உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-26
அத்தியாயம்-26
பவித்ராவுக்கு எப்பவும் ஸ்கூட்டியில் போவது ரொம்ப பிடிக்கும்.. அதுவும் சில்லென்று காற்று முகத்தில் மோதி, தன் முன்னால் இருக்கும் முடியை ஆசையாக கோதுவதை போல ஒரு சுகம் பரவும்... அதன் சுவாசத்தை உள்ளிழுத்து ரசித்துகொண்டே செல்வது மிகவும் பிடிக்கும்...
இரண்டு வாரத்துக்கு பிறகு அந்த சுகத்தை அனுபவிக்கும் பொழுது இன்னும் மனம் லேசானது...அப்படியே காற்றில் பறப்பதை போல இருந்தது
‘சே!! இந்த மாதிரி ப்ரீயா ஜாலியா போகாம எப்பபாரு அந்த காருக்குள்ளயே, அதுவும் அந்த ஏசி ய போட்டு சுத்தமா இயற்கை காற்றே இல்லாமல் எப்படி தான் போறாங்களோ?? ..
“East or West.. my scooty is the best. அவன் சொகுசு காரெல்லாம் waste ..” என்று உல்லாசமாக பாடினாள்
“ஆகா... பவித்ரா.. உனக்கு ரைமிங் எல்லாம் கூட வருது... கலக்கற நீ... எல்லாம் அம்மா வீட்டுக்கு வந்த குஷி ல வருதா?? ஹ்ம்ம் அனுபவி... இன்னைக்கு ஒரு நாள் மட்டும் தான.. நாளைக்கு மறுபடியும் அந்த ஜெயிலுக்கு போய் அந்த நெட்டைய பார்த்துகிட்டே இருக்க வேண்டியதுதான்.. “ என்று சிரித்தவளின் மனம் மிகவும் நிறைந்து இருந்தது..
அதுவும் ஆதி தன் அம்மாவிடம் சிரித்து பேசியதும் அவரை அத்தைனு உரிமையோட அழைத்தது, தன் அன்னையின் முகத்தில் என்றும் இல்லாத மகிழ்ச்சி , நிம்மதியையும் கண்டவளுக்கு மனம் நிறைந்து நின்றது...
இந்த மாதிரி ஒரு நிலையை அவள் எதிர்பார்க்க வில்லை... கடைசி வரைக்கும் எங்க அவன் வரமாட்டானோ என்று பயந்து கொண்டே தான் இருந்தாள்.. ஏனா அவன் சொன்னா எப்படியும் அதை சாதிச்சிடுவானு தெரிந்து வைத்திருந்தாள்... அதுவும் தன்னை வேலைக்கு அனுப்ப கூடாது என்பதை நிலை நாட்டியதிலயே இன்னும் புரிந்து கொண்டாள்..
எவ்வளவு நம்பிக்கையா இருந்தான் அந்த ஆனந்த் அலுவலகத்திற்கு வேலைக்கு போவதில்.. ஆனால் எப்படி என் திட்டத்தையே முறி அடித்தான்?? . “ என்று அவளின் மனம் அந்த நிகழ்வுகளை திரும்ப அசை போட்டது...
பவித்ரா நான் எப்படியும் வேலைக்கு போயே ஆவேன் என்று ஆதியிடம் சவால் விட்ட அடுத்த நாள் அந்த ஆனந்த் ன் நம்பரை தேடி கண்டு பிடித்து அவனுக்கு போன் பண்ணினாள்...
அழைத்தது பவித்ரா என தெரியவும் மிகவும் உற்சாகம் ஆனான் அந்த ஆனந்த்.. ஒரு காலத்தில் அவள் பின்னாலயே சுத்தியவன் அவள் கையால் அடி வாங்கியும் அப்பப்ப அவளை நினைத்து கொண்டிருப்பவன்.. ஆனால் அவளுக்கு திருமணம் ஆனதும் அதற்கு வந்து வாழ்த்தி விட்டு சென்றவன் தன் கவனம் முழுவதையும் இந்த ஸ்டார்ட்அப் கம்பெனியில் செலுத்தி இரவு பகலாக உழைத்து வருபவன்....
