உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-24

 


அத்தியாயம்-24


ன்று ஞாயிற்றுக்கிழமை..

ஆதி ஜாகிங் சென்று திரும்பும் முன்னே பவித்ரா சீக்கிரம் எழுந்து குளித்து பரபரப்பாக தயாராகி கொண்டிருந்தாள்..அவன் திரும்பி வந்ததும்  பவித்ராவின் பரபரப்பை கண்டு

“இவளை எப்படி மடக்கிறது?? கடந்த 4 நாளா நான் படுத்தினதை எல்லாம் சமாளிச்சுட்டாளே!! இப்ப என்ன செய்யறது?? என்று யோசித்தான்..

பின் அவளிடம் சென்று

“ஹே!! உங்க அம்மா நம்மள லன்ச் க்கு தான கூப்பிட்டிருக்காங்க.. நீ என்ன டி  இப்பவே ரெடியாகிட்டு இருக்க??  “ என்றான் குறும்பாக

அதை கேட்டவள்

“ஹ்ம்ம் என் அம்மா வாம்.. ஏன் அத்தைனு சொன்னா என்னவாம்??

ஐயோ... இவன் பாட்டுக்கு அங்க வந்து ஏதாவது உளறி, அத கேட்டு அம்மா கஷ்டப்பட்டா??

அதுக்குத்தான் நான் மட்டும் தனியா போறேனா, இந்த அம்மா அதுக்கும் கல்யாணத்துக்கப்புறம் முதல் முதலா ரெண்டு பேரும் சேர்ந்துதான் வரணும்.. தனியா வரக்கூடாது னு தடா  வேற ..

இல்லைனா இவன் கிட்ட நான் ஏன் கெஞ்சிகிட்டு இருக்க போறேனாம்?? நான் பாட்டுக்கு கிளம்பி போய்ட்டு ரெண்டு நாள்  கழிச்சுதான் வருவேணாக்கும்... வரட்டும் எப்படியாவது இவனை இன்னைக்கு மட்டும் இழுத்துகிட்டு போயிடணும்...

அங்க போய் ஒரு அட்டென்டன்ஸ் போட்டுட்டா போதும்.. அதுக்கப்புறம் இவன் வந்தா என்ன? வராட்டா என்ன??  அம்மாவை எப்படியும் சமாளிச்சுக்கலாம்...  அதுவரை இவன் கிட்ட அடக்கி வாசிக்க வேண்டியதுதான்.. “ என்று எண்ணிக் கொண்டாள்...

தான் கேட்டதுக்கு பதில் வராமல் அவள் எதையோ யோசிச்சுகிட்டு இருப்பதை கண்டவன்

“ஆகா... இந்த குட்டச்சி எதையோ யோசிக்க ஆரம்பிச்சுட்டா.. இவள யோசிக்க விட்டா நமக்குதான் ஆப்பாகும்.. “ என்று அவசரமாக யோசித்தவன்

“என்ன பேபி...   நான் கேட்டதுக்கு பதில் சொல்லாமல் முழிச்சுகிட்டு இருக்க??  என்ன தூங்கிட்டியா??  “என்று வம்பு இழுத்தான்..

“ஆங்க்..   லன்ச் க்குனா கரெக்டா சாப்பிடதான் போகணுமா உங்க ப்ரெண்ட் மாதிரி... நான் எங்கம்மாவ முன்னாடியே பார்க்கணும்.. எவ்வளவு நாளாச்சு அவங்களை பார்த்து?? நிறைய கதை இருக்கு பேச...

அதோடு நீங்க இப்ப கிளம்ப ஆரம்பிச்சாதான் சரியா இருக்கும்... இல்லைனா நீங்க பாட்டுக்கு லேட்டா கிளம்பி , கிளம்பினதுக்கப்புறம் ஏதாவது போன் வரும்.. அப்புறம் முக்கியமான வேலைனு உங்க ஆபிஸ் ரூமுக்குள்ள போய்ட்டா அவ்வளவுதான்.. நாம லன்ச் க்கு போக மாட்டோம்.. டின்னர்க்கு தான் போவோம்.. 

அதனால இப்பயே கிளம்புங்க பாஸ்.. என்னை கொண்டு வந்து விட்டுட்டு நீங்க எங்க வேணா போங்க.. “ என்று நச்சரித்தாள்..

இவ எப்படி?? .. நான் போட்ட ப்ளானை கூட இருந்து பார்த்த மாதிரி அப்படியே சொல்றாளே... பயங்கர சார்ப் தான்... நானும் அங்க போகக்கூடாதுனு என்னென்னவோ செஞ்சு பார்த்துட்டேன்.. இந்த குட்டச்சி எல்லாத்தையும் சமாளிச்சுட்டாளே... இன்னும் கொஞ்சம் படுத்தலாம். எப்படியும் மாட்டுவா இல்லை...  அத வச்சு போகாம பண்ணிடலாம்.. “ என்று எண்ணியவாறே

“ஒகே ஓகே.. பறக்காத.. கிளம்பறேன்.. ஆமா இந்த சாரி உனக்கு நல்லா இல்லை.. நான் எடுத்து தர்ரதை கட்டிக்கோ.. “ என்றான் உள்ளுக்குள் சிரித்தவாறு..

