உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-23

 


அத்தியாயம்-23

ன்றும் தாமதமாக வந்த ஆதி, பவித்ரா ஷோபாவில் அமர்ந்து அந்த நாவலை படித்து கொண்டிருப்பதை கண்டவன்,

“How is your day Baby?? “  என்று உள்ளுக்குள் சிரித்துக்கொண்டே அவளின் அருகில் அமர்ந்தான்..

அவன் முகத்தில் இருந்த நக்கலை கண்டு

“ஒரு வேளை இது எல்லாம் இவனின் ஏற்பாடோ?? .. இவன் தான் அந்த மோகனிடம் சொல்லி இருக்கனும் எனக்கு வேலை கொடுக்க கூடாது என்று.... அப்படீனா மற்ற கம்பெனியிலும் ஏன் மறுத்தார்கள்.. இதுக்கு அவர்கள் ஏற்கனவே அவளை தேர்வு செய்தவர்கள் தான்.. இவள் தான் மறுத்து விட்டாள்... ஆனால் அவனுக்கு எப்படி தெரியும் நான் எந்த ஆபிஸ்க்கு போறேன் என்று??..”   என்று யோசித்தவள்

அப்பொழுது தான் அந்த ட்ரைவர் சக்தியின் நினைவு வந்தது... அவனின் திடகாத்திரமான தோற்றமும் மிலிட்டரி மாதிரி அவன் ஹேர் ஸ்டைலும் அவன் சாதாரணமாக ஒரு ட்ரைவர் போல இல்லை ...

இப்ப ஆழ்ந்து யோசிக்கும் பொழுது அவளுக்கு எல்லா புள்ளியையும் ஒன்றாக சேர்க்க, ஆதியின் திட்டம் புரிந்தது....

“சோ.. அந்த சக்தி தான் அவனுக்கு நான் எங்க போறேனு  சொல்லி இருக்கனும்.. அதோடு அந்த சக்தி அவளின் பாதுகாப்பிற்காக நியமிக்கபட்டவனா இருக்கும்...அதான் இந்த ஆதி  எல்லா கம்பெனியிலும் தன்னை ஏற்க கூடாது என்று சொல்லி இருப்பான்.... அதோட ரிசல்ட் தான் எல்லாரும் தன்னை நிராகரித்தது...    

சோ .. இதெல்லாம் இவன் ஆட்டம் தானா...” என்று புரிய  அவனை மீண்டும் முறைத்தாள்...

“ஹே!!   இப்ப எதுக்குடி என்னை  முறைக்கிற?? ... உனக்கு வேலை கிடைக்கலைனா நான் என்ன பண்ணுவனாம்...”  என்றவன் நாக்கை கடித்து பாதியில் நிறுத்திக் கொண்டான் தானே உளறி அவளிடம் மாட்டிக்  கொள்ளக்கூடாது என்று .. ஆனால் பவித்ரா  அதை கண்டு கொண்டவள்

“ஹ்ம்ம்ம்ம் எனக்கு வேலை கிடைக்கலைனு உங்களுக்கு எப்படி தெரியும் பாஸ்?? .. என்று தன் புருவங்களை உயர்த்தினாள்...அவளிடம் என்ன சொல்ல என்று யோசித்து கொண்டிருந்தான்

“ஹ்ம்ம்ம் எனக்கு ஏற்கனவே தெரியும்...  எல்லாம் உங்களோட சதி தானு.. “ என்று முறைத்தாள்...

“ஹா  ஹா ஹா... பரவாயில்லையே... நீ உயரத்தில தான் குட்டைனாலும் அறிவுல கொஞ்சம் உயரமா தான் இருக்க...சரியா கண்டுபிடிச்சிட்டியே..  

இப்ப புரியுதா இந்த ஆதித்யா யாருனு??  .. என்னை எதிர்த்து கிட்டு நீ எதுவும் செய்ய முடியாது பேபி...  என்று சிரித்தான்..

“ஹலோ பாஸ்.. நான் ஒன்னும் குட்ட இல்லை... உயரம் கொஞ்சம் கம்மி அவ்வளவுதான்... அப்புறம் உங்களை மீறி நான் வேலைக்கு போக முடியாதா?? க்ரேட் ஜோக்...  

