உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-28
அத்தியாயம்-28
மாலை ஆனதும் கண் விழித்த ஆதித்யா அவன் உறங்கும் முன்னே நடந்ததை நினைத்து கொண்டு குறும்பாக சிரித்து கொண்டே அவள் படுக்கையில் அவளின் வாசத்தை இன்னும் முகர்ந்து அனுபவித்தான்... அப்பொழுது வெளியில் ஏதோ பேச்சு சத்தம் கேட்கவும் கூர்ந்து கவனித்தான்..
“ஐ மிஸ் யூ டார்லிங் ... ஐ லவ் யூ... “என்று யாரையோ கொஞ்சி கொண்டிருந்தாள் பவித்ரா... அதை கேட்டதும் அவனுக்கு திக் என்றது..
“இது யாருடா நம்ம கதைல புது வில்லன்?? .. “ என்று புலம்பியவாறு மெல்ல எழுந்து ஜன்னல் வழியாக வெளியில் எட்டி பார்த்தான்..
அங்கு ஒரு பெரிய குட்டீஸ் கேங் உட்கார்ந்து இருக்க பவித்ரா அவர்களுக்கு நடுவில் அமர்ந்து ஒரு குட்டி பொண்ணை வைத்து கொஞ்சி கொண்டிருந்தாள்..
எல்லார் கையிலும் அவள் வாங்கி வந்திருந்த சாக்லெட் ம் ஸ்வீட் பாக்ஷ்ம் இருந்தது... எல்லார் முகத்திலும் அப்படி ஒரு சிரிப்பு...அந்த குழந்தைகளின் நடுவே அவளும் சிறுபெண்ணாக சிரித்துகொண்டு அமர்ந்து இருந்தாள்..
“பவித்ரா... நீ இல்லாமல் எங்களுக்கெல்லாம் செம போர்.. நீ ஏன் கல்யாணம் பண்ணிகிட்டு போன?? .. பேசாம எங்க கூடயே இருந்திருக்கலாம் இல்ல.. வி மிஸ்ட் யூ சோ மச் .. “ என்றது ஒரு வாண்டு...
“ஹ்ம்ம்ம் எனக்கும் உங்க கூட இருக்க ஆசைதான் டார்லிங்க்ஷ்...நான் என்ன பண்ண?? இந்த அம்மாதான் எனக்கு கல்யாணம் பண்ணி வச்சு துரத்தி விட்டுட்டாங்களே?? “ என்றாள் முகத்தை சோகமாக வைத்து கொண்டு
“ஹ்ம்ம்ம் அதுக்குத்தான நீ என்னை கல்யாணம் பண்ணிக்கோ னு சொன்னேன்.. நீ கேட்டியா.. நீ என்னை கல்யாணம் பண்ணியிருந்தனா, எங்க கூடவே ஜாலியா விளையாண்டு கிட்டு இருந்திருக்கலாம்... மிஸ் பண்ணிட்டியே செல்லம்.. “ என்றான் ஒரு 12 வயது இருக்கும் சிறுவன்...
“இப்பவும் ஒன்னும் கெட்டு போகலை. நீ அந்த மாமா வ கழட்டி விட்டுட்டு என் கூட வந்திடு.. நாம ஜாலியா விளையாடலாம்.. “ என்றான் கண் சிமிட்டி
அதை கேட்ட ஆதி
“அடப்பாவி.. கடைசியில எனக்கே குழி பறிக்கிறானே.... “என்று மனதுக்குள் திட்டிக்கொண்டான்..
“ஹ்ம்ம்ம் அப்படி எல்லாம் டக்குனு விட்டுட்டு வரமுடியாது டார்லிங்... பாவம் நான் வந்துட்டா அவர் கூட யார் விளையாடுவாங்க?? உங்களுக்கெல்லாம் இங்க நிறைய ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க... அவருக்கு அங்க யாருமே இல்ல தெரியுமா... “ என்று இழுத்தாள் முகத்தை சோகமாக வைத்து கொண்டு...
“ஓ அப்படியா?? சரி போனா போகுது.. நீ அந்த மாமா கூடவே விளையாடு... சரி.. எங்க அந்த மாமா?? “ என்றான் அந்த பொடியன்..
“அவர் தூங்கிட்டு இருக்கார் டா?? ஏன் கேட்கற?? “ என்றாள்..