“ஏன்??  இதுக்கு என்ன?? .. நல்லாதான் இருக்கு.. “என்று அவள் முடிக்கு முன்னே,

“எனக்கு பிடிக்கலை... நான் கூட வரணும்னா நான் சொல்றதை தான் நீ கட்டனும்.. என்ன டீலா?? நோ டீலா??  “என்று சிரித்தான்...

“எல்லாம் உன் நேரம் டா... நீ சொல்றதுக்கெல்லாம் நான் ஆடணும் னு இருக்கு... ஆடு ராஜா ஆடு.. நீ எவ்வளவு ஆடறனு பார்க்கறேன்.. “ என்று குமுறியவள்

“சரி எடுத்து கொடுத்து தொலைங்க... நான் கட்டிக்கறேன்.. “ என்றாள்..

அருகில் இருந்த வார்ட்ரோபை திறந்து வேற ஒரு புடவையை எடுத்து கொடுத்தான்..

ஆக்சுவலா அவள் முன்பு கட்டி இருந்ததே அழகாக இருந்தது. ஆனாலும் அவளை கடுப்பாக்க வெறுப்பேத்த  என்றே அவன் வேற ஒரு புடவையை எடுத்துக் கொடுத்தான்..

அப்பொழுது தான் அந்த புடவைய கஷ்டபட்டு கட்டி ,எல்லா இடத்திலும் இழுத்து சொருகி, பின் போட்டு முடித்தவள் அதை எல்லாம் களைத்துவிட்டு திரும்பவும் முதலில் இருந்து கட்டணும் என்கவும் பற்றி கொண்டு வந்தது அவளுக்கு...

ஆனாலும் தன் கோபத்தை உள்ளுக்குள் அழுத்திக் கொண்டவள் எதுவும் பேசாமல் அவன்  கொடுத்த புடவையை வாங்கி கொண்டு உடை மாற்றும் அறைக்கு சென்றாள் மனதுக்குள் அவனை அர்ச்சனை பண்ணியவாறே...

“ஆகா.. இந்த பூனக்குட்டி இவ்வளவு அமைதியா போறாளே... இந்நேரம் எகிறி குதிப்பானு பார்த்தால் இப்படி அடங்கிட்டாளே.. ஆதி.. Don’t give it up.. keep try”  என்று சொல்லிக்கொண்டான்..

ஒரு பத்து நிமிடம் கழித்து புடவையை கட்டி வந்தவள்

“இப்ப ஓகே வா பாஸ்?? நாம போலாமா?? “ என்று தன்னை முன்னாடியும் பின்னாடியும் திருப்பி காட்டினாள்... அவளின் அந்த செய்கையை ரசித்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன்

“ஹ்ம்ம்ம் பெட்டர்... அப்புறம் மேக்கப்.. “என்று இழுத்தான்..

உடனே அவள் அருகில் இருந்த ட்ராயரை திறந்து அவன் வழக்கமாக செய்யும் அந்த மேக்கப் ஐட்டங்களை அவளாகவே எடுத்து அவன் கையில் கொடுத்து தன் முகத்தை அவனிடம் காட்டி கண்களை மூடிக்கொண்டாள் அவன் மேக்கப் பண்ண வசதியாக

அதை கண்டு ஆதி இன்னும் விழுந்து விழுந்து சிரித்தான் அவள் அறியாமல் சத்தம் இல்லாமல்..

“மேக்கப் னா   தூர ஓடறவ இப்படி அடங்கி போறாளே.. எல்லாம் அவ அம்மா வீட்டுக்கு போற குஷியில தானா... இந்த பொண்ணுங்களுக்கு அப்படி என்னதான் இருக்கோ அம்மா வீட்ல?? .. இங்க இத்தனை வசதி இருந்தும் அங்கு என்னதான் இருக்கோ?? .. இந்த ஒரு வாரமே கால் தரையில் நிக்காமல் ஆடறாளே...

இத வச்சு இவளை ஒரு வழி பண்ணனும்.. “என்று சிரித்துக் கொண்டவன்

அவள் கண்களுக்கு மை இட்டு முகத்துக்கு சில ஒப்பனைகளை செய்து அவள் இதழ்களுக்கு சாயம் தீட்டினான்...

வழக்கம் போல அவள் இதழ்கள் அவனை சுண்டி இழுக்க, மெல்ல வருடினான்... திடீரென்று கண் விழித்தவள் அவன் அருகில் நின்று அவளை  ஒரு மாதிரி பார்த்துக்கொண்டு தன் இதழ்களை வருடுவதை கண்டவள் அவன் கையை தட்டி விட்டாள்..

“ஏய்... எதுக்குடி இப்படி கைய தட்டி விட்ட?? இப்படி எல்லாம் நீ பண்ணின நான் உன் கூட  வர மாட்டேன்.. “ என்று பிகு பண்ணினான்..

“ஆங்.. அதான் லிப்ஸ்டிக் போட்டாச்சு இல்ல.. அப்புறம் இன்னும் என்ன?? என்றாள் அவளையும் மீறி முறைத்தவாறு...

