உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-21
அத்தியாயம்-21
காரை எடுத்து கிளம்பியதும் அதுவரை பொறுமையை இழுத்து பிடித்து இருந்தவன் கத்த ஆரம்பித்தான் ஆதித்யா..
“உனக்கு அறிவு இருக்கா டி.. அவன் ஒரு வுமனிஸ்ட்.. அவன் கிட்ட போய் இழிச்சு இழிச்சு பேசிக்கிட்டு இருக்க..” என்று கத்தினான்
“நீ மட்டும் என்னவாம் “ என்று மெல்ல முனகிக்கொண்டாள். அவனுக்கு கேட்காதவாறு...
கொஞ்ச நேரம் அவளை திட்டியவன் அவள் இன்னும் அமைதியாக இருப்பதை கண்டு
“வாயில என்ன?? .. பேசு “ என்றான்..
அவளும் மெதுவாக அவன் புறம் திரும்பி
“பேசி முடிச்சிட்டீங்களா???
“என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்தது யாருனு யோசிச்சீங்களா?? ... புது இடத்துல என்னை கொண்டு வந்து விட்டுட்டு நீங்க பாட்டுக்கு சுத்தி கிட்டிருந்தா கண்டவனும் வந்து பேசுவான் தான்...உன்னை யாரு என்னை தனியா விட்டுட்டு போக சொன்னது?” என்று பூமரங்கை அவனிடம் திருப்பினாள்..
அவளின் கேள்வி நியாயமானதாக இருந்தது... அதை புரிந்து கொண்டவன் கொஞ்சம் தணிந்து
“சாரி “என்றான்..
பவித்ராவால் நம்ப முடியவில்லை அவன் தன்னிடம் சாரி கேட்பது...
“சரியா கேட்கலை... இன்னோடு தரம் சொல்லுங்க பாஸ்” என்றாள் குறும்பாக
“ஹ்ம்ம்ம் சாரி.. இனிமேல் உனக்கு இந்த மாதிரி ஒரு சூழ்நிலை வராது... போதுமா “ என்றான்
“வாவ் .. சூப்பர்... பவித்ரா... தி க்ரேட் ஆதித்யாவே உங்கிட்ட சாரி கேட்டுட்டார்... நீ இனிமேல் ஜெயிச்சுடுவ “என்று தன் ஆட்காட்டி விரலை அவள் முகத்தை நோக்கி காட்டி தனக்குத் தானே பேசிக்கொண்டாள்..
அதை கண்டு சிரித்தவன்
“ஆமாம்.. ரிஷியை முன்னாடியே தெரியுமா?? “
“ஓ .. தெரியுமே... நிறைய ரிஷியை பத்தி படிச்சிருக்கேன்.. நீங்க எந்த ரிஷியை பற்றி கேட்கறீங்க?? “ என்றாள் நக்கலாக
“ஹ்ம்ம்ம் உன் கூட பேசிக்கிட்டிருந்தானே அந்த ரிஷி... “ என்று முறைத்தான்
“ஹ்ம்ம்ம் அந்த ஜொள்ளு ரிஷிய பத்தி எனக்கு எப்படி தெரியுமாம்??”
“அப்ப எப்படி அவன் அப்பன் சொத்துல ஆடிகிட்டு இருக்கானு கரெக்டா சொன்ன?? ”
“ஆமாம் ... அது பெரிய இமயமலை ரகசியம்.... இப்ப இருக்கிற முக்கால்வாசி பணக்காரங்க அவங்க அப்பங்க தாத்தாங்க சம்பாதிச்சதை வச்சுதான சுத்திகிட்டு இருக்காங்கனு தெரியாதா.. சும்மா ஒரு ப்ளோ ல சொன்னது தான்...
“அடிப்பாவி... சரியா தெரியாமலயே தெரிஞ்ச மாதிரி அடிச்ச???”
