உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-27





அத்தியாயம்-27

ந்த ஜொள்ளு ரிஷியிடம் இருந்து தப்பித்து பார்க்கிங்கை அடைந்தவள் தன் ஸ்கூட்டி டிக்கியை திறந்து அதில் உள்ளே வைத்திருந்த அவளுடைய அந்த ஸ்கார்ப்பை எடுத்து அணிந்து முகத்தை நன்றாக மூடி கட்டிக்கொண்டு, தலையில் ஹெல்மட்டை அணிந்து கொண்டு கண்ணாடியில் பார்த்து தன் முகம் தெரியவில்லை என்று உறுதி செய்துகொண்டு, பின் தன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் பண்ணி, அதை வேகமாக முறுக்கினாள் ஆதி வருவதற்கு முன்பே வீட்டிற்கு போய் விடவேண்டும் என்று..

வழியில் அவன் கார் எங்காவது இருக்கிறதா என்று சுற்றிலும் பார்த்துகொண்டே வந்தாள்.. நல்ல வேளையாக ஆதித்யா வரும் முன்னே வீட்டை அடைந்தாள்...

எல்லா கடவுளுக்கும் நன்றி சொல்லி, வேகமாக தன் வண்டியை உள்ளே எடுத்து வந்து வைத்து அதற்கு முன்பு போட்டிருந்த மாதிரி கவரை போட்டு மூடி விட்டு நிம்மதி மூச்சு விட்டாள்..

பின் தான் வாங்கி வந்திருந்த கவரை எடுத்து கொண்டு தன் அன்னையிடம் சென்று காட்டிக் கொண்டிருக்கும் பொழுதே ஆதித்யா வந்துவிட்டான்..அவனை கண்டவள்

“தேங்க் காட்.. ஜஸ்ட் மிஸ்... நல்ல வேளை.. இவன் வர்றதுக்குள்ளே வந்துட்டேன்..செம ஸ்பீட்...

பவித்ரா.. சைக்கிள் ரேஸ் மாதிரி ஸ்கூட்டி ரேஸ் வச்சா கப் உனக்குதான்.. “ என்று மனதுக்குள் தனக்கு ஹை பை கொடுத்துக் கொண்டாள்..

ந்த முறை முன்னெச்சரிக்கையாக தன் தலையை குனிந்தபடியே உள்ளே வந்தவனை கண்டு சிரித்துக் கொண்டாள்... அவளின் சிரிப்பை கண்டவன் அவளை முறைத்தவாறே உள்ளே வர, பார்வதி அவனை வரவேற்று அவன் அருகில் வந்து தன் மாப்பிள்ளைக்கு வாங்கியிருந்த பரிசை கொடுத்தார்...

அதை கண்டவன் பதறி,

“இதெல்லாம் எதுக்கு அத்தை?? .. என்கிட்ட நிறைய ட்ரெஸ் இருக்கு.. “ என்று மறுத்தான்...

“சும்மா வாங்கிக்கங்க பாஸ்.. நீங்க எவ்வளவு தான் உங்க சொந்த காசு போட்டு வாங்கினாலும் இந்த மாதிரி மாமியார் வீட்ல ஓசியில கிடைக்கிறதை வாங்கி போட்டு பாருங்க.. அதுல ஒரு தனி சுகம் இருக்கும்.. “ என்று அவன் காதில் கிசுகிசுத்து சிரித்தாள்..

அவனும் அதற்குமேல் மறுக்காமல் அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிகொண்டு அவர் கொடுத்த பரிசை வாங்கி கொண்டான்.. பின் அந்த மோதிரத்தை எடுத்து பவித்ராவிடம் கொடுத்து மாப்பிள்ளைக்கு போட சொன்னார் பார்வதி..

அதை கேட்டு அதிர்ந்த பவித்ரா

“அவரே போட்டுக்குவார் மா.. நீங்க அவன் .. அவர் கையில கொடுங்க.. “ என்று சமாளிக்க,

“இருக்கட்டும் பவி.. நீயே போட்டு விடு.. “ என்று அவர் முடிக்க, மறுக்க வேறு வழி இல்லாமல் அந்த மோதிரத்தை வாங்கினாள் பவித்ரா...

பார்வதியும் இங்கிதம் தெரிந்தவராக சமையல் அறைக்குள் சென்று விட

அவனோ தன் கையை நீட்டாமல் அவளையே குறும்பாக பார்த்து சிரித்துகொண்டு இருக்க, சிறிது நேரம் பொறுத்தவள் அவன் கையை பிடித்து இழுத்து அவன் விரலில் மோதிரத்தை அணிவித்தாள்...

தன் விரல் பிடித்து மோதிரம் போடும் அவளையே மையலோடு நோக்கினான் ஆதி .. அவளின் அந்த மென்மையான விரல் பட்டு சிலிர்த்தது அவன் உள்ளே... அந்த மோதிரம் அவனுக்கு ரொம்ப பிடித்தது..