“இல்லையே... நான் போட்ட லிப்ஸ்டிக் உன் உதட்டில் எல்லா இடத்திலும் ஈவனா இருக்கணும் இல்ல. அதுக்கு இப்படி தடவினாதான் நல்லா இருக்கும்.. நீ என்னவோ அதுக்குள்ள முறைக்கிற... “ என்றான்

“ஹ்ம்ம்ம்ம் அப்பனா  சரி.. அப்ப சீக்கிரம் சரி  பண்ணுங்க ..” என்று தன் உதட்டை நன்றாக விரித்துக் காட்டினாள்...

“ஆகா.. ஆதி உன் காட்டுல மழை தான்.. நீ சொன்ன கதையை இவ நம்பிட்டா.... நடத்து “என்று சிரித்தவன் வலைந்து இருந்த அவளின் இதழில் ஏதோ சாயம் இடுவதை போல பாசாங்கு செய்து மென்மையாக மீண்டும் வருடினான்..

அவளும் கிறங்கி நின்றாள் ஒரு சில விநாடிகள்.. அதுக்கு மேல் தன்னை கன்ட்ரோல் பண்ண முடியாது என தோன்ற மனமே இல்லாமல் அவளை விட்டான்...

“அப்பாடா.. ஒரு வழியா விட்டுட்டான்.. “ என்று நிம்மதி மூச்சு விட்டவள்

“பாஸ்... நீங்க போய் சீக்கிரம் ரெடியாகுங்க... நாம கிளம்பலாம்.” என்று அவசர படுத்தினாள்..

இருடி .. அதுக்குள்ள என்ன அவசரம்.. ப்ரேக் பாஸ்ட் சாப்பிட்டுட்டே போய்டலாம்.. “ என்று அவன் முடிக்கு முன்னே

“அதெல்லாம் எங்க வீடல போய் சாப்டுக்கலாம்... “ என்று அவள் நிறுத்து முன்னே

“ஹே .. உங்கம்மா வீடு என்ன பக்கத்திலயா இருக்கு?? அங்க போறதற்குள் மணி  10 ஆகிடும். என்னால பசியோட எல்லாம் ட்ரைவ் பண்ண முடியாது.. அதனால நாம சாப்பிட்டே போகலாம்.. நான் ரெடியாகறேன்.. நீ போய் எல்லாம் எடுத்து வை.. “ என்று விரட்டினான்...

“ஐயோ .. இவன் அலப்பற தாங்க முடியலையே... இவன் எப்ப கிளம்பி, சாப்பிட்டு முடித்து  கிளம்பி போறது?? “ என்று புலம்பியவாறு கீழ  சென்றாள் பவித்ரா...

அவளின் புலம்பலை கேட்டவன் உல்லாசமாக விசில் அடித்த படியே குளிக்க சென்றான்..  பின் குளித்து முடித்து மெதுவாகவே ரெடியாகி கீழ சென்றான்..

பவித்ரா தயாராக எல்லாம் எடுத்து வைத்து மாடியையே பார்த்துக் கொண்டிருந்தாள் மனதிற்குள் அவனை திட்டியபடி....

டைனிங் ஹாலுக்கு சென்றவன் அவள் ஏற்கனவே சாப்பிட்டு அவனுக்காக  அருகில் நின்று பரிமாற, அதை ரசித்தவாறே மிக மிக மெதுவாக சாப்பிட்டு   எழுந்தான்...

“அடப்பாவி.. மத்த நேரம் னா 5 நிமிசத்துல சாப்பிட்டு முடிச்சிருப்பான்.. இன்னைக்கு வேணும் என்றே அரை மணி நேரம் ஆக்கிட்டானே..” என்று பல்லை கடித்தாள்...

ஆனாலும் பொறுத்துக்கொண்டிருந்தாள்.. ஒரு வழியாக அவன் மனம் வந்து கிளம்பி வெளியில் செல்ல முயலும்பொழுது, ஏதோ நினைவு வந்தவளாக

“பாஸ்.. ஒரு நிமிஷம் இருங்க.. இதோ  வந்திடறேன்.. “ என்றவள் அவன் பதில் சொல்லு முன்னே சமையல் அறைக்குள் ஓடியவள் ஒரு பெரிய பழக்கூடையும் மற்றும் சில ஸ்வீட்ஸ்  பாக்கெட்ஸ், சாக்லெட் என்று பெரிய பார்சலை தூக்கி வந்தாள்...

அதை கண்டவன்

“ஹே... என்னடி இதெல்லாம்... “ என்று முழித்தான்..

“ஆங்க்... முதல் முதலா மாமியார் வீட்டுக்கு போறோம் பாஸ்.. வெறும் கைய வீசிகிட்டு போக முடியுமா?? அதுவும் தி கிரேட் AN Group of Companies Chairman ஆதித்யா நிஷாந்த் வெறும் கையோட போகலாமா. உங்க ஸ்டேட்டஸ் என்னாவது??

அதான் இதெல்லாம்.. கெத்தா இல்ல??  “ என்று கண் சிமிட்டி சிரித்தாள்...

“ஹ்ம்ம்ம் நல்லாதான் இருக்கு. ஆமா.. இது என்ன இவ்வளவு சாக்லெட்?? உங்க அம்மா இதை  எல்லாம் சாப்பிடுவாங்களா என்ன??

