காந்தமடி நான் உனக்கு!!-18

 


அத்தியாயம்-18

ல ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்திருந்தது ஆரவ் டவுன்ஷிப்.

எப்பொழுதும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும், நம் நாட்டின் நாட்டின் நிதித்துறை தலைமையிடமாகவும்இந்தியாவின் முக்கிய பொருளாதார மையமாக திகழும் மும்பை மாநகரத்தின் புறநகர் பகுதியில் இருந்தது அந்த டவுன்ஷிப்.

மும்பை என்றாலே நெருக்கி அடிக்கும், எப்பொழுதும் கசகசவென்று இருக்கும் மக்கள் கூட்டமும், நிரம்பி வழியும் மின்சார ரயில்கள் தான் நினைவுக்கு வரும்.

அது சரிதான். உலகின் மிக அதிகமான மக்கள்தொகை நிறைந்த நகரங்களில் இரண்டாவது இடத்தை பிடித்த பெருமை மும்பைக்கும், அந்த நிலையை அடைய வைத்த மும்பைவாசிகளுக்கே அந்த பெருமை சமர்ப்பணமாகும்.   .

அப்படிபட்ட நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மாறி,  அமைதியான ஆரவாரம் இல்லாத வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும்.

தான் மட்டும் அல்லாது தன்னுடைய  எம்ப்ளாய்ஸ் அனைவருமே அப்படி ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற கனவில்தான் அந்த டவுன்ஷிப் ஐ உருவாக்கி இருந்தார் மதியழகன்.

ஆரவ் க்ரூப் ஆப் கம்பெனி க்கு சொந்தமான அனைத்து தொழில்களுமே ஒரே இடத்தில்,  பல அடுக்கு மாடி கட்டிடங்களாக அமைத்து இருந்தார்.

அதே போல அந்த நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கும் அங்கேயே குவார்ட்டர்ஸ் போன்ற வீடுகள் கட்டி கொடுத்து, பள்ளிக்கூடம், மருத்துவமனை, மால்ஸ், விளையாட்டு திடல் என்று அனைத்து வசதிகளையும் செய்திருந்தார் மதி.

எந்த காரணத்திற்காகவும் தன்னுடைய தொழிலார்கள் மும்பை டவுன்க்கு செல்லாமல்,  இங்கேயே அனைத்து வசதிகளையும் இருக்குமாறு பார்த்து கொண்டார்.

அதனால்தான் ஆரவ் க்ரூப் ஆப் கம்பெனிஸ் என்றாலே மும்பையில் மிகவும் பிரபலம். எல்லாரும் வேலை தேடுவது முதலில் இந்த நிறுவனங்களில்தான். இங்கு வேலை கிடைப்பதையே வாழ்நாள் லட்சியமாக கூட சிலர்  எண்ணி கொண்டிருக்கிறார்கள்.

மும்பை மட்டுமல்லாது இந்தியாவிலயே நம்பர் ஒன் இடத்தை பிடிக்க முன்னேறி கொண்டிருந்தது அந்த நிறுவனம்.

அந்த டவுன்ஷிப் ல் நடுநாயகமாக, கம்பீரத்துடன் வீற்றிருந்தது அரண்மனை போன்ற அந்த பங்களா. ஆரவ் க்ரூப் ஆப் கம்பெனிஸ் எம்.டி க்கு சொந்தமான பங்களா 

பங்களா என்பதை விட, உள்ளே சென்று பார்ப்பவர்கள்,  அது இந்திரலோகம்தான் என வாயை பிளந்து பார்த்து நின்றிருப்பர்.

அந்த அளவுக்கு அத்தனை நவீன வசதிகளையும், கண்ணை கவரும் அழகுடனும்,  மிடுக்குடனும் இருக்குமாறு பார்த்து பார்த்து கட்டி இருந்தார் மதியழகன்.

சிவப்பு கம்பளம் விரித்திருந்த மாடிப்படிகளில்,  தன்னுடைய டெனிம் சர்ட்டை முழங்கை வரை மடித்து விட்டவாறு, தன் முன் உச்சி கேசம் அசைந்தாட,  துள்ளலுடன் ஏதோ பாடலை ஹம் பண்ணிய படி, இரண்டிரண்டு படிகளாக தாவி இறங்கி வந்தான் ஆரவமுதன்.

ஆறடிக்கும் மேலான உயரத்தில், தவறாமல் உடற்பயிற்சி செய்வதால் முறுக்கேறிய தேகம், பரந்து விரிந்திருந்த மார்பு, இறுகி போயிருந்த வலிய புஜங்கள், எதிரில் இருப்பவர்களை ஊருவி பார்த்தே அவர்கள் மனதை எளிதாக கண்டு கொள்ளும் கழுகு கண்கள்.

