உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-25
அத்தியாயம்-25
ஆதியின் அலறலை கேட்டு திடுக்கிட்ட பவித்ரா
“என்னாச்சு?? “ என்று திரும்பி நிமிர்ந்து அவனை
பார்த்தவள் அவன் நெற்றியில் கை வைத்து அலறவும் சிரிப்பு வந்தது அவளுக்கு...
“ஹ்ம்ம்ம்
எவ்வளவு பெரிய மகாராஜானாலும் எங்க வீட்டிற்கு
வரும் பொழுது தலை வணங்கி தான் வரணும்னு எங்கப்பா எங்க வீட்டு வாயில் நிலையை கொஞ்சம்
உயரம் கம்மியா வச்சுட்டார்... அதான்..
நீங்க பாட்டுக்கு
நேரா வந்தா இப்படி தான் அடி படுமாக்கும்.. இனிமேலாவது குனிஞ்சு வாங்க பாஸ்.. “
என்று சிரித்தாள்...
அவன் இடித்துக்கொண்ட
வலியோடு பவித்ராவின் நக்கலும் சேர்ந்து அவனை கடுப்பேற்ற அவளை பார்த்து முறைத்தான்..
அதற்குள் பார்வதி வந்துவிட தன் மாப்பிள்ளை நெற்றியில் கை வைத்து வலியுடன் நிற்பதை கண்டவர், நடந்தது புரிந்து விட
“ஏய் பவித்ரா.. நீயாவது
சொல்லக் கூடாது மாப்பிள்ளையிடம் குனிஞ்சு
வருமாறு.. .பார்.. பாவம் இப்படி இடிச்சுகிட்டார்...
நீ போய் அந்த அயோடக்ஷ் எடுத்துட்டு வந்து மாப்பிள்ளைக்கு போட்டு விடு..சாரி மாப்பிள்ளை...
“என்றார் வருத்தத்துடன்..
அதை கேட்டு
அதிர்ந்த பவித்ரா
“நான் போய் இவனுக்கு
தைலத்த தடவறதா... நெவர்.. “ என்று அவசரமாக யோசித்தவள்
“மா.. அது எங்க
இருக்குனு எனக்கு தெரியாது மா.. “ என்று சமாளித்தாள்..
“ஏய்.. பவி.. நீ
இந்த வீட்டை விட்டு போய் இரண்டு வாரம் தான் ஆகுது.. என்னவோ இரண்டு வருடம் ஆன மாதிரி
பேசற... இரண்டு வாரம் முன்னாடி கூட நீ எங்கயோ இடிச்சுகிட்டு வந்து அயோடக்ஷ்
போடலை.. நீ அப்ப எங்க வச்சியோ அங்க தான் இருக்கும்.. போ.. போய் எடுத்துட்டு வா...
“ என்று அவசர படுத்தினார்...
“சே.. இந்த
அம்மா வேற என் கஷ்டம் புரியாமல் கரெக்டா இதெல்லாம் ஞாபகம் வச்சிருக்கே.. “ என்று புலம்பி
கொண்டே போய் அந்த தைலத்தை எடுத்து வந்தாள்..
அதற்குள் ஆதி ஹாலில்
இருந்த ஷோபாவில் அமர்ந்து இன்னும் தன் கையை நெற்றியில் வைத்துக் கொண்டிருந்தான்...
“ஒரு வேளை அடி பலமோ...
“என்று யோசித்தவாறு அருகில் வந்து இத எப்படி போடறது என்று தயங்கி நின்று கொண்டிருந்தாள்..
“என்ன டி
நிக்கற.. மாப்பிள்ளைக்கு நல்லா தேய்ச்சு விடு.. “என்று சொல்லி சமையல் அறைக்குள் சென்றார்
பார்வதி...
பவித்ராவோ அவனை
முறைத்தவாறே அந்த தைலத்தை எடுத்து அவன் நெற்றியில் வைத்து நன்றாக தேய்த்தாள்...
