உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-22

 


அத்தியாயம்-22

தியின் மார்பில் சாய்ந்து நன்றாக உறங்கிய பவித்ராவை அப்படியே கையில் அள்ளி கொண்டான்.. அவளின் மென்மையான பூப்போன்ற மேனியின் மென்மையில் தன் கட்டுபாட்டை இழந்து தடுமாற ஆரம்பித்தது அவன் மனம்...

எப்பவும் வேகமாக எட்டி வைத்து நடப்பவன் இன்று அவளை சுமக்கும் அந்த சுகத்தை இழக்க மனமின்றி மெதுவாக மிகவும் மெதுவாக  நடந்தான் அவளை ரசித்துக்கொண்டே... அப்படியும் அவன் அறை வந்திருந்தது...

“அதுக்குள்ள அறை  வந்திருச்சா?? “ என்ற ஏமாற்றத்துடன் அறைக்குள் சென்றவன் நேராக அவனின் படுக்கைக்கு சென்றான்...அவளை அப்படியே கட்டிக்கொண்டு      அவனுடனே கட்டிலில் தூங்க வைக்க  ஆசைதான்..

ஆனால்  அவள் எழுந்தால்  சாமி ஆடிடுவா என்று தன்னை  கட்டு படுத்திக்கொண்டவன்  திரும்பி வந்து அவளை அந்த பெரிய ஷோபாவில்  கிடத்தினான் மனமே இல்லாமல்.. மெல்ல உறுத்தும் நகைகளை மட்டும் கழட்டி வைத்தான்.. குழந்தை போல உறங்கும் அவளின் முகத்தை நெருக்கத்தில் காணும் பொழுது அவனுக்கு சத்திய சோதனையாக இருந்தது...

இருந்தும் சமாளித்துக்கொண்டு அவள் மேல் போர்வையை போர்த்தி நெற்றியில் மென்மையாக முத்தம் இட்டான்...

பின் நேராக பால்கனிக்கு சென்றவன் அன்று நடந்த சுவையான நிகழ்வுகளை அசை போட்டான்.. காலையில் அவளிடம் பேசியதிலிருந்த்து , அவளை அலங்கரித்தது, அவள் குங்குமம் இட்ட பொழுதான அவளின் முதல் ஸ்பரிசம், அப்புறம் அந்த ரிஷியை அவள் தள்ளி வைத்தது என்று அத்தனையும் அவளின் ஒவ்வொரு பரிமாணத்தையும் காட்டியது...

அவனை அறியாமலே அவளின் ஒவ்வொரு செயலையும் ரசிக்க ஆரம்பித்திருந்தான்..

இது ஒரு புது விதமான சுவாரசியமாக இருந்தது அவனுக்கு..எவ்வளவு வசதி இருந்தும் இந்த மாதிரி ஒரு சுகத்தை அனுபவித்ததில்லை அவன் பவித்ராவை காணும் வரை.. அவளை கண்ட முதலே அவனுக்கு வாழ்க்கையில் எல்லாம் சுவாரசியமாக ருசிக்க ஆரம்பித்தது...

அவளை கண்ட நாள் முதல் இன்று வரை எல்லாம் திரும்ப அசை போட்டான்...அவளை பார்த்த நாள் முதல் ஒவ்வொரு நாளும் வித்தியாசமாக இருப்பதை உணர்ந்து

“You are making my life interesting and beautiful baby… I really enjoying.. “ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டவன் உல்லாசமாக விசில் அடித்த படியே  தனக்கு பிடித்த ஆங்கில பாடலை பாடிய படி நடந்து கொண்டிருந்தான்.. பின் வெகுநேரம் ஆகியே  உறங்க வந்தான்..

காலையில் எழுந்த பவித்ரா தான் அறையில் உறங்கி கொண்டிருப்பதை கண்டு முழித்தாள்... நேற்று இரவு காரில் அவனுடன்  பாடலை ரசித்த படியே வந்தது நினைவு வந்தது.. அதற்கப்புறம்  எப்படி இங்க வந்தேன்  என்று நினைத்தவள் தான் உறங்க ஆரம்பித்தது ஞாபகம் வந்தது..

