காந்தமடி நான் உனக்கு!!-19

 




அத்தியாயம்-19

ந்தக் குரல் அச்சு அசல் அமுதனுடையது தான். என் பெயரை கேட்டும் எப்படி தெரியாதவன் போல சென்றுவிட்டான்.  அப்படி என்றால் என்னை மறந்து விட்டானா?  அது எப்படி ஒரு வாரத்துக்குள் மறந்து போகும்?.

ஒரு வேளை மூன்றாம் பிறை ஸ்ரீதேவி  போல அம்னீசியாவா இருக்குமோ? இவனுக்கு. பழசு எல்லாம் ஞாபகம் வந்ததும்,  புதிய நினைவுகள் அழிந்து விட்டனவா? “  என்று வேதனையுடன் யோசிக்க,  அவன் பெங்களூரில் இருந்த பொழுது தெளிவாகத்தான் இருந்தான் என்பது நினைவு வந்தது

அவனுடைய குடும்பத்தைப் பற்றி கேட்டபொழுதெல்லாம் வேண்டுமென்றே தவிர்த்ததும், ஏதாவது ஒன்றை சொல்லி சமாளித்ததும் நன்றாக நினைவு இருந்தது.

“அப்படியென்றால் அவனுக்கு அம்னீசியா எதுவும் இல்லை. நல்ல நினைவோடு தான் இருந்திருக்கிறான். இப்பொழுத்ம் இருக்கிறான். ஆனால் எதனால் அமுதன் என்று வேடமிட்டு இங்கே வந்திருக்கிறான்?    

எதற்காக, ஏன் இந்த நாடகம் ஆடினான்? அதுவும் எங்கள் வீட்டில் அவன் திருடிச் செல்லும் அளவுக்கு எந்தப் பொருளும் இல்லையே...”  என்று யோசிக்க அவள் மனமோ

“உன் மனதை திருடிச் சென்று விட்டானே..பெண்ணே..! அது விலைமதிப்பற்றது தானே. ஒருவேளை அதை திருடத்தான் இப்படி வேடமிட்டு வந்திருப்பானோ? “  என்று அவள் மனம் இடித்துரைக்க அவளால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஏனென்றால் அவள் ஒன்றும் பெரிய அழகி இல்லை. அவனுடைய அந்தஷ்த்துக்கும்,  கம்பீரத்திற்கும்,  உலக அழகிகள் அவன் காலடியில் விழ தயாராக இருப்பது அவள் அறிந்ததே.

அப்படியிருக்க என்னிடம் மட்டுமே தேடி வந்து அவன் ஏன் காதலிக்க வேண்டும்?  

“இல்லை...இல்லை... அது கூட காதல் இல்லை... என்னை காதலிப்பதாக நடித்திருக்கிறான்.  ஆனால் ஏன் அப்படி நடித்தான் என்று மட்டும் புரியவில்லை.

கண்டிப்பாக உடல் சுகத்துக்காக அவன் நடிக்கவில்லை, அவள் சம்மதம் இன்றி அவன் நிழல் கூட தானாக அவள் மீது பட்டதில்லை.

சிலமுறை அவள்தான் அவனுக்கு வம்படியாக அவனை இழுத்து அணைத்து முத்தம் கொடுத்திருக்கிறாள். சில நேரம் ஆசையாக கட்டி அணைத்திருக்கிறாள்.  

ஆனால் எந்த நொடியிலும் அவளை ஆட்கொள்ள வேண்டும் என்று அவன் எண்ணியதில்லை. அவள் கொடுத்ததுக்கு பதிலுக்கு திருப்பி கொடுப்பானே தவிர, அவளை தப்பான கண்ணோட்டத்தில் என்றுமே பார்த்ததில்லை.

“அப்படியென்றால்?  அவன் நோக்கம் உடல் தேவையும் அல்ல.  வேற என்னவாக இருக்கும்? “  என்று  ஆழ்ந்து யோசித்தாள்.  

எப்படி யோசித்தாலும் அவளுக்கு அதற்கான பதில் மட்டும் கிடைக்கவில்லை

மீண்டும் மீண்டுமாய் ராகேஷ்க்கு அழைக்க,  ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல், அவனும் இவளுடைய  எண்ணை ப்ளாக் பண்ணி விட்டான்.