“ஹீ ஹீ ஹீ இதெல்லாம் என் ப்ரெண்ட் ஸ்  க்கு பாஸ்... நான் போன உடனே என்னை  பார்க்க வந்திடுவாங்க.. அவங்களுக்கு தான் இதெல்லாம்... “

“ப்ரெண்ட்ஸ்க்கு சாக்லெட் ஆ... சரி தான்..  உன்ன மாதிரியே உன்  ஃப்ரெண்ட்ஸ் ம் இன்னும் வளரலையோ.. “ என்று கிண்டலடித்தவன்

“ஆமா... இதெல்லாம் எப்ப வாங்கின??  நீதான்  வீட்டை விட்டே வெளியில் போகலையே??  “என்றான் சந்தேகமாக....

“ஹி ஹி ஹி.. இதெல்லாம் வாங்கறதுக்கு நாம நேர்ல போகணும்னு இல்ல பாஸ்..  அதான் BB இருக்கே.. அதுல சொல்லிட்டா போதும்... எல்லாம் ரெடியா வந்திடும்.. “என்று சிரித்தாள்..

“அது என்ன  BB?  “ என்றான்  இன்னும் புரியாமல்

“Big Basket , Big Basket பாஸ்.. நம்ம ஷாருகான் சார் கூட வருவாரே விளம்பரத்துக்கு.. அதுல நாம என்ன வேணுமோ ஆர்டர் பண்ணிட்டா  நாம  எங்க இருந்தாலும் அவங்களே தேடி வந்து கொடுத்திடுவாங்க.. இதை எல்லாம் வாங்க, நாம செலவு பண்ணிகிட்டு அலைய தேவை இல்லை...

என்ன டெலிவரி சார்ஜ், ஜி எஸ் டி. அப்புறம் நம்மள தேடற சார்ஜ் அது இதுனு போட்டு ஒரு  பெரிய லிஸ்ட் ஐ நீட்டுவாங்க.. அதுக்கு நாம பே பண்ணிட்டா போதும்...” என்று விளக்கினாள்

“ஹ்ம்ம் பரவாயில்லையே .எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கியே..  வெரி குட்.. சரி வா போகலாம்.. “ என்று நடந்தவன் சிறிது தூரம் சென்றதும் என்ன நினைத்தானோ

“ஹே பேபி.. என் வாலட்டை காணோம்.. ஓடிப்போய் ரூம்ல இருக்கானு பார்த்திட்டு வர்ரியா.. “என்றான் சிரித்தவாறு...

“ஹ்ம்ம்ம்  நீங்க இங்கயே இருங்க பாஸ்.. நான் போய் சீக்கிரம் பார்த்துட்டு வந்திடறேன்.. “ என்று தான் கொண்டு வந்த பொருட்களை அங்கயே வைத்து விட்டு சேலையை ஒரு கையில்  தூக்கி பிடித்து கொண்டு வேகமாக இரண்டு இரண்டு படியாக தாவி ஏறினாள்...

வேகமாக தங்கள் அறைக்கு சென்றவள் அறை முழுவதும் தேட அவன் வாலட் மட்டும் அங்கு இல்லை...

“காணோமே...” என்று யோசித்தவளுக்கு அப்பொழுது தான் உறைத்தது..

“ஒரு வேளை என்ன வச்சு காமெடி பண்றானா??  “ என்று சந்தேகமாக கீழ இறங்கி வந்தாள் இரண்டு இரண்டு படியாக தாவி

அவள் இறங்கி வரும் அழகையே ரசித்தவன்  அவள் அருகில் வரவும்

“ஹே பேபி... வாலட் இங்க தான் இருக்கு.. நான் தான் சரியா பார்க்கலை..  என்று சிரித்தான்..அதை கண்டு அவனை முறைத்தாள் எவ்வளவு முயன்றும் தன்னை கட்டுபடுத்த முடியாமல்...

“ஹே..   என்னடி முறைக்கிற?? .. இப்படி எல்லாம் முறைச்சா நான் உங்க வீட்டுக்கு வர மாட்டேன்.. “ என்று முறுக்கினான்..

“ஹீ ஹீ ஹீ.. நான் எப்ப பாஸ் முறைச்சேன்?? ... அது என் பார்வையே அப்படியா இருக்கும்... நீங்க யாரு?? உங்களைப் போய் நான் முறைப்பதா?? ... சரி சரி வாங்க போகலாம்.. “ என்று அவன் கையை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றாள்..

வெளியில் நின்ற காரை அடைந்ததும் அவன் காரின் கதவை திறந்து மீண்டும் ஏதொ யோசித்து சொல்ல வர்றதுக்குள் காரின் உள்ளே சென்று அமர்ந்தவள் அவன் யோசிப்பதை கண்டவள் ஓட்டுனர் பக்கம் வந்து

“சும்மா வாங்க பாஸ். எதையும் யோசிக்க வேண்டாம்.. “என்று அவன் கையை பிடித்து காரின் உள்ளே இழுத்தாள்...

இத எதிர்பார்க்காதவன் பொத்தென்று ஓட்டுனர் இருக்கையில் விழுந்தான்..

“என்னடி இது?? .. இப்படி இழுக்கற?? பார்த்தாதான் ஆளு குட்டையா இருக்க.. உனக்கு ரொம்ப ஸ்ட்ரென்த் டி... “என்று சிரித்தான்...