இந்த உலகம் ரொம்ப பெருசு பாஸ்.. அதுல இருக்கிற எல்லாரையும் உங்களால வாங்க முடியாது... “ என்று பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அவளுக்கு தன் உடன் பயின்ற ஆனந்த் ன்  நினைவு வந்தது....

“ஹ்ம்ம்ம்ம் இப்பத்தான் நினைவு வந்தது.. என் ஃப்ரெண்ட் ஆனந்த் இப்பத்தான்  ஒரு ஸ்டார்ட்அப் கம்பெனியை  ஆரம்பிச்சிருக்கான்... முன்னாடியே கூப்பிட்டான்.. நான் தான்போகலை... உங்களை ஜெயிக்கறதுக்காகவே நான் நாளைக்கே அவன் கம்பெனியில் போய் ஜாயின் பண்றேன்.. “ என்றாள்  கோபமாக..

கோபத்தில் அவளின் உதடு துடித்தது.. மூக்கு விடைத்து முகம் சிவந்து அவள் அமர்ந்த கோலம் அவனுக்கு என்னென்னவோ செய்தது...

அவளை அப்படியே அணைத்து துடித்து கொண்டிருக்கும் அவளின் இதழ்களை அடக்க  துடித்தது அவன் இதழ்கள்...

தான் இவ்வளவு பேசியும் அவனிடம்  இருந்து எந்த ரியாக்ஷனும் வராமல் போக

“என்ன நான்பேசினதில பயந்துட்டானா?? என்று ஓரக்கண்ணால் அவனை பார்த்தாள்..

அவனோ அவள் பேசியதை காதில் வாங்காமல் அவளின் இதழ்களை ரசனையாக பார்த்து கொண்டிருப்பதையும் அவனின் பார்வையில் தெரிநத மாற்றத்தையும் கண்டு முகம் சிவந்தாள் மீண்டும்...

அவளையே பார்த்து கொண்டிருந்தவனுக்கு சில விநாடிகள் முன் கோபத்தில் சிவந்த அவளின் முகம் இப்பொழுது நாணத்தில் சிவந்து மேலும் அவனை இழுத்தது... விநாடியில் மாறிய அவளின் முக பாவணையை ஆசையாக ரசித்தான்...

அதற்குள் சமாளித்துக் கொண்ட பவித்ரா

“இவனை இப்படியே விட்டா தனக்குத் தான் ஆபத்து.. “என்று வேகமாக

“என்ன பாஸ் ஆப் ஆகிட்டீங்க... என்ன தோத்துடுவோம்னு பயம் வந்திருச்சா?? ... “ என்று அவனை திசை திருப்பினாள்... அவளின் பேச்சால் தன் நிலைக்கு வந்தவன்

ஹ ஹ ஹா .. இந்த ஆதித்யா எப்பவும் தோற்க மாட்டான் டார்லிங்... நீயே பார்ப்ப...” என்று தன் கையால் அவளின் முகத்தில் கோலமிட்டான் ஆசையாக...

அதில் ஒரு விநாடிகள் மயங்கியவள், பின் அவன் கையை தட்டி விட்டு

“ஹ்ம்ம்ம் பார்க்கலாம்... என் ஃப்ரெண்ட் ஆனந்த் ஐ ஒன்னும் நீங்க வாங்க முடியாது .. அவன் எனக்குத்தான் சப்போர்ட் பண்ணுவான் ... நாளைக்கு பாருங்க நீங்க தோற்கப்போறதை... “என்று கன்னம் குழிய சிரித்தாள்....

“ஹ்ம்ம்ம் எந்த ஆனந்த்?? .. உன் கிட்ட லவ் லெட்டர் கொடுத்து உன் கையால அடி வாங்கினானே அந்த ஆனந்த் ஆ .. இல்லை உன் ஆபிஸ்ல உன்கிட்ட வம்பு பண்ணி உன் கிட்ட செருப்படி வாங்கின ஆனந்தா??  “ என்று சிரித்தான்....அதை கேட்டு

ஆங்க்... என்று முழித்தாள் பவித்ரா...