அவள் கை விரல்
பட்டதும் சிலிர்த்தது அவனுக்கு.. இவ்வளவு மென்மையா இருக்கே இவள் விரல்கள்... “ என்று
நினைத்தவன் வேண்டுமென்றே ஒவ்வொரு இடமாக காட்டினான்...
அவளும் அவன் சொல்லும்
இடத்தில் எல்லாம் தேய்க்க கண் மூடி அந்த சுகத்தை அனுபவித்தான்...
சிறிது நேரம் தேய்த்தவள்
கை வலிக்க,
“இவ்வளவு இடத்துல
தேய்க்க சொல்றானே.. அவ்வளவு பெரிய அடியா??... ஆனால் எங்கயும் வீங்க காணோமே!! “ என்று சந்தேகமாக அவனை பார்த்தாள்...
அவனோ மயக்கத்தில்
இருந்து கண் விழித்தவன்
“வாவ்.. சூப்பர்
பேபி... உன் பட்டு விரல் பட்டு என் வலி போயே போச்சு.. இப்படி நீ தொடுவனு தெரிஞ்சிருந்தால்
உண்மையிலயே பெரிய அடி வாங்கி இருக்கலாம் போல.. “என்று கண் சிமிட்டி சிரித்தான்...
அவன் சொன்னதின்
அர்த்தம் புரிய சில விநாடிகள் ஆனது அவளுக்கு...
“அப்படீனா.. அவனுக்கு
அடி படவே இல்லையா.. அடப்பாவி.. என்னவோ அடி பட்ட மாதிரியே அப்படி நடித்தானே...
எல்லாம் சீட்டிங்க்.. ப்ராடு.. “என்று அவனை முறைத்து அவன் தலையில் ஓங்கி
கொட்டுவதற்காக கை ஓங்கவும் பார்வதி சமையல்
அறையில் இருந்து வெளியில் வரவும் சரியாக இருக்க, ஓங்கிய கையை அப்படியே இறக்கி கொண்டாள்...
அதை கண்டு கொண்டவன்
“தாங்க் காட்...
உங்க அம்மா வந்து என்னை காப்பாத்திட்டாங்க... இல்லைனா என் தலை என்னாயிருக்கும்??.. “ என்று தன் தலையை தடவிக்கொண்டவன் அவளை பார்த்து மீண்டும்
கண் சிமிட்டி சிரித்தான்..
அவளோ அவனை
திட்டவும் முடியாமல் முறைக்கவும் முடியாமல் அசடு வழிந்து சிரித்து வைத்தாள் தன் அம்மா
முன்னாடி..
பார்வதி தன் மாப்பிள்ளைக்காக
செய்து வைத்த பலகாரங்களை எல்லாம் ஒரு தட்டில் அடுக்கி எடுத்து வந்து அவன் முன்னே
வைத்து சாப்பிட சொன்னார்...
பவித்ராவுக்கு அப்பொழுது
தான் வாங்கி வந்திருந்த பொருட்களின் நினைவு வர
“மா.. நான் போய்
கார்ல இருக்கிறதை எடுத்துட்டு வர்ரேன்..
என்றவள் ஆதியிடம் காரை ஓபன் பண்ணுங்க..” என்று சொல்லி வெளியில் ஓடினாள்..
காரை அடைந்து எல்லா
பொருட்களையும் எடுத்து கொண்டு உள்ளே வந்தவள் அங்கு கண்ட காட்சியில் வாயடைத்து நின்றாள்...
ஆதி
பார்வதியிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்தான்.. வார்த்தைக்கு வார்த்தை அத்தை அத்தைனு ஐஸ் வைத்துக் கொண்டிருந்தான்.. அதை கண்ட பவித்ராவோ
“உலக மகா
நடிப்புடா சாமி. இதுவரை உன் அம்மானு சொன்னவன் இப்ப இப்படி அத்த அத்த னு உருகறானே!!
... இப்ப எதுக்கு இந்த நல்லவன் வேஷம் போடறான்?? என்ன ப்ளான் பண்ணி
வச்சிருக்கானோ??