“என்னது தூங்கறாரா?? நீ தான சொல்லியிருக்க. சாப்பிட்டதும் மதியம் தூங்க கூடாது .. ஏதாவது விளையாடனும் னு... உன் மாமா மட்டும் ஏன் தூங்கறார்?? ... தூங்கு மூஞ்சி மாமா.. “ என்று சிரித்தான்..
“டேய்.. என் புருஷன பார்த்தா தூங்கு மூஞ்சினு சொன்ன?? அவர் எத்தனை கம்பெனி வச்சு நடத்தறார் தெரியுமா... பாவம் அவர் எவ்வளவு கஷ்ட படறார் தெரியுமா... டெய்லியும் காலையில சீக்கிரம் ஆபிஸ் போய்ட்டு நைட் லேட்டாதான் வருவார்.. பாவம் இன்னைக்கு தான் அசந்து தூங்கறார்.. அவர போயா தூங்கு மூஞ்சினு சொல்ற.. “ என்று அதட்டினாள்..
அதை கேட்டு தன் இல்லாத காலரை தூக்கி விட்டு கொண்டான் ஆதி ..
“பரவாயில்லையே... நம்ம டார்லிங் என்னை விட்டு கொடுக்காம பேசறாளே.. “ என்று சிரித்துக்கொண்டான்..
“சரி.. சரி.. டென்சன் ஆகாத பவித்ரா... அவர் எப்ப எழுந்திருப்பார்... “ என்றான் இன்னொரு பொடியன...
“ஹ்ம்ம்ம் சீக்கிரம் எழுந்திருப்பார்.. ஆமா எதுக்குடா அவரை இவ்வளவு அக்கறையா கேட்குறீங்க.. “ என்றாள் சந்தேகமாக
அந்த பையன்கள் அவளுக்கு பதில் சொல்லாமல் தலையை சொரியவும்,
“பவித்ரா... மாமா பெரிய காரா வச்சிருக்கார் இல்ல... எங்களை எல்லாம் ஒரு ரவுண்ட் கூட்டிகிட்டு போக சொல்றியா?? அதுக்குதான் இவனுங்க தயங்கி தயங்கி நிக்கறானுங்க “ என்றாள் அவள் மடியில் அமர்ந்து இருந்த அந்த குட்டி பெண்..
“ஹா ஹா ஹா.. அவ்வளவுதானா.. சரி டார்லிங்க்ஷ்.. நான் மாமா கிட்ட சொல்றேன்.. “ என்று அவள் முடிப்பதற்குள்
“வாங்க டா... வாலுங்களா.. இந்த இரண்டு வாரமா வீடு வீடா இருந்தது உங்க சத்தம் இல்லாமல்.. இவ வந்த உடனே திரும்பவும் ஆரம்பிச்சுட்டீங்களா.. “ என்று சிரித்து கொண்டே வந்தார் பார்வதி தன் அறையில் இருந்து..
அவர் சொன்னதை கண்டு கொள்ளாமல்
“ஆன்ட்டி... அந்த மாமா கிட்ட சொல்லி எங்களை எல்லாம் கார்ல கூட்டிகிட்டு போக சொல்லுங்க.. “ என்று எல்லாரும் அவரிடம் கத்த,
“டேய்... மெதுவா பேசுங்க.. மாமா தூங்கறார் இல்ல...அவர் எழுந்த பிறகு உங்களை கூட்டிகிட்டு போக சொல்றோம்... நீங்க இப்ப போய்ட்டு அப்புறம் வாங்க... பார்க்கலாம்.. “ என்று அவர்களை அனுப்பி வைத்தார்.. பின் பவித்ராவிடம் திரும்பி
“பவி.. நீ இன்னும் மாறலையா.. உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு டீ.. இன்னும் இதுங்க கூட சுத்தி கிட்டு இருக்க?? “என்று முறைத்தார்...
“ஹீ ஹீ ஹீ.. கல்யாணம் ஆனா என்ன மா?? .. அதுக்குனு பழைய ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் மறந்திட முடியுமா?? “ என்று சிணுங்கினாள்..