“என்ன பேபி.. உன் இதயத்துல நான் இருக்கிறதை இப்படி சிம்பாலிக் ஆ காட்டிட்ட... வெரி நைஸ்... உன் இதயத்தில் நான் இருக்க அந்த இதயத்தையே எனக்கு பரிசா கொடுத்திட்டியே... சூப்பர் செலக்ஷன்... நான் உனக்கு கொடுத்த கிப்ட்ஷை விட உன்னுடையது precious gift.. I never leave this gift in my life… “ என்று அந்த மோதிரத்துக்கு முத்தமிட்டான்

அவன் அறியவில்லை... நாளைக்கே அந்த மோதிரத்தை கழட்டி தூக்கி வீசப்போகிறான் என்று..

தி சொன்ன விளக்கத்தை கேட்டு கன்னம் சிவந்தாள் பவித்ரா... அதை வாங்கையில் அவளுள் இந்த மாதிரி எண்ணம் எதுவும் இல்லை.. இவள் இதயத்தில் அவன் என்றெல்லாம் நினைத்து பார்க்கவில்லை.. அந்த டிசைன் நன்றாக இருக்கவும் வாங்கி இருந்தாள்.. அவன் இதற்கு இப்படி ஒரு விளக்கம் கொடுக்கவும் வாயடைத்து நின்றாள்..

“இந்த அருமையான gift ஐ கொடுத்த இந்த பட்டு கைக்கு இந்த ஆதியின் return gift .. “என்று அவள் எதிர்பார்க்காத நேரத்தில் அவள் கையை இழுத்து அழுந்த முத்தமிட்டான்...

அதில் கிறங்கி நின்றாள் அவளும்..

அதற்குள் பார்வதி சமையல் அறையில் இருந்து வெளியில் வர, அவசரமாக தன் கையை இழுத்து கொண்டு, கன்னம் சிவக்க சமையல் அறைக்குள் ஓடி விட்டாள் தன் அன்னைக்கு உதவும் சாக்கில்...

அவனும் சிரித்துக் கொண்டே அங்கிருந்த ஷோபாவில் அமர, பார்வதி தான் சமைத்ததை எல்லாம் எடுத்து வந்து ஹாலில் வைத்தார்...

அவர்கள் வீடு சிறிய வீடு என்பதால் டைனிங் ஹால் என்று தனியாக இல்லை.. எப்பவும் சமைப்பதை எடுத்து வந்து ஹாலில் வைத்து விட்டு தரையில் அமர்ந்து கொண்டு இருவரும் கதை பேசி கொண்டே சாப்பிடுவது வழக்கம்..

அந்த நினைப்பில் பார்வதி அனைத்தையும் எடுத்து வந்து வைக்க, பவித்ராவும் அவருக்கு உதவ, எல்லா ஐட்டங்களையும் ஹாலில் கொண்டு வைத்த பிறகுதான் உறைத்தது தன் மாப்பிள்ளை எப்படி கீழ அமர்ந்து சாப்பிடுவார் என்று...

அவர்கள் சாப்பிடும் வழக்கம் போல அவனை எப்படி கீழ உட்கார சொல்வது.. என்று புரியாமல் பார்வதி முழித்துக் கொண்டு நிக்க, ஒரு வழியாக ஒரு வழியை யோசித்து,

“சாரி மாப்பிள்ளை.. இங்க டைனிங் டேபில் இல்லை.. அடுத்த முறை வரும்பொழுது வாங்கி வச்சிடறேன்... இப்ப நீங்க அப்படியே ஷோபாவில் உட்கார்ந்து கிட்டே இந்த டிப்பாய் மேல வச்சு சாப்பிடுங்க... கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க.. “என்றார் வருத்தத்துடனும் கொஞ்சம் பயத்துடனும்...

அதை கண்ட பவித்ரா

“இவன் என்ன பெரிய லாட் லபக் தாஸ்ன எங்க வீட்டுக்கு வந்தால் இங்க இருக்கிற மாதிரி அட்ஜஸ்ட் பண்ணிக்க வேண்டியது தான்.. அதுக்கு போய் இந்த அம்மா ஏன் இப்படி பீல் பண்றாங்க?? .. “ என்று திட்டிக் கொண்டவள் அவனை எப்படியாவது கீழ உட்கார்ந்து சாப்பிட வைக்கணும் என்று முடிவு செய்து

“மா... அதெல்லாம் முடியாது... நான் ஷோபாவில் உடகார்ந்து சாப்பிடறேன் னு சொன்னப்ப எல்லாம் அது தப்பு.. கீழ உட்கார்ந்துதான் சாப்பிடனும் னு ரூல்ஸ் போட்ட... இப்ப என்ன உன் மாப்பிள்ளையை மட்டும் ஷோபாவில் உட்கார்ந்து சாப்பிட சொல்ற.. எனக்கு ஒரு ரூல்ஸ்.. அவன்.... அவருக்கு ஒரு ருல்ஸ் ஆ... இது செல்லாது.. “ என்று போர் கொடி தூக்கினாள் பவித்ரா...

அதை கேட்டு பார்வதி,

“இவ ஒருத்தி.. நேரம் காலம் தெரியாமல் விளையாடறாளே... “ என்று திட்டியவர் கண்ணால் அவளுக்கு ஜாடை செய்தார் அமைதியாக இருக்க சொல்லி...