“சே என்ன பவித்ரா இது??  அவன் மேல சாஞ்சு தூங்கிட்டியோ?? .. எப்படித் தான் அவன் பக்கத்தில் இருந்தால் மட்டும் உனக்கு இப்படி தூக்கம் வருதோ?? ..

ஐயோ!!  என்னை  தூக்கிட்டா வந்தான்?? .. போச்சு  மானம் போச்சு ...”  என்று புலம்பி கொண்டெ குளியலறைக்குள் சென்றவள் ரிப்ரெஸ்  ஆகி வெளியில் வந்தாள்..    

பின் தன் அலைபேசியை எடுத்து பார்த்தவள் வாட்ஸ்அப் ல்  அவனின் மெசேஜ் வந்திருந்தது..

“குட் மார்னிங் பேபி...Have a nice day!! என்று ஒரு பூங்கொத்தை அனுப்பிருந்தான்..

“இது என்ன  புது பழக்கமாம்... மெசேஜ் அனுப்பறது...  திருடா... ” என்று திட்டி கொண்டே கீழ வந்து வள்ளி கொடுத்த காபியை வாங்கி கொண்டு தோட்டத்திற்கு சென்றாள்...

காபியை பருகியபடியே அதிகாலை  தோட்டத்தை ரசித்தாள்

காலை பொழுது வேகமாக சென்று விடும் அவளுக்கு.. ஆனால் மதியத்திற்கு மேல் போரடிக்கும்... அப்பொழுது எல்லாம் அவளின் எண்ணங்கள் ஆதியை சுற்றியே இருக்கும்... இதுவரை கடந்த நிகழ்வுகளை அசை போடுவாள்.. அவன் எப்பொழுது திரும்ப வருவான் என்று ஏங்க ஆரம்பித்தது அவள் மனம்..

தன் நிலையை கண்டு திடுக்கிட்டவள்...

“இல்லை... இது தப்பு.. அவனை நான் சார்ந்து இருக்க கூடாது.. அது என்னை பலவீணமாக்கி விடும்.. என்ன செய்யலாம்?? ” என்று யோசித்தவள் அப்பொழுது தான் ஞாபகம் வந்தது அவள் வேலையை இன்னும்  ரிசைன் பண்ணி இருக்க வில்லை என்று... மறுபடியும் தன் வேலையை தொடரனும்... இல்லைனா சோம்பேறி ஆகிடுவேன் என்று எண்ணிகொண்டவள் இன்று ஆதியிடம் இதை பற்றி பேசனும் என்று நினைத்துகொண்டாள்.. பின் அவனின் வருகைக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்...

ஆனால் ஆதித்யாவோ நிறைய வேலை இருந்ததால இரவு தாமதமாகவே வந்தான்... இரவு உணவை முடித்து மேலெ சென்றான்.. பவித்ரா வழக்கம் போல பாலை காய்ச்சி இரண்டு டம்ளர்களில் எடுத்து கொண்டு மேலெ சென்றாள்...  

பாலை ஆதியின் கையில் கொடுத்தவள்

“நான் நாளையில் இருந்து வேலைக்கு போறேன்” என்றாள்...

“வேலைக்கா??? எங்க?? ஏன் இங்க உனக்கு என்ன கஷ்டம் “என்று கடுப்பாகி கேட்டான்..

“போர் அடிக்குது.. நான் இன்னும் என் பழைய வேலையை ரிசைன் பண்ணலை.. அதனால நாளையில் இருந்து கண்டினியு பண்றேன்... “

“அதெல்லாம் வேண்டாம்... நீ முன்னாடி எப்படியோ.. இப்போ என்  மனைவி.. நீ போய் எங்கயும் வேலை செய்ய வேண்டாம்.. வேணும்னா நம்  ஆபிஸ்க்கே  வா “ என்றான்..