“ஹி ஹி ஹி.. இதெல்லாம் அரசியல் ல சாதாரணம் பாஸ்.. ஆமா உங்களுக்கு எப்படி தெரியும் நாங்க பேசினது?? ஒட்டு கேட்டீங்களா? “ என்றாள் கண்கள் இடுங்க
“ஆமாம் ஒட்டு கேட்கற மாதிரியா நீ பேசுன.. நீ பேசுனது தான் அங்க இருந்த எல்லாருக்குமே கேட்டுச்சே”
“அவ்வளவு சத்தமாமாமா வாவாவா கேட்டுச்சு??? “என்று வடிவேல் ஜோக்கில் இழுத்தாள்...
“ஹா ஹா ஹா “ என்று சிரித்தான் அவளின் நடிப்பை கண்டு..
“அப்பாடா பாஸ் சிரிச்சுட்டார்... .” என்று அவளும் சிரித்தாள் கை தட்டி
“சரி என்னை பத்தி சொன்னதும் ப்ளோ ல சொன்னதுதானா???.. “ என்றான் ஆர்வமாக
“ஹ்ம்ம்ம்ம் இல்ல.. அது படிச்சது வச்சு சொன்னது..”
”என்ன படிச்ச?? ..
“ஓ என்னோட புரபைல வச்சா... பரவாயில்லையே என்னை பற்றி ஆராய்ச்சி எல்லாம் பண்ணி இருக்க போல இருக்கு...” என்றான் குறும்பாக
“ஹலோ பாஸ்... ரொம்ப பெருமை அடிச்சுக்காதிங்க... ஆராய்ச்சி பண்ற அளவுக்கெல்லாம் நீங்க ஒன்னும் பெரிய லாடு லபக்கு தாஸ் இல்லை.. சும்மா புரட்டினேன்... அதுல தெரிஞ்சது தான்..” என்றாள் நக்கலாக
“ஹ்ம்ம்ம் அப்ப என்னோட Twitter பக்கத்தையும் பார்த்தியா ? “ என்றான் மீண்டும் ஆர்வமாக
“ஹ்ம்ம்ம் பார்த்தேன் பார்த்தேன்... அதையும் பார்த்தேன்.. நீங்க போஸ்ட் பண்ணி இருந்த கல்யாண போட்டோவையும் பார்த்தேன்..
ஆனாலும் பக்காவா ப்ளான் பண்ணிதான் செஞ்சு இருக்கீங்க.. ஊருக்காக கல்யாணம் னாலும் அதையும் போட்டோ எடுத்து எல்லாருக்கும் தெரியட்டும் என்று போட்டிருக்கீங்க இல்லை.. உங்க ப்ளான் சூப்பர் பாஸ்.. ” என்று கை தட்டினாள்..
“அது ஒன்னும் ஊருக்காக போட்டதில்லை.. என் மனதுக்கு பிடிச்சு போட்டது “என்று சொல்ல வந்தவனை
“டேய் ஆதி... நிறுத்து.. இந்த குட்டச்சி உங்கிட்ட போட்டு வாங்கிட்டு இருக்கா... ஏற்கனவே நீ சாரி சொன்னதுக்கே அவளுக்கு கொம்பு வந்திடுச்சு... இப்ப போய் உன் மனதுக்கு பிடிச்சுதான் அந்த போட்டோவை போஸ்ட் பண்ணின னு சொன்ன,
பரம பதத்துல ஒரு பெரிய ஏணி வந்தா எப்படி நேரா டார்கெட் கிட்ட போய்டுவமோ அதே மாதிரி நேரா மேல ஏறி உன் தலைல உட்காந்திடுவா... நீ டார்கெட் ரீச் ஆறப்போ அந்த பெரிய பாம்பு கிட்ட கடி வாங்கி சர்ருனு கீழ வர்ற மாதிரி சறுக்கிடுவ.. அதனால அடக்கி வாசி.... ” என்று அபாய சங்கை ஊதியது அவன் மனஸ்...