ஒருவேளை ஒரு
நாள் முதல்வன் மாதிரி,
ஒரு நாள் நல்லவனோ?? ம்ஹும் ஒரு நாள் மருமகன்... அதுதான்
சரியா இருக்கும்... பவித்ரா நீ கொஞ்சம்
ஜாக்கிரதையா வே இரு..அவன் போடற நல்லவன் வேஷத்தை நம்பிடாத ... “ என்று மனதுக்குள் சொல்லிக்
கொண்டவள் அவர்கள் அருகில் வந்தாள்...
பவித்ரா உள்ளே
வந்ததில் இருந்தே அவளை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தவன் அவளின் மன ஓட்டத்தை அறிந்தவன் போல அவளை பார்த்து கண் சிமிட்டினான்..
“எப்படி என் நடிப்பு?? “ என்று தன் காலரை தூக்கி விட்டு
கொண்டான்..
“தாங்கலடா சாமி..
“என்று அவளும் முனுமுனுத்தாள்...பின் அவள் கொண்டு வந்ததை எல்லாம் பார்வதியிடம் கொடுக்க
“எதுக்கு பவி??.. நான் ஒருத்தி மட்டும் இவ்வளவா
சாப்பிடறேன்.. “ என்றார்.. பவித்ரா ஏதோ சொல்லு முன்பே
“இருக்கட்டும் அத்தை..
முதல் முறையா உங்களை பார்க்க வர்ரோம்.. இது கூட செய்யாமல் எப்படி?? “ என்று பவித்ராவை
பார்த்துக்கொண்டே சிரித்தான்..
அதை கண்டு மனம் நிறைந்து
நின்றார் பார்வதி
பவித்ராவோ “அடப்பாவி..
என்னமோ இவனே கடைக்கு போய் பார்த்து பார்த்து வாங்கின மாதிரி இல்ல பில்டப் பண்றான்..
கொஞ்ச நேரம் வரை இங்க வர்றதுக்கு திட்டிகிட்டே வந்தவன் இப்படி நடிக்கிறானே..
“என்று பொருமினாள்...
பின் அவளும் அவன்
அருகில் அமர்ந்து அந்த பலகாரங்களை ருசி பார்க்க, சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தவன்
“சரி அத்தை..
எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. இங்க ஒரு க்ளைன்ட் ஐ பார்க்கணும்.. நான் போய்ட்டு
லன்ச்க் கு வந்திடறேன்... பவித்ரா இங்கயே இருக்கட்டும்.. “ என்று எழுந்து கிளம்பி
சென்றான்... பவித்ராவும் கூடவே எழுந்து கார் வரை அவனுடன் சென்று
“நீங்க எதுவும்
ஏமாத்தலை இல்ல?? ...
லன்ச்க்கு வந்திடுவீங்க இல்ல?? அம்மா பாவம் உங்களுக்காக நிறைய
ப்ளான் பண்ணி வச்சிருக்காங்க....” என்றாள் குரல் கொஞ்சம் கரைந்து இருந்தது....
அவன் திடீரென்ரு
கிளம்பவும் ஒரு வேளை ஏதோ ப்ளான்பண்ணிதான் கிளம்பறானோ?? என்று பயந்தவள் அவன் கூடவே
வந்தாள்... அவளின் அந்த பாவமான முகத்தை கண்டவன்
“”ஹே..டோன்ட்
வொர்ரி பேபி.. நான் நிஜமாகவே ஒரு வேலையாதான்
போறேன்.. சீக்கிரம் வந்திடறேன்.. மாமியார் சமையலை ஒரு பிடி பிடிக்காமல் எப்படி போவதாம்...
“ என்று சிரித்தான்.. அவளுக்கு என்னவோ
அவன் வில்லங்கமாக சிரித்ததை போல இருந்தது....அவளின் குழப்பமான முகத்தை கண்டு
“ஓகே பேபி...