“ம்ஹும்... நான் அங்க வந்தா  என்னை  வேற மாதிரி ட்ரீட் பண்ணுவாங்க.. எனக்கு சாதாரணமாக எல்லாருடன் சகஜமாக பழகற மாதிரி வேலை செய்யனும்... உங்க ஆபிஸ் எல்லாம் எனக்கு செட் ஆகாது” என்று முறுக்கினாள்...

“இல்லை.. என்னால்  அனுப்ப முடியாது.. “என்று அவனும் கடுமையாக கூறினான்..

“ஹலோ பாஸ்.. நீங்க என்ன என்னை அனுப்பறது?? ...நான் ஒன்னும் உங்க அடிமை இல்லை...  நான் போய்தான் ஆவேன் “ என்று முடித்து வேகமாக க்ஷோபாவில் படுத்து போர்வையை இழுத்து மூடிகொண்டாள்...

எங்க இன்னும் கொஞ்ச நேரம் பேசினால் அவன் எப்படியும் தன்னை மாற்றி விடுவான் என்று தெரிந்ததால் அதோடு பேச்சை முடித்து அவனை மேலும் பேச விடாமல் நிறுத்தினாள்..

அவளின் செய்கையை கண்ட ஆதி

“ஹ்ம்ம்ம் இந்த பூனைகுட்டியை எப்படி சமாளிப்பது?? “ என்று யோசித்தவன் தன்  அலைபேசியை எடுத்து யாரையோ அழைத்த படியே பால்கனிக்கு சென்றான்...பின் பேசி முடித்ததும்

“குட்டச்சி.. என்கிட்டயே துள்ளறியா...நாளைக்கு பார் எப்படி பல்ப் வாங்கறனு... “ என்று சிரித்துக்கொண்டான் உல்லாசமாக

றுநாள் காலை பவித்ரா சீக்கிரம் எழுந்து அவனுக்கு முன்னே தயாராக ஆரம்பித்தாள் முகத்தை உர் ரென்று வைத்துகொண்டு...

ஜாக்கிங் போய்ட்டு வந்தவன் எப்பவும் தூங்கி கொண்டிருப்பவள் இன்று எழுந்து விடவும்

“இவள் பிடிச்சா விட மாட்டா போல இருக்கே.. “என்று சிரித்துகொண்டே இன்னொரு  அறைக்கு சென்று அவனும் ரெடியாகி வந்தான்..

அவள் ஒரு அழகிய புடவைய நேர்த்தியாக கட்டி தலையை சீவி கொண்டிருந்தாள்.. அப்பொழுது தான் கவனித்தான் அவளின் நீண்ட கூந்தலை.. எப்பவும் அவள் ஜடையாக போட்டிருப்பதால் தெரியாத நீளம் இன்று விரித்து விடவும் இன்னும் நீளமாக இருந்தது..அவளின் அந்த நீண்ட கூந்தலை தொட்டு பார்க்க அவன் கைகள் துடித்தன.. அதை கட்டுபடுத்தி அவளை  ரசித்துக்கொண்டே

“குட் மார்னிங் பேபி ...” என்று அவள் அருகில்  சென்றான்...

அவன் எங்கே தன்னை வேலைக்கு செல்ல விடாமல் தடுத்து விடுவானோ என்று உள்ளுக்குள் பயந்து கொண்டே அவனை பார்த்து முறைத்த வண்ணம் இருந்தாள்...

“ஹே.. ஒரு குட்மார்னிங் சொன்னதுக்கு எதுக்கு இப்படி முறைக்கிற?? “ என்றவன் அவளை மேலும் கீழும் உற்று பார்த்தான்...

அவனின் அந்த நேரடி பார்வையை தாங்க முடியாமல் குனிந்து கொண்டாள் பவித்ரா...