உடனே ஆதி தன்னை சமாளித்துக் கொண்டு
“ஹி ஹி ஹி.. பரவாயில்லையே.. சரியா கண்டு பிடிச்சுட்ட... “ என்று சிரித்தான்..
அவன் ஒரு வேளை தான் விரும்பி தான் அந்த அந்த போட்டோவை போஸ்ட் பண்ணினேன் னு சொல்வானு ஒரு வித எதிர்பார்ப்புடன் அவனையே பார்த்து இருந்தவளுக்குள் ஒரு சிறு ஏமாற்றம்... அதை வெளியில் காட்டாமல் திரும்பி கொண்டாள்..
“ஆமாம்... அந்த ப்ரேம் கிட்ட என்ன முறைச்சுகிட்டிருந்த?? “ என்றான்.அதை கேட்டு வேகமாக திரும்பியவள்
“ஹலோ... எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும்.. எல்லாத்தையும் உங்ககிட்ட விலாவரியா விளக்கனும் னு இல்லை... நான் கேட்டனா அந்த பிசாசுங்க உங்ககிட்ட என்ன சொன்னாங்கனு” என்று முறைத்தாள் கோபமாக
“பிசாசுங்களா? யாரு அது பேபி? ” என்று தெரியாதவாறு கேட்டான்..
“அதான்... உங்களை சுற்றி சுத்திகிட்டிருந்தாளுங்களே அவளுங்க தான்.. இப்பதான் உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சு இல்லை..அடுத்தவ புருஷன் னு தெரிஞ்சும் ஏன் இன்னும் உங்க பின்னாடியே சுத்திகிட்டு இருக்காளுங்க.. நீங்களும் ஈ னு பல்லை இழிச்சுகிட்டு இருக்கீங்க..” என்று தன் மனதில் இதுவரை குமுறிக் கொண்டிருந்ததை எல்லாம் கொட்டி தீர்த்தாள்..
அதை கேட்டதும் துள்ளிக் குதித்தான் ஆதித்யா..
“இத.. இத..இதத்தான் எதிர்பார்த்தேன்.. இந்த பொறாமையை தூண்ட தான் அவன் அவர்களுடன் நெருக்கமாக சுத்தியது.. உரிமை, அன்பு இருக்கிற இடத்துல தான் இந்த பொறாமை இருக்குமாம்.. அப்ப இந்த பூனைக்குட்டி மனசுல நான் இருக்கேன்.. அதான் இப்படி பொங்கறா... இது போதும்.. சீக்கிரம் அவளை என் வழிக்கு கொண்டு வந்திடலாம்... “ என்று குதித்தான்...
ஆனால் அந்த ரிஷி அவளிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது அதை கண்டு தான் பொறாமை பட்டதுக்கு என்ன அர்த்தம் என்று யோசிக்க மறந்து இருந்தான்...
பவித்ராவுக்கோ ஆதி ,ப்ரேம் பற்றி கேட்டதும் ப்ரேம் சொன்ன “உங்களை வச்ச கண் வாங்காமல் பார்த்தான்” என்றதும் முதலிரவு அன்று “உன் மூஞ்சியை கண்ணாடியில் பார்த்து இருக்கியா” என்று அவன் கத்தியதும், அப்பப்ப தன் மேல் படியும் அவனின் ஆர்வமான பார்வையும் நினைவுக்கு வந்தன.....
“இதில் எது உண்மை?? . எது அவன் நடிப்பு ?? “ என்று புரியாமல் குழம்பினாள்...ஆனாலும் மனதுக்குள் ஏதோ ஒன்று அழுத்த மீண்டும் மறுபக்கம் திரும்பி கொண்டு அப்படியே வெளியில் வேடிக்கை பார்த்து வந்தாள் அமைதியாக
ஆதித்யாவோ படு உற்சாகமாக இருந்தான்... அவள் மனதில் கண்டிப்பா தான் இருப்பது தெரிந்தது.... அதோடு அவள் அந்த ரிஷி இடம் நடந்து கொண்டதும்..