ஒரு காலத்தில் அவன் தேவதையாக நினைத்தவள் அப்பொழுதெல்லாம் தன்னை கண்டுகொள்ளாதவள் இப்ப அழைக்கவும் மிகவும் மகிழ்ச்சியோடு பேசினான்.. திடீரென்று அவள் அழைக்கவும்
“ஒருவேளை அவளுக்கு புகுந்த வீட்டில் எதுவும் கஷ்டமோ?? அப்படி எதுவும் இருக்ககூடாது..அவள் நல்லா இருக்கணும் “ என்று உள்ளுக்குள் வேண்டி கொண்டே அவளிடம் பேசினான்...
பவித்ரா தனக்கு ஒரு வேலை வேண்டும் என்று கேட்கவும் அவன் முழித்தான்.. அவனுக்கு தெரியும் அவள் இப்ப ஒரு பெரிய பிசினஸ் மேனோட மனைவி என்று. அப்படி இருக்க அவர்களில் 0.0001 % கூட இல்லாத தன் கம்பெனியில் அவள் வேலை கேட்பது ஏன் என்று புரியவில்லை... அதை அவளிடமே கேட்டான்..
“இல்ல ஆனந்த்.. அவருமே அதைத்தான் சொன்னார்.. எனக்கு என்னவோ நான் ப்ரீயா வேலை செய்யனும்.. அங்க எல்லாம் போனா என்னை ஒரு மாதிரி ட்ரீட் பண்ணுவாங்க. எனக்கு நான் நானா இருக்கணும்.. ஆதித்யாவோட மனைவி ங்கிற அடைமொழியோ அங்கீகாரமோ இல்லாமல் இருக்கணும்.. உன்னால முடியுமா?? முடியாதா?? . “என்றாள் ஒரு வேலை கேட்டதுக்கு இத்தன கேள்வி கேட்கறானே என்று குரலில் எரிச்சலுடன்..
“ஹே.. உனக்கு இல்லாததா?? நீ எப்ப வேணா வந்து ஜாயின் பண்ணிக்கோ.. நீயும் நிறைய கத்துக்கலாம்.. “என்றான் அவசரமாக..
“ஹ்ம்ம் தேங்க்ஷ் ஆனந்த்.. அப்ப நான் நாளைக்கே வந்திடறேன்.. உன் ஆபிஸ் அட்ரசை அனுப்பி வை... “என்றவள் போனை அனைத்து ஆதியின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்தாள்...
அதே மாதிரி அவன் வந்ததும் தனக்கு வேலை கிடைத்து விட்டதாகவும் நாளைக்கே ஜாயின் பண்றதாகவும் சொல்லி குதூகலித்தாள்.. அதை கேட்டு ஆதி நக்கலாக சிரித்தான்...வேற எதுவும் பேசாமல்...
மறுநாள் காலை வழக்கத்திற்கு மாறாக சீக்கிரம் எழுந்து ரெடியாகி ஆதி ஜாகிங் சென்று திரும்பும் முன்னே கீழ வந்து அவனுக்காக காத்திருந்தாள்... அவன் வந்ததும் வேண்டும் என்றே
“நான் வேலைக்கு போறேன்... வேலைக்கு போறேன்.. எல்லாரும் பார்த்துக்குங்க... “ என்று தன் ஹாண்ட் பேக்கை சுழற்றியவாறு தன் கட்டை விரலை அசைத்து ஆதியிடம் பழிப்பு காட்டினாள்..
அவனோ அப்பவும் எதுவும் பேசாமல் அமைதியாக நக்கல் சிரிப்பை சிரித்துக் கொண்டான்... பின் அவளிடம் திரும்பி
“எப்பவும் போல சக்தி உன்னை ட்ராப் பண்ணிட்டு கூட்டிட்டு வருவான்.. பத்திரமா போய்ட்டு வா.. “ என்று சிரித்தான் மர்மமாக.....