அவளை முழுவதும் ரசித்தவன்

“ஹ்ம்ம்ம் ஏதோ மிஸ்ஸிங்..” என்று யோசித்தவன் நேற்றை போல அங்கு இருந்த ட்ராயரை திறந்து அழகு சாதன பொருட்களை   எடுத்தான்.. அதை கண்டவள் பதறி

“ஐயோ!!  இதெல்லாம் வேண்டாம்... என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் என்னை கிண்டல் பண்ணுவாங்க “என்று மறுத்தாள்...

“ஹ்ம்ம்ம் அப்படியா?? . அப்படினா நீ போக வேண்டாம்... நான் சொல்றதை எல்லாம் கேட்டால் நீ அங்கு போகலம்.. இல்லைனா நோ .. என்ன டீலா?? நோ  டீலா???  என்று அவள் பாணியில் கட்டை விரலை  மேலயும் கீழயும் வைத்து காட்டினான் குறும்பாக சிரித்துக்கொண்டே.. ...

ஹ்ம்ம்ம் சரியா மாட்டிகிட்டனே.. என்ன பண்ண??   என்று யோசித்தவள்

“சரி டீல் “என்றாள் அவனை முறைத்தவாறு...

“ஹ்ம்ம்ம் அது... “ என்று சிரித்து கொண்டெ வழக்கமான ஒப்பனைகளை செய்தான் அவளுக்கு... அவன் முடிக்கவும் கண்ணாடியில் பார்த்தவள் அதிசயித்து போனாள்.. நேற்றைவிட இன்னும்அழகாக இருந்தாள்...   அவள் புடவைக்கு பொருத்தமாக ஒரு மாலையை கொண்டு வந்து அவனே அணிவித்தான்..

“இதெல்லாம்?? “ என்று கேள்வியாக அவனை நோக்கவும்

“இந்த புடவை எல்லாம் வாங்கயிலயே அதற்கு பொருத்தமான நகைகளையும் வாங்கிட்டேன்” என்று கண்ணடித்தான்...

பின் இருவரும் கீழ வந்து காலை உணவை முடித்து கிளம்பும்பொழுது

“நானே உன்னை ட்ராப் பண்றேன்..  நீ திரும்ப வரும்பொழுது சக்திக்கு போன் பண்ணு.. அவன் வந்து உன்னை  கூட்டி கிட்டு வந்திடுவான்...”

கார் எல்லாம் வேண்டாம்.. நான் ஆட்டோவில் வந்திடுவேன்” என்று அவள் முடிக்கு முன்னே

“ஆட்டொ லயா?? அறிவு இருக்கா உனக்கு.. நீ இப்ப AN Group of Companies CEO ஆதித்யாவோட மனைவி... நான் ஏற்கனவே  சொல்லி இருக்கேன் பவித்ரா.. நீ முன்பு இருந்தது வேற... இப்ப உன்னோட ஸ்டேட்டஸ் வேற என்று.. அதுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கோ “ என்று கத்திவிட்டு காரை எடுத்தான் கோபமாக..

“ஆமா... பொல்லாத ஸ்டேட்டஸ்.. “ என்று முனகியவள்

உர் என்று காரில் அமர்ந்து வெளியில் வேடிக்கை பார்த்து வந்தாள்... அவளின்   அலுவலகத்தை அடைந்தவன் அவள் இறங்கவும்

“மறக்காமல் போன் பண்ணு.. இங்க தான் காரை நிறுத்திட்டு சக்தி உனக்காக காத்திட்டு இருக்கான் “என்றவன் வேகமாக கிளம்பி சென்றான்...

ஏனொ அவனின் கோபம் அவளை பாதித்தது.. அவள் முகம் வாடிப் போனது

“திருமணம் முடிந்து முதல் முதலா வேலைக்கு போறேன்... ஒரு  ஆல் தி பெஸ்ட் கூட சொல்லாம போறானே !! “ என்று திட்டிகொண்டே உள்ளே நுழைந்தாள்...