சரி என்று  வேறு நண்பர்கள் அலைபேசியில் இருந்து அழைத்தாலும் இவள் தான் அழைக்கிறாள் என்று எப்படியோ தெரிந்துகொண்டு அழைப்பை ஏற்கவில்லை.

பலமுறை முயன்றும் எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிய,  அவன் தன்னை அவாய்ட்  பண்ணுகிறான்  என்று தெளிவாகவே புரிந்தது பெண்ணவளுக்கும்.

அதை உறுதி படுத்தும் விதமாக ஒரு நிகழ்வும் நடந்தது.

வள் அடிக்கடி பார்க்கும் அந்த சேனல், அது ஆரவ் க்ரூப் ஆப் கம்பெனிஸ் ன் பிரத்யேக சேனல் என்று இப்பொழுது கண்டு கொண்டாள்.

ஆரவ் க்ரூப் ஆப் கம்பெனிஸ் நிறுவனத்தின் நடவடிக்கைகள், திட்டங்கள், அவர்களின் ஒவ்வொரு தொழிலையும் பற்றிய விளக்கங்கள் என அவர்களை பற்றி மக்களிடையே நேரடியாக கொண்டு செல்ல என்றே அந்த சேனலை ஆரம்பித்து இருந்தனர் என்று இப்பொழுது அறிந்து கொண்டாள்..

அதனால்தான் அந்த சேனலில் ஆரவமுதனின் பேச்சுக்களும், அவன் பங்கு பெறும் விழாக்கள் என அவனை மையப்படுத்தி நிறைய செய்திகள் அந்த சேனலில் ஒளிபரப்புவார்கள்.

அப்படி ஒரு செய்தியில்தான் அவன் கலந்து கொண்ட ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் அவார்ட் பங்சன் ஒளிபரப்பானது. 

அந்த பங்சன் க்கு சிறப்பு விருந்தினராக சென்றிருந்தான் அமுதன்.. இல்லை ஆரவமுதன்.

அதை லைவ் ஆக காட்டி கொண்டிருக்க, பெண்ணவளின் மனமோ கட்டுக் கடங்காமல் அவனையே சுற்றி வந்தது.

அப்பொழுதுதான் அவன் அருகில் அமர்ந்திருந்த அவளை கண்டாள் சத்யா. அவள் ஒரு மும்பை மாடல் அழகி. நிறைய விளம்பர படங்களில் நடித்திருக்கிறாள்.

வெள்ளை வெளேரென்று, சுண்டினால் ரத்தம் வரும் நிறத்தில், அச்சு அசல் ரசகுல்லா போன்று பளிச்சிட்ட,  பளபளக்கும் மேனியும்,  சுவைக்க தூண்டும் லிப்ஸ்டிக் போட்ட திரண்ட அதரங்களும், அவளின் பெண்மையை இன்னுமே எடுத்து காட்டும் விதமாய் இறுக்கமான ஆடையும் என அணிந்திருந்தவள் அமுதனிடம் கொஞ்சி கொஞ்சி பேசி கொண்டிருந்தாள்.

அவனின் வெகு அருகில் ஒட்டி அமர்ந்து இருந்தவள்,  அவ்வபொழுது ஆரவ் ஐ தொட்டு பேசுவதும், அவனை செல்லமாய் அடிப்பதும்,  கூடவே அவன் தோளில் அவ்வபொழுது சாய்ந்து கொள்வதுமாய் இருந்தாள்.

அவர்கள் இருவரையும் பார்த்தால் வெறும் நட்புடன் பழகுபவர்களை போல தெரியவில்லை. அவ்வளவு நெருக்கமாக இருந்தனர் இருவரும் அந்த விழாவில்.

ஆரவ்  ம்  தன் மீது வந்து விழுபவளை ஒதுக்கி தள்ளி நிறுத்தாமல் அதை ரசிப்பவனை போல் அவளிடம் பல்லை காட்டி சிரித்து பேசிக் கொண்டிருந்தான்.

அதை பார்த்த சத்யாவுக்கு காதில் புகை வந்தது. இதயம் ஒரு முறை நின்று துடித்தது.

இங்கு இருந்த அமுதன் பெண்கள் என்றால்  நெருப்பாக இருப்பான். அவன் முதலில் வேலை செய்த அந்த கார்மென்ட் பேக்டரியில் அவன் மீது வந்து விழுந்த பெண்களை எல்லாம் தன் அக்னி பார்வையால் தள்ளி நிறுத்தியவன்.

