காந்தமடி நான் உனக்கு!!-20
அத்தியாயம்-20
ஆறு மாதத்திற்கு பிறகு:
மாலை ஆறு மணி அளவில், அந்த கார்மென்ட் பேக்டரியில் வேலை முடிந்ததற்கான சைரன் ஒலிக்க, எல்லாரும் முகமலர்ச்சியுடன் தங்கள் இல்லம் நோக்கி விரைந்தனர்.
சத்யாவும் கும்பலோடு கும்பலாக தன் கைப்பையை எடுத்து கொண்டு
வெளிவந்தாள்.
எப்பொழுதும் ஒட்டி பிறந்த இரட்டையரை
போல அவளுடன் ஒட்டி கொண்டே வரும் அவள் தோழி சுகன்யா அன்று வரவில்லை.
அவள் ஊரில் ஒரு விசேஷம் என்று சொந்த
ஊருக்கு சென்றிருந்தாள். அதனால் சத்யா
மட்டும் தன் ஹேண்ட் பேக்கை தோளில் மாட்டிக் கொண்டு நடந்து வந்தாள்.
முன்பு அவளின் நடையில் ஒரு துள்ளல் இருக்கும்.
முகத்தில் எப்பொழுதுமே வசீகரிக்கும்
புன்னகை இருக்கும். மாலையிலும் ப்ரெஷ் ஆக புத்துணர்ச்சியுடன், பளிச்சென்ற புன்னகையுடன் தான் அந்த பேக்டரியை விட்டு வெளி வருவாள் .
ஆனால் இப்பொழுது அந்த துள்ளல் இல்லை. வசீகரிக்கும்
புன்னகை இல்லை. நாலாபக்கமும் அலைபாயும் அந்த கண்கள், கொஞ்சிப் பேசும் இதழ்கள் எல்லாமே கடந்த ஆறு
மாதமாக வேலை நிறுத்தம் செய்திருந்தன.
எல்லாம் அவனால் வந்தது. அமுதனால்
வந்தது... இல்லை.. இல்லை ஆரவமுதனால் வந்தது. என்று அடிக்கடி அவனை வசைபாடி
வறுத்தெடுப்பாள்.
அவனை பிரிந்தது ஒரு பக்கம் வேதனை
என்றால், அவள் வேலை செய்யும் இடத்திலும் அமுதன் காணாமல் போன
விஷயம் பரவி விட, அவளையே எல்லாரும் பாவமாகவும் வருத்தத்துடனும் பார்த்து வைத்தனர்.
அந்த வாயாடி பெண்களோ வேண்டுமென்றே சத்யாவிடம் வந்து
“என்ன சத்யா... உன் ஆளு ஓடிப் போய்விட்டாராம்.
அதுக்குத்தான் அப்பவே சொன்னோம். பார்ட்டி பார்க்க ஜோரா இருக்கு. எங்ககிட்ட
விட்டிருந்தால் நாங்களாவது அனுபவித்திருப்போம்.
ஆனால் உன் ஆளுனு சப்போர்ட் பண்ணி எங்ககிட்ட இருந்து
புடுங்கிகிட்ட. . அதான் உனக்கு அல்வா
கொடுத்துவிட்டு எஸ் ஆகிட்டார் போல.
உன்னை பார்த்தால் நீயும் எதுவும்
அனுபவிக்கவில்லை போலத்தான் தெரியுது. சே.. நாய் கையில் கிடைத்த தேங்காய் மாதிரி, யாருக்கும் பிரயோஜனம்
இல்லாமல் பண்ணிட்டியே.
இதுவரைக்கும் அப்படி ஒரு ஜிம் பாடியை
பார்த்ததில்லை. ம்ஹ்ம்ம்ம்ம் எங்களுக்கு கொடுத்து வச்சது அவ்வளவுதான். “ என்று ஏக்க
பெருமூச்சை விட்டவர்கள்
“அட்லீஸ்ட் நீயாவது முந்தானையில்
முடிந்து வைத்து கொள்வதில்லையா? இப்படி பட்சியை பறக்க
விட்டுவிட்டாயே.. சோ சேட்... “ என்று அவளை பரிகசித்து சிரித்தனர்.
அதைக் கேட்ட சத்யாவிற்கும்
பற்றிக்கொண்டு வந்தது.
ஆனாலும் அவர்களை எதிர்த்து எதுவும்
சொல்லவில்லை. அந்த நிலையிவில் வைக்க
வில்லை அவன்.
அவனால்தான் இப்படி ஒரு வலியும் வேதனையும்
தனக்கு வந்து சேர்ந்திருக்கிறது என்று
மீண்டும் பல்லை கடித்து உள்ளுக்குள் அவனை அர்ச்சனை
பண்ணிக் கொள்வாள்.
இன்றும் பேக்டரியில் இருந்து வெளியே வரும் பொழுது,
அந்த கேங் ல் ஒருத்தி சத்யாவை வளைத்துக்
கொண்டு அவளை கலாய்த்திருக்க, அவளை முறைத்துவிட்டு விடுவிடுவென்று
நடந்து கொண்டிருந்தாள்.
மெய்ன்ரோட்டின் ஓரமாக நடந்து
கொண்டிருக்க, அன்று அமுதன் விழுந்து கிடந்த இடம்
வந்ததும் அவள் கால்கள் தானாக நின்றன.
அவனை முதல்முதலாய் பார்த்த நியாபகம் அவளையும்
மீறி கண்முன்னே வந்தது. அதைத்தொடந்து அனைத்து நிகழ்வுகளுமே கொஞ்சமும் மறந்து
விடாமல் நினைவுகளில் வந்து சென்றது.
