தது அவனின் பார்வை...

இதை தூரத்தில் இருந்து கவனித்த ஆதித்யாவின் உடல் இறுகியது..முகம் கடுத்தது.. .

“இட்ஸ் ஓகே ஏஞ்சல்.. ஆதித்யா?? ... என்று யோசித்தவன்

“ஓ .. AN Group of companies CEO… ஆதித்யா??? அவன் இப்பதான் தட்டு தடுமாறி வளர்ந்து வருகிறான்... எங்க கம்பெனி இஸ் அல்ரெடி எஸ்டாப்லிஸ்ட் “ என்றான் நக்கலாக...

ஆதித்யாவை மட்டம் தட்ட என்றே அவன் கூறியதை கேட்ட பவித்ரா கோபமானாள்.. பின் அவனை பார்த்து

“யெஸ் மிஸ்டர் ரிஷி... அவர் இப்பதான் தட்டு தடுமாறி சொந்த கால்ல நடந்து வளர்ந்து வருகிறார்... அவருக்கு சிறந்த தொழிலதிபருக்கான விருது கூட போன வருடம் கிடைச்சிருக்கு... உங்களை மாதிரி அப்பன் சம்பாதிச்ச சொத்துல பெருமை அடிச்சுக்கல” என்று திருப்பினாள்..

அவள் குரலில் கடிமை இருந்தது. ஆனால் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காண்பிக்க வில்லை...அவளின் கோபத்தை புரிந்து கொண்டவன்

“ஒகே ..ஓகே .. கூல் டவுன் ஏஞ்சல்... btw can I have a coffee with you in someday “ என்று விடாமல் வம்பு இழுத்தான்..

“ஸ்யூர் மிஸ்டர் ரிஷி.. நீங்க எப்ப வேணாலும் எங்க வீட்டிற்கு வரலாம்.. காஃபி என்ன விருந்தே போடறேன்.. வரும்பொழுது உங்க வைபையும் கூட்டிகிட்டு வாங்க “என்றாள் அவள் ஐஸ்கிரீமை சுவைத்தவாரே...

அதற்குள் அங்கு வந்திருந்த ஆதித்யா

“ஹாய் ரிஷி.. ஹௌ ஆர் யூ ?? “ என்று கை குலுக்கினான்...

அதற்குள் சுதாரித்து கொண்ட ரிஷி

“சாரி ஆதி.. உங்க கல்யாணத்திற்கு வர முடியலை.. அதான் உங்க வைபை எனக்கு தெரியல...நீங்க பிஸியா இருந்தீங்களா... அதான் சும்மா பேசிகிட்டிருந்தேன்.. “என்று சமாளித்தான்...பின்

“You guys carry on. Bye மிஸ்ஸஸ் ஆதித்யா “ என்று வேகமாக மறுபக்கம் சென்றான் ரிஷி...

அவன் சென்றதும் ஆதி பவித்ராவை பார்த்து முறைத்தான்.. பவித்ராவிடம் எதுவும் பேசவில்லை... பின் இருவரும் கிளம்பி அந்த தம்பதியினரிடம் விடைபெற்று கிளம்பினர்.

பவித்ரா, இன்னும் கடலை போட்டு கொண்டிருந்த ப்ரேமிடம் கையசைத்து கட்டை விரலை உயர்த்தி(thumbs up) காட்டி விடை பெற்றாள் சிரித்தவாறு... இதையும் குறித்துக் கொண்டான் ஆதித்யா...


Comments

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!