“இவனுக்கு எப்படி தெரியும் இதெல்லாம்... கூடவே இருந்து பார்த்த மாதிரி சொல்றானே?? “என்று  நினைத்தவள் அவனிடமே கேட்டாள்...

“உங்களுக்கு எப்படி தெரியும்??  “என்று  மெல்ல முனகினாள்...

“ஹா ஹா ஹா... இந்த ஆதித்யாவை பற்றி நீ  இன்னும் புரிஞ்சுக்கவே இல்லை பேபி...

எந்த ஒரு தொழிலையும் ஆரம்பிக்கும் பொழுது நன்கு ஆராய்ந்த பிறகே அதில் இறங்குவான் இந்த ஆதித்யா....ஒரு தரம் இறங்கி விட்டாள் அதன் பிறகு பின் வாங்கறது கிடையாது..

அதை எப்படி வெற்றிகரமாக நடத்துவது என்று  தெரியும்... அதனால் தான் இத்தன கம்பெனியை  நிர்வாகம் பண்ண முடியுது... ஒரு தொழுலுக்கே அத்தனை ஆராய்ச்சி செய்யறவன்

என்னோட பெர்சனல் விசயத்துக்கு எவ்வளவு அக்கறை எடுத்துக்குவேன்.. அதுவும் உன்னை நம்பி என்னோட பெட்ரூமுக்கே கொண்டு வந்து இப்படி என் பக்கதில் இருக்கணும்னா அதுக்கு முதல்ல நீ தகுதியானவளானு ஆராயாமல் செய்வேனா??  என்று தன் புருவங்களை உயர்த்தினான்..

அப்பொழுது தான் உறைத்தது பவித்ராவுக்கு.. கொஞ்ச நாள் முன்னாடி தன்னை யாரொ  பாலோ பண்ற மாதிரி இருந்ததே என்று... ஒரு மாதம் இருந்திருக்கும் அதே மாதிரி பீலிங்.. அதற்கப்புறம் அப்படி தோன்றவில்லை..

“அப்ப அதெல்லாம் இவன் வேலை தானா..?? “ என்று எண்ணியவள்

“சோ .. என்னை பற்றி பெரிய Phd எல்லாம் பண்ணி இருக்கீங்க போல?? “ என்றாள் நக்கலாக

“பின்ன... ஆதித்யாவின் மனைவியாகனும்னா சும்மாவா... “ என்று சிரித்தான்

“ஹ்ம்ம்ம் சரி.. நான் சரியில்லாமல் இருந்திருந்தால் என்ன பண்ணி இருப்பீங்களாம்?? “என்று தன் புருவங்களை உயர்த்தினாள் அவனைப் போலவே...

வில்லாக வலைந்த அவளின் புருவத்தை ரசித்தவன்

“ஹ்ம்ம்ம் அப்ப வேற மாதிரி பழி  வாங்கியிருப்பேன்.. திருமணம் வரை வந்து இருக்க மாட்டேன்.. “ என்று கண்ணடித்தான்...

அவன் சொன்ன பழி வாங்க என்பதில் மனம் சுணங்கியது பவித்ராவுக்கு.. ஆனாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல்

சோ... உங்களை தோற்கடிக்க முடியாதுங்கறீங்க?? “ என்றாள் அதே நக்கலுடன்

“அப்கோர்ஸ்.... இந்த ஆதித்யா எப்பவும் ஜெயிக்க மட்டுமே பிறந்தவனாக்கும்...” என்று சிரித்தான்..

“ஹ்ம்ம்ம் எல்லாரும் எப்பவும் ஜெயிச்சு கிட்டே இருக்க முடியாது பாஸ்... வெற்றி னு ஒன்னு இருந்தால் தோழ்வி னு ஒன்னு   நிச்சயமா இருக்கும்... அப்படி நீங்க முதலில் தோற்பது என்னிடமாதான் இருக்கும்...    சீக்கிரம் உங்களை என்கிட்ட தோற்க வைக்கிறேன் பாருங்க.. “ என்றாள் கண்கள் இடுங்க...