ஆனால் இப்பொழுது ஒரு மாடல் அழகியுடன் உல்லாசமாய் பேசி சிரிக்கிறான் என்றால்? அவன் மாறிவிட்டான்...முற்றிலுமாக மாறிவிட்டான்.

“ஒரு வேளை இதுதான் அவன் குணமோ? இங்கு இருந்தபொழுது அவன் அதை எல்லாம் மறைத்துகொண்டு நடித்தானோ?”  என்று மீண்டும் தன் ஆராய்ச்சியை தொடர்ந்தாள் அந்த பேதைப்பெண்.

ஆனால் முடிவில்லா ஆராய்ச்சி போல,  அவளுக்கும் முடிவுதான் கிடைக்கவில்லை. எது எப்படியோ இப்பொழுது அவன் வேற ஒரு பூவிடம் தாவி விட்டான்.

இனி இந்த சத்யா என்ற மலரை தேடி வரமாட்டான். அவனுக்கான ஜோடியை கண்டு கொண்டான் என்று தன் மனதில் பதிக்க முயன்றாள்.

அமுதனின் ஒதுக்கமு,ம், அந்த மாடல் அழகியுடன் அவனின் நெருக்கமும்  கண்டு அவள் மனம் வேதனை கொண்டது.

இனிக்க, இனிக்க காதலை வாரி வழங்கியவன், இப்பொழுது அவனே தன்னை வலிக்க வலிக்க வருத்தப்பட,  வேதனைப்பட வைப்பதை கண்டு இன்னுமே உடைந்து போனாள் சத்யா..

ஆனால் அவளின் இயல்பான குணம் தலைதூக்க, அவ்வளவு பாசமான அவள் தந்தை திடீரென்று அவர்களை விட்டு சென்ற அந்த  இமாலய சோகத்தையே தாங்கி, தன் குடும்பத்தை தாங்கி நின்றவளுக்கு, இவனுடைய பிரிவும் பாராமுகமும் மடுவளவு என்று தன்னைத்தானே  தேற்றி கொண்டாள்.

அவனுடைய ஒதுக்கம் தன்னை எள்ளளவும் பாதிக்காது என்று தனக்குள்ளே உருப்போட்டுக் கொண்டாள்.

இப்பொழுது அவன் காதலை ஒன்னும் அவனிடம் எதிர்பார்க்கவில்லை சத்யா.

ஆனால் ஆரவ்  ஏன் அமுதனாக மாறினான் என்ற காரணத்தை மட்டும் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. அதற்காகத்தான் ஆரவமுதனை தொடர்பு கொள்ள, பலமுறை பலவிதங்களில் முயற்சித்தாள்.

அவனுடைய பெர்சனல் ஈமெயில் ஐடியை கண்டு பிடித்து மின்னஞ்சலை கூட அனுப்பி விட்டாள். 

ஆனால் அவளின் எல்லா முயற்சியுமே தோல்வியில் தான் முடிந்தது. ஆரவ் அவளை சந்திக்க, அவளுடன் பேச, அவள் பேசுவதை கேட்க தயாராக இல்லை..

இறுதியில் மனதளவில் இறுகி போனாள் போனாள் சத்யா...

பின் ஒரு முடிவுக்கு வந்தவளாய்

“அவன் இனி எனக்கு வேண்டாம்... என் வாழ்வில் இனி அமுதன் இல்லை. அவனே தேடி வந்தாலும் இந்த சது இனி அவனுக்கு இல்லை.  குட் பை  அமுதன்...”  

என்று கடைசியாக ஒருமுறை அவனுடைய புகைப்படத்தை ஆழ்ந்து நோக்கி, அவன் நிழல்படத்தின் இதழுக்கு முத்தமிட்டவள், அடுத்த நொடி மானசீகமாக தன் மனதில் இருந்தவனை தூக்கி எறிந்தாள் சத்யா.

அவள் மனதில் முளை  விட்டிருந்த காதல் என்ற செடியை வலிக்க,  வலிக்க பிடுங்கி எறிந்தாள். அந்த அமுதன் மீண்டும் தன் மனதில் நுழைய விடாமல் அவளுடைய இதயக்கதவை அறைந்து சாத்தி,  இழுத்து மூடிக் கொண்டாள் சத்யா...!



Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!