“ஹ்ம்ம்ம் என்னாச்சு இவனுக்கு?? நீ போகக்கூடாது அப்படி இப்படி னு ஏதாவது தடா போடுவானு பார்த்தா இப்படி மொட்டையா போ னு சொல்லிட்டானே.. சே !! ஒரு த்ரில்லே இல்லப்பா.. ஒரு வேளை ஏதாவது வில்லத்தனம் பண்ணி இருக்கானோ??
சே.. சே.. அதெல்லாம் இருக்காது.. ஆனந்த் அப்படி பட்டவன் இல்லை.. சரி போய்தான் பார்ப்போம்... “ என்று யோசித்து கொண்டே அவனை மீண்டும் ஒரு முறை திரும்பி பார்த்து கொண்டே சென்றாள்...அவனும் அவளை பார்த்து கை அசைத்து சிரித்தவாறே தன் அறைக்கு சென்றான்
அந்த சக்தி ஆனந்த் ன் ஆபிஸில் இறக்கி விட, ஒரு வித குதூகாலத்துடன் அவன் ஆபிஷை கண்டுபிடித்து அதன் உள்ளே சென்றாள்...
யாரிடமோ சீரியஸாக பேசி கொண்டிருந்தவன் அவளை கண்டதும் புன்னகைத்து அவளை சைகையால் அமர செய்து பின் பேசி முடித்து விட்டு வந்தவன் முகத்தில் மகிழ்ச்சி +உற்சாகம் தெரிந்தது....
வழக்கமான நல விசாரிப்புகளுக்கு பிறகு
“ஹே... சாரி பவித்ரா...ஒரு அர்ஜென்ட் கால்.. அதான்.. அப்புறம் ஒரு குட் நியூஸ்.. என்னோட ஸ்டார்ட்அப் கம்பெனியை ஒரு பெரிய நிறுவனம் வாங்கிட்டாங்க... நேற்று இரவுதான் டீலிங் முடிஞ்சுது...நல்ல ப்ராபிட்.. என்னாலயே நம்ப முடியல என் கம்பெனிக்கு இவ்வளவு விலை கொடுத்து வாங்குவாங்கனு... அதோடு நானும் அதிலயே ஒரு 5 வருட கான்ட்ராக்ட்ல வேலை செய்யனுமாம்...
ஒரு சின்ன வருத்தம்.. யாரையும் புதுசா வேலைக்கு சேர்க்க கூடாதுனு சொல்லிட்டாங்க.. அதனால் உனக்கு என்னால உதவ முடியல பவித்ரா... சாரி.. “ என்றான்..
அதை கேட்டதும் அதுவரை இருந்த உற்சாகம் வடிந்து போனது அவளுக்கு.. ஏனோ ஆதியின் நக்கலான சிரிப்பு கண் முன்னே வந்தது.. ஒரு வேளை இது அவனோட வேலையோ?? என்று யோசித்தாள்..
“இட்ஸ் ஓகே ஆனந்த்.. கன்கிராட்ஸ்.... ஆமா.. எந்த கம்பெனி வாங்கியிருக்கு?? “ என்றாள் ஆர்வத்துடன்..
அவன் வேற ஒரு கம்பெனி பேரை சொல்ல,
“இது AN Companies இல்லையே.. அப்படீனா உணமையிலயே வேற யாராவது தான் வாங்கி இருக்காங்களோ??” என்று யோசித்தாள்...
அந்த ஆனந்த் தொடர்ந்தான்.. எனக்கே ஆச்சர்யம் பவித்ரா. நீ நேற்று போன் பண்ணினதுக்கப்புறம் ஒரு மணி நேரத்துலயே அந்த கம்பெனியில் இருந்து கூப்பிட்டு டீல் பேச வர சொன்னாங்க.... நான் சொன்ன தொகையை விடவே அதிகமா கொடுக்கறேன்னாங்க...