ஆனால் பவித்ராவோ அவர் கண் ஜாடையை கண்டும் காணாதவள் போல ஆதியை கீழ உட்கார்ந்து சாப்பிட வைப்பதிலயே மும்மரமாக இருந்தாள்...

அவனும் அவளின் திட்டத்தை புரிந்து கொண்டவன்,

“குட்டச்சி... உனக்கு இருக்கு இதுக்கு.. “ என்று திட்டி கொண்டே பார்வதியை பார்த்து,

“இட்ஸ் ஓகே அத்தை.. அவ சொல்ற மாதிரி கீழ உட்கார்ந்தே சாப்பிடலாம்... இதுவும் ஒரு வித புது அனுபவம் தான்.. “ என்று சிரித்து சமாளித்தான்..

பவித்ராவோ கையை மடக்கி பின்னால் இழுத்து Yes என்று குதித்துகொண்டாள் தன் அன்னை அறியாதவாறு.. அதை கண்டு கொண்டவன் அவளை பார்த்து முறைக்க அவள் பழிப்பு காட்டினாள்..

பின் பார்வதி தரையில் உட்கார்ந்து சாப்பிட என்று இருக்கும் பாயை எடுத்து வந்து போட்டார்.. பவித்ரா வேகமாக அதில் தன் காலை மடக்கி அமர்ந்து கொண்டு, நின்று கொண்டிருந்த அவனை நக்கலாக பார்த்தாள்...

அவனும் தன் பேன்டை இழுத்து விட்டுக் கொண்டு அவளைப் போலவே காலை மடக்கி அவள் அருகில் நெருக்கமாக அமர்ந்தான்.. அதை கண்டு அதிர்ந்தாள் பவித்ரா...

அவன் இதுவரைக்கும் தரையில் இது மாதிரி அமர்ந்திருக்க மாட்டான்.. இப்ப கீழ உட்காரும் பொழுது கஷ்டப்பட்டு திறுதிறு னு முழிப்பான் என எதிர்பார்த்தவளுக்கு அவன் ஈஸியாக காலை மடக்கி அமரவும் பல்ப் வாங்கியதை போல இருந்தது...திறுதிறு வென முழிப்பது அவள் முறையாயிற்று...

அவளின் எண்ணதை புரிந்து கொண்டவன்

“ஹா ஹா ஹா ... பேபி... நான் யோகா ல மாஸ்டராக்கும்.... நம்ம பதாஞ்சலி ப்ராடக்ட்ஸ் பாபா ராம் தேவ்ஜி க்கே நான் தான் குரு... அவ்வளவு ஏன் நம்ம மோடி ஜி யே என்கிட்ட அப்பப்ப டிப்ஸ் கேட்பார்.. என்கிட்டயே நீ வாலாட்டறியா??..” என்று சிரித்தான் ..

“ஹீ ஹீ ஹீ...” என்று அசட்டு சிரிப்பை சிரித்து வைத்தாள்...

“அடப்பாவி.. முதல்ல இவன பத்தி Phd பண்ணனும் போல.. என்னென்ன இவனுக்கு தெரியும், எத்தனை கம்பெனிக்கு ஓனர் னு ஒரு லிஸ்ட் வச்சுக்கணும்போல.. இல்லைனா இப்படித்தான் அப்பப்ப பல்ப் வாங்கணும்.. “ என்று மனதுக்குள் புலம்பினாள்...

அதற்குள் பார்வதி இரண்டு வாழை இலைகளை எடுத்து வந்து அவர்கள் முன்னால் போட்டார்... அந்த இலையை பார்த்ததும் முழித்தான் ஆதி...

பவித்ராவும் சிரித்து கொண்டே அருகில் இருந்த டம்ளரில் இருந்த நீரை எடுத்து அவன் இலைக்கு போட்டு, துடைத்து விட்டாள்.. பின் தன் இலைக்கு அதே மாதிரி செய்தாள்..

அதை கண்ட ஆதி,

“ஏன் டி.. உங்க வீட்ல சாப்பிட ஒரு ப்ளேட் இல்லை... எதுக்கு இதுல சாப்பிடனும்... “ என்று முறைத்தான்..

“பாஸ்... நீங்க வாழை இலையில் சாப்பிட்டது இல்லையா?? இதுல சாப்பிட்டா இதோட டேஸ்ட் ஏ தனி பாஸ்... “என்று வாழை இலையை பற்றி குட்டி லெக்சர் அடித்தாள்..