வளை கண்டதும் அவளுடன் பணிபுரிந்த அனைவரும் அவளை சூழ்ந்து கொண்டனர்... இதுவரை அவளுடன் பேசாதவர்கள் கூட அவள் ஆதித்யாவின் மனைவி  என்று தெரிந்ததும் வழிய வந்து பேசினர்..

எல்லாரும் அவளை பொறாமையோடு பார்த்தனர்.. அதுவும் அவளின் தோற்றம் இன்று முற்றிலும் மாறி இருந்தது.. முன்பு ஏனோ தானோ என்று அலுவலகத்திற்கு வருபவள் தன் அலங்காரத்தில் அக்கறை காட்டாததால் தெரியாத அவளின் அழகு ஆதித்யாவின் கொஞ்சமேயான டச்சப்பில் அழகு சிலையாக ஜொலித்தாள்...

அனைவருக்குமே பொறாமை உணர்வு பொங்கி வழிந்தது.

“இவளுக்கு இப்படி ஒரு வாழ்வா... ” என்று..

ஒரு வழியாக எல்லாரிடமும் பேசி முடித்து தன் இருக்கைக்கு சென்றவள் அங்கு வேற ஒரு பெண் அமர்ந்திருப்பதை கண்டு நேராக மேனேஜர் அறைக்கு சென்றாள்..

அவளை  கண்டதும் மேனேஜர் மோகன் வேகமாக எழுந்து

“வாங்க மேடம்.. எப்படி இருக்கீங்க??  “ என்று பவ்யமாக  கேட்டான்..

தன்னை எத்தனை முறை திட்டியவன் தன் முன்னே பவ்யமாக நிக்கவும் பவித்ராவிற்கு ஒரு மாதிரி ஆகி விட்டது...

“என்ன சார்??.. நீங்க போய் என்னை மேடம்னு கூப்பிட்டுகிட்டு... என்னை எப்பவும் போல பவித்ரானெ கூப்பிடுங்க “ என்றாள்..

“அதெப்படி மேடம்.. முன்பு நீங்க ஒரு சாதாரண ஸ்டாப்... இப்ப நீங்க எவ்வளவு பெரிய தொழிலதிபரின் மனைவி... உங்களை போய் எப்படி பேர் சொல்லி கூப்பிடறது “என்று மறுத்தான்..

“ஐயோ   சார்... அதெல்லாம் வேண்டாம்... நான் எப்பவும் போல சாதாரண பவித்ரா தான்.. என் வேலையை தொடரத்தான் வந்திருக்கேன் “ என்றாள்

அதை கேட்டதும் மோகன்  அதிர்ச்சியாகி

“இது என்ன சரியான லூசா?? “என்று நினைத்தவன்

“மேடம்...  உங்களுக்கு இருக்கிற கம்பெனிகளை விட்டுட்டு நீங்க இங்க வந்து வேலை செய்யலாமா?? ... இது ஒரு சாதாரண கம்பெனி.. உங்களோடதில் 1 % கூட கிடையாது.. இங்க போய் நீங்க.... காமெடி பண்ணாதிங்க மேடம் “ என்று சிரித்தான்..

இதயே தான் ஆதியும் சொன்னான் அவளிடம்.. ஆனால் அவனிடம் முறைத்தவள் .இந்த மேனேஜரிடம் என்ன சொல்ல என்று முழித்து கொண்டிருந்தாள்..

“அதோடு மேடம் உங்க இடத்துக்கு வேற ஒரு  பொண்ணை அப்பாய்ன்ட் பண்ணியாச்சு... நீங்க எப்ப வேனா வரலாம் விசிட்டிங் ஸ்டாப் ஆ... உங்க ஹஸ்பன்ட் வேற நம்ம பாஸ்க்கு க்லோஸ்.. இதுக்கு மேல நீங்க இங்க வேலை செய்யறது நல்லா இருக்காது... எனிவே.. உங்களை பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்... “ என்று கை குலுக்கினான்..