பை..ரொம்ப போட்டு குழப்பிக்காத... நான் சீக்கிரம் வந்திடுவேன்.. “ என்று அவளின் கன்னம் தட்டி சிரித்தவாறு காரை ஸ்டார்ட்
பண்ண, அவளும் சிரித்து கொண்டே கை அசைத்து வழி
அனுப்பினாள்… இதை ஜன்னலின்
வழியாக கண்ட பார்வதிக்கு மனம் நிறைந்து இருந்தது..
அப்பொழுது தான் கண்டார்
தன் மகளின் தோற்றத்தை....இதுவரை மாப்பிள்ளை வந்த சந்தோஷத்தில் தன் மகளை
கண்டுக்காதவர் அப்பொழுது தான் உற்று பார்த்தார்.. ஆதியின் மேக்கப்பில் கோயில் சிலையாட்டம்
மிளிர்ந்தாள் பவித்ரா.. அதுவும் கண்ணில் மின்னும் குறும்பும் முகத்தில் ஒரு பொழிவும்
அவள் மண வாழ்க்கையில் ஒன்றியிருப்பதை காட்ட தன் மகளின் புதிய தோற்றத்தை கண்டு
பூரித்து போனார் பார்வதி...
அவள் இப்படியே
எப்பவும் சந்தோஷமாக இருக்கனும் என்று வேண்டிகொண்டார்...அதே மகிழ்ச்சியில் , உள்ளே வந்த பவித்ராவை பார்த்து,
“ரொம்ப சந்தோஷமா
இருக்கு பவி மா.. நீ இப்படி மாப்பிள்ளை கூட ஒத்து போறதும் அவரை அனுசரித்து போவதையும்
கண்டு.. உன் குணத்துக்கு எங்க மூஞ்சிய தூக்கிட்டு வர்ரியோனு தினமும் பயந்துட்டே இருந்தேன்..
இப்பதான் நிம்மதியா இருக்கு... இப்படியே இருடா.. “ என்று அவளை கட்டி கொண்டு அவள் கன்னத்தில்
முத்தமிட்டார் பார்வதி...
பவித்ராவும் தன்
அன்னையின் செயலால் உருகி நின்றாள்.. “தன் அன்னையின் முகத்தில் தெரிந்த அந்த சிரிப்புக்காகவே
அவன் கூட இருந்தாகனும் ... “என்று நினைத்து கொண்டவள்
“என்னம்மா?? இது சின்ன பிள்ளையாட்டம்.. “
என்று தன் அம்மா சற்று முன் வாசலில் அவள் கட்டிகொண்டதுக்கு பார்வதி சொன்ன அதே டயலாக்கை திருப்பி சொல்லி சிரித்தாள் கன்னம்
குழிய ..
தன் மகளின் அந்த
மலர்ந்த சிரிப்பை ரசித்தவர்
“சரி பவி.. நீ
போய் ட்ரெஸ் மாத்திகிட்டு வா... நான் போய் மதிய சமையலை கவனிக்கறேன்.. “என்று உள்ளே
சென்றார்...
பின் பவித்ரா
தன் அறைக்கு சென்றாள்.. உள்ளே வந்தவள் அவளின் அறையில் இருந்த ஒவ்வொரு பொருளையும்
பார்க்கையில் மனம் குதூகலித்தது.. அப்படியே தன் படுக்கையில் தாவி குதித்தவள் இங்கும்
அங்கும் உருண்டு மகிழ்ந்தாள்..
“சே!! எவ்வளவு
ஹேப்பி மொமென்ட்ஸ்...எவ்வளவு ஜாலியா இருந்தேன் இங்க இருக்கிறவரைக்கும்... இரண்டு
வாரம் முன்னாடி வரைக்கும் தனக்கு சொந்தமாக இருந்தது எல்லாம் இப்பொழுது அனாதையாக இருப்பதை
போல இருந்தது... அதுவும் அவள் படுக்கையில் இருந்த அந்த பெரிய டெடியை கண்டவள்
“ஐயோ .. இத
எப்படி மறந்தேன்?? இது இல்லாமல் எனக்கு தூக்கமே வராதே..