(எல்லாரும் வாழை இலையை பற்றி அறிந்திருப்பீங்க என்பதால் அதை பற்றி விளக்க வில்லை மக்களே.. ஹீ ஹீ ஹீ தெரியாதவங்க கூகுள் பண்ணிக்கோங்க... )

“ஹ்ம்ம்ம் எப்படியோ ஒரு மல்ட்டி மில்லினரை கூட்டி வந்து இந்த குடிசையில இப்படி தரையில உட்கார வச்சுட்ட...இதுக்குத்தான் நான் வரமாட்டேன் னு சொன்னேன்.. கேட்டியா?? “ என்று அவளை முறைத்தான்

அவன் தன் வீட்டை குடிசை என்றதில் கடுப்பானவள் தன் பற்களை கடித்து கொண்டு பொறுத்துக் கொண்டாள்...இந்த அம்மா முன்னாடி இப்ப எதுவும் காட்டக்கூடாது என்று எண்ணியவள்,

“இப்ப பார்.. இன்னைக்கு நாள் முழுவதும் இந்த குடிசையிலயே உன்னை தங்க வைக்கிறேன்.. “ என்று சூளுரைத்தவள் இயல்பாக அவனிடம் திரும்பி

“அட போங்க பாஸ்... எப்ப பார் மல்ட்டி மில்லினர், மல்ட்டி மில்லினர் னு தம்பட்டம் அடிச்சுக்கறீங்க...நீங்க எவ்வளவு பெரிய மல்ட்டி மில்லினரா ஏன் மல்ட்டி ஸ்குயர் மில்லினரா இருந்தாலும், சாப்பிடறது என்னவோ இந்த ஒரு ஜான் வயிற்றுக்குத்தான்...

நீங்க மல்ட்டி மில்லினரா இருந்தா மட்டும் அளவுக்கு மீறி சாப்பிட முடியுமா?? ஏன் உங்ககிட்ட பணம் நிறைய இருக்குனு தங்க பிஸ்கட் ஆ சாப்பிட முடியுமா... நீங்களும் நாங்களும் சாப்பிடறது எல்லாம் ஒரே சாப்பாடுதான்.. அதை டேபில்ல உட்கார்ந்து சாப்பிட்டா என்ன?? இப்படி கீழ உட்கார்ந்து சாப்பிட்டா என்ன?? எப்படி சாப்பிட்டாலும் அது வயிற்றுக்கு தான் போகும்...

ஆக்சுவலா இந்த மாதிரி கீழ உட்கார்ந்து சாப்பிடறது தான் நல்லதாம்.. ஏன் தெரியுமா?? “ என்று அதுக்கு ஒரு லெக்சரை ஆரம்பிக்க, ஆதி

“அம்மா தாயே.. போதும்.. நீ மறுபடியும் உன் லெக்சரை ஆரம்பிக்காதா... நான் இப்படியே உட்கார்ந்துக்கறேன்.. “ என்று அலறினான்...

“ஹ்ம்ம்ம்ம் எத்தனை பேர் இந்த பவித்ரா பேச்சை கேட்க ஆர்வமா இருக்காங்க தெரியுமா?? 

நீங்க என்னடான்னா நான் பேசினா லெக்சர் அடிக்கிற மாதிரி இருக்குன்றீங்க.... ஹ்ம்ம்ம் கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.. “ என்று முகத்தை நொடித்தாள்...

“ஏய்.. அப்ப என்னை என்ன கழுதைங்கறியா?? “என்று முறைத்தான்..

“ஹீ ஹீ ஹீ உங்கள போய் அப்படி சொல்வேனா பாஸ்... என் பேச்சை யார் எல்லாம் லெக்சர் னு சொல்றாங்களோ, அவங்கள மட்டும் தான்... “என்று மடக்கினாள் அவனை பார்த்து சிரித்து கொண்டே..

“அப்புறம் பாஸ்.. ஏன் எப்ப பாரு ஆபிஸ், க்ளைன்ட், ப்ராஜெக்ட், மீட்டிங் னு பிசியாவே இருக்கீங்க.. ஒரு நாளாவது எல்லாத்தையும் விட்டுட்டு ப்ரியா ரிலாக்சா இருங்க..

அதுவும் இந்த மல்ட்டி மில்லினர் ,பிசினஸ் மேன் அப்படீங்கிற Hashtag (#) ஐ விட்டுட்டு ஒரு நாளைக்கு நீங்க நீங்களா இந்த லைப் ஐ என்ஜாய் பண்ணி பாருங்க பாஸ்.. சூப்பரா இருக்கும்.. எப்ப பார் பணம் பணம் னு ஓடிகிட்டே இருக்கீங்க..”

“ஹ்ம்ம்ம் எல்லா பொண்டாட்டியும் புருஷன் நிறைய சம்பாதிக்கலைனு வருத்தபடுவாங்க.. நீ என்னடான்னா ஏண்டா சம்பாதிக்கறனு திட்டற.. உன் கூட இருந்தா கூடிய சீக்கிரம் எல்லாத்தையும் விட்டுட்டு இந்த மாதிரி குடிசைக்கு கூட்டிட்டு வந்திருவ போல இருக்கே.. “என்றான் நக்கலாக..

“அட போங்க பாஸ்.. நம்ம பில்கேட்ஸ் சம்பாதிகாத பணமா இல்ல ஸ்டீவ் ஜாப்ஸ் பார்க்காத பணமா... கடைசில அவங்களால் அந்த பணத்தை வச்சு என்ன பண்ண முடிஞ்சுது... அது மாதிரி நீங்களும் சேர்த்து வச்சு 45 வயசில பணம் வேண்டாம் னு வெறுத்து போறதுக்கு இப்பயே என்ஜாய் பண்ணுங்க... இன்னைக்கு ஒரு நாள் ப்ரியா ஜாலியா இருங்க பாஸ்... “ என்று கண்ணடித்தாள்...