எல்லாம் நேற்றே முடியனும்னு சொல்லி என்னை யோசிக்க கூட விடலை.. நேற்றே எல்லா பார்மாலிட்டிஸ் ம் முடிஞ்சிடுச்சு.. எல்லாம் நீ வரப்போற நேரம் தான் நினைக்கிறேன்.. எனிவே இந்த காண்ட்ராக்டை நல்ல படியா முடிச்சு கொடுத்துட்டு ஐந்து வருடம் கழித்து மறுபடியும் வேற ஒரு ஸ்டார்ட்அப் கம்பெனிய ஆரம்பிக்கும் பொழுது உன்னை கூப்பிடறேன்... இப்ப கொஞ்சம் வேலை இருக்கு... நீ கொஞ்ச நேரம் இருந்திட்டு போ.. “ என்று விடைபெற்றான்..
அதை கேட்டதும் அவளுக்கு கன்பார்ம் ஆ இது ஆதியோட வேலை தானு புரிஞ்சது. “அன்னைக்கே சொன்னானே.. அவனை எதிர்த்துகிட்டு எதுவும் செய்ய முடியாதுனு... அவனை என்ன பண்ணலாம்??.. “ என்று பற்றி கொண்டு வந்தது அவளுக்கு..
ஆனாலும் தன் நண்பனுக்கு ஒரு நல்லது நடந்திருக்கே... ஏதோ கெட்டதிலும் ஒரு நல்லது என்று தன்னை தேற்றிக்கொண்டாள்..
பின் வீட்டிற்கு திரும்பும் வழியில் பார்வதி போன் பண்ணி மீண்டும் வருகிற ஞாயிற்றுகிழமை மறுவீடு வருவது பற்றி ஞாபகம் படுத்தினார்...
அப்பொழுது தான் நினைவு வந்தது அவள் மறவீடு போகணும்னு சொன்னதுக்கு அவன் வரமாட்டேனு சொன்னதும் அவள் கட்டாய படுத்தி சம்மதிக்க வச்சதும்..
“ஐயோ!! அவன் இதுக்கும் ஏதாவது ப்ளான் பண்ணி வச்சிருப்பான் என்னை போக விடாமல் தடுக்க... அதனால இந்த வேலை கிடைக்காததை இப்போதைக்கு பெருசாக்க வேண்டாம்.. எப்படியாவது அவனை என் வீட்டிற்கு கூட்டி வரும் வரை அமைதியா இருக்கணும் ” என்று முடிவு செய்து அவன் பண்ணின டார்ச்சரை எல்லாம் கடந்த மூன்று நாட்களாக பல்லை கடித்து சகித்துக்கொண்டாள்...
“எப்படியோ இதோ அவனை கூட்டி கிட்டு வந்து என் அம்மா முன்னால் நிறுத்தியாச்சு.. இனிமேல் அம்மாவுக்கு எந்த சந்தேகமும் வராது... அதோடு நான் பாட்டுக்கு இனிமேல் இங்க கிளம்பி வந்திடலாம்... “என்று சிரித்துக்கொண்டே தன் ஸ்கூட்டியை முறுக்கினாள்..
கொஞ்ச தூரம் சென்றதும் ஒரு பெரிய ஜவுளிக்கடை தெரிய,
“இந்த பக்கம் இப்படி ஒரு கடை இருக்கா?? .. இவ்வளவு நாள் தெரியலையே.. ஆமா... நாம எப்ப இந்த மாதிரி கடைக்கு போயிருக்கோம்.. நமக்கெல்லாம் போத்திஸ் இல்லன சரவணா தான் செட்டாகும்...
அந்த லாட் லபக் தாஸ்க்குத்தான் இந்த மாதிரி கடையை பார்க்கணும்.. “ என்று புலம்பி கொண்டே தன் ஸ்கூட்டியை அந்த கடையின் பார்க்கிங் ல் பார்க் பண்ணி விட்டு கடைக்குள் சென்றாள்..
அங்கு இருந்த ஜென்ட்ஸ் செக்ஸனுக்கு சென்றவள் முன்ன பின்ன ஜென்ஸ் யாருக்கும் ட்ரெஸ் எடுத்ததில்லை என்பதால் எப்படி எடுப்பது என்று முழித்து கொண்டு நின்றாள் சிறிது நேரம்..