“ஹீ ஹீ ஹீ.. அதெல்லாம் ஹெல்தி புட் னால பாஸ்.. உங்கள மாதிரி வீக் பாடி இல்ல நான்... “ என்று சிரித்தாள்..

“யாரு?? நான் வீக் பாடி யா? டெஸ்ட் பண்ணலாமா நான் எவ்வளவு ஸ்ட்ராங்  னு .. ?? “ என்றான் அவளை ஒரு மாதிரி பார்த்தவாறு..

“ஐயோ.. பவித்ரா.. உனக்கு தேவையா இது ??. சும்மா இருக்கிற சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டிங்கிற மாதிரி சும்மா இருக்கிறவனை நீயே கெடுத்திடுவ போல இருக்கே.. உன் வாயை கொஞ்சம் குறை .. அவன் உன் வீட்டுக்கு வர்ற வரைக்கும்  அடக்கி வாசி.. “என்று தன்னை தானே திட்டி கொண்டாள்...

அதற்கு பிறகு எதுவும் பேசாமல் வெளியில் வேடிக்கை பார்த்து வந்தாள்.. அவன் வேண்டும் என்றே வம்பு இழுக்க அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் அமைதியாக தன்னை கட்டுபடுத்தி கொண்டாள்..

ஒருவழியாக கார்  பவித்ராவின் வீடு இருந்த தெருவை அடைந்தது... அவன் எடுத்து வந்திருந்த பெரிய காரில் அந்த சந்துக்குள் நுழைவது கஷ்டமாக இருந்தது.. சந்து குறுகலாக இருந்தது. அதிலும் இரண்டு பக்கத்திலும் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி இருக்க அதன் மேல் மோதாமல் ஓட்டுவது மிகவும் சிரமமாக  இருந்தது அவனுக்கு ..

“சே!! இதுக்குத்தான் நான் வரமாட்டேனு  சொன்னேன்.. கேட்டியா நீ ...  இப்ப எப்படி   இநது குட்டையான சந்தில் போவதாம்??  .. “ என்று எரிஞ்சு விழுந்தான்..

சின்ன காரா எடுத்துகிட்டு வந்திருக்கலாம் இல்ல??.” என்று முனகினாள்

“ஹ்ம்ம் இத விட சின்ன கார் னா என் ஸ்டேட்டஸ் என்னாவது?? 

“ஆமாம் பொல்லாத ஸ்டேட்டஸ்...”என்று புலம்பியவள்

“ஆமா... முன்னாடி எப்படி வந்தீங்களாம்..?? “என்றாள் கேள்வியாக..

“ஹீ ஹீ அப்ப நான் யாருனு தெரியாது.. அதோடு உங்கம்மாவுக்கு என் மேல சந்தேகம் வந்திடக்கூடாது இல்லையா...  அதனால சின்ன கார் எடுத்துட்டு வந்தேன்..

இப்ப அப்படியா?? மாமியார் வீட்டுக்கு போறப்போ கெத்தோட போகணும்னு நீதான சொன்ன.? அப்புறம் எப்படி சின்ன காரா எடுத்துட்டு வர்றதாம்.. உங்க தெருவே இல்ல இந்த ஏரியாவே என் காரைத்தான் வேடிக்கை பார்க்க போறாங்க பார்... “என்று அவன் சொல்லி வாய் மூடு முன்னெ பல தலைகள் அவர்கள் காரை திரும்பி பார்த்து ஆச்சர்யமடைந்தனர்.. இங்க போய் இவ்வளவு பெரிய காரா என்று...

அதை கண்ட பவித்ரா

“ஐயோ.. அப்ப என் மானம் போக போகுது.. எlல்லாரும் கேட்க போறாங்க.. உன் வீட்டுக்காரர் அவ்வளவு பெரிய காருக்கு ட்ரைவரானு.. “ என்று சிரித்தாள்..

“ட்ரைவரா?? “ என்று முழித்தான்

“ஆமா .. என் ஸ்டேட்டஸ்க்கு யாராவது கார் ட்ரைவர் தான் மாட்டியிருப்பான் மப்பிள்ளையா... யாரலயும் நம்ப முடியாது... பார்வதி பெரிய இடத்துல பொண்ணை கட்டி கொடுத்திருகானு.. “

“ஹ்ம்ம் பார்க்கலாம்.. எப்படி மரியாதைனு..  இப்ப என்ன பண்றீங்க... எப்படியாவது அட்ஜஸ்ட் பண்ணி ஓட்டுங்க பாஸ்.. நீங்க தான் கார் ஓட்டுறதுதல எக்ஷ்பர்ட் ஆச்சே.. “  என்று ஐஸ் வைத்தாள்..