அவள் விளையாட்டுக்காக பேசினாலும் அதில் உண்மை இருப்பதாக தோன்ற,

“ஓகே.. பேபி.. டீல்... Lets enjoy this day.. “ என்று அவனும் கண் சிமிட்ட அவனுக்கு ஹை பை கொடுத்தாள் சிரித்தவாறு..

அதற்குள் பார்வதி உள்ளே இருந்த Bowl ஐ எடுத்து வந்து அதில் ஆட்டுக்கால் சூப்பை ஊற்றி ஆதியிடம் கொடுக்க தயங்கியபடியே அதை குடித்தான்.. வழக்கம் போல அதன் சுவை வித்தியாசமாக இருக்க, முழுவதையும் காலி பண்ணினான்...

பவித்ரா அவனுக்கு அசைவம் தான் பிடிக்கும் என்று முன்னரே சொல்லி இருந்ததால், பார்வதி எல்லா வகையான அசைவ வகைகளையும் செய்திருந்தார்... அதை எல்லாம் எடுத்து அவன் இலையில் வைத்தார்..

சூப்பிலயே அவரின் கை பக்குவம் தெரிந்து விட, மற்ற ஐட்டங்களை எல்லாம் தயங்காமல் விரும்பி சாப்பிட்டான்..

பவித்ராவும் அடப்பாவி இப்படி கொட்டிக்கிறானே என்று திட்டினாலும் அவன் விரும்பி சாப்பிடறது அவளுக்கும் மனம் நிறைந்து இருந்தது...

பார்வதி செய்திருந்த அனைத்து வகைகளும் வித்தியாசமான சுவையில் இருக்க, மீதி வைக்காமல் சாப்பிட்டு முடித்து ஒவ்வொன்றையும் புகழ்ந்து பாரட்டினான்.. அதை கேட்டு மனம் மகிழ்ந்து போனார் பார்வதி...

பெரிய இடத்து மாப்பிள்ளை எப்படி தன் சமையலை ஏத்துக்க போறாரோ?? .. என்று பயந்துகொண்டே இருந்தவருக்கு அவன் இயல்பாக அனைத்தையும் அதுவும் அவன் வசதிக்கு தரையில் அமர்ந்து, அவர் செய்த அனைத்தையும் ரசித்து சாப்பிடவும்

“மாப்பிள்ளை எதையும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிற டைப் போல.. மற்ற மாப்பிள்ளைங்க மாதிரி எந்த பந்தாவும் இல்லாமல் அவ்வளவு வசதி இருந்தும் இந்த சின்ன வீட்டில இவ்வளவு இயல்பாக பழகறாரே!! நல்ல இடத்துல தான் என் மகள் சேர்ந்திருக்கிறாள்.. “ என்ற மன நிறைவு வந்தது..

ஒரு வழியாக அவன் சாப்பிட்டு முடித்ததும் அவள் அருகில் நெருங்கி அமர்ந்து இருந்ததால், எழுந்திருக்க முடியாம திணற, பவித்ரா அவனுக்கு கை கொடுத்து தூக்கி விட்டாள்...

“என்ன யோகா மாஸ்டர்... மோடி ஜி யோட குருவே..உங்க யோகாவுல உட்கார மட்டும்தான் கத்து கிட்டீங்களா?? .. இப்படி வயிறு முட்ட சாப்பிட்டுட்டு எப்படி எழுந்திருக்கறது னு சொல்லித்தரலையா?? .. “ என்று நக்கலாக சிரித்தாள்.....

“ஹா ஹா ஹா... அதெல்லாம் எனக்கு தெரியும் பேபி...ஆனால் நானே எழுந்திருச்சிருந்தா, நீ உன் பட்டு கையால என்னை தொட்டு தூக்கி விடற பாக்கியம் கிடைச்சிருக்காதே..இப்படி ஒரு சான்ஸ் ஐ மிஸ் பண்ணலாமா?? ...” என்று குறும்பாக கண்ணடித்தான்... அதை கண்டு மீண்டும் பல்ப் வாங்கினாள் பவித்ரா..ஆனாலும் விட்டு கொடுக்காமல்

“ஹ்ம்ம்ம் நல்லா சமாளிக்கறீங்க பாஸ்.. “ என்று பழிப்பு காட்டினாள்..

ஆதியும், “அப்பாடா எப்படியோ சமாளிச்சாச்சு.. நம்மல மட்டம் தட்டறதுலயே இருக்காளே இந்த குட்டச்சி.. இனிமேல் இவ கிட்ட கேர்புல்லா இருக்கணும்.. “என்று குறித்துக் கொண்டான்..

பின் அவன் சென்று கை கழுவி விட்டு வர அவனுக்கு கை துடைக்க டவலை எடுத்துக் கொடுத்தாள் பவித்ரா... அவனும் அதில் கை துடைத்தவாறே, பார்வதியை பார்த்து

“வாவ்.. சூப்பர் லன்ச் அத்தை.. ஸ்டார் ஹோட்டலில் கூடஇப்படி சாப்பிட்டது இல்லை... பேபி.. இந்த ரெசிபி எல்லாம் நோட் பண்ணிக்கோ.. நீயும் இது மாதிரி ட்ரைபண்ணு.. “என்றான்...