“சே!! .. இந்த மாதிரி இடத்துக்கெல்லாம் வர வச்சுட்டாங்களே இந்த அம்மா.. “என்று புலம்பிகொண்டே
அவனுக்கு எப்படி ட்ரெஸ் எடுக்கிறது என்று மீண்டும் யோசித்து அன்று அவன் பார்ட்டிக்கு போட்டு வந்த ட்ரெஸ் மாதிரி எடுத்தாள்.. கூடவே ஜீன்ஸ் டீ சர்ட்ம் எடுத்துக் கொண்டாள்.. பின் தங்கத்தில் என்ன வாங்குவது என்று யோசித்தவளுக்கு அவன் கையில் மோதிரம் எதுவும் இல்லை என்பதை உணர்ந்து அழகான ஒரு மோதிரத்தை தேர்வு செய்தாள்..
இதய வடிவத்தின் உள்ளே AN என்று எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு அழகாக இருந்தது அந்த டிசைன்... பார்த்த உடன் பிடித்து விடவும் அதையே எடுத்துக்கொண்டாள்..
பின் தான் வாங்கிய அனைத்தையும் பில் கவுண்டரில் கொடுத்து விட்டு பில் போட நின்றாள்.. அப்பொழுது
“வாவ்... ப்யூட்டிபுல் ஏஞ்சலின் பாதம் என் கடையில் பட புண்ணியம் பண்ணி இருக்கனும் என்ற குரலை கேட்டு திரும்பி பார்த்தாள் பவித்ரா..
அன்று பார்ட்டியில் பார்த்த ரிஷி தான் சிரித்துக்கொண்டிருந்தான்..
“ஐயோ!! இவன் எங்க இங்க வந்தான்?? “என்று புலம்பி கொண்டே தன் உணர்ச்சியை முகத்தில் காட்டாமல்
அவனை பார்த்து மெதுவாக புன்னகைத்து சுற்றிலும் தேடி பார்த்தாள்
“சாரி மிஸ்டர் ரிஷி.. நீங்க சொன்ன மாதிரி ப்யூட்டிபுல் ஏஞ்சல் யாரும் என் கண்ணுக்கு தெரியலையே... .அது என்னவோ எப்பவும் அழகான தேவதைகள் உங்க கண்ணுக்கு மட்டுமே தெரியறாங்க “ என்று அன்றை போலவே அவனை மட்டம் தட்டினாள்...
“ ஹா ஹா ஹா ரொம்பவும் உனக்கு தன்னடக்கம் தான் ஏஞ்சல் என்றான்.. ஆனாலும் அன்று பார்த்ததை விட இந்த சல்வாரில் இன்னும் சூப்பரா இருக்க..” என்றவனின் பார்வை அவளின் கழுத்துக்கு கீழ தாவியது... அவனின் துகில் உரிக்கும் பார்வையை கண்டு கோபம் அடைந்தவள் தன்னை கட்டு படுத்தி கொண்டு தன் துப்பட்டாவை இன்னும் கீழ இழுத்து விட்டுக்கொண்டாள்..
“சாரி மிஸ்டர் ரிஷி.. என் பெயர் மிஸர்ஸ் ஆதித்யா.. நீங்க அப்படியே கூப்பிடலாம்.. “ என்றவள் பில் கவுண்டரில் திரும்பி பில் போடும் படி சொன்னாள்..
அதற்குள் ரிஷி
“இட்ஸ் ஒகே... இது என் கடைதான்.. இந்த ஏஞ்சல் க்கு என்னோட பரிசா இருக்கட்டும்.. நீங்க பணம் கட்ட வேண்டாம்.. “ என்று இளித்தான்..
அப்பொழுது தான் அந்த கடையின் பெயரை கவனித்தாள்..