“இந்த அர டிக்கட் ஸ் எல்லாம் உனக்கு ஃப்ரெண்ட்ஸ் ஆ??.. பாவம்... மாப்பிள்ளை எப்படிதான் உன்னை வச்சு சமாளிக்கிறாரோ.. “ என்று தலையில் அடித்து கொண்டார்...
அவர்களின் உரையடலை கேட்டவன்
“ஆஹா.. இந்த அத்தை தான் என்னை நல்லா புரிஞ்சு வச்சிருக்காங்க..இவ கிட்ட நான் மாட்டிகிட்டு முழிக்கிறத நல்லா தெரிஞ்சு வச்சிருக்காரே!! “ என்று சிரித்தவாறு மீண்டும் கட்டிலில் சென்று படுத்து கொண்டு தன் தூக்கத்தை தொடர்ந்தான்..
அதற்குள் பார்வதி பவித்ராவிடம்,
“பவி.. நீ கோயிலுக்கு போகணும் னு சொன்ன இல்லை.. போய் குளிச்சிட்டு கிளம்பு.. மாப்பிள்ளை எழுந்திருக்கும் முன் போய் ரெடியாகு.. “ என்றார்..பின் ஏதோ நினைவு வந்தவராக ஒரு நிமிசம் இரு டீ.. என்று வேகமாக தன் அறைக்கு சென்று கையில் ஒரு புது புடவையை எடுத்து வந்தார்...
“இந்தா... உனக்காக வாங்கி வச்சேன்.. இத கட்டிக்கோ.. “ என்றார்..
அந்த புடவை பவித்ராவிற்கு மிகவும் பிடித்து விட
“வாவ்.. சூப்பரா இருக்குமா... எனக்காக வாங்கி வச்சியே.. ஸோ ஸ்வீட் .. என்று அவர் கன்னத்தை கிள்ளி பின் அவரை கட்டி கொண்டு முத்தம் கொடுத்தாள்...
பார்வதியும் அவளின் அந்த முத்ததில் மயங்கி,
“சரி டீ.. நீ போய் கிளம்பு.. “என்று அவளை விரட்டினார்...
“ஹ்ம்ம்ம் சரி மா.. “என்றவள் ஒரு பாடலை ஹம் பண்ணியபடியே டான்ஸ் ஆடிகொண்டே உள்ளே வந்தாள்.. உள்ளே வந்தவள் அவனை உற்று பார்த்தாள்...
அவனோ உறங்குவதை போல கண்ணை இறுக மூடி இருந்தான்...
“இன்னும் தூங்கறான் பார்... சரியான தூங்கு மூஞ்சி.. “ என்று அவனை பார்த்து மெல்ல முனகியவள் சிரித்து கொண்டே அவள் ஹம் பண்ணிய பாடலை தொடர்ந்து பாடிக் கொண்டே குளியலறைக்குள் சென்றாள்..
அவள் முனகியதையும் அவள் தன்னை ரசித்து பார்த்ததையும் அரைக் கண்ணால் கண்டு கொண்டவன் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்..
பவித்ராவோ குளித்து முடித்ததும் அவன் தூங்குகிறான் என்ற நினைப்பில் ப்ளவுசை அணிந்து, அவள் மேல் புடவையை போட்டு கொண்டே வெளியில் வந்தாள்...
மீண்டும் அவனை உற்று பார்க்க அவன் நன்றாக உறங்குவது தெரிந்ததும் அந்த கட்டிலின் மறுபக்கம் திரும்பி அவனுக்கு முதுகு காட்டி நின்று கொண்டு அந்த புடவையை கட்ட ஆரம்பித்தாள்...
அவள் ஒன்றை கவனிக்க மறந்து இருந்தாள்.. அது அவள் முன்னாடி இருந்த அந்த ஆளுயர கண்ணாடியை... பொதுவாக கண்ணாடி பார்க்கும் பழக்கம் இல்லாததால் அங்கு கண்ணாடி இருப்பதை மறந்து அவள் பாட்டுக்கு தன் பாடலை பாடிய படியே குனிந்து புடவையை கட்ட ஆரம்பித்தாள்...
எதேச்சையாக கண் விழித்தவன் திரும்பி அவளை பார்க்க, அவளின் பின்புற அழகு தெரிந்தது.. அவளின் வழுவழு இடுப்பும் அப்பொழுது தான் குளித்திருந்த அவளின் வாசமும் அவனை வலைத்து இழுக்க, அதற்கு மேல் பார்வையை திருப்பியவன் அப்படியே ஷாக்காகி நின்றான்...