“ஐயோ.. இவன் வேற பேபி னு சொல்லி அம்மா முன்னாடி மானத்த வாங்கறானே.. “என்று புலம்பியவள் தன் அன்னையை பார்க்க அவரோ அவளை பார்த்து நமட்டு சிரிப்பை சிரித்தார் அவர் கண்டு கொண்டதாக....

பின் உள்ளே சென்று அரிசி பாயாசத்தை ஒரு கப்பில் எடுத்து வர, “இப்ப வேண்டாம் அத்தை..உள்ள இடம் இல்லை... நான் அப்புறம் சாப்பிடறேன்.. “ என்று அவசரமாக மறுத்தான்...

பின் பவித்ரா பீடாவை கொடுக்க, அவன் அதை வாங்காமல் பழைய ஞாபகத்தில் அவளை குறும்பாக பார்க்க, அதை புரிந்து கொண்டவள் கன்னம் சிவக்க, எக்கி அந்த பீடாவை அவன் வாயில் வைத்து விட்டு வேகமாக தள்ளி நின்று கொண்டாள்..

அவனும் சிரித்தவாறே அதை மெல்ல, பார்வதியோ

“பவி.. மாப்பிள்ளையை உன் ரூமுக்கு கூட்டிட்டு போ... கொஞ்ச நேரம் தூங்கட்டும்.. “ என்றார் அவர்களுக்கு தனிமை கொடுக்க விரும்பி..

அவளும் தலையை ஆட்டி, அவள் அறைக்கு செல்ல அவனும் பின் தொடர்ந்தான்.. அவள் அறைக்கு வருவது இதுவே முதல் முறை.. அவள் அறை மிகவும் நேர்த்தியாக இருந்தது... ஆனால் அங்கு இருந்த அவள் பெட், நாற்காலி, மேஜை என அனைத்தையும் கண்டதும் சிரிப்பு வந்தது அவனுக்கு..

“என்ன டி இது?? எல்லா பொருட்களும் இவ்வளவு குட்டையா இருக்கு.. ? ஆமா உங்க அப்பாவுக்கு குட்டைனா ரொம்ப பிடிக்குமோ?? .. வீட்டு கதவில் இருந்து, பெட் ல இருந்து, ஏன் இங்கு இருக்கிற எல்லா பொருளையுமே குட்டையா செஞ்சு வச்சிருக்கார், உன்னையும் சேர்த்து.. “என்று சிரித்தான்...

அவன் சொன்ன ‘உன்னையும் சேர்த்து’ என்பதில் கடுப்பானவள் அவனை பார்த்து முறைத்தாள்..

“ஹ்ம்ம்ம் அவருக்கு தெரியுமா இந்த மாதிரி நெட்டையான மாப்பிள்ளை வரப்போறாருனு.. ” என்று முறைத்தாள்..

பின் அவள் ஆல்பத்தை எல்லாம் எடுத்து பார்த்தான்...அவள் சிறு வயதில் இருந்து, வளர்ந்து பெரியவளாகி ஏன் அவள் அலுவலகம் செல்லும் வரைக்குமே முக்கியமான புகைப்படங்கள் அந்த ஆல்பத்தில் இருந்தன... அவளின் ஒவ்வொரு ஸ்டேஜையும் பார்க்கும் பொழுது அவன் உள்ளே பரவசம்..

ரொம்ப குட்டி பொண்ணாக இருந்தாள் சில புகைப்படங்களில்... சிறு வயதில் படு சுட்டியாக இருந்திருப்பா போல... துறுதுறு வென்று இருந்தாள் ஒவ்வொரு புகைப்படத்திலும்..

அவளின் பயங்கர சேட்டையும், வால் தனமும் அந்த புகைப்படத்தை பார்க்கும்பொழுதே தெரிந்தது.. அதுவும் இரட்டை ஜடையில் ஸ்கூல் யூனிபார்ம்ல அவள் நாக்கை நீட்டி யாருக்கோ பழிப்பு காட்டி கொண்டிருக்கும் படத்தை பார்க்கும் பொழுது அவள் குண்டு கன்னத்தை கிள்ள துடித்தன அவன் கைகள்..

அந்த குட்டி பெண்ணா இன்று எனக்கு சரி பாதியாகியிருக்கிறாள்.. என்று சிரித்துகொண்டான்...

அவள் வளர்ந்து குமரியான அந்த புகைப்படங்களை பார்க்கும்பொழுது இன்னும் பரவசமாக இருந்தது.. எந்த ஒரு ஒப்பனையும் இல்லாமல் , இயற்கை அழகுடன் தாவணி பாவடையில் கன்னம் குழிய சிரித்து கொண்டிருக்கும் அந்த புகைப்படத்தை விட்டு அவன் கண்ணை அகற்ற முடியவில்லை.... அவள் அறியாமல் அவள் கன்னத்தை தடவி பார்த்தான்..