ரிஷி பவித்ரவிடம் பேச ஆரம்பித்ததுமே அவன் நெருங்கி வந்து அவர்கள் அருகில் நின்று கொண்டு அவர்கள பேசுவதை கவனித்தான்.. இதில் எங்க பவித்ரா ரிஷின் பேச்சுக்கு மயங்கிடுவாளோ என்று உள்ளுக்குள் பயமாக இருந்தது..
அவள் அந்த ரிஷிக்கு திருப்பிய விதம் கண்டு அசந்து நின்றான்.. கொஞ்சம் கூட அவனுக்கு இடம் கொடுக்காமல் பேசியதும் அதோடு தன்னை விட்டு கொடுக்காமல் பேசியது இன்னும் அவனுக்கு இனித்தது..
“மை ஸ்வீட் பேபி” என்று சொல்லி கொண்டவன் அவளை திரும்பிப் பார்த்தான்...அவள் வெளிப்புறம் பார்வையை பதித்து இருந்தாள்.. வெளியில் சாலையில் இருந்த மஞ்சள் விளக்கில் அவள் முகம் ஜொலித்தது...
அதை ரசித்துகொண்டெ ஆங்கில ரொமான்ஸ் பாடல்களை ஒலிக்க விட்டான்... கூடவே அவனும் சேர்ந்து பாடினான் உற்சாகமாக...
ஆதியின் குரலை கேட்டு திடுக்கிட்டு திரும்பி பார்த்தாள்.. அவளையே பார்த்த வண்ணம் பாடிக்கொண்டிருந்தவன் அவள் திரும்பவும் அவளை பார்த்து குறும்பாக கண் சிமிட்டினான்..
அதில் கடுப்பானவள் டக்குனு அந்த பாட்டை நிறுத்தி விட்டு இளையராஜா பாடல்களை ஒலிக்க விட்டாள்
“ஹே!! இப்ப எதுக்குடி அதை நிறுத்தின?? .. “ என்றான் அவளை செல்லமாக முறைத்தவாறு
“ஹ்ம்ம்ம் எனக்கு அந்த பாட்டு பிடிக்கலை.. இந்த தமிழ் பாட்டை கேளுங்க.. நல்லா இருக்கும் “ என்று முறைத்தவாறு மீண்டும் மறுபக்கம் திரும்பி கொண்டு பாடலை ரசிக்க ஆரம்பித்தாள்..
எல்லாம் ராஜாவின் 80 ஸ்ல வந்த ரொமான்ஸ் பாடல்கள்...
அதுவும் முதலில் ஒலித்த
பூங்கதவே தாழ் திறவாய் !!
பூவாய் பெண் பாவாய் !!
பொன் மாலை சூடிடும்
பூவாய் பெண் பாவாய் !!
பாடலை கண்மூடி மிகவும் ரசித்தாள் பவித்ரா.. .
ஆதிக்கு முதலில் தமிழ் பாடல் பிடிக்க வில்லை என்றாலுல் அதில் இருந்த வரிகளும் பின் அதன் இனிமையும் கொஞ்சம் கொஞ்சமாக பிடிக்க ஆரம்பித்தது...
அதுவும் அடுத்து வந்த
வா வா அன்பே அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே
உன் வண்ணம் உன் எண்ணம்
எல்லாமே என் சொந்தம்
இதயம் முழுதும் எனது வசம்
நீலம் கொண்ட கண்ணும் நேசம் கொண்ட நெஞ்சும்
காலம் தோறும் என்னைச் சேரும் கண்மணி
பூவை இங்கு சூடும் பூவும் பொட்டும் யாவும்
மன்னன் எந்தன் பேரைக்கூறும் பொன்மணி
காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம்
நீ வாழத்தானே வாழ்கின்றேன் நானே
நீயின்றி ஏது பூவைத்த மானே
இதயம் முழுதும் எனது வசம்....