அவன் பார்வை எதேச்சையாக அங்கு இருந்த கண்ணாடிக்கு தாவ அதில் தெரிந்த அவளின் முன்னழகு அவனை இன்னும் சூடேற்றியது...
ஏற்கனவே புகைப்படத்தில் கண்ட பாவாடை தாவணியில் தெரிந்த அவளின் வனப்பும், அந்த குட்டி பெண்ணை கொஞ்சி கொண்டிருந்தவளின் அழகும் அவனை மயக்கி இருக்க , இப்பொழுது அவளின் இந்த முனனழுகும் பின்னழகும் அவனை புரட்டி போட அவன் எவ்வளவு முயன்றும் அவனை கட்டு படுத்த முடியாமல் அடுத்த நொடி அவளை பின்னால் இருந்து இறுக்கி அணைத்து அவள் கழுத்தின் பின்னால் அழுந்த முத்தமிட்டான்.....
திடீர் என்ற அவனின் இறுகிய அணைப்பால் திகைத்தவள் ஆ வென்று கத்த முயல, அதற்குள் அவன் ஒரு கையால் அவள் வாயை பொத்தி அவள் கழுத்து முழுவதும் முத்தமிட ஆரம்பித்தான்... அதில் கிறங்கி நின்றாள் சில விநாடிகள்... அதற்குள் முன்னால் இருந்த கண்ணடியில் அவர்கள் இருவரின் நிலையையும் கண்டவள் தன் நிலை உணர்ந்து வேகமாக சுதாரித்து கொண்டாள்...
பின் அவன் பிடியில் இருந்து விடுபட முயல, அவன் இன்னும் இறுக்கி பிடித்தான்...அவனின் அந்த முரட்டுதனமான அணைப்பும் அவள் கழுத்தில் பட்ட சூடான அவனின் முத்தமும் இன்னும் அவளுக்கு மயக்கத்தை தந்தாலும் அவளுள் இருக்கும் அந்த பெண்மைக்கான பாதுகாப்பு உணர்வு அவளை தடுத்து நிறுத்தியது...
அவன் இப்பொழுது இன்னும் எல்லை மீற ஆரம்பித்திருக்க, தப்பிக்க வேறு வழி இல்லாமல் அவள் வாயை மூடியிருந்த அவன் கையை நறுக்கென்று கடித்தாள்...
இதை எதிர்பாராதவன் ஆ வென்று அலர, அவன் சத்தம் வெளியில் வருமுன்னே அவன் பக்கம் திரும்பி அவன் வாயை தன் கையால் மூடியிருந்தாள்..
கண்ணடியில் பார்த்த அவளின் முன்னழகை இப்பொழுது நேரில் பார்க்க அவன் உள்ளே தூங்கி கிட்டிருந்த அந்த கணவன் மனம், அவன் ஆண்மை மீண்டும் வெகுண்டு எழுந்தது.. அவளை முன்புறம் தன்னுடன் சேர்த்து அணைக்க முயல, அதற்கு மேல் தாங்க முடியாமல் அவனை தடுக்க வழி தெரியாமல் அவள் கையை ஓங்கி அவன் கன்னத்தில் இறக்கி இருந்தாள் பவித்ரா...
ஆனால் அவள் கை அவன் கன்னத்தில் படுமுன்னே அவள் கையை தடுத்து பிடித்து இருந்தான் ஆதித்யா..அவளின் கை ஓங்கிய நிலையை கண்டு மிருகமானான்..
“ஏய்.. உனக்கு என்ன டி அவ்வளவு திமிரா?? நீ முன்ன என்னை அடிச்சதுக்கே இன்னும் தண்டனை அனுபவிச்சுகிட்டிருக்க.. மறுபடியும் கை ஓங்கறியா?? “ என்று கர்ஜித்தான்...
“பின்ன.. நீங்க மட்டும் என் அனுமதி இல்லாமல் என்னை தொடலாமா?? “ என்று அவளும் பதிலுக்கு திருப்பி கத்தினாள்..