“ஹ ஹ ஹ ஆல் தி பெஸ்ட் பேபி... “ என்று சிரித்தான்...

அப்பொழுது அவளின் அலைபேசி அடிக்கவும் அதை எடுத்தவள் தன் அம்மாதான் அழைக்கிறார் என்று தெரியவும் முகம் மலர்ந்தது...அதுவரை இருந்த இறுக்கம் மறைந்து தானாக அவள் முகத்தில் சிரிப்பு வந்தது...

“சொல்லுங்கம்மா... “என்றாள் அதே மகிழ்ச்சியுடன்...

தன் மகளின் குரலில் தெரிந்த உற்சாகத்தை கண்டு நிம்மதி அடைந்த பார்வதி மனம் நிறைந்து இருந்தது... வழக்கமான நல விசாரிப்புக்கு பிறகு

“பவித்ரா... உன்னையும் மாப்ப்பிள்ளையும் இன்னும் மறுவீட்டிற்கு அழைக்க வில்லை... மாப்பிள்ளை எப்பவும் பிசியா இருக்கிறதால எதுவும் கேட்க முடியலை... இந்த வாரம் ஞாயிற்றுகிழமை மாப்பிள்ளை ப்ரியா இருந்தால் இரண்டு பேரும் இங்க வீட்டிற்கு வர முடியுமா... “ என்றார் தயங்கியவாறு...

“ஹ்ம்ம்ம் சரி மா.. நான் அவர் கிட்ட கேட்டு சொல்றேன்... நீங்க பத்திரமா இருங்க... “ என்று அலைபேசி யை வைத்தாள்...

அவளின் முகத்தையே ரசித்து கொண்டிருந்தவனை கண்டு

“அம்மா.. நம்மளை மறுவிட்டிற்கு அழைத்து இருக்காங்க... இந்த சண்டே நீங்க ப்ரியா?? “என்றாள் கொஞ்சம் தயங்கியவாறு

  “மறுவீடு னா??  என்று புரியாமல் கேட்டான்..

“ஹ்ம்ம்ம் கல்யாணம் ஆகி பொண்ணும் மாப்பிள்ளையும் முதல் முதலா அம்மா வீட்டிற்கு செல்வது.. வழக்கமா எல்லாரும் அடுத்த நாளே போவாங்களாம்.. நீங்க தான் பெரிய பிசினஸ் மேனாச்சே.. அதான் உங்களை இதுவரைக்கும் வீட்டிற்கு கூப்பிடலையாம்.. இந்த வார்ம  போகலாமா?? .. எனக்கு எங்கம்மா பார்த்து நாளாச்சு... “என்றாள் கண்களில் ஒரு வித ஆர்வத்துடன்...

“ஹ்ம்ம்ம் இங்க பார்.. அங்க எல்லாம் என்னால வர முடியாது.. அந்த சின்ன தெருவுல   என் கார் கூட நுழைய முடியாது.. உன்னை பார்க்க வந்த அன்று ஒரு மணி நேரமே என்னால உட்காரவே முடியல... வேணும்னா உங்க அம்மாவை இங்க வர சொல் “என்றான்...

“ஆங்க்.. நாம தான் அங்க போகணும்.. அதெப்படி அம்மா இங்க வர்றது.. அது முறை இல்லையே??

“அதெல்லாம் எனக்கு தெரியாது... என்னால அந்த குடிசைக்கெல்லாம் வரமுடியாது...” என்று முறைத்தான்...அவன் தன் வீட்டிற்கு வர முடியாது என்றதில் கடுப்பானவள்

“ஹ்ம்ம்ம் அப்ப ஏன் அந்த குடிசைக்கு வந்து பொண்ணு கட்டினீங்களாம்?? . உங்க வசதிக்கு தகுந்த மாதிரி பெரிய இடமா பார்த்து கல்யாணம் பண்ணி தொலைக்க வேண்டியதுதானா... என்னை ஏன் ஏமாற்றி கல்யாணம் பண்ணிங்க.. “  என்று கத்தினாள்..