…
…
என்ற பாடல் பாடிகொண்டிருக்கும் பொழுதே பவித்ரா அவளை அறியாமல் ஆதியை நெருங்கி ஒட்டி அமர்ந்து அவனின் தோளில் சாய்ந்து அந்த பாடலை ரசிக்க ஆரம்பித்தாள்...
அவளின் செயலால் முதலில் திகைத்தாலும் பின் ஆதிக்கும் அவளின் அந்த நெருக்கம் சுகமானதாக இருந்தது... இரவு நேரத்தில் காரில் தனியாக இந்த மாதிரி பாடல்களைக் கேட்டும் அருகில் தன்னவள் நெருங்கி அமர்ந்து இருப்பது புது வித சுகமாக இருநதது அவனுக்கு....
அதோடு அவளின் தலையில் சூடியிருந்த மல்லியின் வாசம் அவனை இன்னும் கிறங்க வைத்தது
அப்பொழுது ஒலித்த அந்த பாடலின் வரிகளில் வரும்
காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது
கன்னி பேசும் பேச்சிலும் என்ற வரியின்பொழுது பவித்ராவின் வாய் ஓயாமல் பேசும் பேச்சும் அவளின் வித்தியாசமான கை அசைத்து பேசும் ஆக்சனும் நினைவு வந்தது.. சிரித்துக்கொண்டே மெல்ல குனிந்து அவளை பார்த்தான்... அவளும் பாடலில் லயித்து இருந்தாள்...
இன்னும் பல இனிமையான பாடல்களை ரசித்துக்கொண்டே வர கார் வீட்டை அடைந்தது...
காரை நிறுத்தியவன் மெல்ல குனிந்து அவளை பார்த்தான்... அவன் மார்பில் சாய்ந்து நன்றாக உறங்கி இருந்தாள்...இறங்க மனமே இல்லை அவனுக்கு.. அப்படியே இருக்கலாம் போல ஏங்கியது அவன் உள்ளம்
அப்படியே தன் மொபைலில் அதை பதிந்து கொண்டான்..
அசந்து தூங்கும் அவளை எழுப்ப மனம் இல்லாமல் அவளை அப்படியே கையில் அள்ளிகொண்டான்...
பூச்சென்டை விட மென்மையாக இருந்தது அவளின் உடல்...
“பூனக்குட்டி... இவ்வளவு மெலிசா இருக்கியேடி..” என்று அவளை இலகுவாக தூக்கி கொண்டு அவனின் அறையை நோக்கி நடந்தவனின் மனம் தன் கட்டுப்பாட்டை இழந்து தடுமாற ஆரம்பித்தது...
அங்கு ரிஷியோ கோபத்தில் குறுக்கு நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தான்.. அவன் காபி சாப்பிட அழைத்து எந்த பெண்ணும் மறுத்ததில்லை இதுவரை... இவள் என்னடா என்றால் மறுத்ததோடு மனைவியோடு வருமாறு நக்கலாக வேற கூறினாள்.. பெருத்த அவமானமாக இருந்தது அவனுக்கு.. அப்பொழுது வெளியில் காட்டி கொள்ளவில்லை என்றாலும் அவன் உள்ளுக்குள் குமுறிக்கொண்டிருந்தான்...
அவளை பழி வாங்க வேண்டும்.. அவளின் திமிரை அழித்து அவன் காலடியில் விழ வைக்கவேண்டும் என்று கொக்கரித்தது அவன் மனம்.. அதற்கு அந்த ஆதித்யாவை அழித்தாலே அவள் தானாக தன்னிடம் வருவாள் என்று கணக்கிட்டு ஆதித்யாவை எப்படி அழிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தான்...அவன் மனமோ உன்னை விட மாட்டேன் என்று குமுறிக்கொண்டிருந்தது பவித்ராவை நினைத்து....
Comments
Post a Comment