திரும்பி அவளை முறைத்தவாறே அந்த குறுகிய சந்தில் எந்த வண்டியில் மீதும் இடித்து விடாமல் லாவகமாக ஓட்டினான்..பின் ஏதோ நினைவு வந்தவனாக

“ஆமா.. ஏன் இப்படி எல்லாரும் வெளில நிறுத்தி வச்சிருக்காங்க... அவங்களோட பார்க்கிங்க் ல நிறுத்த வேண்டியதுதான.. “ என்றான் அவளை பார்த்து

அதை கேட்டு சிரித்தவள்

“பாஸ்.. எல்லாரையும் உங்கள மாதிரி நினைச்சிடாதிங்க... நாங்களாம் ஒரு 600 சதுர அடி ல நிலம் வாங்கி அதிலயே 2 பெட்ரூம், ஹால், கிச்சன், பூஜ ரூம்னு ஒரு சென்டி மீட்டர் கூட இடம் விடாமல் வீடு கட்டறவங்க... இதுல பார்க்கிங்க்கு எங்க போவதாம் இடத்துக்கு... அதான் நம்ம கவர்ன்மென்ட் இடம் இருக்கே இங்கயே நிறுத்திக்க வேண்டியதுதான்... “

“ஹ்ம்ம்ம் டூ வீலர் ஓகே... காரை எங்க நிறுத்துவாங்களாம்?? “என்றான் சந்தேகமாக....

“பாஸ்... காமெடி பண்ணாதிங்க...நாங்க எல்லாம் டூ வீலரையே லோன்ல வாங்கி அதுக்கு மாசம் மாசம் EMI கட்டி அந்த லோனை அடைக்கிறவங்க.. இதுல காராம் கார்...” என்றவள், “பாஸ் இன்னைக்கு டேட் என்ன?? “என்றாள் அவசரமாக...

“ஏய்.. நீ தான் இந்த நான்கு நாளா மணிக்கு ஒரு தரம் அந்த காலண்டரை பார்த்த உங்கம்மா வீட்டுக்கு போறதுக்கு .. உனக்கு தெரியாதா இன்னைக்கு என்ன டேட்னு??  “என்று முறைத்தான்

“ஹீ  ஹீ ஹீ.. நான் என்ன கிழமைனு தான் பார்த்தேன் பாஸ்.. டேட் ஐ எல்லாம் யார் பார்த்தா... உங்க கிட்ட போய் கெஞ்சி கிட்டு இருக்கேன் பார்... என் PA கிட்டயே கேட்டுக்கறேன்.. “என்று தன் அலைபேசியை எடுத்து அவசரமாக காலண்டரை திறந்து நாளை பார்த்தாள்...

அதை கண்டதும் “அச்சச்சோ!! போச்சு இன்னைக்கு 23.. “ என்றாள்...

“ஆமா 23 தான்..  அதுக்கு என்ன?? எதுக்கு இப்படி அலற.. “ என்று முறைத்தான்..

“பாஸ்..என் ஸ்கூட்டிக்கு EMI 15 த்தே கட்டியிருக்கனும்.. போச்சு..  ஒரு வாரம் டிலே ஆயிருச்சு.. “என்று புலம்பினாள்...

ஏய்.. அதுக்கு என்ன.. இப்ப கட்டிக்கலாம்.. ஆமா எவ்வளவு லோன்?? எவ்வளவு  EMI ?? “என்றான்..

“ஹ்ம்ம்ம் 40000  லோன் பாஸ்... மன்த்லி 2500 கட்டணும்... ட்யூ டேட்முடிஞ்சு EMI கட்டலைனா அதுக்கு லேட் பீ  (late fee ) னு வேற போடுவாணுங்க.. அந்த லேட் பீ க்கு ஜி.எச் .டி வேற... நாங்களே காசு இல்லாமல் தான் EMI லேட்டா கட்டறோம்.. அப்படி லேட்டா கட்டற லேட் பீக்கும் ஜி.எஸ்.டி  போடறது தான் கடுப்பாகுது பாஸ்.. “ என்று புலம்பினாள்...

“ஒரு 2500 க்கு எதுக்குடி இப்படி புலம்பற?? “ என்று முறைத்தான்...

“பாஸ்.. உங்களுக்கு அது சீப்.. எங்களுக்கு??

“சரி சரி விடு.. நாளைக்கு போய் அந்த லோனை க்லோஸ் பண்ணு நீ ஒரு மல்ட்டி மில்லினரோட வைப்... ஒரு  2500க்கு இப்படி புலம்பற.. “என்று மீண்டும் முறைத்தான்...

“பாஸ்... நீங்க என்ன சொன்னீங்க.. திருப்பி சொல்லுங்க?? “என்றாள் ஆர்வமாக

“ஆங்... ஒரு  2500க்கு இப்படி புலம்பற னு  சொன்னேன்...”

“அது இல்ல பாஸ். அதுக்கு முன்னாடி என்ன சொன்னீங்க??

“ஹ்ம்ம்ம் அதுக்கு முன்னாடி?? நாளைக்கு போய் அந்த லோனை க்லோஸ் பண்ணு னு   சொன்னேன்..”

“ம்ஹும் அதுக்கு பின்னாடியும் நீங்க கடைசியா சொன்னதுக்கு முன்னாடியும் என்ன சொன்னீங்க??

“ஏய்.. நீ அடி வாங்க போற.. “ என்றான் கோபமாக முறைத்தவாறு

“நல்லா யோசிச்சு சொல்லுங்க பாஸ்.. நீங்க தான் எதையும் அவ்வளவு சீக்கிரம் மறக்க மாட்டீங்களே?? “ என்று அவனை மட்ககினாள்

“ஹ்ம்ம்ம் ஆங்க்.. நீ ஒரு மல்ட்டி மில்லினரோட வைப் னு சொன்னேன்.. “ என்று முறைத்தான்..