“ஏய்... நான் ஏன் கல்யாணம் பண்ணினேனு தான் உனக்கு தெரியுமே!!  நான் கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்திறதா இருந்தால் என் மாமியார் வீட்டை பெரிய லெவல்ல பார்த்திருப்பேன்...உன் பக்கம் நான் ஏன் வர்ரேன்...   

இந்த மாதிரி மறுவீடு அது  இதுனு எதுக்காகவும் என்னை கூப்பிட்ட அவ்வளவு தான்..  உன் குடிசைக்கு எல்லாம் என்னால வர முடியாது... “ என்று அவனும் திருப்பி கத்தினான்..

“கடைசியா கேட்கறேன் வரமுடியுமா??  முடியாதா?? “ என்றாள் மிரட்டும் குரலில் அவனை முறைத்தவாறு

“வர முடியாது..  போடி..  “ என்று அவனும் முறைத்தான்...

“சரி தான் போடா... நீ வராட்டி என்ன.. Queen ங்கிற ஹிந்தி  படத்துல அந்த ஹீரோயின் தனியா பாரிசுக்கு ஹனிமூன் போவா... அது மாதிரி நான் தனியா மறுவீடு போறேன் “ என்று பழிப்பு காட்டினாள்..

“என்னது??   தனியா ஹனிமூனா??  இது புதுசா இருக்கே !! “என்று சிரித்தான் அவன் கோபம் குறைந்து..

ஆமாம்... நீங்க அந்த படம் பார்க்கல?? சூப்பரா இருக்கும்... அது மாதிரி நான் மட்டும் தனியாவே போறேன் மறுவீட்டிற்கு..” என்றாள் ஓரக் கண்ணால் அவனை பார்த்தவாறு

 “ஹ்ம்ம்ம் நீ  சொல்றதெல்லாம் இன்டெரெஸ்டிங் ஆ தான் இருக்கு... அதையும் தான் பார்க்கலாம்.. “ என்று முறுவலித்தான்..

“தாங்க்ஸ்... “

“எதுக்கு??

“சண்டே எங்க வீட்டுக்கு  வர ஒத்துகிட்டதுக்கு..”

“ஹே.. நான் எங்க ஒத்துகிட்டேன்.. “

“ஹ்ம்ம்ம் இப்பதான் 60 விநாடிகள் முன்னாடி.. நீ  சொல்றதெல்லாம் இன்டெரெஸ்டிங் ஆ தான் இருக்கு... அதையும் தான் பார்க்கலாம் “ என்று சொன்னீங்க இல்ல.. 

“ஹே ப்ராடு.. நான் சொன்னது அந்த படத்தை பற்றி... உன் வீட்டிக்கு வர்றது பற்றி இல்ல.. “

“அதெல்லாம் இல்லை.. எல்லாம் ஒன்னுதான்..

தி கிரேட் ஆதித்யா நிஷாந்த் வருகிற சண்டே இந்த பவித்ராவின் குடிசைக்கு விருந்துக்கு வருகிறார் வருகிறார்.. எல்லாரும் கேட்டுக்குங்க ...” என்று தமுக்கடிக்கும் பாஷையில் செய்து காட்டினாள்..

அவளின் அந்த நடிப்பை கண்டு விழுந்து விழுந்து சிரித்தான் ஆதித்யா...

“சரியான வாலு டீ  நீ “ என்றான் இன்னும் தன் சிரிப்பை நிறுத்தாமல்

“ஹீ  ஹீ ஹீ  நம்ம முன்னோர்களை மறக்க முடியுமா பாஸ்...  “ என்று அவளும் இணைந்து  சிரித்தாள்..பின்

“ஷ்ஷ் அப்பாடா.. ஒரு வழியா இவனை ஒத்துக்க வச்சாச்சு.. எங்க வீட்டுக்கு வரட்டும்.. இவனுக்கு இருக்கு... எப்படி படுத்தறேன் பார்.. “என்று மனதுக்குள் கருவியவள் வரும் ஞாயிற்று கிழமையை அப்பொழுதில் இருந்தே ஆவலுடன் எதிர்பார்க்க ஆரம்பித்தாள் பவித்ரா....


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!