காந்தமடி நான் உனக்கு !!-3
அத்தியாயம்-3
அந்த பொடியன் காட்டிய தினசரியில் இருந்த புகைப்படத்தில் காந்தமாய்
புன்னகைத்துக் கொண்டிருந்தவனை பார்த்ததும் அதிர்ந்து போனாள் சத்யா.
அவன் அச்சு அசலாய் அவளவன் அமுதனைப்
போலவே இருந்தான்.
ஆனால் அவனின் உடை அலங்காரம், முகத்தில் தெரிந்த தேஜஸ், உடல் மொழியில் தெரிந்த
பணக்கார கலை மற்றும் அவன் கண்களில்
தெரிந்த அலட்சியம் கண்டிப்பாக அவன் அமுதன் இல்லை என்று எடுத்துக் காட்டியது.
ஆனாலும் அவள் மனமோ அதை ஒத்துக்கொள்ள மறுத்தது.
ஏனென்றால் அவன் முகம் பார்ப்பதற்கு
அச்சு அசலாய் அப்படியே அவளவனை போலத்தான் இருந்தான்.
அந்த புகைப்படத்தில் லேசாக புன்னகைத்து
இருக்க, அதில்
கொஞ்சமாய் தெரிந்த அந்த தெத்துப்பல்...அதுதான்
அவனுடைய ஹைலைட்டே. அவன் சிரிக்கும்பொழுது அந்த தெத்துபல் இன்னும் எடுப்பாய் தெரிய, அப்படியே அவன் புன்னகை அவளை காந்தமாய் வசீகரிக்கும்..
அந்த பல் அப்படியே இவனிடமும் ஒத்துப்
போனது.
அதைவிட அவனின் கம்பீரமான மீசை, கன்னத்தில் விழும் அழகான குழி, அதைவிட அவள் அடிக்கடி தொட்டுப் பார்த்து ரசித்த அவன் இதழ்களுக்கு சற்று மேலே இருந்து அந்த பெரிய
மச்சம்...
இதெல்லாம் கூட எப்படி அப்படியே இந்த புகைப்படத்தில்
இருப்பவனோடு ஒத்துப் போகும்? என்று குழப்பமானது.
உலகத்தில் ஏழு பேர் ஒரே மாதிரியாக
இருப்பார்களாம். அப்படி என்றால் என் அமுதனைப்போல
இவன் இருக்கிறானா ? என்று யோசித்தவாறு அந்த
புகைப்படத்தில் கீழே பார்க்க அங்கு அவள் நினைத்தது சரிதான் என்று பறைசாற்றும் வகையில்
அவனுடைய பெயர் ஆரவ் என்று இருந்தது.
ஆரவ் குரூப் ஆஃப் கம்பெனிஸ் ன் தலைமை பொறுப்பை அவன் ஏற்றுக் கொண்டதற்கான அறிவிப்பும் அவனுக்கான பல முக்கிய பிரமுகர்களின் வாழ்த்துக்களும்
அந்த செய்தியில் இருந்தது.
ஆரவ் குரூப் ஆஃப் கம்பெனிஸ் பற்றி அவளும் படித்திருக்கிறாள். மும்பையிலேயே மிகவும் புகழ் பெற்ற
நிறுவனம் அது.
ஆரம்பத்தில் டெக்ஸ்டைல் பிசினஸ் என்று
ஆரம்பித்தது இன்று எல்லாத் துறைகளிலும் கால் பதித்து வெற்றிகரமாக முன்னேறி வரும்
நிறுவனம் அது.
அவன் அந்த நிறுவனத்தின் உரிமையாளன் என்றால்??
“ஹப்பா... எவ்வளவு பெரிய பணக்காரன்...கோடிகளில் புரள்பவன் இந்த
ஆரவ்... “ என்று சிலாகித்தவள் அதே நேரம்
ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியில்லாமல் மயங்கி சரிந்த அமுதன் கண் முன்னே வந்தான்.
இந்த புகைப்படத்தில் இருப்பவனோ பெரிய செல்வந்தர் கோடிகளில் புரள்பவன் என்றால் அவளவனோ
அதற்கு முற்றிலும் எதிர்மறையானவன்.
முதன் முதலில் அவனை பார்த்த பொழுது கிழிந்த ஆடையும் சவரம்
செய்யப்படாத தாடி மீசையும் இடுங்கிப் போன கண்கள் பசியில் துவண்ட அவன் முகம் என
பஞ்சத்தில் அடிபட்டவனை போல இருந்தவனைத்தான் முதலில் அவள் பார்த்தாள்..
ஆனால் இவனோ முற்றிலும் வேறாக இருந்தான்..
கண்டிப்பாக இவன் அவன் இல்லை. என்று
தனக்குத் தானே சொல்லிக் கொள்ள, அதுவரை அவள் முகத்தையே ஆர்வமாக பார்த்துக்
கொண்டிருந்த அந்த பொடியன் அவள் சல்வாரை பிடித்து இழுத்து
“சத்யா... அக்கா... இது அமுதன் அண்ணா தானே...” என்றான் மீண்டும் ஆர்வமாக.