இதை கூட மறக்க வச்சுட்டான் அந்த நெட்டை..
“ என்றவளின் நினைவுகள் ஆதியிடம் சென்று நின்றது.. அவனுடன் கழித்த இரவுகளை நினைத்து பார்த்தாள்...
“ஹ்ம்ம்ம்
ஒவ்வொரு நாளும் இன்ட்ரெஸ்டிங்காக தான் இருந்தது... “ என்று உள்ளுக்குள் சிரித்துக்
கொண்டவள் பின் தன் கப்போர்டை திறந்து தனக்கு பிடித்த ஒரு சல்வாரை எடுத்து அணிந்து கொண்டாள்..
பின் ஒவ்வொரு பொருளாக
தடவி பார்த்தாள் ஆசையாக...
தான் இரண்டு வாரம்
தான் அங்கு இல்லை என்பதே அவளால் நம்ப முடியவில்ல.. ஏனோ இரண்டு வருடம் அவன் கூட இருந்த பீல் அவளுக்குள்...
பின் தன் ட்ரெஸ்ஸிங்
டேபிலை திறந்தவள் அதில் அவள் சீப்பும் ஸ்டிக்கர் பொட்டும் ஹார் ட்ரையர் மட்டுமே
இருந்தது.. ஏன் ஒரு பவுடரோ பேஸ் கிரீமோ கூட
அவள் இதுவரை பயன்படுத்தியதில்லை..
வார விடுமுறை நாட்களில் முகத்துக்கு பயிற்றம் பருப்பு மாவு தேய்த்து குளிப்பாள்...
ஒரு சில நாட்களில் மஞ்சள் தேய்த்து குளிப்பதோடு சரி....
இப்பொழுது அந்த வீட்டில்
இருக்கும் ட்ராயரில் இருந்த மேக்கப் பொருட்கள் நினைவு வர
“அப்பா..
எவ்வளவு இருக்கு.. இது எல்லாம் தெரியாமல்
போனதே...”. என்றவள் தன் முகத்தை அங்கு இருந்த கண்ணாடியில் பார்க்க அவளுக்கே அவளை தெரியவில்லை..
முன்பு இங்கு கண்ணாடி
என்று ஒன்று இருப்பதே அவள் மறந்து விடுவாள் சில நேரங்களில்... குளித்ததும் கண்ணாடியே பார்க்காமலே தலை சீவி
ஒரு பொட்டை ஒட்டிக் கொண்டு ஓடுவாள் அலுவலகத்திற்கு.. அப்படி பட்டவள் இன்று நின்று
நிதானமாக தன்னை அந்த கண்ணாடியில் பார்க்க, அவளுக்கு பிரமிப்பாக இருந்தது அவ்வளவு அழகாக இருந்த அவள்
முகத்தை கண்டு...
இது எல்லாம் அவனின்
கை வண்ணத்தால் தான் என்றவளின் பார்வை அவளின் உதட்டிற்கு தாவ அவன் காலையில் லிப்ஸ்டிக்கை
போட்டு தன் இதழ்களை வருடியது நினைவு வர
இப்பவும் சிலிர்த்தது அவள் உள்ளே... நன்றாக அவள் இதழ்களை உற்று பார்த்தவள்..
“எல்லா இடத்துலயும்
ஈவனாதான் இருக்கு.. வேணும்னே தான் ரொம்ப
நேரம் தடவி இருக்கான்... திருடன்.. இப்போ படாத
அடிக்கு என்னை ஐயோடக்ஸ் தடவ வச்ச மாதிரி...” என்று சிரித்துக் கொண்டாள்...அவளுள்
கோபம் இல்லை.. மாறாக அவன் செய்கையை, குறும்பை எல்லாம் நினைத்து சிரித்துக்கொண்டாள்...