“அது தான்..அதே தான்...  ப்ளீஸ் இன்னோரு தரம் சொல்லுங்க பாஸ்...” என்று சிரித்தவள்

“இப்பவாது என்னை உங்க வைப் னு  ஒத்துகிட்டீங்களா?? அப்ப நான் தான நம்ம சவாலில் ஜெயிச்சேன் “என்று தன் புருவங்களை உயர்த்தினாள் குறும்பாக சிரித்தவாறே..

“ஆகா... இந்த குட்டச்சி எங்க இருந்து எங்க தாவுறா?? நம்ம கிட்டயே போட்டு வாங்கறாளே.. ஆதி உசார்.. “ என்று அவசரமாக சுதாரித்தவன்

“ஹீ ஹீ ஹீ நீ எப்பவும் என் வைப் தான் பேபி.. மற்றவங்களுக்கு... “ என்று சமாளித்தான்..

அவன் தன்னை மனைவி என்று ஒத்துக்கொள்வான் என்று ஒரு எதிர்பார்ப்போடும் ஆவலோடும் அவன் முகத்தையே பார்த்து இருந்தவளுக்கு அவனின் பதில்  ஏமாற்றத்தை கொடுத்தது.. நொடியில் வாடிப் போனது அவள் முகம்...  ஆனாலும் உடனே தன்னை சமாளித்துக் கொண்டவள்

“ஹ்ம்ம்ம்ம் உங்கள மாதிரியே எனக்கும் ஒரு கொள்கை, கோட்பாடு எல்லாம் இருக்கு பாஸ்... நீங்க என்னை மனதார மனைவியா ஏத்துக்காத வரைக்கும் உங்க காசு,பணம் எதுவும் என் தனிப்பட்ட செலவுக்கு நான் எடுக்க மாட்டேன்.. “ என்று சிரித்தாள் தன் வருத்தத்தை மறைத்துக் கொண்டு..

“ஹே.. அப்ப நீ தினமும் சாப்பிடறது?? .. அப்புறம் நீ போட்டுக்கற ட்ரெஸ்?? இதெல்லாம் யாரோட காசாம்?? “ என்று சிரித்தான்...

“ஹ்ம்ம்ம்ம் அது என்னை ஏமாற்றி கல்யாணம் னு ஒரு ட்ராமா பண்ணி, என்னை எங்கம்மாகிட்ட இருந்து வாங்கிட்டு வந்தீங்க இல்ல.. அதுக்கான EMI தான் அது..அது நீங்க கட்டிதான் ஆகணும்.. “ என்று கண் சிமிட்டி சிரித்தாள்...

“என்னது ?? EMI யா?? “ என்று அவனும் பதிலுக்கு சிரித்தவன் திடீரென்று ப்ரேக் போட்டான்.. அதில் தடுமாறி முன்னாடி இடித்துக் கொண்டவள்

“என்னாச்சு பாஸ்?? .. பார்த்து ஓட்ட மாட்டீங்க??  என்று முறைத்தாள்...

“ஹே.. பார்த்து ஓட்டினனால தான் அந்த Dog தப்பிச்சது.. ஆமா உன்ன மாதிரியே உங்க ஏரியா நாயும் அடங்காதோ?? .. இதுவரைக்கும் ஓரத்துல தூங்கினது திடீர் னு எழுந்து குறுக்க வருது.. “ என்று முறைத்தான்..

“ஹீ ஹீ ஹீ .. பாஸ்.. அது உங்கள டெஸ்ட் பண்ண.. உங்களுக்கு உண்மையிலயே நல்லா ஓட்ட தெரியுமானு டெஸ்ட் பண்ணதான்.. சரியா ஓட்ட தெரிஞ்சாதான் இந்த மாதிரி வேகமா ப்ரேக் போட்டு நிறுத்த முடியும்..நீங்க டெஸ்ட் ல பாஸாகிட்டீங்க பாஸ் “என்று சிரித்தாள்...

“அம்மா தாயே.. இது மாதிரி இன்னும் என்னென்ன டெஸ்ட் இருக்குனு முன்னாடியே சொல்லிடு... நான் எதுக்கும் பிரிப்பேர்டா  இருந்துக்கறேன்... இதுக்குத்தான் நான் இங்க எல்லாம் வர மாட்டேனு சொன்னேன்.. “  என்று அவன் பழைய பல்லவியை ஆரம்பிக்க

“ஐயயோ... பவித்ரா.. இன்னும் ஒரு 10 அடி தூரம் தான் இருக்கு உன் வீட்டுக்கு.. அதுக்குள்ள அவன டெஸ்ட் அது இது னு பயமுறுத்துன அவன் இப்படியே ரிவர்ஸ் ல வண்டிய எடுத்துட்டு போனாலும் போய்டுவான்...நீ இதுவரை பட்ட கஷ்டம் எல்லா வீணா போய்டும்.. 

அதனால இன்னும் ஒரு 5 நிமிடம் அடக்கி வாசி.. அவன் உன் வீட்ல வந்து காலடி எடுத்து வைக்கிற வரைக்கும்.. “என்று அவள் மனம் எச்சரிக்கை விடுக்க அதற்கு பிறகு எதுவும் பேசாமல் அமைதியாக வர, ஆதியோ முன்னை விட கவனமாக ஓட்டினான்..