அவன் முகத்தில் தெரிந்த ஆர்வத்தை காண அவளுக்கு
கஷ்டமாக இருந்தது.
அமுதன் காணாமல் போன இந்த ஒரு வாரமாக
அந்த தெரு பையன்கள் கூட அவனைக் காணாமல் ஏங்க ஆரம்பித்து விட்டனர்.
அந்த அளவிற்கு அமுதன் அங்கிருந்த
பசங்களோடு ரொம்பவும் ஒன்றி விட்டான். அமுதன் அண்ணா என்று எப்பொழுதும் அவனைச்
சுற்றி ஒரு பட்டாளம் சுற்றிக் கொண்டிருக்கும்.
இப்பொழுது அவன் இல்லாமல் அந்த
பசங்களும், அந்த தெருவுமே வெறிச்சோடி போனதை போல
இருந்தது.
ஆர்வமாய் அவளையே அண்ணாந்து பார்த்துக்
கொண்டிருந்தவன் சிகையை செல்லமாய் கோதியவள்
“இல்லடா டிங்கு...இவர் உன் அமுதன் அண்ணா
இல்லை... இவர் வேறு யாரோ... இவர் பெயர் ஆரவ்... பெரிய தொழிலதிபர்...” என்றாள் கவலையுடன்.
“இல்லக்கா... நான் சத்தியம் பண்ணி சொல்வேன். இவர் அமுதன்
அண்ணாதான்... எனக்கு தெரியாதா அவரைப்பற்றி?
இங்க பாருங்க அதே கண்ணு... அதே மீசை...அதே
குழி... அதே மச்சம்... நான்கூட எத்தனையோ முறை அந்த மச்சத்தை தொட்டு விளையாடி
இருக்கிறேன்... இது அவரே தான்...” என்று பிடிவாதமாய் சிணுங்கினான் டிங்கு...
“ஆங்...இது எப்ப நடந்தது? நீ எப்படி அவர் மச்சத்தை
தொடலாம்? அது
எனக்கே எனக்கு மட்டும் சொந்தமானது...” என்று இடுப்பில் கை வைத்து அவனை பார்த்து முறைத்தவளின்
நினைவுகள் அவளவனை நோக்கி ஓடிச் சென்றது.
ஒருநாள் மாலை வேளையில் இருவரும் சாவகாசமாய் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க
அவனுடைய கை விரல்களுடன் தன் கை விரல்களை கோர்த்துக் கொண்டு விளையாடிக்
கொண்டிருந்தவன் என்ன நினைத்தானோ, அவள் முகம் பார்த்தவன்
சது..... என்றான் கிறக்கத்துடன்...
ஆம்... அவளை அப்படித்தான் அழைப்பான்...
அது அவனுக்கு மட்டுமே ஸ்பெஷலான பெயராம்...அந்த பெயரை அவன் காதலுடன் அழைக்கும் பொழுது
இன்னுமே உருகி போய் விடுவாள் பெண்ணவள்...
அன்று கூட அவனின் கிறக்கமான குரலை கேட்டு
உள்ளுக்குள் சிலிர்க்க, நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள்
“சொல்லு டா அம்மு.... “ என்றாள் தலை சரித்த
மையல் பார்வையுடன்.
“ஹ்ம்ம்ம் என்னிடம் உனக்கு பிடித்தது
என்ன? “ என்று கேட்டு அவனின் தெத்துப்பல் பளிச்சென்று
தெரிய சிரிக்கும் கண்களுடன் குறும்பாக புன்னகைத்து
கொண்டிருந்தான்.
அவன் அருகில் நெருங்கி அமர்ந்திருந்தவளுக்கோ
அவனின் அந்த வசீகர புன்னகை என்னென்னவோ செய்தது. அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தவள்
“இந்த பரந்த அப்பப்ப யோசனையில் முடிச்சிடும்
நெற்றி...அடர்த்தியான புருவங்கள்... கூரான இந்த நாசி... கம்பீரமான உன் மீசை... கன்னத்தில் விழும் குழி... கண்களில் ஒளிரும் இந்த காந்த பார்வை...
ஹப்பா அதுதான் இன்னுமே என்னை கட்டி இழுக்கிறது...
மொத்தத்தில் காந்தமடா நீ எனக்கு...” என்று மையலுடன் சிரித்தாள் சத்யா...
அவளின் சிரிப்பில் கிறங்கியவள் அவளையே
ரசனையோடு பார்த்துக் கொண்டிருக்க அவளோ இன்னும் நிறுத்தாமல்
“அதுவும் இந்த மச்சம் இருக்கிறதே...
இதை பார்த்து தான் நான் முதலில் மயங்கிப் போனேன்..
பொதுவாக பெண்களுக்கு தான் இந்த மாதிரி
உதட்டுக்கு மேலே மச்சம் இருக்கும். ஆனால் முதன்முறையாக உன்னிடம் தான் இப்படி ஒரு மச்சத்தை
பார்த்தேன்.
நீ ரொம்பவும் ஸ்பெஷல் ஆனவன் அம்மு...இந்த
மச்சத்தை கொஞ்சமாய் தொட்டு பார்க்கவா? “ என்றாள் கண்கள் பளபளக்க காதலுடன்...
