உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-23
அத்தியாயம் -23 இ ன்றும் தாமதமாக வந்த ஆதி , பவித்ரா ஷோபாவில் அமர்ந்து அந்த நாவலை படித்து கொண்டிருப்பதை கண்டவன் , “How is your day Baby?? “ என்று உள்ளுக்குள் சிரித்துக்கொண்டே அவளின் அருகில் அமர்ந்தான் .. அவன் முகத்தில் இருந்த நக்கலை கண்டு “ஒரு வேளை இது எல்லாம் இவனின் ஏற்பாடோ ?? .. இவன் தான் அந்த மோகனிடம் சொல்லி இருக்கனும் எனக்கு வேலை கொடுக்க கூடாது என்று.... அப்படீனா மற்ற கம்பெனியிலும் ஏன் மறுத்தார்கள்.. இதுக்கு அவர்கள் ஏற்கனவே அவளை தேர்வு செய்தவர்கள் தான்.. இவள் தான் மறுத்து விட்டாள்... ஆனால் அவனுக்கு எப்படி தெரியும் நான் எந்த ஆபிஸ்க்கு போறேன் என்று ??..” என்று யோசித்தவள் அப்பொழுது தான் அந்த ட்ரைவர் சக்தியின் நினைவு வந்தது... அவனின் திடகாத்திரமான தோற்றமும் மிலிட்டரி மாதிரி அவன் ஹேர் ஸ்டைலும் அவன் சாதாரணமாக ஒரு ட்ரைவர் போல இல்லை ... இப்ப ஆழ்ந்து யோசிக்கும் பொழுது அவளுக்கு எல்லா புள்ளியையும் ஒன்றாக சேர்க்க , ஆதியின் திட்டம் புரிந்தது.... “சோ.. அந்த சக்தி தான் அவனுக்கு நான் எங்க போறேனு சொல்லி இருக்கனும்.. அதோடு அந்த சக்தி அவளின் பாதுகாப்பி...