அழுத்தமான உதடுகள், எடுப்பான நாசி என்ற ஒரு ஆணின் இலக்கணத்திற்கு எடுத்துகாட்டாய் திகழ்ந்தான்.

கருப்பு நிற பேன்ட், நன்றாக பாலிஷ் செய்யப்பட்ட பளபளக்கும் கருப்பு நிற ஷூ, இன்று வெள்ளை நிறத்திற்கு பதிலாக லைட் ப்ளூ கலரில் ஷர்ட் என முழு பார்மல் கெட்டப்பில், துள்ளலுடன் கீழ இறங்கி வந்து கொண்டிருந்தான் ஆரவமுதன்.

தன் மகனின் கம்பீரத்தையும் அவனின் ஆளுமையும்,  மாடியிலிருந்து ஸ்டைலாக இறங்கி வரும் அழகையும்  கண்டு அவன் தந்தை மதியழகனுக்கு முகத்தில் பெருமிதம்.  

அவனையே வைத்த கண் மாறாமல் ரசித்து பார்த்தார் மதியழகன். எதேச்சையாக நிமிர்ந்தவன் தன் தந்தையின் கண்களில் இருந்த ரசனையை  பார்த்தவன்,  மந்தகாசமாய் புன்னகைத்தவாறு

குட் மார்னிங் டாட்... என்று கண்களால் சிரித்தபடி தன் தந்தையின் அருகில் வந்தான் ஆரவமுதன்.

வெரி குட்மார்னிங் மை டியர் சன்... யூ ஆர் லுக்கிங் வெரி ஹேன்ட்சம் அன்ட் ஹாட் டுடே... இன்னைக்கு கான்ப்ரென்ஸ்க்கு வரப்போகிற பொண்ணுங்க எல்லாம் உன்னைத்தான் சைட் அடிக்க போறாங்க.. என்ஜாய்...மை டியர் சன்...“ என்று கண் சிமிட்டி விஷமமாய்  சிரித்தார் மதியழகன்.

வயது அறுபதை தொட்டிருந்தாலும் இன்னும் அவர் நடையிலும் பேச்சிலும் இளமை ஊஞ்சலாடும். பேசும் பொழுதே மற்றவர்களுக்கும் ஒரு உற்சாகம் தொற்றி கொள்ளும். அந்த வகையில் மற்றவர்களை கட்டி இழுக்கும் பேச்சாற்றலும் துடிப்பும் மிக்கவர்.

சமீபத்தில் அவரை தாக்கி இருந்த நோயின் பாதிப்பால்,  கொஞ்சமாய் தளர்ந்துதான் போயிருந்தார். ஆனாலும் தன் சோர்வை, வலியை வெளிக்காட்டி கொள்ளாமல் புன்முறுவலோடு வலம் வருபவர்.

தன் மகனிடம் ஒரு தோழனாய் பழகுபவர். அவனுக்கு தொழிலை கற்று கொடுத்து தனக்கு அடுத்த வாரிசாய் அவனை கொண்டுவந்து பொறுப்புகளை அவனிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்பது அவருடைய நீண்ட நாள் ஆசை.

சமீபத்தில்தான் அந்த ஆசை நிறைவேறி இருந்தது.

ஆம்... ஆரவ் அந்த நிறுவனங்களின் பொறுப்பை ஏற்று கொண்டான். இன்று பல ஆயிரம் மில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனங்களின் சொந்தக்காரன் ஆரவமுதன்.

ஆனாலும் அதைப்பற்றி என்றுமே கர்வம் கொண்டதில்லை ஆரவ். அவனை பொறுத்தவரை, அந்த நிறுவனங்களை நிர்வகிக்கும் ஒரு எம்ப்ளாயி. அவனை நம்பி இருக்கும் பல குடும்பங்களை காக்கும் பொறுப்பில் இருப்பவன்.

இனி அடுத்து வரும் தலைமுறைக்கும் அவர்களுக்கு தேவையான வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும். அதற்கு தன் தொழிலை பெருக்க வேண்டும் என்ற குறிக்கோள் மட்டுமே.

வெளியில் யாரும் நெருங்க முடியாத இரும்பு  கோட்டையாக இருப்பவன் தன் தந்தையிடம் மட்டும் ஒரு தோழமையுடன் பழகுவான். அவருமே அவனை கேசுவலாக கிண்டல் அடிப்பார்.

இன்றும் அதே போல தன் மகனை ஓட்ட, அதில் லேசாய் வெட்கபட்டவன்

“டாட்...யூ டூ... “ என்று செல்லமாய் அவர் வயிற்றில் குத்தியவனை கட்டி அணைத்து கொண்டார் மதி.