“ஹா ஹா ஹா நானே முழுவதுமாய் உனக்கு
சொந்தமடி... என்னிடம் என்ன பர்மிஷன் கேட்டுகிட்டு...”
என்று கண் சிமிட்டி குறும்பாக சிரிக்க
அவளும் லேசாக வெட்கப்பட்டு மெல்ல அவளின் மற்றொரு கரத்தை உயர்த்தி அவன் மச்சத்தை
மெல்ல வருடினாள்.
மென்மையான அவளின் விரல்களின் ஸ்பரிசத்தால்
உள்ளுக்குள் சிலிர்த்தவன், தன் கண்களை மூடி தன்னை மறந்து அவளின் விரல்
தீண்டும் அந்த சுகத்தை அனுபவித்தவன் அப்படியே அவள் கரத்தை இழுத்து அழுத்தமாய் அதில் இதழ் பதித்தான்.
அந்த நினைவு இப்பொழுது வர இன்னுமே அவள்
முகம் சிவந்து போக உடல் சிலிர்த்து போனது.
ஆனால் அடுத்த நொடி தன்னை சுதாரித்துக் கொண்டு
தன்னிலைக்கு வந்தவள் தன் முன்னே
நின்றிருந்தவனை பார்த்து அவன் உயரத்திற்கு குனிந்தவள் அந்த தினசரியை காட்டி
“டேய்... டிங்கு... இங்க பார்...அவர்
பெயர் ஆரவ் என்று போட்டிருக்கிறது அதுவும் அவர் மும்பையைச் சேர்ந்தவர். ரொம்ப பெரிய
இடத்தை சேர்ந்தவர். இவர் ஒன்றும் அமுதன் இல்லை. இது அமுதன் உருவத்தில் இருக்கும் வேறு யாரோ...” என்று அவனுக்கு சமாதானம் செய்ய முயன்றாள்.
அவனும் தன் தலையை இரு பக்கமும் மறுப்பாக
ஆட்டி
“இல்லக்கா...எனக்கு நல்லா தெரியும்...
இவர் நம் அமுதன் அண்ணாதான்...” என்று
பிடிவாதமாய் மறுக்க அதற்குள் கடுப்பானவள் அவன் உச்சந்தலையில் நங் என்று ஒரு கொட்டு
வைத்தவள்
“டேய்...நான்தான் சொல்றேன் ல. இது வேற யாரோ என்று.. ஒழுங்கா ஓடி போய்டு.... இவர்
அமுதனா இருந்தால் இந்நேரம் நம்மைத் தேடி வந்து இருப்பார்.
நீயே சொல்லு... நீ அவருக்கு ரொம்பவும் பெட்
தான...ஏன் உன்னைத் தேடி அவர் வரவில்லை... “ என்று அவனுக்காய் ஆரம்பித்த கேள்வி இப்பொழுது அவளுக்காகவும்
கேட்டுக் கொண்டாள்.
“எங்க போன அம்மு? ஏன்
எங்களை எல்லாம் தவிக்க விட்டுச் சென்றாய்? இல்லை.. ஒருவேளை உனக்கு ஏதாவது ஆகி இருக்குமோ? “ என்று அவசரமாய்
யோசித்தவள் அதற்கு மேல் யோசிக்க முடியாமல் அதிர்ந்து போய்
“இல்லை இல்லை... என் அம்முக்கு எதுவும் ஆகியிருக்காது. அவன் எங்கிருந்தாலும் நன்றாக இருப்பான்...
என்னிடம் சண்டை போட்டுக் கொண்டு தான் என்னை
விட்டு பிரிந்து சென்றான்...நான்தான் அவனை துரத்தி விட்டு விட்டேன். இல்லை என்றால் இங்கே தான் இருந்திருப்பான்.
நான் ஒரு பாவி... முட்டாள்... அவசரக்காரி...
என் அம்முவை துரத்தி விட்டு விட்டேனே...என்னால்
தான் அவன் எங்களையெல்லாம் பிரிந்து சென்றுவிட்டான்... “ என்று அவள் மனம் பதைக்க கண்களிலும் நீர் எட்டிப்
பார்த்தது.
“ஐம் சாரி அம்மு... ஐம் ரியலி சாரி டா.
வந்துவிடேன்...எப்படியாவது என்னிடம் வந்துவிடேன்... இனிமேல் உன்னிடம் சண்டை போட
மாட்டேன். உன்னை பத்திரமாக பார்த்துக் கொள்வேன்...என்னிடம் வந்துவிடேன்..ஐ மிஸ் யூ
பேட்லி...ஐ நீட் யூ... ஐ லவ் யூ... ப்ளீஸ் டா.. இந்த ஒரு முறை என்னை மன்னித்து என்னிடம்
வந்து விடேன்...” என்று மனதிற்குள் மறுகினாள் சத்யா..!
வருவானா அவளவன்? அவளை தேடு வந்துவிடுவானா அந்த காந்தமவன்? வரும் நாட்களில் பார்க்கலாம்...
Comments
Post a Comment