“ஏய்.. என்னடி அனுமதி?? ... உன்னை தொட எனக்கு எல்லா உரிமையும் இருக்கு .. நான் உன் கழுத்துல தாலி கட்டிய புருஷன்.. கழுத்துல போட்டிருக்கியே இந்த தாலிக்கு சொந்தக்காரன்.. “ என்று உருமினான்...
“ஹ்ம்ம்ம் அது தான்.. அதைத்தான் உங்க மனசார சொல்லுங்க.. நான் உங்க பொண்டாட்டினு... அப்புறம் இந்த பவித்ரா உங்க காலடியில கிடப்பா... அத விட்டு மனதார நீ என் பொண்டாட்டி இல்லைனு சொல்லிட்டு இப்படி கிட்ட வந்தா?? ….
நீங்க நினைக்கிற மாதிரி இந்த பவித்ரா ஒன்னும் உங்க கண் பார்வைக்கு மயங்கி உங்க பின்னாடி ஓடி வர்றவ இல்லை.. மற்ற பொம்பளைங்கள தொடற மாதிரி மனைவியா ஏத்துக்காம என்னை நெருங்கினீங்க அவ்வளவுதான்.. .” என்று முகத்தில் கோபம் கொப்புளிக்க, கை நீட்டி மிரட்டினாள்..
“ஏய்.. அதையும் பார்க்கறேன் டீ... இன்னைகே உன்னை என் காலடியில் விழ வைக்கிறேன்.. “ என்று எரிமலையாக குமுறினான்...
“ஹ்ம்ம் பாருங்க.. அதே மாதிரி நானும் சீக்கிரம் உங்க மனதார என்னை பொண்டாட்டியா ஏத்துக்க வைக்கிறேன்... அதுவரைக்கும் உன்னை விட மாட்டேன் என்னை நெருங்க... “ என்று சபதமிட்டாள்..
“சே!! என்று தரையை எட்டி உதைத்தவன் தன் சட்டையை எடுத்து அணிந்த படியே வேகமாக வெளியேறி கதவை அறைந்து சாத்தினான்...
பவித்ரா வேகமாக சென்று கதவை உள்புறம் தாளிட்டாள்... அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது அவளையும் அறியாமல்...
“சே.. என்னை ஏன் இப்படி கஷ்டபடுத்தற கடவுளே... நெருப்புனு அவனை தள்ளி வைக்கவும் முடியாமல் குளிர் நிலவுனு சேர்த்துக்கவும் முடியாமல் ஏன் எனக்கு இந்த நரக வேதனை.. “ என்று கட்டிலில் அமர்ந்து கைகளால் முகத்தை மூடிக்கொண்டு குலுங்கினாள்...
அப்படியே சிறிது நேரம் அமர்ந்து இருந்தவள் தன் அன்னையின் நினைவு வரவும் அப்பொழுதுதான் நிகல் காலத்திற்கு வந்தாள்..
“ஐயோ.. இப்பதான் அம்மா நிம்மதியா இருந்தாங்க நான் நல்லா இருக்கேனு நினைச்சு.. இது மட்டும் அவங்களுக்கு தெரிஞ்சா??
வேணாம்.. இது எதுவும் அவங்களுக்கு தெரிய கூடாது... அவங்களுக்காக இவன பொறுத்து தான் ஆகணும்.. ஆனாலும் அதுக்காக என் தன்மானத்தை விட்டு கொடுக்க முடியாது... பார்க்கலாம் அப்படி என்னதான் செய்திடுவான் னு “ என்று முடிவு செய்தவள் குளியல் அறைக்கு சென்று முகத்தில் நீரை அடித்து கழுவினாள்...
பின் டவலால் அழுந்த துடைத்து தன் மன கஷ்டத்தை உள்ளே அமுக்கினாள்.. பின் புடவையை கட்டி கொண்டு, தலை சீவி, லேசாக பவுடர் போட்டு,நெற்றியில் பொட்டை வைத்து கொண்டு அறையை விட்டு வெளியில் வந்தாள் பயந்தவாறே எங்க அம்மா இந்த கூத்தை எல்லாம் கேட்டிருப்பாங்களோ என்று..
ஆனால் நல்ல வேளையாக பார்வதி பக்கத்து வீட்டிற்கு சென்றிருந்தார்... அவர் அறையில் இல்லை என தெரியவும் நிம்மதி மூச்சு விட்டாள்.
Comments
Post a Comment