“ஐம் ப்ரௌட் ஆப் யூ மை டியர் சன். நேற்று நீ நம் நிறுவனங்களின் ஆண்டு விழாவில் பேசிய பேச்சும், விளக்கிய திட்டங்களும் எக்சலன்ட் ஆரவ்.

நம்ம கம்பெனிஸ் ஐ  அடுத்த லெவலுக்கு எடுத்து செல்ல உன்னுடைய திட்டங்கள் தான் சரி. யு என்டர்ட் இன் பெர்பெக்ட் டைமிங்.. அன்ட் பெர்பெக்ட் ப்ளான்... “ என்று சிலாகித்தார்.

“இட்ஸ் ஆல் யுவர் ப்லெஸ்ஸிங் டாட்... “ என்று அவனும் தன் தந்தையை புகழ,

“நோ..நோ.. இட்ஸ் யுவர் ஹார்ட் வொர்க். ஹார்ட் வொர்க் பேய்ட்..” என்று மீண்டும் அவனை புகழ்ந்தவர்

“ரைட். யூ கேரி ஆன் நௌ. வில் கேட்ச் யூ இன் தி ஈவ்னிங்...“ என்று மீண்டும் அவனை கட்டி அணைத்து அவனிடம் விடைபெற்று தன் வேலையை பார்க்க சென்றார் மதியழகன்.

ரவ் ம் நேராக டைனிங் ஹாலுக்கு செல்ல, அங்கே விதவிதமான பதார்த்தங்கள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. ஆனால் அதை ஆசையாக எடுத்து பாசத்துடன் அவனுக்கு பரிமாறத் தான் ஆளில்லை.  

அதைக்கண்டதும் முகத்தில் லேசாய் ஒரு வலி. அடுத்த நொடி தன்னை உலுக்கி கொண்டவன் அங்கிருந்த ஒரு ப்ளேட்டை எடுத்தவன், அங்கிருந்த உணவை ஆராய, விதவிதமான வட இந்திய உணவு பதார்த்தங்கள் அவனை பார்த்து கண் சிமிட்டின.

அதை கண்டு முறைத்தவன் மீண்டும் கண்களால் துழாவ, அந்த உணவு மேஜையில் ஓரமாக இட்லியும்,  அதற்கான சட்னியும் வைத்திருக்க, அதோடு கூட்டணியாக மிளகாய் பஜ்ஜியும் இருந்தது.

அவன் விரும்பி சாப்பிடுகிறான் என்று இப்பொழுதெல்லாம் தினமும் காலையில் சௌத் இன்டியன் ஐட்டெம்ஸ் ம் உணவு மெனுவில் சேர்க்கபட்டன. அதுவும் இந்த மிளகாய் பஜ்ஜி தினமுமே இருக்கும்

அதை பார்த்ததும், அவன் கண்களில் மின்னல் வெட்டிச் செல்ல, மற்ற உணவு  பதார்த்தங்களை தவிர்த்து, நேரடியாக இட்லிக்கு சென்றான்.  

தானாக அதை எடுத்து தட்டில் வைத்தவன், அங்கிருந்த மிளகாய் பஜ்ஜியை எடுத்து, ஒரு கடி கடிக்க, அதன் காரம் நாக்கில் பட்டதும் அவன் நினைவுகளோ எங்கோ ஓடிச் சென்றது.

உடனே தன் தலையை இடவலமாக ஆட்டி தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவன்,  தன்னுடைய ஐ-போனில் வந்திருந்த செய்திகளை பார்வையிட்டவாறு அந்த உணவை சாப்பிட்டு முடித்தான்.

அதே நேரம் அவனுடைய உதவியாளர் ராகேஷ் அவன் அருகில் வந்தான். காலை வணக்கத்தை சொல்லி அன்றைய அஜென்டாவை ஆரவ் க்கு விளக்கினான்.

ஆரவ் ம் சின்ன தலை அசைப்புடன் ம் கொட்டி அவன் சொன்னதை எல்லாம் கேட்டு கொண்டான். அதில் ஒரு சில மாற்றங்களையும் சொல்லி முடிக்க, ராகேஷ் ம் அதை எல்லாம் குறித்து கொண்டான்.

அதன் பின் ராகேஷ் நகர்ந்து செல்லாமல், இன்னும் தயக்கத்துடன் ஆரவ் அருகிலயே நின்று கொண்டிருந்தான். ராகேஷ் தயக்கத்துடன் நிற்பதை கண்ட ஆரவ்,

“என்ன மேட்டர் ராக்கி? என்கிட்ட ஏதாவது சொல்லனுமா? “ என்றான் இடுங்கிய கண்களுடன். தன் உடல்மொழியில் இருந்தே தன் மனதை கண்டு கொண்டவனை உள்ளுக்குள் மெச்சியவாறு,

“எஸ் பாஸ். வந்து.....ஒரு பொண்ணு,  உங்க கிட்ட பேசணும் என்று ரொம்ப நேரமா தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.  