 சில இடங்களில் நிறுத்தியிருந்த வண்டியை நகர்த்தி வைக்க சொல்லியும் ஒரு வழியாக ஓட்டி தன் மாமியார் வீட்டை அடைந்தான் ஆதி.. நல்ல வேளையாக அவள் வீட்டின் அருகில் காலி இடம் இருந்ததால் அங்கு காரை பார்க் பண்ணி இறங்கினர் இருவரும்...

அதற்குள் காரின் ஓசை கேட்டு பார்வதி வேகமாக  வெளியில் வந்தார்.. அவர்தான் காலையில் இருந்தே வீட்டுக்கும் வாசலுக்கும் நூறு முறையாவது நடந்திருப்பார்.. தன் மகளை காணும் ஆவலில்...

காரிலிருந்து இறங்கியவள் தன் அன்னையை  காணவும் ஆதியை மறந்து புடவையை ஒரு கையால் தூக்கி பிடித்து கொண்டு வேகமாக ஓடி வந்து அவரை கட்டி அணைத்துக் கொண்டாள்....

இரண்டு வாரம் பார்க்காததே அவரை என்னவோ பல வருடம் பிரிந்திருந்ததை போல இருந்தது.... தன் அன்னையை இறுக்கி அணைத்து அவரின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்...

“ஐ மிஸ்ட் யூ  பாரு... “  என்று சிரித்தாள்...

அவளின் பின்னால் வந்த ஆதிக்கோ அவளின் செயலை கண்டு பொறாமை பொங்கி வழிந்தது... “எனக்கு இப்படி என்னைக்காவது செய்திருப்பாளா??  என்று முறைத்தவாறெ அருகில் வந்தான்.. அப்பொழுது தான் தன் மாப்பிள்ளையை கவனித்த பார்வதி

“பவி .. என்ன இது சின்ன பிள்ளையாட்டம்.. மாப்பிள்ளை முன்னாடி இப்படி கட்டி பிடிச்சிகிட்டிருக்க... தள்ளி நில்.. “என்று காதில் முனுமுனுத்தவர் அவளை பிரித்து தள்ளி நிறுத்தினார்...

பின் ஆதியை பார்த்து

“வாங்க.. மாப்பிள்ளை.. நல்லா இருக்கீங்களா?? ... பவித்ரா... எதுவும் தப்பா எடுத்துக்காதிங்க.. அவ எப்பவும் இப்படிதான் செய்வா... “ என்று அசடு வழிந்தார்..

அவனும் இட்ஸ் ஓ.கே.. என்று சிரித்தான்..

பவித்ராவோ “அத்தைனு சொன்னாதான் என்னவாம்?? “ என்று மனதுக்குள் முனகிக்கொண்டாள்..

பின் பார்வதி   

“நீங்க இரண்டு பேரும் இப்படி கிழக்கு பார்த்து நெருங்கி நில்லுங்க... நான் போய் ஆரத்தி தட்டை எடுத்துட்டு வர்ரேன்.. நீங்க வந்த சத்தம் கேட்கவும் சந்தோஷத்துல தட்டை உள்ளயே மறந்து வச்சுட்டு வந்திட்டேன்.. “ என்று சிரித்தவாறு உள்ளே வேகமாக ஓடினார்...

ஆதியோ பவித்ராவை முறைத்தாவாறே நெருங்கி நின்றான்.. அவளோ தள்ளி நிக்க, வேண்டும் என்றே அவள் அருகில் நெருங்கி நின்றான்...

“எதுக்கு இப்படி எரும மாதிரி இடிக்கறீங்க.. அதான் அவ்வளவு இடம் இருக்குள்ள... தள்ளி நிக்க வேண்டியதுதான?? “ என்று முறைத்தாள்..

“ஹே.. உங்க அம்மாதான் நெருங்கி நில்லுங்க னு சொன்னாங்க.. வேணும்னா உங்க அம்மா கிட்டயே கேட்கலாமா?? “ என்று குறும்பாக சிரித்தான்..

“ஐயோ!!  இதை எல்லாமா கேட்பாங்க?? ... எப்படியோ நின்னு தொலைங்க...

மா சிக்கிரம் வா.. இவன் தொல்லை தங்க முடியலை... “ என்று மனதுக்குள் ஒரு அவசர அழைப்பு விடுத்தாள் தன் அன்னைக்கு..

அவளின் கஷ்டம் புரிந்து பார்வதியும் வேகமாக ஆரத்தி தட்டை எடுத்து வந்து அவர்கள் இருவரையும் ஆரத்தி எடுத்து வரவேற்றார்...

“நீங்க உள்ள போங்க.. நான் இதை தெருவுல கொட்டிட்டு வந்திடறேன்.. “ என்று நகர்ந்தார்...

ஆதியும் பவித்ராவும் ஒன்றாக வலது காலை எடுத்து வைத்து உள்ளே செல்ல அடுத்த நொடி

“ஆ “வென்று அலறினான் ஆதி..



Comments

  1. Next update eppe poduvinge seekkiram podunge wait panna mudiyale pls dr earlya podunge plsssss

    ReplyDelete

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!