பார்வதி எதற்கோ பவித்ராவை அழைக்க,அவள் எழுந்து வெளியில் செல்லவும் அவள் அறியாமல் சில புகைப்படங்களை தன் அலைபேசியில் பதிந்து கொண்டான்...

அவள் திரும்பி வரவும், அவன் இன்னும் அந்த ஆல்பத்தையே ரசித்து பார்த்து கொண்டு இருப்பதை கண்டவள்

“போதும் பாஸ்.. ரொம்ப சைட் அடிக்காதிங்க... கொஞ்சம் மிச்சம் வைங்க.. “ என்று அந்த ஆல்பத்தை வாங்கி வைத்தாள்..

“ஓகே பாஸ்.. அடுத்த அஜென்டா நீங்க தூங்கறது... இந்த பாரு போட்ட சாப்பாட்டுக்கு உங்களுக்கு நல்லா தூக்கம் வருமே...பேசாம படுத்து தூங்குங்க.. “ என்று அவள் படுக்கையை சரி பண்ணி கொண்டிருக்கும் பொழுது,மேல சுழன்று கொண்டிருந்த fan ஆப் ஆனது....

“ஐயோ!! இந்த EB காரங்களுக்கு இதே வேலையா போயிருச்சு... திடீர் திடீர்னு பவர் கட் பண்ணிடறாங்க... “ என்று புலம்பினாள்...

“ஹ்ம்ம் ஏன் டி.. UPS இல்ல?? ..” என்றான்

“UPS எல்லாம் வைக்கிற அளவுக்கு நாங்க உங்கள மாதிரி மல்ட்டி மில்லினர் இல்லையே பாஸ்.. “ என்று சிரித்தாள்

“ஹ்ம்ம்ம் எல்லாம் என் நேரம்..ஒரு ஏசி இல்ல.. கொஞ்சமா ஓடிகிட்டிருந்த இந்த பேனும் போச்சு... இதுல எப்படி இருக்கிறது “ என்று புலம்பினான்

“புலம்பாதிங்க பாஸ்... சரி.. நீங்க உங்க சட்டைய கழட்டிட்டு அப்படியே படுத்து தூங்குங்க.. சீக்கிரம் பவர் வந்திடும்..கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க “ என்றாள்..

“ஹ்ம்ம்ம் சரி வா.. அப்ப எனக்கு ஹெல்ப் பண்ணு “ என்று குறும்பாக சிரித்தான்..

“ஆங்க்.. நீங்க என்ன ஸ்கூல் பையனா... சட்டைய கழட்டி விட... கழட்டுங்க பாஸ்... “ என்று முறைத்தாள்...

“ஹே.. என் மாமியார் என்ன சொல்லி இருக்காங்க.. எனக்கு எல்லா உதவியும் செய்ய சொல்லி இருக்காங்க... என்ன அவங்கள கூப்பிட்டு நியாயம் கேட்கவா?? “ என்று புருவங்களை உயர்த்தினான் குறும்பாக....

“ஐயோ!!.. இது வேறயா.. அவங்கள எதுக்கு இதுல இழுக்கறீங்க... நானே பண்ணி தொலைக்கிறேன்.. “என்று அவன் அருகில் வந்தவள் அவன் சட்டையின் பட்டனை ஒவ்வொன்றாக கழட்டினாள்...

அவளின் அந்த நெருக்கமான நிலை அவனுள் கிளர்ச்சியை தூண்டியது... அவளை அப்படியே இறுக்க அணைக்க துடித்த கைகளை கஷ்டபட்டு அடக்கிக் கொண்டான்... அவள் எல்லா பட்டனையும் கழட்டி பின் அவன் சட்டையை கழட்டி அங்கு இருந்த கேங்கரில் மாட்டினாள்...

சட்டை இல்லாமல் அவனின் பரந்து விரிந்த மார்பை கண்டவள் உள்ளே அதிர்வலைகள்...

சில விநாடிகள் அவனையே ரசித்து பார்த்தவள் அதற்குள் தன்னை சமாளித்து கொண்டு, பின் அவனை படுக்க சொன்னாள்...

அவனும் சிரித்து கொண்டே அந்த படுக்கையில் படுத்தான்.. அவன் உயரத்துக்கு அந்த குட்டையான பெட் இன்னும் குட்டையாக தெரிந்தது... பெட்டை தாண்டி வெளியில் நீட்டி இருந்தான் அவன் காலை...

ஆனாலும் அவள் உறங்கியது என நினைக்கையில் அந்த மெத்தை சுகமாக இருந்தது அவனுக்கு... சிறிது நேரத்தில் வேர்க்க ஆரம்பிக்க,

“எப்ப டி கரண்ட் வரும்?? இப்படி வேர்க்குது.. எப்படி தான் இங்க இருக்கீங்களோ?? “என்று புலம்பினான் தன்னையும் மீறி...

“ஹ்ம்ம்ம்ம் ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணுங்க பாஸ்... ஒரு நிமிடம் இருங்க.. “ என்று வெளியில் சென்று ஒரு கை விசிறியை எடுத்து வந்தாள்...

“என்னது இது?? “ என்றான்..