நானும் உங்களை பார்க்க முடியாது. ப்ராப்பர் அப்பாயின்மென்ட் வாங்க வேண்டும் என்று சொல்லி பல முறை திருப்பி விட்டேன்.  ஆனாலும் அந்த பொண்ணு, பிடிவாதமாய் உங்களிடம் பேச வேண்டும் என்று நச்சரிக்கிறார்கள்.  

அதுதான் நான் என்ன செய்ய என்று உங்களிடம் கேட்க வந்தேன்..”  என்று தயக்கத்துடன் இழுத்தான்.

“கமான் மேன். தினமும் தான் என்னை பார்க்க வேண்டுமென்று பல பெண்கள் எனக்கு அழைத்து வைக்கிறார்கள். எல்லோரிடமும் என்னால் பேசவும் அவர்கள் வழிந்து கொண்டு பேசும் பிதற்றல்களை கேட்டு பொறுமையாக விளக்கம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அன்டர்ஸ்டான்ட்...” என்று சுள்ளேன்று எரிந்து விழுந்தான்.

“இல்ல சார்...இந்த பொண்ணு கொஞ்சம் சீரியஸா பேசணும் என்று சொன்னாங்க. ஏதாவது முக்கியமான மேட்டராக இருக்கப் போகிறது. அதுதான் ஒருமுறை நீங்கள் எதற்கும் பேசிப் பார்த்திடுங்களேன்...” என்று  சமாதானப்படுத்த முயன்றான் ராகேஷ்

“டேமிட்...எனக்கு இப்பொழுது அதுக்கெல்லாம் நேரமில்லை...” என்று சிடுசிடுத்தான் ஆரவ்.   

அதே நேரம் ராகேஷ் உடைய அலைபேசி ஒலிக்க,  எதார்த்தமாக அவன் கை அந்த அழைப்பை ஏற்று இருக்க,  அதன் திரையை பார்த்த ராகேஷ் கலவரத்துடன்

“பாஸ்...அதே பொண்ணுதான்...இதோடு ஆயிரம் முறை இருக்கும். சளைக்காமல் எனக்கு போன் அடித்து விட்டார்கள். கண்டிப்பாக ஏதாவது விஷயம் இருக்கும். ஒருதரம் பேசித்தான் பாருங்களேன்...”  என்றான் சங்கடத்துடன்.  

“ப்ச்...என்ன மேன்... என்ன சொல்ல போறாளாம்? ...என்னை பார்த்ததும் மயங்கிட்டதாகவும், என்னை காதலிப்பதாகவும் அவள் காதலை நான் ஏற்று கொள்ள வேண்டும் உளர்வாள். வேற என்ன தெரியும் இந்த பொண்ணுங்களுக்கு...இர்ரிடேட்டிங் இடியட்ஸ்...” என்று பல்லை கடித்தவன்

“ஆமாம்...அந்த பொண்ணு பெயர் என்ன? என்றான் எரிச்சலுடன்.

“சத்யா....ப்ரம் பெங்களூர் சார்...”  என்றான் ராகேஷ்

அதைக் கேட்டதும் ஒரு நொடி ஆரவ் கண்களில் ஒரு ஒளி, மின்னல் வந்து விட்டுத்தான் சென்றது.

ஆனால் மறுநொடி தன் கேசத்தை இடது கையால் வருடிக் கொடுத்தவன்

“ப்ச்...அந்தப் பெயரில் எனக்கு யாரையும் தெரியாது. இந்த மாதிரி முன்ன பின்ன தெரியாத பெண்களின் அழைப்பை ஏற்று,  நீ என்னுடைய நேரத்தை வீணடிக்காதே

எதுவாக இருந்தாலும் விசயத்தை சொல்லி,  அப்பாயின்மென்ட் வாங்கி விட்டு என்னை பார்க்கச் சொல். அதுவும் தொழில் சம்பந்தமாக இருந்தால் மட்டும்தான் அன்டர்ஸ்டேன்ட்..? .” என்று அந்தப் பேச்சை அதோடு முடித்துவிட்டான் ஆரவ்.  

ராகேஷ் தன் அலைபேசியில் இருந்த அழைப்பை ஏற்று இருக்க, ஆரவ் பேசியது எல்லாம் மறுமுனையில் இருந்த சத்யாவின் செவிகளிலும் அச்சு பிசகாமல் விழுந்தது.

அதைக் கேட்டதும் மின்னாமல்  முழங்காமல் தலையில் பெரிய இடி விழுந்ததை போல இடிந்து, அதிர்ந்து போனாள் சத்யா....!


Comments

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!