“ அடக்கடவுளே.. இவன் கடைனு தெரியாமல் வந்து இப்படி மாட்டிகிட்டனே...ஹ்ம்ம்ம் சமாளிப்போம் “என்று நினைத்தவள்_
“சாரி மிஸ்டர் ரிஷி.. நான் எதையும் இலவசமா வாங்கிக்கறது இல்லை.. “ என்று பில் கவுண்டரில் திரும்பி
“சார்.. பில் போட முடியுமா?? முடியாதா? “ என்றாள் சற்று கோபமாக..
ரிஷி தலை அசைக்கவும் அவன் அவசரமாக பில் போட்டான்.. தன்னுடைய கிரெடிட் கார்டில் பணத்தை செலுத்தி விட்டு திரும்பியவளை
“என்ன மிஸ்ஸஸ் ஆதித்யா... உங்க கடையில இல்லாத ஐட்டமா இங்க இருக்கு... அதை விட்டுட்டு என் கடைக்கு வந்திருக்கீங்க.. ஒ.. இந்த மாதிரி டிசைன்ஸ் உங்க கடையில இல்லையா... ஆதித்யா கிட்ட சொல்லி லேட்டஸ்ட் மாடலா வாங்கி வைக்க சொல்லுங்க “என்றான் நக்கலாக..
முதலில் அவன் சொன்னது புரியவில்லை என்றாலும் பின் ஆதித்யாவிற்கும் இந்த மாதிரி கடை இருக்கும் போல..அதை தான் நக்கலடிக்கிறான் என்று புரிந்து கொண்டவள்
“ஹா ஹா ஹா. எங்க கடையில இல்லாத டிசைன்ஸ் எங்கயும் இருக்காது மிஸ்டர் ரிஷி... இது நான் அவருக்கு சர்ப்ரைஸா கொடுக்க வாங்கியது... எங்க கடையிலயே வாங்கினா அவருக்கு தெரிஞ்சிடும்... அதான் இப்படி அவருக்கு தெரியாமல் இந்த கடைக்கு வந்தேன்..” என்று சமாளித்தாள்.. பின்
“பை தி வே .. எனக்கு லேட் ஆகுது.. அவர் காத்துகிட்டிருப்பார்.. பை மிஸ்டர் ரிஷி.” என்று வேகமாக வெளியேறினாள்...
பின் பார்க்கிங் க்கு சென்று தன் ஸ்கூட்டியை எடுத்தவள்
“அந்த ரிஷி இதையும் பார்த்து தொலைக்க போறான்.. அப்புறம் ஏன் ஸ்கூட்டியில வந்தனு வேறு அறுப்பான்..அதை விட இது ஆதித்யாவுக்கு தெரிந்தது அவ்வளவு தான்.. அன்னைக்கு ஆட்டோல போறேனு சொன்னதுக்கே அப்படி கத்தினான்..
ஏன் இன்று கூட சின்ன கார்ல வர்றதுக்கு ஸ்டேட்டஸ் இஸ்யூ னான்... நான் மட்டும் இப்படி ஸ்கூட்டியில வந்தது தெரிந்தது அவ்வளவுதான் என்னை காய்ச்சி எடுத்துடுவான்... அதுக்குள்ள எஸ் ஆகிட வேண்டியதுதான்.. “ என்று பறந்தாள்...
ஆதித்யா சொன்ன மாதிரி லன்ச் க்கு திரும்ப வருவானா?? இல்ல வேற ப்ளான் வச்சிருக்கானா?? அப்படி வந்தால் நம்ம பவிகுட்டி அதற்குள் வீட்டிற்கு போயிடுவாளா?? இல்லை வழியிலயே நம்ம பாஸ் கிட்ட மாட்ட போறாளா?? பார்க்கலாம்...

Superb mam. Waiting for next one mam
ReplyDeleteThank you!
DeleteNice...but epi sikkirama kudunga pls
ReplyDeleteThank you! Will try
DeletePlease akka konjam sikkirama podunga..... Romba gap vanthaaa.... Study hy maranthupoiduthu
ReplyDeleteThanks pa.. Sure.. will try to post asap
Delete