பின் ஒவ்வொரு பொருளை
பார்க்கையிலும் ஏதோ ஒரு வகையில் அவள் மனம் அவனிடமே சென்று நின்றது....அதை கண்டு
அதிர்ந்தவள்
“சே!! என்ன இது??... இப்படி நொடிக்கொரு தரம் அவன நினைச்சி கிட்டிருக்கேன்...
ம்ஹும்.. இது சரி இல்லை பவித்ரா... நீ உன் ரூட்ல இருந்து மாறாத... உன்ன தன் வழிக்கு
கொண்டு வரத்தான் ஏதோ செய்யறான் அந்த நெட்டை..
நீ உஷாரா இரு..உன் சவாலில் இருந்து பின் வாங்கிடாத... ” என்று அவளின் மனஸ் எச்சரிக்கை மணியை அடிக்க, அதை புரிந்துகொண்டவள் தன்னைத் தானே
திட்டி கொண்டு தன் அறையை விட்டு வெளியில் வந்து சமையல் அறைக்கு சென்றாள்..
அங்கு பார்வதி சமைத்துக்
கொண்டிருக்க பின்னால் இருந்து அவரை கட்டிகொண்டு அவர் கழுத்தில் முத்தமிட்டாள்...
தன் மகளின் மகிழ்ச்சியான
அந்த அணைப்பிலயே அவளின் மனநிலை புரிந்தது அந்த தாய்க்கு... அவரும் சிரித்துகொண்டே
“என்னடி?? அதுக்குள்ள மாப்பிள்ளை ஞாபகமா?? மாப்பிள்ளைக்கு கிடைக்க வேண்டியது எல்லாம் எனக்கு கிடைக்குதே!! “ என்று
கண் சிமிட்டி குறும்பாக சிரித்தார் பார்வதி...
அவர் சொன்னதின்
அர்த்தம் புரிய சில விநாடிகள் ஆனது பவித்ராவுக்கு.. அதை உணர்ந்ததும் அவள் கன்னம்
சிவந்தது..
அவர் சொன்ன மாதிரி
அவனை பின்னால் இருந்து கட்டி கொள்வதை போல
நினைத்து பார்த்தாள்..
“ஹ்ம்ம் இது ஓகே
தான்.. ஆனால் நான் எப்படி முத்தம் கொடுப்பதாம்?? .அவன் உயரத்துக்கு ஒரு ஸ்டூல் போட்டு நின்னாதான் எட்டும்...
அப்ப அவனிடம் கொஞ்சும் போதெல்லாம் கூடவே ஒரு ஸ்டூலையும் தூக்கிகிட்டே சுத்த வேண்டியதுதான்....”
என்ற தன் நிலையை கற்பனை பண்ணி பார்த்தவளுக்கு சிரிப்பு வந்தது..
வாய் விட்டு
சிரித்தாள் அவளையும் மறந்து....அவளின் சிரிப்பை மீண்டும் ரசித்த பார்வதி
“என்னடி இப்படி சிரிக்கிற??.. நான் அப்படி என்ன ஜோக்கா
சொன்னேன்?? .. ஓ.. நான் சொன்னதை வச்சு கற்பனை பண்ணிட்டியோ?? .. “ என்று சிரித்தார் பார்வதியும் அவளுடன் இணைந்து
“சீ... மா.. நீ கூட
இப்படி எல்லாம் பேசுவியா?? ... எப்ப பார் மாமியார் மாதிரி என்ன விரட்டிகிட்டே இருப்ப.. இப்ப என்ன
இப்படி பேசற??”
என்று சினுங்கினாள்..
“ஹீ ஹீ ஹீ.. அது
எல்லா அம்மாவும் தன் பொண்ணை ஒரு நல்ல
இடத்துல பிடிச்சு கொடுக்கிறவரைக்கும் அப்படித்தான் ஸ்ட்ரிக்டா இருப்பாங்க பவி...
தன் பொண்ணு போற இடத்துல நல்லா நடந்துக்கணும், அவளை யாரும் ஒரு குறையும் சொல்லிடக் கூடாதுனு தான் கொஞ்சம்
கண்டிப்பா இருக்கறது...