“இதுதான் நேச்சுரல் fan பாஸ்... இந்த electric fan எல்லாம் கண்டுபிடிக்கும் முன்னாடியே, நம்ம முன்னோர்கள் கண்டு பிடித்தது.. நீங்க படுங்க... நான் விசிறி விடறேன்.. “ என்றவள் அந்த படுக்கையில் ஓரத்தில் அமர்ந்து அவனுக்கு விசிற ஆரம்பித்தாள்....

“இவனுக்கு எல்லாம் இப்படி விசிற வேண்டி இருக்கே... எல்லாம் இந்த EB யால வந்தது.. இன்னிக்கு போயா கட் பண்ணனும்.. “ என்று மீண்டும் தமிழக அரசின் மின்சார வாரியத்தை அர்ச்சனை பண்ணியவாறே தன் வேலையை தொடர்ந்தாள்....

ஆதிக்கோ பயங்கர சந்தோசமாக இருந்தது.. “இந்த குட்டச்சி இவ்வளவு பக்கத்தில அமர்ந்து எனக்கு இப்படி விசிறாளே.. என்று.. “

அவளின் பக்கம் பார்த்து திரும்பி படுத்தவன்

“ஹே பேபி... காத்து சரியா வரலை.. நல்லா வேகமா விசிறு.. “ என்று கண்ணடித்தான்..

“ஹலோ பாஸ்.. போனா போகுது ரொம்ப கஷ்ட படறீங்களேனு பண்ணா, ரொம்ப அதிகாரம் பண்றீங்க... ரொம்ப படுத்தினீங்க.. போடானு போயிருவேன்..” என்று கைய நீட்டி மிரட்டினாள்..

“ஒகே.. ஓகே.. ரொம்ப டென்ஷன் ஆகாதா... ஆனாலும் இந்த காத்தும் சூப்பரா தான் இருக்கு...

அதுவும் நல்லா சாப்பிட்டுட்டு , இப்படி படுத்துட்டு, நீ இப்படி என் பக்கத்துல உடகார்ந்து இருக்கிறதே செமயா இருக்கு... “என்றவன் அவளின் முகவடிவை அளந்தான் தன் கைகளால்..

“செமயா இருக்க பேபி.. இந்த சிச்சுவேஸன் ல... ஒரே ஒரு கிஸ் பண்ணிக்கவா?? என்றான் அவளின் செவ்விதழை வருடி அவளை ஒரு மார்க்கமாக பார்த்தவாறு...

அவனின் அந்த தீண்டலில் சில விநாடிகள் கிறங்கியவள், பின் சுதாரித்து கொண்டு, அவன் கையை தட்டி விட்டாள்...

“பாஸ்... நம்ம கேம் முடியறவரைக்கும் நோ டச்சிங் னு சொல்லி இருக்கேன்.. வேணும் னா உங்க தோல்விய ஒத்துக்கங்க... நம்ம கேமை முடிச்சிடலாம்.. “ என்று கண்ணடித்தாள்...

“ஹா ஹா ஹா.. அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில உன் காரியத்திலயே குறியா இருக்கியேடி ... ராட்சசி.. “

“ஹா ஹா ஹா இந்த பவித்ரா முன் வச்ச காலை எப்பவும் பின் வைக்க மாட்டா... கேம் னா கேம் தான்... “ என்றாள் கன்னம் குழிய சிரித்து...

“ஹ்ம்ம்ம்ம் என்னை ரொம்ப இம்ஷை பண்றடி.. “ என்றவன் அவள் கன்னக் குழியில் விரலை வைக்க, அவள் விசிறிக் கொண்டிருந்த விசிறியின் பின் பக்கத்தை திருப்பி அதன் கம்பால் அவனை அடித்தாள்...

“இனிமேல் டச் பண்ணீங்க இதுல தான் அடி விழும்...” என்று முறைத்தாள்... அவளின் அந்த செல்ல அடியை ரசித்தவன்

“சரி ... சரி.. டீல்... இனிமேல் தொடல... ஆனா உன் கையை மட்டும் கொடு .. “ என்று அவளின் ஒரு கையை எடுத்து அவளின் கை விரலுக்குள் அவன் கை விரல்களை விட்டு விளையாண்டவாறே அவளை ரசித்துகொண்டே சிறிது நேரத்தில் கண் மூடி நன்றாக உறங்கினான்...

அதற்குள் பவர் வந்துவிட,பவித்ரா விசிறுவதை நிறுத்தி அவன் கைக்குள் இருந்த தன் கையை மெல்ல இழுத்து மெதுவாக எழுந்தாள்... குழந்தைதனமாக உறங்கும் அவனையே சில விநாடிகள் ரசித்து பார்த்துகொண்டு இருந்தாள்..

“என்னமா வம்பு பண்றான்.. திருடன்.. “ என்று மெதுவாக கொழுகொழுவென்று இருந்த அவன் கன்னத்தை கிள்ளியவள், அவன் விழித்து விடாமல் மெதுவாக நடந்து வெளியில் வந்தவள் அறை கதவை மூடிவிட்டு, பார்வதியும் அவர் அறையில் உறங்கி கொண்டிருக்க, பக்கத்து வீடுகளுக்கு அரட்டை அடிக்க சென்றாள்...

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!