அதை உணர்ந்ததும் மீண்டும் முகத்தில்
வேதனை அப்பிக் கொள்ள, ஒரு முறை ஏக்கமாய் அந்த இடத்தை
பார்த்துவிட்டு நகர முயன்றாள்.
அதே நேரம் ஒரு கருப்பு நிற பெர்ராரி வேகமாக
வந்து அவள் அருகில் பிரேக் இட்டு நின்றது.
அவளும் திடுக்கிட்டு நிமிர்ந்து அந்த
காரை பார்க்க, அவள் பக்கமாக இருந்த முன்பக்க கதவு திறந்து, வலிய கரம் ஒன்று நீண்டு அவள்
கரத்தைப் பற்றி காரின் உள்ளே அவளை இழுத்துக் கொண்டது.
அடுத்த நொடி அந்த கதவு தானாக மூடிக்கொள்ள, இவள் சுதாரிக்கும் முன்னே
அந்த கார் புயலென கிளம்பிச் சென்றது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து
முடிந்திருந்தது அந்த சம்பவம். சத்யாவிற்கு மூளை வேலை நிறுத்தம் செய்துவிட்டது ஒருசில நொடிகள்.
பின் ஒருவாறு சமாளித்துக் கொண்டு அந்த
சூழ்நிலையை அவசரமாக ஆராய்ந்தாள். அவளை
பற்றியிருந்த அந்த கரமோ அவளை விடாமல்
இப்பொழுது இடையோடு பற்றிக்கொண்டு இருந்தது.
அப்பொழுதுதான் அது மண்டையில் உறைக்க, திடுக்கிட்டு தன் தலையை நிமிர்த்தி ஓட்டுனர் பக்கமாய்
பார்த்தாள்.
அங்கே முகத்திற்கு முககவசம் அணிந்து
கொண்டு, கண்களில் ஸ்டைலாக கூலரை மாட்டி இருந்தவன், அந்த காரை ஒரு கையால் லாவகமாக செலுத்திக்
கொண்டு, மறுகையால் அவளை அசைய விடாமல் இடையோடு பற்றியிருந்தான்
அந்த நெடியவன்.
முகம் சரியாக தெரியவில்லை. சாலையை
நேராக பார்த்து காரை செலுத்தி கொண்டிருந்தான். அவனைக் கண்டதும் திடுக்கிட்டு போனாள்
சத்யா.
“என்ன இது? பட்ட பகலில் ஒரு பெண்ணை கிட்நாப் செய்கிறார்களா? “ என்று யோசித்தவள்
“ப்ச்...கிட்னாப் செய்யும் அளவுக்கு
நான் ஒன்னும் வொர்த் இல்லையே. . என் கையிலும், கழுத்திலும் காதிலும் கிடப்பது எல்லாம் போலி
நகைகள்.
அதுவும் முக்கால்வாசி பிளாஸ்டிக் மட்டுமே. அப்படி என்றால் எதுக்காக என்னை கடத்துகிறான்? என்று அவசரமாய் தன்னைச்
சுற்றி இருந்த அவன் கையை விலக்க முயன்றாள்.
அவனும் கையை எடுத்துக் கொள்ளாமல் இன்னுமாய்
அவளின் இடையை பற்றி தன் அருகில் இழுத்து அவன் பக்கத்தில் மிக நெருக்கமாக
இருக்குமாறு அவளை அமர வைத்து கொண்டான்.
அதை கண்டு திடுக்கிட்டவள் அவன்
பிடியிலிருந்து திமிறி விடுபட முயன்றவாறு
“ஹலோ மிஸ்டர்....யார் நீங்க? உங்களுக்கு என்ன வேண்டும்? எதற்காக என்னை கிட்நாப்
செய்யறீங்க? “ என்று படபடவென்று பொரிந்தாள் சத்யா.
“ஹா ஹா ஹா என்னது கிட்நாப் ஆ? “ என்று குறும்பாக
சிரித்தவன்
“சொல்றேன் டார்லிங்...எல்லாம்
சொல்கிறேன்...அதுக்காகத்தானே உன்னை தேடி வந்து இருக்கிறேன்...” என்றான் சந்தோசமாக சிரித்தவாறு.
அவனின் கண்களும் அவனோடு சேர்ந்து
சிரித்தன.
அவனின் வசீகரிக்கும் காந்தக் குரலைக்
கேட்டு, திடுக்கிட்டுத் திரும்பியவள் அவன் முகத்தை
ஆழ்ந்து பார்க்க, தன் கண்ணிலிருந்த கூலரை லேசாக கீழிறக்கி
அவளை மையலுடன் பார்த்தவன்
“எப்படி இருக்க சது டார்லிங்? “ என்று குறும்பாக கண்
சிமிட்டினான்.
அதைக் கேட்டு இன்னுமே திடுக்கிட்டு போனாள்...
அவள் இதழ்களோ அவளையும் மீறி
“அ....மு... த..... ன்.... ? “ என்று ஒவ்வொரு எழுத்தாக உச்சரித்து
தன் ஒற்றை புருவத்தை உயர்த்தி கேள்வியாக பார்க்க, அவனும்,
அந்த நெட்டையும் ஆமென்று
தலையசைத்து புன்னகைத்தான்.
கூடவே தன் முகத்தில் இருந்த முககவசத்தை
விலக்கி, கண்களில் இருந்த கூலரையும் அகற்றி இருக்க, பெண்ணவளோ அப்படியே உறைந்து போனாள்.
அங்கு இருந்தவன் அவனேதான்...அவள்
அமுதனேதான்...!
Comments
Post a Comment