ஹ்ம்ம் நான் தான்
உன்னை நல்ல ஒரு இடத்துல ஒப்படைச்சிட்டேனே... இனிமேல் எனக்கு என்ன கவலை?? ..இனிமேல் உன்னை மாப்பிள்ளை
நல்லா பார்த்துக்குவார்... நான் லைப் ஐ
இனிமேல் ஜாலியா என்ஜாய் பண்ண போறேன் பவி..”
என்று சிரித்தார்...
“ஹ்ம்ம்ம்
என்னமோ மா.. நீ ஒரு பார்ம் லதான் இருக்க... உன்னை இப்படி பார்க்க எனக்கு ரொம்ப சந்தோஷமா
இருக்கு.. என்னை பற்றி கவலைப்படாத.. நீ சொன்ன மாதிரி உன்னுடைய மீதி இருக்கிற வாழ்க்கையை
என்ஜாய் பண்ணு.. “என்று கண்ணடித்தாள்..
பின் இருவரும்
கதை பேசிக்கொண்டே மதிய உணவை தயாரித்தார் பார்வதி.. பவித்ரா தன் அன்னைக்கு உதவிக் கொண்டிருந்தாள்...
சிறிது நேரம் கழித்ததும் ஏதோ நினைவு வந்தவர்
“அச்சச்சோ... மாப்பிள்ளைக்கு எதுவும் எடுத்து வைக்கலையே
பவித்ரா...அவருக்கு என்ன பிடிக்கும்னு தெரியாததால் எதுவும் வாங்கி வைக்கல... நீ என்ன பண்ற, கடைக்கு போய் அவருக்கு பிடித்தமான ட்ரெஸ்
ம் ஏதாவது கோல்ட் ல யும் வாங்கி வந்திடறியா” என்றார்..
“அதெல்லாம் எதுக்குமா...
அவன் ... அவர் கிட்ட நிறைய இருக்குமா...” என்றாள் பவித்ரா
“அதெல்லாம் இருக்கட்டும்
பவித்ரா. நம்ம முறை னு இருக்கு இல்ல.. எத்தனை இருந்தாலும் மாமியார் வீடல இருந்து கொடுக்கிற
மாதிரி இருக்காது..கல்யாணத்தப்பயே எதுவும் செய்யலை.. மாப்பிள்ள்ளை எதுவும்வேண்டாம்
என்று மறுத்திட்டார்...
அப்ப என்னால கட்டாய
படுத்த முடியலை... இப்பதான் நீ இருக்கியே.. மாப்பிள்ளைய எப்படியும் வாங்கிக்க வச்சுடுவ...
மாப்பிள்ளை வர்றதுக்குள்ள சீக்கிரம் நீ
போய் வாங்கி வா.. உன் ஸ்கூட்டியை துடச்சு வச்சுருக்கேன்... அதையே எடுத்துட்டு போய்ட்டு
சீக்கிரம் வா ” என்று விரட்டினார்....
“ஹ்ம்ம் சரி மா.. நீ தான் பிடிச்சா விட மாட்டியே.. “
என்றவள் தன் ஸ்கூட்டி சாவியை எடுத்துகொண்டு ஒரு விரலால் சுற்றிகொண்டே அதை அடைந்து வெளியில்
எடுத்து வந்து ஸ்டார்ட் பண்ணினாள்...
தன் எஜமானி
தன்னை விட்டு பிரிந்ததால் கோபமாகியிருந்த அவளின் வாகனம் ஸ்டார்ட் ஆகாமல் மக்கர் பண்ணியது...
அதனுடன் கொஞ்சி கெஞ்ச, போனால் போகுது என்று அது ஸ்டார்ட்
ஆகவும் அதில் அமர்ந்து பறந்தாள் பவித்ரா....
Unnai vida matten en uyire 26 eppe upload pannuvinge quicka podunga pls intresting aa irukku everyday upload pannu plsssssss
ReplyDeleteMam....epi sikkirama podunga...mudincha daily up load pannunga plzzzz
ReplyDelete