அதற்கு மேல அங்க இருக்க பிடிக்கவில்லை அவளுக்கு...

வேகமாக வெளியேறியவள்

“எல்லாம் இவனால வந்தது... மனைவியாம்  மனைவி.... ஊருக்காக கல்யாணம் பண்ணினாலும் இப்படி வேற பரப்பி வச்சிருக்கான்...”  என்று கருவிகொண்டே வாயில் புறம் வந்தாள்...

உடனே அவளை ஒட்டி ஒரு BMW கார் வந்து நின்றது வேகமாக.. அவள் திரும்பி பார்க்கவும் கண்ணாடியை இறக்கி ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தவன்

“வணக்கம் மேடம்.. என் பெயர் சக்தி..உங்க ட்ரைவர்..  சார் என்னை  உங்களை கூட்டிகிட்டு போக சொல்லி இருக்கார்.. வாங்க “ என்றான்...

அதற்குள் அவள் மொபைலில் மெசேஜ் வந்திருந்தது.. அதை எடுத்தவள்..

ஆதி அதில் சக்தியின் போட்டோவை அனுப்பி இருந்தான்... இவன் மட்டும் வந்தால் போகவும்.. வேறு யாராவது என்றால் காரில் ஏற வேண்டாம்..  என்று அனுப்பிஇருந்தான்..

அவளுடைய பாதுகாப்பிற்கு என்று புரிந்தாலும் இதெல்லாம் தேவையா என்று இருந்தது அவளுக்கு..

அவள் சக்தியிடம்

“நீங்க கிளம்புங்க.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. நான் முடிச்சிட்டு நானே வந்திடறேன்” என்றாள்..

“இல்லை மேடம்.. உங்கள தனியா விடக்கூடாதுனு சாரோட உத்தரவு.. நீங்க எங்க போகனும்னு சொல்லுங்க, நான் கூட்டி போறேன்.. “ எனறு அவனும் விடாமல் கூறவே வேற வழி இல்லாமல் காரில் பின் சீட்டில் ஏறி அமர்ந்தாள்..

பின் தனக்கு தெரிந்த ஒரு சில கம்பெனிகளில் சென்று வேலைக்காக விசாரித்தாள்... எல்லாருமே இவளுடைய புரபைலை பார்த்ததும் இவள் ஆதித்யாவின் மனைவி என்று தெரிந்ததும் தயங்கி மறுத்து விட்டனர்...

“சே... என்ன எல்லாருமே ஒரே மாதிரி சொல்றாங்க...ஒரு வேளை நிஜமாலுமே அவன் மனைவி ங்கிற பதவிக்கு அவ்வளவு பவரோ?? .. “என்று யோசித்தவள் அருகில் இருந்த கோயிலை கண்டதும் அங்கு நிறுத்த சொன்னாள்..

கோயிலுக்குள் சென்று வணங்கிவிட்டு, சிறிது நேரம் அங்கயே அமர்ந்து இருந்தவள் மீண்டும் வீட்டிற்கே வந்தாள்.. தன் அறைக்கு சென்று ஷோபாவில் பொத்தென்று அமர்ந்தவள்

“சே!!  இது என்ன ஹவுஸ் அரெஸ்ட்  மாதிரி இருக்கு??.. வெளில எங்கயும் தனியா, சுதந்திரமா போக முடியாது போல.. என்ன இந்த பணக்கார வாழ்க்கையோ.. எப்படித்தான் இப்படி இருக்க முடியுதோ?? “ என்று நொந்து கொண்டவள் ஒரு நாவலை எடுத்து படிக்க ஆரம்பித்தாள்...

அவள் மனமோ  அடுத்து  என்ன செய்வது என்று யோசித்தது ..  அதோடு  அவளின் சவால் நினைவு வர அதை எப்படி ஜெயிப்பது என்று யோசிக்க  ஆரம்பித்தாள்....



Comments

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!